Home » வரலாறு » இலங்கை முஸ்லிம்கள் » வஹ்ஹாபி-ஸலபி கொள்கை அடிப்படைவாதம் ஆகுமா?

வஹ்ஹாபி-ஸலபி கொள்கை அடிப்படைவாதம் ஆகுமா?

– இம்தியாஸ் யூசுப் ஸலபி
இலங்கையில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்குமெதிராக உருவான இனவாத இயக்கமான பொதுபல சேனா முஸ்லிம்களுக்கிடையில் பிரிவுகளை வளர்ப்பதற்கும் குழப்பங்களை உருவாக்குவதற்கும் முனைந்து வருகிறது. பழமைவாத முஸ்லிம்களுக்கு தாங்கள் எதிரிகள் அல்ல என்றும் வஹ்ஹாபி ஸலபி கொள்கையுடையவர்களே எதிரிகள் என்றும் இவர்கள் தான் அடிப்படைவாதிகள் என்றும் இந்நாட்டு பழமைவாத முஸ்லிம்களுக்கு தாங்கள் எதிரானவர்கள் அல்ல என்றும் அவர்களுக்கோர் பிரச்சனையென்றால் அந்த இடத்தில் நாங்கள் நிற்போம் என்றும் பிரச்சாரம் செய்து வருகிறது.

வஹ்ஹாபி மற்றும் ஸலபி பற்றி பொது பல சேனாவுக்கு காட்டி கொடுத்து முழுவிபரங்களையும் தெரிவித்தவர்கள் குறிப்பிட்டதோர் தரீக்காவாதிகள் என்பது இப்போது நாட்டு மக்களுக்கு தெளிவாகியுள்ளது. இவர்கள் எழுதிய கடிதங்கள் வெளியிட்ட சீடீக்கள் கொண்ட தொடர்புகள் எல்லாம் வெளியாகியுள்ளன.

வஹ்ஹாபி ஸலபிகளை எவ்வாறு வேறுபடுத்திப் பாரக்க வேண்டும் என்பதற்கான மதரீதியான அடையாளங்களையும் இவர்கள் இனவாதிகளிடம் எடுத்துக் கூறியுள்ளார்கள். நீண்ட தாடி நீண்ட வெள்ளை நிறஜுப்பா. கருப்பு நிற அபாயா (ஹிஜாப்) போன்றவை அதில் முக்கியமானவை. அத்துடன் தப்லீக் மற்றும் தவ்ஹீத் அமைப்புக்களின் விலாசங்கள் அமையப் பெற்றிருக்கின்ற இடங்கள் கிடைமக்கப்பெறுகின்ற உதவிகள் போன்றவையும் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஜம்மியதுல் உலமா முன்னெடுத்த ஹலால் பிரச்சனையை கூட இவர்கள் தான் பெரிதுப்படுத்தி உலமா சபைக்கு எதிராக பொதுபல சேனாவுக்கு ஆதரவாக பேட்டிகள் வழங்கினார்கள். இத்தகையவர்களைத்தான் (தரீகாவாதிகளை) பழமைவாத முஸ்லிம்கள் என்று பொதுபலசேனா நன்றியுடன் பாராட்டுகிறது.

தற்போது நாட்டில் இஸ்லாத்தின் எதிரிகள் யார்? துரோகிகள் யார் என்பது அல்லாஹ்வின் உதவியால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த துரோகத்தனம் கியாமத் நாள் வரை மறைந்து விடாது.

தவ்ஹீத் தப்லீக் ஜமாஅத்தே இஸ்லாம் சகோதரர்கள் மீது இவர்கள் கொண்ட காழ்ப்புணர்வின் காரணமாக இஸ்லாத்தின் எதிரிகளிடம் போய் முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுத்து அடகுவைத்துள்ளார்கள்.

முஸ்லிம்களின் பொருளாதாரம் மற்றும் மார்க்கத்திற்கு எதிராக கிளம்பியுள்ள இந்த இனவாதிகள் இத்தகையவர்களை ஒற்றர்களாக பயன்படுத்தலாம். ஆனால் அழிவு என்று வரும் போது காட்டி கொடுத்த துரோகிகள் தான் முதலில் அழிக்கப்படுவார்கள் என்பதை இந்த தரிக்காவாதிகள் மறந்து விட்டார்கள். (அல்லாஹ் காப்பாற்றவேண்டும்.)

இஸ்லாம் தடை செய்யாத ஆடை அணிகளன்களை அணிகின்ற ஆண் பெண் முஸ்லிம்களைத்தான் அடிப்படைவாதிகளாக இவர்கள் அடையாளம் காட்டிக் கொடுத்த கொடுமை மன்னிக்க முடியாத அயோக்கியத்தனம்.

இனவாதிகள் பொதுவான நிகழ்ச்சி நிரல் திட்டத்தின் கீழ் தற்போது முஸ்லிம்களுக்கெதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறாரகள். அரபுலகில் ஏற்பட்டு வரும் எழுச்சியை இலங்கையில் இந்த அடிப்படை வாதிகள் புகுத்தமுனைகிறார்கள் என்று இவர்கள் கதைகட்டி விட்டார்கள். பொய்களையும் அபாண்டங்களையும் மூலதனமாக பயன்படுத்தி முஸ்லிம்களுக்கொதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தரீகாவாதிகள் காட்டி கொடுத்த விடயங்களுடன் முடிவடையாது என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். முஸ்லிம்களின் வியாபாரங்களை புறக்கணியுங்கள் என்ற பொது பல சேனாவின் பிரச்சாரத்தினால் இந்த தரீகாவாதிகளும் நஷ்டமடைந்திருக்கிறார்கள். இவர்களுக்கென்று விஷேடமான இலாபம் எதுவும் கிடைக்கவில்லை.

அது போல் தவ்ஹீத்ஜமாஅத்தினால் பள்ளிவாசல் கட்டிக் கொடுக்கப்படுவதை பற்றியும் உழ்ஹியாவுக்குப் பணம் வருவதைப்பற்றியும் முழுவிபரங்களையும் காட்டிக் கொடுத்தார்கள். தவ்ஹீத் பள்ளிவாசல் உடைக்கப்படுவதற்கு முன் இவர்களுடைய தர்காதான் முதலில் பொலிஸாரின் உயரிய பாதுகாப்புக்குக் கீழ் காவியுடை அணிந்த குண்டர்களால் உடைக்கப்பட்டது.

தர்காவுக்கு தவ்ஹீத் ஜமாஅத் எதிர்ப்பு என்றாலும் அதனை குண்டர்கள் உடைப்பதை அனுமதிக்க முடியாது என்பதை தவ்ஹீத் ஜமாஅத்தின் பத்திரிகையில் சத்தியக்குரலில் நாம் தாம் முதலில் கண்டித்து எழுதினோம். இன்றைக்கு எல்லா ஜமாஅத்தினரினதும் பள்ளிவாசல்களும் தகர்ப்புக்கு ஆளாகிவருகிறது.

முஸ்லிம்கள் அழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் களம் இறங்கியவர்கள் அதில் பழமைவாத புதுமைவாத முஸ்லிம்கள் என்று தரம் பிரித்து அழிக்க மாட்டார்கள் என்பதை இந்த தரீகாவாதிகள் உணர்ந்து கொள்ள நீண்ட காலம் பிடிக்காது.

வஹ்ஹாபி ஸலபி என்போர் யார் என்பதை இந்த இனவாதிகளுக்கும் அவர்களது நண்பர்களான தரீகாவாதிகளுக்கும் தெளிவுப்படுத்துவதோடு முஸ்லிம்களுக்கும் முன்வைக்க கடமைப்பட்டுள்ளோம்

வஹ்ஹாபி ஸலபி:
இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை “லாஹிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்பதாகும்.

லாஹிலாஹ இல்லல்லாஹ் என்றால் அண்ட சராசரங்களையும் படைத்து பரி பாலிக்கும் ஒரே இரட்சகனான அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு தகுதியானவன் வேறு யாருமில்லை என்பதாகும்.

அல்லாஹ் ஒருவன் அவன் தனித்தவன் அவனுக்கு இணைதுணை இல்லை. எந்தத் தேவையுமில்லை அவன் யாரையும் பெறவுமில்லை அவனை யாரும் பெற்றெடுக்கவுமில்லை. அவனுக்கு நிகராக சமமாக யாருமில்லை. எந்த வஸ்துமில்லை என்றும் நிலையானவன் என்ற கடவுள் கோட்பாட்டை கொண்டதாகும்.

வணக்கங்கள் அனைத்தையும் அல்லாஹ்வுக்கு மட்டுமே செலுத்த வேண்டும் அவனுக்கே சிரம் தாழ்த்த வேண்டும் வேறு எப்படைப்புக்கும் வணக்கம் செலுத்திட கூடாது என்று முஸ்லிம் ஏவப்பட்டுள்ளான்.

எனவே முஸ்லிமான ஒருவர் சந்திரன் சூரியன் அக்கினி சிலை மற்றும் மண்ணறை போன்ற எந்தவொன்றுக்கும் வணக்கம் செலுத்துவாராயின் அவர் இறைகோட்பாடான கலிமாவுக்கு முரண்பட்டவராக கணிக்கப்படுவார். படைப்புகளுக்கு வணக்கம் இன்றி படைத்தவனுக்கே வணக்கம் என்று இஸ்லாம் கூறுகிறது.

கலிமாவுக்கு கட்டுப்பட்டவர் முஸ்லிம் என்றும் கட்டுப்படாதவர் காபிர் என்றும் அரபியில் அழைக்கப்படும்.

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் எனும்போது அல்லாஹ்வின் ஒவ்வொரு கட்டளையையும் மனித சமூகத்திற்கு எத்திவைப்பதற்காக அனுப்பப்பட்ட தூதராவார். அவரே இறுதித் தூதர் அவருக்குப் பின் தூதர் எவரும் வரமாட்டார் என நம்புவதாகும்.

மனிதவாழ்வின் வழிகாட்டியாக அல்லாஹ் அருளிய வார்த்தைகளையே அல்குர்ஆன் என்றும் அக்குர்ஆனுக்கு விளக்கவுரையாக வாழந்து காட்டிய நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு செயலும் சுன்னா (அல்ஹதீஸ்) எனப்படும். இதுவே இஸ்லாத்தின் அடிப்படைகளாகும்.

இவ்விரண்டைக் கொண்டே முஹம்மத் (ஸல்) அவர்கள் தங்களுடைய சமூகத்தினரை வழிநடத்தினார்கள். அம்மக்கள் வாழ்ந்த முறையை அல்லாஹ்வும் தூதரும் பொருந்திக் கொண்டதனாலேயே “சிறந்த உம்மத்” (கைர உம்மத்) எனப் போற்றப் பட்டார்கள். சுவனத்துக்குரிய மக்கள் என அறிவிக்கப்பட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள் 23 வருடங்கள் நபித்துவ பணியில் ஈடுபட்டார்கள். அவர்கள் மூலமாகவே இஸ்லாம் மார்க்கத்தை அல்லாஹ் பூரணப்படுத்தி அதனையே தான் பொருந்திக் கொண்ட மார்க்கம் என அறிவித்தான்.

நபி(ஸல்) காலம் முதல் உலகம் அழியும் வரையுள்ள எந்தவொரு முஸ்லிமும் நபி (ஸல்) காலத்தில் அல்லாஹ் பொருந்திக கொண்ட அம்மார்க்கத்தையே பின்பற்ற வேண்டும் என ஏவப்பட்டிருக்கிறார். அம் மார்க்கத்தில் எவரும் எதனையும் புகுத்தவோ எதனையும் நீக்கவோ அனுமதிக்கப்பட வில்லை. மனித சிந்தனைக்கேற்ப கால நிலவரத்திற்கேற்ப அதில் கூட்டல் குறைவு கள் செய்யவதற்குக் கூட அதிகாரம் வழங்கப்படவில்லை.

நான் உங்களை வெள்ளை வெளேர் என்ற நிலையில் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது… உங்கிடையே அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆனையும் எனது வழிமுறையான சுன்னாவையும் விட்டுச் செல்கிறேன். அவ் விரண்டையும் பின்பற்றி நடக்கும் கால மெல்லாம் நீங்கள் வழிதவற மாட்டார்கள் என நபி(ஸல்) கூறினார்கள்.

துரதிஷ்டவசமாக முஸ்லிம்கிளல் சிலர் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் காட்டிச் சென்ற இம்மார்க்கத்தில் வணக்க வழிபாடு கள் மற்றும் சட்ட திட்டங்களில் கூட்டல் குறைவுகள் செய்து புதுமைகளை புகுத்தி தங்களது புத்தியால் அலங்கரிக்க முனைந்துள்ளனர். தவ்ஹீத் எனும் கோட்பாடுக்கு முரணான செயற்படலானார்கள். அல்லாஹ்வுக்குரிய வணக்கங்களில் பலரையும் கூட்டு சேர்த்துள்ளனர். பல்வேறு கூட்டங்கள் இஸ்லாத்தின் பெயரால் தோன்றியபோது அவைகள் வழிகெட்டவை என்பதை அடையாம் காண்பிப்பதற்காக ஸலபிகளின் வழிமுறைகளை கவனியுங்கள் என போதிக்கப்பட்டது.

ஸலபிகள் என்றால் முன்சென்ற உத்தமர்களான சஹாபாக்கள் என பொருள்படும். நபி(ஸல்) அவர்கள் காட்டிய ஈமானிய வழிமுறைகளையும் நம்பிக்கைகளையும் சஹாபாக்கள் நபிகளார் முன்னிலையில் எப்படி ஏற்று பின்பற்றினார்களோ அதன் முறையிலே ஈமான் கொண்டு பின்பற்றுங்கள். அந்த வழிமுறைகளையே அல்லாஹ் ஏற்றுக் கொண்டான் அவர்களது இறைநம்பிக்கையே சரியானது என உத்தரவாதப்படுத்தினான் அவர்கள் முஃமின்கள் சுவனவாசிகள் என பிரகடனப்படுத்தினான்.

வஹியை நடைமுறைப்படுத்திய முதல் சமூகம் இந்த மண்ணில் மேல் வாழ்ந்த உன்னத சமூகம். இவர்களே அல்லாஹ்வின் அடியார்கள் என்று போற்றப்பட்டவர்கள். எனவே வழிகேட்டையும் குழப்பங்களையும் தவிர்த்துக் கொள்ளவும் அடையாளம் காணவும் இதுவே சிறந்த வழி (ஸலபிகள் சென்ற வழி) என ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த இமாம்கள் போதித்தார்கள். இதன் அர்த்தம் சஹாபாக்களை கண்மூடித்தனமாக பின்பற்றுங்கள் என்பதல்ல. அவர்கள் மார்க்கத்தை எப்படி ஏற்று பின்பற்றினார்கள் என்பதேயாகும்.

இந்த ஸலபி கொள்கைதான் அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் முதன்மை எடுத்து காட்டாகும். இதன் மூலமே கவாரிஜ்கள் முஃதஸிலாக்கள் ஷீஆக்கள் கத்ரியா காதியானிகள் போன்ற பல பிரிவுகளின் வழி கெட்ட கொள்கைகள் அடையாளம் காட்டப்பட்டன. பித்அத்கள் சுன்னாக்கள் விளக்கப்பட்டன. இன்றைக்கும் வரக் கூடிய வழி கெட்ட அத்தனை கூட்டத்தையும் இதன் மூலமே மக்களுக்கு இலகுவாக அடையாளம் காட்ட முடிகிறது.

ஸலபி கொள்கை மூலம் வழிகேடர்களை முஹம்மத் இப்னு வஹ்ஹாப்(ரஹ்) அவர்கள் அடையாளம் காட்டிய தூய மார்க்கத்தை போதித்தபோது ஆங்கிளயர்கள் தங்கள் கொள்கைகளை நிலை நாட்டுவதற்காகவும் முஸ்லிம்களை கூறுபோடுவதற்காகவும் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களது பிரச்சாரத்தினை தடுக்கும் நோக்கில் இது “வஹ்ஹாபிய கொள்கை (வஹ்ஹாபிஸம்)” என கூறலாயினர். இதுவே இன்றைக்கு வரைக்கும் வழிகெட்ட கொள்கைவாதிகளால் முன்னெடுக்கப்படுகிறது.

மாரக்கத்தை நிலநாட்டுவதற்கு பல்வேறு காலங்களில் பலர்(இமாம்கள்) பல்வேறு தியாகங்கள் செய்துள்ளார்கள். அவர்கள் போதித்த விடயங்களில் தவறுகள் இருக்குமாயின் நபிகளாரின் வழிமுறையினை பின்பற்றுமாறு தான் கூறிவிட்டுச் சென்றார்கள். இந்த உம்மத் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களை பின்பற்றுமாறு ஏவப்படவில்லை. அவரை விட்டு விட்டு ஸலபி கொள்கை என்ன என்பதையே புரிய வேண்டும்.

ஸலபி கொள்கையை பேசுபவர்கள் அடிப்படைவாதிகள் என்றும் நாட்டின் எதிரிகள் என்றும் இந்த தரீகாவாதிகள் அடையாளம் காட்டி கொடுக்க இனவாதிகள் தூற்றுகிறார்கள் என்றால் இவர்கள் யாரை தூற்றுகிறார்கள் என்பதை இப்போதாவது சிந்திக்க வேண்டும்.

உண்மையாகவே ஒரு முஸ்லிம் நபிகளார் காட்டிய வாழ்வில் வாழ்வதற்கு அடிப்படை வாதியாகத்தான் இருக்கவேண்டும். அதற்காக அவன் பெருமைப் படவும் வேண்டும். இந்த இனவாதிகள் மதவாதிகள் கருதுகிறார்கள் என்பதற்காக நான் ஸலபி கொள்கையில் இல்லை என்று சொல்ல மாட்டார்.

தரீக்காக்காவாதிகள் செய்து கொண்டு போகின்ற காரியங்கள் இந்த ஸலபி கொள்கையிலிருந்து உரசிப் பார்ப்பார்களேயானால் “வழிகேடு எது நேர்வழி எது” என்பதை விளங்கிக் கொண்டிருப்பார்கள்.

உண்மையை தேடுவதற்கு பதிலாக சமூகத்தை காட்டிக் கொடுத்து துரோகமிழைத் துள்ளார்கள். இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்படுகின்ற அவமானங்களுக்கும் அழிவுகளுக்கும் இவர்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

2 comments

 1. எஸ்.ஹலரத் அலி

  அல்லாஹ்வின் தூதர் சொன்னது என்ன? “நான் இரண்டை விட்டுச் செல்கிறேன்.ஒன்று அல்லாஹ்வின் வேதம் மற்றொன்று எனது வழிமுறை.” மூன்றாவதாக ஸலபி கொள்கையை பின்பற்றச் சொன்னதாக தெரியவில்லையே?
  அல்லாஹ் பொருந்திக்கொண்ட சலபுஸ்ஸாலிஹீன்களும் இந்த இரண்டை மட்டுமே பின்பற்றி வெற்றி அடைந்தனர்.இதே வழி முறையை நாமும் பின்பற்ற என்ன தடை?ஒன்றுபட்ட உம்மத்தில் பிரிவினை ஏற்படுத்தவே ஸலபி,தவ்ஹீத் தனி இயக்கவாதிகள் பாடுபடுகின்றனர். முஹம்மது பின் அப்துல் வஹாப்(ரஹ்) அவர்கள் எந்த தனி ஜமாத்தும் ஏற்ப்படுத்தி மக்களை அழைக்கவில்லை.குர் ஆனையும் ஹதீஸையும் மட்டுமே சொல்லி மக்களின் தவறான சிந்தனை செயல்களை களைந்தனர்.
  நபி(ஸல்) அவர்களின் போதனையே சஹாபாக்களின் நடை முறை.ஆகவே சஹாபாக்கள் பின்பற்றிய இரண்டை மட்டுமே பற்றிப்பிடித்து இன்ஷா அல்லாஹ் வெற்றி பெறுவோம்.
  ஸலபி இயக்க ஆலிம்களின் மாயையிலிருந்து விடுபடுவோம்.

 2. அஸ்ஸலாமு அகை்கும்….
  எஸ்.ஹலரத் அலி அவர்கள் indh aakkatthai kavanamamaaha vaasikka villai endru nenaikkiren… avar solhiraar naangal salafuhalai pinpatrumaaru kuurinoom endru kuuruhiraar izu avarudaiya kavanakkuraivai velikkaattuhirazu… naangal enna solhirom endraal salafuhal pin patriya kolhaiyaana quraan & hadessai avarhal penuzaalaha pinpatriyazai poonru pinpatrumaaru kuuruhiroom… aanal ivar enna kuuruhiraar endraal naangal salafihalaiyum muundraavazaaha pinpatravendum endu kuuruvazaaha kuuruhiraar aanal izu appattamaana poiaahum… sahoozarare unmayyil naangal appadi kuuri irundhaal maattum aazaarattha kaatti shutti kaattungal azi vittu poiyyaaha engal meezu puram solla vendaal… allah ungalukku nervali kaattuwaanaha…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *