Index | Subscribe mailing list | Help | E-mail us

 
பக்கம் 3

 

ஆடியோ ஓசையை கேட்க அரபி எழுத்துக்களின் மேல் கிளிக் செய்யுங்கள்

 

 

எண்

உச்சரிக்கும் விதம்

படத்தின் மூலம் விளக்கம்

உச்சரிப்பு

(ஆடியோ)

பெயர்

(ஆடியோ)

11

இரு உதடுகளையும் சேர்க்க வேண்டாம். இரு பற்களையும் சேர்க்க வேண்டாம். நுனிநாக்கு முன் மேற்பற்களின் நடுவில் இருக்க வேண்டும். குரல் அழுத்தமாக ஒலிக்க வேண்டும். குரல் விசில் ஓசையுடன் ஒலிக்க வேண்டும்.

زَ ز
12

இரு உதடுகளையும் சேர்க்க வேண்டாம். நாக்கைச் சற்று வளைத்து, நாக்கின் இரு ஓரங்களையும் மேல் கடவாய்ப் பற்களோடு உரசி உச்சரிக்க வேண்டும். குரல் மெல்லியதாக இருக்க வேண்டும்.

سَ س
13

இரு உதடுகளையும் சேர்க்க வேண்டாம். பற்களையும் சேர்க்க வேண்டாம். நுனிநாக்கை மேற்புறமாக சற்று மடக்கி, வாயின் முகட்டின் பக்கமாக நெருக்கி வைத்துக் கொள்ள வேண்டும். காற்றை உள்ளிருந்து அழுத்தமாக - பரவலாக வெளியிட வேண்டும்.
 

شَ ش
14

இச்சொல்லை உச்சரிக்கும் போது இது உதடுகளையும், பற்களையும் சேர்க்க வேண்டாம். நாவின் இடது, வலது பக்கத்தை வளைத்து, இரு புறமும் மேல் கடவாய்ப் பற்களை அழுத்தமாகத் தொட வெண்டும். குரல் வாய் நிரம்ப ஒலிக்க வேண்டும்.

صَ ص
15

இரு உதடுகளையும் சேர்க்க வேண்டாம். இரு பற்களையும் சேர்க்க வேண்டாம். நாவின் வலது பகுதியைக் கொண்டு மேல் கடைவாய்ப் பற்களின் ஈறை இலேசாகத் தொட வேண்டும். குரல் மிக அழுத்தமாக இருக்க வேண்டும். வாய் நிரம்ப ஒலிக்க வேண்டும்.
 

ضَ ض