Featured Posts
Home » Tag Archives: ரமளான் மாதத்தின் சிறப்புகளும் சட்டங்களும்

Tag Archives: ரமளான் மாதத்தின் சிறப்புகளும் சட்டங்களும்

ரமழானின் இறுதி 10 நாட்கள்

வாசகர்கள் கவனத்திற்கு, காலத்தின் அவசியம் கருதி இப்பதிவு மறுபதிவு செய்யப் பட்டுள்ளது அல்-ஜுபைல் அழைப்புப் பணி உதவியாளர்கள் வழங்கும் H-1433 ரமழான் சிறப்பு நிகழ்ச்சி நாள்: 07-08-2012 (19-09-1433-ஹி) சிறப்புரை: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் தஃவா நிலையம்) வீடியோ: தென்காசி ஸித்திக் Download mp4 video 815 MB Audio Play: [audio:http://www.mediafire.com/file/yj0tzhbw7g4531b/last_10_days_of_ramadan_azhar_HD.mp3] Download mp3 audio Republished on: 11 July 2015 Originally published …

Read More »

ரமழான் – இரவு நேரத்தில் செய்யவேண்டிய அமல்கள்!

ரமழான் – இரவு நேரத்தில் செய்யவேண்டிய அமல்கள் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாகவும், புனித மாதத்தின் இரவுகளை வீண் விரயம் செய்யாமல் இருக்க ஆசிரியர் முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் இந்த அறிவுரை வழங்குகின்றார்கள். இந்த வீடியோ பதிவில்… நபி (ஸல்) அவர்கள் ரமழான் இரவுகளில் என்ன அமல்கள் செய்தார்கள்? துஆ – எவைகளை இறைவனிடத்தில் கேட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? இரவு நேரத்தில் திடுக்கிட்டு …

Read More »

நோன்பும் நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் (தொடர்-2)

இந்த இரண்டாவது தொடரில் நோன்பாளி நோன்புடன் … மூக்கின் வழியாக சொட்டு மருந்து கொடுப்பது சம்மந்தமாக அறிஞர்களிடம் உள்ள கருத்துக்களும் அதற்கான விளக்கமும். சுவாச கோளறு உள்ளவர்கள் நோன்பின் போது Inhalar பயன்படுத்தலாமா? வாய்யை சுத்தம் செய்வதற்க்கு Mouthwash பயன்படுத்தலாமா? பல்லை அகற்றுவது அல்லது பல்லின் தூவரத்தினை அடைப்பது கூடுமா? மருத்துவ பரிசோதனைக்காக (blood test) இரத்தம் எடுப்பது பற்றி விளக்கம்… குடல் மற்றும் வயிறு பிரச்சனை உள்ளவர்கள் Endoscopy …

Read More »

நோன்பும் நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் (தொடர்-1)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பிற்கினிய இஸ்லாம் கல்வி இணையதள வாசகர்களுக்கு, புனித ரமழான் மாதத்தில் நோன்பு சம்மந்தமான மக்களுக்கு ஏற்பட கூடிய நவீன பிரச்சனைகள் நோன்போடு சம்மந்தப்பட்ட சந்தேகங்களுக்கான விளக்கத்தினை எமது இணையதளத்திறக்காக சிறப்பு நிகழ்சியாக பதிவு செய்து வெளியிடப்படுகின்றது. சவூதி அரேபியாவின் கிழக்குமாகாணத்தின் தம்மாம் நகரத்தில் உள்ள இஸ்லாமிய கலாச்சார நிலையத்தின் அழைப்பாளர் மரியாதைகுரிய மவ்லவி ஹாபிழ். முஹம்மத் மன்சூர் மதனி அவர்கள் விளக்கமளிக்கின்றார்கள். இந்த முதல் தொடரில் …

Read More »

[31] ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பின் சிறப்புகள்

”யார் ரமளான் மாதத்தின் நோன்பை நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) வருடமெல்லாம் நோன்பு நோற்றதற்குச்சமம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

Read More »

[30] நோன்பின் ஒழுக்கங்கள்

1) பஜ்ருக்கு சற்று முன்பு ஸஹர் உணவு உண்பதும், சூரியன் மறைந்தவுடனேயே தாமதப்படுத்தாது நோன்பு திறப்பதும் சுன்னத்தாகும். 2) பேரீத்தம்பழத்தைக் கொண்டு நோன்பு திறப்பது, அது கிடைக்கவில்லையெனில் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறப்பது சுன்னத்தாகும்.

Read More »

[29] நோன்பின் அனுமதிகள்

1) நோன்பின் போது காயங்களுக்கு மருந்து போடுதல், பல் பிடுங்குதல், கண், காதுகளுக்கு சொட்டு மருந்திடுதல் போன்றவற்றிற்கு அனுமதியுள்ளது. 2) நோன்பு நாட்களின் பகற்பொழுதில் பல்துலக்குவதில் தவறில்லை. அது நோன்பல்லாத நாட்களில் சுன்னத்தாக இருப்பது போன்றே, நோன்பு நாட்களிலும் சுன்னத்தாகும்.

Read More »

[28] நோன்பை முறிக்கும் செயல்கள்

1) சாப்பிடுதல், குடித்தல், புகைபிடித்தல் போன்றவற்றால் நோன்பு முறிந்துவிடும். 2) முத்தமிடுதல், அணைத்தல், சுய இன்பம் போன்றவற்றால் இந்திரியம் வெளியானால் நோன்பு முறிந்துவிடும். தூக்கத்தில் தானாகவே இத்திரியம் வெளியானால் நோன்பு முறியாது. 3) உணவைப் போன்று சக்தியூட்டக்கூடிய பொருட்களை (மருந்து, குளுக்கோஸ் போன்றவைகளை) ஊசி போன்றவற்றின் மூலம் உடம்பிற்குள் செலுத்தினால் நோன்பு முறிந்துவிடும். 4) மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு முறிந்துவிடும்.

Read More »

[27] நோன்பின் கடமைகள் (பர்ளுகள்)

1) பருவமடைந்த முஸ்லிமான ஆண், பெண் அனைவரின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும். பருவமடையாதவர்களின் மீது நோன்பு நோற்பது கடமையில்லை என்றாலும், பழக்கப்படுத்துவதற்காக நோன்பு நோற்குமாறு ஏவலாம். 2) பைத்தியக்காரர்கள், நன்மை, தீமையை பிரித்தறிய முடியாத மூளை வளர்ச்சி குன்றியவர்கள், வயோதிகத்தால் புத்தி பேதலித்தவர்கள் ஆகியோர் மீது நோன்பு நோற்பது கடமையில்லை. நோன்பிற்குப் பகரமாக ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டியதுமில்லை.

Read More »

[26] பெருநாள் தொழுகை

1) நபி (ஸல்) அவர்கள் உண்ணாமல் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்கு முன் உண்ண மாட்டார்கள் என புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: திர்மிதி) 2) ஈத்தம் பழங்களை ஒற்றைப்படையாக சாப்பிடாமல் நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)

Read More »