Featured Posts
Home » Tag Archives: கடமைகள்

Tag Archives: கடமைகள்

இஸ்லாத்தின் ஐந்து கடமைகள் (eBook)

இஸ்லாத்தின் ஐந்து கடமைகள் புதிதாக இஸ்லாத்தில் இணைந்தவர்களுக்காக தயாரிக்கப்பட்ட நூல். ஆசிரியர்: எஸ். அப்பாஸ் அலீ MISc Download / Read / பதிவிறக்கம் செய்ய / படிக்க

Read More »

ஜனாஸாவுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் (E-book)

இன்றைய கால சூழலில் ஒருவர் மரணத்தருவாயை அடையும் போதும் , மரணித்தவுடன் என்ன காரியங்கள் உடனடியாக செய்ய வேண்டும் என்று பெரும்பான்மையான மக்களுக்கு தெரியாமல் உள்ளனர் அல்லது தெரிந்துகொள்ள விரும்பாமல் இருக்கின்றார்கள். குறிப்பாக தவ்ஹீத் பேசும் நம்மில் பலருக்கும் இதே நிலைதான். மவ்லவி இம்தியாஸ் யூசுப் ஸலபி எழுதிய ஜனாஸாவுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் என்ற நூலை இஸ்லாம்கல்வி வாசகர்கள் பயன்பெறும் பொருட்டு (மின்னனு வடிவில்) இங்கு பதிவிடப்படுகின்றது இதனை …

Read More »

[பாகம்-15] முஸ்லிமின் வழிமுறை.

மனைவி மீது கணவனுக்குரிய கடமைகள் கணவன் விஷயத்தில் பின்வரும் ஒழுக்கங்களையும் மேற்கொள்வது மனைவியின் மீது கடமையாகும். 1. பாவமல்லாத காரியங்களில் அவனுக்கு அவள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். “அவர்கள் (மனைவியர்) உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் பிறகு அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள். (4:34) ஒருவர் தன் மனைவியை படுக்கைக்கு அழைத்து அவள் செல்லவில்லையென்றால் அவன் அவள் மீது கோபம் கொண்டவனாக அன்றிரவைக் கழித்தால் காலையில் அவள் விழிக்கும்வரை வானவர்கள் …

Read More »

[பாகம்-14] முஸ்லிமின் வழிமுறை.

கணவன் மீது மனைவிக்குரிய கடமைகள். மனைவி விஷயத்தில் பின்வரும் ஒழுக்கங்களை மேற்கொள்வது கடமையாகும். 1. அவளுடன் நல்லமுறையில் வாழ்க்கை நடத்தவேண்டும். “அவர்களோடு நல்லமுறையில் வாழ்க்கை நடத்துங்கள்” என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன்: 4:19) அவன் உண்ணும்போது அவளுக்கும் உண்ணக் கொடுக்க வேண்டும். அவன் ஆடை அணியும்போது அவளுக்கும் அணியக் கொடுக்க வேண்டும். தனக்கு அவள் மாறு செய்து விடுவாளோ என்று அஞ்சினால் அவளை எவ்வாறு பக்குவப்படுத்த வேண்டுமென்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளானோ …

Read More »

[பாகம்-13] முஸ்லிமின் வழிமுறை.

கணவன், மனைவி இடையே உள்ள உரிமைகள். கணவன், மனைவி இடையேயும் பரஸ்பரம் மேற்கொள்ள வேண்டிய ஒழுக்கங்கள் உள்ளன என்பதை ஒரு முஸ்லிம் எற்றுக் கொள்ள வேண்டும். அவை அவர்கள் ஒவ்வொருக்கும் மற்றவரின் மீதுள்ள உரிமைகளாகும் அல்லாஹ் கூறுகிறான்: மனைவியர் மீது கணவர்களுக்குள்ள உரிமைகள்போல முறைப்படி கணவர்கள் மீது மனைவியருக்கும் உரிமைகள் உள்ளன. ஆயினும் ஆண்களுக்குப் பெண்களைவிட ஒருபடி உயர்வு உண்டு. (அல்குர்ஆன்: 2:228) இவ்வசனம் கணவன், மனைவி இருவருக்குமே பரஸ்பரம் …

Read More »

[பாகம்-12] முஸ்லிமின் வழிமுறை.

சகோதரர்களிடம் நடந்து கொள்வது. ஒரு முஸ்லிம் தன் தந்தையிடம் பிள்ளையிடமும் நடந்து கொள்ள வேண்டிய அதே ஒழுங்கோடு தன் சகோதரர்களிடமும் நடந்து கொள்ள வேண்டும். இது விஷயத்தில் அவர்கள் அனைவரும் சமம் என்று கருத வேண்டும். எனவே இளைய சகோதரர்கள் தம் மூத்த சகோதரர்களிடம் தம் தந்தையிடம் நடந்து கொள்வதைப் போலவே நடந்து கொள்ள வேண்டும். மூத்த சகோதரர்கள் தம் இளைய சகோதரர்களிடம் தம் தந்தையின் பிள்ளைகளிடம் நடந்து கொள்வதைப் …

Read More »

[பாகம்-9] முஸ்லிமின் வழிமுறை.

மனதுடன் நடந்து கொள்ள வேண்டிய முறை. ஒரு முஸ்லிம் இம்மை, மறுமையின் ஈடேற்றம் தன்னுடைய மனதைத் தூய்மைப்படுத்துவதில் – பண்படுத்துவதில் தான் இருக்கின்றது என்று நம்ப வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: மனதைத் தூய்மைப்படுத்தியவர் திண்ணமாக வெற்றியடைந்து விட்டார். அதனை நசுக்கியவர் திண்ணமாகத் தோற்றுவிட்டார். (91:9-10) காலத்தின் மீது சத்தியமாக மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான். ஆனால் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டும் நற்செயல்கள் புரிந்து கொண்டும் மேலும் ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும் …

Read More »

அண்டை வீட்டாருக்குத் தீங்கிழைத்தல்

திருக்குர்ஆனில் அல்லாஹ் அண்டை வீட்டார் குறித்து நமக்கு அறிவுரை கூறியுள்ளான்: “மேலும் நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தையரிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்ளுங்கள். மேலும் உறவினர்கள், அநாதைகள், வறியவர்கள், உறவினரான அண்டை வீட்டார், அந்நியரான அண்டை வீட்டார், பக்கத்திலிருக்கும் நண்பர், வழிப்போக்கர், மற்றும் உங்கள் கைவசத்திலுள்ள அடிமைகள் ஆகியோருடன் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். திண்ணமாக அல்லாஹ் வீண் பெருமையும் கர்வமும் கொண்டவர்களை நேசிப்பது இல்லை” …

Read More »

இறைவன் தன் சிருஷ்டிகளைக் கொண்டு ஏன் சத்தியம் செய்ய வேண்டும்

அல்லாஹ் தன் சிருஷ்டிகளில் விரும்பியவற்றைக் கொண்டு மனிதர்களிடம் சத்தியம் செய்கிறான். மனிதர்களைப் பொறுத்தவரை சிருஷ்டிகளைக் கொண்டு மற்றொரு சிருஷ்டியிடம் அனுமதிக்கப்படாதது போல அவற்றைக் கொண்டு இறைவனிடத்திலும் சத்தியம் செய்வதில் ஷிர்க் நுழைந்து விடுகிறது. அல்லாஹ் தன் சிருஷ்டிகளைப் பாராட்டி அவற்றின் கௌரவத்தையும், அமைப்பையும், அவற்றைப் படைத்தல் இலேசான காரியமல்ல என்பவற்றையெல்லாம் எடுத்துக் கூறி அதன் காரணத்தினால் தன் ஏகத்துவத்தை உறுதிப் படுத்துகிறான். இவையனைத்தையும் ஏகத்துவத்தின் அத்தாட்சிகள் என்று தெரிவிப்பதற்காகவும் அவற்றைக் …

Read More »

வஸீலா ஷபாஅத் என்னும் வார்த்தைகளில் ஏற்பட்ட சந்தேகங்கள்

வார்த்தைகளைப் பற்பல கருத்துக்களுக்குப் பிரயோகிப்பதை அறியாதவர்களும், புரட்டியும், திருப்பியும் சொற்களைக் கூறக் கூடியவர்களுமான சிலரிடத்தில் வஸீலா, தவஸ்ஸுல், ஷபாஅத் போன்ற சில வார்த்தைகள் கிடைத்தபோது அவற்றிற்கு அல்லாஹ்வும், ரஸூலும், ஸஹாபாக்களும், தாபியீன்களும், இமாம்கள் ஆகியோரெல்லாம் விலக்கியிருந்ததற்கு மாற்றமான கருத்துக்களைக் கொடுத்து மக்களை தவறின்பால் திருப்பி விட்டார்கள். இதனால் பலர் தவறினார்கள். இவ்வார்த்தையின் உட்கருத்தைப் புரிந்து கொண்டவர்கள் மிகச் சிலரே. பொதுவாக கல்வி என்பது நன்றாக ஆராய்ந்து கற்று அறிந்து கொள்வதாகும். …

Read More »