Featured Posts
Home » சட்டங்கள் » ஃபத்வா (மார்க்கத் தீர்ப்பு) » ‘கிறிஸ்மஸ்’ (Christmas) தின வாழ்த்து தொடர்பான மார்க்கத் தீர்ப்பு

‘கிறிஸ்மஸ்’ (Christmas) தின வாழ்த்து தொடர்பான மார்க்கத் தீர்ப்பு

‘நத்தார் பண்டிகை’ அல்லது ‘கிறிஸ்மஸ்’ (Christmas) தின வாழ்த்து தொடர்பாக அஷ்ஷைக் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) அவர்கள் வழங்கிய தீர்ப்பு:

கேள்வி: கிறிஸ்தவர்களின் பண்டிகையான கிறிஸ்மஸ் தினத்தில் அவர்களை வாழ்த்தலாமா? அவர்கள் வாழ்த்தும்போது நாம் எவ்வாறு அதற்கு பதில் கூறுவது? இவர்கள் இந்தப் பெருநாளை முன்னிட்டு நடந்தும் விழாக்களில், நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியுமா? மேற்சொன்னவைகளில் எதையாவது ஒன்றை எந்த நோக்கமுமின்றி செய்தால் குற்றமாகுமா? அவன் வெளிப்படையாகவோ, அல்லது ஒரு தர்மசங்கடமான நிலையிலோ, அல்லது வெட்கத்தின் காரணமாகவோ, அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்திற்காகவோ அவர்களுடன் இதில் ஒப்பாக செயல்பட முடியுமா?

பதில்: கிறிஸ்மஸ் பண்டிகையாக இருக்கலாம், அல்லது நிராகரிப்பாளர்களின் மத ரீதியான எந்த பண்டிகையாக இருந்தாலும் அவர்களை வாழ்த்துவது ஹராமாகும் (தடுக்கப்பட்டதாகும்) என்பது ஏகோபித்த முடிவாகும்.

இமாம் இப்னுல் கையூம் (ரஹ்) அவர்கள், தனது ‘அஹ்காமு அஹ்லுத் திம்மா’ என்ற நூலில் குறிப்பிடும்போது: ‘நிராகரிப்பாளர்களின் அடையாளச் சின்னங்களாகவே காட்சியளிக்கும் விடயங்களில் அவர்களை வாழ்த்துவது ஏகோபித்த கருத்தின் அடிப்படையில் ஹராமாகும். அவைகள் அவர்களது பண்டிகைகள், அல்லது நோன்பு போன்ற கிரியைகளைக் குறிப்பிடலாம். எவ்வாறான சொற்களை பயன்படுத்தி வாழ்த்தினாலும் சரியே. இவ்வாறு வாழ்த்துபவர் குப்ஃரை விட்டு நீங்கியவராக இருந்தாலும் இது தடுக்கப்பட்டதாகும். இந்த வாழ்த்தானது சிலுவைக்கு அவன் சிரம் பணிவதையே குறிக்கும். இது அல்லாஹ்விடத்தில் விபச்சராத்தை விட, மதுபானத்தை விட, கொலையை விட மிகப் பெரும் குற்றமாகும். அவனுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் மிகக்கொடிய பாவச் செயலாகும். இந்த தூய்மையான மார்க்கத்தின் மீது எந்த மதிப்பும் இல்லாத (இந்த பரிசுத்த நெறியின் கண்ணியத்தை அறியாத) அதிகமானோர் இந்த அழிவில் வீழ்ந்துவிடுவதை பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. அவனது இந்த மோசமான செயலின் பாரதூரத்தை அவன் அறியாமல் இருப்பது மற்றொரு வேதனையான விடயம். எவனொருவன் ஒரு பாவமான காரியத்தை, அல்லது ஒரு பித்அத்தை அல்லது குப்ஃரான விடயத்தை வாழ்த்துகின்றானோ அவன் அல்லாஹ்வின் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாவது உறுதியானதாகும்.’

