Featured Posts
Home » வரலாறு » நபித்தோழர்கள் » சுன்னாவும் சஹாபாக்களும் (தொடர்-1)

சுன்னாவும் சஹாபாக்களும் (தொடர்-1)

– இம்தியாஸ் யூசுப் ஸலபி
நபி(ஸல்) அவர்களை நேரில் கண்டு ஈமான் கொண்டு -தோழமைக் கொண்டு- முஸ்லிம்களாக வாழ்ந்து இஸ்லாத்தில் மரணித்தவர்கள்”சஹாபாக்கள் எனப்படுவர். அல்குர்ஆனுக்கு விரிவுரையாகிய நபிகளாரின் சொல் செயல் மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஹதீஸை -சுன்னாவை- ஏற்று பின்பற்றுவதில் சஹாபாக்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித் தார்கள். சிறிய விடயமானாலும் பெரிய விடயமானாலும் சுன்னா வைப் பின்பற்றுவது அல்லாஹ்வின் வஹீயை பின்பற்றுவதாகக் கருதினார்கள். உண்மையான கண்ணோட்டத்துடனேயே சுன்னாவை அணுகினார்கள்.

நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். இன்னும் உங் கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் நிகரற்ற அன்புடையோனுமாவான் என்று (நபியே) கூறுவீராக. (3:31)

அல்லாஹ்வின் பாவமன்னிப்பும் அருளும் கிடைப்பதற்கு இறைத் தூதரை முழுமையாக நேசித்து தங்களது வாழ்க்கையின் செயற் பாடுகளுக்கு முன்மாதிரியாக கொண்டு செயலாற்றுவது இன்றி யமையாதது என்றும் நம்பினார்கள்.

உங்களில் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் ஆதரவுவைத்து அல்லாஹ்வை அதிகம் நினைவுகூருவோருக்கு அல்லாஹ்வின் தூதரிடம் நிச்சயமாக அழகிய முன்மாதிரி இருக்கின்றது.(33:21)

மறுமையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்த சஹா பாக்கள் ஒவ்வொரு அசைவிலும் நபிகளாரின் அடிச்சுவடையே முன்மாதிரியாக கொண்டு பின்பற்றினர். வஹியைக் கொண்டே நபி(ஸல்) அவர்களின் செயற்பாடுகள் உறுதிப்படுத்தப்படுகின்றன என்பதை புரிந்து காரியமாற்றினார்கள். இந்த உலகத்திலுள்ள எந்த மனிதனுடைய வார்த்தைகளையும் செயல்களையும் விரும்பினால் ஏற்கலாம் விரும்பினால் நிராகரிக்கலாம். ஆனால் நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வார்த்தை களையும் செயல்களையும் அவ்வாறு கணிக்க முடியாது என்பதை ஆழமாகப் புரிந்து கொண்டார்கள்.

நபி(ஸல்) அவர்களின் வாழ்வு ஒளிவு மறைவின்றி திறந்த புத்தக மாக இருந்தது. மக்களுக்கு எந்த இரகசியமும் மறைக்கப்பட வில்லை. குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் மக்களுக்கான செய்திகள் வெளிப்படையாகக் கிடைத்தன. மார்க்கத்தை உரிய முறையில் விளங்கி நடைமுறைப்படுத்திட சஹாபாக்கள் முழு ஈடுபாடு கொண்டார்கள்.

ஈமானை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காக எதிரி களின் அச்சுறுத்தல் களை சஹாபாக்கள் சந்தித்தார்கள். யுத்த களத்தில் எதிரிகளை எதிர்கொள்வதும் மார்க்கத்தை கற்பதும் என்ற நிலையில் இருந்தார்கள். இது பற்றி அல்லாஹ் கூறும்போது ஷஷநம்பிக்கையாளர்கள் அனைவருமாக (போருக்காக புறப்பட வேண்டியதில்லை. அவர்களில் உள்ள ஒவ்வொரு வகுப்பாரிலும் ஒரு கூட்டத்தினர் மார்க்கத் தை விளங்கிக் கொள்வதற்காகவும் தமது சமூகத்திற்கு திரும்பியதும் அவர்கள் (தமது தவறுகளி லிருந்து) விலகிக் கொள்ளும் பொருட்டு அவர்களை எச்சரிப்பதற் காகவும் புறப்பட வேண்டாமா?” (9:122)

அல்லாஹ்வின் அறிவுரைக்கேற்ப மார்க்கத்தை கற்பதிலும் சமூக பாதுகாப்பு மற்றும் தொழில்களில் ஈடுபடுதல் என்ற உயரிய இலட்சியத்திலும் வாழ்ந்த சஹாபாக்கள் மார்க்க தெளிவை வேண்டி நபி(ஸல்)அவர்களிடம் விளக்கம் கேட்டு வந்தார்கள். இவர்களது இந்த ஈடுபாட்டை அல்குர்ஆன் பின்வருமாறு கோடிட்டுக் காட்டுகிறது.

(நபியே!) மது சூதாட்டம் குறித்து அவர்கள் உம்மிடம் கேட் கின்றனர். அவ் விரண்டிலும் பெரும்கேடும் மனிதர்களுக்கு (சில) பயன்களும் இருக்கின்றன. எனினும் அவ்விரண்டின் பயனை விட கேடு மிகப் பெரியதாகும்|| எனக் கூறிவீராக. (2:219)

நபியே! மாதவிடாய் பற்றி அவர்கள் உம்மிடம் வினவுகின்றனர். அது ஒரு உபாதை எனக் கூறுவீராக. எனவே மாதவிலக்கின் போது (உடலுறவு கொள்வதைத் தவிர்த்து) பெண்களை விட்டு விலகியிருங்கள். (2:22)

நபியே! அவர்கள் உம்மிடம் எதை (யாருக்கு) செலவு செய்வது? என்று கேட்கின்றனர். நன்மை தரும் எதனை நீங்கள் செல வளித்தாலும் நன்மையே. (அது) பெற்றோர்கள், நெருங்கிய உறவி னர்கள், அநாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்கள் ஆகியோ ருக்குரியதாகும் என்று நீர் கூறுவீராக. மேலும் நீங்கள் செய்கின்ற எந்தவொரு நன்மையானாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன் கறிந்தவனாவான். (2:215)

நபியே! புனித மாதத்தில் போர் புரிவது பற்றி உம்மிடம் கேட்கின் றனர்.அதில் போர் புரிவது பெரும் குற்றமாகும். (எனினும்) அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்)தடுப்பதும் அல்லாஹ்வை நிராகரிப்பதும் மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் தடுப்பதும் அங்குள்ளோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் குற்றமாகும். மேலும் குழப்பம் விளைவிப்பது கொலையை விட பெரும் குற்றமாகும் என்று நபியே நீர் கூறுவீராக. அவர்களுக்கு முடியுமானால் உங்கள் மார்க்கத்தை விட்டும் உங்களைத் திருப்புகின்ற வரை உங்க ளுடன் அவர்கள் போரிட்டு கொண்டே இருப்பார்கள் உங்களில் எவர் தனது மார்க்கத்தை விட்டும் மாறி காபிராக மரணித்தும் விடுகின்றாரோ அவர்களது செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகளே அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (2:217)

அனாதைகள் குறித்தும் உம்மிடம் கேட்கின்றனர். அவர்களுக் குரிய சீர்திருத்தம் செய்வது நன்று. நீங்கள் அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்தால் உங்கள் சகோதரர்களாவர். மேலும் சீர்திருத்தம் செய்பவனிலிருந்து குழப்பம் விளைவிப்பவனை அல்லாஹ் நன்கறிவான். (2:220) இது போன்ற பல வசனங்கள் சஹாபாக்களின் நிலைப்பாட்டை எடுத்துக் காட்டுகின்றன.

தொடரும். இன்ஷாஅல்லாஹ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *