Featured Posts
Home » Tag Archives: மிருது

Tag Archives: மிருது

அழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-7)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) மாற்ற வேண்டியது மார்க்கத்தையா? மக்களையா? இப்போது இன்னுமொரு சந்தேகம் எழலாம். தக்பீர் நெஞ்சில் கட்டினால் மக்கள் அடிக்கின்றனர், ஏசுகின்றனர் எனவே இந்த சின்ன விடயத்தை விட்டுக் கொடுக்கலாம் தானே? எங்கே கட்டினால் என்ன? இடத்தைக் கொஞ்சம் மாற்றிக் கொண்டால் என்ன குறைந்தா போகப்போகிறது? இப்படியும் சில அழைப்பாளர்கள் சிந்திக்கலாம்.

Read More »

அழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-6)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) சின்ன விடயங்களைச் சொன்னால் என்ன? அழைப்புப்பணியில் ஈடுபடுவோர் சில்லறை விஷயங்களைப் பற்றி அலட்டிக் கொள்ளக் கூடாது. அடிப்படையையே ஆட்டங்காணச் செய்யும் எத்தனையோ ஓட்டைகள் இருக்கின்றன. அவற்றை அடைக்காமல் சில்லறை விஷயங்களில் மயிர்பிளக்கும் ஆராய்ச்சிக்காக நம் நேரத்தையும் காலத்தையும் விரயமாக்கலாமா? எனவே, அழைப்புப் பணியில் ஈடுபடுவோர் தாடி வைத்தல், அத்தஹியாத்தில் விரல் அசைத்தல், தக்பீர் நெஞ்சில் கட்டுதல், கத்தம் பாத்திஹா, கந்தூரி, மீலாது, மவ்லது, ராத்திபு, …

Read More »

அழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-5)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) கருத்து வேறுபாடுகளைக் கண்டுகொள்ளக் கூடாதா? “பிரச்சாரப் பணி புரிவோர் பிரச்சினைகளை உருவாக்கு பவர்களாக மாறிவிடலாகாது. எனவே “தஃவத்” செய்யும் போது கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் ஒரு “தாயி” தலையிடக் கூடாது. ஏனெனில், கருத்தொருமித்த விடயங்களில் தான் பிரச்சாரம் கடமையாகும். கருத்து வேறுபாட்டிற்குரிய விடயங்களில் தஃவத் என்பது இல்லை. எனவே, சமூகத்திற்கு முரணான விடயங்களை விட்டு விட்டு, சமூகத்திற்கு உடன்பாடான விடயங்களையே நாம் எமது பிரச்சார …

Read More »

அழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-4)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) நளினத்தின் பெயரில் நன்மையை மறைக்கலாமா? அல்லாஹுத் தஆலா பிரச்சாரத்திற்காக நபிமார் களான மூஸா(அலை), ஹாரூன்(அலை) ஆகியோரைப் பிர்அவ்னிடம் அனுப்பும்போது “நீங்கள் அவனுக்கு நளினமாகவே உபதேசம் செய்யுங்கள். அதனால் அவன் நல்லுணர்ச்சி பெறலாம். அல்லது நடுக்கமடையலாம்” (20:44) எனக் கூறி அனுப்புகின்றான்

Read More »

கனிவாக நடந்துக் கொள்வோம்

– M.T.M.ஹிஷாம் (ஸலபி, மதனி) “கனிவு” என்ற வார்த்தைக்கு அறபியில் “அர்ரிப்க்” என்று சொல்லப்படும். இவ்வார்த்தையின் பொருளை அறபு மொழி அடிப்படையில் நோக்குகையில் அதன் பொருளானது “உடன்படுதல், ஒரு விடயத்தினை கலவரமின்றி அணுகுதல்” ஆகிய விளக்கங்களைக் கொண்டதாக இருக்கும். இதே கருத்தினை அடிப்படையாகக் கொண்டு, “நிச்சயமாக அல்லாஹூத்தஆலா அனைத்து விடயங்களிலும் கனிவை விரும்பக்கூடியவனாக உள்ளான்” என நபியவர்கள் கூறியுள்ளார்கள். மேலும், அறிஞர் “லைஸ்” அவர்கள் கூறும் போது: “கனிவென்பது, ஒருவர் …

Read More »

அழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-3)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) பிளவைத் தடுக்க பிரச்சாரத்தைத் தவிர்க்கலாமா? அல்லாஹ்வின் கட்டளைப்படி மூஸா(அலை) அவர்கள் தூர்சீனா மலைக்குச் செல்கையில் ஹாரூன் (அலை) அவர்களிடம் சமூகத்தின் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுச் சென்றார்கள். அவர்கள் சென்றதன் பின்னர் சாமிரி என்பவனின் தவறான செயலால் இஸ்ரவேலர்கள் காளைக் கன்று ஒன்றை வணங்க ஆரம்பிக்கின்றார்கள். காளைக் கன்றின் மூலம் இஸ்ரவேலர்கள் சோதிக்கப்பட்டது பற்றி மூஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்.

Read More »

அழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-2)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) அபிப்பிராய பேதத்தின் ஆரம்பம் இலங்கைத் திரு நாட்டிலும் உலகின் பல பாகங்களிலும் பல்வேறுபட்ட இஸ்லாமிய அமைப்புக்கள் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து அவைகள் பிரச்சாரம் புரிவதற்கு தஃவாவிற்காக ஒவ்வொரு குழுவும் தேர்ந்தெடுத்திருக்கும் அணுகுமுறைகள் தான் முக்கிய காரணியாய்த் திகழ்கின்றன.

Read More »

அழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-1)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) மனிதன் இயல்பிலேயே தவறு செய்யக் கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். பெரும் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் நபிமார்கள் மட்டுமே! எனவே, தவறு செய்யும் இயல்புடைய மனிதனுக்கு நன்மையை ஏவுவதும், தீமை குறித்து எச்சரிக்கை செய்வதும் அவசியமாகும்.

Read More »