Featured Posts
Home » இஸ்லாம் » தடுக்கப்பட்டவை » பித்அத் » [03] பித்அத் என்றால் என்ன?

[03] பித்அத் என்றால் என்ன?

பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன? – தொடர்-3
‘பித்அத்’ என்பது பிதஃ என்ற வார்தையில் இருந்து பிறந்ததாகும், பித்அத் என்பது எந்த முன்மாதிரியும் இன்றி எடுக்கப்பட்ட ஒன்றைக் குறிக்கும். அல்லாஹ் தனது திருமறையில் கூறுவதைப் போன்று: ‘வானங்களையும் பூமியையும் எந்த முன்மாதிரியுமின்றி படைத்தவன்’ (பகரா 2: 117)

மற்றோர் இடத்தில்: ‘(நபியே) கூறுவீராக! நான் தூதர்களில் ஏதும் புதியவன் கிடையாது ‘ (அல் அஹ்காப்ஃ 18: 9).

அல்லாஹ்விடமிருந்து அடியார்களுக்கு செய்தியைக் கொண்டு வந்தவர்களில் நான் ஏதும் ஆரம்பமானவன் கிடையாது. எனக்கு முன்னரும் பல தூதர்கள் வந்து சென்று விட்டனர்.

அரபியில் : ‘இப்ததஅ புலானுன் பித்அதன்’ என்றால் ஒருவன் புதிதாக ஒன்றை ஆரம்பித்து விட்டான் என்பதாகும்.

பித்அத்தை இரண்டு வகைகளாக பார்க்கலாம்: ஒன்று அன்றாட வாழ்க்கையில் காணப்படும் நவீனங்கள், இது அனுமதிக்கப்பட்டதாகும்.

இரண்டாவது: மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும் பித்அத்துகள் இது தடுக்கப்பட்டதாகும். ஏனெனில் மார்க்கம் என்பது பரிபூரணமானதாகும். ‘எவர் மார்க்கத்தில் நாம் ஏவாத ஒன்றை புதிதாக ஏற்படுத்துகின்றாரோ அது நிராகரிக்கப்படும்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்.)

மற்றோர் அறிவிப்பில்: ‘எவர் நாம் கட்டளையிடாத ஒன்றை செய்வாரோ அது நிராகரிக்கப்படும்’ (முஸ்லிம்)

தொடரும்..

One comment

  1. பித்அத்தை இரண்டு வகைகளாக பார்க்கலாம்…is this really based on evidences from our prophet..?….Because the innovations of our days are very subtle and sensible ….hard to determine its path..from the beginning itself.. Yeah, they are certainly hard to detect or observe in their beginning states….So really our prophet did give permission to differentiate bid’ds into two kinds?…Please explain in detail with evidence..and not on our common sense..because bid’ds can deceive our common senses..Allah hapiz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *