இஸ்லாம்கல்வி.காம் - Portal

ஜித்தா இஸ்லாமிய நிகழ்ச்சி – அழைப்பிதழ் (நாள்: 24.05.2013)
அழைப்பிதழை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்.

இயேசு ஒரு முஸ்லிம் (Part-4)
- எஸ்.எல்.எம். அர்ஷாத் (arshathslm@gmail.com)

கடந்த தொடர்களில் இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிம் என்பதை நிரூபித்து நிற்கும் ஓரிறைக் கொள்கையை ஆணித்தரமாக எடுத்துரைக்கும் பைபிள் வசனங்கள், கொலை, விபச்சாரம், களவு, பொய்ச்சாட்சி, பெற்றோரை துன்புறுத்தல், ஜீவகாருண்யமின்மை போன்ற கொடிய பாவங்களிலிருந்து தவிர்ந்து வாழ்ந்தாலே ஒருவர் நித்திய ஜீவனை அடையமுடியும்- நியாயத் தீர்ப்பு நாளில் வெற்றியடைய முடியும் என்பதற்கான சான்றுகளை கடந்த தொடர்களில் நோக்கினோம்.

அதன் தொடரில் வன்கொடுமையான வட்டி குறித்து திருமறைக் குர்ஆனும், பைபிளும் என்ன சொல்கின்றது என நோக்குவோம்.

வட்டி VS வியாபாரம்

அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களது காலம் முதல் இற்றை வரை வட்டியும் வியாபாரமும் ஒன்றுதான் என வாதிடுகின்ற ஒரு சாரார் இருந்தே வருகின்றார். இவ்வட்டி குறித்து இறைவேதம் திருக்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

“வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். “வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.” (அல்குர்ஆன் 2:275)

திருக்குர்ஆனின் போர்ப்பிரகடனம்

ஒரு மனிதன் கஷ்ட நிலையில் இருக்கும் போது உதவி செய்யுமாறு வழிகாட்டியுள்ள இஸ்லாமிய மார்க்கம் அந்த மனிதனின் ஏழ்மையை பயன்படுத்தி அவனை சுரண்டி மென்மேலும் கஷ்டத்திற்கு உள்ளாக்கும் வகையில் வட்டி வாங்குவதை வன்மையாக தடை செய்வதோடு இறைகட்டளையை மீறி வட்டிக் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவோருக்கு எதிராக திருமறைக் குர்ஆன் போர்ப்பிரகடனம் செய்கின்றது..

“நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்! அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.” (அல்குர்ஆன் 2:278, 279)

அழிக்கப்படும் வட்டிப் பொருளாதாரம்

மதங்கள் தடை செய்யும் வன் கொடுமையான வட்டி மூலம் பொருளாதாரத்தை பெருக்க முனைவோரின் பொருளாதாரம் அழிக்கப்படும் என சர்வ வல்லமை பொருந்திய ஏக இறைவன் எச்சரிக்கின்றான்.

“அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.” (அல்குர்ஆன் 2:276)

கொடிய நரக நெருப்பும் வட்டியும்

ஏக இறைவனின் கட்டளைகளை மீறி வட்டியை உண்போருக்கு கொடிய நரகம் தயார் செய்யப்பட்டுள்ளதாக இறைவேதம் திருக்குர்ஆன் எச்சரிக்கின்றது.

“நம்பிக்கை கொண்டோரே! பன் மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால் வெற்றி பெறுவீர்கள். (ஏக இறைவனை) மறுப்போருக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள நரகத்தை அஞ்சுங்கள்!” (அல்குர்ஆன் 3: 130,131)

அழியும் வட்டியும் பெருகும் தர்மமும்

சமுதாயத்தின் சாபக்கேடான வட்டி அல்லாஹ்வின் அருளை இழக்க செய்துவிடும்.

“மனிதர்களின் செல்வங்களைப் பெருக்கிக் கொள்வதற்காக நீங்கள் வட்டிக்கு கொடுப்பது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை. அல்லாஹ்வின் முகத்தை நாடி ஸகாத் கொடுப்பீர்களானால் இத்தகையோரே பெருக்கிக் கொண்டவர்கள்” (அல்குர்ஆன் 30:39)

துன்புறுத்தும் வேதனையும் வட்டியும்

“யூதர்கள் செய்த அநீதியின் காரணமாகவும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் அதிகமானோரை அவர்கள் தடுத்ததன் காரணமாகவும், வட்டியை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும், மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் அவர்கள் சாப்பிட்டதாலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றை அவர்களுக்கு விலக்கினோம். அவர்களில் (நம்மை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம். (அல்குர்ஆன 4:160,161)

சாபத்திற்குரிய வட்டி

“வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும், அதை எழுதிக் கொடுப்பவர்களையும், அதன் இரு சாட்சிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.” (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் -3258)

பைபிளின் ஒளியில் வட்டி

கிறிஸ்த்தவ அன்பர்களால் இறைவேதமாக நம்பப்படுகின்ற பைபிளின் யாத்திராகமம் நூல் வட்டி குறித்து பின்வருமாறு குறிப்பிடுகின்றது

“உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டி வாங்குகிறவர்கள் போல அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம்.” (யாத்திராகமம் 22:25)

பைபிளின் பழைய ஏற்பாடு நூலான உபாகமம் நூல் வட்டி குறித்து குறிப்பிடுகையில்,

“கடனாகக் கொடுக்கிற பணத்துக்கும் ஆகாரத்துக்கும், கடனாகக் கொடுக்கிற வேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரன் கையில் வட்டி வாங்காயாக.” (உபாகமம் 23:19 )

என்று குறிப்பிடுகின்றது.

பைபிளின் பழையஏற்பாட்டு – நியாயப் பிரமாண – நூல்களான யாத்திராகமம், உபாகமம் போன்றவைகள் மோசே-மூஸா-(அலை) அவர்களின் போதனைகள் என்று நம்பப்படுகின்றது. உபாகமம் ஓரிறைக் கொள்கை குறித்து குறிப்பிடுகையில்,

“ஆகையால் உயர வானத்திலும், தாழ பூமியிலும் கர்த்தரே தேவன். அவரைத் தவிர ஒருவரும் இல்லை என்பதை நீ இந்நாளில் அறிந்து, உன் மனதிலே சிந்தித்து…’ (உபகாமம் 4:39) என்று கூறுகின்றது.

யார் ஒருவர் ஏக இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்காது, அவனுக்கு இணையாக எதையும் கருதாது வட்டி போன்ற இறைவன் தடுத்த பாவங்களில் இருந்து தவிர்ந்து வாழ்கின்றாரோ அவர் ஒரு முஸ்லிம். எனவே, இறைத்தூதர் மோசே (அலை) அவர்கள் ஒரு முஸ்லிமாவார்கள்.

மோசேயின் நியாயப் பிரமாணத்தைப் பின்பற்றுவதன் அவசியம் குறித்து இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

“நியாயப் பிரமாணத்தையானாலும், தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக் கொள்ளாதேயுங்கள். அழிக்கிறதற்கு அல்ல. நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்து போனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதையெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் சிறியவன் என்னப்படுவான். இவைகளைக் கைக் கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் எனப்படுவான். வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (மத்தேயு 5:17-20)

எனவே, ஏக இறைவனைத் தவிர யாரையும் வணங்காது, அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது, சர்வ வல்லமை பொருந்திய இறைவனையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்கின்ற ஏகத்துவக் கொள்கையை போதித்ததோடு, கொலை, விபச்சாரம், களவு, பொய்ச்சாட்சி, பெற்றோரை துன்புறுத்தல், ஜீவகாருண்யமின்மை, வட்டி போன்ற கொடிய பாவங்கள் குறித்து மக்களுக்கு எச்சரித்த இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிமாவார்கள்.

இறைவன் நாடினால் இயேசு ஒரு முஸ்லிம் என்பதற்கான சான்றுகளை தொடர்ந்தும் நோக்குவோம்.

பர்ளு தொழுகைக்கு இகாமத் சொன்ன பிறகு ஸுன்னத் தொழுகையை தொடரலாமா?
இஸ்லாமிய சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி

பர்ளு தொழுகைக்கு இகாமத் சொன்ன பிறகு ஸுன்னத் தொழுவதுபற்றிய விளக்கம்

வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி — அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (AIC)

இடம்: அல்-ஜுபைல் மாநகரம்

வீடியோ & எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக்

பர்ளுத் தொழுகையின் முன்-பின் சுன்னத்துக்கள் (அஸர் முதல் பஜ்ர் வரை)
ஸுனன் றவாதீப் – ஐவேளை கடமையான தொழுகைக்கு முன் பின் தொழ வேண்டிய சுன்னத்தான தொழுகையின் சிறப்புக்கள் மற்றும் அதன் சட்டங்கள் பற்றிய தொடரில் ஆசிரியர் அவர்கள் பல்வேறு ஆதாரப்பூர்வமான செய்திகளை கொண்டு விளக்குவதோடு மக்களிடம் நடைமுறையிலுள்ள சில வழிமுறைகள் ஆதாரப்பபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்தவை அல்ல என்பதையும் கோடிட்டுகாட்டுகின்றார்.

இந்த தொடரில்..

அஸர் தொழுகைக்கு முன்னால் ஸுன்னத் தொழு இயலுமா? எத்தனை ரகஅத்துக்கள் தொழவேண்டும்?

அஸர் தொழுகைக்கு பின் ஸுன்னத் தொழுவது அனுமதிக்கப்பட்டதா? தடுக்கப்பட்டதா?

மக்ரிப் தொழுகைக்கு முன் ஸுன்னத் உள்ளனவா? எத்தனை ரகஅத்துக்கள் தொழவேண்டும்?

மக்ரிப் தொழுகை-யின் பின் ஸுன்னத்-தின் சிறப்புகள் என்ன?

இஷா தொழுகைக்கு முன் பின் ஸுன்னத்துக்கள் எத்தனை ரகஅத்துக்கள் தொழவேண்டும்?

பஜ்ர் தொழுகை-யின் முன் ஸுன்னத்-தின் சிறப்புக்கள், அதில் நபி (ஸல்) அவர்கள் ஓதிய குர்ஆன் அத்தியாயங்கள், வசனங்கள் என்ன? மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றிய தெளிவான ஒரு விளக்கத்தை தருகிறார்.

சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை பெற்றுத்தரகூடிய ஸுன்னத் தொழுகை 12 ரக்அத்துக்கள் (ஒரு நாளைக்கு) ஐவேளை தொழுகையின் முன், பின் ஸுன்னத்கள் பற்றி தெளிவாக அறிவதற்கு இந்த தொடரில் உள்ள வீடியோக்களை பார்வையிடவும்

இஸ்லாமிய சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி

வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி — அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (AIC)

இடம்: அல்-ஜுபைல் மாநகரம்

நாள்: 26-04-2013

வீடியோ & எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக்

இயேசு ஒரு முஸ்லிம் (Part-3)
- எஸ்.எல்.எம். அர்ஷாத் (arshathslm@gmail.com)

கடந்த தொடர்களில் இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிம் என்பதை உறுதிப்படுத்தக் கூடிய சான்றுகளை கிறிஸ்த்தவர்களால் இறைவேதமாக நம்பப்படுகின்ற பைபிளிலிருந்து நோக்கினோம். அதன் தொடரில் நியாத்தீர்ப்பு நாளில் வெற்றியடைய -நித்தியஜீவனை அடைய- வேண்டுமாயின் ஒருவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று இயேசு செய்த போதனைகள் இயேசு ஒரு முஸ்லிம் என்பதை எள்முனையளவு கூட சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து நிற்கின்றது. அவற்றை நோக்குவோம்.

நித்திய ஜீவனை அடைய வழி என்ன?

பரலோக இராஜ்ஜியத்தில் வெற்றியடைய வேண்டுமானால் எவ்வாறான நன்மைகளை செய்ய வேண்டும் என்று கேட்ட மனிதனுக்கு இயேசு பின்வருமாறு பதிலளித்ததாக புதிய ஏற்பாட்டு நூலான பைபிள் குறிப்பிடுகின்றது.

“அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே. நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார். அவன் அவரை நோக்கி: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக. உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பவைகளையே என்றார்.” – மத்தேயு 16-19

கொலை

நித்திய ஜீவனை அடைய வேண்டுமானால் கொலை செய்யாதிருக்க வேண்டும் என்று மத்தேயு அதிகாரம் கூறுகின்றது.

கொலை குறித்து இறைவேதம் திருக்குர்ஆன் குறிப்பிடுகையில்,

“கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்” (அல்குர்ஆன் 5:32)

என்று குறிப்பிடுகின்றது.

அநியாயமாக ஒரு மனிதரை கொலை செய்தவர் எல்லா மக்களையும் கொலை செய்த பாவத்தை சம்பாதித்துக் கொண்டவர் என இஸ்லாம் கூறுகின்றது. எனவே, ஓரிறைக் கொள்கையை ஏற்று, கொலை என்கின்ற கொடிய பாவத்திலிருந்து விலகி இருப்பவர் முஸ்லிமாவார்.

ஆகவே, இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிமாவார்கள்.

விபச்சாரம்

நித்திய ஜீவனை அடைய வேண்டுமானால் விபச்சாரம் செய்யாதிருக்க வேண்டும் என்று பைபிளின் புதிய ஏற்பாட்டு நூலான மத்தேயு அதிகாரம் கூறுகின்றது.

விபச்சாரம் குறித்து திருக்குர்ஆன் குறிப்பிடுகையில்,

விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது. (அல்குர்ஆன் 17:32)

இஸ்லாமிய மார்க்கம் விபச்சாரத்தை தடுத்திருப்பது மாத்திரமன்றி, விபச்சாரத்தின் பக்கம் நெருக்கிவைக்கும் அனைத்து வழிகளையும் பாவம் என்று கூறுகின்றது.

எனவே, ஏக இறைவனை நம்பி விபச்சாரத்திலிருந்து தவிர்ந்து வாழ்பவர் முஸ்லிமாவார். ஆகவே, இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிமாவார்கள்.

களவு

கிறிஸ்த்தவ அன்பர்களால் இறைவேதமாக நம்பப்படுகின்ற பைபிள் களவு செய்யாதிருக்க வேண்டும் என்று கூறுகின்றது.

களவு குறித்து திருமறைக்குர்ஆன் குறிப்பிடுகையில்,

திருட்டை பாவம் என்று கூறுகின்ற இஸ்லாமிய மார்க்கம் திருடர்களே இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதற்காக திருட்டுக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களின் கரங்களை துண்டிக்குமாறு கூறுகின்றது. (அல்குர்ஆன் 5:38)

திருட்டுக் குற்றத்திற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்ற நாடுகளில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது திருட்டுக் குற்றம் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே காணப்படுகின்றது என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்ற அதேவேளை வறுமையின் காரணமாக திருட்டு இடம்பெறாமல் தடுப்பதற்காக ஸக்காத் என்கின்ற ஏழைவரி திட்டத்தை இஸ்லாமிய மார்க்கம் அமுல்படுத்தி வருகின்றது.

எனவே, நிகரற்ற இறைவனை விசுவாசித்து, களவு என்கின்ற பாவத்திலிருந்து தவிர்ந்திருப்பவர் முஸ்லிமாவார். ஆகவே, இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிமாவார்கள்.

பொய்ச்சாட்சி

பைபிளின் மத்தேயு அதிகாரம் “பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக” என இயேசு (அலை) அவர்கள் போதிதத்தாக குறிப்பிடுகின்றது.

இறைநம்பிக்கையாளர்கள் குறித்து அருள்மறைக்குர்ஆன் குறிப்பிடுகையில்,

“இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், பொய்ச்சாட்சி சொல்லமாட்டார்கள்” (அல்குர்ஆன் 26:72)

என்று குறிப்பிடுகின்றது.

கர்த்தரை மாத்திரம் வணங்கி வழிபட்டு பொய்ச்சாட்சி சொல்லாமல் தனது வாழ்வை அமைத்துக் கொள்பவர் முஸ்லிமாவார். ஆகவே, இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிமாவார்கள்.

பெற்றோரை கனம் பண்ணுதல்

உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக! என்று இயேசு (அலை) அவர்கள் போதித்தாக பைபிள் குறிப்பிடுகின்றது.

பெற்றோரை கனம் பண்ணுவதைப் பற்றி இறைவேதம் திருக்குர்ஆன் குறிப்பிடுகையில்,

“பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்! என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி “சீ” எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக! (அல்குர்ஆன் 17:23)

மேலும், சர்வ வல்லமை பொருந்திய கர்த்தர் தனக்கு அடுத்ததாக பெற்றோருக்கு நன்றியுடன் நடக்க வேண்டும் என கட்டளை பிறப்பித்துள்ளதை அல்குர்ஆன் பின்வருமாறு கூறிக்காட்டுகின்றது.

“எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு” (அல்குர்ஆன் 31:14)

எனவே, இறைவனுக்கு வழிப்பட்டு, தாய், தந்தையருக்கு கனம் பண்ணி தனது வாழ்வை அமைத்துக் கொள்பவர் முஸ்லிமாவார்.

ஆகவே, பெற்றோருக்கு கனம் பண்ணுமாறு போதித்த இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிமாவார்கள்.

பிற உயிர்களிடத்தில் அன்புகூருதல்

பிற உயிர்களிடத்தில் அன்புகூருமாறு, ஜீவகாருண்யத்தை இயேசு (அலை) அவர்கள் போதித்ததாக பைபிளின் மத்தேயு சுவிசேசம் விபரிக்கின்றது.

ஜீவகாருண்யத்தை குறித்து இஸ்லாம் என்ன கூறுகின்றது என்று சற்று நோக்குவோமாயின்,.

“உயிரினங்கள் மீது அம்பெறிந்து பழகுவதை இறுதித்தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்” (ஸஹீஹுல் புஹாரி-5515)

“தாகத்தோடு இருந்த நாய்க்கு நீர் புகட்டியவரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாக நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” (ஸஹீஹுல் புஹாரி-2303)

“பூனையொன்றைக் கட்டிப் போட்டு தான் அதற்கு உணவு கொடுக்காமலும், பூனை தானாகத் தன் உணவைத் தேடிக் கொள்ள அவிழ்த்து விடாமலும் இருந்து அந்தப் பூனையை சாகடித்த பெண் நரகில் நுழைவாள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (ஸஹீஹுல் புஹாரி-2365)

எனவே, கர்த்தரை உரிய முறையில் விசுவாசித்து, பிற உயிர்களிடத்திலும் அன்புகூர்ந்து வாழ்பவர் முஸ்லிமாவார்.

ஆகவே, இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிமாவார்கள்.

எனவே, இயேசு போதித்த ஏகத்துவக் கொள்கையை ஏற்று, சர்வ வல்லமை பொருந்திய கர்த்தருக்கு யாதொன்றையும் இணையாக்காது கொலை, விபச்சாரம், களவு, பொய்ச்சாட்சி, பெற்றோரை துன்புறுத்தல், ஜீவகாருண்யமின்மை போன்ற கொடிய பாவங்களிலிருந்து தவிர்ந்து வாழ்பவர் ஒரு முஸ்லிம்.

ஆகவே, இவைகளை போதித்து, அதன்படி வாழ்ந்த இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிமாவார்கள்.

இறைவன் நாடினால் இயேசு ஒரு முஸ்லிம் என்பதற்கான சான்றுகளை தொடர்ந்தும் நோக்குவோம்.

இயேசு ஒரு முஸ்லிம் (Part-2)
- எஸ்.எல்.எம். அர்ஷாத் (arshathslm@gmail.com)

கடந்த தொடர்களில் தீர்க்கதரிசிகள் ஏகத்துவத்தை போதித்ததையும், இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிம் என்பதற்கான சான்றுகளையும் நோக்கினோம். அதன் தொடரில் இயேசுவின் போதனைகள் என்று நம்பப்படுகின்ற பைபிளின் புதிய ஏற்பாட்டில் காணப்படுகின்ற “இயேசு ஒரு முஸ்லிம்” என்பதற்கான சான்றுகளை தொடர்ந்தும் நோக்குவோம்.

இயேசுவை கர்த்தர் என அழைப்பவன் அக்கிரமக்காரன்

இயேசு (அலை) அவர்கள் கூறியதாக புதிய ஏற்பாட்டு நூலான மத்தேயு அதிகாரம் பின்வருமாறு கூறுகின்றது.

“பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே ‎பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! ‎கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.‎ அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது ‎நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே ‎பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக ‎அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.‎ அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் ‎செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் ‎சொல்லுவேன்.‎ ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, ‎இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் ‎வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த ‎வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது ‎கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.‎ அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.

மத்தேயு 12 அதிகாரம் வசனம் 28

இயேசுவை “கர்த்தராக” நினைத்து வழிபடும் மக்களுக்கு எச்சரிக்கும் விதத்தில், கர்த்தராகிய இறைவனின் கட்டளைப்படி செயற்படுகின்றவரே நியாயத் தீர்ப்பு நாளில் வெற்றியடைய முடியும். மாறாக, தன்னை நோக்கி “கர்த்தாவே” என்று அழைப்பவர்கள் அக்கிரமக்காரர்கள் என்று உவமையுடன் இயேசு (அலை) அவர்கள் மிகத் தெளிவாக கூறியுள்ளார்கள்.

உலகப் பொதுமறை திருக்குர்ஆன் பேசுகின்றது.

“மர்யமின் மகன் ஈஸாவே! “அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்!” என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா?” என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது, “நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன் என்று அவர் பதிலளிப்பார். நீ எனக்குக் கட்டளையிட்ட படி “எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!” என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன்.” (அல்குர்ஆன் 5:116-117)

நியாயத் தீர்ப்பு நாளில் கர்த்தரின் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் போது, தன்னை வணங்கியவர்களை இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் கைவிட்டுவிடுவதோடு, அவர்களுக்கு எதிராகவும் சாட்சி சொல்வார்கள் என்பதை மேலுள்ள இறைவசனத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

யார், ஏகனாகிய கர்த்தரை மாத்திரம் வணங்கி வழிபட வேண்டும், இறைத் தூதர்களுக்கு கடவுள் தன்மை கிடையாது. அவர்களை வணங்கி வழிபடுவது மன்னிக்;க முடியாத மிகப் பெரிய பாவம், மறைவானஅறிவு சர்வ வல்லமை பொருந்திய கர்த்தருக்கு மாத்திரம் உண்டு என நம்பி, அதனை போதிக்கின்றாரோ அவர் ஒரு முஸ்லிமாவார். எனவே, இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிமாவார்கள்.

பரலோகத்திலிருக்கின்ற கர்த்தரே கடவுள்

இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் போதித்ததாக கிறிஸ்த்தவ அன்பர்களால் நம்பப்படுகின்ற புதிய ஏற்பாட்டு நூலான மத்தேயு ஓரிறைக் கொள்கையை பின்வருமாறு போதிக்கின்றது.

“பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.” (மத்தேயு 23:9)

பைபிளில் “பிதா” என்பது “கடவுள்” என்ற அர்த்தத்திலும், “குமாரன்” என்பது “கர்த்தரின் அடியார்கள்” என்ற அர்த்தத்திலும் பிரயோகிக்கப்பட்டுள்ளது. (கர்த்தர் நாடினால் இது குறித்து மற்றொரு சந்தர்ப்பத்தில் விரிவாக நோக்குவோம்.)

