Featured Posts
Home » Tag Archives: சான்று

Tag Archives: சான்று

சந்திரன் பிளத்தல்.

1784. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளவுபட்டது. உடனே, நபி (ஸல்) அவர்கள், ‘நீங்கள் சாட்சியாக இருங்கள்” என்று (மக்களை நோக்கிக்) கூறினார்கள். புஹாரி : 3636 இப்னு மஸ்ஊத் (ரலி). 1785. மக்காவாசிகள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். எனவே, சந்திரன் (இரண்டாகப்) பிளவுண்ட நிகழ்ச்சியை (தம் உண்மைக்குச் சான்றாக) நபி (ஸல்) அவர்கள் காட்டினார்கள். புஹாரி : …

Read More »

சிருஷ்டிகளைக் கொண்டு பாதுகாவல் தேடலாமா?

படைப்பினங்களைக் கொண்டு ஆணையிடுவது விலக்கப்படுவது போல அவர்களைக் கொண்டு பாதுகாவல் தேடுவதும் விலக்கப்பட்டுள்ளது. பாதுகாவல் தேடுவதற்கு அல்லாஹ்வையும், அவன் திருநாமங்களையும் இலட்சணங்களையும் அமைத்துக் கொள்ள வேண்டும். சிருஷ்டிக்கப்பட்ட பொருட்களால் பாதுகாவல் தேட மாட்டாது. சிருஷ்டிக்கப்படாத நிரப்பமான வாக்கியங்களைக் (உரைகளை) கொண்டு நபியவர்கள் பாதுகாவல் தேடியுள்ளார்கள். ‘அவூது பி கலிமாதில்லாஹித் தாம்மாத்தி’ என்று கூறியிருக்கிறார்கள். இறைவனின் திருவசனங்கள் சிருஷ்டிக்கப்பட்டவையல்ல என்பதற்கு நபிகளின் இந்த ஹதீஸ் சான்றாக எடுத்துக் கொள்ளப்படும்.

Read More »

கப்றுகளில் பள்ளி கட்டலாமா?

கப்றுகளைப் பள்ளிகளாக்குவதை தடுத்து பல ஹதீஸ்கள் வந்திருக்கின்றன.அப்படிச் செய்பவனை நபி (ஸல்) அவர்கள் சபித்திருக்கிறார்கள்.தமது கப்றில் வைபவங்கள் கொண்டாடுவதையும் விலக்கினார்கள். முதலில் மக்களிடையே இணை வைத்தல் என்பது நூஹ் நபி அவர்களின் காலத்திலே தான் துவங்கிற்று. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘நபி நூஹ் (அலை) அவர்களுக்கும், நபி ஆதம் (அலை) அவர்களுக்கும் இடையிலான பத்துத் தலைமுறையிலுள்ள மக்கள் இஸ்லாமியர்களாகவே வாழ்ந்திருந்தார்கள்’ என்று கூறினார்கள்.

Read More »

வஸீலாவின் மூன்றாவது வகை*

வஸீலாவின் மூன்றாவது வகை அனுமதிக்கப்படாத வஸீலாவாகும். அதுவே நபிமார்கள், ஸாலிஹீன்கள் இவர்களைப் பொருட்டாக வைத்தும், மேலும் இவர்களைக் காரணம் காட்டியும், இவர்களை கொண்டு ஆணையிட்டும் அல்லாஹ்விடம் வஸீலா தேடுதல். இத்தகைய வஸீலா முழுக்க முழுக்க விலக்கப்பட்டிருக்கிறது. இந்த வஸீலாவிற்கு திருமறையும், ஸஹீஹான ஹதீஸும் ஸஹாபாக்களின் தீர்ப்புகளும் இமாம்களின் கொள்கைகளும் எதுவுமே சான்றாகாது. இதை அனுமதித்தவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில உலமாக்கள் மட்டுமே. பெரும்பாலான அறிஞர்கள் சிருஷ்டிகளைக் …

Read More »

நபியின் ஷபாஅத்தை மறுக்கின்றவர்கள் யார்?

முஃதஸிலாக்கள், ஜய்திய்யாக்கள், கவாரிஜிகள் போன்ற பித்அத்துக்காரர்கள்தான் இவ்வுண்மையை ஏற்கமாட்டார்கள். நரகத்தில் அகப்பட்டவர்களுக்கு யாருடைய சிபாரிசும் பலனளிக்காது என்று அவர்கள் வாதாடுகிறார்கள். மனிதன் இரண்டே அமைப்புக்குரியவன். சுவனவாதி அல்லது நரகவாதி. நரகவாதியாக நரகில் பிரவேசித்தவனுக்கு என்றும் இருப்பிடம் நரகமே. சுவனத்தைத் தன் இருப்பிடமாக்கிக் கொண்டவனுக்கு என்றும் சுவனமே இருப்பிடமாகும். இவ்விரு இருப்பிடங்களிலிருந்தும் எக்காரணத்தாலும் இவர்கள் வெளியேற்றப்படமாட்டார்கள். தண்டனையும், நற்செய்கைக்கான நல்ல கூலியும் ஒருபோதிலும் ஒன்று சேராது. இவ்வாறு இவர்கள் வாதாடுகிறார்கள்.

Read More »

பாடம்-08 | மரங்கள், கற்கள் போன்றவைகளில் ஆசி தேடும் மக்கள்

மரங்கள், கற்கள் போன்றவைகளில் ஆசி தேடும் மக்கள். உயர்ந்தவனாகிய அல்லாஹ் கூறுகிறான்: ‘நீங்கள் (வணங்கும்) லாத்தையும் உஜ்ஜாவையும் கண்டீர்களா? மற்றொன்றாகிய மூன்றாவதான மனாத் (என்னும் பெண் விக்கிரகத்)தையும் நீங்கள் கண்டீர்களா?’ (53:19-20)

Read More »