Index |Subscribe mailing list | Help | E-mail us

 

ஷேக் அப்துல்காதர்

இதனால் அறிவிப்பது என்னவென்றால்...

 

பனிதூவும் காலை
எங்கோ ஒற்றை குயில் கூவியது!...
தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையில் நான்!...
அப்பொழுது அது நடந்தது...
எனது சிந்தனை பறவைகளின் பின் நோக்கிய பயணம்.

நானும் என் தந்தையும் - ஏன்
அவர் தந்தையும் முஸ்லிம்கள்
தவ்ஹீத் என்ற வார்த்தையை

எங்கோ கேட்ட ஞாபகம்
 

நாகூர் ஹனிஃபா பாடலை

தலையில் முக்காடோடு கேட்கும்

சராசரிக் குடும்பம் எனது.

குர்ஆன் புனிதமானது!

ஆம் அது புனிதமானதுதான்
எனது குடும்பத்தில் அது யார் கையும் படாத பொருள்!


அது பரிசுத்தமானது தான்!...
பாதுகாப்பதற்காகவே அருளப்பட்டதா?...
அல்லது படித்து படிப்பினை பெறவா?...
எனது மூளை நரம்புகளில்
குழப்ப முடிச்சுகள்.

"இஸ்லாம்"
மீலாது மேடைகளில் பல...
அரசியல் தலைவர்கள் முழங்கும் சொல்
"இஸ்லாம்" என்ற என் இதயத்தாள்களில்

வெற்று பக்கங்கள்.

நான் அறிந்ததெல்லாம் முஹையதீன் மாலைகளும்...
நூறுமசாலாவும்... விறகு வெட்டியார் கதையும் தான்!
இஸ்லாமிய மாதங்களெல்லாம்...
நாகூர் கந்தூரி பிறை, ஏர்வாடி கந்தூரி பிறை
என்ற பெயரில் தான் எனக்கு பரீட்யம்


தொப்பியை மறந்ததினால்... தொழாது
திரும்பி வந்த அனுபவங்கள் நிறைய உண்டு
தொழுகைக்கு தொப்பி அவசியமா?
என்ற சர்ச்சையில் கழிந்தது என் இளமைக் காலங்கள்.


இருட்டுச் சந்துக்களில் தூயஇஸ்லாத்தைத் தேடித் தேடி
இன்று இளமையின் விளிம்பில் நான்!
எனது அகராதியில் நேர்வழி என்பது
தொலைந்து போன பொருள்.

நேர்வழியைத் தேடி...
சுழித்த புருவமும் சுருங்கிய நெற்றியுமாய்..
ஒரு சுட்டு விரலுக்காக ஏங்கினேன்.

இறைவன் நாடினான்

கிடைத்தது நேர்வழி
 

எனது கட்டுமரம் கண்டுகொண்டது
அந்த கலங்கரை விளக்கத்தை
அழைப்பு மற்றும் வழிகாட்டுதல் மையம்
தவ்ஹீதில் தொடங்கியது எனது முதல் படி


பல ஆண்டுகளில் பல படிகளில்

இன்று நான் இஸ்லாமிய அறிஞல்ல - ஆனால்
இஸ்லாத்தை ஓரளவு அறிந்தவன்


இஸ்லாம் எனும் கடலில் எனது ஓடம் ஓர் ஓரத்தில்
எனது தவ்ஹீத் பயணத்தில்...
தக்லீதுக்கு விடை கொடுத்தேன்!
எனது இதய மாடத்தில் இஸ்லாமிய ஓளிவிளக்கு

இறைமறையும்... நபி உரையும்
என் இரு விழிகள்

சுவர்க்கத்தை நோக்கி எனது புனிதப் பயணம்...
 

இன்று என் இதயம்
தெளிந்த நீரோடை
 

இன்று

நானொரு தூய முஸ்லிம்

என் தந்தையும்...
அவர் தந்தையும்...