Featured Posts
Home » நூல்கள் » நெகிழ்வூட்டும் உபதேசங்கள் » ஸஹீஹுல் புகாரீ-யின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் (தொடர் 1)

ஸஹீஹுல் புகாரீ-யின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் (தொடர் 1)

இமாம் புகாரீஅவர்கள் ஸஹீஹுல் புகாரீ-யில் 81வது பாடமாக كتاب الرقاق நெகிழ்வூட்டும் உபதேசங்கள் என்ற தலைப்பில் நபி (ஸல்) அவர்கள செய்த நெகிழ்வூட்டும் உபதேசங்களை தொகுத்துள்ளார்.

சுமார் 182 ஹதீஸ்கள் (6412 முதல் 6593 வரை) அடங்கிய இந்த தொகுப்பை ஆசிரியர் முஜாஹித் இப்னு ரஸீன், தொடர் வகுப்பாக நடத்துவதற்க்கு திட்டமிட்டுள்ளார்கள் (அல்லாஹ், முஜாஹித் மவ்லவி அவர்கள் இந்த தொடரை தொடர்ந்து நடத்தி முடிப்பதற்க்கு தவ்பீக் செய்வானாக)

உண்மையிலே இந்த தொகுப்பு உள்ளத்தை நெகிழ்வூட்டக் கூடிய உபதேசங்கள் அடங்கியவையாகும். இதனை ஆசிரியர் ஒருவர் மூலமாக கற்பதன் வாயிலாக நமது வாழ்வில் பெரும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமுள்ளது. அத்தோடு நமது பிள்ளைகளுக்கு இந்த தொகுப்பில் வரக்கூடிய ஹதீஸ்-களை போதித்து அவர்கள் மனனம் செய்விப்பதின் மூலம் சிறந்த சமுதயாயத்தை உருவாக்க முடியும்.

அதற்கு ஏற்றவாறு இந்த தொகுப்பில் ஒவ்வொரு தொடரிலும் வரக்கூடிய ஹதீஸ்களை (உபதேசற்களை மட்டும்) அரபி மூலத்துடன் அடங்கிய PDF இணைக்கப்பட்டுள்ளது எனவே இதனை பதிவிறக்கம் செய்து பயன் பெற்றுக்கொள்ளவும்

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும்

வாராந்திர தொடர் வகுப்பு – தொடர்-1
ஸஹீஹுல் புகாரீ-யின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

நாள்: 03-12-2014 புதன்கிழமை
இடம்: ஜாமி புகாரீ பள்ளி வளாகம்
(சில்வர் டவர் பின்புறம்)
அல்-கோபர் – சவூதி அரேபியா

வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்)

வீடியோ & படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக்

Download mp3 Audio
[audio:http://www.mediafire.com/download/pmv8zrj1j9isqig/Kitab-RiqaqP1.mp3]

2 comments

  1. When part 2 will be released ?

  2. Pls release all parts of these hadees. In sha allah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *