Index |Subscribe mailing list | Help | E-mail us

சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற் கிரிகைகள்

عبد الله بن حمود الفريح إعداد - தமிழில்: முஹம்மத் அஸ்ஹர் முஹம்மத் யூசுப்

 

 

அளவற்ற அருளாளன் நிகறற்ற அன்புடையோன் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்

1-அநாதையை பொறுப்பேற்றல்:
'அநாதையை பொறுப்பேற்றவரும், நானும் சுவர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் தனது ஆள்காட்டி விரலையும், நடு விரலையும் இணைத்து காட்டினார்கள்' (புகாரி).

2-கடமையான தொழுகைக்குப் பின் ஆயத்துல் குர்ஸி ஓதி வருதல்:
'எவர் கடமையான தொழுகைக்குப் பின் 'ஆயத்துல் குர்ஸியை' ஒதி வருவாரோ மரணத்தைத் தவிர அவருக்கு சுவர்க்கம் நுழைய எதுவும் தடையாக இருக்காது' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நஸாஈ).

3-உழூ செய்த பின் ஓதவேண்டியவை:
'உங்களிள் ஒருவர் அழகான முறையில் உழூ செய்து பின்பு 'அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹுலாஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு' என்று சொல்வாரானால் அவருக்கு சுவர்க்கத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படுகின்றன அவர் விரும்பிய வாயியலால் நுழைய முடியும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்).

4-அஸர் தொழுகையையும் சுபஹ் தொழுகையையும் தொடர்சியாக தொழுது வருதல்:
'எவர் அஸர் தொழுகையையும், சுபஹ் தொழுகையையும் (பேணிப் பாதுகாத்து) தொழுது வருவாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி, முஸ்லிம்).

5-ஐவேளைத் தொழுகையை அதற்க்குறிய நேரத்தில் தொழுது வருதல்:
'எவர் தொழுகையை அதற்குறிய நேரத்தில் தொழுது வருவாரோ அல்லாஹ்விடத்தில் அவரை சுவர்க்த்தில் நுழைவிக்கும் ஓர் உடன்படிக்கை இருக்கிறது' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், அபூதாவுத், நஸாஈ).

6-ஸலாத்தை பரப்புதல் :
'உங்களிள் எவரும் நம்பிக்கை கொள்ளாத வரை சுவர்க்கம் நுழைய முடியாது, நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காத வரை விசுவாசம் கொண்டவராகக் கருதப்பட மாட்டீர், உங்களுக்கு மத்தியில் நேசத்தை ஏற்படுத்தும் ஒரு காரியத்தை சொல்லித் தரட்டுமா? உங்களுக்கு மத்தியில் ஸலாத்தை அதிகமாக பரப்புங்கள்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்).

7-உழூ செய்த பின் இரண்டு ரக்அத் மனப்பூர்வமாக தொழுதல்:
ஒரு முஸ்லிம் அழகான முறையில் உழூ செய்து உளப்பூர்வமாக இரண்டு ரக்அத் தொழுவாரானால் அவருக்கு சுவர்க்கம் கடமையாகி விட்டது' என நபிகளார் ஸல்) அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்).

8-கல்வியைத் தேடல்:
எவர் கல்வியைத் தேடி வெளியேறிச் செல்கிறாரோ அவருக்கு அவருக்கு சுவர்க்கத்தின் பாதையை இகுப் படுத்துகிறான்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

9-பெற்றோருக்கு நன்மை செய்தல்:
"அவனது மூக்கு மண்ணை கவ்வட்டும், பின்பு அவனது மூக்கு மண்னை கவ்வட்டும், பின்பு அவனது மூக்கு மண்னை கவ்வட்டும்".  இறைத் தூதரிடம் அவர் யார் எனக் கேட்கப்பட்டது? பெற்றோர்களின் இருவரையோ அவர்களின் ஒருவரையோ முதிய வயதில் அடைந்து, பின்பு அவன் சுவர்க்கம் நுழைய வில்லையானால் அவனேயாவான்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

10-நாவையும், மர்மப் பகுதியையும் பாதுகாப்பது:
'எவர் இரு தாடைகளுக்கும், தொடைகளுக்கும் மத்தியில் உள்ளதை பாதுகாக்கிறேன் என பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு நான் சுவர்க்கத்தை பொறுப்பேற்றுக் கொள்கிறேன்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி).

11-முஅத்தீனின் அழைப்புக்கு மறுமொழி பகருதல்:
'முஅத்தீன் (அழைப்பாளர்) பாங்கு சொல்லும் போது அதை செவிமடுப்பவர் அதே போன்று சொல்ல வேண்டும், 'ஹய்யஅலஸ் ஸலாஹ், ஹய்யஅலல் பலாஹ்' என்று சொல்லும் போது மட்டும், 'லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹி' என்று சொல்ல வேண்டும், பின்பு முஅத்தீன் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று சொல்லும் போது யார் தூய உள்ளத்துடன் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று பதில் சொல்வாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்).