Featured Posts
Home » இஸ்லாம் » தடுக்கப்பட்டவை » பித்அத் » [07] பித்அத்துகள் தோன்றிய இடம்

[07] பித்அத்துகள் தோன்றிய இடம்

பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன? – தொடர்-7
இரண்டாவது விடயம்: பித்அத்துகள் தோன்றிய இடம்

பல்வேறுபட்ட பித்அத்துகள் முஸ்லிம் நாடுகளில் உருவாகத் தொடங்கியது. இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் குறிப்படுவது போல: ‘ஸஹாபாக்கள் வாழ்ந்த மிகப் பெரும் நகரங்கள் ஐந்தைக் குறிப்பிடலாம் அவற்றிலிருந்து அறிவின், ஈமானின் ஒளிச்சுடர்கள் வெளிப்பட்டன. அவைகள் இரு புனித பூமிகள், இரண்டு ஈராக்குகள், மற்றும் ஷாமைக் குறிப்பிடலாம். அவைகளிலிருந்து தான் குர்ஆன், ஹதீஸ், பிக்ஹ், இபாதா இவைகளை ஒட்டியுள்ள மார்க்கத்தின் விடயங்கள் ஒளிவீசின. மதீனாவைத் தவிர மேற்குறிப்பிட்ட அதே நகரங்கங்களிலிருந்து தான் பித்அத்தின் வேர்கள் முளைக்க ஆரம்பித்தன.

கூபாவில் ஷீயாக்கள், முர்ஜியாக்கள் போன்ற வழி கெட்ட பிரிவினர் தோன்றினர், அதற்குப் பின் தான் ஏனைய இடங்களுக்கு அவை பரவ ஆரம்பித்தன. பஸராவில் கதரிய்யாக்கள், முஃதஸிலாக்கள் போன்ற வழி கெட்ட பிரிவினர் தோன்றினர். இன்னும் மோசமான வழிபாட்டு முறைகளும் அங்கிருந்து தோன்ற ஆரம்பித்தன. அதற்குப் பின்னர் அவைகள் ஏனைய இடங்களுக்கு பரவ ஆரம்பித்தன. ஷாமில் சிலைகள் தோன்றின, கதரிய்யாக்களின் வழி கெட்ட சிந்தனைகள் அங்கு காணப்பட்டன, குராஸான் பகுதிகளில் ஜஹ்மியாக்களின் வழிகெட்ட சிந்தனைகள் தோன்ற ஆரம்பித்தன, இவை மோசமான பித்அத்துகளாகும். நபியவர்கள் வாழ்ந்த ஊரை விட்டு தொலைவிலுள்ள இப்பகுதிகளிலிருந்து, இவ்வாறான வழிகெட்ட பித்அத்துகள் உருவானது குறிப்பிடத்தக்கது.

உஸ்மான் (ரலி) அவர்களின் கொலைக்குப்பின் ‘ஹரூரிய்யாக்கள்’ எனும் வழிகெட்ட பிரிவினர் தோன்றினர். மதீனாவைப் பொறுத்தவரையில் இந்த அனைத்து வழிகெட்ட பித்அத்துகளை விட்டும் ஈடேற்றம் பெற்றதாகக் காணப்பட்டது. அங்கு ஒரு சிலர் மறைவாக இவைகளுக்கு உட்பட்டிருந்தாலும், கதரிய்யாக்களின் ஏனைய சிந்தனைகளுக்கு உட்பட்டவர்களும் இழிவாகவே பார்க்கப்பட்டனர், மாற்றமாக கூபாவில் காணப்பட்ட ஷீயாக்களின், முர்ஜியாக்களின் சிந்தனைகள், பஸராவில் காணப்பட்ட முஃதஸிலாக்கள், நூதன அனுஷ்டான முறைகள், ஷாமில் காணப்பட்ட சிலைகள் இவைகள் அனைத்தும் பகிரங்கமாவவே பவனி வந்து கொண்டிருந்தன.

நபி (ஸல்) அவர்களின், மதீனாவைப் பற்றி சொன்ன ஒரு கூற்று இங்கு நினைவு கூரத்தக்கது, தஜ்ஜாலுக்கு மதீனாவுக்குள் நுழைய முடியாது…….. இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் காலம் வரை அங்கு ஈமானும், அறிவும் காணப்பட்டன, அவர்கள் நாலாவது நூற்றாண்டைச் சார்ந்தவர்கள். (மஜ்மூஉல் பதாவா 303- 300/ 20). ஆனால் சிறப்பிற்குரிய மூன்று நூற்றாண்டுகள் என அறியப்பட்ட கால கட்டத்தில் மதீனாவுக்குள் எந்த ஒரு பித்அத்தும் வெளிப்படையாகக் காணப்படவில்லை. ஏனைய இடங்களிலிருந்து வெளிப்பட்டது போல் மார்க்கத்தின் அடிப்படை விடயங்களுள் எந்த ஒரு பித்அத்தும் அங்கிருந்து வெளிப்படவில்லை.

தொடரும்..

One comment

  1. MUHAMMED NIBI SALLALLAHU ALAIHIWASALLAM AWARKALUDAIYA WALKAIYLA ANUMADIKKAADHA ATTHANAIYYUM BIDDUATHUKAL AKUM.
    BIDDUATHUKAL ANAITHAIYUM WALIKEDUKAL AAKHUM.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *