Download Unicode Font

 

 

Index

9 - துல்ஹஜ் 8-ம் நாள் ஹஜ்ஜுக்குரிய இஹ்ராமிற்காக நிய்யத் வைத்து மினாவுக்குப் புறப்படுவது பற்றிய சட்டம்


மக்காவில் தங்கியிருப்பவர்களும் மக்கா வாசிகளில் ஹஜ் செய்பவர்களும் துல்ஹஜ் 8-ம் நாளன்று அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்தே ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து கொள்வது விரும்பத்தக்கச் செயலாகும். ஏனெனில் -மக்காவில்- அப்தஹ் எனும் இடத்தில் தங்கியிருந்த நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கிணங்க 8-ம் நாளில் அங்கிருந்தே ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து கொண்டனர்.

ஹரமுக்கோ, கஃபாவின் முகட்டிலிருக்கும் தங்கப் பீலிக்கோ சென்று அங்கிருந்து இஹ்ராம் அணிந்து கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. அதுபோன்று மினாவுக்குப் புறப்படும் போது விடைபெறும் தவாஃப் -என்ற பெயரில் ஒரு தவாஃப்- செய்யவும் கட்டளையிடவில்லை. இவ்வாறு செய்வது மார்க்கச் சட்டமாக இருந்திருந்தால் அதனை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருப்பார்கள். நபி (ஸல்) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் பின்பற்றுவதில் மட்டுமே நமக்கு நன்மையுள்ளது.

எல்லையில் இஹ்ராம் அணியும்போது குளித்து, தூய்மையாகி, நறுமணம் பூசிக் கொண்டது போன்று ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணியும் போதும் செய்து கொள்வது விரும்பத்தக்கச் செயலாகும்.

8-ம் நாளன்று ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்த பிறகு சு10ரியன் உச்சி சாய்வதற்கு முன்போ, உச்சி சாய்ந்த பின்போ மினாவுக்குச் செல்வது சுன்னத்தாகும்.

(இஹ்ராம் அணிந்ததிலிருந்து 10-ம் நாள்) ஜமரத்துல் அகபாவுக்குக் கல்லெறியும் வரை அதிகமாக தல்பியாக் கூறிக் கொண்டிருக்க வேண்டும்.

ளுஹர், அஸர், மஃரிப், இஷா மற்றும் ஃபஜ்ர் ஆகிய தொழுகைகளை மினாவில் தொழவேண்டும். (இரு தொழுகை களை ஒரே நேரத்தில் சேர்த்து) ஜம்ஆகத் தொழாமல் தொழுகைகளை அதற்குரிய நேரத்தில் தொழுவதும், அதனை கஸராக (நான்கு ரகஅத் தொழுகைகளை இரண்டு ரகஅத்களாக)த் தொழுவதும் சுன்னத்தாகும். ஃபஜ்ரையும் மஃரிபையும் கஸராகத் தொழ முடியாது.

(ஜம்வு, கஸர் சலுகையில்) பிறருக்கும் மக்கா வாசிகளுக்கும் மத்தியில் எந்த வித்தியாசமும் கிடையாது. நபி (ஸல்) அவர்கள் மினா, அரஃபா, முஸ்தலிஃபா ஆகிய அனைத்து இடங்களிலும் மக்கா வாசிகளுக்கும் பிறருக்கும் கஸராகவே தொழவைத்தார்கள். தொழுகையை பூர்த்தியாக்கி (4 ரகஅத்களாகத்) தொழுமாறு மக்கா வாசிகளுக்கு கட்டளையிடவில்லை. அவ்வாறு தொழுவது அவர்கள் மீது கடமையாக இருந்திருந்தால் நிச்சயமாக அதனை அவர்களுக்குத் தெளிவுபடுத்தியிருப்பார்கள்.

அரஃபா தினத்தன்று சு10ரிய உதயத்திற்குப்பின் மினாவிலிருந்து அரஃபாவை நோக்கிப் புறப்பட வேண்டும். வாய்ப்பிருந்தால் சு10ரியன் உச்சி சாயும் வரை நமிரா என்ற இடத்தில் தங்குவது சுன்னத்தாகும். நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துள்ளார்கள்.

சு10ரியன் உச்சி சாய்ந்த பின்னர் ஆட்சித் தலைவரோ அல்லது அவருக்குப் பகரமாக நியமிக்கப்பட்டவரோ கால சு10ழ்நிலைகளுக்கேற்ற செய்திகளுடன் உரை நிகழ்த்துவது ஸுன்னத்தாகும். அதில் ஹஜ் செய்பவர் அன்றைய தினமும் அதற்குப் பின்னரும் செய்யவேண்டியவைகளை தெளிவுபடுத்த வேண்டும். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுமாறும் அவனை ஓர்மைப் படுத்துமாறும் அனைத்து அமல்களையும் அவனுக்காகவே மனத்தூய்மையுடன் நிறைவேற்றுமாறும் அவர் களுக்குக் கட்டளையிடவேண்டும். மார்க்கம் தடுத்துள்ள காரியங்களைச் செய்வதை விட்டும் அவர்களை எச்சரிக்க வேண்டும். அல்லாஹ்வுடைய வேதத்தையும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுமாறும் அவ்விரண்டைக் கொண்டே ஆட்சி நடத்து மாறும் அனைத்துக் காரியங்களுக்கும் அவ்விரண்டின் அடிப்படையிலேயே தீர்ப்புக் கூறுமாறும் இவ்வனைத்திலும் நபி (ஸல்) அவர்களை பின்பற்றுமாறும் வலியுறுத்தி போதிக்க வேண்டும்.
பிறகு நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கிணங்க, ஒரு பாங்கு, இரு இகாமத்களுடன் ளுஹரையும் அஸரையும் இணைத்து ளுஹர் நேரத்தில் கஸராக (இரண்டிரண்டு ரகஅத்களாக)த் தொழ வேண்டும்.
(அறிவிப்பவர் : ஜாபிர் - ரலி, நூல் : முஸ்லிம்)

பிறகு அரஃபாவில் தங்கவேண்டும். பத்னு உரனா என்ற இடத்தைத் தவிர அரஃபாவின் மற்ற பகுதிகள் அனைத்தும் தங்குமிடமே! வாய்ப்பிருந்தால் கிப்லாவையும் ஜபலுர் ரஹ்மாவையும் முன்னோக்கியவாறு தங்குவது விரும்பத்தக்க செயலாகும். ஒரே நேரத்தில் இரண்டையும் முன்னோக்க வாய்ப்பில்லை என்றால் -ஜபலுர் ரஹ்மாவை முன்னோக்க வில்லை என்றாலும் சரியே!- கிப்லாவை மட்டுமாவது முன்னோக்கியவாறு தங்குவது சிறந்தது.

ஹஜ் செய்பவர் அரஃபாவில் தங்கியிருக்கும் நேரத்தில் அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறவேண்டும், பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும். அவனுக்கு முற்றிலும் அடிபணிய வேண்டும். இரு கைகளையும் உயர்த்திப் பிரார்த்திக்க வேண்டும். தல்பியாக் கூறினால் அல்லது அல்குர்ஆனில் ஏதேனும் சில பகுதிகளை ஓதினால் அதுவும் சிறந்ததே!
لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ، لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، يُحْيِيْ وَيُمِيْتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
என்ற திக்ரை அதிகமாகக் கூறுவது சுன்னத்தாகும்.

( خَيْرُ الدُّعَاءِ دُعَاءُ يَوْمِ عَرَفَةَ وَخَيْرُ مَا قُلْتُ أَنَا وَالنَّبِيُّونَ مِنْ قَبْلِي لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ )
பிரார்த்தனைகளில் மிகச் சிறந்த பிரார்த்தனை அரஃபா தினத்தன்று கேட்கும் பிரார்த்தனைதான்! நானும் எனக்கு முன்சென்ற நபிமார்களும் கூறியவைகளில் மிகச் சிறந்த -திக்ர்- லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷாPக்க லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைய்யின் கதீர் என்பதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அம்ர் பின் ஷுஐப் -ரலி, நூல் : திர்மிதி)

( أَحَبُّ الْكَلَامِ إِلَى اللهِ أَرْبَعٌ : سُبْحَانَ اللهِِ وَالْحَمْدُ ِللهِ وَلَا إِلَهَ إِلَّا الله ُ وَالله ُ أَكْبَرُ . . )
ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், லாயிலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் ஆகிய நான்கு வார்த்தைகளும் அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானவைகளாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் :ஸமுரா பின் ஜுன்துப் -ரலி, நூல் : முஸ்லிம்)

எனவே இந்த திக்ரை மனஈடுபாட்டுடனும் இறையச்சத்துடனும் திரும்பத் திரும்ப அதிகமாகக் கூறிக் கொண்டிருப்பது சிறந்ததாகும்.

மார்க்கம் கற்றுத் தந்துள்ள திக்ர், துஆக்களை பொதுவாக அனைத்துக் காலங்களிலும் அதிகமாகக் கூறிக் கொண்டிருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக, இந்த இடத்தில், இந்த மகத்தான நாளில் மிக அதிகமாக திக்ர், துஆக்களில் ஈடுபட வேண்டும். மேலும் சிறந்த திக்ர், துஆக்களைத் தேர்ந்தெடுத்துப் பிரார்த்திக்க வேண்டும். அவைகளில் சில :

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللهِ الْعَظِيْمِ
அல்லாஹ்வைப் புகழ்வதுடன், அவனைத் தூய்மைப் படுத்து கிறேன். மகத்தான அல்லாஹ் மிகவும் தூய்மையானவன்.

{ لاَإِلَهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّيْ كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ }
வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத் தவிர யாருமில்லை, நீ மிகவும் தூய்மையானவன், நிச்சயமாக நான் அநியாயக் காரர்களில் ஒருவனாகி விட்டேன். (அல்குர்ஆன் 21:87)

لاَ إِلهَ إِلاَّ اللهُ، وَلاَ نَعْبُدُ إِلاَّ إِيَّاهُ، لَهُ النِّعْمَةُ وَلَهُ الْفَضْلُ وَلَهُ الثَّنَاءُ الْحَسَنُ، لاَ إِلهَ إِلاَّ اللهُ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ وَلَوْ كَرِهَ الْكَافِرُوْنَ
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. நாங்கள் அவனைத் தவிர வேறு எவரையும் வணங்க மாட்டோம். அனைத்து அருட்கொடைகளும் அனைத்துச் சிறப்புக்களும் அனைத்து அழகிய புகழ்களும் அவனுக்கே உரியன! வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. மார்க்கத்தை அவனுக்காக மட்டுமே தூய்மையாக்கியவர்களாக -அவனை மட்டுமே வணங்குவோம்.- அதனை இறைநிராகரிப்பாளர்கள் வெறுத்த போதிலும் சரியே!

لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ
அல்லாஹ்வைக் கொண்டே தவிர (தீமையை விட்டும்) விலகவோ, (நன்மையைச் செய்ய) சக்தி பெறவோ முடியாது.

رَبَّنَا آتِنَا فِيْ الدُّنْيَا حَسَنَةً وَفِي اْلآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
எங்கள் இறைவா! எங்களுக்கு இவ்வுலகில் நல்லதையும் மறுமையில் நல்லதையும் தருவாயாக! எங்களை நரக வேதனையிலிந்து காத்தருள்வாயாக!

أَللَّهُمَّ أَصْلِحْ لِيْ دِيْنِي الَّذِيْ هُوَ عِصْمَةُ أَمْرِيْ ، وَأَصْلِحْ لِيْ دُنْيَايَ الَّتِيْ فِيْهَا مَعَاشِيْ ، وَأَصْلِحْ لِيْ آخِرَتِي الَّتِيْ فِيْهَا مَعَادِيْ ، وَاجْعَلِ الْحَيَاةَ زِيَادَةً لِّيْ فِيْ كُلِّ خَيْرٍ ، وَالْمَوْتَ رَاحَةً لِّيْ مِنْ كُلِّ شَرٍّ .
யாஅல்லாஹ்! என்னுடைய மார்க்கத்தை எனக்கு சீர் படுத்துவாயாக! அதுதான் எனது -வாழ்வின்- அரண். எனது உலகை எனக்குச் சீர்படுத்துவாயாக! அதுதான் நான் வாழும் இடம். எனது மறுமையை சீர்படுத்துவாயாக! அதுதான் நான் திரும்பிச் செல்லுமிடம். எனது வாழ்க்கையை அனைத்து நல்லறங்களையும் அதிகமாகச் செய்ய வாய்ப்புடையதாக ஆக்குவாயாக! அனைத்து தீமைகளை விட்டும் விடுபட்டதாக எனது மரணத்தை ஆக்குவாயாக!

أَعُوْذُ بِاللهِ مِنْ جَهْدِ الْبَلاَءِ وَدَرَكِ الشَّقَاءِ وَسُوْءِ الْقَضَاءِ وَشَمَاتَةِ اْلأَعْدَاءِ
சோதனையின் சிரமத்தை விட்டும் விரும்பத்தகாதவை ஏற்படுவதை விட்டும் தீய முடிவுகளை விட்டும் விரோதிகளின் கேலி, கிண்டல்களுக்கு ஆளாவதை விட்டும் நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَمِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَمِنَ الْجُبْنِ وَالْبُخْلِ وَمِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ وَمِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ وَأَعُوْذُ بِكَ اللَّهُمَّ مِنَ الْبَرَصِ وَالْجُنُوْنِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ اْلأَسْقَامِ
யாஅல்லாஹ்! கவலை, சோகம், இயலாமை, சோம்பல், கோழைத்தனம்;, கஞ்சத்தனம், பாவமிழைத்தல், கடனாளியாதல், கடன் அதிகரித்தல், மனிதர்களின் அடக்குமுறைக்கு ஆளாகுதல் ஆகியவைகளை விட்டும், வெண்குஷ்டம், பைத்தியம், உடலுறுப்புக்கள் அழுகி விழும்நோய் (கருங்குஷ்டம்), மற்றும் கெட்ட நோய்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْعَفْوَ والْعَافِيَةَ فِي الدُّنْيَا وَاْلآخِرَةِ
யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடம் இவ்வுலகிலும் மறுவுலகிலும் பாவமன்னிப்பையும் நல்வாழ்வையும் கேட்கிறேன்.

أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِيْ دِيْنِيْ وَدُنْيَايَ وَأَهْلِيْ وَمَالِيْ
யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடம் என்னுடைய மார்க்க விஷயத்திலும் உலக விஷயத்திலும் குடும்ப விஷயத்திலும் பொருளாதார விஷயத்திலும் -செய்த தவறுகளுக்காக- பாவமன்னிப்பையும் நல்வாழ்வையும் கேட்கிறேன்.

اَللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِيْ وَآمِنْ رَوْعَاتِيْ، اَللَّهُمَّ احْفَظْنِيْ مِنْ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِيْ وَعَنْ يَمِيْنِيْ وَعَنْ شِمَالِيْ وَمِنْ فَوْقِيْ وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِيْ
யாஅல்லாஹ்! என்னுடைய குறைகளை மறைத்திடுவாயாக! என்னுடைய பயத்தை நீக்கி, அச்சமற்ற நிலையை ஏற்படுத்திடுவாயாக! எனக்கு முன்னும் பின்னும் வலப்புறமும் இடப்புறமும் மேற்புறமும் என்னை நீ பாதுகாப்பாயாக! கீழ் புறமிருந்து -பூமியினுள்- நான் இழுக்கப்படுவதை விட்டும் உன்னுடைய கண்ணியத்தின் பொருட்டால் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.

أَللَّهُمَّ اغْفِرْ لِيْ خَطِيْئَتِيْ وَجَهْلِيْ وَإِسْرَافِيْ فِيْ أَمْرِيْ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ
யாஅல்லாஹ்! என்னுடைய குற்றங்களையும் என்னுடைய அறியாமையால் விளைந்தவைகளையும் என்னுடைய செயல் களில் நான் வரம்புமீறியதையும் எவைகளைப் பற்றி நீ என்னை விட நன்கறிந்துள்ளாயோ அவைகளையும் மன்னித்துவிடு;வாயாக!

اَللَّهُمَّ اغْفِرْ لِيْ جِدِّي ْوَهَزْلِيْ وَخَطَئِيْ وَعَمْدِيْ وَكُلُّ ذَلِكَ عِنْدِيْ
யாஅல்லாஹ்! நான் வேண்டுமென்றோ, விளையாட்டாகவோ, அறியாமலோ, அறிந்தோ செய்தவைகளை மன்னித்து விடுவாயாக! அவைகள் யாவும் என்னிடம் நிகழ்ந்தவைகளே!

اَللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ، أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ.
யாஅல்லாஹ்! நான் முற்படுத்தியவைகளையும், நான் பிற்படுத்தியவைகளையும், நான் மறைவாகச் செய்தவைகளை யும், பகிரங்கமாகச் செய்தவைகளையும் எவைகளைப் பற்றி நீ என்னை விட நன்கறிந்துள்ளாயோ அவைகளையும் நீ மன்னித் தருள்வாயாக! நீயே முற்படுத்துபவன், நீயே பிற்படுத்துபவன், நீயே அனைத்து பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.


اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الثُّبَاتَ فِي اْلأَمْرِ وَالْعَزِيْمَةَ عَلَى الرُّشْدِ وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ وَحُسْنَ عِبَادَتِكَ وَأَسْأَلُكَ قَلْبًا سَلِيْمًا وَلِسَاناً صَادِقاً وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ، وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا تَعْلَمُ، إِنَّكَ عَلاَّمُ الْغُيُوْبِ
.
யாஅல்லாஹ்! அனைத்து -நல்ல- காரியங்களிலும் நிலைத்து நிற்பதையும் நேர்வழியில் உறுதியாக இருப்பதையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். உன்னுடைய அருட்கொடை களுக்கு நன்றி செலுத்துவதையும் அழகிய முறையில் உன்னை வழிபடுவதையும் உன்னிடம் கேட்கின்றேன். மேலும்-உனக்குக்- கட்டுப்படும் உள்ளத்தையும் உண்மை பேசும் நாவையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். மேலும் நீ அறிந்துள்ள நல்லவை களை உன்னிடம் நான் கேட்கின்றேன். நீ அறிந்துள்ள தீயவை களை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். -என் விஷயத்தில்- நீ அறிந்து வைத்திருப்பவைகளுக்காக நான் உன்னிடம் பாவமன்னிப்புத் தேடுகிறேன். நிச்சயமாக நீயே மறைவானவைகளை நன்கறியக் கூடியவன்.

اَللَّهُمَّ رَبَّ النَّبِيِّ مُحَمَّدٍ عَلَيْهِ الصَّلاَةُ وَالسَّلاَمُ اغْفِرْ لِيْ ذَنْبِيْ، وَأَذْهِبْ غَيْظَ قَلْبِيْ وَأَعِذْنِيْ مِنْ مُضِلاَّتِ الْفِتَنِ مَا أَبْقَيْتَنِيْ.
யாஅல்லாஹ்! முஹம்மது (ஸல்) அவர்களின் இரட்சகனே! என்னுடைய பாவத்தை நீ மன்னித்தருள்வாயாக! என்னுடைய உள்ளத்தின் ஆத்திரத்தைப் போக்கிடுவாயாக! வழிகெடுக்கும் குழப்பங்களை விட்டும் என்னை நீ வாழ வைக்கும் வரை காத்தருள்வாயாக!

أَللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ، وَرَبَّ اْلأَرْضِ، وَرَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ، رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْئٍ، فَالِقَ الْحَبِّ وَالنَّوَى، وَمُنْزِلَ التَّوْرَاةِ وَاْلإِنْجِيْلِ وَالْقُرْآنِ، أَعُوْذُ بِكَ مِنَ شَرِّ كُلِّ شَيْئٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ، أَللَّهُمَّ أَنْتَ اْلأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْئٌ، وَأَنْتَ اْلآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْئٌ، وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْئٌ، وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُوْنَكَ شَيْئٌ، اِقْضِ عَنِّي الدَّيْنَ،وَأَغْنِنِيْ مِنَ الْفَقْرِ
யாஅல்லாஹ்! ஏழு வானங்களின் இரட்சகனே! பூமியின் இரட்சகனே! மகத்தான அர்ஷின் இரட்சகனே! எங்கள் இரட்சகனே! அனைத்துப் பொருட்களின் இரட்சகனே! விதை யையும் வித்துவையும் பிள(ந்து முளை)க்கச் செய்பவனே! தவ்ராத், இன்ஜீல், குர்ஆன் ஆகிய வேதங்களை இறக்கியவனே! எந்தப் பொருட்களின் முன்னெற்றி உரோமம் உன் ஆதிக்கத் திலுள்ளதோ அவைகள் அனைத்தின் தீமைகளை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். யாஅல்லாஹ்! நீயே ஆரம்பமானவன்; உனக்கு முன்பு எதுவுமில்லை. நீயே இறுதி யானவன்; உனக்குப் பின்பு எதுவுமில்லை. நீயே மிகைப்பவன்; உனக்குமேல் எதுவுமில்லை. நீயே மறைவானவன்; உனக்கு மறைவானது எதுவுமில்லை. என்னுடைய கடனை நிறைவேற் றிடுவாயாக! மேலும் வறுமையை விட்டும் (பாதுகாத்து, பிறர்) தேவையற்றவனாக என்னை ஆக்குவாயாக!

أَللَّهُمَّ أَعْطِ نَفْسِيْ تَقْوَاهَا، وزَكِّهَا، أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا، أَنْتَ وَلِيُّهَا وَمَوْلاَهَا، أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَأَعُوْذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْهَرَمِ وَالْبُخْلِ وَ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ.
யாஅல்லாஹ்! என் உள்ளத்தில் உனது அச்சத்தை ஏற்படுத் துவாயாக! அதனை தூய்மைப்படுத்துவாயாக! நீதான் அதனைத் தூய்மைப்படுத்துவோரில் மிகச் சிறந்தவன். நீயே அதன் பொறுப்பாளனும் அதன் பாதுகாவலனுமாவாய். யாஅல்லாஹ்! இயலாமை, சோம்பல், கோழைத்தனம், வயோதிகம், கஞ்சத்தனம் மற்றும் கப்ர் வேதனை ஆகியவைகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

أَللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، أَعُوْذُ بِعِزَّتِكَ أَنْ تُضِلَّنِيْ،لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ ،أَنْتَ الْحَيُّ الَّذِيْ لاَ يَمُوْتُ،وَالْجِنُّ وَاْلإِنْسُ يَمُوْتُوْنَ
யாஅல்லாஹ்! நான் உனக்கே கட்டுப்பட்டுள்ளேன். உன்மீதே நம்பிக்கைக் கொண்டுள்ளேன். உன் மீதே உறுதி கொண்டுள்ளேன். உன்பக்கமே மீண்டுள்ளேன். உன் உதவியால்தான் (எதிரிகளிடம்) தர்க்கம் செய்கிறேன். என்னை நீ வழிதவறச் செய்வதை விட்டும் உன்னுடைய கண்ணியத்தின் பொருட்டால் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை. நீயே மரணிக்காத நித்திய ஜீவன்;. மனித, ஜின் இனத்தினர் மரணித்துவிடுவர்.

أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عِلْمٍ لاَيَنْفَعُ، وَمِنْ قَلْبٍ لاَيَخْشَعُ، وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ، وَمِنْ دَعْوَةٍ لاَيُسْتَجَابُ لَهَا
யாஅல்லாஹ்! பயனளிக்காத கல்வியைவிட்டும் (உனக்குப்) பயப்படாத உள்ளத்தை விட்டும் நிறைவடையாத மனதை விட்டும் பதிலளிக்கப்படாத பிரார்த்தனையை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

أَللَّهُمَّ جَنِّبْنِيْ مُنْكَرَاتِ اْلأَخْلاَقِ وَاْلأَعْمَالِ وَاْلأَهْوَاءِ وَاْلأَدْوَاءِ
யாஅல்லாஹ்! தீய குணங்கள், தீய செயல்கள், தீய ஆசைகள், தீய நோய்கள் ஆகியவைகளிலிருந்து என்னை நீ காப்பாற்றுவாயாக!

أَللَّهُمَّ أَلْهِمْنِيْ رُشْدِيْ، وَأَعِذْنِيْ مِنْ شَرِّ نَفْسِيْ

யாஅல்லாஹ்! எனக்கு நீ நேர்வழியைக் காட்டுவாயாக! மேலும் என்னுடைய மனதின் தீங்கிலிருந்து என்னைப் பாதுகாப்பாயாக!

اَللَّهُمَّ اكْفِنِيْ بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ،وَأَغْنِنِيْ بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
யாஅல்லாஹ்! நீ தடுத்துள்ளவைகளை விட்டும் என்னைக் காப்பாற்றி, நீ அனுமதித்தவைகளின் மூலம் எனக்கு நிறைவை ஏற்படுத்துவாயாக! உன்னுடைய அருட்கொடைகளின் மூலம் என்னை பிறர் தேவையற்றவனாக ஆக்கிடுவாயாக!

اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى
யாஅல்லாஹ்! நேர்வழியையும் (உனது) அச்சத்தையும் பத்தினித் தனத்தையும் தன்னிறைவையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்.

أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْهُدَى وَالسَّدَادَ
யாஅல்லாஹ்! நேர்வழியையும் அதில் உறுதியாக நிற்பதையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்.


أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنَ الْخَيْرِ كُلِّهِ، عَاجِلِهِ وَآجِلِهِ مَا عَلِمْتُ مِنْهُ وَمَالَمْ أَعْلَمْ، وَأَعُوْذُ بِكَ مِنَ الشَّرِّ كُلِّهِ، عَاجِلِهِ وَآجِلِهِ مَا عَلِمْتُ مِنْهُ وَمالَمْ أَعْلَمْ، وأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ مِنْهُ عَبْـدُكَ وَنَبِيُّكَ مُحَمَّدٌ ، وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا اسْتَعَاذَ مِنْهُ عَبْدُكَ وَنَبِيُّكَ مُحَمَّدٌ 


யாஅல்லாஹ்! நான் அறிந்திருக்கின்ற மற்றும் அறியாத அனைத்து நன்மைகளையும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் (தருமாறு) உன்னிடம் கேட்கிறேன். மேலும் நான் அறிந்திருக்கின்ற மற்றும் அறியாத அனைத்துத் தீமைகளை விட்டும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். யாஅல்லாஹ்! உன்னுடைய அடியாரும்; நபியுமாகிய முஹம்மது (ஸல்) அவர்கள் கேட்ட நல்லவைகள் அனைத்தையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். உன்னுடைய அடியாரும் நபியுமாகிய முஹம்மது (ஸல்) அவர்கள் பாதுகாவல் தேடிய தீமைகள் அனைத்தை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْجَنَّةَ، وَمَا قَرَّبَ إِلَيْهَامِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ، وَأَعُوْذُ بِكَ مِنَ النَّارِ، وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ وَأَسْأَلُكَ أَنْ تَجْعَلَ كُلَّ قَضَاءٍ قَضَيْـتَـهُ لِيْ خَيْرًا .
யாஅல்லாஹ்! சொர்க்கத்தையும் அதன் பக்கம் நெருக்கி வைக்கும் சொல் மற்றும் செயலையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் நரகத்தை விட்டும் அதன் பக்கம் நெருக்கி வைக்கும் சொல் மற்றும் செயலை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மேலும் நீ எனக்கு நிர்ணயித்துள்ள அனைத்துத் தீர்ப்புக்களையும் எனக்கு நல்லதாக ஆக்கிவைக்குமாறு உன்னிடம் வேண்டுகிறேன்.

لاَإِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، يُحْيِيْ وَيُمِيْتُ، بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ، سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلَّهِ ، وَلاَ إِلَهَ إِلاَّ اللهُ، وَاللهُ أَكْبَرُ، ولاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ الْعَلِيِّ الْعَظِيْمِ
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன், அவனுக்கு யாதொரு இணையுமில்லை. அனைத்து ஆட்சியும் அனைத்துப் புகழும் அவனுக்குரியதே! அவனே உயிர்ப்பிப்பவன், அவனே மரணிக்கச் செய்பவன், அவனுடைய கையில்தான் அனைத்து நல்லவைகளும் உள்ளன. அவனே அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். அல்லாஹ் மிகத் தூய்மையானவன், புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை, அல்லாஹ் மிகப் பெரியவன். மகத்துவமிக்க, மிக உயர்ந்த வனான அல்லாஹ்வைக் கொண்டே தவிர (தீமையை விட்டும்) விலகவோ, (நன்மையைச் செய்ய) சக்தி பெறவோ முடியாது.

اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ، اَللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ
யாஅல்லாஹ்! நீ இப்ராஹீம் (அலை) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் அருள்புரிந்தது போன்று முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் அருள்புரிவாயாக! நிச்சயமாக நீயே பெருமைக்கும் புகழுக்குமுரியவன். யாஅல்லாஹ்! நீ இப்ராஹீம் (அலை) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் பரகத் செய்தது போன்று முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் பரகத் செய்வாயாக! நிச்சயமாக நீயே பெருமைக்கும் புகழுக்குமுரியவன்.

{ رَبَّنَا آتِنَا فِيْ الدُّنْيَا حَسَنَةً وَفِي اْلآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ}
எங்கள் இரட்சகனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங் களையும் மறுமையில் நற்பாக்கியங்களையும் தருவாயாக! மேலும் எங்களை நரக வேதனையிலிருந்து காத்தருள்வாயாக!

ஹஜ் செய்பவர் இப்புனித இடத்தில் மேற்கண்ட திக்ர், துஆக்களையும் இவை போன்ற பொருள் கொண்ட திக்ர், துஆக்களையும் நபி (ஸல்) அவர்கள் மீது கூறவேண்டிய ஸலவாத்தையும் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பதும் மனமுறுகி துஆச் செய்வதும் விரும்பத்தக்க செயலாகும். இம்மை, மறுமையின் நல்லவற்றை அல்லாஹ்விடம் கேட்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் ஏதேனும் பிரார்த்தனை செய்தால் அதனை மூன்று முறை திரும்பத் திரும்பக் கூறுவார்கள். எனவே நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றியவர் களாக - ஒவ்வொன்றையும் மும்மூன்று முறை பிரார்த்திக்க - வேண்டும்.

இந்த இடத்தில் முஸ்லிம் தனது இரட்சகனுக்கு முன் கட்டுப்பட்டவனாக, அவனுக்கு அடிபணிந்தவனாக, அவனிடம் சரணடைந்தவனாக, அவன் முன் கீழ்படிந்தவனாக, அவனுடைய அருளையும் பாவமன்னிப்பையும் எதிர்பார்த் தவனாக, அவனுடைய தண்டனைக்கும் கோபத்திற்கும் பயந்தவனாக, தன்னை -சுயபரிசோதனை செய்து- விசாரித்த வனாக, மனத் தூய்மையுடன் பாவமன்னிப்புத் தேடியவனாக நடந்து கொள்ளவேண்டும்.

ஏனெனில் நிச்சயமாக அரஃபா தினம் என்பது பெருங் கூட்டத்தினர் ஒன்றிணையும் மகத்தான நாளாகும். இந்நாளில் அல்லாஹ் தன் அடியார்களுக்கு அருட்கொடைகளை வாரி வழங்குகிறான். மலக்குகளிடம் அவர்களைப் பற்றிக் கூறிப் பெருமைப்படுகிறான். இந்நாளில் அதிகமானோருக்கு நரகத்திலிருந்து விடுதலை அளிக்கின்றான்.
அரஃபாவுடைய நாளில், ஷைத்தான் விரட்டப்பட்டு, மிகச் சிறுமையடைந்து, கேவலப்படுவது போன்று மற்ற எந்த நாட்களிலும் கேவலப்படுவதில்லை. -பத்ர் களத்தில் அவன் அடைந்த இழிவைத் தவிர-. அரஃபா தினத்தன்று அல்லாஹ் தன் அடியாருக்கு வழங்கும் கொடையையும் கிருபையையும் அதிகமானோருக்கு நரகிலிருந்து விடுதலை அளிப்பதையும் பாவங்களுக்கு மன்னிப்பு வழங்குவதையும் அறிந்திருப்பதால் ஷைத்தான் இவ்வாறு கைசேதப்படுகிறான்.

( مَا مِنْ يَوْمٍ أَكْثَرَ مِنْ أَنْ يُعْتِقَ اللَّهُ فِيهِ عَبْدًا مِنَ النَّارِ مِنْ يَوْمِ عَرَفَةَ وَإِنَّهُ لَيَدْنُو ثُمَّ يُبَاهِي بِهِمُ الْمَلَائِكَةَ فَيَقُولُ مَا أَرَادَ هَؤُلَاءِ؟ )
அரஃபாவுடைய நாளில் அல்லாஹ் தன் அடியார்களை நரகத்திலிருந்து விடுவிப்பதைவிட மிக அதிகமாக வேறு எந்த நாளிலும் விடுவிப்பதில்லை. நிச்சயமாக அவன் -அந்நாளில்- அவர்களை நெருங்குகிறான். இவர்கள் எதனை எதிர் பார்க்கின்றார்கள்! என்று மலக்குகளிடம் கூறிப் பெருமைப் படுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : ஆயிஷா -ரலி, நூல் : முஸ்லிம்)

முஸ்லிம்கள் தங்களை அல்லாஹ்வுக்கு முன்னிலையில் சிறந்தவர்களாக காண்பிக்கவேண்டும். திக்ர் மற்றும் துஆக் களை அதிகமாகச் செய்யவேண்டும். அனைத்துப் பாவங்களுக்காகவும் தவறுகளுக்காகவும் மன்னிப்புத்தேடி, உறுதியாகத் தவ்பாச் செய்ய வேண்டும். இவை போன்ற நல்லறங்களால் முஸ்லிம்களின் எதிரியான ஷைத்தானை கவலைக்குள்ளாக்கி கேவலப்படுத்தவேண்டும்.

ஹஜ் செய்பவர், சு10ரியன் மறையும்வரை அரஃபாவில் தங்கி மன ஈடுபாட்டுடன் திக்ர், துஆக்களில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்க வேண்டும். சூரியன் மறைந்து விட்டால் அமைதியாகவும் கம்பீரமாகவும் அதிகமாகத் தல்பியாக் கூறியவர்களாகவும் முஸ்தலிஃபாவை நோக்கிச் செல்ல வேண்டும். விசாலமான இடத்தில் நபி (ஸல்) அவர்கள் விரைவாகச் சென்றுள்ளதால் அது போன்ற இடங்களைக் கடக்கும் போது விரைவாகச் செல்ல வேண்டும். சு10ரியன் மறைவதற்கு முன் (அரஃபாவிலிருந்து) புறப்படுவது கூடாது. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் சு10ரியன் மறையும் வரை அரஃபாவில் தங்கியுள்ளார்கள். மேலும் உங்களுடைய ஹஜ் வழிபாட்டை என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்! என்றும் கூறியுள்ளாhகள். (நூல் : பைஹகீ)

முஸ்தலிஃபா வந்தடைந்தவுடன் ஒரு பாங்கு, இரு இகாமத் கூறி மஃரிபை மூன்று ரகஅத்களாகவும் இஷாவை இரண்டு ரகஅத்களாகவும் ஜம்ஆக -இரண்டையும் ஒரே நேரத்தில்- தொழவேண்டும். இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள். மஃரிபுடைய நேரத்திலோ, அல்லது இஷாவுடைய நேரம் வந்த பிறகோ ஆக, எந்நேரத்தில் முஸ்தலிஃபாவை வந்தடைந்தாலும் இவ்வாறே தொழ வேண்டும்.

பொதுமக்களில் சிலர் முஸ்தலிஃபா வந்தடைந்தவுடன் தொழுவதற்கு முன்னர் ஜம்ராவிற்காக கல்லெடுக்கச் செல்வதும் அவ்வாறு செய்வதுதான் முறையானது என நம்பிக் கொண்டிருப்பதும் தவறாகும். இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.

நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவைக் கடந்து மினாவுக்குச் செல்லும் போதுதான் அவர்களுக்காகக் கற்களை எடுத்துக் கொள்ளுமாறு கட்டளையிட்டார்கள். எந்த இடத்திலும் கற்களை எடுத்துக் கொள்ளலாம். முஸ்தலிஃபாவில்தான் கற்களை எடுக்க வேண்டும் என (மார்க்கத்தில்) குறிப்பாகக் கூறப்படவில்லை. மாறாக மினாவிலேயே கூட எடுத்துக் கொள்வதற்கு அனுமதியுள்ளது.

-நபி (ஸல்) அவர்களை பின்பற்றியவர்களாக- ஜம்ரத்துல் அகபாவிற்கு (10-ம் நாள்) எறியவேண்டிய ஏழு கற்களை -மட்டும்- அன்றைய தினம் எடுத்துக் கொள்வது சுன்னத்தாகும். பிறகுள்ள மூன்று நாட்களில் மூன்று ஜம்ராக்களுக்கும் எறியவேண்டிய கற்களை ஒவ்வொரு நாளும் 21 கற்கள் வீதம் மினாவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அக்கற்களைக் கழுவிக் கொள்வது மார்க்கத்தில் விரும்பத்தக்க செயலல்ல. மாறாக அவைகள் கழுவப்படாமல் எறியப் படவேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்களோ, அவர்களின் தோழர்களோ அவைகளை கழுவியதற்கு எந்த ஆதாரமுமில்லை. எறியப்பட்ட கற்களைக் கொண்டு மீண்டும் எறியக் கூடாது.

ஹஜ் செய்பவர், அன்றிரவு முஸ்தலிஃபாவில் தங்க வேண்டும். பெண்கள், சிறுவர்கள் மற்றும் அவர்களைப் போன்ற பலவீனமானவர்கள் அன்றிரவின் இறுதிப் பகுதியில் மினாவுக்குச் செல்ல அனுமதியுள்ளது. ஆயிஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி) போன்றோர் அறிவிக்கும் ஹதீஸ்களில் இந்த அனுமதி இடம்பெற்றுள்ளது.

சலுகை வழங்கப்பட்டுள்ள இவர்களைத் தவிர ஹஜ் செய்பவர்கள் அனைவரும் ஃபஜ்ர் தொழும் வரை கண்டிப்பாக முஸ்தலிஃபாவில் தங்கியாக வேண்டும். பிறகு மஷ்அருல் ஹராமில் கிப்லாவை முன்னோக்கியவர்களாக தங்கி (வானம்) நன்கு வெளுக்கும் வரை அதிகமாக திக்ர், தக்பீர் மற்றும் துஆக்களில் ஈடுபட வேண்டும். அங்கு இரு கைகளையும் உயர்த்தி துஆச் செய்வது விரும்பத்தக்க செயலாகும். முஸ்தலிஃபாவின் எந்தப் பகுதியில் தங்கினாலும் அதனை நிறைவேற்றியதாகிவிடும். மஷ்அருக்கருகில் தங்குவதோ, அல்லது அதன் மீது ஏறுவதோ கடமையல்ல. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள்
( . . وَوَقَفْتُ هَاهُنَا وَجَمْعٌ كُلُّهَا مَوْقِفٌ)
நான் இங்கு -மஷ்அரில்- தங்குகிறேன். மேலும் ஜம்உ அனைத்தும் தங்குமிடமே! என்றார்கள். (நூல் : முஸ்லிம்) ஜம்உ என்பது முஸ்தலிஃபாவின் மற்றொரு பெயராகும்.

(வானம்) நன்கு வெளுத்துவிட்டால் சு10ரியன் உதிப்பதற்கு முன்னர் மினாவுக்குப் புறப்பட வேண்டும். செல்லும் வழியில் அதிகமாக தல்பியாக் கூறவேண்டும். முஹஸ்ஸிர் என்ற பகுதியை மட்டும் சற்று விரைவாகக் கடப்பது விரும்பத்தக்க செயலாகும். மினாவில் ஜம்ரத்துல் அகபாவை வந்தடைந்து விட்டால் தல்பியாவை நிறுத்திவிட வேண்டும். பிறகு ஜம்ரத்துல் அகபாவை நெருங்கி ஏழு கற்களை ஒன்றன்பின் ஒன்றாக எறிய வேண்டும். ஒவ்வொரு கல்லை எறியும் போதும் தக்பீர் கூறியவாறு கையை உயர்த்தி எறிய வேண்டும்.
பத்னுல்வாதி எனும் பகுதியில் கஃபா இடது புறம் இருக்குமாறும் மினா வலதுபுறமிருக்குமாறும் நின்று கொண்டு எறிவது விரும்பத்தக்க செயலாகும். ஏனெனில் இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள்.

பிற பகுதிகளிலிருந்து எறிந்து அது கல்லெறியப்படுமிடத்தில் விழுந்து விட்டால் அது நிறைவேறிவிடும். எறியப்படும் இடத்தில் விழுந்த கற்கள் அதிலேயே தங்கிட வேண்டும் என்ற நிபந்தனையில்லை. மாறாக கல்லெறியப்படுமிடத்தில் விழுவதுதான் நிபந்தனையாகும். எனவே கல், அது எறியப்படும் இடத்தில் பட்டு பிறகு வெளியே விழுந்துவிட்டால் -அறிஞர்களின் தெளிவான கூற்றின்படி- அது நிறைவேறி விடும். இதனை இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் ஷரஹுல் முஹத்தப் எனும் நூலில் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

ஜம்ராவில் எறியும் கற்கள் விரல்களால் சுண்டி எறியப்படும் அளவில் அதாவது; மொச்சையை விடச் சற்றுப் பெரியதாக இருக்கவேண்டும்.

கல்லெறிந்த பிறகு பிராணியை -ஹதியை- அறுக்கவேண்டும். அறுக்கும் போது
بِسْمِ اللهِ وَاللهُ أَكْبَرُ، أَللَّهُمَّ هَذَا مِنْكَ وَلَكَ
என்றுகூறி கிப்லாவை முன்னோக்கி அறுப்பது விரும்பத்தக்கச் செயலாகும். ஒட்டகத்தை அதன் இடது கால் கட்டப்பட்டவாறு நிற்கவைத்து அறுப்பதும், மாட்டையும் ஆட்டையும் அதன் இடதுபுறம் (படுக்கவைத்து) அறுப்பதும் சுன்னத்தாகும். கிப்லா அல்லாத திசைகளை முன்னோக்கி அறுப்பவர் சுன்னத்தை விட்டவராவார். எனினும் அவ்வாறு அறுக்கப்பட்ட ஹதீ நிறைவேறிவிடும். ஏனெனில் கிப்லாவை முன்னோக்கி அறுப்பது சுன்னத்து தானே தவிர கடமையல்ல.

தான் அறுத்த பிராணியிலிருந்து தானும் சாப்பிட்டு, பிறருக்கு அன்பளிப்பும் தர்மமும் செய்வது விரும்பத்தக்கச் செயலாகும்.
 . . فَكُلُوْا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيْرَ 
ஆகவே அ(றுக்கப்பட்ட)வைகளிலிருந்து நீங்களும் புசியுங்கள்! கஷ்டப்படும் ஏழைக்கும் உண்ணக் கொடுங்கள்! என அல்லாஹு தஆலா கூறுகின்றான். (அல்குர்ஆன் 22:28)

-அறிஞர்களின் சரியான கூற்றின்படி- பலிப் பிராணியை அறுப்பதற்குரிய நேரம் தஷ்ரீக்கின் மூன்றாம் நாள் (பிறை 13-ம் நாள்) சு10ரியன் மறையும் வரை நீடிக்கிறது. இதனடிப்படையில் அறுப்பதன் கால அளவு 10-ம் நாளும் அதற்கு பிறகு மூன்று நாட்களுமாகும்.

பலிப் பிராணியை அறுத்த பிறகு தலை (முடி)யை மழித்துக் கொள்ளவோ, குறைத்துக் கொள்ளவோ வேண்டும். எனினும் மழித்துக் கொள்வதே சிறந்ததாகும். ஏனெனில் மழித்துக் கொள்பவருக்கு அருளுக்காகவும் பாவமன்னிப்பிற்காகவும் மூன்றுமுறை துஆச் செய்த நபி (ஸல்) அவர்கள், குறைத்துக் கொள்பவர்களுக்காக ஒரு முறைதான் பிரார்த்தித்தார்கள். தலையின் சில பகுதிகளை மட்டும் குறைத்துக் கொள்வது போதுமானதாகாது. மாறாக அனைத்துப் பகுதிகளையும் மழிப்பது போன்று அனைத்துப் பகுதிகளையும் குறைப்பதும் அவசியமாகும். பெண் தனது அனைத்து ஜடைகளின் கடைசிப் பகுதியில் விரல் நுனியளவோ அல்லது அதைவிடக் குறைவாகவோ முடியை வெட்டிக் கொள்ளவேண்டும்.

(10-ம் நாள்) ஜம்ரத்துல் அகபாவிற்குக் கல்லெறிந்து (முடியை) மழித்தோ அல்லது குறைத்தோ விட்டால் இஹ்ராம் அணிந்தவருக்கு இஹ்ராமினால் தடுக்கப்பட்டவைகளில் பெண்களை (இல்லறத்தை)த் தவிர மற்ற அனைத்தும் அனுமதியாகிவிடும். இந்த அனுமதிக்கு (தஹல்லுலுல் அவ்வல்) முதலாவது அனுமதி என்று பெயர். இவ்வாறு இஹ்ராமைக் களைந்து ஹலாலான பிறகு நறுமணம் பூசிக் கொண்டு தவாஃபுல் இஃபாழா -ஹஜ்ஜுக்குரிய தவாஃப்- செய்வதற்காக மக்காவுக்குச் செல்வது சுன்னத்தாகும்.

நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிவதற்கு முன்பும் (துல்ஹஜ் 10-ம் நாள்) இஹ்ராமைக் களைந்து, கஃபாவைத் தவாஃப் செய்வதற்கு முன்பும் நான் அவர்களுக்கு நறுமணம் பூசிவிட்டேன் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(நூற்கள் : புகாரீ, முஸ்லிம்)
இந்த தவாஃபிற்கு இஃபாழா என்றும் ஜியாரா என்றும் பெயர். ஹஜ்ஜின் அடிப்படைக் கடமைகளில் இந்த தவாஃபும் ஒன்றாகும். இதனை செய்யாவிட்டால் ஹஜ் நிறைவேறாது. இந்த தவாஃபைப் பற்றியே இவ்வசனத்தில் கூறப்படுகிறது.

ثُمَّ لْيَقْضُوْا تَفَثَهُمْ وَلْيُوْفُوْا نُذُوْرَهُمْ وَلْيَطَّوَّفُوْا بِالْبَيْتِ الْعَتِيْقِ
பின்னர் (தலைமுடி இறக்கி, நகம் தறித்து, குளித்து இஹ்ராமை களைவதன் மூலம்) தங்கள் அழுக்குகளை அவர்கள் நீக்கிக் கொள்ளவும்! தம் நேர்ச்சைகளையும் அவர்கள் நிறைவேற்றிக் கொள்ளவும்! (ஹஜ்ஜின் அடிப்படைக் கடமையான தவாஃபை நிறைவேற்ற) பூர்வீக ஆலயமான (கஃபா எனும்) வீட்டையும் அவர்கள் (தவாஃப் செய்ய) சுற்றி வரவும்! (அல்குர்ஆன் 22:29)

தவாஃபை நிறைவேற்றி, அதற்குரிய இரண்டு ரகஅத்களை மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் தொழுத பிறகு, தமத்துஃ ஹஜ் செய்பவராக இருந்தால் ஸஃபா மர்வாவுக்கிடையில் ஸயீ செய்யவேண்டும். இது ஹஜ்ஜுக்குரிய ஸயீயாகும். இதற்கு முன்னர் செய்த ஸயீ உம்ராவிற்குரியதாகும்.

(தமத்துஃ செய்பவர்) ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் ஒரு முறை மட்டும் ஸயீ செய்வது போதுமானதாகாது. (மாறாக இரண்டு ஸயீ செய்யவேண்டும்) என்பதே அறிஞர்களின் கூற்றுக்களில் சரியான கூற்றாகும். ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடன் சென்ற தனது ஹஜ் பயணத்தைப் பற்றிக் கூறும் போது :

. . எவருடன் பலிப்பிராணி உள்ளதோ அவர் தனது ஹஜ்ஜுடன் உம்ராவையும் இணைத்து (கிரானாக) தல்பியா கூறிக்கொள்ளட்டும்! பிறகு அவ்விரண்டிலிருந்தும் (10-ம் நாளன்று) ஹலாலாகும் வரை அவர் இஹ்ராமைக் களையக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதனடிப்படையில் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டியவர்கள் கஃபாவை தவாஃப் செய்து ஸஃபா, மர்வாவுக்கிடையில் ஸயீ செய்தார்கள். பிறகு இஹ்ராமைக் களைந்துவிட்டார்கள். அதன்பின் மினாவிலிருந்து திரும்பிய பிறகு ஹஜ்ஜுக்காக மற்றொரு முறை தவாஃப் சுற்றினார்கள். . . என்று கூறினார்கள். (நூற்கள் : புகாரீ, முஸ்லிம்)

உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்தவர்களின் ஹஜ் செய்முறைகளை கூறிவந்த ஆயிஷா (ரலி) அவர்கள், அதன்பின் மினாவிலிருந்து திரும்பிய பிறகு ஹஜ்ஜுக்காக மற்றொரு முறை தவாஃப் சுற்றினார்கள். . என்று கூறியுள்ளார்கள். இங்கு அவர்கள் தவாஃப் என்று கூறியது, ஸஃபா, மர்வாவுக்கிடையில் சுற்றியதையே கருத்தில் கொண்டு கூறியுள்ளார்கள் என்பதே இந்த ஹதீஸின் விரிவுரையின் கூற்றுக்களில் மிகச் சரியான கூற்றாகும்.

மற்றொரு முறை தவாஃப் செய்தார்கள் என்ற வார்த்தையை தவாஃபுல் இஃபாழாவை கருத்தில் கொண்டே கூறியுள்ளார்கள் என்று கூறுவோரின் கூற்று சரியானதல்ல. ஏனெனில் தவாஃபுல் இஃபாழா என்பது (மூன்று வகை ஹஜ்ஜில் எதனைச் செய்தாலும்) அனைவரும் நிறைவேற்ற வேண்டிய அடிப்படைக் கடமையாகும். அதனை அவர்கள் அனைவரும் நிறைவேற்றி யுமிருந்தனர்.

எனவே ஆயிஷா (ரலி) அவர்கள் தனது இவ்வார்த்தையின் மூலம் தமத்துஃ செய்பவர்கள் மட்டும் பிரத்தியேகமாக நிறைவேற்றிய ஒன்றை கூற நினைத்துள்ளார்கள். அது: மினாவிலிருந்து திரும்பிய பிறகு ஹஜ்ஜை முழுமையாக்கு வதற்காக மற்றொரு முறை ஸஃபா, மர்வாவுக்கிடையில் ஸயீயிக்காகச் சுற்றினார்கள் என்பதே! -இறையருளால்- இதுவே மிகத் தெளிவானதும் அறிஞர்களில் பெரும்பாலானோரின் கூற்றுமாகும்.

இக்கருத்தே சரியானது என்பதை -அறிவிப்பாளர் வரிசையுடன்- பாடத் தலைப்பாக புகாரியில் இடம்பெற்றுள்ள இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றும் உறுதிப்படுத்துகிறது :

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் தமத்துஃ ஹஜ் பற்றி வினவப்பட்டது. அதற்கவர்கள், ஹஜ்ஜத்துல் விதாவில் முஹாஜிர்களும் அன்ஸாரிகளும் நபி (ஸல்) அவர்களின் மனைவியரும் இஹ்ராம் அணிந்திருந்தார்கள். நாங்களும் இஹ்ராம் அணிந்திருந்தோம். நாங்கள் மக்கா வந்தடைந்ததும் பலிப்பிராணியை -தன்னுடன் கொண்டுவந்து, அதனை ஹரமில் அறுப்பதற்கு அடையாளமாக அதன் கழுத்தில் எதையேனும்- தொங்கவிட்டவர்களைத் தவிர மற்றவர்கள் ஹஜ்ஜுக்காக அணிந்த இஹ்ராமை உம்ராவிற்காக மாற்றிக் கொள்ளுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே நாங்கள் தவாஃப் செய்து, ஸஃபா மர்வாவை ஸயீ செய்து . . உம்ராவை நிறைவேற்றினோம். பிறகு இல்லறத்தில் ஈடுபட்டோம், (தைக்கப்பட்ட) ஆடைகளை அணிந்தோம்.

பலிப்பிராணியின் -கழுத்தில் அடையாளத்தைத்- தொங்க விட்டவர், அப்பிராணி அதன் இடத்தை அடையும் வரை -அது அறுக்கப்படும் வரை- அவர் இஹ்ராமைக் களையக் கூடாது என்றும் கூறினார்கள்.

பிறகு எட்டாம் நாள் இரவு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து கொள்ள கட்டளையிடப்பட்டோம். இவ்வாறு வழிபாடுகளை நிறைவேற்றிய பிறகு -மக்காவிற்கு- வருகை தந்து கஃபாவை தவாஃப் செய்தோம். ஸஃபா, மர்வாவிற்கிடையில் ஸயீ செய்தோம்.

இச்செய்தியின் வாயிலாக, தமத்துஃ செய்பவர் இரண்டு ஸயீ செய்யவேண்டும் என்பது மிகத் தெளிவாகிறது. - அல்லாஹ் மிக அறிந்தவன் -

நிச்சயமாக நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் ஸஃபா, மர்வாவிற்கிடையில் முதலாவதாக ஒருமுறை சுற்றியதைத் தவிர (பிறகு) சுற்றவில்லை என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் முஸ்லிமில் இடம்பெற்றுள்ளது. இது தங்களுடன் பலிப்பிராணியைக் கொண்டுவந்த நபித் தோழர்களின் செயல்களைப் பற்றிய செய்தியாகும். ஏனெனில் அவர்கள் ஹஜ், உம்ரா இரண்டிலிருந்தும் -10-ம் நாள்- இஹ்ராமைக் களையும் வரை நபி (ஸல்) அவர்களுடன் இஹ்ராமோடு இருந்தனர். நபி (ஸல்) அவர்களும் ஹஜ்ஜுக்காகவும் உம்ராவிற்காகவும் (கிரானாக) இஹ்ராம் அணிந்திருந்தார்கள். பலிப்பிராணியைக் கொண்டுவந்தவர்கள் ஹஜ்ஜுடன் உம்ராவிற்கும் (கிரானாக) தல்பியாக் கூறிக் கொள்ளுமாறும் அவர்கள் (10-ம் நாளன்று) இரண்டிலிருந்தும் ஒன்றாக இஹ்ராமைக் களையும் வரை -அதற்கு முன்னர்- இஹ்ராமைக் களையக் கூடாது என்றும் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள்.
ஹஜ்ஜையும் உம்ராவையும் ஒன்றாக இணைத்து (கிரானாக) ஹஜ் செய்பவர் ஒரு முறை மட்டும் ஸயீ செய்யவேண்டும் என்பதையே மேற்கூறப்பட்ட ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸும் பிற ஸஹீஹான ஹதீஸ்களும் அறிவிக்கின்றன.

இதுபோன்றே (இஃப்ராத் முறையில்) ஹஜ் மட்டும் செய்பவரும் 10-ம் நாள்வரை இஹ்ராமுடனே இருந்து, ஒரு முறை மட்டுமே ஸயீ செய்யவேண்டும். கிரான் ஹஜ் செய்பவரும் இஃப்ராத் செய்பவரும் மக்கா வருகை தந்தவுடன் செய்த தவாஃபுக்குப் பிறகு ஸயீ செய்திருந்தால் தவாஃபுல் இஃபாழாவுக்குப் பிறகுள்ள ஸயீக்கும் அதுவே போதுமானதாகிவிடும்.

இதுவே ஆயிஷா (ரலி) மற்றும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இரு ஹதீஸ்களையும் மேற்கூறப் பட்டுள்ள ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸையும் ஒன்றிணைக்கும் முடிவாகும். இதன் மூலம் ஹதீஸ் களுக்கிடையில் தென்படும் முரண்பாடுகள் நீங்கி, அனைத்து ஹதீஸ்களின் அடிப்படையில் செயல்படவும் முடியும்.

இவ்வொருங்கிணைப்பை உறுதிப்படுத்தும் மற்றொரு விஷயம் யாதெனில் ஆயிஷா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகிய இருவர் அறிவிக்கும் ஹதீஸும் ஸஹீஹான ஹதீஸ்களாகும். இவ்விரண்டும் தமத்துஃ செய்பவர் இரண்டு ஸயீ செய்ய வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் மேலோட்டமாக அதனை (ஸயீயை) மறுக்கிறது. சட்டக்கலையிலும் ஹதீஸ்கலையிலும் பின்பற்றப்படும் விதிகளில், செய்யவேண்டியதில்லை என்பதை விட செய்யவேண்டும் என்று வந்துள்ள கூற்றுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும்.

அல்லாஹ்வே சரியான கூற்றிற்கு வழிகாட்டுபவன். அல்லாஹ்வைக் கொண்டே தவிர (தீமையை விட்டும்) விலகவோ, (நன்மையைச் செய்ய) சக்தி பெறவோ முடியாது.

 

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்