Index |Subscribe mailing list | Help | E-mail us

 

ஷேக் அப்துல்காதர்

என் கண்கள் சுமந்த கனவுகளெல்லாம்...

 

என்னை தழுவிக் கொண்ட
நிராசைகளுக்கு மத்தியில்...
என் இதயத்தின்
மூலை முடுக்குகளிலெல்லாம்!...
சிந்திக் கிடப்பது
சோகமும் துக்கமும் தான்!

கல்யாணமான
தோழிகளையெல்லாம்
பார்க்கும் போது!
என்னை அறியாமலேயே
என் கண்களில் துளிர்த்துவிடும்
கண்ணீர் துளிகள்

என் அகராதித் தாள்களில்
மனக்கோலம் என்ற
வார்த்தை மட்டும்
மங்கலாய்த் தெரிவதேன்?!

பெண் பார்க்க வந்த
கோழைகளெல்லாம்...
"பொன்" பார்த்துச்
சறுக்கி விழுவதேனோ...??

வேதம் கற்றவர்களும் கூட
பொருளாதாரம் எனும்போது..
பேதம் பார்ப்பதுதான்
கொடுமையிலும் கொடுமை!

'கல்யாணப்" பருவம்
எய்திவிட்டால்...
மார்க்கத்தை மறந்துவிட்டு
மணாளர்களெல்லாம்
பணாளர்களாய் பரிணாமம் அடைவதேன்...??