Index |Subscribe mailing list | Help | E-mail us

மின்னணு நூலகம் 4.0

(நான்காம் பதிப்பு - வெளியீடு : ஜனவரி 2007)

 

எல்லாப் புகழும் இறைவனுக்கே! சாந்தியும் சமாதானமும் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் நம் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக.


இணைய வசதி இல்லாத, தமிழ்பேசும் சகோதர சகோதரரிகள் இஸ்லாம், பொதுஅறிவு மற்றும் இணைய தொழில்நுட்பம் அறிவுகளைப் பெறவேண்டும் என்ற நன்னோக்கில் "மின்னணு நூலகம்" என்ற இக்குறுந்தகடு வெளியிடப்பட்டுள்ளது.


மின்னணு நூலகத்தின் 4-வது வெளியீடான இதை, கணினியில் மட்டும் இயங்கக்கூடிய
Data DVD-யாக வெளியிட்டிருக்கிறோம். சுமார் 100 மணி நேரங்கள் ஓடக்கூடிய 67 வீடியோ தலைப்புகள் உட்பட பல இணையத்தளங்களை உள்ளடக்கியிருப்பது இப்புதிய வெளியீட்டின் சிறப்பம்சங்களாகும்.


இடப்பற்றாக்குறை அல்லது வேறு காரணங்களால் இணையத் தளத்தின் அனைத்து செய்திகளும் Offline சூழலில் இடம்பெறாமல் இருக்கலாம். இக்குறுந்தகடில்
January 2007 வரை இடம்பெற்ற செய்திகள் மட்டுமே இருக்கும். புதிய செய்திகளை Online-ல் பார்க்கவும்.


இக்குறுந்தகடு கல்வியைப் பரப்பும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே யார் வேண்டுமானாலும் (எந்த மாற்றமும் செய்யாமல்) பிரதி எடுத்து வினியோகிக்கலாம் அல்லது வினியோகிக்க முன்வரலாம். அவ்வாறு வினியோகிக்கும் சகோதரர்கள், அவர்களின் விபரங்களை எனக்குத் தெரிவித்தால் அவற்றை இஸ்லாம்கல்வி.காம் தளத்தில் மின்னணு நூலகம் கிடைக்கும் இடங்களில் வரிசைப் படுத்த வசதியாக இருக்கும்.


இம்மின்னணு நூலகம், தமிழறிந்த, கணினியில் பணியாற்றும் அனைத்து முஸ்லிம்களாலும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நோக்கம். எமது நோக்கம் முழுமை பெறுவதில் உங்கள் பங்கும் கட்டாயம் தேவை.

அன்புடன்
உங்கள் சகோதரன்
முஃப்தி