Featured Posts
Home » Tag Archives: இலங்கை

Tag Archives: இலங்கை

இலங்கை அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள்

– எம்.ஏ.ஹபீழ் ஸலபி அடிப்படை உரிமைகள் தொடர்பான கற்கை இன்று உலகில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் சிறுபான்மையாக வாழும் மக்கள தமது அடிப்படை உரிமைகள் தொடர்பில் அதிக அக்கறை கொண்டுள்ளனர். இலங்கை அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் எவை என்பதை அறிந்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்ட PDF வடிவத்தை வாசிக்கவும். படிக்க/Readபதிவிறக்கம்/Download

Read More »

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு

– S.H.M. Ismail Salafi உண்மை உதயம், Jan 2020 இலங்கை முஸ்லிம்களின் வரலாறு மிகவும் தொன்மையானதாகும். இருப்பினும் இனவாதிகள் இதனை இருட்டடிப்புச் செய்து, இலங்கை முஸ்லிம்களை 100-200 வருடங்களுக்கு முன்னர் தெரு செப்பணிடும் பணி செய்வதற்கு வந்தவர்களாகக் காட்ட முற்படுகின்றனர். இலங்கை முஸ்லிம்கள் இலங்கையின் தேசிய இனம் என்பதை மறைத்து, அவர்கள் அனைவரும் அரபு நாட்டில் இருந்து வந்த வந்தேறு குடிகள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வரலாற்று வக்கிரமம் …

Read More »

குர்ஆன் சுன்னாப் பிரச்சாரம் வழிகெட்ட இயக்கப் பிரச்சாரமாகுமா?

இலங்கை பல்லின மக்கள் வாழ்கின்ற சமூக அமைப்பைக் கொண்ட நாடாகும். அங்கு வாழ்கின்ற முஸ்லிம்கள் சில தசாப்தங்களாகவே தெளிவான அகீதா அறிவை சுவாசித்தனர். கப்றுகளுக்கு  தெய்வீக சக்தியை வழங்கி அவற்றை வணங்கி வழிபாடுதல், அவ்லியாக்கள் என்போரை அல்லாஹ்வைச் சென்றடையும் ஊடகமாக்கி, அவர்கள் பேரில் நேர்ச்சை மற்றும் அவர்கள் பேரில் ஷிர்க்கான பல வழிபாடுகள் மூட நம்பிக்கை சார்ந்த  பழக்க வழக்கங்கள் வரதட்சனைக் கொடுமை அமல்களில் பித்அத் ஸஹீஹான துஆக்கள் மற்றும் …

Read More »

சுதந்திர இலங்கையும் முஸ்லிம் சமூகமும்

-எம்.ஐ அன்வர் (ஸலபி)- பிரித்தானிய காலணித்துவத்திலிருந்து இலங்கை சுயாட்சியைப் பெற்று 71 வருடங்களாகிறது. இலங்கை வரலாற்று நெடுகிலும் மேற்குலக நாடுகளின் காலனியாதிக்கத்திற்கு உட்பட்டே வந்துள்ளது. 1505 முதல் 1658 வரை போர்த்துக்கேயரும் 1658 முதல் 1796 வரை ஒல்லாந்தர்களும் 1796 முதல் 1948 பெப்ரவரி 04 ஆம் தேதி வரை ஆங்கிலேயர்களும் இலங்கை மண்ணை ஆண்டு வந்துள்ளனர். தமது அதிகாரத்துக்குள் வைத்திருந்த சில நாடுகளுக்கு முதற்கட்டமாக மேலாட்சி என அறியப்படும் …

Read More »

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே!

ஐம்பது நாள் அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த அரசியல் குழப்பங்களால் இலங்கையின் நன்மதிப்புக்கு சரிவு ஏற்பட்டது. நாணயத்தின் மதிப்பிலும் சரிவு ஏற்பட்டது. இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் பாரிய வீழ்ச்சி…. என பல சரிவுகள் ஏற்பட்டன. அதனை சரி செய்ய வேண்டிய நிலையில் நாடு உள்ளது. நாட்டில் ஏற்பட்ட இந்த குழப்பநிலை முற்று முழுதாக முடிவுக்கு வந்துவிடவில்லை. விவாகரத்தை வேண்டி நிற்கும் தம்பதிகள் போல ஜனாதிபதியும் பிரதமரும் செயற்பட்டால் நாட்டைக் …

Read More »

இலங்கை அரசியல் குழப்பமும் உணர வேண்டிய உண்மைகளும்

ஆசிரியர் பக்கம் – டிசம்பர் 2018 S.H.M. இஸ்மாயில் ஸலபி உண்மை உதயம் மாதஇதழ் இலங்கை அரசியல் குழப்பமும் உணர வேண்டிய உண்மைகளும் இலங்கையில் அண்மையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது. இக்கட்டுரை வெளிவரும் போது இந்தப் பிரச்சினை ஒரு தீர்வுக்கு வந்திருக்கலாம் அல்லது இன்னொரு கட்டத்திற்கு மாறியிருக்கலாம். ஆனால், சில உண்மைகளை இவ்வாக்கத்தின் மூலம் உணர்த்த நாடுகின்றோம். பிரதமர் நீக்கமும் …

Read More »

பாவாத மலையும்… இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகமும்… – 02

பாவாத மலையும்… இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகமும்… பாவாத மலையும் இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகமும் முதல் மனிதர் வாழ்ந்த பிரதேசம் எது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளது. இஸ்லாமிய அறிஞர்கள் நூற்கள் பலவும் முதல் மனிதர் இந்து பிரதேசத்தில் செரண்டிப் எனும் பகுதியில் ஒரு மலையில் முதலில் இறக்கப்பட்டார் என்ற கருத்தை முன்வைப்பதுடன் அவர் மற்றும் அவரது சந்ததிகள் இந்தியாவில் பல பகுதிகளில் வசித்துள்ளார்கள் என்ற அனுமானத்தைத் தெரிவிக்கின்றன. இவை வெறும் …

Read More »

இலங்கை முஸ்லிம்களின் இன்றைய கல்வி நிலையும் முஸ்லிம் பாடசாலைகளின் முன்னேற்றத்திற்கான சில முன்மொழிவுகளும்

இலங்கை முஸ்லிம்கள் வியாபார சமூகமாகப் பார்க்கப்படுகின்றனர். பொதுவாக முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கியவர்கள் என்ற எண்ணம்தான் முஸ்லிம் சமூகத்திடமும் மேலோங்கியுள்ளது. இருப்பினும் கடந்த காலத்தோடு ஒப்பிடும் போது முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுடன் போட்டி போடும் அளவுக்கு சகல துறைகளிலும் முன்னேற்றங் கண்டு வருகின்றனர் என்பதுதான் உண்மையாகும். நாம் கல்வியில் பின்தங்கியுள்ளோம். ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது மிகப் பின்தங்கி யுள்ளோம் என்ற எண்ணம் தோல்வி மனப்பாங்கை ஏற்படுத்தி வருகின்றது. எனவே, இந்த …

Read More »

பாவாத மலையும்… இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகமும்… – 01

இலங்கை சப்ரகமுவ மத்திய மாகாணங்களுக் கிடையே கடல் மட்டத்தில் இருந்து 2243 மீட்டர் (7359 அடி) உயரத்தில் கூம்பு வடிவிலாக இந்த மலை அமைந்துள்ளது. இந்த மலை அனைத்து சமய மக்களாலும் புனிதத்துவத்துடன் நோக்கப்படுகின்றது. இந்த மலை உச்சியில் ஒரு பாதச் சுவடு உள்ளது. மலை உச்சியில் 1.8 மீட்டர் அளவான பாறையில் இப்பாதம் பதிந்துள்ளது. இந்தப் பாதச் சுவடு புத்தருடையது என பௌத்தர்கள் நம்பி அதை வழிபட்டு வருகின்றனர். …

Read More »

தாங்கிப் பிடிக்க ஆள் இருந்தால் தூங்கித் தூங்கி விழுமாம் பிள்ளை

இலங்கை ஒரு சின்னத் தீவாகும். இந்த அழகிய சின்னஞ் சிறு தீவை பயங்கரவாதமும், இனவாதமும் அழித்து வந்தது போதாது என்று இன்று அதனுடன் போதை வஸ்தும் கைகோர்த்துள்ளது. இலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கை, சுற்றுலாத் துறையின் வளர்ச்சி என்பவற்றுடன் இலங்கை சர்வதேச போதைக் கடத்தல் மாபியாக்களின் மத்திய தளமாக மாறி வருகின்றதோ என்று ஐயப்படும் நிலை உருவாகியுள்ளது. 1981 மே 26 இல் 70 கிராம் ஹெரோயின் இலங்கையில் கைப்பற்றப்பட்டது. …

Read More »