Download Unicode Font

 

 

Index

6- சிறு குழந்தைகளின் ஹஜ், அவர்களின் கடமையான ஹஜ்ஜுக்கு நிகராகுமா?


சிறுவர், சிறுமியர்களின் ஹஜ் மார்க்கத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்.

ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் ஒரு குழந்தையை உயர்த்திக் காண்பித்து, அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இக்குழந்தையும் ஹஜ் செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம்! அதன் நன்மை உனக்குக் கிடைக்கும் என்றார்கள்.
(அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் -ரலி, நூல் : முஸ்லிம்)

நான் ஏழு வயதுடையவனாக இருக்கும் போது நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்ய வைக்கப்பட்டுள்ளேன் என அஸ்ஸாயிப் பின் யஜீத் (ரலி) கூறுகிறார்கள். (நூல் : புகாரீ)

எனினும் இவ்விருவருடைய ஹஜ்ஜும் இஸ்லாத்தின் கடமையான ஹஜ்ஜிற்கு நிகரானதாகாது.

இதுபோன்றே அடிமைகள் மற்றும் அடிமைப் பெண்களின் ஹஜ்ஜும் மார்க்கத்தில் ஏற்றுக் கொள்ளப்படும். எனினும் அவர்களின் ஹஜ் இஸ்லாத்தின் கடமையான ஹஜ்ஜுக்கு நிகராகாது.

( أَيُّمَا صَبِيٍّ حَجَّ ثُمَّ بَلَغَ الْحِنْثَ فَعَلَيْهِ أَنْ يَحُجَّ حَجَّةً أُخْرَى، وَأَيُّمَا عَبْدٍ حَجَّ ثُمَّ أُعْتِقَ فَعَلَيْهِ حَجَّةٌ أُخْرَى )

ஏதேனும் ஒரு குழந்தை ஹஜ் செய்து, அதன் பிறகு அவர் பருவ வயதை அடைந்தால் (ஹஜ் செய்வதற்கு சக்தியும் வசதியும் பெற்றிருந்தால்) மற்றொரு முறை ஹஜ் செய்வது அவர்மீது கடமையாகும். யாரேனும் ஒரு அடிமை ஹஜ் செய்து, அதன் பிறகு அவர் உரிமை விடப்பட்டால் (ஹஜ் செய்வதற்கு சக்தியும் வசதியும் பெற்றிருந்தால்) மற்றொரு முறை ஹஜ் செய்வது அவர்மீது கடமையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் -ரலி, நூற்கள் : இப்னு அபீஷைபா, பைஹகீ)


விபரமறியாத சிறுவராக இருந்தால் அவரின் பொறுப்பாளர் அச்சிறுவரின் தைக்கப்பட்ட ஆடையை களைந்து (இஹ்ராம் உடையை அணிவித்து) இஹ்ராம் அணிந்ததாக எண்ணி, அச்சிறுவருக்காக தல்பியாக் கூறிக் கொள்ளவேண்டும். இதன் மூலம் அச்சிறுவர் இஹ்ராம் அணிந்தவராகிவிடுவார். எனவே இஹ்ராம் அணிந்த பெரியவருக்குத் தடுக்கப்பட்ட அனைத்தும் அச்சிறுவருக்கும் தடுக்கப்பட்டதாகிவிடும்.

இதுபோல் விபரமறியாத சிறுமியாக இருந்தால் அவருடைய பொறுப்பாளர் அவருக்குப் பகரமாக இஹ்ராம் அணிவதாக எண்ணிக் கொண்டு, தல்பியாக் கூறவேண்டும். இதன் மூலம் அச்சிறுமி இஹ்ராம் அணிந்தவளாகிவிடுவாள். இதன் பிறகு இஹ்ராம் அணிந்த பெண்களுக்குத் தடுக்கப்பட்ட அனைத்தும் அச்சிறுமிக்கும் தடுக்கப்பட்டதாகிவிடும்.

தவாஃபின் போது (சிறுவர், சிறுமி ஆகிய) இருவரின் உடல் களும் உடைகளும் தூய்மையாக இருப்பது அவசியம். தவாஃப் என்பது தொழுகையைப் போன்றதாகும். எனவே அது நிறைவேற தூய்மையாக இருப்பது நிபந்தனையாகும்.

சிறுவரும் சிறுமியும் விபரமறியும் பருவமுடையவர்களாக இருந்தால் அவர்களுடைய பொறுப்பாளர்களின் அனுமதியுடன் இஹ்ராம் அணிந்து கொள்ளவேண்டும். இஹ்ராம் அணியும் போது குளித்தல், நறுமணம் பூசுதல் போன்ற பெரியவர்கள் செய்யும் அனைத்தையும் அவ்விருவரும் செய்துகொள்வார்கள். எனினும் அவ்விருவரின் அனைத்துச் செயல்களையும் முறையாக நிறைவேற்ற வைப்பது அவர்களுடைய பொறுப்பாளர்களின் கடமையாகும். பொறுப்பாளராக அவர்களின் தந்தையோ, தாயோ அல்லது இவர்கள் தவிர உள்ள பிறரோ இருந்து கொள்ளலாம்.

சிறுவர்களால் நிறைவேற்ற முடியாத கல்லெறிதல் போன்ற செயல்களை அவர்களுக்குப் பகராமாக அவர்களின் பொறுப்பாளர்கள் நிறைவேற்ற வேண்டும். இவை தவிர, அரஃபா, மினா, முஸ்தலிஃபா ஆகிய இடங்களில் தங்குவது, தவாஃப், ஸயீ செய்வது போன்றவைகளை (சிறுவர், சிறுமிகளான) அவர்களே நிறைவேற்றுவது கடமையாகும்.

தவாஃப், ஸயீ செய்ய அவர்களால் இயலாவிட்டால் அவர்களை சுமந்து கொண்டு தவாஃப், ஸயீ செய்ய வைக்க வேண்டும். சிறுவர்களை சுமந்து செல்பவர் தான் செய்யும் தவாஃபையும் ஸயீயையும் தனக்காகவும் அவர்களுக்காகவும் ஆக்கிக் கொள்ளாமலிருப்பது சிறந்ததாகும். மாறாக அவ்விருவருக்குமுரிய தவாஃப், ஸயீ என நினைத்து அதனை நிறைவேற்றவேண்டும். பிறகு தனக்காக ஒரு தவாஃபும் ஒரு ஸயீயும் செய்து கொள்ளவேண்டும். இவ்வாறு செய்வதே வணக்கங்களில் பேணிக்கையான முறையும், சந்தேகமானதை விட்டுவிட்டு சந்தேகமற்றதை எடுத்துக் கொள்! என்ற நபிமொழியின் அடிப்படையில் செயல்படுவதுமாகும்.
(அறிவிப்பவர்: ஹஸன் -ரலி, நூல் : திர்மிதி)

ஆயினும் சிறுவர்களை சுமப்பவர்கள் தனக்காகவும் தான் சுமந்து செல்பவருக்காவும் சேர்த்து தவாஃபும் ஸயீயும் செய்கிறேன் என நினைத்துக் கொண்டால் அது அவ்விருவருக்கும் உரியதாகிவிடும் என்பதே (அறிஞர்களின்) இரு கூற்றுக்களில் சரியான கூற்றாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி குழந்தையின் ஹஜ்ஜைப் பற்றிக் கேட்டபோது, அதற்கென தனியாக தவாஃப் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. அவ்வாறு செய்வது கடமையாக இருந்திருந்தால் நிச்சயமாக அதனை அப்பெண்மணிக்கு நபி (ஸல்) அவர்கள் விளக்கியிருப்பார்கள்.
-நேர்வழிகாட்ட அல்லாஹ் போதுமானவன்-

தவாஃபை ஆரம்பிப்பதற்கு முன்னர் -பெரியவர்களைப் போன்று- சிறுதொடக்கு, அசுத்தம் ஆகியவைகளைவிட்டும் தூய்மையாகிக் கொள்ளுமாறு விபரமறிந்த சிறுவர், சிறுமியர் களுக்குக் கட்டளையிடவேண்டும்.

சிறுவர், சிறுமியரை -ஹஜ், உம்ரா செய்யவைப்பது, அதற்காக- இஹ்ராம் அணிவிப்பது பொறுப்பாளர் மீது கடமையல்ல. மாறாக அது -நஃபிலான- உபரியான செயலாகும். அதனை செய்ய வைத்தால் அதற்குரிய கூலி பொறுப்பாளருக்குக் கிடைக்கும். அவ்வாறு செய்ய வைக்கவில்லையெனில் அதனால் குற்றமேதுமில்லை.
-அல்லாஹ் மிக அறிந்தவன்-
 

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்