Index

21. நோன்பு திறக்க வைப்பதின் சிறப்புகள்


1) யார் ஒருவரை நோன்பு திறக்க வைக்கின்றாரோ நோன்பு நோற்றவருக்கு கிடைக்கும் நன்மையைப் போன்றே (ஒரு பங்கு) அவருக்கும் கிடைக்கும். அதனால் நோன்பு நோற்றவரின் நன்மையிலும் எதுவும் குறையாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ


விளக்கம்: நோன்பு திறக்க வைப்பது சிறந்த அமலாகும். நோன்பு திறக்க வைப்பதென்பது பெரிய அளவுக்கு உணவளிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஒரு போPத்தம் பழத்தைக் கொடுத்து நோன்பு திறக்க வைத்தாலும் இந்த நன்மை கிடைத்துவிடும். ஒவ்வொருவரும் அவரவரின் வசதிக்கு ஏற்றவாறு செய்து கொள்ளலாம்.

 

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்