E-mail us | Help | Disclaimer

இஸ்லாம்கல்வி அரங்கம்

 123
 123

Tue 09

Click here to bookmark this link.Channel Image00:56 பலஸ்தீனரின் பயிர்நிலங்களை நிர்மூலமாக்கும் யூத ஆக்கிரமிப்பாளர்கள் Free Palestine » தமிழ் (Tamil)
அல் ஹலீல் – இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரின் பக்கபலத்துடன் அல் ஹலீல் நகரின் கிழக்கே அமைந்துள்ள அல் பகா கிராமத்தில் உள்ள பலஸ்தீன் விளைநிலங்களுக்குள் ஆயுதபாணிகளாகப் பிரவேசித்த ஆக்கிரமிப்பாளர்களான யூதக் குடியேற்றவாசிகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த திராட்சைக் கொடிகளைப் பிடுங்கியெறிந்து, பெரும் அட்டகாசங்களைப் புரிந்துள்ளனர் என உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. கிர்யத் அர்பா எனும் யூதக் குடியிருப்பைச் சேர்ந்த ஆக்கிரமிப்பாளர்களில் ஒருபெரும் குழு சுமார் நான்கு தூனம் பரப்புள்ள பலஸ்தீன் விளைநிலத்தினுள் அத்துமீறி [...]

Mon 08

Click here to bookmark this link.Channel Image16:01 தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்ட அக்கிரமக்காரர்கள். தினம் ஒரு குர்ஆன் வசனம்
(ஆனால் அக்கிரமக்காரர்களோ) தங்களிடம் (உயிர்களைக் கைப்பற்றுவதற்காக) மலக்குகள் வருவதையோ, அல்லது உம் இறைவனுடைய (வேதனை தரும்) கட்டளை வருவதையோ தவிர வேறு எதை அவர்கள் எதிர் பார்க்கின்றனர்? இவர்களுக்கு முன்னிருந்தோரும் இவ்வாறே (அநியாயம்) செய்தார்கள்; இவர்களுக்கு அல்லாஹ் அநியாயம் எதுவும் செய்யவில்லை. ஆனால் அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள். (அல்குர்ஆன்: 16:33)
Click here to bookmark this link.Channel Image12:02 அழிந்து போகும் கந்தூரிகளும் உயிர்ப்பிக்கத் துடிக்கும் மௌலவிகளும் இஸ்லாம்கல்வி.காம் - Portal
அல்லாஹ்வின் மார்க்கமும் மௌலவிகளின் விளக்கமும் தொடர்.. அல்லாஹ்வின் மார்க்கமாகிய புனித இஸ்லாத்தைக் கற்றவர்கள்தாம் ஸஹாபாக்கள், தாபியீன்கள், அவர்களின் வழித்தோன்றலில் வந்த இமாம்கள். இவர்கள் இஸ்லாத்தை சரியான அடிப்படையில் மக்கள் மன்றத்தில் முன்வைத்து அதற்காக பல இன்னல்களையும் அனுபவித்தார்கள். இவர்கள், ‘லாயிலாஹ’ இல்லல்லாஹ்’ என்ற சத்தியக்கலிமாவையும், அது வேண்டி நிற்கும் பொருளையும் சரிக்குச் சரியாக விளங்கி மக்களை அதன் பக்கம் அழைத்தவர்கள். அதற்காகவே தமது உயிர்களையும் நீத்தவர்கள், சத்தியத்தை அசத்தியமாக்கி, பித்அத் (மார்க்கத்தில் புதியவை) களை நபிவழியாக்கி, உண்மையை மறைத்து, அபூலஹப் [...]
Click here to bookmark this link.Channel Image10:37 ஷைத்தானின் பிடியிலிருந்து மீள.. (தொடர்-3) இஸ்லாம்கல்வி.காம் - Portal
அல்-ஜுபைல் வெள்ளி மேடை-47 தலைப்பு: ஷைத்தானின் பிடியிலிருந்து மீள.. (தொடர்-3) வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி இடம்:ஜுபைல், சவூதி அரேபியா நாள்: 29.01.2010 Download flash video – Size: 57.5 MB Audio Play: Download mp3 audio – Size: 13.8 MB
Click here to bookmark this link.Channel Image10:03 ஷைத்தானின் பிடியிலிருந்து மீள.. (தொடர்-2) இஸ்லாம்கல்வி.காம் - Portal
அல்-ஜுபைல் வெள்ளி மேடை-46 தலைப்பு: ஷைத்தானின் பிடியிலிருந்து மீள.. (தொடர்-2) வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி இடம்:ஜுபைல், சவூதி அரேபியா நாள்: 22.01.2010 Download flash video – Size: 55.1 MB Audio Play: Download mp3 audio – Size: 13.3 MB

Sun 07

Click here to bookmark this link.Channel Image15:48 காஃபிர்கள் மீது இழிவும், வேதனையும் மிக்க கியாமநாள்! தினம் ஒரு குர்ஆன் வசனம்
பின்னர், கியாம நாளில் (அல்லாஹ்வாகிய) அவன் அவர்களை இழிவு படுத்துவான்; "எவர்களை நீங்கள் எனக்கு இணையா(ன தெய்வங்களா)க்கி, அவர்களைப் பற்றி (முஃமின்களிடம்) பிணங்கிக் கொண்டிருந்தீர்களோ, அவர்கள் எங்கே?" என (அவர்களிடம்) கேட்பான்; எவர்களுக்குக் கல்வியறிவு கொடுக்கப்பட்டதோ அவர்கள்; "நிச்சயமாக இன்று இழிவும் வேதனையும் காஃபிர்கள் மீது தான்" என்று கூறுவார்கள். (அல்குர்ஆன்: 16:27)
Click here to bookmark this link.Channel Image12:33 தவ்ஹீதும் ஷிர்க்கும் இஸ்லாம்கல்வி.காம் - Portal
இஸ்லாமிய கொள்கை விளக்கம் பயிற்சி முகாம் (ரமளான் 2009 – ஹிஜ்ரி 1430) தலைப்பு: தவ்ஹீதும் ஷிர்க்கும் வழங்குபவர்: சகோதரர் கோவை S. அய்யூப் இடம்: மஸ்ஜிதுல் முஸ்லிமீன், கோட்டை, கோவை Audio/Video link: www.islamkalvi.com/media/iyub44/index.htm Audio Play Download MP3 Audio [Part 1] [Part 2]
Click here to bookmark this link.Channel Image05:15 தமிழ்ச்செல்வனுக்கு ... வஹ்ஹாபி
கடந்த 08.01.2010 திண்ணை இதழில் வெளியான எனது "புதுவகை நோய்: இமி-4" எதிர்வினைக் கட்டுரை[சுட்டி-01]இல் "தம் உறவினர்களின் நலனுக்காக, சொந்த நாட்டின் இராணுவ இரகசியங்களை எதிரி நாட்டுக்குக் கசியவிடுதல் ஒரு முஸ்லிமுக்குத் தகாது என்பது இங்கு இஸ்லாத்தின் மார்க்கக் கட்டளையாகக் கூறப் படுகிறது. இந்தியாவின் பிரிவினை சதிக்குப் பிறகு முளைத்த பாகிஸ்தானில் இந்திய முஸ்லிம்களின் உறவினர்கள் இன்றும் வாழ்கிறார்கள் என்பதும் இந்திய இராணுவ இரகசியங்களைப் பாகிஸ்தானுக்குப் 'போட்டுக் கொடுத்தவர்'களின் பட்டியலில் இந்திய முஸ்லிம் எவரும் இடம்பெறவில்லை என்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கது" எனும் வரிகளை மறுத்து, "வஹ்ஹாபியின் மோசடி" எனும் தலைப்பில் தமிழ்ச்செல்வன் என்பார் பாகிஸ்தானுக்குப் போட்டுக் கொடுத்த இந்திய முஸ்லிம்கள் என்பதாக ஐந்து சுட்டிகளைக் கொடுத்திருந்தார் [ சுட்டி-02].

அவற்றுள் முதலாவதில் [சுட்டி-03] அஃப்ரோஸ் என்பவன் நமது இராணுவ முகாம்களைப் பற்றிய தகவல்களைப் பாகிஸ்தானுக்குப் 'போட்டுக் கொடுக்க' முயன்று கடந்த 11.08.2006ஆம் தேதி ராம்பூரில் கைது செய்யப் பட்டு, 19.02.2009 அன்று லக்னவ் நீதிமன்றத் தீர்ப்புப்படி பத்தாண்டு காலம் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டவன்.

அஃப்ரோஸ் வழக்கில் நாம் கருத்தில் கொள்ள வேண்டுவது யாதெனில், தன் உறவினர்களின் பொது நலன் கருதி அவன் போட்டுக் கொடுத்தவன் அல்லன். யாரோ போட்டுக் கொடுத்ததைக் காசுக்காக "வாங்கிக் கொடுக்க" முயன்று தோற்றுப் போனவன்.

"அஃப்ரோஸிடமிருந்து கைப்பற்றப் பட்ட ஆவணங்கள் இரகசியக் குறியீடுகளைக் கொண்டவை என்றும் ஆனால் இரகசியத் தகவல்களை அவன் எவ்வாறு பெற்றான் என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்றும் நமது இராணுவ அதிகாரி ஒருவர் உறுதிப் படுத்தியிருக்கிறார்" என்பதாக மாவட்டக் குற்றப் பிரிவின் துணை ஆலோசகர் இர்ஃபான் அஹ்மது கான் குறிப்பிட்டதை இந்தியன் எக்ஸ்ப்ரஸ் 21.02.2009 இதழ் Pakistani spy gets 10-year jail term என்று பொருள் மயக்கம் தரும் தலைப்போடு வெளியிட்டுள்ளது [சுட்டி-04].

ஏறத்தாழ மூன்றாண்டு காலம் நடைபெற்ற விசாரணையில் நமது இராணுவ இரகசியங்களை அவனுக்குப் 'போட்டுக் கொடுத்த' புள்ளி யார் எனும் தகவலை அவனிடமிருந்து கறக்க முடியவில்லையா? அல்லது புள்ளி பெரியது என்பதால் வெளியிடவில்லையா? என்பதெல்லாம் நமக்குப் புரியாத புதிர்கள்.

தண்டனை கொடுக்கப் பட்ட இன்னொரு வழக்கில், ஜஹான் ஆரா எனும் பெண் வருகிறாள். தொலைக்காட்சி வழியாக உலகம் முழுக்கக் காண்பிக்கப் படும் நமது குடியரசு நாள் அணிவகுப்பில் இடம்பெறும் ஆயுதங்களை நிழற்படம் எடுத்துப் பாகிஸ்தானைச் சேர்ந்த மாலிக் என்பவனுக்குக் கொடுத்ததாகவும் அவனிடமிருந்து 10 கையெறி குண்டுகளைப் பெற்று அவற்றுள் எட்டை முஸாஃபர் நகரைச் சேர்ந்த இஃப்திகார் என்பவனுக்குக் கொடுத்ததாகவும் வழக்கு. அவள் 20.09.1994இல் கைது செய்யப் பட்ட இடம் பாகிஸ்தான் ஹை கமிஷன் அலுவலகம். Terrorist And Disruptive Activities (Prevention) Act (TADA) மற்றும் Official Secrets Act (OSA) விதிகளின்படி அவளுக்கு ஆறாண்டு கடுங்காவல் தண்டனையும் ரூபாய் ஐயாயிரம் அபராதமும் விதித்து (ஏழாண்டுகள் கழித்து) 07.03.2001இல் உ.பி. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கையெறி குண்டுகள் பெற்றுக் கொண்டதற்கான சான்றுகளை இஃப்திகாரிடமிருந்து கைப்பற்ற முடியாமல் அரசுத் தரப்புக் கையைப் பிசைந்து நின்றதால் அவன் வழக்கிலிருந்தே விடுவிக்கப் பட்டான் [சுட்டி-05].

மற்ற மூன்று சுட்டிகளில் உள்ள தகவல்கள் கைதுப் படலம்வரை நின்று விடுபவை. வழக்கு நடந்ததா? தீர்ப்பு வந்ததா? போன்ற கூடுதல் விபரங்களைப் பெற முடியவில்லை. அவற்றுள் 1995இல் இராணுவத்தில் இணைந்த முஹம்மது நஸீம் என்பவனது வழக்கு முக்கியமானது. அவன், கார்கில் தியாகி அஹ்மது அலீ [சுட்டி-06] வகித்த Lance Naik பதவி வகித்தவன். அவன் 2006 மார்ச் மாதம் அலீ ஜாட்டூன் எனும் ஐ.எஸ்.ஐ ஏஜண்டோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு நமது இராணுவ நிலைகள், வீரர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் போன்ற தகவல்களை ஏஜண்டுக்குத் தெரிவித்ததாக 29.06.2007இல் டெல்லியில் வைத்துக் கைது செய்யப் பட்டான்.

நமது இராணுவம் ஒளிந்து கொண்டோ துப்பாக்கிகளை ஒளித்து வைத்துக் கொண்டோ போர் செய்யவில்லை. வேண்டிய தகவல்களை வெளிப்படையாகவே வைத்திருக்கிறோம் [சுட்டி-07]. அமெரிக்காவினால் இரண்டாவது செல்லப் பிள்ளையாகத் தத்து எடுக்கப் பட்ட பாகிஸ்தான்காரன் இதுபோன்ற சப்பைத் தகவல்களுக்கு 50,000 ரூபாய் கொடுத்திருக்கிறான் [சுட்டி-08] என்றால் நிச்சயம் அவன் கேனையன்தான். அவன் கேனையனாகவே இருக்கட்டும்; அதுதான் நமக்கு நல்லது.

அதேபோல், பாகிஸ்தானில் உள்ள உறவினர்களைக் காணச் சென்ற மோரீகான் மற்றும் அப்பாஸ்கான் ஆகிய இருவரையும் பாகிஸ்தானின் உளவுத்துறையினர் என்று 'சொல்லப் படுகின்ற' சிலர் அணுகி இந்திய இராணுவத்தைக் குறித்துத் தகவல் கேட்டதாகவும் கைப்பேசி வழியாக இருவரும் காசுக்காகத் தகவல்கள் கொடுத்ததாகவும் 'சொல்லப் படுகின்ற' வழக்கும் ஒன்று. இதில் reportedly working as spies, Morey apparently told cops போன்ற சொற்கள் மூலம், வழக்குக் கெட்டிப் படுத்தப் படாமல் இருப்பதாக அறிய முடிகிறது [சுட்டி-09].

இறுதியாக, கைப்பேசிகளும் பாகிஸ்தானியப் பணமும் வைத்திருந்ததாக அனீஸ்கான், அனீக்கான், கோராகான் ஆகிய மூவரை 04.05.2007இல் கைது செய்த வழக்கு [சுட்டி-10]. மூவரையும் Official Secrets Act (OSA) விதியின்கீழ் நமது இராணுவம் கைது செய்து ஃபாஸில்கா காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளது. கூடுதல் விபரங்கள் கிடைக்கவில்லை.

தமிழ்ச்செல்வன் வெறும் சுட்டிகளாகக் கொடுத்தவற்றைத் தேடிப் பிடித்து இங்கு நான் விளக்கமாக எடுத்து வைப்பதற்குக் காரணம், என்னைப் போன்றே வாசகர்கள் பலருக்கு/சிலருக்கு மேற்காண்பவை புதிய தகவல்களாக இருக்கக் கூடும். இணையத்தில் "உளவு" எனும் சொல் குறித்துத் தேடியபோது மாலிக் என்பவனைப் பற்றி மரைக்காயர் எனும் பதிவர் தனது வலையில் விபரம் கொடுத்திருந்தார் [சுட்டி-11]. அப்பதிவின் அடியில் கண்ட தொடர்புடைய அவரது பழைய பதிவுகளான
1. உளவுத் துறையில் ஒரு கருப்பு ஆடு [சுட்டி-12],
2. இராணுவ இரகசியங்களை விற்க முயன்ற இராணுவ வீரர் [சுட்டி-13],
3. இராணுவத்தில் உளவாளிகள் ஊடுருவல் [சுட்டி-14],
4. முக்கிய ஆவணங்களைத் திருடிய முன்னாள் இராணுவ அதிகாரி கைது [சுட்டி-15],
5. அரசு உயர்மட்டத்தில் தொடரும் நாட்டிற்கெதிரான துரோகங்கள் [சுட்டி-16]

ஆகியவற்றைப் படித்துப் பார்த்து அதிர்ந்து போனேன்! திண்ணை வாசகர்கள் சிலருக்காவது அவை புதிய தகவலாக இருக்கக் கூடும். தகவல் தெரியாத திண்ணை வாசகர்களை, "மோசடி"க்காரர்கள் என்று தமிழ்ச்செல்வன் சொல்ல மாட்டார் என்று நம்புவோமாக!

எவ்வாறாயினும், எனது "புதுவகை நோய்: இமி-4" எதிர்வினைக் கட்டுரை[சுட்டி-01]இல் "தம் உறவினர்களின் நலனுக்காக, சொந்த நாட்டின் இராணுவ இரகசியங்களை எதிரி நாட்டுக்குக் கசியவிடுதல் ஒரு முஸ்லிமுக்குத் தகாது என்பது இங்கு இஸ்லாத்தின் மார்க்கக் கட்டளையாகக் கூறப் படுகிறது" எனும் பேசுபொருளிலும் அவ்வாறு தகாத செயல்களைச் செய்வோர் இஸ்லாத்தின் கட்டளைகளை மீறியோர் என்பதிலும் தண்டனைக்கு உரியோர் என்பதிலும் எவ்வித மாற்றமும் இல்லை.

நன்றி!
ஃஃஃ

திண்ணையில் ...

சுட்டிகள்:
01 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=81001081&format=html
02 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=81001153&format=html
03 - http://newshopper.sulekha.com/man-gets-10-year-jail-for-spying-for-pakistan_news_1038667.htm
04 - http://www.indianexpress.com/news/pakistani-spy-gets-10year-jail-term/426409/
05 - http://www.hinduonnet.com/2001/03/08/stories/0208000q.htm
06 - http://www.kashmir-information.com/Heroes/ali.html
07 - http://indianarmy.nic.in/Index.aspx?flag=LfcULYFlbeQ=
08 - http://news.webindia123.com/news/ar_showdetails.asp?id=706300614&cat=&n_date=20070630
09 - http://www.tribuneindia.com/2009/20090620/nation.htm#11
10 - http://www.dailyexcelsior.com/web1/06may07/news.htm#10
11 - http://maricair.blogspot.com/2007/06/raw.html
12 - http://maricair.blogspot.com/2006/08/blog-post.html
13 - http://maricair.blogspot.com/2006/10/blog-post.html
14 - http://maricair.blogspot.com/2006/10/blog-post_24.html
15 - http://maricair.blogspot.com/2006/11/blog-post_05.html
16 - http://maricair.blogspot.com/2006/11/blog-post_12.html
Click here to bookmark this link.Channel Image00:43 பலஸ்தீனர்களுக்கு எதிரான மனித உரிமைமீறல்களை இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது: ஐ.நா. அறிக்கை Free Palestine » தமிழ் (Tamil)
ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலம் – கடந்த சனிக்கிழமை (06.02.2010) ஐ.நா.வின் மனிதாபிமானச் செயற்பாட்டு ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை பலஸ்தீன் மக்கள் மீதான பல்வேறு மனித உரிமை மீறல்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதோடு எத்தகைய நியாயமான காரணங்களுமின்றி அவர்களின் வீடுகளைத் தகர்த்துவருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 16 பலஸ்தீன் பொதுமக்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் தாக்கப்பட்டுக் காயமடைந்துள்ளனர் என்றும், 2010 ஆம் வருட ஆரம்பமுதல் இத்தகைய தனிநபர் தாக்குதல்களின் எண்ணிக்கை 67 ஆக [...]