அவர்களது மத ரீதீயான விடயங்களில் வாழ்த்துவது ஹராமாகும். இமாம் இப்னுல் கையூம் (ரஹ்) அவர்கள் தெளிவு படுத்தும் விடயம்: இது அவர்களின் நிராகரிப்பின் சின்னங்களை ஏற்றுக்கொள்வதாகும், அவர்களுக்காக அவற்றை பொருந்திக்கொள்வதாகும். இவன் இந்த குப்ஃரை தனக்காக பொருந்திக்கொள்ளா விட்டாலும் சரியே, பிறரை திருப்திப்படுத்துவதற்காக அவர்களின் குப்ஃரின் சின்னங்களை வாழ்த்துவது ஒரு முஸ்லிமுக்கு தடுக்கப்பட்டதாகும். ஏனெனில் அல்லாஹ் இதை ஒருபோதும் பொருந்திக்கொள்வதில்லை.

அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிடும்போது:

إِنْ تَكْفُرُوا فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنْكُمْ وَلَا يَرْضَى لِعِبَادِهِ الْكُفْرَ وَإِنْ تَشْكُرُوا يَرْضَهُ لَكُمْ

‘(அவனை) நீங்கள் நிராகரித்தாலும் (அவனுக்குக் குறையேதுமில்லை) – நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் தேவையற்றவன். எனினும் தன் அடியார்களின் (நன்றி மறக்கும்) நிராகரிப்பை – குஃப்ரைக் கொண்டு அவன் திருப்தி கொள்வதில்லை. நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின் உங்களைப் பற்றி அவன் திருப்தி கொள்வான்.’ (39:7).

اَلْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا

‘இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன், மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன், இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்.’ (5:3).

உங்களுடன் ஒன்றாக பணியில் ஈடுபடுபவர்களாக இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம் பொதுவாகவே இவ்வாறு வாழ்த்துவது ஹராமாக்கப்பட்டதாகும்.

அவர்களின் பண்டிகைகளுக்காக (பெருநாட்களுக்காக) எம்மை வாழ்த்தினால் நாம் அதற்கு பதில் வாழ்த்து தெரிவிப்பது கூடாது, ஏனெனில் அவைகள் எமது பெருநாட்கள் அல்ல, இன்னும் அப்பெருநாட்களை அல்லாஹ் ஒருபோதும் பொருந்திக்கொள்வதில்லை, சில வேளை அவர்களது மதத்திலும் அது புதிதாக உருவாக்கப்பட்டதாக இருக்கலாம், அல்லது அவர்களது மதத்தில் உள்ள ஒன்றாக இருக்கலாம், இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் அகில உலகிற்கும் தூதராக அனுப்பப்பட்டதன் மூலம் இஸ்லாம் ஏனைய அனைத்து வழிகெட்ட மதங்களையும், கொள்கைகளையும் செல்லுபடியற்றதாக்கிவிட்டது.

அல்லாஹ் தனது திருமறையில்:

وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ

இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்படமாட்டாது, மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.’ (3:85).

இந்நிகழ்வுகளுடன் கூடிய விழாக்களுக்கோ, விருந்துகளுக்கோ ஒரு முஸ்லிம் அழைக்கப்படும்போது கலந்துகொள்வது தடுக்கப்பட்டதாகும். ஏனெனில் இவ்வாரான நிகழ்வுகளில் கலந்தகொள்வது அவர்களுக்கு மிகப்பெரிய வாழ்த்தாக அமையும். ஒரு முஸ்லிம் இவைகளில் கலந்து, இனிப்புப் பண்டங்கள், உணவு வகைகள், குடிபானங்கள், பரிசுப் பொருட்களை அவர்களுக்கு மத்தியில் பரிமாறிக்கொள்வதும், நிராகரிப்பாளர்களுக்கு ஒப்பாக செயல்படுவதும் முற்றிலும் தடுக்கப்பட்டதாகும். அந்நாட்களில் விடுமுறை எடுத்துக்கொள்வதும் ஹராமாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இக்கூற்று மிக முக்கியமானதாகும்: ‘எவர்கள் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாக செயல்படுவார்களோ அவர்களும் அக்கூட்டத்தை சார்ந்தவர்கள்’ (அபூதாவுத்).

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் தனது இக்திழாஉஸ் ஸிராதில் முஸ்தகீம் முஹாலஃபதி அஸ்ஹாபில் ஜஹீம் என்ற நூலில்: ‘அவர்களின் பண்டிகைகளில் கலந்து அவர்களுக்க ஒப்பாக செயல்படுவதென்பது அவர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி, அவர்கள் இருக்கும் அசத்திய வழியையும் சரிகாணச் செய்யும். அதே போன்று சில வேளைகளில் இவர்களுடன் கூடி இவ்வாரான நிகழ்வுகளில் உணவுகளை பரிமாறுவது, இது போன்ற விடயங்கள் கலந்து கொள்வது மார்க்கத்தில் பலவீனமாக உள்ளவர்களை திசை திருப்புவதற்கும் சந்தர்பமாக பயன்படுத்தப்படும்.’

மேற் கூறப்பட்ட விடயங்களை, எந்த நோக்கமுமின்றி வெளிப்படையாகவோ அல்லது நட்பை பிரதிபளிக்கும் விதமாகவோ, அல்லது வெட்கத்தின் காரணத்தாலோ அல்லது வேறு எந்த காரணத்திற்காக செய்தாலும் அவன் ஒரு மிகப் பெரிய குற்றத்தை செய்த பாவியாவான். ஏனெனில் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் வளைந்து கொடுப்பதென்பது இறை நிராகரிப்பாளர்களின் உள்ளங்களை அவர்களின் வழிகெட்ட கொள்கைளில் பலப்படுத்துவதுடன், அவர்கள் இருக்கும் வழிகெட்ட மதங்களைப்பற்றி ஒரு பெறுமை அவர்களுக்குள் உருவாக்கவும் வழிசெய்யும். (ஷைகு ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்) அவர்களின் மஜ்மூஉல் பஃதாவா எனும் நூல்: 369/3).

தமிழாக்கம்: அஸ்ஹர் ஸீலானி

Published on: Dec 25, 2012 – Republished on 25.12.2018

6 comments

  1. அவர்களுடைய பண்டிகைகளில் வாழத்து தெரிவிக்காவிட்டாலும், நம்முடன் மிகவும் நெருங்கிப் பழகுகின்ற நண்பர்கள், இஸ்லாமிய மார்க்கத்தின் மீது அதிக பற்றுள்ள முஸ்லிமல்லாதவர்கள், இஸ்லாத்துக்கு கழங்கம் ஏற்படு்த்தும் நோக்கமின்றி வாழ்த்துக் கூறும் போது அவர்களுக்கு நாம் எப்படி மறுமொழி சொல்வது?

    அது போன்று முஸ்லிம்களுக்கு மத்தியில் பிறந்த தின (Birth day) விழா கொண்டாட வில்லையென்றாலும், ஒருவரின் பிறந்த தினத்துக்காக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் (Happy Birth day) போன்ற வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் தவறேதும் உள்ளதா? இதனை மார்க்க அடிப்படையில் நன்மை கிடைக்கும் என்று நினைத்து செய்யவில்லை. இது ஒரு வழமையான விடயம் என்ற அடிப்படையில் செய்கிறார்கள். இதுவும் யூத கிரிஸ்தவர்களின் கலாச்சரத்திற்கு ஒப்பாகுமா? அல்லது இது மார்க்க அடிப்படையில் தடுக்கப் பட்டுள்ளதா? என்பதை குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கவும்..
    நன்றி

