|
ஜித்தா,
துறைமுக அழைப்பகம் நடத்திய 1427-ம் ஆண்டு
புனித ரமழான் சிறப்புப் போட்டியில் சவுதி அரேபியாவின் அனைத்து பகுதி
மற்றும் இந்தியா, ஃபிரான்ஸ், மலேசியா, போன்ற
இன்னும் பல நாடுகளில் இருந்து சகோதர சகோதரிகள்
ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர்.
அப்போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி
12-01-2007
வெள்ளிக்கிழமை
மாலை துறைமுகம் ஜி.சி.டி கேம்ப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.
பரிசு பெற்றவர்களின் விவரம்:
முதல் பரிசுகுரியவர்
சவூதி அரேபியா ஜித்தா சவூதி ஓஜர்
கம்பெனியில் பணியாற்றும் நெல்லை மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த
சகோதரர் முஹம்மது ஷாகுல் ஹமீது என்பவர் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு
ஜித்தா-சென்னை-ஜித்தா விமான டிக்கெட்டுக்கான தொகை 2,000 சவூதி ரியால்
வழங்கப்பட்டது.
இரண்டாவது பரிசுகுரியவர்
சவுதி அரேபியா அல்ஜூபைலில் பணியாற்றும் திருச்சி பெரம்பலூரைச்
சேர்ந்த சகோதரர் ஜெய்னுத்தீன் என்பவர் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு
கம்பியூட்டர் (பென்டியம்-4)க்கான
தொகை 1,200 சவூதி ரியால் வழங்கப்பட்டது.
மூன்றாவது பரிசுகுரியவர்
தமிழகத்தின் கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த சகோதரி முஹம்மது ஜமீஷா
என்பவருக்கு
Nokia-6020
மொபைல் போன் அனுப்பிவைக்கப்படும்.
முதல் நிலை ஆறுதல் பரிசுகுரியவர்கள் (ஐந்து)
சகோதரர் அமானுல்லாஹ் (கோவை)
சகோதரர் கே.எம்.முஹம்மது (கோவை)
சகோதரரி சாலிஹா பானு (ஜித்தா)
சகோதரி நர்கீஸ் பானு (காரைக்கால்)
சகோதரரி உம்மு செய்த் (யான்பு)
ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டது.
இரண்டாவது நிலை ஆறுதல் பரிசுகுரியவர்கள் ஐந்து
சகோதரி உம்மு ஷூஅய்பு (யான்பு)
சகோதரர் முஜாஹிதா அல்மாஸ் (நாகப்பட்டிணம்)
சகோதரரி பஃஹிமா கதீஜா (ஜித்தா)
சகோதரர் காஜா ஹூசைன் (கோவை)
சகோதரரி ஆய்ஷா சதக்கத்துல்லாஹ் (தம்மாம்)
ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டது.
இரண்டாவது நிலை ஆறுதல் பரிசுகுரியவர்கள் 11 நபர்கள்
சகோதரி பீமா பீவி (ஜித்தா)
சகோதரர் நவ்ஷாத் (செனாய்யா ஜித்தா)
சகோதரி உம்மு அனஸ் (ஜித்தா)
சகோதரர் ஹபீப் முபாரக் அலி (ஜித்தா)
சகோதரரி உம்மு சல்மா முஹம்மது அலி (ஜித்தா)
சகோதரர் அல்அமீன் (சியான்கோ டிபிஎ ஜித்தா)
சகோதரரி சமீமா அஸ்லம் (ஜித்தா)
சகோதரி உம்மு ஷரீகா (ஜித்தா)
சகோதரர் மீரான் முஹைதீன் (ஜித்தா)
சகோதரர் முஹம்மது இப்றாஹீம் (ஜித்தா)
சகோதரி ஜெய்னப் ஸாலிஹ் (ஜித்தா)
சகோதரர் அஹ்மத் கமால் (ஜித்தா)
சகோதரி பாஃத்திமா மஹ்ஜாதீன் (காயல்பட்டினம்)
சகோதரி ராபியா பஃத்தூல் (காயல்பட்டிணம்)
ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டது.
தமிழகத்தைச்
சேர்ந்த சகோதர சகோதரிகளுக்கு உரிய பரிசுகளை ஹஜ்
பயணம் வந்திருக்கும் சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் மூலமாக
அனுப்பி வைக்கப்படும். (இன்ஷா
அல்லாஹ்)
மேலும் பரிசு வழங்கிய தினத்தன்று மார்க்க சொற்பொழிவு நிகழ்சிக்கு
ஏற்பாடு செய்யப்படிருந்தது. அதில் ஜிசிடி
கேம்ப் பள்ளி இமாம் மௌலவி முஹம்மது பஷீர் மன்பஈ அவர்கள் தலைமை தாங்கி
இறைநேசம் என்ற தலைப்பிலும், சகோதரர் கோவை A.M.G.மசூது
அவர்கள் "உண்மையே உயர்வு தரும்"
என்ற தலைப்பிலும், மௌலவி, உமர் ஷரீஃப் காசிமி அவர்கள்
அறிவுப்புரட்சியில் நபித்தோழர்கள் என்ற தலைப்பிலும், சகோதரர் கோவை
அய்யூப் அவர்கள் ஹஜ்ஜூக்குப்பின் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
ஜித்தா மாநகர் தழுவிய இலங்கை, இந்திய தமிழ் பேசும் சகோதரர்கள் கலந்து
கொண்டு பயன்பெற்றனர்.
|