Index | Subscribe mailing list | Help | E-mail us

நபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள்

 

51-أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ يَاأَللهُ بِأَنَّكَ الْوَاحِدُ اْلأَحَدُ الصَّمَدُ الَّذِيْ لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًاأَحَدٌ أَنْ تَغْفِرَ لِيْ ذُنُوْبِيْ إِنَّكَ أَنْتَ الْغَفُوْرُ الرَّحِيْمُ

யாஅல்லாஹ்! நிச்சயமாக நீ தனித்தவன். ஒருவன், தேவையற்றவன். யாரையும் பெற்றெடுக்காதவன். யாராலும் பெறப்படாதவன். யாராலும் நிகராக முடியாதவன். யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னுடைய பொருட்டால் கேட்கின்றேன் என்னுடைய பாவங்களை மன்னித்து விடுவாயாக! நிச்சயமாக நீயே மன்னிப்பவனாகவும் கிருபை செய்பவனாகவும் உள்ளாய்.


52-أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدُ، لاَإِلَهَ إِلاَّ أَنْتَ، وَحْدَكَ لاَشَرِيْكَ لَكَ، الْمَنَّانُ، يَابَدِيْعَ السَّمَوَاتِ وَاْلأَرْضِ، يَاذَا الْجَلاَلِ وَاْلإِكْرَامِ، يَا حَيُّ يَاقَيُّوْمُ، إِنِّيْ أَسْأَلُكَ الْجَنَّةَ، وَأَعُوْذُ بِكَ مِنَ النَّارِ

யாஅல்லாஹ்! நிச்சயமாக புகழனைத்தும் உனக்குரியதே! உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தனித்தவன், இணையற்றவன். கொடையாளன். வானங்களை யும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவனே! வல்லமை மிக்கவனே! கண்ணியத்திற்குரியவனே! நித்தியஜீவனே! நிரந்தர மானவனே! நிச்சயமாக நான் உன்னுடைய பொருட்டால் சொர்க்கத்தைக் கேட்கிறேன், மேலும் நரகைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


53-أَللَّهُمَّ اغْفِرْ لِيْ، وَتُبْ عَلَيَّ، إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الْغَفُـوْرُ .

யாஅல்லாஹ்! என்னை மன்னிப்பாயாக! என்னுடைய பாவ மன்னிப்பை ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீயே மன்னிப்பை ஏற்றுக்கொள்பவனும் மன்னிப்பவனுமாவாய்.


54-أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ بِأَنِّيْ أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللهُ لاَإِلَهَ إِلاَّ أَنْتَ، اْلأَحَدُ، الصَّمَدُ الَّذِيْ لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

யாஅல்லாஹ்! நிச்சயமாக நீயே இறைவன். வணக்கத்திற்குரியவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. நீதனித்தவன். தேவையற்றவன். யாரையும் பெற்றெடுக்காதவன். யாராலும் பெறப்படாதவன். யாராலும் நிகராக முடியாதவன் என்று நான் சாட்சி கூறியதின் பொருட்டால் நான் உன்னிடம் (என் தேவைகளைக்) கேட்கிறேன்.


55-أَللَّهُمَّ بِعِلْمِكَ الْغَيْبَ، وَقُدْرَتِكَ عَلَي الْخَلْقِ، أَحْيِنِيْ مَا عَلِمْتَ الْحَيَاةَ خَيْرًا لِّيْ، وَتَوَفَّنِيْ إِذَا عَلِمْتَ الْوَفَاةَ خَيْرًا لِّيْ، أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ خَشْيَتَكَ فِي الْغَيْبِ وَالشَّهَادَةِ، وَأَسْأَلُكَ كَلِمَةَ الْحَقِّ فِي الرِّضَا وَالْغَضَبِ، وَأَسْأَلُكَ الْقَصْدَ فِي الْغِنَي وَالْفَقْرِ، وَأَسْأَلُكَ نَعِيْمًا لاَيَنْفَدُ،وَأَسْأَلُكَ قُرَّةَ عَيْنٍ لاَتَنْقَطِعُ، وَأَسْأَلُكَ الرِّضَا بَعْدَ الْقَضَاءِ، وَأَسْأَلُكَ بَرْدَ الْعَيْشِ بَعْدَ الْمَوْتِ، وَأَسْأَلُكَ لَذَّةَ النَّظَرِ إِلَي وَجْهِكَ، وَالشَّوْقَ إِلَي لِقَائِكَ فِيْ غَيْرِ ضَرَّاءَ مُضِرَّةٍ، وَلاَفِتْنَةٍ مُّضِلَّةٍ، أَللَّهُمَّ زَيِّنَّا بِزِيْنَةِ اْلإِيْمَانِ، وَاجْعَلْنَا هُدَاةً مُهْتَدِيْنَ

யாஅல்லாஹ்! உன்னுடைய மறைவானஞானம் மற்றும் படைப்பினங்கள் மீதுள்ள உனது ஆற்றல் ஆகியவற்றின் பொருட்டால் கேட்கிறேன். நான் வாழ்வது எனக்கு சிறந்தது என்று நீ அறிந்திருந்தால் என்னை வாழச்செய்வாயாக! நான் இறப்பதுதான் எனக்கு சிறந்தது என்று நீ அறிந்திருந்தால் என்னை மரணிக்கச் செய்வாயாக! இறைவா! நான் வெளிப்படையாகவும் இரகசியமாகவும் உன்னைப் பயப்படவும் விருப்பிலும் வெறுப்பிலும் உண்மையைப் பேசவும் வறுமையிலும் செழிப்பிலும் நடுநிலையையும் நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் முடிந்துவிடாத அருட்கொடையையும் விடைபெறாத கண் குளிச்சியையும் விதியை பொருத்தத்துடன் ஏற்றுக் கொள்ளும் தன்மையையும் மரணத்திற்குப் பின் குளிர்ந்த (சொர்க்க) வாழ்வையும் உன்னிடம் கேட்கிறேன். மேலும் வழி கேட்டின் குழப்பத்திலும் தீயவிளைவைத்தரும் செயலிலும் ஈடுபட்டு விடாது உன்னை சந்திப்பதின் ஆசையையும் உன் திருமுகத்தைப் பார்ப்பதில் இன்பத்தையும் உன்னிடம் கேட் கிறேன். யாஅல்லாஹ்! ஈமானின் பொலிவூட்டும் தன்மைகளைக் கொண்டு எங்களை அலங்கரிப்பாயாக! எங்களை நேர்வழி பெற்றோரின் வழியில் ஆக்குவாயாக!


56-أَللَّهُمَّ ارْزُقْنِيْ حُبَّكَ، وَحُبَّ مَنْ يَنْفَعُنِيْ حُبُّهُ عِنْدَكَ، أَللَّهُمَّ مَا رَزَقْتَـنِيْ مِمَّا أُحِبُّ، فَاجْعَلْهُ قُوَّةً لِّيْ فِيْمَا تُحِبُّ، أَللَّهُمَّ مَا زَوَيْتَ عَنِّيْ مِمَّا أُحِبُّ، فَاجْعَلْهُ فَرَاغًا لِّيْ فِيْمَا تُحِبُّ .

யாஅல்லாஹ்! எனக்கு உன்னுடைய நேசத்தையும் நான் யாரை நேசித்தால் உனது நேசத்திற்குரியவனாக ஆக முடியுமோ அவரின் நேசத்தையும் எனக்குத் தந்தருள் புரிவாயாக!. யாஅல்லாஹ்! நான் விரும்பியதை நீ எனக்கு தந்துள்ளாய். எனவே நீ விரும்பும் செயல்களில் நான் ஈடுபட எனக்கு சக்தியூட்டக் கூடியதாக அதனை ஆக்குவாயாக! யாஅல்லாஹ்! நான் விரும்பிதை நீ என்னை விட்டும் தடுத்துவிட்டாய். எனவே நீ விரும்பும் செயல்களில் ஈடுபடும் வாய்ப்பாக அந்த இடைவெளியை எனக்கு ஆக்குவாயாக!


57-أَللَّهُمَّ طَهِّرْنِيْ مِنَ الذُّنُوْبِ وَالْخَطَايَا، أَللَّهُمَّ َ نَقِّنِيْ مِنْهَا كَمَا يُنَقَّي الثَّوْبُ اْلأَبْيَضُ مِنَ الدَّنَسِ، أَللَّهُمَّ طَهِّرْنِيْ بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِالْبَارِدِ

யாஅல்லாஹ்! பாவங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் என்னைத் தூய்மைப் படுத்துவாயாக! யாஅல்லாஹ்! அழுக்கிலிருந்து வெள்ளைத் துணியைத் தூய்மைப் படுத்தப்படுவதைப் போல் என்னை இவற்றிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக! யாஅல்லாஹ்! பனிக்கட்டி, பனித்துளி, குளிர்ந்த நீர் ஆகியவைகளைக் கொண்டு என்னை தூய்மைப் படுத்துவாயாக!


58-أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْبُخْلِ وَالْجُبْنِ وَسُوْءِ الْعُمُرِ وَفِتْنَةِ الصَّدْرِ وَعَذَابِ الْقَبْرِ

யாஅல்லாஹ்! கஞ்சத்தனம், கோழைத்தனம், முதுமை, மனக் குழப்பம், மண்ணரை வேதனை ஆகியவைகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


59-أَللَّهُمَّ رَبَّ جِبْرَائِيْلَ، وَمِيْكاَئِيْلَ، وَرَبَّ إِسْرَافِيْلَ، أَعُوْذُ بِكَ مِنْ حَرِّ النَّارِ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ

யாஅல்லாஹ்! ஜிப்ரயீல், மீகாயீல், இஸ்ராஃபீல் ஆகியோரின் இறைவா! நரக வெப்பம் மற்றும் மண்ணரை வேதனை ஆகியவைகளை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


60-أَللَّهُمَّ أَلْهِمْنِيْ رُشْدِيْ، وَأَعِذْنِيْ مِنْ شَرِّ نَفْسِيْ

யாஅல்லாஹ்! எனக்கு நேர்வழியைக் காட்டுவாயாக! மேலும் என்னுடைய மனதின் தீங்கிலிருந்து என்னைபாதுகாப்பாயாக!


 

துஆ

எண்

ஆதார நூல்

51

நஸயீ, அஹமத்

52

திர்மிதி, அபூதாவூத்

53

திர்மிதி, அபூதாவூத்

54

திர்மிதி, அபூதாவூத்

55

நஸயீ, அஹமத்

56

திர்மிதி

57

திர்மிதி, நஸயீ

58

நஸயீ

59

நஸயீ

60

திர்மிதி

 

அடுத்த பக்கம்