Recent Posts

நரகம் பற்றிய பயமேன்? 3

பகுத்தறிவு வழங்கப்பட்ட மனிதன் அந்த அறிவைக் கொண்டு நன்மையைத் தேர்ந்தெடுப்பது போல, நன்மையெனக் கருதி தீமையையும் தேர்ந்தெடுத்து விடுகிறான். தான் சரிகண்டு – தேர்ந்தெடுக்கும் ஒரு செயல் தனக்கு நன்மையாக இருந்தால் போதும், (பிறருக்கும் தீமையாக இருந்தாலும் பராவாயில்லை) என்று அவனின் அறிவு ஏற்றுக் கொள்கிறது. மனிதனின் அத்தியாவசியத் தேவைகள்.மனிதனின் வாழ்வாதாரத் தேவைகளில் மிக முக்கியமானது உணவாகும். இந்த உணவைப் பெற்றுக் கொள்வதில் அவன் பல வழிகளில் முயற்சிக்கிறான், அவன் …

Read More »

உண்மைக்கு வித்திடும் அறியாமைகள்

‘சரிவரத் தெரிந்துக்கொள்ளாமல் எதைப்பற்றியும் ஒரு வார்த்தைக் கூட பேசி விடாதே!அது உன் அறியாமைக்கு விளக்கமாகி விடும்’ – முஸ்லிம்களின் நான்காவது கலீபாவான அலீ (ரலி) அவர்கள் தன் மகனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் காணப்படுகிற வாசகங்கள் இவை! குர்ஆனில் ஒரு வசனம் இருக்கிறது: ‘தொழுகையாளிகளுக்கு கேடு தான்’ என்று!இதை வைத்து இஸ்லாத்தின் இறைவன் தொழுகையாளிகளைச் சபிக்கிறான் என்று விமர்சனம் செய்தால் எப்படி இருக்குமோ அப்படித் தான் இஸ்லாமைப் பற்றிய இன்றைய விமர்சனங்களும் …

Read More »

நரகம் பற்றிய பயமேன்? 2

தண்டிக்கும் கடவுள்களெல்லாம் அன்புக்கு மாறிவிட்டனவாம், இனி மனிதர்களுக்கு கடவுள் தண்டினை என்பது இல்லவே இல்லை, எல்லாமே அன்புதான். மிச்சம் – மீதமிருந்த கடவுள் பயத்தையும் துடைத்தெறிந்துவிட்டு மனிதர்கள் பஞ்சமா பாதகங்களை துணிந்து செய்யலாம் கடவுள் தண்டிக்கவே மாட்டார், மாறாக அன்பையேக் காட்டுவார். //*முதலாவது காரணம், தண்டிக்கும் கடவுளிலிருந்து, அன்புவடிவான கடவுளுக்கு அனைத்து மதங்களும் மெல்ல நகர்ந்துவிட்டன. ருத்ரன் சிவனானது போல – ஜெஹோவாவுக்கும் கர்த்தருக்குமான பரினாம வளர்ச்சியைப் போல. ஆனால் …

Read More »

நரகம் பற்றிய பயமேன்? 1

ஒருவன் தனதுத் தந்தையை நோக்கி ”நீ எனக்குத் தந்தையே இல்லை” என்று தன்னைப் பெற்றத் தந்தையைப் நிராகரித்தானாம். ஆனால் தந்தையின் சொத்தில் மட்டும் எனக்கு வாரிசுரிமையுண்டு என்று உரிமை கொண்டாடினானாம். இதையொத்ததாகவே இருக்கிறது ஓரிறைக் கொள்கையை மறுத்து நிராகரித்து விட்டு, ஒரே இறைவன் ஆயத்தப்படுத்தியுள்ள பரிசுகளில் பங்கு கேட்பதும். மறைவானவற்றை நம்புதல்.ஓரிறைக் கொள்கையின் நம்பிக்கையில் ஒன்றுதான் ”அவர்கள் மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்” (2:2) என்பதும் அடங்கும். மறைவானது – …

Read More »

தலைமைக்குக் கட்டுப்படல் நிர்ப்பந்தமா?

திருக்குர்ஆன் 4:59ம் வசனத்தைச் சுட்டிக்காட்டி அந்த வசனத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விளங்கிக் கொள்ள முடியாதக் கருத்தை,(நிர்ப்பந்திக்கிறது) தமது கைச் சரக்காகச் சேர்த்து முன் வைத்திருக்கிறார். இது நேசகுமாரின் நுனிப்புல் மேயும் தன்மையைத்தான் வெளிப்படுத்துகிறது. 4:59 வசனத்தை விளங்குவதற்கு முன், திருக்குர்ஆன் வசனங்களை விளங்குவதற்கு, திருக்குர்ஆன் என்ன நிபந்தனை விதிக்கிறது என்பதை விளங்குவோம். 25:73. இன்னும் அவர்கள் தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால் செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் …

Read More »

இஸ்லாம் – முஸ்லிம் அல்லாதோர் பார்வையில் – 4

“நபிகள் நாயகம்தான் கல்கி அவதாரம்!”(?) (“மக்களுக்கு வழிகாட்ட இறைவனே மனித வடிவில் பிறக்கிறான்” எனும் அவதாரக் கொள்கையை இஸ்லாம் ஒப்புக் கொள்வதில்லை. மனிதர்களுக்கு வழிகாட்ட மனிதர்களில் இருந்தே தன் தூதர்களை இறைவன் தேர்ந்தெடுக்கிறான் என்பதே இஸ்லாம் கூறும் தூதுத்துவம். இறுதித்தூதர் வர இருக்கிறார் எனும் முன்னறிவிப்பு எல்லா வேதங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. இந்து வேதத்திலும் “கல்கி” பற்றி கூறப்பட்டுள்ளது. அந்த “கல்கி” வந்துவிட்டார், அவர்தாம் முஹம்மது நபி(ஸல்) என்று இந்துமத அறிஞர் …

Read More »

கருத்துச் சுதந்திரமா….? கறுத்த எண்ணமா….?

கருத்துச் சுதந்திரமா….? கறுத்த எண்ணமா….? ‘என் கையை எந்தப்பக்கம் வேண்டுமானாலும் வீசுவதற்கு எனக்கு உரிமை உண்டு. அதே சமயம் அது அடுத்தவரின் மூக்கில் இடித்துவிடாமலிருக்க மிக கவனமாக இருக்கும் பொறுப்பும் எனக்கு உண்டு’ என்பதே கருத்துச் சுதந்திரத்திற்கான இலக்கணமாக கருதப்படுகிறது. மனிதமான மூக்கில் தான் இடித்துவிடாதிருக்க வேண்டுமே தவிர, மூக்கு போல் முகங்காட்டுகிற கோமாளித்தனங்களை , அசைய மறுக்கும் அபத்தங்களை அகற்றுவதற்கு கை வீசினால் தவறில்லை என்பதும் ஏற்றுக்கொள்ளவேண்டியதே…! ஆனால் …

Read More »

இஸ்லாம் – முஸ்லிம் அல்லாதோர் பார்வையில் – 3

அறிஞர்கள் போற்றும் பெருமானார் முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும்.– ஜவஹர்லால் நேரு – துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், ‘முஹம்மது ஒரு சரித்திர நாயகர்’ என்று கூறுவதோடு …

Read More »

கற்காலம் ஓர் விளக்கம் -1

கற்காலம் கட்டுரை பற்றி, கற்காலம் சொல்லும் கருத்து(!?) என்ற பதிவில் சில முரண்பாடுகளை சுட்டிக் காட்டியிருந்தோம். இந்த பதிவில், அக்கட்டுரையில் ”திருக்குர்ஆனின் ஆதாரங்கள்” என்று குர்ஆன் வசனங்களுக்குத் தவறானக் கருத்தையே விளக்கப்பட்டிருக்கிறது. 24:5 இறைவசனத்தில் ”திருந்தி மன்னிப்பு கேட்பவர்களை மன்னிக்க வேண்டும்” என்ற வாசகத்தை ”விபச்சாரம் செய்தவர்கள் திருந்தினால் மன்னிக்க வேண்டும்” எனப் பொருத்தியிருப்பது தவறான விளக்கம் என்பது பற்றி பார்ப்போம். பெண்களின் கற்புக்கும், ஒழுக்கத்திற்கும் எதிரான வதந்திகளை ”அப்படித்தான் …

Read More »

மேல்மாடி மின்னல்கள்

கங்காவின் “தினம் ஒரு ஸென் கதை” விஷயங்கள் மேல்மாடி Capacity பிரச்சினையால் மண்டையில் ஏறுவதில்லை. ஆனால் “ஆமைகளின் சுற்றுலா” என்ற தலைப்பு ஈர்த்ததால் சொடுக்கி பார்த்தபோது மேல்மாடியில் பல மின்னல்கள் எழுந்தன. கங்கா தனது பதிவில் இட்ட அக்கதை இதுதான்: ஆமைகளின் சுற்றுலா ஒரு ஆமைக் குடும்பமானது சுற்றுலா செல்ல முடிவெடுத்தது. குடும்பத்தில் இருந்த எல்லா ஆமைகளும் சுற்றுலாவுக்கு வருவதற்கு சம்மதிக்க ஏழு வருடங்கள் பிடித்தன. இயல்பிலேயே மிகவும் மந்தமாக …

Read More »