Index |Subscribe mailing list | Help | E-mail us

 

ஷேக் அப்துல்காதர்

மழை

 

யார் தள்ளினார்! எங்கு விழுவோம் என அறியாத

வெகுளி நீர் துளிகள்!

 

ஜனனத்திற்கு ஏங்கும்...

கார் மேகத்தின் கருப்பை குழந்தைகள்

ஆனால் மனிதன் கண்மேல் கை வைத்து

வானம் பார்ப்பது

தவிர்க்க முடியாது - ஏனெனில்

வாளிக் கயிற்றுக் கெட்டாத சூனியக் கிணறுகள் அவனது...


மழைத்துளி வீழ்ந்து மண் செழித்துவிட்டால்?!
வானம் பார்த்து வயல்கள் கொழித்துவிட்டால்...
கொடுத்தவனை மறந்துவிடுகிறான்...
இதுதான் உலகம்! இவர்கள் தாம் மனிதர்கள்!!
எல்லாம் எனது என மார்தட்டும் சுயநலவாதிகள்!


இறையருள் மறந்த சூனிய இதயத்திற்கு சொந்தக்காரர்கள்!
எங்கோ இருக்கும் கடல் நீரை
மழை நீராக்கி மண்ணில் பொழிந்தவன் யார்?
உப்பு நீரை சுத்தமாக்கி அருள் மழை பொழிந்தவன் யார்?
அந்த அர்ரஹ்மான் தான்...


மனிதா விழித்துக்கொள்!
மக்கிய உன் எலும்பை உயிர்பிக்கும்
உன் இரட்சகனை பயந்து கொள்! ஏனெனில்
நீ கண் மேல் கை வைத்து
வானம் பார்ப்பது தவிர்க்க முடியாததாகி விடலாம்! ...