ஈடு இணையற்ற ஏக இறைவனை மாத்திரம் வணங்க வேண்டும் என்று இயேசு (அலை) உள்ளிட்ட இறைத்தூதர்கள் போதித்ததாக இறைவேதம் திருக்குர்ஆன் போதிக்கின்றது.

“அளவற்ற அருளாளனைத் தவிர வணங்கப்படும் கடவுள்களை நாம் ஆக்கியுள்ளோமா?” என்று உமக்கு முன் நாம் அனுப்பிய தூதர்களிடம் கேட்பீராக! (திருக்குர்ஆன் 43:45)

யார் அளவற்ற அருளாளனான ஒரே இறைவனை தவிர வணங்குவதற்கு தகுதியான கடவுள் இல்லை என்று நம்புகின்றா ரோ அவர் ஒரு முஸ்லிம். எனவே, இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிமாவார்கள்.

அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாத கர்த்தர்

கர்த்தரானவர் சர்வ வல்லமை பொருந்தியவராக, தனது அதிகாரத்தில் யாரையும் பங்காளியாக்காதவராக, தனது அதிகாரத்தின் மீது படைப்பினங்கள் தாக்கம் செலுத்தக் கூடிய அளவிற்கு பலவீனம் அற்றவராக இருக்க வேண்டுமென இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் போதித்தாக பைபிளின் மத்தேயு அதிகாரம் விபரிக்கின்றது.

“அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது. (மத்தேயு, 12 அதிகாரம், வசனம் 28)

இதனை திருமறைக் குர்ஆனும் பின்வருமாறு உறுதி செய்கின்றது.

“அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான். (திருக்குர்ஆன் 25:2)

யார் கர்த்தர் ஒருவரே சர்வ வல்லமை பொருந்தியவர். அவரது வல்லமையில் யாரும், எந்த சக்தியும் பங்காளியாகவோ, ஆதிக்கம் செலுத்தவோ முடியாது என்று நம்புகின்றாரோ அவர் ஒரு முஸ்லிம். எனவே, இறைத்தூதர் இயேசு (அலை) அவர்களும் முஸ்லிமாவார்கள்.

கர்த்தரால் தன்னளவில் உயர்த்தப்பட்ட இயேசு

இறைத்தூதர் இயேசு (அலை) அவர்களை, ஏக இறைவனை நிராகரித்தவர்கள் கொலை செய்ய முயற்சித்தால் ஏகனாகிய கர்த்தர் இயேசு (அலை) அவர்களை தன்னளவில் உயர்த்திக் கொண்டார்.. “தான் கர்த்தரிடம் செல்வேன்” என்று இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் கூறியதாக யோவான் அதிகாரம் பின்வருமாறு கூறுகின்றது.

“நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள். ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.

யோவான், 10 அதிகாரம், வசனம் 29

இதோ இறைவேதம் திருக்குர்ஆன் பேசுகின்றது.

“மாறாக, அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கிறான். வேதமுடையோரில் ஒவ்வொருவரும் அவர் (ஈஸா, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பாமல் இருக்க மாட்டார்கள். கியாமத் நாளில் அவர் அவர்களுக்கு எதிரான சாட்சியாக இருப்பார்.” (அல்குர்ஆன் 4:158,159)

எனவே, அல்லாஹ்வால் தன்னளவில் உயர்த்திக் கொள்ளப்பட்ட இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிமாவார்கள்.

தேவனாகிய கர்த்தர் ‎ஒருவரே கர்த்தர்

“ஒருவன் இயேசுவை நோக்கி நித்திய ஜீவனை அடைய (நியாயத் தீர்ப்பு நாளில் வெற்றியடைய) வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு கற்பனைகளைக் கைக்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார்கள்.

“அப்பொழுது ஒருவன் வந்து, (இயேசுவை) நோக்கி: நல்ல போதகரே, நித்திய ‎ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று ‎கேட்டான்; அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? ‎தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் ‎பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.‎”

மத்தேயு 19:16,17‎

கற்பனைகளைக் கைக்கொள்ள வேண்டும் என்று கூறிய இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை “கர்த்தர் ஒருவரே வணக்கத்திற்கு தகுதியானவர்” என்று நம்புவதாகும் என்று தெளிவுபடுத்துகின்றார்கள். அதுமாத்திரமன்றி, இயேசுவை நோக்கி வந்த மனிதர், போதகரே என்று அழைத்ததிலிருந்து நெறிபிறழ்ந்தவர்கள்தான் இயேசுவை கர்த்தர் என்று வாதிட்டார்கள் என்பதையும், இயேசுவின் போதனைக்கு செவிசாய்த்த மக்கள் இயேசு “போதகர்”தான் (இறைத்தூதர்) என்பதை விளங்கி வைத்திருந்தார்கள் என்பதையும் அறிந்து கொள்ள முடிகின்றது.

“இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான ‎கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள் நம்முடைய தேவனாகிய கர்த்தர் ‎ஒருவரே கர்த்தர்.”

(மாற்கு அதிகாரம் 12:29)

இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் கர்த்தர் ஒருவரையே வணங்குமாறு போதித்ததை திருக்குர்ஆனின் 5:116 வசனம் “எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்று போதித்ததாக உறுதிப்படுத்துகின்றது.

கர்த்தர் ஏகன் என்றும், கர்த்தராகிய இறைவனுக்கு மாத்திரம் வணக்கம் செலுத்த வேண்டும் என்றும் யார் நம்புகின்றாரோ அவர் ஒரு முஸ்லிம். எனவே, இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிமாவார்கள்.

கர்த்தருக்கு மாத்திரம் ஆராதனை செய்ய பணித்த இயேசு

இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டதாக புதிய ஏற்பாட்டு நூல் மத்தேயு குறிப்பிடுகின்றது.

“அப்பொழுது இயேசு: “அப்பாலே போ சாத்தானே! உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே” என்றார்.”

(மத்தேயு 4:10)

இதனை இறைவேதம் திருக்குர்ஆன் பின்வருமாறு உறுதிசெய்கின்றது.

“அல்லாஹ்வே எனது இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எனவே அவனையே வணங்குங்கள்! இதுவே நேரான வழியாகும்” (எனவும் கூறினார்)” (அல்குர்ஆன் 03:51)

சத்தியமும், ஜீவனுமாயிருக்கின்ற சர்வ வல்லமை பொருந்திய கர்த்தருக்கு மாத்திரம் அடிபணிந்து, கர்த்தரை மாத்திரம் வணங்கி வழிபடுபவர் ஒரு முஸ்லிம். எனவே, இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிமாவார்கள்.

ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருக்க முடியாது

கடவுள் ஒருவர்தான். ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருக்க முடியாது என்பதை பின்வரும் உவமை மூலம் இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் கூறியதாக பைபிள் குறிப்பிடுகின்றது.

“இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது. ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக் கொண்டு மற்றவனை அசட்டை பண்ணுவான்”

(மத்தேயு 6:24)

ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருக்க முடியாது என்பதை இறைவேதம் திருக்குர்ஆனும், பின்வருமாறு அழகுற எடுத்தியம்புகின்றது.

“அவ்விரண்டிலும் (வானங்களிலும், பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் இரண்டும் சீரழிந்திருக்கும். அவர்கள் கூறுவதை விட்டும் அர்ஷு.க்கு அதிபதியாகிய அல்லாஹ் தூயவன்”. (அல்குர்ஆன் 21:22)

“அவர்கள் கூறுவது போல் அவனுடன் பல கடவுள்கள் இருந்திருந்தால் அவர்களும் அர்ஷுடைய (இறை)வனிடம் (சரணடைய) ஒரு வழியைத் தேடியிருப்பார்கள் என்று கூறுவீராக! அவர்கள் கூறுவதை விட்டும் அவன் தூயவன். மிக மிக உயர்ந்தவன். (அல்குர்ஆன் 17:42-43)

யார் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருக்க முடியாது என்று நம்புகின்றாரோ அவர் ஒரு முஸ்லிம். எனவே, இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிமாவார்கள்.

பைபிளின் புதிய ஏற்பாடு “இயேசுவின் போதனைகள்” என்று கிறிஸ்த்தவ அன்பர்களால் நம்பப்படுகின்றது. பைபிளில் மனிதர்களின் கருத்துக்கள் உட்புகுத்தப்பட்டு, கூட்டல், குறைத்தல் செய்யப்பட்டு பைபிள் புனிதத் தன்மையை இழந்துவிட்ட போதிலும், ஆங்காங்கே காணப்படுகின்ற பல பைபிள் வசனங்கள் இயேசு (அலை) அவர்கள் ஓரிறைக் கொள்கையைப் போதித்த ஒரு முஸ்லிம் தான் என்பதை பறை சாற்றி நிற்கின்றன.

இறைவன் நாடினால் இயேசு ஒரு முஸ்லிம் என்பதற்கான சான்றுகளை தொடர்ந்தும் நோக்குவோம்.

லுஹர் தொழுகை-யின் முன் பின் சுன்னத்துக்கள்
இஸ்லாமிய சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி

வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி – அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (AIC)

இடம்: அல்-ஜுபைல் மாநகரம்

வீடியோ & எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக்

Download mp4 HD Video Size: about 220 MB

Download mp3 Audio

சுன்னத் தொழுகையின் சிறப்புகள்
இஸ்லாமிய சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி

வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி – அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (AIC)

இடம்: அல்-ஜுபைல் மாநகரம்

வீடியோ & எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக்

Download mp4 HD Video Size: about 279 MB

Download mp3 Audio

இயேசு ஒரு முஸ்லிம் (Part-1)
- எஸ்.எல்.எம். அர்ஷாத் (arshathslm@gmail.com)

“பைபிளின் பழைய ஏற்பாடும் ஓரிறைக் கொள்கையும்” என்கின்ற கடந்த தொடரில் தீர்க்கதரிசிகள் ஏகத்துவத்தை போதித்ததையும், இயேசு பழைய ஏற்பாட்டை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்திக் கூறியதையும் பார்த்தோம்.

ஓரிறைக் கொள்கையை போதித்த தீர்க்கதரிசிகளின் வரிசையில் ஏகத்துவ பிரச்சாரம் மேற்கொண்ட இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிம் என்பதற்கான சான்றுகளை இத்தொடரில் நோக்குவோம்.

இன்று உலகில் வாழக்கூடிய கிறிஸ்த்தவ அன்பர்கள் இயேசுவை கடவுளின் குமாரர் அல்லது கடவுள் என்று நம்பி வணங்கி வழிபடுகின்றார்கள். ஆனால், முஸ்லிம்கள் “சர்வ வல்லமை பொருந்திய கர்த்தரை மாத்திரம் வணங்கி வழிபட வேண்டும். அவருக்கு எதையும், யாரையும் இணையாக்க கூடாது” என்கின்ற ஏகத்துவ கொள்கையை போதிப்பதற்காக இறைவனால் காலத்திற்கு காலம் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகள் வரிசையில் மிக முக்கியமானதொரு தீர்க்கதரிசி, இறைதூதர் என்று இயேசுவை நம்புகின்றார்கள். மேலும், தீர்க்கதரி சிகள் அனைவரும் முஸ்லிம்களாக இருந்ததால் இயேசு அவர்களும் ஒரு முஸ்லிம் என்று நம்புகின்றார்கள்.

இது குறித்து இறைவேதம் திருக்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

“நூஹுக்கு எதை அவன் வலியுறுத்தினானோ அதையே உங்களுக்கும் மார்க்கமாக்கினான். (முஹம்மதே!) உமக்கு நாம் அறிவித்ததும் இப்ராஹீம், மூஸா மற்றும் ஈஸா (இயேசு) வுக்கு நாம் வலியுறுத்தியதும் “மார்க்கத்தை நிலை நாட்டுங்கள்! அதில் பிரிந்து விடாதீர்கள்!” என்பதே. நீர் எதைநோக்கி அழைக்கிறீரோ அது இணை கற்பிப்போருக்குப் பெரிதாக உள்ளது. அல்லாஹ், தான் நாடியோரைத் தனக்காகத் தேர்வு செய்கிறான். திருந்துவோருக்குத் தன்னை நோக்கி வழிகாட்டுகிறான்.” (திருக்குர்ஆன் 42:13)

அந்த வகையில் இயேசு (அலை) அவர்கள் ஒரு இறைத்தூதராகவும், முஸ்லிமாகவும் இருந்தார்கள். மேலும், இறைத் தூதர் இயேசு (அலை) அவர்களை முஸ்லிம்கள் மிக உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கின்றனர். அவரது பெயரை உச்சரிக்கும் போது அன்னாரின் மீது சர்வ வல்லமை பொருந்திய கர்த்தரின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் என்று பிரார்த்தித்து போற்றுகின்றனர்.

இந்த சுருக்கமான அறிமுகத்தோடு பைபிள் மற்றும் திருக்குர்ஆன் ஒளியில் இயேசு குறித்த நோக்குவோம்.

கர்த்தரிடம் கேட்கிறபடி நியாயந்தீர்க்கும் இயேசு

பைபிளின் புதிய ஏற்பாட்டு நூலான யோவான் அதிகாரம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

“நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை!” யோவான் 5 அதிகாரம், வசனம் 30

மேலுள்ள வசனத்தில் இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள், நான் என் இஷ்டப்படி எதையும் செய்யவில்லை. மாறாக, கர்த்தரிடம் இருந்து எனக்கு எவ்வாறு கட்டளையிடப்படுகின்றதோ, நான் எவ்வாறு கேட்கின்றேனோ அவ்வாறே செயற்படுகின்றேன். என்று கூறுகின்றார்கள். இதுவே இறைத் தூதர்களின் பண்பும் பணியுமாகும்.

இறைவனிடமிருந்து தங்களுக்கு எவ்வாறு இறைத்தூது வருகின்றதோ அவ்வாறே அவர்கள் செயற்பட்டார்கள். இஸ்ரவேல் மக்களுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதரான இயேசு (அலை) அவர்களும் அவ்வாறே செயற்பட்டார்கள். இதோ அருள்மறைக் குர்ஆன் குறிப்பிடுகின்றது.

“இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (அவரை அனுப்பினான்.) “உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்; அல்லாஹ்வின் விருப்பப்படி அது பறவையாக ஆகும். அல்லாஹ்வின் விருப்பப்படி பிறவிக் குருடையும், குஷ்டத்தையும் நீக்குவேன்; இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்; நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்குச் சான்று உள்ளது (என்றார்)”. (அல்குர்ஆன் 03:49)

ஆகவே, தன்னால் சுயமாக எதுவும் செய்ய முடியாது. மாறாக, சர்வ வல்லமை பொருந்திய கர்த்தரின் நாட்டப்படியே சகல காரியங்களும் நடைபெற முடியும் என்று யார் நம்புகின்றாரோ அவர் ஒரு முஸ்லிம். எனவே, இயேசு (அலை) அவர்களும் ஒரு முஸ்லிமாவார்கள்.

கர்த்தரை மாத்திரம் வணங்குவதே முதலாம் கற்பனை

இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் கர்த்தராகிய இறைவனை மாத்திரம் வணங்குமாறு கட்டளையிட்டதாக மத்தேயு வசனம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

“போதகரே! நியாயப் பிரமாணத்தில் எந்தக் கற்பனை பிரதானமானதென்று கேட்டான். இயேசு அவனை நோக்கி உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனத்தோடும் அன்பு கூருவாயாக. இது முதலாம் பிரதான கற்பனை.”

மத்தேயு 22:36-38

மேலுள்ள வசனத்தில் இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள், முழு மனதோடு சர்வ வல்லமை பொருந்திய இறைவனை அன்பு கூறுவதே (வணங்கி வழிபடுவதே) மிகப் பிரதானமானது என்று கூறுகின்றார்கள்.. இவ்வசனத்தை மிக உன்னிப்பாக நாம் கவனிக்க கடமைப்பட்டுள்ளோம். கிறிஸ்த்தவ அன்பர்கள் சொல்வது போன்று இயேசு கடவுளாக, கடவுளின் மகனாக இருந்திருந்திருந்தால் தன்னை வணங்குவதை பிரதானமானது என்று கூறியிருப்பார்கள். இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் குறைந்தபட்சம் கர்த்தருடன் இணைத்து தன்னையும் வணங்குமாறு கூட கட்டளையிடவில்லை. மாறாக, தேவனாகிய கர்த்தரை, மாத்திரம் அல்லவா வணங்கச் சொல்கின்றார்கள்.

இதோ திருமறைக் குர்ஆன் பேசுகின்றது.

“மனிதர்களே! உங்களையும், உங்களுக்கு முன் சென்றோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள்! இதனால் (தண்டனையிலிருந்து) தப்பித்துக் கொள்வீர்கள்.” (அல் குர்ஆன் 02:21)

இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் தனது போதனைகளில் மிகப் பிரதான விடயமாக கர்த்தர் ஒருவரே கர்த்தர். எனவே, அவனையே வணங்கி வழிபட வேண்டும் எனப் போதிக்கின்றார்கள்.

யார் ஒருவர் கர்த்தராகிய ஏக இறைவனுக்கு மாத்திரம் வணக்கம் செலுத்தப்பட வேண்டும் என்று நம்பி, அதன்படி செயற்படுகின்றாரோ அவர் ஒரு முஸ்லிம். எனவே, இயேசு (அலை) அவர்களும் ஒரு முஸ்லிமாவார்கள்.

தேவனாகிய கர்த்தர் ‎ஒருவரே கர்த்தர்

இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் தன்னை வணங்காது, ஏக இறைவனை மாத்திரம் கர்த்தராக ஏற்றுச் செயற்படுவதே கற்பனைகளில் பிரதானமானது, எனப் போதித்ததாக புதிய ஏற்பாட்டு நூலான மாற்கு அதிகாரம் குறிப்பிடுகின்றது.

“இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான ‎கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ‎ஒருவரே கர்த்தர்.‎ மாற்கு அதிகாரம் 12 : 29

இதனை திருமறைக் குர்ஆனும் பின்வருமாறு உறுதி செய்கின்றது.

“உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒரு இறைவனே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. (அவன்) அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.” (அல்குர்ஆன் 02:163)

யார் கர்த்தர் ஒருவரே வணங்கி வழிபடத் தகுதியானவர் என நம்புகின்றாரோ அவர் ஒரு முஸ்லிம். எனவே, இயேசு (அலை) அவர்களும் ஒரு முஸ்லிமாவார்கள்.

பிதாவாகிய கர்த்தரின் சித்தப்படியே காரியங்கள் நடைபெறும்

கர்த்தரின் நாட்டப்படியே சகல காரியங்களும் நடைபெறும். மாறாக, சர்வ வல்லமை பொருந்திய கர்த்தரின் அதிகாரத்தில் தனக்கு எவ்வித பங்கும் இல்லை. பரலோக இராஜ்ஜியத்தில் தனக்கு அருகாமையில் யார் இருக்க வேண்டும் என்று கர்த்தர் நாடுகின்றாரோ அவரே தனக்கு நெருக்கமானவராக இருக்க முடியும். தான் விரும்புவர்களை தனக்கு நெருக்கமாக வைத்துக் கொள்கின்ற அதிகாரம் தன்னிடம் இல்லை. மாறாக, அந்த அதிகாரம் கர்த்தரிடமே உண்டு என இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள். பறைசாற்றுகின்றார்கள்.

“அப்பொழுது செபெதேயுவின் குமாரருடைய தாய் தன் குமாரரோடு கூட அவரிடத்தில் வந்து, அவரைப் பணிந்து கொண்டு, உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் பண்ண வேண்டும் என்றாள். அவர் அவளை நோக்கி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள் உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய இவ்விரண்டு பேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்ய வேண்டும் என்றாள். இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்டுக் கொள்கிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா? என்றார். அதற்கு அவர்கள் கூடும் என்றார்கள். அவர் அவர்களை நோக்கி, என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்; ஆனாலும், என் வலது பாரிசத்திலும் என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம் பண்ணப் பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.

மத்தேயு 20:20-23

கர்த்தரே சகல காரியங்களின் மீதும் ஆற்றல் உள்ளவர் (அல்குர்ஆன் 39:62), கர்த்தரின் சித்தப்படியே சகல காரியங்களும் நடைபெறுகின்றன (அல்குர்ஆன் 03:49) என்பதை அருள்மறைக்குர்ஆனும் உறுதி செய்கின்றது.

ஆகவே, யார் கர்த்தரின் சித்தப்படி தமது காரியங்களை அமைத்துக் கொள்கின்றாரோ, கர்த்தரின் சித்தப்படியே அனைத்துக் காரியங்களும் நடைபெறுவதாக நம்புகின்றாரோ அவர் ஒரு முஸ்லிம். எனவே> இயேசு (அலை) அவர்களும் ஒரு முஸ்லிமாவார்கள்.

தேவனுடைய விரலினால் பிசாசுகளைத் துரத்திய இயேசு

இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் இறைவனோ அல்லது இறைமகனோ கிடையாது. மாறாக, இறைவனை சார்ந்து, இறைகட்டளைகளுக்கு அடிபணிந்து வாழ்ந்த ஒரு தீர்க்கதரிசி என்பதை பைபிளின் புதிய ஏற்பாட்டு நூல்களான யோவான், லூக்கா அதிகாரங்கள் பின்வருமாறு இரத்தினச் சுருக்கமாக விபரிக்கின்றது.

“நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.”

யோவான் 5 அதிகாரம் வசனம் 30

“நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.”

லூக்கா 11 அதிகாரம் வசனம் 20

மேலுள்ள வசனங்களில் இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் தேவனாகிய இறைவனை சார்ந்து, தேவனாகிய கர்த்தரின் சித்தப்படியே காரியமாற்றுவதாக, பிசாசுகளைத் துரத்துவதாக குறிப்பிடுகின்றார்கள்.

இதோ திருமறைக்குர்ஆன் பேசுகின்றது.

“அவர்கள் புறக்கணித்தால் எனக்கு அல்லாஹ் போதுமானவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; அவனையே சார்ந்துள்ளேன்; அவனே மகத்தான அர்ஷின் இறைவன் என கூறுவீராக! (அல்குர்ஆன் 09:129)

யார் கர்த்தரை சார்ந்து, கர்த்தரின் கட்டளைக்கிணங்க செயற்படுகின்றாரோ அவர் ஒரு முஸ்லிமாவர். எனவே, இயேசு (அலை) அவர்களும் ஒரு முஸ்லிமாவர்கள்.

நெருங்கி வரும் மறுமை – பஹ்ரைன் தொடர் விழிப்புணர்வுப் பிரச்சாரம்
நெருங்கி வரும் மறுமை – பஹ்ரைன் தொடர் விழிப்புணர்வுப் பிரச்சாரம் – (19 – 27 Apr 2013)

சொர்க்கவாசிகளின் அழகிய பண்புகள்

இஸ்லாம் கூறும் மறுமை வாழ்வு

மறுமையின் பேரதிர்ச்சிகள்

மறுமையின் பெரிய பத்து அடையாளங்கள்

பயம் தரும் மண்ணறை வாழ்க்கை

மறுமையின் வேளை நெருங்கிவிட்டது

மரணமும் மனிதனும்