Featured Posts
Home » இஸ்லாம் » தடுக்கப்பட்டவை » பித்அத் » [11] வணக்க வழிபாடுகளில் பித்அத்

[11] வணக்க வழிபாடுகளில் பித்அத்

பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன? – தொடர்-11
அல்லாஹ்வின் நெருக்கத்தை பெறும் நோக்கில் வணக்க வழிபாடுகளில் பித்அத்துகளை ஏற்படுத்தல்:

வணக்க வழிபாடுகளில் உருவாக்கப்பட்ட பித்அத்துகளில் இந்தக் காலங்களில் அதிகமான பித்அத்துகள் புகுத்தப்பட்டிருக்கின்றன என்றால் மிகையாகாது. வணக்க வழி பாடுகளை (இபாதத்தை)ப் பொறுத்த வரையில் அதன் அடிப்படை (நிறைவுற்றதாகும்) தடுக்கப்பட்டதாகும். ஆதாரமின்றி எந்த ஒன்றையும் மார்க்கமாக்க முடியாது, எதற்கு ஆதாரமில்லையோ அது பித்அத்தாகும்.

நபியினுடைய கூற்று இங்கு நோக்கத்தக்கதாகும்: ‘நமது கட்டளை இல்லாத ஒன்றை எவர் செய்வாரோ அது நிராகரிக்கப்படும்’ ஆதாரமின்றி செய்யப்படும் இபாத த்துகள் முற்றிலும் அதிகரித்தே காணப்படுகின்றன.

அவைகளில் நின்றும் உள்ளது தான்:
தொழுகையில் நிய்யத்தை வாயால் மொழிதல், தொழுகையை இவ்வாறு இவ்வாறு அல்லாஹ்வுக்காக என்று நிய்யத்தை வாயால் மொழிவது, இது பித்அத்தாகும், இதற்கு நபியுடைய சுன்னாவில் எந்த ஆதாரமும் இல்லை. அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு கூறுகிறான்: ‘நீங்கள் உங்கள் மார்க்க (வழிபாடுகள்) பற்றி அல்லாஹ்வுக்கு அறிவிக்(க விரும்பு)கிறீர்களோ? அல்லாஹ்வோ வானங்களிலு ள்ளவற்றையும் பூமியிலுள்ளவற்றையும் நன்கு அறிகிறான் அன்றியும் அல்லாஹ் எல்லாப் பொருள் களையும் நன்கறிகிறவன் ‘ என்று (நபியே!) நீர் கூறும் (ஹுஜுராத் 49: 16).
நிய்யத்திற்குரிய இடம் உள்ளமாகும், அது உள்ளத்துடன் தொடர்பு பட்ட ஒரு செயலே தவிர நாவுடன் தொடர்பு பட்ட ஒன்றல்ல.

பித்அத்தில் நின்றும் உள்ளது தான்: தொழுகைகளுக்குப் பின் கூட்டாக திக்ருகள் செய்தல். ஒவ்வொருவரும் தனித் தனியாக ஆதாரப்பூர்வமான திக்ருகளைக் கூறுவதைத்தான் மார்க்கம் அனுமதித்திருக்கின்றது.
ஒவ்வொரு நிகழ்வுகளின் போதும் ‘அல்பாதிஹா’ என உரத்த குரலில் கூறி பாதிஹா ஏனைய சூராக்களை ஓதுவதும் பித்அத்தில் உள்ளதாகும்.

மரணித்தவர்களுக்காக அவர்களது வீட்டில் அனைவரும் கூடி உணவுகளைத் தயாரிப்பது, கூலிக்கு ஆள் பிடித்து குர்ஆன் ஓதுவது, கவலை, சோகத்தை வெளிப்படுத்தும் நோக்கில், அல்லது மரணித்தவருக்கு அது பயனளிக்கும் என்ற நோக்கில், இவைகள் அனைத்தும் பித்அத்தாகும் மார்க் கத்தில் இவைகளுக்கு எந்த அடிப்படையும் கிடையாது. அல்லாஹ் எந்த ஒரு ஆதாரத்தையும் இறக்கிவைக்காத பாவமான நாச காரியங்களாகும்.

இஸ்லாம் கூறி இருக்கின்ற சில முக்கிய நிகழ்வுகளை முன்னிட்டு விழாக்களை கொண்டாடுவது, நபியுடைய மிஃராஜ் பயணம், ஹிஜ்ரத் பயணம் போன்றவைகளை முன்னிட்டு கொண்டாடப் படுவதைப் போல. இவைகளுக்கும் மார்க்கத்தில் எந்த அடிப்படையுமில்லை.

அதே போன்று ரஜப் மாதத்தில் விசேஷமாக உம்றாச் செய்தல், உபரியான தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களை விசேஷமாக நிறைவேற்றல், நோன்பு, தொழுகை, உம்றா, அறுத்துப் பலியிடல் போன்ற வணக்கங்களுக்கு விஷேச எந்த சிறப்பும் இந்த மாதத்தில் வரவில்லை, இந்த விடயங்களில் ரஜபும் ஏனைய மாதங்களைப் போன்று தான்.

பல வகையான ஸுபித்துவ திக்ருகள் இவைகள் அனைத்தும் பித்அத்தாகும், ஷரீஅத் கற்றுத்தந்திருக்கும் திக்ருகளுக்கு இவை முற்றிலும் முரணானவையாகும், அதனுடைய வார்த்தைகள், சொல்லப்படும் நேரங்கள், சொல்லப்படும் விதங்கள் அனைத்தும் பித்அத்தாகும்.

ஷஃபானின் பதினைந்தாவது நாளில் விஷேசமாக நோன்பு நோற்பது அதன் இரவுக் காலங்களில் விஷேச வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது போன்ற அனைத்தும் பித்அத்தாகும். இந்த நாளை வணக்க வழிபாடுகளைக் கொண்டு சிறப்பிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

கப்றுகளின் மீது கட்டிடம் எழுப்புவது, அவைகளை மஸ்ஜித்களாக ஆக்குவது, பரக்கத் கிடைக்க வேண்டுமென்ற நோக்கில் அவைகளுக்கு பயணம் செய்வது, மரணித்தவர்களிடம் பிரார்த் திப்பது இவைகள் போன்ற அனைத்தும் ஷிர்கில் நின்றும் உள்ளவையாகும். பெண்கள் கப்றுகளைத் தரிசித்தல். நபியவர்கள் கப்றுகளைத் தரிசிக்கும் பெண்களுக்கும், கப்றுகளின் மீது மஸ்ஜித்களை எழுப்புவர்களுக்கும், அவைகளில் விளக்குகளை ஏற்றுபவர்களுக்கும் சாபம் உண்டாவதாக என்று கூறியது ஏனோ இவர்களுக்கு மறந்து விட்டது போலும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *