Index | Subscribe mailing list | Help | E-mail us

 
 

நீதியை நிலைநாட்ட அல்லாஹ்வின் பாதையில் போராட வேண்டும்

( تَكَفَّلَ اللَّهُ لِمَنْ جَاهَدَ فِي سَبِيلِهِ لَا يُخْرِجُهُ إِلَّا الْجِهَادُ فِي سَبِيلِهِ وَتَصْدِيقُ كَلِمَاتِهِ بِأَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ أَوْ يَرْجِعَهُ إِلَى مَسْكَنِهِ الَّذِي خَرَجَ مِنْهُ مَعَ مَا نَالَ مِنْ أَجْرٍ أَوْ غَنِيمَةٍ )

அல்லாஹடைய பாதையில் போராட வேண்டும் அவனுடைய வார்த்தைகளை உண்மைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியேறி அல்லாஹ்வுடைய பாதையில் போராடுபவருக்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்கிறான். -அவர் மரணித்து விட்டால்- அவரை சொர்க்கத்தில் நுழைவிப்பதாகவும் அல்லது போரில் கிடைத்த -கனீமத்- பொருள்களுடனோ நற்கூலியுடனோ அவர் வெளியேறிய வீட்டிற்கே திரும்பச் செய்வதாகவும் அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹரைரா -ரலி நூற்கள் : புகாரீ 2891 முஸ்லிம்)

 

( . . . إِنَّ فِي الْجَنَّةِ مِائَةَ دَرَجَةٍ أَعَدَّهَا اللَّهُ لِلْمُجَاهِدِينَ فِي سَبِيلِ اللَّهِ مَا بَيْنَ الدَّرَجَتَيْنِ كَمَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ . . . )

நிச்சயமாக சொர்க்கத்திற்கு நூறு படித்தரங்கள் உள்ளன. அதனை அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் செய்பவர்களுக்காக அல்லாஹ் தயார் செய்து வைத்துள்ளான். அதில் இரண்டு படித்தரங்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளி வானம் பூமிக்கு மத்தியிலுள்ள இடைவெளியைப் போன்றதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹரைரா -ரலி நூல் : புகாரீ 2581)

 

( وَاعْلَمُوا أَنَّ الْجَنَّةَ تَحْتَ ظِلَالِ السُّيُوفِ )

அறிந்து கொள்ளுங்கள்! சொர்க்கம் வாள்களின் நிழல்களுக்கு கீழே உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா -ரலி நூல் : புகாரீ 2607 முஸ்லிம்)
 

அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்ய வேண்டும்