Featured Posts
Home » Tag Archives: உண்மை உதயம்

Tag Archives: உண்மை உதயம்

தேர்தல் முடிவுகள் பலவீனமும்… படிப்பினைகளும்…

திரிசங்கு நிலைக்குச் சென்றுள்ளது இலங்கை அரசியல். ஜனாதிபதி ஒரு கட்சியிலும் பாராளுமன்றம் இன்னொரு கட்சி வசமும், உள்ளாட்சி மன்றங்கள் மற்றுமொரு கட்சி வசமும் சிதறிச் சென்றுள்ளன. வட்டாரமும் (60) விகிதாசாரமும் (40) கலந்த இந்த தேர்தல் முறையில் நடந்த முதலாவது உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நாட்டில் பாரிய அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றது. இந்தத் தேர்தல் முடிவுகளில் ஏற்பட்ட பலங்கள் என்ன என்பதைக் கட்சித் தலைமைகள் மக்கள் மத்தியில் கூறி …

Read More »

ஒரு சுய பரிசோதனைக்காக இறை நினைவு – தியானம் திக்ர்

மங்கி மறைந்து போய்க் கொண்டிருக்கும் இஸ்லாமிய இயல்புகளில் ஒன்றுதான் திக்ர் எனும் இறை தியானம், இறை நினைவாகும். அல்லாஹ்வை பல விதங்களில் திக்ர் செய்யலாம். தொழுகை, பயான் மஜ்லிஸ்கள் கூட திக்ர்தான். இவ்வாறே சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர், சுப்ஹானல்லாஹில் அழீம், சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி போன்ற வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லி நாவுகளால் அல்லாஹ்வை திக்ர் செய்வதும் சுன்னாவாகும் இவ்வாறு செய்யும் பழக்கம் எம்மிடம் மங்கி மறைந்துவிட்டது! ஒவ்வொருவரும் தம்மைத் …

Read More »

தனி மரம் தோப்பாகாது! தனித்து சிந்திப்பது தீர்வாகாது

அடுத்தவர் தம்மீது ஆதிக்கம் செலுத்துவார்கள் என அஞ்சும் போதுதான் புரட்சிகளுக்கான வித்துக்கள் விதைக்கப்படுகின்றன. அடுத்தவர்களின் முன்னேற்றத்தில் எமது அழிவு ஏற்படும் என அஞ்சும் போதுதான் இன, மத வெறிகள் உண்டாகின்றன. அடுத்தவர்கள் முன்னேறுவது போல் நாமும் முன்னேறுவோம் என்று முயன்றால் அது சமூக நலன் என்று சொல்லலாம். அவர்கள் வளர்ந்தால் அது எமக்குப் பாதிப்பு என்பதால் அவர்களை வளரவிடக் கூடாது என்று செயற்படும் போதுதான் இனவாதம், மதவாதம், வன்முறைகள், வெறியாட்டங்கள் …

Read More »

இஸ்லாம் தடைகளைத் தகர்த்து உலகை ஆளும்

உள்ளடங்கள் மாற்றியமைக்கப்பட்ட மறுபதிவு…. ஆசிரியர் பக்கம் இஸ்லாம் தடைகளைத் தகர்த்து உலகை ஆளும்   இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழித்துவிட ஒரு கூட்டம் துடியாய்த் துடிக்கின்றது. இருப்பினும் சதி வலைகளை யெல்லாம் கிழித்துக் கொண்டு சத்திய ஜோதி அகிலமெங்கும் பிரகாசித்துக் கொண்டே இருக்கின்றது. பாறைகளைத் தகர்த்து பாதைகள் அமைத்து இஸ்லாமிய ஜோதி பயணித்துக் கொண்டிருக்கின்றது. தடைக் கற்களையும் படிக்கற்களாக மாற்றி சத்தியம் உயர்ந்து கொண்டிருக்கின்றது. يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّـهِ بِأَفْوَاهِهِمْ …

Read More »

ழுஹா தொழுகை: பிக்ஹுல் இஸ்லாம் (தொடர்-17)

பிக்ஹுல் இஸ்லாம்-17 ழுஹா தொழுகை சுன்னத்தான தொழுகைகளில் ழுஹா தொழுகையும் ஒன்றாகும் ழுஹா என்பது சூரியன் உதித்து உச்சிக்கு வந்து சாயும் நேரத்தைக் குறிக்கும். இந்த நேரத்திற்குள் தொழப்படும் தொழுகை என்பதால் இந்தத் தொழுகை ழுஹாத் தொழுகை என அழைக்கப்படுகின்றது. சூரியன் உதித்து சுமார் இருபது நிமிடங்கள் வரையுள்ள நேரமும், சூரியன் உச்சிக்கு வரும் நேரமும் தொழுவது தடுக்கப்பட்ட நேரங்களாகும். இந்த இரு நேரங்களுக்கும் மத்தியில் ழுஹா தொழுவது சுன்னாவாகும். …

Read More »