Index |Subscribe mailing list | Send this page to your friend | Help | E-mail us

புனித ரமழான் சிறப்புப் போட்டி!

ஹிஜ்ரி 1427

 


Click here to download/read PDF file

 

بسم الله الرحمن الرحيم

 

إدارة المكتبة والإشراف الدعوى والتوجيه بالميناء
تقدم لكم مسابقة شهر رمضان المباك لعام 1427 هـ
(باللغة التاميلية)

 

SEA PORT DAWAH CENTER

 

துறைமுக அழைப்பகம்

வழங்கும்

மாபெரும் ரமழான் பரிசுப் போட்டி..!

 

 

 

முதல் பரிசு:

ஜித்தா சென்னை ஜித்தா (அல்லது) ஜித்தா கொழும்பு ஜித்தா

விமான டிக்கெட்

 

இரண்டாவது பரிசு

கம்பியூட்டர் (பென்டிம்-4)

 

மூன்றாவது பரிசு

500 ரியால் மதிப்புள்ள மொபைல் போன்

 

மற்றும்

10 ஆறுதல் பரிசுகள்

 

தொடர்புக்கு

ஹஸன் குத்தூஸ் 0507169448,        S.A.சுல்தான் 0502565509

 

 

 

கீழ்கண்ட கேள்விகளுக்கு அல்குர்ஆன் ஜூஸ்வு 28-லிருந்து (அத்தியாயம்: 58 முதல் 66 வரை) பதிலை தேர்வு செய்க.

ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஒரு பக்கத்திற்கு மிகாமல் பதில் எழுதுக.

மதிப்பெண்கள்: 3 X 15 X 45


1- 64:08 வது வசனம் ஈமான் (விசுவாசம்) பற்றி கூறுகிறது. இந்தத் தலைப்பின் கீழ் திருக்குர்ஆன்
மற்றும் நபிவழியில் எழுதுக?

2- அல்லாஹ்வின் பத்து திருப்பெயர்களைத் தொடர்ந்து கூறும் வசனங்களையும், அத்திருப்பெயர்களையும் விளக்குக.

3- 64:13 வது வசனம், இறைவனைச் சார்ந்திருப்பதை (தவக்குல்) வலியுறுத்துகின்றது. இந்தத் தலைப்பின் கீழ் சான்றுகளுடன் எழுதுக.

4- இறையச்சத்தினால் (தக்வாவினால்) ஏற்படும் பயன்களை பட்டியலிடுக.

5- அல்லாஹ்வின் அனுமதியின்றி தீங்குகள் ஏற்படுமா? இது தொடர்பான சமூக அனாச்சாரங்களைக் கூறுக.

6- நபித்தோழர்களுக்கு நாம் செய்யவேண்டிய கடமையை குறிக்கும் வசனத்தை விளக்குக.

7- இறைத்தூதரின் பணிகளை நாமும் செய்ய வேண்டும். அவைகளைப் பட்டியலிடும் வசனங்களை எழுதுக!

8- இப்றாஹீம் (அலை) அவர்கள் எந்த விஷயத்தில் நமக்கு முன் மாதிரி? எந்த விஷயத்தில் முன் மாதிரி அல்லர்.

9- ஷைத்தானுடைய கூட்டத்தாரின் அடையாளங்களை வரிசைப்படுத்துக.

10- 63-ம் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள நயவஞ்சகர்களின் அடையாளங்கள், தீய குணங்களை விளக்குக.

11- தலாக் கூறப்பட்ட பெண்ணுக்கு இஸ்லாம் வழங்கும் உரிமைகளையும், அந்த வசனங்களையும் எழுதுக.

12- உங்கள் பிள்ளைகளும், உங்கள் செல்வங்களும் சோதனைகளே! என்பதை விளக்குக.

13- அழகிய கடன் என்று அல்குர்ஆன் எதை கூறுகின்றது?

14- தவ்ராத் வேதம் வழங்கப்பட்டு அதைப் புறக்கணித்த சமூகத்துக்கு அல்லாஹ் கூறும் உதாரணம் என்ன? அதிலிருந்து நாம் பெறும் படிப்பினைகள் யாவை?

15- லிஹார் என்றால் என்ன? லிஹார் செய்ததற்குரிய பரிகாரத்தை எழுதுக.
 



கோடிட்ட இடங்களை ரியாலுஸ் ஸாலிஹீன் (ஹதீஸ் நூல்) பாகம் 1லிருந்து பூர்த்தி செய்க.

மதிப்பெண்கள்: 2 X 10 X 20



1- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், மக்களில் சிறந்தவர் எவரது .................அவரது .................. இருக்கின்றதோ அவரேயாவார். (அறிவிப்பாளர்:        நூல்:             )

2- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ................................இருக்கும் நிலையில் மரணமடைகிறவள் சுவர்க்கம் புகுவாள். (அறிவிப்பாளர்:        நூல்:             )

3- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், நிச்சயமாக வீரன் என்பவன் ................... பிறரை...................வீரன் அல்ல. (அறிவிப்பாளர்:        நூல்:             )

4- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், அநியாயமாகக் கொல்லப்படும் ஒவ்வொரு கொலையிலும் ...................க்குப் பங்கு உண்டு ஏனெனில் அவர் முதன் முதலாக கொலை செய்து வழி காட்டினார்.

(அறிவிப்பாளர்:        நூல்:             )

5- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், அல்லாஹ்வின் பாதையில், அடிமையை விடுதலை செய்வதில், ஏழைகளுக்கு தர்மம் செய்வதில், உன் குடும்பத்தார்களுக்கு செலவு செய்ததில் இந்நான்கில் மிகவும் நற்கூலி பெறுவது ..........................ஆகும்.
(அறிவிப்பாளர்:        நூல்:             )

6- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், யார் பூமியில் ஒரு சாண் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்து தன் பூமியில் சேர்த்துக் கொண்டானோ அவனுக்கு .....................அணிவிக்கப்படும்.
(அறிவிப்பாளர்:        நூல்:             )

7- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், வயது முதிர்ந்த நிலையில் தன் .............அல்லது ...............பெற்றிருந்தும் சுவனம் செல்லாத மனிதன் ............... ............... ..............அடைவானாக.

(அறிவிப்பாளர்:        நூல்:             )

8- உலகில் மற்றவர்களின் குறைகளை மறைக்கின்றவரின் குறைகளை அல்லாஹ் ............. மறைப்பான்.

(அறிவிப்பாளர்:        நூல்:             )

9- இருவருக்கிடையில் ............... செய்து வைப்பது ............. ம், தொழுவதற்காக நீர் எடுத்து வைக்கும் ஒவ்வொறு அடியும் .............. ம்.

(அறிவிப்பாளர்:        நூல்:             )

10-அல்லாஹ்வைக்கொண்டு விசுவாசம் கொண்டேன் என்று கூறுவீராக! மேலும்................. .............. ............ என்று பதில் தந்தார்கள்.

(அறிவிப்பாளர்:        நூல்:             )
 



கீழ்கண்ட கேள்விகளுக்கு ஒரே வரியில் பதில் எழுதுக.

மதிப்பெண்கள்: 1 X 25 X 25


1) பைரஹா தோட்டத்தை தர்மம் செய்த நபித்தோழர் யார்?


2) நபி (ஸல்) அவர்கள் சுவனத்தில் எந்த நபித்தோழரின் காலடி ஓசையைச் செவியுற்றார்கள்?


3) நபி மூஸா அலை அவர்கள் சென்ற பரிசுத்த பள்ளத்தாக்கின் பெயர் என்ன?


4) யஹ்யா அலை அவர்களின் தந்தையின் பெயர் என்ன?


5) இரு முறை பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் இடம் பெறும் அல்குர்ஆன் அத்தியாயம் எது?


6) நபிமார்களின் தந்தை என்று யாரைக் குறிப்பிடுகின்றோம்?


7) அபாபில் பறவைகள் எங்கு ஏன் அனுப்பப்பட்டன?


8) வத்து, ஸுவாஉ, எகூஸ், யஊக், நஸ்ர் போன்றவர்கள் யாவர்?


9) நபி (ஸல்) அவர்களைப்பற்றி முன்னறிவிப்பு செய்துள்ள இந்து வேதம் எது?


10) உலகிலேயே அதிக அளவு இரப்பர் உற்பத்தி செய்யும் நாடு எது?


11) இந்தியாவின் அதிக மக்கள் தொகை உள்ள நகரம் எது?


12) இறைவன் எதை முதலில் படைத்தான்?


13) சர் சையத் அஹ்மத் கான் அவர்களால் தொடங்கப்பட்ட இந்தியப் பல்கலைக் கழகம் எது?


14) சுவனத்தின் தலைவி என்று நபி (ஸல்) யாரைக் குறிப்பிட்டார்கள்?


15) தானியம் கெடாமல் இருக்க ஒரு வழிமுறையை அல்குர்ஆன் கூறுகின்றது. அந்த அத்தியாயம் வசன எண்ணை குறிப்பிடுக!


16) கடமையான தொழுகைகளுக்குப் பிறகு சிறந்த தொழுகை எது?


17) பெண்களை ஆட்சித் தலைவிகளாகத் தேர்ந்தெடுத்த சமூகங்களின் நிலை என்னவாகும்?


18) பைத்துல் முகத்தஸில் தொழுதால் எவ்வளவு நன்மை கிடைக்கும்?


19) ஈமானின் கிளைகள் பல, அதில் முதலாவதும் கடைசியானதும் என்ன?


20) தொழுகையில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நிலை எது?


21) மனித உடலில் ஓய்வே எடுக்காமல் தொடர்ந்து உழைக்கும் இரண்டு உறுப்புகள் யாவை?


22) இஸ்லாமிய சட்டவியலின் அடிப்படைகள் என்ன?


23) உண்மையான வெற்றி எது? எப்போது?


24) மறுமையில் திவாலாகக்கூடியவன் யார்?


25) ஒரே நாளில் பல நோன்புகளின் பயனைப்பெற முடியும். அது எவ்வாறு?



கீழ்கண்ட கேள்விகளுக்கு பதிலை தேர்வு செய்து எழுதுக.

மதிப்பெண்கள்: 1 X 10 X 10


1- ஜன்னத்துல் பக்கீயில் முதல் முதலாக அடக்கம் செய்யப்பட்ட நபித்தோழர் யார்?
(அ) உஸ்மான் பின் மஸ்வூன்(ரலி)

(ஆ) ஹம்ஸா(ரலி)

(இ) உஸ்மான் இப்னு அப்ஃபான்(ரலி)

2- நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்ட ஆண்டு எது?
(அ) ஹஜ்ரி 10

(ஆ) ஹிஜ்ரி 03

(இ) ஹிஜ்ரி 08

3- நபி (ஸல்) அவர்கள் தாயிஃப் நகருக்குச் செல்லும் போது அவர்களுடன் சென்ற நபித்தோழர் யார்?
(அ) ஜைத் பின் ஹாரிதா(ரலி)

(ஆ) அபூபக்கர்(ரலி)

(இ) உமர்(ரலி)

4- யா அய்யுஹன் நபி! (நபியே!) என்று அல்குர்ஆனில் எத்தனை தடவை அழைக்கப்படுகின்றன?
(அ) 04 தடவை

(ஆ) 11 தடவை

(இ) 13 தடவை

5- நபி (ஸல்) அவர்கள் முதல் முதலாவதாக வணிகப்பயணம் செய்த நாடு எது?
(அ)சிரியா (ஆ)அபிசீனியா (இ)யமன்

6- பக்கா உம்முல்குரா இந்த நகரின் மறு பெயர் என்ன?
(அ) மக்கா

(ஆ) மதீனா

(இ) ஜித்தா

7- அதிகமான ஹதீஸ்களை அறிவித்த நபித்தோழியர் யார்?
(அ) கதீஜா(ரலி)

(ஆ) ஜைனப்(ரலி)

(இ) ஆயிஷா(ரலி)

8- இம்மலையில் தான் நூஹ் (அலை) அவர்களின் கப்பல் ஒதுங்கியதாக குர்ஆன் கூறுகிறது!
(அ) தூர் ஸினாய் மலை

(ஆ) ஜபலுன் நூர்

(இ) ஜூதி மலை

9- தனது சகோதரர்களால் கிணற்றில் வீசப்பட்ட இறைத்தூதர் யார்?
(அ) அய்யூப் (அலை)

(ஆ) யூசுப் (அலை)

(இ) இல்யாஸ் (அலை)

10-எத்தகைய துக்க நிலையிலும் கீழே இறக்கப்படாத நாட்டின் கொடி எது?
(அ) கத்தர்

(ஆ) குவைத்

(இ) சவூதி அரேபியா


நிபந்தனைகள்


1. ஆண். பெண் இருபாலரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.


2. விடைகள் சொந்த முயற்ச்சியாக இருக்க வேண்டும்.


3. கேட்கப்பட்ட அத்தியாயத்திலிருந்து மட்டுமே விடைகள் எழுதப்பட வேண்டும்.


4. அத்தியாயத்தின் பெயர் மற்றும் வசனத்தின் எண்களை குறிப்பிட வேண்டும்.


5. உங்கள் பெயர் மற்றும் முவரியை விடைகளைக் கொண்டு வரும் கவரில் மட்டுமே எழுதவேண்டும்.


6. விடைகள் எழுதும்போது வலதுபுறம் சிறிது இடம் விட்டு எழுதவும்.


7. ரமழான் பிறை 20க்குப் பின் வரும் பதில்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.


8. விடைகளை இமெயிலில் அனுப்ப
seaportdawah@gmail.com


9. ஆலிம்கள் மற்றும் தாஃவா சென்டரில் பணியாற்றக் கூடியவர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.


10. ஆசிரியர் குழுவின் முடிவே இறுதியானது.


11. பரிசு வழங்கும் இடம் நாள் பின்னர் அறிவிக்கப்படும். (இன்ஷா அல்லாஹ்)

 

12. விடைகளை பின் வரும் இடங்களில் கொடுக்கவும்.


 

செனாய்யா

சகோ. இப்றாஹீம் மதனீ (இஸ்லாமிக் சென்டர்)

0506625229

பலத்

 

சகோ. அதிரை நெய்னா (அஜ்வா)

0501260928

சகோ. ஷாகுல் ஹமீது (ICS கார்கோ அல்பைக் பின் புறம்)

6477630

பக்ஃதாதிய்யா

சகோ. ஹூசைன் (ICS கூரியர்)

6458514

துறைமுகம்

துறைமுக அழைப்பகம்

6471200  Ext.:4446

ஷரபிஃய்யா

சகோ. அப்துல் அஜீஸ்

0508673796

இந்தியாவில் (தமிழகத்தில்) ஈமெயில் வசதி இல்லாதவர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

மாபெரும் ரமழான் பரிசுப் போட்டி!
இந்தியன் கூரியர் சர்வீஸ்
எண்: 80, தேவராஜன் தெரு,
ராயப்பேட்டை, சென்னை-14. போன்: 52060770

 

 

அன்புடன்:

SEA PORT DAWAH CENTER

JIP. POST BOX: 9285, JEDDAH: 21188

Tel: 6471200 Ex: 4446. FAX Ext: 4420.

Email: seaportdawah@gmail.com