Featured Posts
Home » Tag Archives: இரவு தொழுகை

Tag Archives: இரவு தொழுகை

இரவு தொழுகையை விட்டு விடாதீர்கள்..

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்- நாம் அன்றாடம் செய்யும் வணக்கங்களில் முதன்மையான வணக்கம் தொழுகையாகும். அந்த தொழுகையை பர்ளு என்றும், சுன்னத் என்றும் நபில் என்றும் பல பெயர்களில் நமக்கு நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். பர்ளு தொழுகைக்கு அடுத்தபடியான உச்சக்கட்டமான பல சிறப்புகளை உள்வாங்கிய தொழுகை தான் இந்த இரவுத் தொழுகையாகும். இந்த இரவுத் தொழுகைக்கு நபியவர்கள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதை தொடர்ந்து கவனிப்போம். …

Read More »

இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்

ரமழான் காலங்களில் நாம் இரவுத் தொழுகையில் அதிக அக்கறை செலுத்துகின்றோம். ரமழான் காலத்தில் இரவுத் தொழுகை அதிக அழுத்தம் கொடுத்துப் பேசப்பட்டுள்ளது என்பது உண்மையே! ஆனால், கியாமுல் லைல் எனும் இரவுத் தொழுகை ரமழானுக்கு மட்டும் உரியதன்று. அது பொதுவானதொரு இபாதத்தாகும். ஆன்மீகப் பக்குவத்தைப் பலப்படுத்தும் முக்கிய இந்த இபாதத்தை ரமழானுடன் நிறுத்திக் கொள்வதால் நாம் அதிக இழப்புக்களைச் சந்திக்க நேரிடுகின்றது. 01. ரஹ்மானின் அடியார்கள்: ரஹ்மானின் அடியார்கள் எனும் …

Read More »

பிக்ஹுல் இஸ்லாம் குனூத்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் குனூத் ஓதுவதை சிலர் தொழுகையில் செய்ய வேண்டியவற்றில் ஒன்றாகவும் மற்றும் சிலர் செய்யக் கூடாதவற்றில் ஒன்றாகவும் குறிப்பிட்டுள்ளனர். சுபஹுடைய குனூத் விடயத்தில் நபித்தோழர்கள் காலத்திலிருந்தே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இருப்பினும் சுபஹுடைய குனூத் விடயத்தில் சிலர் தீவிரப் போக்கைக் கைக்கொண்டு வருகின்றனர். சுபஹுடைய குனூத் ஸுன்னா எனக் கருதுபவர்கள் குனூத் ஓதாத இமாமைப் பின்பற்றித் தொழுவதைத் …

Read More »

இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல்.

437-நான் (என் சிறிய தாயாரும் நபியவர்களின் துணைவியாருமான) மைமூனா (ரலி) அவர்களிடம் (அவர்கள் இல்லத்தில்) இரவில் தங்கியிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் (இரவில்) எழுந்து தம் இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றார்கள். (பிறகு வந்து) தம் முகத்தையும் கைகளையும் கழுவினார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து தண்ணீர் பையை நோக்கிச் சென்று அதன் (சுருக்கிக்) கயிற்றை அவிழ்த்தார்கள். பின்னர் (ஒன்றுக்கும்) அதிகமான முறைகள் உறுப்புகளைக் கழுவிடாமல், நடுநிலையாக அங்கசுத்தி (உளூ) …

Read More »

ரமலானில் இரவுத் தொழுகை.!

435-‘நம்பிக்கை கொண்டு (நற் கூலியை) எதிர்பார்த்து ரமலான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார். புஹாரி:36 அபூஹூரைரா (ரலி). 436-நபி (ஸல்) அவர்கள் நள்ளிரவில் (வீட்டைவிட்டுப்) புறப்பட்டுப் பள்ளியில் தொழுதார்கள். சிலர் அவர்களின் தொழுகையைப் பின்பற்றித் தொழலானார்கள். காலையில் மக்கள் இது பற்றிப் பேசலானார்கள். (மறுநாள்) அதை விட அதிகமானவர்கள் திரண்டு நபி …

Read More »

இரவுத் தொழுகையின் சிறப்பு!

434-‘நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுவான்’. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி: 1145 அபூஹூரைரா (ரலி).

Read More »

வித்ருத் தொழுகை ஒரு ரக்அத்!

432-”இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களே! நீ முடித்துக் கொள்ள நாடினால் ஒரு ரக்அத்தைத் தொழு! அது முன்னர் தொழுததை ஒற்றையாக ஆக்கி விடும்.” என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார். புஹாரி: 993 இப்னு உமர் (ரலி). 433-”இரவுகளின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்’. என இப்னு உமர் (ரலி) அறிவித்தார். புஹாரி:998 இப்னு உமர் (ரலி)

Read More »

நபி(ஸல்) அவர்கள் தொழுத இரவுத் தொழுகை.

426-ரமலானில் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ‘நபி (ஸல்) அவர்கள் ரமலானிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்’ என்று விடையளித்தார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா? என்று …

Read More »