Home » பொதுவானவை » இயேசுவின் சிலுவை மரணம் – பைபிளின் முரண்பட்ட நிலை

இயேசுவின் சிலுவை மரணம் – பைபிளின் முரண்பட்ட நிலை

Articleஇயேசு, பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார். (லூக்கா 23:46)

உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்தான். . மற்றவர்களோ, பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள். இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார். (மத்தேயு 27: 48-50)

கடவுள் மரணமடைவாரா? இல்லை. ஒரு போதும் இல்லை. பிறப்போ இறப்போ இல்லாதவனே இறைவன். ஆனால் கடவுளின் மூன்று ஆள்த் துவங்களில் ஒருவராகக் கிறித்தவர்களால் கருதப்படும் இயேசு பிறப்பும் இறப்பும் உடையவர். மரியாளின் மகனாகப் பிறக்கின்றார். மரணித்தபின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாகவும் கிறித்தவர்கள் நம்புகின்றனர். இதனை பைபிளும் கூறுகின்றது. இயேசுவின் மரணத்துக்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையே திரித்துவத்தின் மூன்று ஆள்த்துவங்களில் ஒருவர் இல்லை. அந்த இடைவேளையில் இருந்தது இருவர் மட்டுமே! அப்படியானால் இருமைத்துவமும் கிறித்தவத்தில் உள்ளது என்று கூறலாமா? காரணம் திரித்துவத்தை மீட்சி அடைவதற்கான கொள்கையாகக் கிறித்தவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இயேசு இல்லாதிருந்த அந்த மூன்று நாட்கள் கடவுள் இருவராக மட்டுமே இருந்துள்ளனர். ஒருவர் இல்லை. திரித்துவத்தின் அடிப்படையை இது கேள்விக்குறியாக்குகிறது.

இயேசு தன் ஆன்மாவை ஒப்புக் கொடுத்தார் என்றும் கிறித்தவர்கள் கூறுகின்றனர். இயேசுவே கடவுள் எனில் பிறகு ஏன் மற்றொரு கடவுளிடம் தன் ஆன்மாவை ஒப்புவிக்க வேண்டும்? அவ்வாறெனில் பிதாவும் புத்திரனும் ஓரே சக்தி பெற்றவர்கள் என்றும் மகத்துவத்தில் சமமானவர்கள் என்றும் கிறித்தவர்கள் கூறுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

சிலுவை மரணம் என்ற பான பாத்திரத்தை தன்னை விட்டும் அகற்றுமாறு இயேசு கடவுளிடம் மன்றாடுவதாக பைபிள் கூறுகிறது. தன்னை சிலுவை மரணத்திலிருந்து காப்பாற்ற பிரார்த்திக்குமாறு தன் சீடர்களிடமும் வேண்டிக் கொள்கிறார். இந்த பிரார்த்தனையை கடவுள் ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை?

பைபிளின் அடிப்படையில் இயேசுவின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டதா?

பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவ பக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார். (யோவான் 9:31)

மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் இயேசுவின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்க வேண்டும் அல்லவா? இல்லை என்றால் இயேசு தெய்வ பக்தியுள்ளவராக இருந்து, தெய்வத்தின் சித்தத்தைச் செய்தவராக இருந்தும் அவரது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படவில்லையா?

பைபிள் குறிப்பிடும் இன்னுமொரு சம்பவம்:

இறந்து கிடந்த லாசர் என்பவரின் சகோதரி மார்த்தாள் என்ற பெண் இயேசுவிடம் கூறினாள்,

மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து, ஆண்டவரே, நீர் இங்கு இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுவது எதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவார் என்று அறிந்திருக்கிறேன் என்றாள் (யோவான் 11: 21,22)

கடவுளிடம் நீர் எதைக் கேட்டாலும் உனக்குத் தருவார் என்று இயேசுவைப் பற்றி நன்கறிந்த அப்பெண் கூறுகிறாள். இயேசுவும் அதனை மறுக்கவில்லை. அப்படியெனில் சிலுவை மரணம் என்ற பான பாத்திரத்தை தன்னை விட்டும் நீக்குமாறு இயேசு மனமுருகி வேண்டிய போது அது இறைவனால் ஏற்றுக் கொள்ளப் படாமல் இருந்திருக்குமா?

அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பரிசுத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு, (எபிரேயர் 5:7)

சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து, என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். (மத்தேயு 26: 39)

மேற்கண்ட எபிரேயர் 5:7 வசனம் இயேசுவின் சிலுவை மரணம் என்ற பான பாத்திரத்தை அவரிலிருந்து அகற்ற வேண்டும் என்ற வேண்டுதலை கடவுள் ஏற்றுக் கொண்டார் என்ற செய்தியை அல்லவா கூறுகிறது? இல்லை என்று இதனை யாரேனும் மறுப்பார்களானால் “பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவ பக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்..” என்ற யோவான் 9:31 வசனத்தின் படி இயேசுவைப் பாவி என்று கூற வேண்டிய அபத்தமான நிலைக்கு தள்ளப்படுவர். அத்துடன் தேவ ஆவியானவரின் உந்துதலால் எழுதப்பட்டது என்று வாதிக்கப் படும் பைபிளின் வசனங்களையும் நிராகரிக்க வேண்டிய நிலை ஏற்படும். இயேசுவின் பிரார்த்தனையை ஊன்றிக் கவனிக்கும் எவருக்கும் அவர் மரணத்திலிருந்து தன்னைக் காப்பாற்றவே அவ்வாறு காப்பாற்ற சக்தியுடைய கடவுளிடம் பிரார்த்தித்தார் என்பது புலப்படும். பயபக்தியுடன் கேட்ட அவரது வேண்டுதல் ஏற்றுக் கொள்ளவும் பட்டது. சிலுவை மரணத்திலிருந்து அவர் காப்பாற்றப்பட்டார். பைபிளின் கூற்றுப் படி இவ்வாறே கருத இடமுண்டு. திரித்துவக் கொள்கைப் படி பிதாவின் விருப்பமும் புத்திரனின் விருப்பமும் ஒன்றாக இருக்க வேண்டுமல்லவா? அவ்வாறு இல்லை எனில் திரித்துவக் கொள்கையின் அடிப்படைக்கு இது முரணாக அமைகிறது.

கிறித்தவர்கள் இயேசு என்று குறிப்பிடும் ஈஸா நபி அலைஹிஸ்ஸலாம் ஒரு மனிதராக இருந்தார். இஸ்ராயீல் சமூகத்துக்கு அனுப்பப்பட்ட ஒரு நபியாக இருந்தார். அவரைக் குறித்து குர்ஆன் குறிப்பிடும் போது இப்னு மர்யம் (மர்யமின் மகன்) என்று குறிப்பிடுகிறது. அவர் சிலுவையில் அறைந்து கொல்லப் பட்டதாகக் கிறித்தவர்கள் நம்புகின்றனர். அது வெறும் யூகம் மட்டுமே என்று குர்ஆன் கூறுகிறது. இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப் பட்டதாக பைபிள் குறிப்பிட்டாலும் அநேக இடங்களில் அதற்கு முரணான தகவலையும் தருகிறது. இத்தகைய முரண்பாடுகள் குர்ஆனின் கூற்றை உண்மைப் படுத்துவதுடன் அகிலங்களின் இறைவனால் அருளப்பட்ட இறைவேதத்தின் உறுதித் தன்மையைப் பறைசாற்றுகிறது.

மேலும், ‘நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுடைய தூதரான மர்யமின் மகன் ‘ஈஸா மஸீஹை’ கொன்று விட்டோம்’ என்று அவர்கள் கூறியதாலும் (சபிக்கப்பட்டனர்.) மேலும், அவரை அவர்கள் கொல்லவுமில்லை; அவரைச் சிலுவையில் அறையவுமில்லை; ஆயினும், அவர்களுக்கு, அவர் (போன்று ஒருவர்) ஒப்பாக்கப்பட்டார். நிச்சயமாக இதில் கருத்து வேறுபாடுகள் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே உள்ளனர். வெறும் யூகத்தை பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு அதுபற்றிய (உண்மையான) எந்த அறிவும் இல்லை. அவரை அவர்கள் உறுதியாகக் கொல்லவேயில்லை. எனினும், அல்லாஹ் அவரைத் தன்பால் உயர்த்திக் கொண்டான். மேலும், அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தோனும், ஞானமுள்ள வனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 4: 157, 158)

21 comments

 1. நண்பரே இதற்கு ஏதேனும் விளக்கம் தரமுடியுமா?

  http://en.wikipedia.org/wiki/Stigmata

 2. //சிலுவை மரணத்திலிருந்து அவர் காப்பாற்றப்பட்டார். பைபிளின் கூற்றுப் படி இவ்வாறே கருத இடமுண்டு.//

  அவ்வாறு கருத வேண்டிய அவசியமின்றி, மிக மிகத் தெளிவாகவே “இயேசுவின் பிரார்த்தனையை கர்த்தர் கேட்டருளியதாக” பைபிளில் உள்ளது.

  கடவுள் சிலுவையில் அறையப்பட்டு இறந்து போனதை ஏற்றுக்கொள்ள முடியாமல் “மதம் மாறி” வெளியான கிருமி ஒன்றிடம், “அவர் சிலுவையிலிருந்து கர்த்தரால் காப்பாற்றப்பட்டு விட்டதாக பைபிளில் உள்ளது, பைபிளை ஒழுங்காகப் படியுங்கள்” என நானும் கடந்த இரு வருடங்களாக கத்திப் பார்த்து தளர்ந்து விட்டேன். அந்தக் கிருமி இப்பொழுதும் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறது.

  “இயேசு சிலுவையில் மரணமடைவதிலிருந்து கர்த்தர் காப்பாற்றி விட்டதாக தெளிவாகவே பைபிளில் உள்ளது”. இதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம். இல்லை எனக் கூற எந்த கிறிஸ்தவருக்காவது தைரியம் உள்ளதா?

 3. செல்வராஜ் அவர்களே, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  Stigmata என்ற வார்த்தைக்கு இயேசுவின் உடலில் சிலுவையில் அறையப்பட்டதால் ஏற்பட்ட வடுக்கள் என விக்கி பீடியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பவுலின் நிருபத்தை ஆதாரமாகக் கொண்டதாகும் எனவும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளதைப் பார்க்கவும் (The term originates from the line at the end of Saint Paul’s Letter to the Galatians where he says, “I bear on my body the marks of Jesus,” ) . பவுல் உருவாக்கிய கிறித்தவ மதத்திற்கும் இயேசுவின் உபதேசங்களுக்கும் மத்தியில் மிகப்பெரியவேறுபாடுகள் இருப்பதை பைபிளின் ஏராளமான வசனங்களைக் கொண்டு நிருபிக்க முடியும். மேலும் பவுலுடன் கொள்கை வேறுபாடு கொண்ட பர்னபாஸின் சுவிசேஷம் இயேசு சிலுவையில் அறையப்பட்டதை மறுப்பதுடன் இயேசு மூன்று வானவர்களால் மேல் உலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்பதைத் தெளிவு படுத்துகிறது.

  விக்கிபீடியாவின் பின் வரும் வாசகத்தைக் கவனிக்கவும்

  Reported cases of stigmata take various forms. Many show some or all of the five Holy Wounds that were, according to the Bible, inflicted on Jesus during his crucifixion

  பைபிளின் கூற்றுப்படி (according to bible) என்று தான் குறிப்பிடப் பட்டுள்ளது. அதே பைபிளில் தான் சிலுவையில் அறையப்டாததற்கும் ஆதாரம் உள்ளது. இயேசுவுக்குப் பின்னர் 60 அல்லது 70 ஆண்டுகள் கழித்து எழுதப்பட்ட சுவிசேஷங்களில் இயேசுவின் வாழ்வை விவரிப்பதில் அநேக முரண்பாடுகள் உள்ளன. குறிப்பாக சிலுவை மரணம் குறித்த குறிப்புகளில் இது மலிந்து காணப்படுகிறது. இயேசுவின் தீவிர நேசராக இருந்த பர்னபாஸின் சுவிசேஷம் இயேசு சிலுவையில் அறையப்படவில்லை என்பதைத் தெளிவாக விளக்குகிறது. மேலும் பின்வரும் தொடுப்புகளையும் பார்வையிடுங்கள்

  http://barnabas.net/life-of-barnabas.html
  http://en.wikipedia.org/wiki/Gospel_of_Barnabas
  http://www.answering-christianity.com/barnabas.htm

 4. சத்ய வேதம் இவ்வாறு கூறுகிறது ….

  சங்கீதம் 14:3 எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.

  சங்கீதம் 53:3 அவர்கள் எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவனில்லை, ஒருவனாகிலும் இல்லை.

  இவ்வாறு கெட்டு போன நர ஜீவனை மீட்க இயேசு மனிதனாக இந்த உலகிற்கு வந்தார்..
  ————————————————————–
  முன்னறிவிப்பு
  மீகா 5:2 எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது..

  இயேசு பிறப்பு

  மத்தேயு 2:1 ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து
  —————————————————————-
  இறை திட்டம்
  யோவான் 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

  மத்தேயு 18:14 இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல

  மத்தேயு 18:11 மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார்
  ————————————————————
  இயேசுவின் வார்த்தைகள் :
  மத்தேயு 26:28 இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது

  யோவான் 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
  —————————————————————
  நித்தியஜீவன்..
  ரோமர் 6:23 பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்

 5. Sunil,

  That is not crucifixion and that is cruci-fiction.

  இயேசு சிலுவையில் அறையப்படவில்லை என்பதை தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள வீடியோவைப் பார்க்கவும்.

  http://www.youtube.com/watch?v=evKadyxCg3I&feature=PlayList&p=58BFB23FD41B18F8&playnext=1&playnext_from=PL&index=27

 6. Assalamu Alaikkum,

  My other religion friend asking this question.Please reply it.

  Then only other religion people know about islam.

  //குர்ரான் சொல்வதுபோல் இயேசு சிலுவையில் அறையப்படவில்லை அவருக்கு பதில் வேறொருவர் மாற்றப்பட்டார் என்றே வைத்துக்கொள்வோம். இந்த உண்மையை ஏன் இயேசு (அல்லது இறைவன்) சீடர்களுக்கு கூட
  தெரிவிக்கவில்லை? அவர் தெரிவிக்காமல் போனதால்தானே இந்த சீஷர்கள் எல்லோரும் தவறான கருத்துகொண்டு பிரச்சாரம் செய்து கிறிஸ்த்தவம் என்றொரு மதத்தை உருவாக்கி இன்று உலகில் முதல் பெரிய மதமாக நிற்கிறது. இங்கு கிறிஸ்த்தவம் உருவாக காரணம் யார்? இயேசுவின் சீடர்களா அல்லது இயேசுவை பின்பற்றிய சீடர்களுக்கு கூட உண்மையை சொல்லல் அவரை எடுத்துக்கொண்ட இறைவனின் பொறுப்பற்ற செயலா?//

 7. அன்புச் சகோதரர் சித்தீக் உங்கள் கேள்விக்கான பதில் கூடுதல் விளக்கங்களுடன் தனிக்கட்டுரையாகப் பதியப்படும் இன்ஷா அல்லாஹ்!

  அன்புடன்
  தேங்கை முனீப்

 8. Assalamu Alaikkum,

  Still iam not getting reply.

 9. Siddiq –

  We can not think even imagine on how Allah can do ?

  He knows what is better for this worls, and how these people will react ..

  So, We should not blame God..

 10. i thing ur wasting ur energy time etc if u want service god if u want pray god u go to service the people (service to others is service to god)who deserves, and learn respect humanity, religion, caste, country, language, border, its all made by human (its all my own thought arrived by number events including science history, even day to day life) i thing ur kind of people pretending as a real worshiper of god yes i can say 100% ur pretending. my advice is go to work for the people who is in trouble, beyond race religion language color border etc why i am saying this, every country spending money for arms more than their people spent to eat food. i have certain questions if any of u firm believer of god please email me senthil-c@in.com i am dreaming one world one people

 11. my dear brother senthil,i kindly reqesting you please be learn the holley kur-aan,in tamil or english and or any other languages,i can understand you are educated by your sentences,i can send you if you are interset,you learn after that we will arque,just i ll give below this link its usefull for you.
  http://www.youtube.com/watch?v=URkzgYxPqgU

 12. to senthil.

  Can we serve the plants and animals, since they are also creations of God ?

  Moreover, since these plants and animals serve human, so we should serve these right? therefore, it becomes as if, “serving plants, fruits, vegetables and animals is equal to serving Human right”?

  if u say that we should serve people, who will serve these natural things ? can we let them just decay and destroy?

  if u think my question is not correct or foolish , then u must understand something.

  The reason/ purpose of creation of these plants and animals are one and the purpose of creation of Human [Allaah created us] is another.

  ————____________————-

  It should be noted that Allaah has created man to worship Him, as He says (interpretation of the meaning):

  “And I (Allaah) created not the jinn and mankind except that they should worship Me (Alone)”

  [al-Dhaariyaat 51:56]

  Allaah has created for man and has subjugated to him what is in the heavens and on earth, so that he may benefit from it and enjoy it, and meet his needs, and use it to help him to worship Allaah.

  Allaah says (interpretation of the meaning):

  “He it is Who created for you all that is on earth”

  [al-Baqarah 2:29]

  “And has subjected to you all that is in the heavens and all that is in the earth; it is all as a favour and kindness from Him. Verily, in it are signs for a people who think deeply”

  [al-Jaathiyah 45:13]

  “And He has made the sun and the moon, both constantly pursuing their courses, to be of service to you; and He has made the night and the day, to be of service to you”

  [Ibraaheem 14:33]

  By Brother Salih al Munajjid [just a quotation,]
  ———–____________————–

  I invite u to the religion of Islam to worship Allaah and save urself and ur family from a Fire, whose fuel is Men and stones.

  Dr. Saleh As Saleh (rahimahullah) said,” The Slavery of the Heart to Allaah is the True Freedom”

  And Allaah knows Best, The All-Wise

  May Allah guide u and me and the readers.

  Sulthaan

 13. to senthil,

  those words were written, for arguing with u, but to convey the Message.

  We are not the guide [guiders] to all , but just warner.

  True guidance is the Guidance of Allaah, our Creator.

  I hope u understand and spread the Truth.

  Sulthaan

 14. Dear Senthil,
  That’s what exactly Allah says in Quran that you help the poor that means you helped me. Even zakat is one of the main pillers of Islam which insists everyone to help the needy people. this doctorine never taught by any other religion. I advise brother senthil to read the meaning of Quran the final revalation sent to the humankind by our creator. if we all follow then the whole world become one people, one world as u said.
  rahmath.

 15. A correction

  to senthil,

  those words were NOT written, for arguing with u, but to convey the Message.

 16. Please read church History. If it (Christianity) made by man, it may be demolished. More than 2000 years is being in this world. Lot of kings and lot of other religious leaders tried to destroyed utterly the Christianity. Nobody could..,
  U r also

 17. Yes Mr. Emilsingh,

  No Muslim Imam ordered war against Christians and advise them to demolish the churches. So called God’s Representative of the World as per Chrisianity ordered the rulers and Kings of Europe to start Crusade War against Muslims & killed millions in the name of Relegion. This is History read Crusade War 1 & 2.

  After all they did and now they are blaming Islam & Muslims. Yes we know very well Christian’s human services to the mankind for what pupose? Can you show me is any Muslim Country rulled the world with Iron Fist like UK? Still USA acting as world police man.

  They want to convert the poor & needy people to their relegion and the west (Christian Govts) providing Billions of aid for these purpose. Till date they did not succeded.

  See the Prophet Mohammed history, a man without Kingdom & no organised army and eating Dates and drinking muddy water spread the Islam as he received from Allah (God) without spending any money. Still it is challenging all the corner of the World and all others are afraid of it and one day you will the truth if you have open heart.

 18. அன்பு நண்பரே! இயேசுவின் வேண்டுதலைக் கேட்காதபடியால் அவர் பாவியென கருதலாம் என கூறியுள்ளீர்கள். இங்கே நான் எனது கருத்தை தெரிவிக்கிறேன். அதாவது நீங்கள் கடவுளால் அருளப்பட்ட இறைவேதம் என நம்புகிற உங்களது குரான“ ஈஸா நபியைப் பற்றி என்ன கூறுகிறது என்பதை நம்புவீர்களா?
  1.பரிசுத்த ஆன்மாரவைக் கொண்டு வலூவூட்டப்பட்டார் இயேசு- நபி (ஈஸா) என கூறும் குரான்.முகம்மது நபி அவர்களைப் பற்றி அப்படி குரானில் எங்காவது கூறப்படவில்லையே. இதைச் சொல்பவர்களைிடம் கர்வம் கொண்டு புறக்கணிப்பதும், கொலை செய்வதும் இஸ்லாமியர் செய்யும் தவறு என குரானே கூறுவதை ஏற்றுக் கொள்வீரா?
  குரான் வசனம் இதோ!
  2:87. … இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம்; உங்கள் மனம் விரும்பாததை (நம்) தூதர் உங்களிடம் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் கர்வம் கொண்டு (புறக்கணித்து) வந்தீர்களல்லவா? சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரை கொன்றீர்கள்.

  2.நபிமார்களிடையே வேறுபாடு காட்டக்கூடாது என்றும் ஈஸா நபி கொண்டு வந்த வேதத்தை நம்ப வேண்டும். நம்புகிறோம் என அல்லாவிடம் வாக்குறுதி தரவேண்டிய நீங்கள், குரான் கூறுவதை ஏற்று ஈஸா நபியை மட்டும் இப்பழி பழித்துக் கூறினால் குரானின் வசனங்களுக்கு விரோதமாக செயல்படுவதாகத்தானே அர்த்தம்.

  குரான் வசனம் இதோ!
  2:136. (முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக.

  3. இயேசு கண்ணியமிக்கவர், தூய்மையானவர், இறைவனுக்கு நெருங்கியிருப்பவர்,என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன் என குரானில் அல்லாவே ஈஸாநபியை உயர்வாக தனக்கு நிகரானவராக குரான் கூறுகிறது. முகம்மது நபி பற்றி குரானில் எங்கும் அப்படி கூறவில்லையே?
  குரான் வசனம் இதோ!
  3:45. மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;

  3:55. “ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்;

  குரான் சொல்கிறபடி கண்ணியமிக்க இயேசுவை இப்படி பாவி எனக் கூறி குரானுக்கு விரோதமாகப் பேசலாமா? நீங்கள் பைபிளை நம்புகிறீர்களோ இல்லையோ! குரானை நம்புவது உண்மையாக இருந்தால் இப்படி குரானின் சட்டத்திற்கு விரோதமாக பேசுவதும்,எழுதுவதும் அல்லா கூறியபடி நரகத்தற்குதானே உங்களை கொண்டு செல்லும். அந்த மேன்மைக்குரிய ஈஸா நபியைக் குறைவாகப் பேசுவதும் எழுதுவதும் குரானின் வசனங்களையே நீங்கள் நம்பவில்லை என்பதும்,ஏதோ இயேசுவுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் விரோதமாக ஏதாவது செய்துவிட வேண்டும் என எண்ணி குரான் கூறுகிறபடி நீங்கள் கர்வமிக்கவராக இருப்பதாகத்தானே அர்த்தமாகும் எனவே உண்மையை நிதானமாக ஆராங்ந்து பொறுமையாக எது உண்மையோ அதனை கடைபிடிக்கும்படி, பகைவர்களையும் நேசிக்கும் அன்புள்ளம் கொண்ட ஆண்டவர் இயேசுவின் இனிய நாமத்தில் வேண்டுகிறேன்.இன்னும் அநேக விளக்கங்களை குரானிலிருந்தே காண முடியும் மிண்டும் சந்திப்போம்.smilekutty@hotmail.com

 19. THIRU THENGAI MUNEEF AVARGALUKKU/ AVARAVAR MADAM AVARAVARGALUKKU UYARNDADU / UNGAL MADATHIN SAARBAAGA ORU INAYA THALATHAI VITHU KONDU MATRA MADATHAI PATTRI VIMARSANAM SEIYA VEENDAAM/ MATRA MADATHINARAI PUN PADUTHA VEENDAAM/ .ANBUDAN/NATPUDAN/S.ROSAIAH/
  ARAKKONAM

 20. நண்பர் ஸ்மைல் அவர்களுக்கு,

  எமது கட்டுரையை நீர் புரிந்து முழுமையாகப் படிக்கவில்லை என்று கருதுகிறேன். இயேசுவைப் “பாவி” என்றும் அவரது வேண்டுதலை இறைவன் ஏற்கவில்லை நாங்கள் குறிப்பிடவில்லை. அப்படிக் குறிப்பிடவும் மாட்டோம். அது எமது நம்பிக்கைக்கு எதிரானது. பைபிள் கூறும் சிலுவைக் கதைகள் அவரைப் பாவியாகக் கருத இடமளிக்கின்றன என்ற செய்தியைத்தான் சுட்டிக் காட்டினேன்.

  பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம் (யோவான்: 9:31) என்று சொன்னதன் மூலம் பிதாவே! என்று கவலைப்பட்டு அவர் வேண்டியும் ஏற்றுக் கொள்ளப்படாமல் அவர் சிலுவையில் அடிக்கப்பட்டார் என்பது எமது நம்பிக்கை அல்ல. பைபிளின் எழுத்தர்கள்தான் அப்படி எழுதி வைத்துள்ளனர்.

  அத்துடன் சிலுவையில் அடிக்கப்பட்டவன் கடவுளின் சாபத்துக்குரியவன் என்று கூறி (உபாகமம் 21:23) அந்த வகையில் இயேசுவும் சாபத்துக்குரிவர் ஆனார் என்று பவுல்தான் அவரை இழிவு படுத்துகிறாரே ஒழிய முஸ்லிம்களாகிய நாங்கள் அல்ல.

  இயேசு என்ற ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை மதிப்பதிலும் கண்ணியப்படுத்துவதிலும் கிறிஸ்தவர்களைவிட நாங்கள் அதிகம் உரிமைப்பட்டவர்களும் கடமைப்பட்டவர்களும் ஆவோம். உண்மையைச் சொல்லவேண்டுமெனில் கிறிஸ்தவர்கள் செய்வதைப் போல அவரை கண்ணியம் செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டே இழிவு படுத்தவில்லை. ஒர் இறைதூதருக்கு எத்தகைய கண்ணியம் வழங்க வேண்டுமோ அவ்வளவு கண்ணியத்தையும் அவருக்கு வழங்குகின்றோம். ஓர் இறைதூதரை எப்படி நேசிக்க வேண்டுமோ அப்படி அவரை நேசிக்கின்றோம். அவரி்ன் உபதேசங்களை, வழிகாட்டுதல்களை அப்படியே பின்பற்றுகின்றோம். அவருக்குப் பின்னால் வந்த இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அவரைப் பற்றிச் சொன்ன உண்மைகளை அப்படியே ஏற்றுக் கொள்கின்றோம்.

  அவர் அல்லாஹ்வின் தூதர். அல்லாஹ்வுடைய வார்த்தையால் உருவானவர்.. அதை அவன் மர்யமின் மேல் போட்டான். அவரைப் பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு வலுவூட்டினான்.

  அவர் மூலம் அல்லாஹ் இஸ்ரவேலர்களுக்கு நேர்வழி காட்டினான். அவர் களிமண்ணால் பறவையின் உருவத்தைச் செய்து அதில் ஊதியபோது அது அல்லாஹ்வின் அனுமதியோடு உயிருள்ள பறவையானது. பிறவிக் குருடர்களையும் தொழு நோயாளிகளையும் அல்லாஹ்வின் அனுமதிப்படி அவர் குணமடையச் செய்தார். மரணித்தவர்களை அல்லாஹ்வின் அனுமதிப்படி உயர்பெற்றெழச் செய்தார். மக்கள் தங்கள் வீடுகளில் மறைத்து மறைத்து வைத்திருப்பதை அவர்களுக்குச் சொல்லிக் காட்டினார். பின்னரும் தனக்குப் பின்னர் ஓர் இறைதூதரைக் குறித்தும் நற்செய்தி சொன்னார். யுக முடிவு நாளில் அவர் வெளிப்பட்டு வருவார். சிலுவைகளை உடைத்தெறிவார்.

  ஆனால் இத்தகைய தெளிவான சான்றுகள் அவரைப்பற்றி சொல்லப்பட்ட பின்னரும் யூதர்கள் அவரை இழிவு படுத்தி உருவாக்கிய சிலுவைக் கொள்கையை நம்பி அவரைக் கடவுளெனக் கருதி அவரையும் அவரது தாயையும் அகில உலகங்களையும் படைத்த இறைவனுக்கு இணை வைத்து நன்றி கொன்று வழிகேட்டின் அதலபாதாளத்தில் கிறிஸ்தவ பெருமக்கள் சென்று கொண்டிருப்பது எவ்வளவு கைசேதமானது?!

  யுக முடிவு நாளில் அவர் வெளிப்பட்டு வருவார். சிலுவைகளை உடைத்தெறிவார். இது முஹம்மது நபி (ஸல்) அவர்களால் அறிவிக்கப்பட்டது. இதை அப்படியே நம்புகின்றோம். இரண்டும் இரண்டும் நான்கு என்பதில் உங்களுக்கு எப்படி சந்தேகம் வராதோ அது போல இதில் சிறிதளவும் எங்களுக்கு சந்தேகம் இல்லை.

  அடுத்ததாக சில குர்ஆன் இயேசுவைப் பற்றி இன்னின்னவாறு சொல்வதாகக் குறிப்பிட்டுள்ளீர்! உம்மிடம் ஒரு கேள்வி. முதலில் குர்ஆனை இறைவேதம் என்று நீர் ஏற்றுக் கொள்கிறீரா? இயேசுவைப் பற்றி குர்ஆன் கூறுவது அத்தனையும் உண்மை என்று நாங்கள் நம்புகின்றோம். அதுபோலவே நீர் நம்புகின்றீரா? குர்ஆன் வசனங்களைக் கூறி எங்களை உபதேசித்து பைபிளின் முரண்பாடுகளை அடையாளப் படுத்துவதிலிருந்து எங்களை திசை திருப்ப முயற்சிக்கும் நீங்கள், இயேசு சிலுவையில் அறையப்படவே இல்லை குர்ஆன் என்று சொல்கிறதே! அதை ஏற்றுக் கொள்வீர்களா?

  இயேசுவின் சிலுவை மரணம் குறித்து பைபிள் தரும் முன்னுக்குப் பின் முரண்பட்ட செய்திகளும் எழுத்தர்களிடம் இது விசயத்தில் காணப்பட்ட முரண்பாடுகளும் “நிச்சயமாக இதில் கருத்து வேறுபாடுகள் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே உள்ளனர். வெறும் யூகத்தை பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு அதுபற்றிய (உண்மையான) எந்த அறிவும் இல்லை. என்ற குர்ஆன் (4:157) வசனத்தை மெய்ப்படுத்துவதாக உள்ளது. குழப்பங்களை விட்டொழித்து இந்த உண்மையின் பக்கம் நீங்கள் திரும்பினால் அது உங்கள் பரலோக வெற்றிக்கு வழி செய்யும். மேலும் இது தொடர்பான விரிவான பதிவைப் பார்வையிடுக.
  http://christianpaarvai.blogspot.com/2012/05/blog-post.html

  அன்புடன்

  தேங்கை முனீப்

 21. Jesus ooda birth & death & resurrection ellame avar vaazlntha antha century (1st century) ileyea pathivu seiyapattathu,Jesus kooda iruntha seesargal athai ezluthi vaithargal athai andru vaazlntha israeliergalum(jews)amothithargal-(no abjection)-Acts-2 read full chapter pg-162 in NTM.matra thesathilirundu vandha udergal ketka easuvin seesergal ithai thairiyamai prasangithargal oruvarum marukavillai easu siluvai il araiya padavillai endru angu vantha earum solavillai-ipadi iruka athan pin 600 varudangalulku pin vatha neegal eppadi sollalam Jesus siluvai il araiyapadavilai endru????????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *