Featured Posts
Home » Tag Archives: மூஸா நபி

Tag Archives: மூஸா நபி

மூஸா நபியும் இரு பெண்களும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-30]

பிர்அவ்னிடமிருந்து தப்புவதற்காக மூஸாநபி ஊரை விட்டு ஓடினார். இறுதியில் அவர் ‘மதியன்’ பிரதேசத்தை அடைந்தார். அந்த இடத்தில் இடையர்கள் தமது ஆடுகளுக்கு நீர் புகட்டிக் கொண்டிருந்தனர். இரண்டு பெண்கள் தமது ஆடுகளை வைத்துக்கொண்டு ஓரமாக நின்று கொண்டிருந்தனர். பெண்கள் இருவர் இருக்க இந்த இளைஞர்கள் அவர்களுக்கு இடம் கொடுக்காமல் தமது ஆடுகளுக்கு நீர் புகட்டிக் கொண்டிருப்பது மூஸா நபிக்குப் பிடிக்கவில்லை. அப்போது அவர்கள் அந்த இரு பெண்களிடமும் “என்ன செய்தி?” …

Read More »

உதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்ட மூஸா நபி! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-28]

உதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்ட மூஸா நபி! இனவாத ஆட்சி நடந்து வந்தது. மூஸா நபி இஸ்ரேவேல் இனத்தைச் சேர்ந்தவர். எகிப்தியர் ‘கிப்தி’ இனத்தவராவார். ஒருநாள் இரவு இளைஞர் மூஸா வெளியில் வந்தார். இருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். ஒருவர் இவரது இனத்தவர், அடுத்தவர் கிப்தி இனத்தவர். மூஸா நபியின் இனத்தவன் மூஸா நபியிடம் உதவி கேட்டான். மூஸா நபியும் அவனுக்கு ஒரு குத்து விட்டார். ஒரே ஒரு குத்துதான். அவன் …

Read More »

ஆற்றில் விடப்பட்ட மூஸா நபி! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-27]

ஆற்றில் விடப்பட்ட மூஸா நபி! பிர்அவ்ன் எகிப்தை ஆண்டுவந்த கொடுங்கோல் மன்னன் ஆவான். அவன் இஸ்ரவேல் சமூகத்தை அடிமைப்படுத்தி ஆட்சி செய்து வந்தான். இஸ்ரவேல் சமூகம் எழுச்சி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக குறிப்பிட்ட ஆண்டுகளில் பிறக்கும் ஆண் குழந்தைகளைக் கொன்று வந்தான். இஸ்ரவேல் சமூகத்தில் பிறக்கும் ஒரு ஆண் குழந்தையால் தனது ஆட்சிக்கு ஆபத்து வரும் என அவனுக்கு ஆரூடம் கூறப்பட்டதும் இதற்கு ஒரு காரணமாகும். இந்தக் காலகட்டத்தில் தான் …

Read More »

தாலூதும் ஜாலூதும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-19]

மூஸா நபியின் மரணத்தின் பின் இஸ்ரவேலர்கள் வழிகேட்டில் சென்றனர். அல்லாஹ்வின் கட்டளைகளை மீறினர். பாவச் செயல்களை பகிரங்கமாகவே செய்தனர். பலர் சிலைகளைக் கூட வழிப்பட்டனர். எனவே, அல்லாஹ் அவர்களைச் சோதித்தான். இஸ்ரவேலரின் எதிரிகள் பலம் பெற்றனர். இவர்களின் அனேகரை அம்லாக்கியர் எனும் எதிரிகள் கொன்றொழித்தனர். பலரைக் கைதிகளாகப் பிடித்து அடிமைகளாக வைத்திருந்தனர். இவர்களின் பல ஊர்களும் எதிரிகளின் வசமாயின. அத்தோடு அவர்களிடம் ‘தாபூத்’ என்றொரு பெட்டி இருந்தது. அதில் மூஸா(அலை) அவர்களின் …

Read More »

மூஸா நபியும் ஹிள்ர் நபியும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-16]

மூஸா நபியும் சமைத்த பின் உயிர்பிழைத்த அதிசய மீனும் முன்னொரு காலத்தில் மூஸா என்ற பெயரில் ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். அவருக்கு அல்லாஹ் ‘தவ்ராத்’ எனும் வேதத்தைக் கொடுத்து பனூ இஸ்ரவேலருக்கு நபியாகவும் அவரை ஆக்கினான். அந்த நபி தவ்றாத் வேதத்தைப் போதித்து மக்களை நல்வழிப்படுத்த படாதபாடு பட்டார். அவர் நல்ல நாவண்மை பெற்றிருந்தார். ஒரு நாள் அவர் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருந்தார். அவரது அறிவையும் ஆற்றலையும் கண்டு …

Read More »

மூஸா நபியும்… அதிசயப் பாம்பும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-3]

மூஸா (அலை) அவர்கள் ஒரு நபியாவார்கள். அவருக்கு ‘தவ்றாத்” வேதம் வழங்கப்பட்டது. அவர் இஸ்ரவேல் சமூகத்திற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதராவார்கள். அவர் ஒரு நாள் தன் மனைவியுடன் எகிப்துக்கு வந்து கொண்டிருந்தார். இடைநடுவில் இரவாகிவிட்டது. அப்போது தூரத்தில் வெளிச்சத்தைக் கண்டார். வெளிச்சம் தென்பட்ட பகுதியில் மக்கள் இருக்கலாம்; அவர்களைச் சந்தித்தால் ஏதேனும் உதவியைப் பெறலாம்; பயண உதவிக்கு நெருப்பு எடுத்து வரலாம் என எண்ணினார். எனவே, மனைவியை ஒரு இடத்தில் இருக்கச் …

Read More »