  2. “மேற்சொன்னவைகளில் எதையாவது ஒன்றை எந்த நோக்கமுமின்றி செய்தால் குற்றமாகுமா? அவன் வெளிப்படையாகவோ, அல்லது ஒரு தர்மசங்கடமான நிலையிலோ, அல்லது வெட்கத்தின் காரணமாகவோ, அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்திற்காகவோ அவர்களுடன் இதில் ஒப்பாக செயல்பட முடியுமா?”…இத்தனை விரிவான பகுப்பாய்வுடன் தான் இந்த கேள்விக்கு மார்க்க தீர்ப்பை எதிர்ப்பார்தால் நிச்சயமாக ஈசா அலைஹிவஸலம் வந்து தீர்ப்பு வழங்கினாலும் அது கேள்வி கேட்டவரை அன்னியருடன் ஒப்புரவாடுவதை தடுக்காது (அல்லாஹ் நன்கறிந்தவன்)…தெளிவான நிராகரிப்பில் எவர் சலுகையை எதிர்ப்பார்ப்பாரோ அவர்க்கு பதிலளித்தலும் அளிக்காததும் சமமே…ஆகவே கல்வியாளர்கள் விரிவாக பதிலளிக்கமலிருத்தலே நலம்..உண்மையில் அது அவர்களது கடமை…ஏனெனில் பதிலளிப்பதின் மூலம் கேள்வி கேட்டவரின் இச்சையை, நிராகரிபோரின் உறவை அது அங்கீகரித்ததாகிவிடும்…இன்னும் பல இச்சைகளையும் அவர் கேள்விகளாக்கி சலகையை எதிர்ப்பார்ப்பார்..கிடைக்காவிட்டால் ஏற்படுத்தியும் கொள்வார்..கல்வியாளர்கள் நுனுக்கமாக இருத்தல் நல்லது… அல்லாஹ் நன்கறிந்தவன்

  3. Abdullah algahthani

    Personal opinion of the shik othaimeen thear is no direct Hadees .he using ground of Sunna and alqoran
    their are lot of non Muslim embrass islam long time back observing our attitude and behavior .this type of fatwa will leads Muslims are bade behavior among the nation

  4. sirupanmai muslimgalin vidayaththil enna theerpu?

  5. The date 25th December is taken by Christians as the birth of Jesus, the origins of this date can be linked to the birthday of the Hindu god Khrishna, & the Greek god of light, Mithra. This evil celebration is from many angles of origin is a deeply rooted practice of Shirk (worshipping along with the Creator [i.e. Allah], a crime which Allah will never forgive.

    “Verily, Allâh forgives not that partners should be set up with him in worship, but He forgives except that (anything else) to whom He pleases, & whoever sets up partners with Allâh in worship, he has indeed invented a tremendous sin” [4:48]

    How can a Muslim possibly approve or participate in such a practice that bases itself on the notion that Allah has an offspring?

    Allah (swt) said,

    “Such was Jesus, the son of Mary; it is a statement of truth, about which they vainly dispute. It is not befitting to the majesty of God, that He should beget a son. Glory be to Him! When He determines a matter, He only says to it, ‘Be’ & it is” [19:34-35]

    The every concept of Christmas contradicts & conflicts with the foundation of Islam, & that is the testimony of faith, “La Ilaha Ila Allah – None has the right to be worshipped but Allah”. Any person with basic knowledge of Islam could never accept or tolerate such a false accusation against Allah. Allah is free from having any offspring or being an offspring, for He (swt) said,

    “Say: “God is Unique! God, the Source [of everything]. He has not fathered anyone nor was He fathered, & there is nothing comparable to Him!” [112:1-4]

    Even though this practice is heavily glamorised & practiced by the majority, it is paramount for every worshipper of Allah to avoid following the masses in this evil celebration, Allah (swt) said,

    “If you obey most of those upon the earth, they will lead you away from the way of Allaah.” [6:116]

    It is the ruling of Allah & His Messenger, that those who imitate anyone in dress, manner, behaviour, speech or even celebration becomes part of that community, for the messenger of Allah (swt) said,

    “Whoever imamates a group of people he is one of them”. [Reported in Abu Dawood]

    Every Muslim has a responsibility to protect his family from the misguidance of Christmas, because its observance will lead to hellfire (a punishment which is seventy times hotter than the fires of this world).

  6. jasakallahu hair.Allah mannithu arula wendum..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *