Featured Posts

பச்சைப்பொய்களின் நாயகன் புஷ்

பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை ஈராக் குவித்துள்ளது மற்றும் செப்டம்பர் 11 தாக்குதலுக்கும் சதாமுக்கும் பங்கு உண்டு என்ற இரண்டு பச்சைப்பொய்களை சொல்லி ஈராக் நாட்டு பெண்கள், குழந்தைகள் உட்பட பொதுமக்களை துவம்சம் செய்துக்கொண்டிருக்கும் உலக பயங்கரவாதி புஷ்ஷுக்கு எதிராக அமெரிக்காவில் 11 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் பெயர்கள்: 1. Plan of Attack2. Against All Enemies3. Worse than Watergate4. Lies of George Bush5. All the …

Read More »

G8 நாடுகளின் ‘கரீபி ஹட்டாவ்’

ஜூலை முதல் வாரத்தில் ஸ்காட்லாந்தின் கிளனிகல்ஸ் நகரின் நடந்து முடிந்த கூட்டத்தில் G8 எனப்படும் உலகின் ஆகப்பெரிய 8 பணக்கார நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளின் வறுமையை ஒழிக்கப்போவதாக சூளுரைத்தன.அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் கூட்டமைப்புதான் இந்த G8. உலகின் பெரும் பணக்கார இந்நாடுகளின் தலைவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கூடி உலக பொருளியல் தொடர்பான விஷயங்களை விவாதித்து சில பல அறிவிப்புகளை …

Read More »

73] இஸ்ரேலின் உளவு அமைப்பு (Mossad)

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 73 பங்குகொண்ட அத்தனை யுத்தங்களிலும் வெற்றி பெறுவதென்பது எந்த தேசத்துக்கும் சாத்தியமில்லை. உலகம் முழுவதும் எதிர்த்தபோதும் தனது கொள்கையில் விடாப்பிடியாக இருந்து, தான் நினைத்ததை மட்டுமே சாதிப்பதென்பதும் எந்த தேசத்துக்கும் சாத்தியமில்லை. அமெரிக்கா போன்றதொரு வல்லரசு என்றாலும் பரவாயில்லை. இஸ்ரேல் ஒரு கொசு. ஊதினாலே உதிர்ந்துவிடக் கூடிய மிகச்சிறிய தேசம். சற்று யோசித்துப் பாருங்கள். கிழக்கே குவைத் தொடங்கி, மேற்கே எகிப்து வரை …

Read More »

மதியழகி

2005 ஜனவரி மாதம் ஒரு விடுமுறை நாளில் அது நடந்தது. பொது பேருந்து வசதி இல்லாத அந்த ஊரிலிருந்து நான் வசிக்கும் நகருக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். வழியில் ஒருவர் தன் மனைவியை நான் வந்த காரில் (illegal taxi) ஏற்றிவிட்டார். நகரத்தில் நர்ஸாக பணிபுரியக்கூடும். நாங்கள் போய் சேர வேண்டிய நகரம் 4 கி.மீட்டர் என்று வழிகாட்டியது. இவ்வாறு வரும் பயணிகளை பொது நிறுத்தங்களில் இறக்கிவிடுவது வாடிக்கை. டிரைவர், அப்பெண்ணை எங்கு …

Read More »

ஊடகங்களின் போக்கு

இம்ரானா விஷயத்தில் ஊடகங்கள் காட்டி வரும் அக்கறை சொல்லி மாளாது. ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதைதான். வெரும் வாயைக் கூட மென்று கொண்டிருப்பவர்களுக்கு தேவ்பந்தின் தீர்ப்பு அவலாகக் கிடைக்கும்போது சொல்லவா வேண்டும். இது மாதிரி நேரங்களிலெல்லாம் ஊடகங்கள் தன்னை சிறுபான்மையினத் தோழனாக காட்டிக்கொள்ள முயலும். பாதிக்கப்பட்ட முஸ்லிமுக்காக களத்தில் குதிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு குட்டையைக் குழப்ப ஆரம்பித்துவிடும். அதைத்தான் இம்ரானா விஷயத்திலும் செய்து வருகிறது. விட்டில் பூச்சிகளைப்போல் …

Read More »

சவுதி மன்னர் ஃபஹத் காலமானார்

சவுதி அரேபியாவின் மன்னர் ஃபஹத் இப்னு அப்துல் அஜீஸ் அல்-சவூத் காலாமனார். மன்னர் ஃபஹத் நோயுற்று இருந்ததால் இளவரசர் அப்துல்லாஹ் இப்னு அப்துல் அஜீஸ் அல்-சவூத் ஆட்சி பொறுப்பை கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Read More »

அரேபியாவில் ஓடுமா ஆறுகள்……?

அரேபியாவில் ஓடுமா ஆறுகள்……? Dr. Alfred Coroz உலகின் தலைசிறந்த புவியியல் அறிஞருள் ஒருவர். அவரிடம் அரேபியாவின் புவிவள நிலமையினைக் குறித்துக் கேட்கப்பட்டது. “அரேபியா எப்போதேனும் பசுமையாக ஆறுகள் நிரம்பி இருந்ததுண்டா?” . எதிர்பாராத ஆனால் நேர்மறையான பதில் அவரிடமிருந்து வந்தது- “ஆம்’! பனியுகத்தில் அவ்வாறு இருந்தது”. அடுத்து ஒரு கேள்வி அவர் முன் வைக்கப்பட்டது: “எதிர்காலத்தில் மீண்டும் அரேபியாவின் பாலைவனம் பசுமையாகும் வாய்ப்புகள் ஏதேனும் உண்டா…….?” ஆச்சர்யமூட்டும் வகையில் …

Read More »

அழகிகளின் பேஜார் ஷோ

சமீப காலமாக, சென்னை நகரில் “ஃபேஷன் ஷோ” என்ற பெயரில் அழகிகளின் ஆபாச நடனம் அரங்கேறி வருகிறது. புத்தம்புதிய நகைகளை டிசைன் செய்து விற்பனைக்குக் கொண்டு வரும் ஜுவல்லரி முதல், உள்ளாடைத் தயாரிப்பாளர்கள் வரை இத்தகைய ஃபேஷன் ஷோக்களை நடத்துவது வாடிக்கையாகி விட்டது. சென்ற வாரம் சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள வர்த்தக மையத்தில் மூன்று நாட்களாக நடந்த ஃபேஷன் ஷோவை நேரிலும், மீடியாக்கள் மூலமும் பார்த்தவர்கள், அதிர்ச்சியில் வாயடைத்துப் போனதென்னவோ நிஜம். …

Read More »

72] அரேபியர்களின் அந்த மௌன ஓலம்

நிலமெல்லாம் ரத்தம் – பா ராகவன் 72 எகிப்து மற்றும் சிரியாவின் படைகளுடன் ஒப்பிட்டால் அன்றைய காலகட்டத்தில் ஜோர்டனின் படை சற்றே வலுவானது என்றுதான் சொல்லவேண்டும். ஜோர்டனுக்கு நிறைய மேலை நாடுகளுடன் நட்பு இருந்தது. அதன்மூலம் நவீன ஆயுதங்கள் பலவற்றை வாங்கிக் குவித்திருந்தார்கள். அத்துடன், அப்படி வாங்கும் ஆயுதங்களை இயக்குவதற்கான பயிற்சியும் முறைப்படி ராணுவத்தினருக்கு அளிக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவைப் பிடிக்காத அத்தனை தேசங்களுடனும் அன்றைக்கு ஜோர்டன் நட்புக் கொண்டிருந்தது. ஆகவே, ஒரு …

Read More »

71] சினாயும் காஸாவும் இஸ்ரேல் வசம்

நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 71இஸ்ரேலும் ஒரு முடிவில்தான் இருந்தது. சிரியாவுடனான தண்ணீர்ப் பிரச்னை, எகிப்துடனான கப்பல் போக்குவரத்துப் பிரச்னை, ஜோர்டனுடனான மேற்குக்கரைப் பிரச்னை உள்ளிட்ட தன்னுடைய சொந்தப் பிரச்னைகளுக்கு அமெரிக்காவோ, ஐ.நா.சபையோ ஒரு தீர்வு கொண்டுவராவிட்டால், தனக்குத் தெரிந்த முறையில் தானே நடவடிக்கையில் இறங்கிவிடலாம் என்பதுதான் அது! அந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதி மோஷே தயான் (Moshe Dayan) என்கிற மூத்த ராணுவ அதிகாரி …

Read More »