Featured Posts
Home » Tag Archives: பிரிவுகள்

Tag Archives: பிரிவுகள்

அகீதாவுக்கும் அடிப்படைகளுக்கும் முரண்பட்ட செய்திகள்

தஃவா களத்திலுள்ள பல ஜமாஅத்துகளின் இஸ்லாமிய அகீதாவுக்கும் அடிப்படைகளுக்கும் முரண்பட்ட செய்திகள் வழங்குபவர்: அஷ்ஷைஃக் அப்துல் வதூத் ஜிஃப்ரி, இரண்டு நாள் அழைப்புப் பணி பயிற்சி பட்டறை, நாள்: 15.05.2015, இடம்: ஸனய்யியா அழைப்பு மையம், ஜித்தா, Download mp3 Audio – 64kbps – சுருக்கப்பட்ட ஃபைல் (small size) Download mp3 Audio – 128kbps – மிகத் தெளிவானது (big size) [audio:http://www.mediafire.com/download/qsdcsuync0x2ium/அகீதாவுக்கும்_அடிப்படைகளுக்கும்_முரண்பட்ட_செய்திகள்-Jifri-128kbps.mp3]

Read More »

பிரிவுகளின் தோற்றம் பற்றிய சுருக்கம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஹதீஸாகக் கூறப்பட்டதை ஒட்டு மொத்த நபித்தோழர்களும் முழுமனதுடன் அங்கீகரித்ததோடு, தெளிவு தேவைப்பட்ட இடங்களில் விளக்கம் கேட்டு அவற்றை அமுல் செய்தனர். சுன்னாவில் இடம் பெறும் ஆதாரபூர்வமான சட்டங்கள் குர்ஆனுக்கு முரண்படுவது போன்று தெரிவதையும் தகுந்த சாட்சியங்களின் அடிப்படையில் அமுல் செய்தனர்.

Read More »

குழப்ப காலத்தில் விழிப்புணர்வுடன் இருத்தல்.

1211. மக்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் நபி அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சிய காரணத்தால் தான் (அதைப் பற்றிக் கேட்டேன்.) நான், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும், தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம். அப்போது அல்லாஹ் (இஸ்லாம் எனும்) நன்மையை எங்களிடம் கொண்டு வந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கிறதா?’ …

Read More »

முஆவியா (ரலி) அவர்கள் யஸீத் பின் அஸ்வத் (ரலி) அவர்களைக் கொண்டு மழைத்தேடிப் பிரார்த்தித்த சம்பவம்

ஷாம் (ஸிரியா, லெபனான்) பகுதியில் மழையின்றி வறட்சி ஏற்பட்டபோது முஆவியா (ரலி) அவர்கள் யஸீத் பின் அஸ்வத் (ரலி) அவர்களைக் கொண்டு பிராத்தித்து மழைத் தேடினார்கள். துஆவின் போது: இறைவா! எங்களின் மேன்மைக்குரியவரைக் கொண்டு வஸீலா தேடுகிறோம் என்று பிரார்த்தித்து விட்டு, யஸீதே! உங்கள் கையை உயர்த்தி எங்களுக்காகப் பிரார்த்தியும் என்றார்கள். உடனே யஸீதும், அவருடன் இருந்தவர்களும் தத்தம் கரங்களை ஏந்தி மன்றாடினர். பிறகு மழை பெய்தது. இதை அடிப்படையாக …

Read More »

ஷபாஅத் விஷயத்தில் ஸுன்னத் ஜமாத்திற்கு மாறுபட்டவர்களின் அபிப்பிராயம்

ஸுன்னத் வல் ஜமாத்தை விட்டு அப்பாற்பட்ட முஃதஸிலாக்களும், காரிஜிய்யா வகுப்பாரைச் சேர்ந்த வயீதிய்யாப் பிரிவினரும் மறுமையில் நபிமார்களுக்குரிய ஷபாஅத்தை மூமின்களின் பதவியை உயர்த்துவதற்காக மட்டுமே என்று ஒதுக்கி விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் பதவியை உயர்த்தும் விஷயத்தில் மட்டும்தான் மறுமையில் ஷபாஅத் செய்வார்களாம். இப்பிரிவினரில் மற்றும் சிலர் நபிகளின் ஷபாஅத்தை அடியோடு மறுக்கிறார்கள். பெருமானாருக்கு ஷபாஅத்தே இல்லையாம்.

Read More »