Tue
18
Jul
2006

முத்தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு (பகுதி-3)

எழுதியவர்/பதிந்தவர்/உரை நல்லடியார்

முத்தமிழில் முதலாவதான இயற்றமிழ் வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்த தமிழ் முஸ்லிம்களில் சிலரைப் பற்றி முந்தைய பதிவுகளில் பார்த்தோம். இனி, நாகூர் தமிழ் புலவர்களின் இலக்கியப் படைப்புகள் பற்றியும் பார்ப்போம் .

வா. குலாம் காதிறு நாவலரின் படைப்பு இலக்கியங்களின் பட்டியல் இப்படி விரிகிறது:

1. பிரபந்தத் திரட்டு – சச்சிதானந்தன் பதிகம், இரட்டை மணிமாலை , முனாஜாத்து, திருநாகை யமகபதிற்றந்தாதி, நாகைப் பதிகம், முனாஜாத்து ஆகியவை அடங்கிய அழகிய கவிதைகளின் கோவை ஹிஜ்ரி 1292ஆம் ஆண்டு காரைக்கால் முகம்மது ஸமதானி அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டது .

2. ‘நாகூர்க்கலம்பகம்’ நாகூர் ஆண்டகை ஹலரத் மீரான் சாஹிபு அவர்கள் சிறப்பு விவரிப்பது. கி.பி. 1878ல் வெளிவந்தது.

3.’முகாசபா மாலை’ நாகூர் நாயகம் அவர்களின் கனவில் நிகழ்ந்த( தாகச் சொல்லப்படும்) விண்ணேற்ற நிகழ்ச்சிகள் குறித்த குறுங்காவியம். 13 படலங்கள் 300 பாடல்கள் கொண்டது. முதற்பதிப்பு 1899 ஆம் ஆண்டு காரைக்கால் முகம்மது ஸமதானி அச்சகத்தில் அச்சிடப்பட்டது. இரண்டாம் பதிப்பு 1883 ஆம் ஆண்டு இலக்கியச் செல்வர் எம்.செய்யது முஹம்மது ‘ஹஸன் ‘ அவர்களால் சென்னை, மில்லத் பிரிண்டர்ஸ் மூலம் வெளியிடப்பட்டது.

4. ‘குவாலியர்க் கலம்பகம்’ ஹலரத் முகம்மது கௌது குவாலீரீ அவர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு 101 பாடல்களாய் 1882ல் அச்சில் வந்தது.

5. ‘திருமக்காத் திரிபந்தாதி’ மக்க நகரின் சிறப்பு கூறும் 100 பாடல்கள் கொண்டது. 1895ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வச்சிரயந்திர சாலையில் அச்சிடப்பட்டது.

6. ‘நாகூர்ப் புராணம்’ ஹஜரத் சாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்களின் வாழ்வின் சிறப்பைக் கூறுவது . மலடு தீர்த்த படலம், சித்திரக் கவித் திரட்டு உட்பட 30 படலங்கள் 1359 விருத்தங்கள் கொண்டது. 1893ஆம் ஆண்டு ம. முகம்மது நயினா மரைக்காயர் பதிப்பு.

7. ஹலரத் செய்யிது அஹமது கபீர் ரிபாயி ஆண்டகை அவர்களின் வரலாறு; நூறுல் அஹ்மதிய்யா என்னும் அறபி நூலின் தழுவல். 2 காண்டங்கள் 43 படலங்கள் 2373 விருத்தங்கள். 1896ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. பெயர்: ‘ஆரிபு நாயகம்’.

8. ‘பகுதாதுக் கலம்பகம்’ ஹலரத் கௌது நாயகம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் அடங்கியுள்ள பகுதாது நகரின் சிறப்பைக் கூறும் 101 பாடல்கள். 1894ஆம் ஆண்டு சென்னை ஆறுமுக விலாச அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டது.

9. ‘பதாயிகுக் கலம்பகம்’ ஹலரத் செய்யிது அஹ்மது கபீர் ரிபாயி ஆண்டகை அவர்கள் அடங்கியுள்ள பதாயிகு நகர் சிறப்பு உரைக்கும் 101 பாடல்கள் கொண்டது. 1900ல் அச்சில் வந்தது. 1901 ஆம் ஆண்டு மதுரையில் நிறுவப்பட்ட நான்காம் தமிழ்ச்சங்கத்தின் பெருமைகள் உரைக்கும் நூல்.

10. மதுரைத்தமிழ்ச் சங்கத்துப் புலவராற்றுப் படை. இதன் முதற்பதிப்பு 1903 ஆம் ஆண்டு. மறுபதிப்பு 1968ல் வெளிவந்தது. பதிப்பித்தவர் இலக்கியச் செம்மல் கலாநிதி.ம.மு. உவைஸ்(இலங்கை). நாகூர் தறுகா ஷரீப் சிறப்புகளை 100 பாடல்களில் விவரிப்பது.

11. ‘தறுகா மாலை’ நாவலர் குலாம் காதிறு மகன் வா. கு. முஹம்மது ஆரிபு நாவலர் 1928ஆம் ஆண்டில் மூன்றாம் பதிப்பை வெளியிட்டுள்ளார் . முதல் மற்றும் இரண்டாம் பதிப்புகள் வெளிவந்த காலங்கள் குறிப்பிடப் படவில்லை. (கஃபா – மக்கா, மஸ்ஜுதுன் நபவி – மதீனா , பைத்துல் முகத்தஸ் – பாலஸ்தீன் ஆகிய மூன்று புனித இறையில்லங்கள் தவிர்த்து மற்றவை குறித்த மிகையான புகழ்ச்சிகளில் எனக்கு உடன்பாடில்லை – நல்லடியார்)

12. ‘மும்மணிக் கோவை’

13. ‘மக்காக் கோவை’

14. ‘மதினாக் கலம்பகம்’

15. ‘பகுதாதுய மக அந்தாதி’

16. ‘சச்சிதானந்த மாலை’

17. ‘சமுத்திர மாலை’

18. ‘மதுரைக் கோவை’

19. ‘குரு ஸ்தோத்திர மாலை’

20. ‘பத்துஹுல் மிஸிர் பஹனஷாப் புராணம்’

21. நாகூராரின் வரலாற்

பிரிவு: பொதுவானவை | 2 responses so far

Bookmark and Share
தொடர்புடைய பிற இடுகைகள்:
  • 2007 ஆம் ஆண்டின் (UNICEF) பரிசு பெற்ற புகைப்படம்
  • பள்ளிகளில் பாலியல் கல்வி – ஒரு கண்ணோட்டம்!
  • பழமைவாத,ஆணாதிக்கத் திருவள்ளுவர் !?!
  • தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங் பரிவாரங்கள் (பகுதி 1)
  • குடியரசு தின உறுதிமொழி

  • 2 Responses to “முத்தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு (பகுதி-3)”

    1. மு.மயூரன்மு.மயூரன்on 19 Jul 2006 at 12:52 am 1

      மிக நல்ல முயற்சி நல்லடியார்.

      தொடர்ந்து செய்யுங்கள்.

      ஈழத்து முஸ்லிம் அறிஞர்கள் பற்றிய தகவல்களையும் திரட்ட முடியுமானால் மிக நல்லது.
      மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    2. நல்லடியார்நல்லடியார்on 19 Jul 2006 at 1:36 am 2

      இத்தொடருக்கான குறிப்புகள் திரட்டிய வகையில் ஈழமுஸ்லிம் புலவர்கள் பற்றிய தகவல்கள் வெகு குறைவாகவே உள்ளன. உண்மையில் தமிழகக் கடற்கரையோர நகரங்களான தொண்டி, கீழக்கரை, காயல்பட்டினம், அதிராமபட்டினம் போன்ற பகுதியிலிருந்த முஸ்லிம்களில் பலர் ஈழத்துடன் பன்னெடுங்காலமாக வர்த்தக உறவு கொண்டிருந்தனர். அவர்களின் கலை, கலாச்சார பங்களிப்பு பற்றிய மேலதிக தகவல் கிடைத்தால் தயவு செய்து எனக்குத் தெரியப்படுத்தினால் இத்டொடரில் குறிப்பிட ஏதுவாகும்.

      தங்களின் மறுவருகைக்கு நன்றி மயூரன்.

    Trackback URI | Comments RSS

    Leave a Reply