Featured Posts
Home » இஸ்லாம் » தடுக்கப்பட்டவை » பித்அத் » [04] மார்க்கத்தில் பித்அத் பற்றிய சட்டம்

[04] மார்க்கத்தில் பித்அத் பற்றிய சட்டம்

பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன? – தொடர்-4

மார்க்கத்தில் இவ்வகையான அனைத்து பித்அத்துகளுக்குரிய சட்டம்

மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றப்படும் அனைத்து பித்அத்துகளும் வழிகேடும், தடுக்கப்பட்டதுமாகும். ‘நான் உங்களுக்கு புதியவைகளை எச்சரிக்கின்றேன், ஒவ்வொரு புதியவைகளும் பித்அத்தாகும், ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ தாவுத் திர்மிதி).

‘எவர் மார்க்கத்தில் நாம் கட்டளையிடாத ஒன்றை புதிதாக ஏற்படுத்துவாரோ அது நிராகரிக்கப்படும்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மற்றொரு அறிவிப்பில்: ‘எவர் நாம் கட்டளையிடாத ஒன்றை செய்வாரோ அது நிராகரிக்கப்படும்’

இந்த ஹதீஸ்கள் மூலம் அறியப்படுவது மார்க்கத்தின் பெயரால் உருவாக்கப்படும் அனைத்து புதியவைகளும் பித்அத்தாகும், ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடும் மறுக்கப்பட வேண்டியதுமாகும், இதிலிருந்து விளங்குவது கொள்கையிலும், வணக்க வழிபாடுகளிலும் பித்அத் என்பது தடுக்கப்பட்டதாகும். பித்அத்தைப் பொறுத்து ஹராத்தில் ஏற்றத் தாழ்வு இருக்கிறது.

அவைகளில் தெளிவாக, குப்ரின் பால் இட்டுச் செல்லக் கூடியவைகள் இருக்கின்றன, உதாரணமாக கப்றுகளை வலம் வருவது அதில் அடக்கப்பட்டிருப்பவரின் நெருக்கத்தைப் பெறுவதற்காக, அவைகளுக்கு நேர்ச்சை செய்வது, அறுத்துப் பலியிடுவது, அவைகளிடம் பிரார்த்திப்பது, உதவி தேடுவதைப் போல. ஜஹ்மிய்யாக்களின், முஃதஸிலாக்களின் வரம்பு மீறிய சிந்தனைப் போக்குகள் போல.

அவைகளில் இன்னும் சில ஷிர்க்கின் பால் இட்டுச் செல்பவைகள் கப்றுகளின் மீது கட்டிடம் எழுப்புவது, அங்கு தொழுகைகளை நிறைவேற்றுவது, பிரார்த்தனைகளில் ஈடுபடுவது.

அவைகளில் மோசமான சிந்தனைகள்: மார்க்கத்தை தவறாகப் புரிந்து கொண்ட கவாரிஜ்கள், கத்ரிய்யாக்கள், முர்ஜியாக்களின் பித்அத்தான சொற்கள் சிந்தனைப்போக்குகளைப் போன்று.

அவைகளில் இன்னும் சில பாவமானவைகள். உலகை முழுமையாகத் துறந்து விடுதலைப் போல, வெயிலில் நின்ற நிலையில் நோன்பு வைப்பதைப் போல, ஆசைகளை முழுமையாகத் துண்டிக்கும் விதமாக காயடித்துக் கொள்வதை போல.

தொடரும்..

One comment

  1. “‘‘எவர் மார்க்கத்தில் நாம் கட்டளையிடாத ஒன்றை புதிதாக ஏற்படுத்துவாரோ அது நிராகரிக்கப்படும்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    மற்றொரு அறிவிப்பில்: ‘எவர் நாம் கட்டளையிடாத ஒன்றை செய்வாரோ அது நிராகரிக்கப்படும்’
    இது இரண்டும் தவிர்க்க இயலாத வகையில் ஒரே அர்த்த்தை தருகிறதா?..இரண்டும் உண்மையென்றால் இரண்டும் சமமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *