Featured Posts
Home » இஸ்லாம் » அறிவுரைகள் » நேசத்திற்குரியவர்களும், வெறுப்புக்குரியவர்களும்

நேசத்திற்குரியவர்களும், வெறுப்புக்குரியவர்களும்

அல்குர்ஆனில் இடம் பிடித்த அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர்களில் சிலர்:

நன்மை செய்வோர் அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர்கள். எவைகளையெல்லாம் இஸ்லாம் நமக்கு நன்மைகளாகப் போதித்துக் கொண்டிருக்கின்றதோ அந்த அனைத்து நன்மைகளையும் இது உள்ளடக்கும்:

وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ

“இன்னும், நன்மை செய்யுங்கள், நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கின்றான்”. (அல்பகரா 2: 195).

وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ

“அல்லாஹ் நன்மை செய்வோரையே நேசிக்கின்றான்”. (ஆல இம்ரான் 3:148).

إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ

“மெய்யாகவே நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான். ” (அல்மாயிதா 5: 13).

وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ

“அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கின்றான்”. (ஆல இம்ரான் 3: 134).

தனது ஆன்மாவை பாவ அழுக்குகளிலிருந்து பரிசுத்தப்படுத்திக் கொண்டவர்களையும், வெளிப்படையான அங்க சுத்தியை பேணக்கூடியவர்களையும் அல்லாஹ் நேசிக்கின்றான்:

إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ

“பாவங்களை விட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான், இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்”. (அல்பகரா 2: 222).

وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ

“அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்”. அத்தவ்பா 9: 108).

அல்லாஹ்வை அஞ்சி, பயந்து வாழ்கின்ற பயபக்தியுடையோரை அல்லாஹ் நேசிக்கின்றான்:

فَإِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَّقِينَ

“நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு) அஞ்சி நடப்போரை நேசிக்கின்றான்”. (ஆல இம்ரான் 3:76).

إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَّقِينَ

“நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்”. (அத்தவ்பா 9: 4).

வாழ்வின் அனைத்து நிலைகளிலும் அல்லாஹ்விற்காக பொறுமையை மேற்கொள்ளும் அடியார்களை அல்லாஹ் நேசிக்கின்றான்:

وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ

“அல்லாஹ் பொறுமையாளர்களையே நேசிக்கின்றான்”. (ஆல இம்ரான் 3: 146).

சகல காரியங்களிலும் அல்லாஹ்வை சார்ந்து உறுதியுடன் செயல்படும் அடியார்களை அல்லாஹ் நேசிக்கின்றான்:

فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ

” (நபியே) அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்து வீராக! – நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்”. (ஆல இம்ரான் 3: 159).

அல்லாஹ்விற்காக நீதியுடன் செயல்படும் அடியார்களை அல்லாஹ் நேசிக்கின்றான்:

إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ

“நிச்சயமாக அல்லாஹ் நீதிமான்களையே நேசிக்கின்றான்”. (அல்மாயிதா 5: 42).

அல்லாஹவின் தூதரை பின் பற்றக்கூடியவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான்:

قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ

“(நபியே!) நீர் கூறும், நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின்பற்றுங்கள், அல்லாஹ் உங்களை நேசிப்பான், உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான், மேலும் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்” (ஆல இம்ரான் 3: 31).

அல்லாஹ் ஒரு அடியானை நேசித்துவிட்டால் அந்த நேசத்தின் அங்கீகாரம் எப்படியெல்லாம் அமைகிறது என்று பாருங்கள்:

عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : إِذَا أَحَبَّ اللَّهُ الْعَبْدَ نَادَى جِبْرِيلَ إِنَّ اللَّهَ يُحِبُّ فُلاَنًا فَأَحْبِبْهُ فَيُحِبُّهُ جِبْرِيلُ فَيُنَادِي جِبْرِيلُ فِي أَهْلِ السَّمَاءِ إِنَّ اللَّهَ يُحِبُّ فُلاَنًا فَأَحِبُّوهُ فَيُحِبُّهُ أَهْلُ السَّمَاءِ ثُمَّ يُوضَعُ لَهُ الْقَبُولُ فِي الأَرْضِ
(البخاري).

“அடியானை அல்லாஹ் நேசிக்கும் பொழுது ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். எனவே, நீங்களும் அவரை நேசியுங்கள்! என்று கூறுவான். எனவே, ஜிப்ரீல்(அலை) அவர்கள் விண்ணகத்தில் வசிப்பவர்களிடம், அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான், நீங்களும் அவரை நேசியுங்கள் என்று அறிவிப்பார்கள். உடனே, விண்ணக்கத்தாரும் அவரை நேசிப்பார்கள். பிறகு அவருக்கு பூமியிலும் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், புஹாரி).

எந்த நேசம் உண்மையான, நிலையான நேசமோ, அந்த ரப்பின் நேசத்துக்காகவே நமது வாழ்வின் ஒவ்வொரு நகர்வுகளையும் ஆக்கிக்கொள்வோம்.

அல்குர்ஆன் கூறும் அல்லாஹ்வின் வெறுப்புக்குரியவர்களில் சிலர்:

அல்லாஹ் போட்ட வரம்புகளை மீறுபவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை:

وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ

“ஆனால் வரம்பு மீறாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை”. (அல்பகரா 2: 190).

நிராகரித்துக்கொண்டிருக்கும் பாவிகளை அல்லாஹ் நேசிப்பதில்லை:

وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ

“‘(தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை”. (அல்பகரா 2: 276).

فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ

“நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை (நிராகரிப்பாளர்களை) நேசிப்பதில்லை”. (ஆல இம்ரான் 3:32).

إِنَّهُ لَا يُحِبُّ الْكَافِرِينَ

“நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை (நிராகரிப்பாளர்களை) நேசிக்க மாட்டான்” (அர்ரூம் 30: 45).

அக்கிரமக்காரர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை:

وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ

“அல்லாஹ் அக்கிரமம் செய்வோரை நேசிக்கமாட்டான்”. (ஆல இம்ரான் 3:57)

وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ

“அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை”. (ஆல இம்ரான் 3: 140).

إِنَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ

“நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்”. (அஷ்ஷுரா 42: 40).

ஆணவம் கொள்வோரை அல்லாஹ் நேசிப்பதில்லை:

إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا

“நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை”. (அந்நிஸா 4: 36).

إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْتَكْبِرِينَ

” (ஆணவம் கொண்டு) பெருமையடிப்பவர்களை அவன் நிச்சயமாக நேசிப்பதில்லை”. (அந்நஹ்ல் 16: 23).

إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْفَرِحِينَ

“நிச்சயமாக அல்லாஹ் ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்” (அல்கஸஸ் 28: 76).

إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ

“ஆணவம் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்ல்லாஹ் நேசிக்க மாட்டான்”. (லுக்மான் 31: 18).

மோசடிக்காரர்களையும், பாவிகளையும் அல்லாஹ் நேசிப்பதில்லை:

إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ خَوَّانًا أَثِيمًا

“ஏனென்றால் கொடிய பாவியான சதி செய்து கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை”. (அந்நிஸா 4: 107).

إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْخَائِنِينَ

“நிச்சயமாக அல்லாஹ் மோசடி செய்பவர்களை நேசிப்பதில்லை”. (அல் அன்பாஃல் 8: 58).

إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ خَوَّانٍ كَفُورٍ

“நன்றி கெட்ட மோசக்காரர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை”. (அல்ஹஜ் 22: 38)

பூமியில் குழப்பம் விளைவிப்போரை அல்லாஹ் நேசிப்பதில்லை:

وَاللَّهُ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ

“அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்”. (அல்மாயிதா 5: 64).

إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ

“நிச்சயமாக அல்லாஹ் குழப்பம செய்பவர்களை நேசிப்பதில்லை” (அல்கஸஸ் 28: 77).

வீண் விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிப்பதில்லை:

وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ

“வீண் விரயம் செய்யாதீர்கள் – நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (அல் அன்ஆம் 6: 141).

وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ

“எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை”. (அல் அஃராப்ஃ 7: 31).

அல்லாஹ்வின் வெறுப்பைப்பையும், கோபத்தையும் சம்பாதித்துக்கொண்ட ஒருவன் நிச்சயமாக ஈருலகிலும் ஈடேற்றம் பெறவே முடியாது. அவனது நாளை மறுமையின் நஷ்டம் இன்னும் பயங்கரமானதாகும்.

எனவே அல்லாஹ்வின் நேசத்திற்குரிய பண்புகளை நமக்குள் வளர்த்துக்கொள்வோம். அவனது வெறுப்பையும், கோபத்தையும் பெற்றுத்தருகின்ற மோசமான பண்புகளை விட்டு விலகிக்கொள்வோம்.

தொகுப்பு: அஸ்ஹர் ஸீலானி

6 comments

  1. Salaam, Alhamdulillah, nice collection.

  2. MAY ALLAH REWARD YOU WITH GOOD. ALLAH HAFIZ.

  3. Jasakallahu Haire… very useful message.

  4. sukran jazilan thoughtful collection need for every muslim

  5. MASHAALLAH

  6. JAZAKALLAHHAIR. NAMUM IHAN BADI NADAKA URUTHI EDUBBOM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *