Index |Subscribe mailing list | Help | E-mail us

என் வீட்டுத் தோட்டத்தில்

M.ஜமீலா B.A (Arabic), அஸ்மா அரபி கல்லூரி, ஏர்வாடி

 

ஒவ்வொரு மனிதனுள்ளும் புதைந்து கிடக்கின்ற அறிவு பொக்கஷத்தைப் பற்றி பலர் அறிவதே இல்லை தன்னுள் புதைந்து கிடக்கும் இந்த அறிவை ஒருவன் பயன்படுத்த ஆரம்பித்து விட்டான் என்றால் இந்த கணம் வரை அவனுக்கு எது விளங்காத அற்புதமாக இருந்ததோ. புரியாத புதிராக இருந்ததோ அவை அனைத்தும் விளங்கிவிடும்.


இறைவன் இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு பொருளையும் மனிதர்களுக்கு பயன்பெறும் வகையில்தான் படைத்துள்ளான். அதில் ஒன்றுதான் இயற்கை. இதில் பல அற்புதங்களும் பயன்களும் உள்ளன. இறைவன் நமக்கு பரிசாக அளித்த இந்த இயற்கையைப் பற்றி சிந்திக்காமல் தன் அறிவை கொண்டு அதனை மென்மேலும் வளர்ச்சியடையச் செய்யாமல் அழித்து விடுகின்றனர், தனால் வரும் பாதிப்புக்களை சிந்திக்காமல்.


இறைவன் இவ்வுலகில் உள்ள அனைத்தையும் சிந்தித்து புரிந்து செயல்படக் கூறுகிறான் நீங்கள் சிந்தித்து புரிந்து கொள்ள வேண்டாமா-அல்குர்ஆன்-2.44


நாம் உட்கொள்ளும் பொருட்களில் 80% காற்றாகவே இருக்கிறது. ஒரு சராசரி மனிதன் காற்றை உட்கொள்வதற்கு ஏறத்தாழ 22,000 முறை தினமும் சுவாசிக்கிறான். மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு மிகவும் தேவையான காற்றில் இன்று பல விதமான நஞ்சுப் பொருட்கள் கலந்துவிடுகின்றன. இதனால் மனிதர்களுக்கு பல வகையில் கெடுதிகளே அதிகமாக காணப்படுகிறது. தூய்மையான காற்றை மனிதன் சுவாசிக்க தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன்டைஆக்ஸைடை எடுத்துக் கொண்டு ஆக்ஸிஜனை காற்றில் கலந்து விடுகிறது.

இன்னும் மனிதன் உயிர்வாழ நெருப்பும் அவசியம். நெருப்புக்கு எரிபொருள் அவசியம். எந்தவகை எரிபொருளானாலும் அதன் மூலம் மரத்திலிருந்தே தீ பற்றி எரிய பயன்படும்


வாயு ஆக்ஸிஜன் எரியும் புகையில் இருந்து தாவரங்கள் உயிர் வாழ தேவைப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு ஆக்ஸிஜனை வெளியிட்டு நெருப்பு எரிய பயன்படுகிறது.


இதை பற்றி இறைவன் கூறுகிறான்,


நீங்கள் மூட்டுகின்ற நெருப்பைக் கவனித்தீர்களா?அதன் மரத்தை நீங்கள் உற்பத்தி செய்கின்றீர்களா? அல்லது நாம் உற்பத்தி செய்கின்றோமா? அல்குர்ஆன் -56:71-72


வண்ணங்களுக்கும் வாழ்கைக்கும் எண்ணங்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் உடல்நிலை மனநிலை செயல்பாடு முதலியவற்றில் நிறங்கள் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று இன்றைய அறிவியல் கூறுகிறது. இந்நிறத்தைப் பற்றி இறைவன் கூறுகிறான்,


பூமியில் உங்களுக்காகப் பல்வேறுபட்ட நிறங்கள் கொண்ட பொருட்களை அவன் படைத்திருக்கின்றான் இவை அனைத்திலும் திண்ணமாக படிப்பினை பெறும் மக்களுக்கு அரியசான்று உண்டு-இதை பற்றி இறைவன் கூறுகிறான் - அல்குர்ஆன்-25.45

னவே நிறம் என்பது நிழல் அல்ல. அது ஒரு நிஜம். இயற்கையில் இறைவன் படைத்த தாவரங்களின் பச்சை நிறமானது ஒருவருக்கு பிடித்தால் அவர் ஆற்றல் மிக்கவர் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். தூக்கம் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் இலையின் பச்சை நிறம் தூக்கத்தைப் போக்கி உற்சாகப்படுத்துகிறது. அலுவலக அறைகளுக்கும் படிக்கும் அறைகளுக்கும் பச்சை மற்றும் நீல நிறங்கள் உகந்தவை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இதே போல் நீல நிறம் ரத்த அழுத்ததையும் இதய துடிப்பின் வேகத்தையும் தசை இறுக்கத்தையும் தனிக்கிறது. சிவப்பு நிறம் திசுக்களை சூடாக்குதல் ஹார்மோன் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது என்று பல நிறங்களுக்கு விளக்கம் தருகின்றனர். இதனடிப்படையில் பல வண்ண மலர்கள் மற்றும் செடி கொடிகளின் நிறங்கள் கண்ணை கவர்வதுடன் மனதுக்கு அமைதியையும் ஆரோக்கியத்தையும் தருகிறது.

நிழலின் அருமை வெயிலுக்கு போனால்தான் தெரியும் என்பார்கள். ஆம், மர கிளைகளின் நிழல்களும் மனிதர்களுக்கு பயனளிக்கிறது. ஒசோன் படலத்தின் தென்துருவத்தில் முதன் முதலில் ஒட்டை கண்டு பிடிக்கப்பட்டது. இப்போது வட துரவத்திலும் ஒசோன் படலம் பாதிக்கப்படும் நிலையில் இருக்கிறது. இதன் மூலம் புற ஊதா கதிர்கள் அவ்வோட்டையின் வழியாக பொழிவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். இதன் மூலம் மனிதர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். இத்தகவல்களை அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான HER வெளியிட்டுள்ளது.

டென்மார்க் நாட்டின் சுற்றுச் சூழல் அமைச்சகம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. சிலி நாட்டு மக்கள் தம் குழந்தைகளை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலில் அலையாமல் தடுத்து விடுகிறார்கள். நியூஸிலாந்தில் பள்ளிக் குழந்தைகள் தொப்பிகளை அணியுமாறும் சாப்பாட்டு வேளைகளில் மரநிழலில் அமருமாறும் வலியுறுத்தப்படுகிறார்கள்.


இந்நிழலை பற்றி இறைவன் கூறுகிறான்.


உம்முடைய இறைவன் எவ்வாறு நிழலை விரிக்கிறான் என்பதனை நீர்பார்க்கவில்லையா?

மரங்களை வளர்ப்பதால் நிலசரிவு ஏற்படுவதை தடுக்கலாம். சில மரங்களில் உள்ள பொட்டாசியம் மண்ணிலும் கலந்து மண்ணின் சத்துக்களை அதிகரித்து வேறு பல தாவரங்கள் வளர உதவுகிறது. மலை மேகங்களை குளிச்சியாக்கி மலை பேய உதவுகின்றது. இன்னும் இதனைப் போன்று மனிதர்களுக்கு பல வகைகளில் இயற்கை மனிதர்களுக்கு பயன்தரக்கூடியதாக இருக்கிறது. முழு அளவில் தனக்கு பயன்தரக் கூடிய ஒன்றை அறிவுப்பூர்வமாக சிந்தித்து அதனின் இயற்கைத் தன்மைகளோடு வளர்க்காமல் நம் நாட்டில் பயிர்கள் விரைவில் மகசூல் பெற்று நல்ல லாபம் தர வேண்டும் என்று செயற்கையான முறையில் பல பூச்சிக்கொல்லி மருந்துகளை மரங்களுக்கு உரமாகவும், பழங்களை செயற்கை முறையில் ஊசிகள் மூலமாகவும், பல வழிகளின் மூலமாகவும் கனிய வைக்கிறார்கள். இதன் மூலம் பயிர்கள் பழங்களில் உள்ள இயற்கையான சத்துக்கள் அழிந்து விடுகின்றன.

பயிர்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள இயற்கையான சத்துடன் உட்கொண்டதால்தான் உடல் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் நமது முன்னோர்கள் வாழ்ந்தார்கள். ஆனால் இன்று 10, 15 வயதுகளிலேயெ பல வித நோய்களுக்கு ஆளாகின்றார்கள். காரணம் நாம் சாப்பிடும் உணவுகளில் உடலுக்கு கேடு தரும் பல வேதிப் பொருட்களை கலப்படம் செய்கிறார்கள். உதாரணத்திற்கு பருப்பு மற்றும் கொள் போன்ற தானிய வகைகளை பாதுகாக்கும் கிடங்குகளிலும் அதனை Pack செய்யும் இடங்களிலும் எலிகள் வராமல் இருக்க எலி மருந்துகளை அடிக்கிறார்கள்.

இவைகள் தானியங்களிலும் படுவதால் மனிதர்களுக்கு பல வகையில் தீங்குகளை உண்டாக்குகிறது ஆகவே அதனை நன்றாக கழுவி உபயோகிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

நம் நாட்டில்தான் இயற்கையான உரம் தயாரிக்கப்படுகிறது. இதனின் மகிமையை உணர்ந்த மேலை நாட்டவர்கள் வாங்கிச்சென்று பயன்பெறுகின்றனர். நம் நாட்டில் சில இடங்களில் இயற்கையை சிரழிக்கும் வேளைகளை பார்க்கும் போது மனம் வேதனையடைகிறது.

இவ்வாறு பல வழிகளில் ஆரோக்கியங்களை தரும் தாவரங்களை அதனின் இயல்பான தன்மையோடு ஒவ்வொரு மனிதனும் அனுபவிக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு வீடுகளிலும் பசுமையான தோட்டங்களை உருவாக்க வேண்டும். இதற்கு இயலா விட்டால் சில வகை செடி கொடிகளையாவது வளர்க்க வேண்டும். வீடு குடும்ப உறுப்பினர்களின் அன்பையும் பாசத்தையும் அதிகரிக்கச் செய்யும் ஒரு கலைகூடம். அங்கே நாம் மனம் விட்டுப் பேசும் சுதந்திரத்தையும் மனதை சந்தோஷப்படுத்தும் சூழ்நிலையையும் பெண்களால்தான் உருவாக்கமுடியும். இதற்கு முக்கிய காரணம் அவர்களின் கலையார்வமும் ரசனையும்தான். இவை இரண்டும் ஒன்றிணைத்தால் குடிசையை கூட வசந்த மாளிகையாய் உருவாக்க முடியும்.

இறைவன் கூறுகிறான்.


உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான்- அல்குர்ஆன்-16.80


மேற்கண்ட வசனத்தில் இறைவன் கூறிய நிம்மதியை நாம் தக்கவைத்துக் கொள்வது நம் கையில்தான் உள்ளது.

பெண்களே! உங்கள் வீடுகளில் சிறிய இடங்கள் இருந்தால் அதில் புதினா கொத்தமல்லி இலை கறிவேப்பிலை கீரை வகைகள் போன்ற சத்துமிக்க செடிகளை பயிரிடலாம். பெரிய இடமாக இருந்தால் வாளைமரம் தென்னை மரம் போன்ற மரங்களை நடலாம் பயிரிடும் முன் அதில் எவ்வகையான சத்துக்கள் உள்ளன என்று தெரிந்து வைப்பது அறிவுப்பூர்வமானது உதாரணத்திற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் கொத்த மல்லி புதினா இலையில் ஜீரணசக்தி உள்ளது. கருவேப்பிளையில் விட்டமின் A சத்து உள்ளது. முள்ளங்கியில் இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஆற்றல் உள்ளது. புடலங்காயில் நோய் எதிர்ப்பு சக்தியும் உடல் எடையை குறைத்தல் நார்சத்து கொழுப்பு சத்துக்கள் உள்ளன. இது சர்க்கரை நோயாளிக்கு ஏற்றது. மேலும் இரத்த குழாயில் இரத்தம் உரையாமல் செயல்படுத்தும் ஆற்றல் உள்ளது. எல்லா வயதினருக்கும் இது ஏற்றது தக்காளியில் -விட்டமின் A சத்து உள்ளது.

பீட்ரூட் - இது Tonic-கிற்கு சமமானது. மாவுசத்து புரோட்டின் சுண்ணாம்பு சத்து கால்சியம் இரும்புசத்துக்கள் உள்ளன.

காளிபிளவர் - இதில் விட்டமின் C உள்ளது. இது நகம், திசுக்கள், முடிகளை நன்றாக வளர உதவுகிறது.


பாற்காய் - இதில் விட்டமின் A,B,B2,C உள்ள.


கோஸ் - உடல் எடையை குறைக்கும், விட்டமின்-C, B.complex நார்சத்து, பொட்டாசியம் உப்பு, பாஸ்பரஸ் நிறைந்தது. இது மூளையை சுறுசுறுப்பாக வைக்க உதவும்.

கீரை வகைகளில் பசளைகீரைகளில் கண்பார்வையை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது.


ஆரஞ்சி பழத்தில் கால்சியம் விட்டமின் C உள்ளது. Folic அமிலத்தை அதிகரிக்க உதவும்.


வாழைமரம் தென்னைமரம் இதில் உள்ள அனைத்தும் பயளிப்பவையாகும். வாழைப்பழம் நரம்பு-மூளை சுறுசுறுப்பாக செயலாற்ற பெரும் பங்கு வகிக்கிறது. தேங்காய் ஞாபக சக்கியை அதிகரிக்கும். இது போன்று நாம் சாப்பிடும் காய்கறிகள் பழங்கள் தாணிய வகைகளின் சத்துக்களை பெண்கள் தெரிந்துவைத்திருந்தால் தன் குடுப்பத்தார்களை இயற்கையான உடல் ஆரோக்கியத்துடன் வைத்திருக்கலாம். செடிகளை வளர்க்கும் போது அதனை பிளாஸ்டிக் தொட்டியில் வைக்காமல் மண்தொட்டியில் வைப்பது சிறந்தது. மண் ஈரப்பதமாகவே இருக்க வேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல அளவுக்கதிகமாக தண்ணீரை ஊற்றினால் வேர் அழுகிவிடும். ஆகவே அதன் ஒரங்களில் (Sponge)  போட்டு வைத்திருந்தால் அளவான ஈரபதத்துடன் மண் இருக்கும். இதற்கு நம் வீட்டில் உபயோகிக்கும் பொருளையே அதற்கு உரமாக போடலாம். அதாவது, வடிகட்டிய டிதூள் காபிதூள் காய்கறி கறி கழுவிய தண்ணீரை அதற்கு ஊற்றினால் செடிகள் வளம்பெற்று வளரும். செடிகளை சூரிய ஒளி படும்படி வைக்க வேண்டும் குழந்தைகளை எவ்வாறு அக்கறையுடன் வளர்ப்போமோ அதனைப் போன்று செடிகளை ஆடு மாடுகள் தின்று விட வழி இல்லாமல் அதனை சுற்றி வேலிகள் அமைத்து பாதுகாப்போடு வளர்க்க வேண்டும். ரசனையோடு ஆர்வத்தோடு பூத்தொட்டிகளுக்கு காவீ நிறங்களை பூசலாம். செங்கல்களையும் ஒட்டுத் துண்டுகளையும் செடிகளின் ஒரமண்ணில் புதைத்து வைத்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

ல வண்ணமிகு செடி கொடிகளையும் மலர்களையும் வளர்ப்பதால் அமைதியான உற்சாகமான சந்தோஷத்தை தருவதோடு அல்லாமல் ஒவ்வொரு மனிதர்களின் உள்ளத்திலும் இறை உணர்வும் அதிகரிக்கும்.


அன்றியும் வானங்களையும் பூமியையும் படைத்து உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது- அல்குர்ஆன்-27.60

ம், பற்றிப்படரும் செடியினத்தையும் பூக்கொத்துகளையும் பாருங்கள். அவற்றில்தான் எத்தனை அழகு. ஒரே தண்ணீரைக் குடித்து ஒரே இடத்தில் வளரும் வேம்பும் கரும்பும் ஒன்று இனிக்கிறது ஒன்று கசக்கிறது. சில வகை பூக்களுக்கு காலையில் தான் மலர வேண்டும், சிலவை மாலையில்தான் மலர வேண்டும் என்று அவைகளுக்கு கற்று கொடுத்தது யார்? லர்களின் இதழ்களில் இருந்து வெளிவருகின்ற வித விதமான வாசனைகள் இவ்வுலகில் எதற்கும் ஈடாகாது. இன்றைக்கிருக்கின்ற மிகவும் உயர் தொழில் நுட்பத்தினால் கூட ஒரே விதமான வாசனையை உருவாக்க முடியாது. வாசனை திரவியங்களை அதிகம் தெளித்தால் அதன் வாடை கூட வெறுப்பைத் தந்து விடும். ஆனால் மலர்களை கிலோ கணக்கில் வைத்திருந்தாலும் வெறுப்பூட்டாத வாசனைகளை தரும். இம்மலர்களை நோக்கி வரும் பல வண்ண வண்ணத்துப் பூச்சிகளும் வண்டுகளும் பறவைகளும் எவ்வளவு அருமையான படைப்பு. இது ஒலி எழுப்பும் சத்தங்களோ இனிமையானது. இந்த இயற்றை சூழல்களோடு ஒன்றிணையும் போது இவை அனைத்தையும் படைத்து இயங்க வைக்கும் ஒரு சக்தி உண்டு. அது இறைவன் ஒருவனால் மட்டும்தான் முடியும் என்ற இறை உணர்வு அதிகரிக்கும்.

ஆம்! நாம் வளர்க்கும் செடி கொடிகள் கூட இறைவனை வணங்குகின்றன இதனை பற்றி இறைவன் கூறுகிறான்.

 

(கிளைகளில்லாச்)செடி கொடிகளும்(கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் (யாவும்) அவனுக்கு சுஜூது செய்கின்றன- அல்குர்ஆன்-55.6

இன்று தக்கென்று ஒரு வீடு கட்டும் போது வரவேற்பரை என்று Phone வைக்கவும் Computer, Library வைக்க என்று பல வசதிகளை மனதில் கொண்டு திட்டமிட்டு ஒவ்வொன்றாக கட்டும் மனிதன் தன் உடல் ஆரோக்கியத்திற்காகவும் மஅமைதிக்காகவும் தாவரங்களை வளர்க்க இடங்களும் காற்நோட்டமான வெளிச்சம் கிடைக்கும் படியான அமைப்புடன் கட்ட வேண்டும் என்று நினைப்பதில்லை.

மேலைநாட்டவர்கள் கூட தன் Fast food life-ஐ விட்டு இயற்கையோடு ஒன்றிணையும் போது இயற்கையோடு இருந்த நம் நாட்டவர்கள் இன்று அதனின் மகிமைகளை உணராமல் அழித்து வருகின்றனர். பெண்களும் தங்கள் கலையுணர்வுகளுக்கும் ரசனைகளுக்கும் நேரம் ஒதுக்காமல் இயந்திரத்தமாக இன்று வாழ்கின்றனர்.


னிதா! இறைவன் உனக்களித்த பரிசான இயற்கையில் தாவரங்களில் உள்ள அற்புதங்களையும் பயன்களையும் உன் அறிவை கொண்டு சிந்தித்துப்பார்! இதில் குறிப்பிடாத பல அற்புதங்கள் உனக்கு விடையாக கிடைக்கும். இதில் நீ தெளிவு பெற்றால் என் வீட்டுத் தோட்டத்திலும் பல மூலிகைகளும் செடி கொடிகளும் மலர்களும் உண்டு. அதன் மூலம் நாங்கள் இறைவனின் அருளால் நாங்கள் மன அமைதியுடன் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்கிறோம் என்று பெருமிதத்துடன் கூறலாமே!