E-mail us | Help | World Muslim Media | Disclaimer

இஸ்லாம்கல்வி அரங்கம்

 123
 123

Sun 23

Click here to bookmark this link.Channel Image00:46 தலித்-பார்ப்பானர் கூட்டு தமிழ்முஸ்லிம் மன்றம்
தலித்-பார்ப்பனர் கூட்டு தமிழ் நாட்டுக்கு வேட்டு








சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில், தலித் மாணவர்கள் தேவர் சாதி மாணவர்களைத் தாக்கியுள்ளனர். இத்தாக்குதல் மிகவும் கொடுரனான முறையில் நடந்ததை டிவி செய்தில் தமிழ் நாடே பார்த்தது. இதனை நேரடியாக கண்டிக்காமல் எழுத்தாளர் ஞாநி, எழுத்தாளர் வே. மதிமாறன் போன்றவர்கள் பழைய கதையைப் பேசிக் கொண்டிருக்கின்றனர். தமிழகம் தேவர் சாதி வெறிக்கு களமாக உள்ளது என்பதும், கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி போன்ற ஊர்களே அதற்கு சாட்சியாக உள்ளன என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆனால், அதற்காக, தலித் சாதியினரின் ஆயுதம் தாங்கிய வன்முறைக்கு நாம் புரட்சிகரத் தகுதி தர வேண்டுமா? இந்த வன்முறையில் ஈடுபட்ட தலித் மாணவர்கள் தமிழ் நாடு பகுஜன் சமாஜ் கட்சி மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள். மாயாவதி தலைமையில் உ.பியில் ஆட்சி அமைத்துள்ள இக்கட்சிக்கு, பார்ப்பனர்கள் பங்காளிகளாக உள்ளனர். தமிழ் நாட்டிலும் காலூன்றத் துடிக்கும் இக்கட்சி, ஆர்.எஸ்.எஸ் காரரான நடிகர் எஸ்.வி. சேகர், எம்.எல்.ஏவின் பிராமணர் பிரிவில் பொறுப்பு தருவதாக ஆசை காட்டி விலை பேசியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ செல்வப் பெருந்தகை இக்கட்சிக்குத் தாவி முதல் நாளே மாநிலத் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளார். ஐ.ஏ.எஸ் அதிகாரியும், தலித் இலக்கியவாதியுமான சிவகாமி தன் பதவியில் இருந்து விலகி இக்கட்சியில் சேர உள்ளார். சிவகாமி பெரியார் எதிர்ப்பிலும், திராவிட இயக்க எதிர்ப்பிலும் ரவிக்குமாருக்கு அக்காவாக இருப்பவர். இவர்கள் பிற்படுத்தப் பட்ட சாதி வெறியை மட்டும் தான் கண்டிப்பார்கள். பார்ப்பனர்களுடன் கூடிக் குலாவுவார்கள். இவையெதுவும் தமிழ் நாட்டின் அரசியலுக்கு நல்ல அறிகுறிகள் அல்ல. முஸ்லிம்களில் எப்படி தீவிரப்போக்குடையவர்களை நம் அணி சேர்க்கையில் இருந்து விலக்கி வைக்கிறோமோ, அவ்வாறே தலித்களில் பார்ப்பனர்களிடம் கூடிக் குலாவும் கூட்டத்தையும், வன்முறையைக் கையாளும் கூட்டத்தையும் நாம் ஒதுக்கி வைக்க வேண்டும். மார்க்சியம், பெரியாரியம், திராவிட இயக்க அரசியல் ஆகியவற்றை ஏற்ற இரா. அதியமான் அவர்களின் ஆதித் தமிழர் பேரவை போன்ற தலித் அமைப்புகளுக்கு கை கொடுத்து நாம் அரசியல் அரங்கில் முன்னணிக்கு கொண்டு வர வேண்டும். த.மு.மு.க, தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், இந்திய தேசிய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், இந்திய தேசிய லீக் ஆகிய முஸ்லிம் அமைப்புகளுக்கு ஒரு வேண்டுகோள்: தலித் அமைப்புகள் அனைத்தையும் ஒரே தரத்தில் மதிக்காமல் வன்முறை அமைப்புகளையும், பார்ப்பன அடிமைகளையும் தங்கள் அணியில் சேர்க்கக் கூடாது. அவர்களை தங்கள் மேடையில் ஏற்றக் கூடாது.
Click here to bookmark this link.Channel Image00:26 முஸ்லிம்கள் அரசியலில் ஒன்றுபட்டால் மத்திய அரசை நிர்ணயிக்கலாம்! நீதியின் குரல்
உ.பி முஸ்லிம்கள் அரசியலில் ஒன்றுபட்டால் மத்திய அரசை நிர்ணயிக்கலாம்!

லக்னோ மாநாட்டில் தமுமுக தலைவர் உரை!!


உ.பி. மாநிலம் லக்னோவில் முஸ்லிம் அரசியல் விழிப்புணர்வு பேரவையின் சார்பாக அரசியல் விழிப்புணர்வு மாநாடு கடந்த ஞாயிறு (நவம்பர் 9) அன்று நடைபெற்றது.


தமுமுக தலைவர் பேராசிரியர் டாக்டர் ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த உலமாக்கள், அறிஞர்கள், சமூக அமைப்புகளின் தலைவர்கள், முஸ்லிம் அரசியல் தலைவர்கள், வழக்குரைஞர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் பங்குக் கொண்டார்கள்.


இந்த மாநாட்டில் தமுமுக தலைவர் ஆற்றிய தலைமை உரை.


முஸ்லிம் அரசியல் விழிப்புணர்வு பேரவையின் சார்பாக நடைபெறும் இந்த மாபெரும் மாநாட்டில் பங்குக் கொண்டிருக்கும் நீங்கள் அனைவரும் இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதசேத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த நான் தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களின் அபிலாஷைகளை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 5.6 சதவிகிதம் மட்டுமே என்று 2001ல் எடுக்கப்பட்ட அரசு மக்கள்தொகை புள்ளிவிவரம் கூறுகின்றது.


இதே போல் உ.பி.யில் வாழும் முஸ்லிம்களின் மக்கள் தொகை 18.5 சதவிகிதமென அதே புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. இந்தப் புள்ளிவிவரங்கள் அதிகாரபூர்வமானவை ஆனால் ஆதாரப்பூர்வமானவை என்று நான் கருதவில்லை. இதை விடக் கூடுதலாக முஸ்லிம்கள் தமிழகத்திலும், உ.பி.யிலும் வாழ்ந்து வருவது தான் உண்மை நிலை. இருப்பினும் தமிழகத்தை விடப் பன்மடங்கு அதிகமாக நீங்கள் உ.பி.யில் முஸ்லிம்களாக வாழ்ந்து வருகின்றீர்கள் என்பதுதான் எதார்த்தமான உண்மையாகும்.


இந்தியாவில் எண்ணிக்கை அடிப்படையில் உ.பி.யில் தான் அதிகமாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.


சதவிகித அடிப்படையில் பார்த்தால் அசாமிற்கு அடுத்த நிலையில் முஸ்லிம்கள் உ.பி.யில் தான் வாழ்ந்து வருகின்றார்கள். உ.பி.யின் ஒரு பகுதி பிரிக்கப்பட்டு உத்தராஞ்சல் என்ற மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு, உ.பி.யில் தலித்களுக்கு அடுத்த இடத்தில் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் தான் உள்ளார்கள்.


இந்த உண்மைகளை அறிந்த நாங்கள் உங்களிடம் அதிகமாக எதிர்பார்க்கிறோம். உ.பி.யில் உள்ள 80 நாடாளுமன்றத் தொகுதிகளில் 35 இடங்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வகையில் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளார்கள். இதே போல் உ.பி.யில் உள்ள 403 சட்டமன்ற தொகுதிகளில் 130 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் தகுதியில் முஸ்லிம்கள் இருக்கின்றார்கள்.


உண்மை நிலை இப்படியிருப்பினும் மிகப் பெரும் கைசேதமாக முஸ்லிம்களை விட மிகக் குறைவாக வெறும் 7 அல்லது 8 சதவிகிதம் உள்ள யாதவர்கள் அல்லது அதனை விடக் குறைவான சதவிகிதத்தில் உள்ள உயர்சாதியினரால் நமது ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடிகின்றது நம்மால் வேடிக்கை தான் பார்க்க முடிகின்றது.


இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வாழும் உங்கள் மாநிலத்தில் 19 முதலமைச்சர்கள் இது வரை இருந்துள்ளனர். இவர்களில் ஒருவர் கூட முஸ்லிம்கள் இல்லை என்பது தமிழகத்தில் வாழும் எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கின்றது.


இதற்குக் காரணம் நமக்கு மத்தியில் ஒன்றுபட்ட அரசியல் நிலைப்பாடு இல்லாதது தான். இங்கு உ.பி.யில் பதிவு செய்யப்பட்ட முஸ்லிம் அரசியல் கட்சிகள் 15க்கும் மேற்பட்டவை இருப்பதாகக் கேள்வி பட்டேன். ஆனால் நாடாளுமன்றத்தில் தற்போது உ..பி.யில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 12 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் கூட இந்த முஸ்லிம் அரசியல் கட்சிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இல்லை.


இதே போல் தற்சமயம் உ.பி. சட்டமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 56 உறுப்பினர்களில் ஒருவர் கூட இந்த முஸ்லிம் அரசியல் கட்சியின் பிரதிநிதியாக அமரவில்லை. இது எங்கள் உள்ளத்திற்கு மிகுந்த வேதனையை அளிக்கின்றது.


இன்று முஸ்லிம்களின் பலத்த ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்திருக்கும் செல்வி மாயவதியின் ஆட்சியில் பிரமாணர்கள் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளது மட்டுமில்லாமல் இன்று அவர்களது ஆதிக்கம் தான் உ.பி.யில் மிதமிஞ்சி நிற்கிறது.


மாயாவதியின் அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்த்தில் உள்ள 21 அமைச்சர்களில் ஒரே ஒரு முஸ்லிம் அமைச்சர் தான் இருக்கிறார். இந்த அவல நிலையை மாற்றி அமைக்க நீங்கள் திட்டமிட்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது காலத்தின் கட்டாயமாகும்.


இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழகத்தில் எங்களது அனுபவத்தைப்பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.


1992 டிசம்பர் 6ல் உங்கள் மாநிலத்தில் உள்ள பைசாபாத் மாவட்டத்தில் உள்ள அயோத்தியில் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் ஏற்பட்ட ரணங்கள் எங்கள் மாநிலத்தையும் பாதித்தன. பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு எதிர்ப்புக்காட்டுவதற்காகக் கோவையில் வீதிக்கு வந்து கருப்புக் கொடி கட்டியவர்கள் மீது தடா சட்டம் பாய்ந்தது.


அநீதிக்கு எதிராக ஒரு சுவரொட்டி ஒட்டுவதற்குக் கூட நாதியற்ற நிலையில் முஸ்லிம் சமுதாயம் வாழ்ந்து வந்தது.


முஸ்லிம் அரசியல் கட்சித் தமிழகத்தில் இருந்தன. ஆனால் முஸ்லிம் சமுதாயத்தின் உள்ளக்குமுறல்களைக் கண்டுக்கொள்ளாமல் அவை பாராமுகமாகச் செயல்பட்டன.


இந்தச் சந்தர்ப்பத்தில் தான் 1995 ஆகஸ்ட் மாதம் நாங்கள் இழந்த உரிமைகளை மீட்பதற்கும், இருக்கும் உரிமையைக் காப்பதற்கும் என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினோம்.


அனைத்து முஸ்லிம்களுக்காகவும் தமுமுக அப்போது முதல் செயல்பட்டு வருகின்றது.


தமுமுகவின் தொடர் போராட்டத்தின் விளைவாகத் தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 3,5 சதவிகிதம் தனி இடஒதுக்கீட்டைத் தற்போதைய திமுக அரசு வழங்கியுள்ளது. இதன் காரணமாகப் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வியில் சென்ற ஆண்டை விடக் கூடுதல் மடங்கு முஸ்லிம் மாணவர்கள் இந்தத் தொழில் படிப்பில் சேருவதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.


தமிழக பிரச்னையில் மட்டுமில்லாமல் அனைத்திந்திய அளவிலும் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக நாங்கள் போராடி வருகிறோம். 2004 டிசம்பர் 6 அன்று நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்தினோம்.


இந்தப் போராட்டத்தின் விளைவாகத் தான் வாஜ்பேயி ஆட்சியின் போது தள்ளுபடி செய்யப்பட்ட பாபரி மஸ்ஜிதை இடித்தற்கான அத்வானி உள்ளிட்டோர் மீது போடப்பட்ட வழக்கு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.


இதே போல் அனைத்திந்திய அளவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கக் கோரி மார்ச் 7, 2007ல் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தி அனைத்துச்சமுதாயத் தலைவர்களையும் ஒன்றிணைத்துப் போராட்டம் நடத்தினோம்.


அரசியல் நடவடிக்கைகள் மட்டுமின்றி சமூகங்களுக்கு இடையே பாலங்களை அமைப்பதற்காகப் பல்வேறு வகையான சமூகச் சேவைகளை தமுமுக செய்து வருகின்றது. இதன் முத்தாய்ப்பாக 50 அவசர ஊர்தி சேவை தமிழகம் சார்பாக அனைத்துச் சமுதாய மக்களுக்காகவும் நடத்தப்பட்டு வருகின்றது.

தற்போது தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசு கேபினட் அமைச்சர் பதவிக்கு இணையான தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவர் பதவியை எங்கள் அமைப்பிற்குத் தந்துள்ளது. எங்கள் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹைதர் அலி தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் தலைவராக இருக்கின்றார்.


எத்தனை அரசியல் கட்சிகள் சமுதாயத்தின் பெயரால் இருந்த போதினும் தூய்மையான நோக்கத்துடன் மக்கள் சேவை செய்தால் சமுதாய மக்களை ஒருங்கிணைத்துச் சமுதாயத்திற்கான தேவைகளைப் பெறலாம் என்பதற்கு தமுமுகவின் அனுபவம் உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்பதைப் பணிவுடன் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.


திமுகவுடன் நாங்கள் நட்புடன் இருந்த போதினும் மத்தியில் ஆட்சி செய்யும் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை நாங்கள் விமர்சிக்காமல் மவுனமாக இருந்ததில்லை.


தற்போதைய மன்மோகன் சிங் அரசு சிறுபான்மை முஸ்லிம்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எவ்வாறு காற்றில் பறக்கவிட்டுள்ளது என்பதை நாங்கள் அம்பலப்படுத்தி வருகிறோம். மன்மோகன் சிங் அரசின் குறைந்த பட்சச் செயல் திட்டத்தில் சிறுபான்மையினருக்கு அனைத்திந்திய அளவில் இடஒதுக்கீடு அளிக்கப்படுமென வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட மிஸ்ரா ஆணையம் தனது அறிக்கையை 2007 மே 22 அன்று சமர்பித்து விட்டது. ஆனால் மன்மோகன் சிங் அரசு இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யாமல் முஸ்லிம்களை ஏமாற்றி உள்ளது.


இதே போல் குறைந்த பட்சச் செயல் திட்டத்தில் பாலஸ்தீன மக்களுக்குச் சொந்த நாடு உருவாகப் பாடுபடுவோம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாலஸ்தீன மக்களை அன்றாடம் கொன்று குவிக்கும் இஸ்ரேல் நாட்டின் உளவு செயற்கைக் கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டுள்ளது.


நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகின்றது. பா.ஜ.க. இனி ராமர் கோவில் பெயரைச் சொல்லி மக்களிடம் செல்ல இயலாது. முஸ்லிம்களைத் தீவிரவாதிகள் என்று அவர்களால் நாட்டு மக்களுக்கு ஆபத்து என்று கூறி வோட்டு வேட்டையாடப் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.


அந்தத் திட்டத்திற்கு உதவிடும் வகையில் தான் மன்மோகன் சிங் அரசின் செயற்பாடும் அமைந்துள்ளது.


தமிழகத்தில் தென்காசியில் குண்டு வெடித்தது. குண்டுகளை வைத்த இந்து முன்னணி தீவிரவாதிகள் தமிழகக் காவல்துறையினரால் கைதுச் செய்யப்பட்டார்கள்.


ஹைதராபாத் மக்கா பள்ளிவாசலில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் பயன்படுத்தப்பட்ட ரகக் குண்டுகள் தான் தென்காசியிலும் பயன்படுத்தப்பட்டன என்று தமிழகக் காவல்துறை தெரிவித்தது.


நாம் தமுமுக சார்பாகத் தென்காசி குண்டுவெடிப்பில் இருந்து பாடம் படித்து நாடு முழுவதும் நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்குகளை மறுவிசாரணை செய்யக் கோரிக்கை வைத்தோம்.


மத்திய அரசு மவுனமாக இருந்தது. நான்டெட், மாலேகவ்ன் (2006), மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டன.


ஆனால் அது மன்மோகன் சிங் அரசைப் போல் தூங்கிக் கொண்டிருந்தது. தற்போது மராட்டிய ஏடிஎஸ் காவல்துறை பல உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளது. இதே பாணியில் முன்பே சிபிஐ விசாரணை செய்திருந்தால் டெல்லி, பெங்களூரு, அஹ்மதாபாத், ஜெய்பூர் குண்டு வெடிப்புகளை நூற்றுக்கணக்கான உயிர்களையும் காப்பாற்றியிருக்கலாம். இதனைச்செய்யத் தவறிய மன்மோகன் சிங் அரசை நாங்கள் கண்டித்து வருகிறோம்.


ஆனால் நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சிகள் சார்பில் 35 எம்.பி.க்கள் இருந்தும் அவர்கள் மவுனமாக அமர்ந்துள்ளார்கள். இன்று சங்பரிவார் பயங்கரவாதிகள் கைதுச் செய்யப்பட்டு வருகிறார்கள். ஆனால் கைதுச் செய்யப்படுபவர்கள் அம்புகள் தான். அம்புகளை எய்தவர்களையும் கைதுச் செய்ய மன்மோகன் சிங் அரசு முன்வர வேண்டும்.


முஸ்லிம் சமுதாயத்தை வஞ்சிக்கும் இந்தப்போக்குச் சரி செய்யப்பட வேண்டுமெனில் உ,பி,யில் வாழும் நீங்கள் அரசியல் விழிப்புணர்வு மட்டுமில்லாமல் அரசியல் ரீதியாக ஒன்றிணைவது காலத்தின் கட்டாயமாகும்.


தீமைகளைத் தடுப்பது முஸ்லிம்களின் கடமையாகும். தீமைகள் என்பது வெறுமனே மது, விபச்சாரம், சூதாட்டம் மட்டுமில்லை. ஆட்சி அதிகாரத்தைத்தவறாகப் பயன்படுத்துவதும் தீமையாகும். எனவே அரசியல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி அதனை வேடிக்கை பார்ப்பது ஒரு முஸ்லிமிற்கு அழகு அல்ல.


இது கூட்டணி ஆட்சி காலம். உ.பி, யில் உள்ள 80 நாடாளுமன்றத் தொகுதிகளில் நாம் 25 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் அடுத்த ஆட்சி உங்கள் தயவில் தான் அமையும். இந்த நிலை ஏற்பட நீங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.


இன்று இந்தியாவில் அரசியல் கட்சிகளை அமைப்பது எளிதானது. எனவே எத்தனை முஸ்லிம் அரசியல் கட்சிகள் சுயநலனுக்காக ஆரம்பிக்கப்பட்டாலும் மக்கள் அவர்களை ஏற்க மாட்டார்கள், ஆனால் தூய்மையான எண்ணத்துடன் ஆலிம்கள், அறிஞர்கள் நிரம்பிய உ.பி.யில் நீங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் உத்தரபிரதேச ஆட்சியை மட்டுமில்லை, இந்தியாவின் ஆட்சியையும் நிர்ணயிக்கக் கூடியவர்களாக நீங்கள் இருப்பீர்கள்..


எங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நீங்கள் செயல்பட வேண்டும் என்று தமிழக முஸ்லிம்கள் சார்பாக வேண்டுகோள் விடுத்து விடைபெறுகிறேன்.
Click here to bookmark this link.Channel Image00:16 நடிகர் விஜய் - இடது சாரி அரசியல் தமிழ்முஸ்லிம் மன்றம்

நடிகர் விஜய், தன் ரசிகர் மன்றக் கொடியை, முன்னரே அறிமுகப் படுத்தி விட்டார். சமீபத்தில், ஈழத் தமிழர்களுக்காக அவரது ரசிகர்கள் இருந்த உண்ணாவிரத்ததிலும் கலந்து கொண்டுள்ளார். உண்ணாவிரதப் பந்தலுக்கு அவரை வாழ்த்த கம்யூனிஸ்டு தலைவர்கள் வருகின்றனர். இது ஒரு நல்ல அறிகுறி. இவரது போட்டி நடிகர் ஈழத் தமிழர்களுக்காக, நடிகர்கள் இருந்த உண்ணாவிரதத்துக்கு தான் ஏன் வரவேண்டும் எனக் கேட்டு மாட்டிக் கொண்டார். அதனால், அவரது படத்தை பல வெளிநாடுகளில் ஈழத்தமிழர்கள் திரையிட அனுமதிக்கவில்லை.
நடிகர் விஜய் ஒரு தலித் கிறித்துவர். மதச் சார்பின்மைக் கொள்கையில் நம்பிக்கையுள்ளவர். நடிகர் சரத்குமாரைப் போல சாதி ஆதிக்கப் பின்னனி இல்லாதவர். நடிகர் அர்ஜுன், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரைப் போல இந்துத்துவப் பின்னனி இல்லாதவர். நடிகர் ரஜினிக்குப் பின்னால் இருக்கும் அவரது மனைவி லதாவைப் போலவோ, நடிகர் விஜயகாந்திற்குப் பின்னால் இருக்கும் அவரது மனைவி பிரேமலாதாவைப் போலவோ, நடிகர் விஜய்க்குப் பின்னால் இருக்கும் அவரது தந்தை பேராசை இல்லாதவர். இடது சாரி, தமிழ் தேசிய சிந்தனையுள்ளவர். இடது சாரி தோற்றத்தில், ரெட் படத்தில் நடித்த நடிகர் அஜீத் முழுமையான மேற்கத்திய சிந்தனையுள்ளவர். அவருக்கு இந்த மண்ணின் வரலாறு தெரியாது.
அரசியலில் நுழைவதற்கு நடிகர் விஜய் எடுத்து வைக்கும் அடிகள், ஆரோக்கியமாகவே உள்ளன. வரவேற்போம்! வாழ்த்துவோம்!

Sat 22

Click here to bookmark this link.Channel Image20:12 அபிமான ஐபோன் பயன்பாடுகள் பிகேபி
ஐபோன்களின் ஊடுருவல் இந்தியாவில் கம்மி என கேள்விப் பட்டேன். ஆனால் இங்கு அது ஒரு "ஸ்டேன்டர்டு" போலாகிவிட்டது. வேலை இடத்திலும் சரி விமானப் பயணத்திலும் சரி அக்கம் பக்கம் எதிரே தூரே எல்லாம் ஐபோன் தான் தெரிகின்றது.அதிலும் அவ்வப்போது வெளியாகும் சில சூடான இலவச ஐபோன் பயன்பாடுகள் ஐபோன் பயனாளர்களை பரவசப்படுத்தி விடுவதுண்டு. Google mobile app சமீபத்திய உதாரணம் .கூகிளில் தேட வார்த்தைகளை நாம் டைப்ப வேண்டியதில்லை. வாயால் நாம் சொன்னாலே போதும்.அது நம் குரலை கேட்டு நமக்காக டைப்பிவிடுகின்றது.மேலும் சில உதாரணங்களை இங்கே கொடுத்துள்ளேன்.புதிதாக வந்திருக்கும் BlackBerry Storm டச் ஸ்கிரீனோடு வந்திருக்கின்றது.நல்ல போட்டியாக தெரிகின்றது.ஆனாலும் இது மாதிரியான பல நல்ல சுவாரஸ்யமான பயன்பாடுகளை அதில் நிறுவமுடியுமாவென தெரியவில்லை.

  • NYtimes மூலம் சுட சுட நியூயார்க் டைம்ஸ் படிக்க முடிகின்றது.
  • Stitcher மூலம் பிபிசி முதலான ரேடியோ பாட்காஸ்ட்களை எப்போவேண்டுமானாலும் கேட்க முடிகின்றது.
  • Coolris மூலம் இணையத்திலிருக்கும் படங்களை யூடியூப் வீடியோக்களை 3டி எபக்டில் திகட்ட திகட்ட முழு ஸ்கிரீனில் பார்க்கமுடிகின்றது.
  • NetNewswire மூலம் பல செய்தி ஓடைகளை(RSS) படிக்க உதவுகின்றது.
  • Dictionaire மூலம் தெரியாத பல வார்த்தைகளுக்கு அர்த்தம் காண முடிகின்றது.
  • Units மூலம் தெரியாத பல அளவீடுகளை தெரிந்த அளவுகளாக மாற்ற முடிகின்றது.
  • Wikipanion மூலம் விக்கிபீடியாவை எளிதாக படிக்க முடிகின்றது.
  • Airsharing மூலம் கணிணியிலிருக்கும் கோப்புகளை ஐபோனுக்கு கொண்டுவர முடிகின்றது.
  • Box.net மூலம் இணையத்தில் சேமித்து வைத்திருக்கும் கோப்புகளை பார்வையிட முடிகின்றது.
  • Fring மூலம் இலவச அல்லது குறைந்த விலையில் சர்வதேச போன்கால்கள் செய்ய முடிகின்றது.
  • Flashlight மூலம் இருட்டில் வெளிச்சம் கிடைக்கின்றது.
  • Voicenotes மூலம் நம் குரலை எளிதாக பதிவு செய்ய முடிகின்றது.
  • Google mobile app-பிடம் சொன்னாலே போதும்.அது தேடி தருகின்றது.
  • Google earth ஒரு அமேசிங் எக்ஸ்பீரியன்ஸ்.Google Map-ல் இப்போது Streetview-ம் தெரிகின்றது.
  • புதிதாக வந்திருக்கும் The weather Channel தி அல்டிமேட்.




ஒரே சமயத்தில் இரண்டு
வேலை செய்ய
நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில்
ஒரே ஒரு வேலை
செய்வதுதான் கடினமானது.
- மெக்லாலின்.

சுஜாதா "டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு" மேடைநாடகம் இங்கே தமிழில் மென் புத்தகமாக. Sujatha Dr.Narendiranin Vinotha Vazakku Stage Drama in Tamil pdf ebook Download. Right click and Save.Download

Click here to bookmark this link.Channel Image19:35 உருவாக்கப் படும் போலித் தீவிரவாதிகள்! கருணாநிதிக்கே தெரியாத பயங்கர உண்மைகள் வாஞ்ஜுர்
Click here to bookmark this link.Channel Image17:24 பிரார்த்தனையில் அவசரம் கூடாது. அல்லுஃலுவு வல்மர்ஜான்
1742. ''நான் பிரார்த்தித்தேன். ஆனால், என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை'' என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6340 அபூஹுரைரா (ரலி).
Click here to bookmark this link.Channel Image17:23 நேர்வழி காட்டுதல் அல்லாஹ் ஒருவனால் மாத்திரமே! தினம் ஒரு குர்ஆன் வசனம்

இன்னும் நேர் வழிகாட்டுதல் அல்லாஹ்வின் மீதே இருக்கிறது (அவனருளை அடைய முடியாத) தவறான (பாதைகளும்) இருக்கின்றன மேலும், அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் நிச்சயமாக நேர்வழியில் சேர்த்துவிடுவான். (அல்குர்ஆன்: 16:9)

Click here to bookmark this link.Channel Image10:47 யோகா,இஸ்லாமிய அதிகாரிகள் தடை! அதிரை Express
யோகா பயிற்சி செய்வதால் முஸ்லிம்கள் பாதை வழுவலாம் என்ற அச்சம் காரணமாக மலேசியாவிலே முஸ்லிம்கள் யோகா பயிற்சி செய்வதற்கு அந்நாட்டின் இஸ்லாமிய அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

யோகா பயிற்சியின்போது மந்திரம் சொல்வதும் வணங்குவதும் முஸ்லிம்களுக்கு பொருத்தமானதாக இல்லை. முஸ்லிம்களின் நம்பிக்கையை அவ்வழக்கங்கள் அழித்துவிடக்கூடும் ஆதலால் முஸ்லிம்கள் யோகா பயிற்சி செய்யக்கூடாதது என்று தேசிய ஃபத்வா சபை எனப்படும் மலேசியாவின் தலைமை இஸ்லாமிய அமைப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.

யோகா என்ற பெயரில் அதில் ஏக இறைவனுக்கு இணை கற்பிக்கும் வாசகங்கள் இடம்பெறுகின்றன.அல்லாஹ் மன்னிக்காத குற்றம் ஷிர்க் மட்டுமே,மற்றதை அவன் நாடினால் மன்னித்துவிடுவதாக குரான் மற்றும் ஹதீஸில் நாம் அறியலாம்.எனவே நாம் சொல்,செயல்,இன்னும் எல்லா வகையான குறிப்புக்கள் மூலமாகவும் ஷிர்க் வந்துவிடாமல் கவனித்து நடக்க வேண்டியது நம் பொறுப்பாகும்.நம் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகள் மற்றும் எல்லா தொடர்பு சாதனங்களையும் கண்காணித்து,யோகா பயிலாமலும்,வந்தே மாதரம் போன்ற மண்ணை வணக்க சொல்லும் பாடலை பாடாமலும்,இன்னும் பல சினிமா பாடல்களை நம் சிறார்கள் தெரிந்தோ தெரியாமலோ பாடுகின்றனர்,அதில் ஷிர்க் வைக்கும் நிறைய வரிகள் நம் சிந்தைக்கு தெரியாமல் பாடுகிறோம்,(அது ஈ.எம்.ஹனீபா பாடலாக இருந்தாலும் சரியே)மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

மேலும்,நாம் நன்றாக நடை பயிற்சி செய்து,ஐந்து வேலையும் தொழுது வந்தாலே,அந்த ஒவ்வொரு நிலையிலும் நம் ஒவ்வொரு உறுப்பின் பயிற்சியும் அமைந்துவிடுகிறது.ஒரு வித்தியாசம்,நாம் பயிற்சிக்காக தொழுவது இல்லை மட்டுமல்ல கூடாது,மாறாக அல்லாஹ்வை வணங்கவேண்டும் என குனிந்து நிமிரும்போது நமக்கு மறுமைக்கான கூலியையும் அல்லாஹ் நமக்கு தந்து விடுகிறான்,நம் உடலுக்கும் பயனாகவும் அமைத்துவிடுகிறான்.ஸுப்ஹாநல்லாஹ்.அதுதான் அல்லாஹ்வின் மார்க்கம்.

எனவே ஒவ்வொரு விஷயத்திலும் ஷிர்க் நம்மை அண்டாமல் கவனிப்பாய் இருப்போம்.
Click here to bookmark this link.Channel Image10:04 நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (19) பிரார்த்தனை பேழை
أَللَّهُمَّ إِنِّيْ أَعُـوْذُ بِكَ مِنْ شَرِّ سَمْـعِيْ، وَمِنْ شَرِّ بَصَرِيْ، وَمِنْ شَرِّ لِسَانِيْ، وَمِنْ شَرِّ قَلْـبِيْ، وَمِنْ شَرِّ مَنِـيِّـيْ

பொருள்: யாஅல்லாஹ்! என்னுடைய செவியின் தீங்கை விட்டும் பார்வையின் தீங்கை விட்டும் நாவின் தீங்கை விட்டும் உள்ளத்தின் தீங்கை விட்டும் எண்ணத்தின் தீங்கை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (ஆதாரம்: திர்மிதி, அபூதாவூத்)
Click here to bookmark this link.Channel Image07:38 எம்.என் நம்பியார் காலமானார் BBCTamil.com | முகப்பு | Tamil News index
தமிழ் திரையுலகத்தில் வில்லன் நடிகராக கோலோச்சிய எம்.என் நம்பியார் காலமானார்.
Click here to bookmark this link.Channel Image07:38 அனுமதி இல்லாமல் கனிமவளம் தோண்டியெடுப்பு BBCTamil.com | முகப்பு | Tamil News index
கொல்லிமலையில் அனுமதி இல்லாமல் பாக்சைட் எடுப்பதை ஒப்பு கொண்டுள்ளது வேதாந்தா நிறுவனம்.
Click here to bookmark this link.Channel Image03:49 மைக்கேல் ஜாக்ஸன் மீகாயிலாக ஏன் மாறினார்? - சுவனப்பிரியன்
Click here to bookmark this link.Channel Image03:33 கோட்சே குடும்பத்துப் பெண்ணின் குரல்! சத்தியமார்க்கம்.காம்
ஹிந்து நாடான ஹிந்துஸ்தானைப் பாதுகாக்க வேண்டியது எங்கள் கடமை; இதனை அங்கீகரிக்காத முஸ்லிம்கள் இங்கிருந்து வெளியேறி, ஏதேனும் ஒரு முஸ்லிம் நாட்டில் குடியேறி வாழ்ந்து...
Click here to bookmark this link.Channel Image02:59 முருங்கைக்கீரை - சமையல் அதிரை Express
உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் தாவர இலைகளை கீரைகள் என்கின்றோம். பொதுவாக கீரை வகைகளில் கால்சியம் (Calcium), இரும்பு (Iron), கரோட்டீன் (Carotene), வைட்டமின் C (Vitamin C) போன்ற சத்துக்கள் அதிக அளவில் இருப்பதால், நமது அன்றாட உணவில், ஏதேனும் ஒரு கீரையை கண்டிப்பாய் சேர்த்துக் கொள்ள வேண்டும். முளைக்கீரை, முருங்கைகீரை, பசலிக்கீரை, அகத்திக்கீரை முதலானவை அதிக அளவில் உணவாய் உட்கொள்ளப்படுகின்றது.

கீரை வகைகளை அதிக நேரம் வேகவைக்கக் கூடாது. இதன்மூலம் அதிகப்படியானச் சத்துக்கள் விரயமாவதை தடுக்கலாம். சத்துக்கள் எல்லா உணவுப் பொருட்களிலும் இருக்கின்றன. காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றில் உள்ள சத்துக்கள் முழுமையாக நமக்குக் கிடைக்கின்ற காரணத்தினால், இந்த உணவுப்பொருட்களுக்கு அனைவரும் முக்கியத்துவம் தருகின்றனர்.
  • முருங்கைக்கீரை - ஒரு பெரிய கட்டு (மூன்று டம்ளர் அளவு)
  • வெங்காயம் - மூன்று
  • பூண்டு - நான்கு பற்கள்
  • காய்ந்த மிளகாய் - ஐந்து
  • சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • உளுந்து - ஒரு மேசைக்கரண்டி
  • பாசிப் பருப்பு - அரை கப் (50 கிராம்)
  • உப்பு - ஒரு தேக்கரண்டி
  • தேங்காய் - நான்கு பத்தை (துருவியது)
  • எண்ணெய் - நான்கு தேக்கரண்டி
  • நெய் - ஒரு தேக்கரண்டி
முருங்கைக்கீரையை ஆய்ந்து மண்ணில்லாமல் கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பாசிப் பருப்பை லேசாக வறுத்து ஐந்து நிமிடங்கள் ஊற வைத்து எடுத்து குக்கரில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வரும் வரை மலர வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்..

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்ந்த மிளகாய், சீரகம், உளுந்து போட்டு தாளித்து விட்டு பூண்டை தட்டி அதனுடன் சேர்த்து வதக்கவும். .

அதன் பிறகு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

அதனுடன் கழுவி தண்ணீர் வடித்து வைத்திருக்கும் முருங்கைக்கீரையை போட்டு உப்பு சேர்த்து கிளறி விடவும். கீரை நன்கு வதங்கி சுருங்கி விடும்.

கீரையுடன் தேங்காய் துருவலை சேர்த்து ஒன்றாகும்படி கிளறி விடவும்.

பின்னர் வேக வைத்து எடுத்து வைத்துள்ள பாசி பருப்பை சேர்த்து நன்கு கிளறவும்.

கிளறிய பின்னர் 5 நிமிடங்கள் தீயை மிதமாக வைத்து வேக விடவும். கடைசியில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறி விட்டு இறக்கி விடவும்.
முருங்கைக்கீரை பிரட்டல் தயார். இந்த முருங்கைக்கீரைக்கு துவரம் பருப்பை வேக வைத்து செய்தால் சுவை இன்னும் அபாரமாக இருக்கும். இதை ப்ளைன் தால் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
முருங்கைக்கீரை செய்யும் போது நிறைய வெங்காயம், தேங்காய் சேர்த்து பிரட்டினால் நன்றாக இருக்கும். தேங்காய் அதிகம் சேர்ப்பதற்கு பதில் பாசி பருப்பு அல்லது துவரம் பருப்பை வேக வைத்தும் சேர்க்கலாம்

தொகுப்பு : உம்முஅப்துற்றஹ்மான்

Click here to bookmark this link.Channel Image00:12 நபிகள் நாயகம் குறித்து கிறிஸ்தவரின் விமர்சனமும் அதற்கு விளக்கமும்! கிறிஸ்தவம் பார்வை

Fri 21

Click here to bookmark this link.Channel Image18:17 என்ன கொடுமை சார்,இது? அதிரை Express
அண்மையில் மெக்சிக்கோ நாட்டில் எய்ட்ஸ் ஒழிப்பு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.
ஓரினச் சேர்க்கையை அங்கீகரிக்க, இந்தியாவில் சட்டம் கொண்டு வருவோம் என்று அந்த மாநாட்டில் அவர் பேசியதாக திடுக்கிடும் செய்தி வந்தது.ஆணும் ஆணும் சேர்ந்து குடும்பம் நடத்தலாம். பெண்ணும் பெண்ணும் சேர்ந்து கல்யாணம் செய்து கொள்ளலாம். இந்த வக்கிர உறவிற்குப் பெயர்தான் ஓரினச் சேர்க்கை என்பதாகும். இதற்கு ஒரு தமிழ் மகன் ஆதரவா? எண்ணிப் பார்க்கவே இதயம் நடுங்கியது.

ஆணும் ஆணும் குடும்பம் நடத்தலாம். பெண்ணும் பெண்ணும் குடித்தனம் நடத்தலாம். இது என்ன கொடுமை? அப்படியானால் குடும்ப உறவுகள், மரபுகள் மண்ணோடு மண்ணாக மக்கிப் போக வேண்டுமா?ஓரினச் சேர்க்கையை தமிழ்ச் சமுதாயம் அங்கீகரித்ததாகவோ ஆதரித்ததாகவோ எந்த இலக்கியத்திலும் எந்தத் தமிழ்க் கல்வெட்டிலும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.

இரண்டு வாரங்களுக்கு முன்னால் டெல்லி ஆங்கிலத் தொலைக்காட்சியைத் தற்செயலாகத் திருப்பினோம். அதிலும் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக மத்திய சுகாதார அமைச்சகம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பதாக தகவல் தந்தனர்.ஓரினச் சேர்க்கை என்ற அநாகரிகத்திற்கு ஆட்பட்டு விட்ட ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதன்மீது மத்திய அரசின் கருத்தை உயர்நீதிமன்றம் கேட்டது.

`ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம்' என்று மத்திய உள்துறை அமைச்சகம் மனுத் தாக்கல் செய்திருக்கிறது.ஆனால், அன்புமணி ராமதாசின் மத்திய சுகாதாரத்துறை, `ஓரினச் சேர்க்கையை அங்கீகரிக்க வேண்டும்' என்று மனுத் தாக்கல் செய்திருக்கிறது.

விரும்பிய ஓர் ஆணும் இன்னொரு ஆணும் குடும்ப வாழ்க்கை நடத்தினால் அவர்களுக்குத் தண்டனை தரக் கூடாது என்பதுதான் உயர்நீதி மன்றத்தை நாடிய ஓரினச் சேர்க்கையாளரின் கோரிக்கை. ஆஹா! அற்புதம்! அது வேதங்கள் கொள்கை கோட்பாடு என்று அன்புமணி ராமதாசின் மத்திய சுகாதாரத்துறை மனுத்தாக்கல் செய்திருக்கிறது.

ஆனால், ஓரினச் சேர்க்கை சட்டப்படி குற்றம் என்று உள்துறை தாக்கல் செய்த மனு கூறுகிறது. நல்லவேளை அந்தத் துறைக்கு சீழ்பிடித்த சிந்தனைகள் உதயமாகவில்லை.
`தண்டிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள் ரகசியமாக மறைமுகக் குடித்தனம் நடத்துகின்றனர். அவர்களுக்கு சுதந்திரம் அளித்து விட்டால் பகிரங்கமாக வாழ்வார்கள். அப்படி வாழும் போது எய்ட்ஸ் நோய் வர வாய்ப்பில்லை. மறைமுக உறவுகள் அந்த நோய் பரவுவதற்கு வழிவகுக்கும்' என்பது மத்திய சுகாதாரத் துறையின் வாதம்.

ஓரினச் சேர்க்கை என்பது இந்திய கலாசாரச் சீரழிவின் உச்சகட்டம். அதனை அனுமதிப்பது என்பது தமிழ்ப் பண்பாட்டிற்கு விதிக்கப்படும் மரணதண்டனை. மேலைநாடுகளின் வக்கிர மனிதர்கள் வளர்க்கும் விபரீத உறவுகளுக்கு இங்கே அங்கீகாரம் தேடுகிறார்கள். வேரில் வெந்நீர் ஊற்றப் பார்க்கிறார்கள்.

லட்சம் பேருக்கு அதிகபட்சம் ஐம்பது பேர் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கிறார்கள். நாங்கள் இப்படித்தான் வாழ்வோம். எங்களை சமூகம் அங்கீகரிக்க வேண்டும். சட்டத்தைத் திருத்துங்கள் என்று மேலைநாடுகளில் மைதானங்களிலும் பூங்காக்களிலும் அவர்கள் கட்டிப் புரள்கிறார்கள். அவர்களுக்காக வாதாட அடகுபோன சிலரும் இருக்கிறார்கள்.

மிருகங்களில் ஓரினச் சேர்க்கை உண்டா? இல்லை. பறவைகளில் ஓரினச் சேர்க்கை உண்டா? இல்லை. ஆனால் குப்பைமேட்டு மனிதர்கள் சிலர் அந்தக் கொடுமையான வாழ்க்கை நடத்துவோம் என்கிறார்கள்.

அவர்களுக்கு எங்கிருந்து எப்படிப் பணம் கொட்டுகிறது என்றே தெரியவில்லை. செல்வந்தர்களில் அந்தப் பழக்கம் உள்ளவர்கள் மேலைநாடுகளில் இருக்கிறார்கள். அவர்கள்தான் சிம்மாசனங்களையே வளைக்க முதலீடு செய்கிறார்கள் என்கிறார்கள்.

நமது சட்டம் என்ன சொல்கிறது? ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு 397வது சட்டப் பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கலாம் என்று கூறுகிறது.ஆனால் அந்தத் தண்டனையை ரத்து செய்து அந்த அநாகரிக உறவை அங்கீகரிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறுகிறார். அண்மையில் சென்னை வந்த அவர், ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்களைத் திரட்டிக் கொண்டு பிரதமரைச் சந்திப்பேன். கோரிக்கை மனுக் கொடுப்பேன் என்றார்.

ஓரினச் சேர்க்கையை அனுமதித்த பின்னரும் எய்ட்ஸ் என்ற உயிர்க்கொல்லி நோய் பரவாது என்பதற்கு அவர் என்ன உத்தரவாதம் தருகிறார்?பால்வினை நோய் பரவுவதற்கு ஓரினச் சேர்க்கை ஒரு காரணம் என்றால், அதனைத் தடுப்பதற்குத்தானே வழிவகை காண வேண்டும்? அதற்குப் பதிலாக அந்தக் கலாசாரச் சீரழிவை அங்கீகரித்தால் போதும் என்கிறார் அன்புமணி ராமதாஸ்.

ஒரு பக்கம் புகைபிடித்தால் 500 ரூபாய் வரை அபராதம் என்கிறார். இன்னொரு பக்கம் மானக்கேடான ஓரினச் சேர்க்கைக்கு விதிக்கும் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்கிறார். இப்படி வேடிக்கை மனிதர்கள் விநோதத் தீர்ப்பு எழுதுகிறார்கள்.

சென்ற வாரம் மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜை நிருபர்கள் சந்தித்தனர். `ஓரினச் சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்குமா' என்று கேட்டனர். `கர்மம் கர்மம்' என்றார் அவர். `பின்னர் ஏன் அதற்காக வாதாடுகிறார்கள்' என்று கேட்டனர்.`எனக்கு வயதாகிப் போய் விட்டது. அவர்களையே கேளுங்கள்' என்றார் பரத்வாஜ்.

ஒரு பக்கம் தமிழ்மொழி, பண்பாடு, கலைகள் என்கிறார்கள். அவைகளுக்கெல்லாம் தாங்கள்தான் இன்றைய காவலர்கள் என்கிறார்கள். இன்னொரு பக்கம் சமூக நியாயங்களையே சவக்குழிக்கு அனுப்பும் வாதங்களை முன் வைக்கிறார்கள். அதிசய ராகம் பாடுகிறார்கள்.

SOLAI
*****************************************************
ஓரின சேர்க்கை பற்றிய எச்சரிக்கை,அதனால் கிடைத்த அல்லாஹ்வின் தண்டனை பற்றிய விவரங்கள் திருக்குர்ஆன் நெடுகிலும் காணலாம்.மேலும் 14:57 to 77 வரை உள்ள வசனங்களை பார்வை இடவும்.குர்ஆனில் எல்லா விஷயங்களுமே தெளிவு மற்றும் உண்மையை கொண்டு அல்லாஹ் இறக்கியுள்ளான்.முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாத என் சகோதர,சகோதரிகளே குரானை படியுங்கள்,தெளியுங்கள்.சத்தியம் இஸ்லாம் மட்டுமே என்பதை உலகிற்கு உணர்த்துவோம்.
----------------------------------------------------
குறிப்பு:அமைச்சர் அன்புமணிக்கு குரானில் கூறப்பட்டுள்ள ஓரினசேர்க்கை குறித்த எச்சரிக்கையை சகோதரர்கள் அனுப்பி வைத்து,மசோதா தாக்கல் ஆகாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டுமாய் வேண்டுகிறேன்.
Click here to bookmark this link.Channel Image17:46 அல்லாஹ்வின் பண்புகள்! தினம் ஒரு குர்ஆன் வசனம்
وَقُلِ الْحَمْدُ لِلّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَم يَكُن لَّهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَلَمْ يَكُن لَّهُ وَلِيٌّ مِّنَ الذُّلَّ وَكَبِّرْهُ تَكْبِيرًا

"அன்றியும், (தனக்குச்) சந்ததியை எடுத்துக் கொள்ளாதவனும், (தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும், எந்தவித பலஹீனத்தை கொண்டும் எந்த உதவியாளனும் (தேவை) இல்லாமலும் இருக்கிறானே அந்த நாயனுக்கே புகழ் அனைத்தும்" என்று (நபியே!) நீர் கூறுவீராக! இன்னும் (அவனை) எப்பொழுதும் பெருமைப் படுத்த வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக. (அல்குர்ஆன்: 17:111)
Click here to bookmark this link.Channel Image17:07 துன்பத்தின் போது.... அல்லுஃலுவு வல்மர்ஜான்
1741. நபி (ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது 'லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வல்அர்ளி வ ரப்புல் அர்ஷில் அழீம்'' என்று பிரார்த்திப்பார்கள்.

(பொருள்: கண்ணியம் வாய்ந்தோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் மாபெரும் அரியாசனத்தின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.)

புஹாரி : 6345 இப்னு அப்பாஸ் (ரலி).
Click here to bookmark this link.Channel Image07:32 இப்படி ஒரு அன்பாளனா? தாருல் அதர் அத்தஅவிய்யா<<மத்ஹபுகள் சாராத அல்குர்ஆன், அஸ்ஸுன்னாஹ் அடிப்படையில்லான பிரச்சார அமைப்பு,
இன்று மனிதர்களில் அதிகமானோர் அவர்களைப் படைத்த இரட்சகனுக்கு அணுதினமும் மாறு செய்து வருகின்றனர். அல்லாஹ்வால் விதிக்கப்பட்ட எத்தனையோ வரையரைகளை அவற்றின் விளைவுகளைத் தெரிந்து கொண்டும் அப்பட்டமாக மீறும் துர்ப்பாக்கியத்தை நிதர்சனமாகக் காணக்கூடியதாகவுள்ளது. தங்களுக்குக் கிடைக்கும் தனிமைகளும் தற்காப்பான சூழலும் அதிகமான மனித‌ர்களை தவறு செய்யும் மனோ நிலைக்கு ஆளாக்கி விடுகின்றது. காலையில் விழித்தெழும்பியது முதல் இரவு உறங்கும் வரை பாவத்தில் மூழ்கிப் போகும் அதிகமான மனிதர்கள் அதற்குப் பரிகாரமே தேடமால் மறு நாள் பாவத்திற்குத் தயாராகி விடுகின்றனர். அல்லாஹ்வின் தன்டணைகளைத் [...]
Click here to bookmark this link.Channel Image07:27 அன்பான அழைப்பாளர்களே! அழைப்புப்பணியில் அயராது உழையுங்கள் ! தாருல் அதர் அத்தஅவிய்யா<<மத்ஹபுகள் சாராத அல்குர்ஆன், அஸ்ஸுன்னாஹ் அடிப்படையில்லான பிரச்சார அமைப்பு,
அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே!  வேதம் கொடுக்கப்பட்டோர் தம்மிடம் விளக்கம் வந்த பின் தமக்கிடையே ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே முரண்பட்டனர். அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுப்போரை அல்லாஹ் விரைந்து விசாரிப்பான். அவர்கள் உம்மிடம் விதண்டாவாதம் செய்வார்களானால் ‘என் முகத்தை அல்லாஹ்வுக்கே வழிபடச் செய்து விட்டேன். என்னைப் பின்பற்றியோரும் (இவ்வாறே செய்து விட்டனர்) ‘எனக் கூறுவீராக! வேதம் கொடுக்கப்பட்டோரிடமும் எழுதப்படிக்கத் தெரியாதோரிடமும் ‘இஸ்லாத்தை ஏற்கிறீர்களா?’ என்று கேட்பீராக! அவர்கள் இஸ்லாத்தை ஏற்றால் நேர்வழி பெற்றனர். புறக்கணித்தால் எடுத்துச் சொல்வதே உமக்குக் [...]
Click here to bookmark this link.Channel Image06:29 மைக்கல் ஜாக்சன் இஸ்லாத்தை தழுவினார், அல்ஹம்துலில்லாஹ். அவருடைய பெயர்: மீக்காயில். அதிரை Express
Michael Jackson embraces Islam, spells `Mikaeel'

London: Troubled pop star Michael Jackson has converted to Islam and has changed his name to Mikaeel.

Thesun.co.uk reports that Jackson, 50, was dressed in the Islamic garb as he pledged his allegiance to the Koran at a friend's house in Los Angeles. He sat on the floor as an Imam officiated the ceremony.

Jackson, who was raised a Jehovah's Witness, decided to convert after discussing religion with a music producer and songwriter on his new album, both of them converts to Islam.

"They began talking to him about their faith and how they thought they had become better after they converted. Michael soon began warming to the idea. An Imam was summoned, and Michael went through the shahada, which is the Muslim declaration of belief," a source was quoted as saying.

Mikaeel is the name of one of Allah's angels.
Source: Indo-Asian News Service

MSN Special:
Michael Jackson to present evidence in person in court
Arab sheikh sues Michael Jackson

News Source :
http://news.in.msn.com/international/article.aspx?cp-documentid=1661526
http://news.in.msn.com/international/article.aspx?cp-documentid=1703792

லாஸ் ஏஞ்செலஸ்: பாப் ஸ்டார் மைக்கேல் ஜாக்சன் இஸ்லாம் மதத்திற்கு மாறி விட்டார். தனது பெயரையும் மிகயீல் எனவும் அவர் மாற்றி விட்டார்.

பனோராமா என்ற இதழின் இணையதளத்தில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. தான் இஸ்லாமின் ஐந்து கடமைகளை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளதாகவும், பெயரை மிகயீல் என மாற்றிக் கொண்டுள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வமாக தனது மத மாற்றத்தை அறிவிப்பேன் எனவும் ஜாக்சன் இந்த இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பஹ்ரைனில் செட்டில் ஆகிறார்:

மேலம் விரைவில் பஹ்ரைனுக்குப் போய் ஜாக்சன் செட்டிலாகப் போவதாகவும் கூறப்படுகிறது. அங்கு ஏற்கனவே அவர் செயற்கைத் தீவு ஒன்றில் இடம் வாங்கிப் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது மத மாற்றம் குறித்து நெருக்கமானவர்களிடம் ஜாக்சன் பேசுகையில், எனது தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு சரியான மதமாக இஸ்லாம் உள்ளது. யூதர்கள் எல்லாம் ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் எனக் கூறினாராம் ஜாக்சன்.


தொடர்ந்து ஜாக்சன் கூறுகையில், இந்த அட்டைப் பூச்சிகளால் நான் மிகவும் சோர்வடைந்து விட்டேன். யூதர்கள் எல்லாம் நிறைய சம்பாதிக்கிறார்கள். மிகப் பெரிய வீடுகளைக் கட்டிக் கொள்கிறார்கள், கார்கள், வசதிகள் என சந்தோஷமாக இருக்கிறார்கள். இதெல்லாம் அவர்களின் சதி செயலால் கிடைப்பவை.

விரைவில் எனது ஸ்டுடியோவையும், சொத்துக்களையும் அமெரிக்காவிலிருந்து பஹ்ரைனுக்கு மாற்றிக் கொள்ளப் போகிறேன். அமெரிக்காவில் இதுவரை எனக்குக் கிடைக்காத சுதந்திரம் பஹ்ரைனில் கிடைக்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார் ஜாக்சன்.

சமீபத்தில் லாஸ் ஏஞ்செலஸில் உள்ள தனது நண்பரின் வீட்டில், குரான் முன்பு தான் இஸ்லாமில் நம்பி்ககை வைத்துள்ளதாக சத்தியம் செய்தாராம் ஜாக்சன். அங்குதான் அவர் முறைப்படி இஸ்லாமியராகவும் மாறினார் என்று கூறப்படுகிறது.

எளிமையாக நடந்த அந்த நிகழ்ச்சியில் ஒரு இமாம் கலந்து கொண்டுள்ளார். தரையில்,விரிக்கப்பட்டிருந்த துணியில், தலையில் தொப்பியோடு ஜாக்சன் அமர்ந்திருக்க, அவருக்கு இஸ்லாம் மத மார்க்கப்படி மத மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2008/11/21/world-michael-jackson-converts-to-islam.html

-Abdul Barakath.
Click here to bookmark this link.Channel Image05:51 பிறைபற்றி அந்நஜாத்

Thu 20

Click here to bookmark this link.Channel Image22:30 ஒரு மருத்துவ ஸ்பெஷல் அலசல் :நடங்க நடங்க நடந்துகிட்டே இருங்க!!! அதிரை Express
நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே, மரணத்தை எளிதில் ஏமாற்றி விடலாம். இது, புதிய மருத்துவ ஆய்வு ஒன்றின் முடிவு மூலம் தெரிய வந்துள்ளது.
ஹாவர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த், கடந்த 32 ஆண்டுகளாக ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேர்களின் அன்றாட வாழ்க்கை முறையை கண்காணித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

இந்த ஆய்வின் முடிவில், தினமும் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுதல் போன்றவற்றால் வாழ்நாளை வெகுவாக நீட்டிக்க முடியும் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், புகைப் பழக்கத்தையும், உடல் பருமனாவதையும் தவிர்க்க வேண்டியது அவசியம் என்றும் அந்த ஆய்வு பரிந்துரைக்கிறது. இந்த ஆய்வு தொடர்பான முழு விவரங்கள், பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது.
************
சயன்ஸ் என்ன சொன்னாலும்,எல்லாம் அல்லாஹ்வின் கைகளில் உள்ளது.மரணம் நோயாளிக்கும் வரும்,ஆரோக்கியமானவனுக்கும் வரும்.
-------------------------------------------
இந்தியாவில் 72.5 சதவீதம் குழந்தைகள் ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக யுனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சமீபத்தில் அந்த அமைப்பு ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில், கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

ஒரு வயது முதல் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளே பெரும்பாலும் இரத்த சோகையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். உலகளவில் இந்தியாவில்தான் அதிகளவில், அதாவது 43 சதவீதம் எடை குறைவான குழந்தைகள் உள்ளனர்.குழந்தைகளுக்கு