Featured Posts
Home » மீடியா » வீடியோ ஆடியோ » “மக்தபதுஷ் ஷாமிலா” மின்னணு நூலகத்தை உபயோகிப்பது எப்படி?

“மக்தபதுஷ் ஷாமிலா” மின்னணு நூலகத்தை உபயோகிப்பது எப்படி?

المكتبة الشاملة – Maktabah Shamilah – மக்தபதுஷ் ஷாமிலா
அறிமுகம் மற்றும் செயல் முறை விளக்கம்:
அரபி மொழியில் மிகப் பிராமாண்டமான மின்னனு நூலகம் “மக்தபதுஷ் ஷாமிலா” என்ற இம்மென்பொருள் கணினி (Computer) பயன்படுத்தும் தமிழ் பேசும் மார்க்க அறிஞர்கள் பலரிடம் உள்ளது. ஆனால் இதன் வசதிகளை பலர் முழுமையாகப் பயன்படுத்த முடியாமல் இருப்பதனைக் காண முடிகின்றது. எனவே இம்மென்பொருளை இலகுவாக பயன்படுத்துவதற்காக, இதன் பல்வேறு வசதிகளைப் பற்றி சுருக்கமாக, பயன்பாட்டு முறையில் விளக்கியுள்ளார் மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் இவர்கள்.

இவ்விளக்க குறிப்பு வீடியோ பதிவுகளை சுமார் 6 பாகங்களாக வெளியிட்டுள்ளோம். தமிழ்பேசும் மார்க்க அறிஞர்கள், அரபி வாசிக்க தெரிந்த மற்றும் மார்க்க கல்வியில் அதிக நாட்டமுடையவர்கள், மார்க்க ஆய்வாளர்கள், இவர்களுக்கு இந்த வீடியோ குறிப்புகள் மிகுந்த பயனளிக்கும் என்று நம்புகிறோம். (இன்ஷா அல்லாஹ்).  இதில் கீழ்கண்ட விஷயங்கள் அடங்கியுள்ளன.

குறிப்பாக:

  • பொதுவான அறிமுகம் மற்றும் சுருக்கமான விளக்கம்
  • கிதாபுகளை வாசிப்பதற்கான வழிமுறைகள்
  • கிதாபுகளை தேர்வு செய்தல் அதில் தமக்கு தேவையானவைகளை தேடுதல் குறிப்பாக ஷரஹ் பார்த்தல், ஹதீஸ்களின் அறிவிப்பாளர்கள், அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைப் பற்றிய வரலாறுகளையும் அவர்களைப்பற்றி ஏனைய இமாம்களின் கருத்துக்களை பார்த்தல்
  • அல்-குர்ஆன் வசனத்திற்கான பல்வேறு தப்ஸீர்களை பார்த்தல், அதனை காப்பி செய்தல், தனியாக பிரித்து எடுத்தல், தேவையானவைகள் எவ்வாறு மக்தபதுஷ் ஷாமிலாவிலிருந்து காப்பி செய்தல்
  • ஒரே நேரத்தில் பல கிதாபுகளை திறந்து வாசிப்பதற்கான வழிமுறைகள்
  • மக்தபதுஷ் ஷாமிலா-வில் ஒரு வார்ததை அல்லது வார்த்தைகளை கொண்டு தேடுதல்

இவ்வுதவி குறிப்பு வீடியோ பதிவுத் திட்டத்தை வெற்றிகமாக முடிப்பதற்கு உதவி செய்த எல்லாம் வல்ல அல்லாஹ்-விற்கே புகழனைத்தும். இத்திட்டத்தில் நம்மோடு தோளோடு தோள் நின்று பணியாற்றிய சகோதரர்கள், குறிப்பாக காரைகால் சகோ. நஸீர் ஹுசைன் மாலிமார், கோட்டார் முஹம்மத் ரிஸ்வான், சகோ. முஹம்மத் உவைஸ் (இலங்கை) மற்றும் மிக நீண்ட நேரம் நடைபெற்ற தள ஒளிப்பதிவில் இன்முகத்தோடு இருந்து நேர்த்தியாக விளக்கம் அளித்த மவ்லவி முஜாஹித் ரஸீன் அவர்களுக்கும் எங்களது நன்றியினை (ஜஸாக்குமுல்லாஹ் ஹைர்) தெரிவித்துக் கொள்கின்றோம்.  இவர்களது பாவங்களை மன்னித்து ஈருலுகிலும் வெற்றியை வழங்குவானக என எல்லாம் வல்ல அல்லாஹ்-விடம் பிரார்த்திகின்றோம்.

செயல்முறை வீடியோ வெளியீடு:  இஸ்லாம்கல்வி.காம்

படத்தொகுப்பு: தென்காசி S.A ஸித்திக்

இதன் கீழே 6 பாகங்ளையும் தொடராக பார்த்து பயனடையளாம்.  குறிப்புகளை தெளிவாக அறிய வீடியோவினை பெரிதாக்கிப் பார்க்கவும். இத்துடன் தங்களின் கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

One comment

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

    அருமையான பயனுள்ள பதிவு இது . ஜெஸாக்குமுல்லாஹு கைராஹ்.

    இந்த மென்பொருளின் ஒரிஜினலை எவ்வாறு இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று தகவல் தருவீரக்ளா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *