Tue 09

Free Palestine » தமிழ் (Tamil)
அல் ஹலீல் – இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரின் பக்கபலத்துடன் அல் ஹலீல் நகரின் கிழக்கே அமைந்துள்ள அல் பகா கிராமத்தில் உள்ள பலஸ்தீன் விளைநிலங்களுக்குள் ஆயுதபாணிகளாகப் பிரவேசித்த ஆக்கிரமிப்பாளர்களான யூதக் குடியேற்றவாசிகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த திராட்சைக் கொடிகளைப் பிடுங்கியெறிந்து, பெரும் அட்டகாசங்களைப் புரிந்துள்ளனர் என உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
கிர்யத் அர்பா எனும் யூதக் குடியிருப்பைச் சேர்ந்த ஆக்கிரமிப்பாளர்களில் ஒருபெரும் குழு சுமார் நான்கு தூனம் பரப்புள்ள பலஸ்தீன் விளைநிலத்தினுள் அத்துமீறி [...]
Mon 08

தினம் ஒரு குர்ஆன் வசனம்(ஆனால் அக்கிரமக்காரர்களோ) தங்களிடம் (உயிர்களைக் கைப்பற்றுவதற்காக) மலக்குகள் வருவதையோ, அல்லது உம் இறைவனுடைய (வேதனை தரும்) கட்டளை வருவதையோ தவிர வேறு எதை அவர்கள் எதிர் பார்க்கின்றனர்? இவர்களுக்கு முன்னிருந்தோரும் இவ்வாறே (அநியாயம்) செய்தார்கள்; இவர்களுக்கு அல்லாஹ் அநியாயம் எதுவும் செய்யவில்லை. ஆனால் அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள். (அல்குர்ஆன்: 16:33)

இஸ்லாம்கல்வி.காம் - Portalஅல்லாஹ்வின் மார்க்கமும் மௌலவிகளின் விளக்கமும் தொடர்..
அல்லாஹ்வின் மார்க்கமாகிய புனித இஸ்லாத்தைக் கற்றவர்கள்தாம் ஸஹாபாக்கள், தாபியீன்கள், அவர்களின் வழித்தோன்றலில் வந்த இமாம்கள். இவர்கள் இஸ்லாத்தை சரியான அடிப்படையில் மக்கள் மன்றத்தில் முன்வைத்து அதற்காக பல இன்னல்களையும் அனுபவித்தார்கள். இவர்கள், ‘லாயிலாஹ’ இல்லல்லாஹ்’ என்ற சத்தியக்கலிமாவையும், அது வேண்டி நிற்கும் பொருளையும் சரிக்குச் சரியாக விளங்கி மக்களை அதன் பக்கம் அழைத்தவர்கள். அதற்காகவே தமது உயிர்களையும் நீத்தவர்கள்,
சத்தியத்தை அசத்தியமாக்கி, பித்அத் (மார்க்கத்தில் புதியவை) களை நபிவழியாக்கி, உண்மையை மறைத்து, அபூலஹப் [...]

இஸ்லாம்கல்வி.காம் - Portalஅல்-ஜுபைல் வெள்ளி மேடை-47
தலைப்பு: ஷைத்தானின் பிடியிலிருந்து மீள.. (தொடர்-3)
வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
இடம்:ஜுபைல், சவூதி அரேபியா
நாள்: 29.01.2010
Download flash video – Size: 57.5 MB
Audio Play:
Download mp3 audio – Size: 13.8 MB

இஸ்லாம்கல்வி.காம் - Portalஅல்-ஜுபைல் வெள்ளி மேடை-46
தலைப்பு: ஷைத்தானின் பிடியிலிருந்து மீள.. (தொடர்-2)
வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
இடம்:ஜுபைல், சவூதி அரேபியா
நாள்: 22.01.2010
Download flash video – Size: 55.1 MB
Audio Play:
Download mp3 audio – Size: 13.3 MB
Sun 07

தினம் ஒரு குர்ஆன் வசனம்பின்னர், கியாம நாளில் (அல்லாஹ்வாகிய) அவன் அவர்களை இழிவு படுத்துவான்; "எவர்களை நீங்கள் எனக்கு இணையா(ன தெய்வங்களா)க்கி, அவர்களைப் பற்றி (முஃமின்களிடம்) பிணங்கிக் கொண்டிருந்தீர்களோ, அவர்கள் எங்கே?" என (அவர்களிடம்) கேட்பான்; எவர்களுக்குக் கல்வியறிவு கொடுக்கப்பட்டதோ அவர்கள்; "நிச்சயமாக இன்று இழிவும் வேதனையும் காஃபிர்கள் மீது தான்" என்று கூறுவார்கள். (அல்குர்ஆன்: 16:27)

இஸ்லாம்கல்வி.காம் - Portalஇஸ்லாமிய கொள்கை விளக்கம் பயிற்சி முகாம் (ரமளான் 2009 – ஹிஜ்ரி 1430)
தலைப்பு: தவ்ஹீதும் ஷிர்க்கும்
வழங்குபவர்: சகோதரர் கோவை S. அய்யூப்
இடம்: மஸ்ஜிதுல் முஸ்லிமீன், கோட்டை, கோவை
Audio/Video link:
www.islamkalvi.com/media/iyub44/index.htm
Audio Play
Download MP3 Audio [Part 1] [Part 2]

வஹ்ஹாபிகடந்த 08.01.2010 திண்ணை இதழில் வெளியான எனது "புதுவகை நோய்: இமி-4" எதிர்வினைக் கட்டுரை[சுட்டி-01]இல் "தம் உறவினர்களின் நலனுக்காக, சொந்த நாட்டின் இராணுவ இரகசியங்களை எதிரி நாட்டுக்குக் கசியவிடுதல் ஒரு முஸ்லிமுக்குத் தகாது என்பது இங்கு இஸ்லாத்தின் மார்க்கக் கட்டளையாகக் கூறப் படுகிறது. இந்தியாவின் பிரிவினை சதிக்குப் பிறகு முளைத்த பாகிஸ்தானில் இந்திய முஸ்லிம்களின் உறவினர்கள் இன்றும் வாழ்கிறார்கள் என்பதும் இந்திய இராணுவ இரகசியங்களைப் பாகிஸ்தானுக்குப் 'போட்டுக் கொடுத்தவர்'களின் பட்டியலில் இந்திய முஸ்லிம் எவரும் இடம்பெறவில்லை என்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கது" எனும் வரிகளை மறுத்து, "வஹ்ஹாபியின் மோசடி" எனும் தலைப்பில் தமிழ்ச்செல்வன் என்பார் பாகிஸ்தானுக்குப் போட்டுக் கொடுத்த இந்திய முஸ்லிம்கள் என்பதாக ஐந்து சுட்டிகளைக் கொடுத்திருந்தார் [ சுட்டி-02].
அவற்றுள் முதலாவதில் [சுட்டி-03] அஃப்ரோஸ் என்பவன் நமது இராணுவ முகாம்களைப் பற்றிய தகவல்களைப் பாகிஸ்தானுக்குப் 'போட்டுக் கொடுக்க' முயன்று கடந்த 11.08.2006ஆம் தேதி ராம்பூரில் கைது செய்யப் பட்டு, 19.02.2009 அன்று லக்னவ் நீதிமன்றத் தீர்ப்புப்படி பத்தாண்டு காலம் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டவன்.
அஃப்ரோஸ் வழக்கில் நாம் கருத்தில் கொள்ள வேண்டுவது யாதெனில், தன் உறவினர்களின் பொது நலன் கருதி அவன் போட்டுக் கொடுத்தவன் அல்லன். யாரோ போட்டுக் கொடுத்ததைக் காசுக்காக "வாங்கிக் கொடுக்க" முயன்று தோற்றுப் போனவன்.
"அஃப்ரோஸிடமிருந்து கைப்பற்றப் பட்ட ஆவணங்கள் இரகசியக் குறியீடுகளைக் கொண்டவை என்றும் ஆனால் இரகசியத் தகவல்களை அவன் எவ்வாறு பெற்றான் என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்றும் நமது இராணுவ அதிகாரி ஒருவர் உறுதிப் படுத்தியிருக்கிறார்" என்பதாக மாவட்டக் குற்றப் பிரிவின் துணை ஆலோசகர் இர்ஃபான் அஹ்மது கான் குறிப்பிட்டதை இந்தியன் எக்ஸ்ப்ரஸ் 21.02.2009 இதழ் Pakistani spy gets 10-year jail term என்று பொருள் மயக்கம் தரும் தலைப்போடு வெளியிட்டுள்ளது [சுட்டி-04].
ஏறத்தாழ மூன்றாண்டு காலம் நடைபெற்ற விசாரணையில் நமது இராணுவ இரகசியங்களை அவனுக்குப் 'போட்டுக் கொடுத்த' புள்ளி யார் எனும் தகவலை அவனிடமிருந்து கறக்க முடியவில்லையா? அல்லது புள்ளி பெரியது என்பதால் வெளியிடவில்லையா? என்பதெல்லாம் நமக்குப் புரியாத புதிர்கள்.
தண்டனை கொடுக்கப் பட்ட இன்னொரு வழக்கில், ஜஹான் ஆரா எனும் பெண் வருகிறாள். தொலைக்காட்சி வழியாக உலகம் முழுக்கக் காண்பிக்கப் படும் நமது குடியரசு நாள் அணிவகுப்பில் இடம்பெறும் ஆயுதங்களை நிழற்படம் எடுத்துப் பாகிஸ்தானைச் சேர்ந்த மாலிக் என்பவனுக்குக் கொடுத்ததாகவும் அவனிடமிருந்து 10 கையெறி குண்டுகளைப் பெற்று அவற்றுள் எட்டை முஸாஃபர் நகரைச் சேர்ந்த இஃப்திகார் என்பவனுக்குக் கொடுத்ததாகவும் வழக்கு. அவள் 20.09.1994இல் கைது செய்யப் பட்ட இடம் பாகிஸ்தான் ஹை கமிஷன் அலுவலகம். Terrorist And Disruptive Activities (Prevention) Act (TADA) மற்றும் Official Secrets Act (OSA) விதிகளின்படி அவளுக்கு ஆறாண்டு கடுங்காவல் தண்டனையும் ரூபாய் ஐயாயிரம் அபராதமும் விதித்து (ஏழாண்டுகள் கழித்து) 07.03.2001இல் உ.பி. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கையெறி குண்டுகள் பெற்றுக் கொண்டதற்கான சான்றுகளை இஃப்திகாரிடமிருந்து கைப்பற்ற முடியாமல் அரசுத் தரப்புக் கையைப் பிசைந்து நின்றதால் அவன் வழக்கிலிருந்தே விடுவிக்கப் பட்டான் [சுட்டி-05].
மற்ற மூன்று சுட்டிகளில் உள்ள தகவல்கள் கைதுப் படலம்வரை நின்று விடுபவை. வழக்கு நடந்ததா? தீர்ப்பு வந்ததா? போன்ற கூடுதல் விபரங்களைப் பெற முடியவில்லை. அவற்றுள் 1995இல் இராணுவத்தில் இணைந்த முஹம்மது நஸீம் என்பவனது வழக்கு முக்கியமானது. அவன், கார்கில் தியாகி அஹ்மது அலீ [சுட்டி-06] வகித்த Lance Naik பதவி வகித்தவன். அவன் 2006 மார்ச் மாதம் அலீ ஜாட்டூன் எனும் ஐ.எஸ்.ஐ ஏஜண்டோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு நமது இராணுவ நிலைகள், வீரர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் போன்ற தகவல்களை ஏஜண்டுக்குத் தெரிவித்ததாக 29.06.2007இல் டெல்லியில் வைத்துக் கைது செய்யப் பட்டான்.
நமது இராணுவம் ஒளிந்து கொண்டோ துப்பாக்கிகளை ஒளித்து வைத்துக் கொண்டோ போர் செய்யவில்லை. வேண்டிய தகவல்களை வெளிப்படையாகவே வைத்திருக்கிறோம் [சுட்டி-07]. அமெரிக்காவினால் இரண்டாவது செல்லப் பிள்ளையாகத் தத்து எடுக்கப் பட்ட பாகிஸ்தான்காரன் இதுபோன்ற சப்பைத் தகவல்களுக்கு 50,000 ரூபாய் கொடுத்திருக்கிறான் [சுட்டி-08] என்றால் நிச்சயம் அவன் கேனையன்தான். அவன் கேனையனாகவே இருக்கட்டும்; அதுதான் நமக்கு நல்லது.
அதேபோல், பாகிஸ்தானில் உள்ள உறவினர்களைக் காணச் சென்ற மோரீகான் மற்றும் அப்பாஸ்கான் ஆகிய இருவரையும் பாகிஸ்தானின் உளவுத்துறையினர் என்று 'சொல்லப் படுகின்ற' சிலர் அணுகி இந்திய இராணுவத்தைக் குறித்துத் தகவல் கேட்டதாகவும் கைப்பேசி வழியாக இருவரும் காசுக்காகத் தகவல்கள் கொடுத்ததாகவும் 'சொல்லப் படுகின்ற' வழக்கும் ஒன்று. இதில் reportedly working as spies, Morey apparently told cops போன்ற சொற்கள் மூலம், வழக்குக் கெட்டிப் படுத்தப் படாமல் இருப்பதாக அறிய முடிகிறது [சுட்டி-09].
இறுதியாக, கைப்பேசிகளும் பாகிஸ்தானியப் பணமும் வைத்திருந்ததாக அனீஸ்கான், அனீக்கான், கோராகான் ஆகிய மூவரை 04.05.2007இல் கைது செய்த வழக்கு [சுட்டி-10]. மூவரையும் Official Secrets Act (OSA) விதியின்கீழ் நமது இராணுவம் கைது செய்து ஃபாஸில்கா காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளது. கூடுதல் விபரங்கள் கிடைக்கவில்லை.
தமிழ்ச்செல்வன் வெறும் சுட்டிகளாகக் கொடுத்தவற்றைத் தேடிப் பிடித்து இங்கு நான் விளக்கமாக எடுத்து வைப்பதற்குக் காரணம், என்னைப் போன்றே வாசகர்கள் பலருக்கு/சிலருக்கு மேற்காண்பவை புதிய தகவல்களாக இருக்கக் கூடும். இணையத்தில் "உளவு" எனும் சொல் குறித்துத் தேடியபோது மாலிக் என்பவனைப் பற்றி மரைக்காயர் எனும் பதிவர் தனது வலையில் விபரம் கொடுத்திருந்தார் [சுட்டி-11]. அப்பதிவின் அடியில் கண்ட தொடர்புடைய அவரது பழைய பதிவுகளான
1. உளவுத் துறையில் ஒரு கருப்பு ஆடு [சுட்டி-12],
2. இராணுவ இரகசியங்களை விற்க முயன்ற இராணுவ வீரர் [சுட்டி-13],
3. இராணுவத்தில் உளவாளிகள் ஊடுருவல் [சுட்டி-14],
4. முக்கிய ஆவணங்களைத் திருடிய முன்னாள் இராணுவ அதிகாரி கைது [சுட்டி-15],
5. அரசு உயர்மட்டத்தில் தொடரும் நாட்டிற்கெதிரான துரோகங்கள் [சுட்டி-16]
ஆகியவற்றைப் படித்துப் பார்த்து அதிர்ந்து போனேன்! திண்ணை வாசகர்கள் சிலருக்காவது அவை புதிய தகவலாக இருக்கக் கூடும். தகவல் தெரியாத திண்ணை வாசகர்களை, "மோசடி"க்காரர்கள் என்று தமிழ்ச்செல்வன் சொல்ல மாட்டார் என்று நம்புவோமாக!
எவ்வாறாயினும், எனது "புதுவகை நோய்: இமி-4" எதிர்வினைக் கட்டுரை[சுட்டி-01]இல் "தம் உறவினர்களின் நலனுக்காக, சொந்த நாட்டின் இராணுவ இரகசியங்களை எதிரி நாட்டுக்குக் கசியவிடுதல் ஒரு முஸ்லிமுக்குத் தகாது என்பது இங்கு இஸ்லாத்தின் மார்க்கக் கட்டளையாகக் கூறப் படுகிறது" எனும் பேசுபொருளிலும் அவ்வாறு தகாத செயல்களைச் செய்வோர் இஸ்லாத்தின் கட்டளைகளை மீறியோர் என்பதிலும் தண்டனைக்கு உரியோர் என்பதிலும் எவ்வித மாற்றமும் இல்லை.
நன்றி!
திண்ணையில் ...
சுட்டிகள்:
01 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=81001081&format=html
02 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=81001153&format=html
03 - http://newshopper.sulekha.com/man-gets-10-year-jail-for-spying-for-pakistan_news_1038667.htm
04 - http://www.indianexpress.com/news/pakistani-spy-gets-10year-jail-term/426409/
05 - http://www.hinduonnet.com/2001/03/08/stories/0208000q.htm
06 - http://www.kashmir-information.com/Heroes/ali.html
07 - http://indianarmy.nic.in/Index.aspx?flag=LfcULYFlbeQ=
08 - http://news.webindia123.com/news/ar_showdetails.asp?id=706300614&cat=&n_date=20070630
09 - http://www.tribuneindia.com/2009/20090620/nation.htm#11
10 - http://www.dailyexcelsior.com/web1/06may07/news.htm#10
11 - http://maricair.blogspot.com/2007/06/raw.html
12 - http://maricair.blogspot.com/2006/08/blog-post.html
13 - http://maricair.blogspot.com/2006/10/blog-post.html
14 - http://maricair.blogspot.com/2006/10/blog-post_24.html
15 - http://maricair.blogspot.com/2006/11/blog-post_05.html
16 - http://maricair.blogspot.com/2006/11/blog-post_12.html

ஃஃஃ

ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலம் – கடந்த சனிக்கிழமை (06.02.2010) ஐ.நா.வின் மனிதாபிமானச் செயற்பாட்டு ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை பலஸ்தீன் மக்கள் மீதான பல்வேறு மனித உரிமை மீறல்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதோடு எத்தகைய நியாயமான காரணங்களுமின்றி அவர்களின் வீடுகளைத் தகர்த்துவருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 16 பலஸ்தீன் பொதுமக்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் தாக்கப்பட்டுக் காயமடைந்துள்ளனர் என்றும், 2010 ஆம் வருட ஆரம்பமுதல் இத்தகைய தனிநபர் தாக்குதல்களின் எண்ணிக்கை 67 ஆக [...]
Sat 06

தினம் ஒரு குர்ஆன் வசனம்கியாம நாளில் அவர்கள், தங்கள் (பாவச்) சுமைகளை முழுமையாக சுமக்கட்டும்; மேலும் அறிவில்லாமல் இவர்கள் எவர்களை வழி கெடுத்தார்களோ, அவர்களுடைய (பாவச்) சுமைகளையும் (சுமக்கட்டும்) இவர்கள் (சுமக்கும்) சுமை மிகவும் கெட்டதல்லவா?. (அல்குர்ஆன்: 16:25)
Fri 05

சுவனத்தென்றல்நிகழ்ச்சி : இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு
உரை : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, இஸ்லாமிய அழைப்பாளர், அல்-ஜூபைல் தஃவா நிலையம், சவூதி அரேபியா.
நாள் : 04-02-2010
இடம் : அல்-கஃப்ஜி இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், சவூதி அரேபியா.
ஆடியோ : (Download) {MP3 format -Size : 15.8 MB}

Sources