Sat 06

Click here to bookmark this link.Channel Image16:32 மக்களை வழிகெடுத்தோரின் பாவச்சுமை! தினம் ஒரு குர்ஆன் வசனம்
கியாம நாளில் அவர்கள், தங்கள் (பாவச்) சுமைகளை முழுமையாக சுமக்கட்டும்; மேலும் அறிவில்லாமல் இவர்கள் எவர்களை வழி கெடுத்தார்களோ, அவர்களுடைய (பாவச்) சுமைகளையும் (சுமக்கட்டும்) இவர்கள் (சுமக்கும்) சுமை மிகவும் கெட்டதல்லவா?. (அல்குர்ஆன்: 16:25)

Fri 05

Click here to bookmark this link.Channel Image21:34 ஷைத்தானின் சூழ்ச்சிகளும் அதை முறியடிப்பதற்கான தீர்வுகளும்! – Audio/Video சுவனத்தென்றல்
நிகழ்ச்சி : இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு உரை : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, இஸ்லாமிய அழைப்பாளர், அல்-ஜூபைல் தஃவா நிலையம், சவூதி அரேபியா. நாள் : 04-02-2010 இடம் : அல்-கஃப்ஜி இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், சவூதி அரேபியா. ஆடியோ : (Download) {MP3 format -Size : 15.8 MB}
Click here to bookmark this link.Channel Image16:03 அல்லாஹ்வின் பாதைக்கு மனிதர்களை அழைத்தல்! தினம் ஒரு குர்ஆன் வசனம்
அலிஃப், லாம், றா. (நபியே! இது) வேதமாகும்; மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டு வருவதற்காக இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம்; புகழுக்குரியவனும், வல்லமை மிக்கோனுமாகிய (அல்லாஹ்வின்) பாதையில் (அவர்களை நீர் கொண்டு வருவீராக!). (அல்குர்ஆன்: 14:1)
Click here to bookmark this link.Channel Image12:46 அல்குர்ஆன் – சுன்னாவை சரியான முறையில் புரிந்து கொள்வதற்கான சில வழிகாட்டல்கள்… சுவனத்தென்றல்
الأصول العلمية لفهم النصوص இஸ்லாம் அல்லாஹ்விடமிருந்து வந்த மார்க்கம் என்பதால் அதன் அடிப்படை மூலாதாரங்களாக அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த வஹீயாக உள்ள அல்-குர்ஆனும் சுன்னாவுமே காணப்படுகின்றன. இதுபற்றி அல்-குர்ஆனும் சுன்னாவும் பல்வேறு இடங்களில் பேகின்றன. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள், இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும் உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள், உங்களில் ஏதாவது ஒரு விடயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் – அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் [...]
Click here to bookmark this link.Channel Image08:10 ஸபர் மாதமும் மூடநம்பிக்கைகளும்! – Audio/Video சுவனத்தென்றல்
நிகழ்ச்சி : இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு! உரையாற்றியவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர், அல்-ஜூபைல் அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-ஜூபைல், சவூதி அரேபியா. நாள் : 03-02-2010 இடம் : அல்-கஃப்ஜி, சவூதி அரேபியா. ஆடியோ : (Download) {MP3 format -Size : 15.02 MB}

Thu 04

Click here to bookmark this link.Channel Image15:35 'குல் ஹுவல்லாஹு அஹத்' எனும் (112 வது) அத்தியாயத்தின் சிறப்பு. பிரார்த்தனை பேழை
அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார். ஒருவர் 'குல்ஹுவல்லாஹு அஹத்' எனும் (112 வது) அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக்கொண்டிருந்ததை மற்றொரு மனிதர் செவிமடுத்தார். (இதைக்கேட்ட) அந்த மனிதர் விடிந்ததும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கூறினார். அந்தச் சிறிய அத்தியாயத்தை(த் திரும்பத் திரும்ப அவர் ஓதியதை) இவர் சாதாரணமாக மதிப்பிட்டதைப் போல் தெரிந்தது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அந்த அத்தியாயமும் குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கிற்கு ஈடானதாகும்'' என்று கூறினார்கள்.

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, 'ஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியாதா?' என்று கேட்டார்கள். அதனைச் சிரமமாகக் கருதிய நபித்தோழர்கள், 'எங்களில் யாருக்கு இந்தச் சக்தி உண்டு, இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் ஒருவனே. அல்லாஹ் தேவையற்றவன்' (என்று தொடங்கும் 112 வது அத்தியாயம்) குர்ஆனின் மூன்றிலொரு பகுதியாகும்' என்று கூறினார்கள்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தம் உள்ளங்கைகளை இணைத்து, அதில் 'குல் ஹுவல்லாஹு அஹத்', 'குல் அஊது பிரப்பில் ஃபலக்', ' குல் அஊது பிரப்பின்னாஸ்' ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதிக்கொள்வார்கள். பிறகு தம் இரண்டு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தம் உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.
Click here to bookmark this link.Channel Image15:35 அல்லாஹ், மற்றும் அவனுடைய தூதர்களின் அழைப்பை ஏற்றவர்களின் அழகிய பிரார்த்தனை! தினம் ஒரு குர்ஆன் வசனம்
‘எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; ‘எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக; இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!’ ‘எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல (என்றும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்).(அல்குர்ஆன்: 3:193,194)
Click here to bookmark this link.Channel Image15:35 அல்லாஹ் இறக்கிய வேதத்தின் மகிமை! தினம் ஒரு குர்ஆன் வசனம்
மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம். (அல்குர்ஆன்: 16:89)
Click here to bookmark this link.Channel Image07:34 டர்புலன்ஸ் ஒரு அறிமுகம் – பாகம் 4 அறிவியல்
திரவ ஓட்டத்தில் அமளிக்கு காரணம் விஸ்காசிட்டி, அதாவது பாகுநிலையின் வீரியத்தில் உள்ளது என்றும், அமளி ஓட்டம் என்பது பல சைஸ் சுழல்களால் ஆனது என்றும் மூன்றாவது பாகத்தில் பார்த்தோம். பல சைஸ்களில் ஓடும் சுழல்களின் ஊடே திரவ ஓட்டத்தின் இயக்க ஆற்றல் பெரியசுழலில் இருந்து சிறியவைகளுக்கு தொடர்ந்து மாற்றலாகி, இறுதியில் மாலிக்கியூலர் லெவலில் அளக்கமுடியாத வெப்பமாக மாறி விரயமாகிவிடுகிறது. அமளியாக ஓட்டம் இருப்பதற்கு அதனால் நாம் தொடர்ந்து ஆற்றலை ஊட்டிக்கொண்டே இருக்கவேண்டும், குழாயாக இருந்தால், மோட்டார் பம்பின் [...]

Wed 03

Click here to bookmark this link.Channel Image15:41 உண்மையான முஃமின்களின் இதயம்! தினம் ஒரு குர்ஆன் வசனம்
உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள். (அல்குர்ஆன்: 8:2)
Click here to bookmark this link.Channel Image14:24 கொடுப்பதும், எடுப்பதும் (மஹர் மற்றும் வரதட்சணை) இஸ்லாம்கல்வி.காம் - Portal
சுவனப்பாதை மாதஇதழ் நடத்திய உலகளாவிய கட்டுரைப் போட்டியில் (ஹிஜ்ரி 1430) மூன்றாம் பரிசு பெற்ற கட்டுரை புகழனைத்தும் விண்ணையும் மண்ணையும் அவற்றிற்கிடையே உள்ளவற்றையும் நம்மையும் படைத்த தூயோனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே! எங்கே அமைதி? அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கும் எண்ணற்ற அருட்கொடைகளில் மிகவும் சிறந்ததும், அனைவரும் விரும்புவதும் ‘அமைதி’ என்று சொன்னால் அது மிகையாகாது. காசு கொடுத்து வாங்க முடியாத பொருள் அது. மற்றவர்களை விடுங்கள், அமைதி மார்க்கமாகிய இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றக்கூடிய நம் சமுதாயத்தில் அமைதி இருக்கிறதா? இலட்சங்கள் அலட்சியமாகப் பறக்கும் [...]
Click here to bookmark this link.Channel Image14:16 டென்ஷன் ஆவது ஏன்? இஸ்லாம்கல்வி.காம் - Portal
சுவனப்பாதை மாதஇதழ் நடத்திய உலகளாவிய கட்டுரைப் போட்டியில் (ஹிஜ்ரி 1430) இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை ஒவ்வொரு மனிதனும் தான் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை பலவிதமான இன்பங்களையும், துன்பங்களையும் சந்திக்கின்றான். இது மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை. இதுபற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுகையில், நிச்சயமாக கஷ்டத்துடனேதான் இலகு உள்ளது. (அல்குர்ஆன் 94:6) மேலும் ஓரிடத்தில், நிச்சயமாக நாம் ஓரளவு பயத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் விளைச்சல்கள் ஆகியவற்றில் ஏற்படும் இழப்புகளாலும் உங்களைச் சோதிப்போம் பொறுமையாளர்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் [...]
Click here to bookmark this link.Channel Image07:43 ஹிஜரத் ஒரு மாபெரும் சகாப்தம்-1 அல்பாக்கவி.காம்
ஹிஜ்ரத் ஒரு மாபெரும் சகாப்தம் முஹர்ரம் மாதம் பிறந்ததும் இஸ்லாமிய புத்தாண்டின் வருகையை எதிர்நோக்கியிருக்கும் இஸ்லாமியர்களுக்கு தியாகத்தின் நினைவே பளிச்சிடுகிறது. 1429ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற உயிர் தியாகங்கள் சுவடு பதித்த தடயங்கள், இரத்தம் சிந்திய நாட்கள், கொள்கைக்காக பிறந்த பொன்னாட்டை இழந்த நினைவுகள் அலை அலையாய் மனக்கண் முன் பளிச்சிடுகின்றன. இப்படியொரு வரலாற்றை உலகம் கண்டதில்லை. கேட்டதில்லை. வரலாறும் பதித்ததில்லை. ஆம்! வரலாற்றில் மின்னிடும் அந்த வைர வரிகளைப் படிக்கும் போதே கண்கள் குளமாகின்றன. தியாகத்தின் [...]

Tue 02

Click here to bookmark this link.Channel Image15:59 அல்லாஹ்வை தியானிக்கும் முறை! தினம் ஒரு குர்ஆன் வசனம்
“(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்” (அல்குர்ஆன் 7:205)
Click here to bookmark this link.Channel Image13:39 தஃவாக் களத்தை துவம்சம் செய்யும் தாயிக்கள் இஸ்லாம்கல்வி.காம் - Portal
மனிதன் இவ்வுலகில் தோற்றுவிக்கப்பட்ட நோக்கத்தை மறந்து மிருகங்களுக்கும், கால் நடைகளுக்கும் ஒப்பான கலாச்சாரத்தை அரங்கேற்றுகின்றபோது, அகிலங்களின் இரட்சகானகிய அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகின்ற போது அவனை உண்மை மனிதனாக, இறை திருப்தியையும் அருளையும் பெற்றவனாக மாற்றுவதற்காக அல்லாஹ் தனது மனித தூதர்களை வானவத் தூதர்கள் மூலம் தெரிவு செய்து அழைப்புப் பணி செய்வதற்காக அவர்களை அனுப்பி வைக்கின்றான். தஃவா(அழைப்பு)ப்பணி மகத்தான பணியாகும். மரணத்தின் பின்னர் ஸதகா ஜாரியாவை – நிலையான தர்மத்தைப்- பெற்றுத்தரும் இப்பணியை அல்லாஹ்வால் தெரிவு [...]

Mon 01

Click here to bookmark this link.Channel Image16:53 அனைத்தையும் அறிந்த அல்லாஹ்! தினம் ஒரு குர்ஆன் வசனம்
அன்றியும் அல்லாஹ்தான் உங்களை (முதலில்) மண்ணால் படைத்தான்; பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து - பின் உங்களை (ஆண், பெண்) ஜோடியாக அவன் ஆக்கினான், அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை பிரசவிப்பதுமில்லை. இவ்வாறே ஒருவருடைய வயது அதிகமாக்கப்படுவதும், அவருடைய வயதிலிருந்து குறைப்பதும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில் இல்லாமலில்லை. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு எளிதானதேயாகும். (அல்குர்ஆன்: 35:11)
Click here to bookmark this link.Channel Image14:06 இஸ்ரேல் காஸாவைச் சிறைச்சாலையாக மாற்றி, அப்பாவிகளைக் கொன்றுகுவிப்பதை துருக்கி வெறுமனே வேடிக்கை பார்க்காது: அர்தூகான் Free Palestine » தமிழ் (Tamil)
இஸ்தான்பூல் – கடந்த ஞாயிற்றுக்கிழமை (31.01.2010) துருக்கியப் பிரதமர் ரஜப் தையிப் அர்தூகான்,  இஸ்ரேல், காஸாவின் கீழ்க்கட்டமைப்பு வசதிகளையெல்லாம் நிர்மூலமாக்கி, அதனை ஒரு பெரும் சிறைச்சாலையாக மாற்றிக் கொண்டிருப்பதையோ அப்பாவி மக்களை இரக்கமின்றிக் கொன்றுகுவித்து வருவதையோ துருக்கி வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கப் போவதில்லை’ என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார். யூரோநிவ்ஸ் எனும் தொலைக்காட்சிக்கு அர்தூகான் அளித்த பேட்டியில், இஸ்ரேலும் உலகின் ஒரு பகுதியாகக் கருதப்படவேண்டும் என்று அந்த நாடு விரும்பினால், துருக்கியைப் போன்று மிகச் சிறந்த வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட [...]
Click here to bookmark this link.Channel Image04:59 இஸ்லாத்தின் பார்வையில் இளமைப் பருவம்! – Audio/Video சுவனத்தென்றல்
நாள் : 21-01-2010 இடம் : அல்கோபார் இஸ்லாமிய நடுவத்தின் சொற்பொழிவு அரங்கம், சவூதி அரேபியா உரை : மௌலவி முஹம்மது நூஹ் மஹ்ழரி, இஸ்லாமிய அழைப்பாளர், தம்மாம், சவூதி அரேபியா. நிகழ்ச்சி ஏற்பாடு : அல்கோபார் இஸ்லாமிய நடுவம், அல்கோபார், சவூதி அரேபியா. ஆடியோ : (Download) {MP3 format -Size : 15.6 MB}

Sun 31

Click here to bookmark this link.Channel Image17:00 அல்லாஹ்விடம் மேலேறிச் செல்லும் தூய சொற்களும், நல்ல அமல்களும்! தினம் ஒரு குர்ஆன் வசனம்
எவன் இஸ்லாத்தை - கண்ணியத்தை நாடுகிறானோ, அவன், எல்லாக் கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அறிந்து கொள்ளட்டும்); தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன ஸாலிஹான (நல்ல) அமலை எல்லாம் அவன் உயர்த்துகிறான்; அன்றியும் எவர்கள் தீமைகளைச் செய்யச்சதி செய்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு - இன்னும் இவர்களுடைய சதித்திட்டம் அழிந்து போகும். (அல்குர்ஆன்: 35:10)
Click here to bookmark this link.Channel Image08:45 குங்க்ஃபூ கற்கும் ஹைதராபாத் பள்ளி முஸ்லிம் மாணவிகள்! பெண் விடுதலை!
சீன மொழியில் உஷு (武术 - wushu martial arts) எனப்படும் வீரமிக்க போர் தந்திரக் கலையை ஹைதராபாத்தில் உள்ள St. Maaz high school முஸ்லிம் பெண்களுக்கு பயிற்றுவிக்கிறது. பள்ளி வளாகத்திற்கு உள்ளாகவே வாரம் ஒருமுறை பயிற்றுவிக்கப்படும் இக்கலையினை இப்பள்ளியின் பெண்கள் ஆர்வமுடன் கற்றுத் தேர்ந்து வருகின்றனர்.தவறான பார்வைகளிலிருந்து ஒரு பெண் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஹிஜாப் பெரிதும் உதவுகிறது என்பதும், ஹிஜாப்
Click here to bookmark this link.Channel Image04:22 பின்லேடனும் இத்துப்போன ஆடியோ கேஸட்டுகளும் எதிரொலி


ஒசாமா பின்லேடனின் சமீபத்திய வீடியோ டேப், இதுவரை அவரிடமிருந்து வந்த அனைத்து வீடியோ டேப்களையும் விடவும் காமெடியாக உள்ளது. பெரும்பாலும் அமெரிக்க மற்றும் நேட்டோ கூட்டுப் படைகளுக்கு எதிராக வீடியோ டேப் எச்சரிக்கை விடுத்து வந்த திருவாளர் பின்லேடன், தற்போது புவி வெப்பநிலை உயர்வுக்கும் அமெரிக்காவே காரணம் என்று வீடியோ டேப்பில் பேசி அனுப்பியுள்ளார்.

அல்ஜஸீரா தொலைக்காட்சி ஒளிபரப்பிய வீடியோ செய்தியில் பின்லேடன் கூறுகையில்,அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் நெருக்கடிக்கும் புவி வெப்ப மயத்துக்கும் அமெரிக்காவும்,மேற்கத்திய நாடுகளுமே காரணமென குற்றம் சாட்டியுள்ளதோடு மூன்றாம் உலக நாடுகளின் வெள்ளம்,பட்டினி,பஞ்சம், காடுகள் அழிப்புக்கும் அமெரிக்காவே காரணம் என்று சாடியுள்ளது காமெடி. மனிதர்களை மட்டும் துல்லியமாகக் குறிவைத்து அழிக்கும் அசைவ தேசம் அமெரிக்காவை,காடுகள் அழிப்புகளைச் சொல்லி சைவமாக்கும் சதித்திட்டம் இருக்குமோ என்னவோ!

நியூயார்க் வர்த்தக மையங்களைத் தகர்த்த பெருமை கொண்ட பின்லேடன், வெடிக்காத வெடிகுண்டுகளை வைத்து மிரட்டுமளவுக்கு தரம்தாழ்ந்து வந்து இருப்பதிலிருந்து அல்காயிதா நெட்வொர்க்கை செயலிழந்து முடக்கப்பட்டு விட்டதும் வெட்டவெளிச்சமாகி உள்ளது. கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று டெட்ராய்ட் விமானத்தில் இத்துப்போன குண்டைக் கடத்தியதை, வழக்கம் போல் அல்காயிதா நேர்மையாகப் பொறுப்பேற்றுக் கொண்டதோடு, அதிபர் ஒபாமாவுக்கு கிறிஸ்துமஸ் போனஸாக எச்சரிக்கைகளையும் வழங்கியது.

பின்லேடன் பேசியதாகச் சொல்லப்படும் இத்தகைய அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஆடியோ-வீடியோ டேப்கள் எல்லாமே வழக்கொழிந்து போய்விட்ட பழையவகை ஆடியோ கேசட்டில் பேசிப் பதிவு செய்தே அனுப்பப்படுகிறது. இதுகுறித்து எந்தப் புலணாய்வு அமைப்புக்கும் எவ்வித சந்தேகமும் எழாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

சந்தையில் கிடைக்காத புத்தம் புதிய கேஸட்டுகள் பின்லாடனுக்கு மட்டும் யார் சப்ளை செய்கிறார்களோ தெரியாது! பின்னணியில் சீனா அல்லது ரஷ்யா இருக்கக்கூடும்?

அமெரிக்காவை கலங்கடிக்கும் ஓர் உலக மகா தீவிரவாதி இன்னும் பழைய ஆடியோ டேப் ரெக்கார்டரை வைத்துக் கொண்டு மிரட்டுவது மனசுக்குக் கஷ்டமாக உள்ளது. ;-))) FLASH DRIVE அல்லது MP3 வாய்ஸ் ரெக்கார்டரை, அல்ஜஸீராவுக்கு அனுப்ப வேண்டிய கேசட்டுகளைப்போடும் அதே குப்பைத் தொட்டியில் போட்டுவைத்தால்,இனி MP3, MPEG 4 ஃபார்மட்டில் நிறைய காமெடிகளை பேசி அனுப்பி வைப்பார்.

இதுகுறித்த மேலதிக காமெடியை இந்தச் சுட்டியில் வாசிக்கவும்.

Sat 30

Click here to bookmark this link.Channel Image23:24 ஆக்கிரமிப்பாளர்கள் பலஸ்தீனரின் வீட்டில் நுழைந்து அடாவடித்தனம் செய்ய இஸ்ரேலியக் கோர்ட் அனுமதி Free Palestine » தமிழ் (Tamil)
ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலம் – இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களான யூதக் குடியேற்றவாசிகள் கும்பலொன்று ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரிலுள்ள 80 வயதுப் பெண்மணி ஒருவருக்குச் சொந்தமான வீட்டின் இரண்டாம் மாடியினுள் அத்துமீறி நுழைந்து அடாவடித்தனம் புரிந்துள்ளது. அவ்வீட்டினுள் தினந்தோறும் இவ்வாறு அத்துமீறி நுழைவதற்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கோர்ட் அனுமதியளித்ததைத் தொடர்ந்தே இந்த அத்துமீறல் நீடிக்கின்றது.   கடந்த 25.01.2010 இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பில்(!?), வீட்டுச் சொந்தக்காரியான வயோதிகப் பலஸ்தீன் பெண்மணி தனது வீட்டின் இரண்டாம் மாடியில் ஆக்கிரமிப்பாளர்களான யூதக் குடியேற்றவாசிகள் நுழைவதைத் தடுத்தால், [...]
Click here to bookmark this link.Channel Image17:25 மனிதர்களின் பகைவன். தினம் ஒரு குர்ஆன் வசனம்
நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான்; ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள்; அவன் (தன்னைப் பின்பற்றும்) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காவே தான். (அல்குர்ஆன்: 35:6)
Click here to bookmark this link.Channel Image11:06 புதுவகை நோய்: இமி-முற்றியது வஹ்ஹாபி
அகழிப் போரைப் பற்றிய அனைத்து விபரங்களும் வரலாற்றுப் பதிவுகளாகும். அவை அகழாய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டிய தேவையிற்றி பல மொழிகளிலும் இணையத்தில் விரவிக் கிடக்கின்றன.

அகழிப் போரை ஏற்பாடு செய்தவர்கள் யூதர்கள் ஆவர்! அவர்களது துரோகத்தாலும் சூழ்ச்சியாலும் உருவானதே அகழிப் போர்.

இணைகற்பிப்பவர்களான மக்காவாசிகளுக்கும் இஸ்லாமியப் படை வீரர்களான மதீனத்து முஸ்லிம்களுக்கும் மதீனாவை அடுத்துள்ள மலைப் பகுதியான உஹதில் ஒரு போர் நடைபெற்றது. காலம் ஹிஜ்ரீ மூன்றாம் ஆண்டு ஷவ்வால் (பத்தாவது) மாதம். அப்போரின் இறுதியில், "அடுத்த ஆண்டு பத்ருக் களத்தில் ஷஅபான் (எட்டாவது) மாதம் நாம் உங்களைச் சந்திப்போம்'' என்று முஸ்லிம்களுக்கு மக்காவின் தலைவர் அபூஸுஃப்யான் சவால் விட்டிருந்தார்; முஸ்லிம்களும் ஏற்றுக் கொண்டிருந்தனர் [சுட்டி-42].

ஆனால் ஒப்புக் கொண்டபடி மக்காவிலிருந்து அடுத்த ஆண்டில் எவரும் படை திரட்டி வரவில்லை.

யூதத் தலைவர்களுள் 20 பேர் மக்கத்துக் குறைஷிகளிடம் வந்து, அவர்களை நபியவர்களுக்கு எதிராகப் போர் புரியத் தூண்டினர். குறைஷிகள் மதீனாவின் மீது படையெடுத்தால் அதற்கு உதவியும் செய்வதாக வாக்களித்தனர். "பத்ருக் களத்தில் அடுத்த ஆண்டு சந்திப்போம்" என்று உஹதுப் போர்க்களத்தில் சவால் விடுத்து, அதை நிறைவேற்றாமல் வாக்கை மீறிவிட்ட குறைஷிகள், தற்போது தங்களது பெருமையைத் தக்கவைத்துக் கொள்ள விரும்பி யூதர்களின் தூண்டுகோலுக்கு இரையானார்கள்.

இத்துணைக்கும் யூதர்களும் முஸ்லிம்களும் ஒப்புக் கொண்ட, கீழ்க்காணும் 12 அம்ச உடன்படிக்கை ஒன்று ஏற்கனவே உருவாக்கப் பட்டிருந்தது:

(01) அவ்ஃப் கிளையினரைச் சேர்ந்த யூதர்கள், முஸ்லிம்களுடன் இணைந்த ஒரே சமுதாயத்தினராகக் கருதப்படுவர். இந்த யூதர்களுக்கு அவர்களது மார்க்கத்தில் முழு உரிமை உண்டு. முஸ்லிம்களுக்கும் அவர்களுடன் நட்பு கொண்டவர்களுக்கும் அவர்களின் மார்க்கத்தில் முழுச் சுதந்திரம் உண்டு. இவ்வாறே அவ்ஃப் கிளையினரைச் சாராத மற்ற யூதர்களுக்கும் அவர்களது மார்க்கத்தில் முழுச் சுதந்திரம் உண்டு.
(02) யூதர்கள் தங்களின் செலவுகளுக்குத் தாங்களே பொறுப்பாளிகளாவர். அவ்வாறே முஸ்லிம்களும் தங்களின் செலவுகளுக்குத் தாங்களே பொறுப்பாளிகளாவர்.
(03) இந்த உடன்படிக்கை உடையவர்களிடம் யார் போர் தொடுத்தாலும் அவருக்கு எதிராக முஸ்லிம்களும் யூதர்களும் தங்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்துகொள்ள வேண்டும்.
(04) யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலுள்ள தொடர்பு - நலம் நாடுதல், ஒருவருக்கொருவர் நல்லுபதேசம் செய்தல், உபகாரம் புரிதல் - என்ற அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்; குற்றம் புரிவதில் துணை போவது கூடாது.
(05) ஒருவரின் நண்பன் செய்த குற்றத்திற்காக அவர் குற்றவாளியாக மாட்டார்.
(06) அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
(07) பிறருக்கு எதிரானப் போரில் முஸ்லிம்களுடன் யூதர்கள் கலந்துகொள்ளும்போது யூதர்களும் போர்ச் செலவுகளில் பங்கெடுக்க வேண்டும்.
(08) இவ்வுடன்படிக்கையில் கலந்து கொள்பவர்கள் மதீனாவில் குழப்பம் விளைவிப்பதோ, விஷமத்தனம் செய்வதோ, இரத்தம் சிந்தச் செய்வதோ முற்றிலும் தடுக்கப்பட்டதாகும்.
(09) இந்த உடன்படிக்கையில் கலந்து கொண்டவர்களுக்கு மத்தியில் ஆபத்தான சண்டை, சச்சரவுகள் அல்லது ஏதும் பிரச்னைகள் நிகழ்ந்தால் அதற்குரிய தீர்வு, அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) மூலம் பெறப் படும்.
(10) குறைஷிகளுக்கும், குறைஷிகளுக்கு உதவி செய்பவர்களுக்கும் பாதுகாப்புக் கொடுக்கக் கூடாது.
(11) யாராவது மதீனாவின் மீது முற்றுகையிட்டால் அவர்களுக்கெதிராக அனைவரும் போர் புரிய வேண்டும். தங்களுக்குள் உதவி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் இருக்கும் பகுதியைப் பாதுகாக்க வேண்டும்.
(12) இந்த உடன்படிக்கை, அநியாயக்காரனையும், குற்றவாளியையும் தண்டனையிலிருந்து பாதுகாக்காது [சுட்டி-43].

மேற்காணும் உடன்படிக்கையை யூதர்கள் முறித்தனர்.

மக்காவின் குறைஷியர், திஹாமாவின் கினானாவினர், ளஹ்ரானின் ஸுலைமியர், கீழ்த்திசையின் கத்ஃபானியர், ஃபஜாராவினர், முர்ராவினர், அஷ்ஜவினர், அஸதியர், ஆகிய பல குலத்தவரை முஸ்லிம்களுக்கு எதிராக ஒருங்கிணைப்பதில் அயராது ஈடுபட்ட 20 யூதக் தலைவர்கள் அடங்கிய குழு, ஏறத்தாழப் பத்தாயிரம் பேர் கொண்ட படையைத் திரட்டி மதீனாவை முற்றுகையிட அனுப்பி வைப்பதில் வெற்றி பெற்றனர்.

மதீனத்து முஸ்லிம்களுள் போரில் ஈடுபடத் தகுதியுடையோர் அப்போது ஏறத்தாழ மூவாயிரம் பேர் மட்டுமே. மதீனாவை எதிரிகளிடமிருந்து எவ்வாறு காப்பது?

அது புலப்பெயர்வின் (ஹிஜ்ரீ) ஐந்தாம் ஆண்டின் இறுதிக் கட்டம். அக்கால கட்டத்தில் புதுமையான போர்த் தந்திரம் ஒன்று (இதைப் புனித மோசடியார் 'சூழ்ச்சி' என்று சொல்வார்) நபித்தோழர் ஸல்மான் அல் ஃபார்ஸீ (ரலி) அவர்களால் முன்மொழியப் பட்டது. மக்காவிலிருந்து மதீனாவுக்கு வரும் வழியைச் சுற்றிலும் அகழ் தோண்டி, எதிரிகளைத் தடுப்பது என்பது திட்டம்.

இன்றைக்கு நபியின் பள்ளிவாயில் இருக்குமிடத்திலிருந்து ஏறத்தாழ மூன்று மைல் தூரத்தில், மதீனாவின் அன்றைய நகர் எல்லையின் இறுதியில் நெடிய அகழி ஒன்று தோண்டப் பட்டது. எதிரிகள் மதீனாவில் எல்லையில் வந்து சேர்ந்து அகழைப் பார்த்துத் திகைத்து நின்றனர்.

இஸ்லாமிய எதிரிகள் மிகக் கோபத்துடன் அகழைச் சுற்றி வந்தார்கள். எங்காவது ஒரு சிறு வழி கிடைத்தால் அதன் மூலம் சென்று விடலாம் என்று முயன்றனர். ஆனால், முஸ்லிம்கள் அகழின் பக்கம் எதிரிகளை நெருங்கவிடாமல் அம்பால் தாக்கினர். அகழை நெருங்குவதோ அகழில் இறங்குவதோ அகழை மண்ணால் மூடி பாதை அமைப்பதோ எதிரிகளால் முடியாமலாகி விட்டது. முற்றுகையின்போது எதிரிகள் பலமுறை அகழியில் இறங்குவதற்கும் அதன் மீது பாதை அமைப்பதற்கும் மிகத் தீவிரமாக முயன்றனர். ஆனால், முஸ்லிம்களின் அம்பு மழைக்கு முன்னர் எதிரிகளின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன.

இவ்வாறாக எதிரிகளின் 'அகழ் முற்றுகை' ஏறத்தாழ ஒருமாத காலம் நீடித்தது.

இதற்கிடையில், சாகசம் செய்வதாக எண்ணிக் கொண்டு அகழைக் கடக்க முனைந்த அம்ரு இப்னு அப்து உத், இக்ரிமா இப்னு அபூஜஹ்ல், ழரார் இப்னு கத்தாப் போன்றோர் அகழின் ஒரு குறுகிய இடத்தைத் தேடிப் பிடித்துத் தம் குதிரைகளுடன் இறங்கினர். அகழிக்கும் 'ஸல்உ' மலைக்கும் இடையிலுள்ள சதுப்பான இடத்தில் அவர்களது குதிரைகள் சிக்கித் தடுமாறின. இதைப் பார்த்த அலீ இப்னு அபூதாலிப் (ரலி), முஸ்லிம்கள் சிலரை அழைத்துச் சென்று எதிரிகள் திரும்ப ஓட முடியாதவாறு அவர்கள் வந்த வழியை அடைத்து விட்டார். இப்போது எதிரிகளும் முஸ்லிம்களும் நேருக்கு நேர் சந்தித்தனர். அம்ரு, "என்னிடம் நேருக்கு நேர் யார் மோதுவது?" என்று கேட்க, அலீ (ரலி) "நான்" என்றார்கள். அம்ருக்கு முன் நின்ற அலீ (ரலி), அவன் கோபமடையும்படி சில சொற்களைக் கூறவே அவன் கொதித்தெழுந்தான். தனது குதிரையின் காலை வெட்டி அதன் முகத்தில் வாளால் அறைந்து விட்டு அலீயை நோக்கிச் சீறினான். இருவரும் தங்களின் வாளைச் சுழற்ற, சில நொடிகளில் அலீ (ரலி) அவர்களின் வாள் அம்ரின் தலையைச் சீவியது. ஆயிரம் வீரர்களுக்குச் சமமானவன் என்று பெயர் பெற்ற அம்ரைப் பிண்டமாகப் பார்த்த மற்றவர்கள் பயந்து அகழைத் தாண்டி ஓட்டம் பிடித்தனர். குறைஷியருள் மாபெரும் வீரராக விளங்கிய இக்ரிமாகூட பயத்தால் தனது ஈட்டியையும் போட்டுவிட்டு ஓடினார்.

அந்நிகழ்வுதான் அகழிப் போர் வெற்றியின் திறவுகோல்.

இரண்டாவது தந்திரம் செய்தவர் இஸ்லாத்தில் அண்மையில் இணைந்திருந்த நுஐம் என்பார். இவரைத்தான் புனித மோசடியார் தனது மோசடிப் பதிவில் குறிப்பிட்டிருந்தார். எனவே, நுஐம் இப்னு மஸ்ஊத் இப்னு ஆமிர் என்பவரைப் பற்றி விளக்கமாகவே பார்த்து விடுவோம்.

உண்மையில் நுஐம், முஸ்லிம்களின் எதிரிப் படைகளுக்குத்தான் நன்மை செய்தார்; எவ்வாறு என்பதை இறுதியில் பார்ப்போம்.

பல்குலக் கலவையான எதிரிப் படைகளில் கத்ஃபான் எனும் ஒரு குலம் இடம் பெற்றிருந்ததை முன்னர் கண்டோம். அந்தக் குலத்தைச் சேர்ந்த நுஐம் இப்னு மஸ்ஊத் இப்னு ஆமிர் என்பவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் முஸ்லிமாகி விட்டேன். ஆனால், நான் முஸ்லிமானது எனது கூட்டத்தினருக்குத் தெரியாது. எனவே, நீங்கள் முஸ்லிம்களுக்குச் சாதகமாக ஏதாவது செய்யச் சொன்னால், நான் அதன்படி செய்வேன்" என்றார். அதற்கு நபியவர்கள், "நீ தனியாக என்ன செய்துவிட முடியும்? உன்னால் முடிந்தால் எதிரிகளைத் திசை திருப்பும் தந்திரம் எதையாவது செய். ஏனெனில், போர் என்பதே ஒரு சூழ்ச்சிதான்" என்று கூறினார்கள்.

முதன் முதலாக நுஐம் சென்று சந்தித்தவர்கள், மதீனாவின் எல்லையோரத்தில் வசித்துக் கொண்டு இஸ்லாமிய எதிரிப் படையினருக்கு உணவுக்கான ஏற்பாடுகள் செய்து கொடுத்துக் கொண்டிருந்த மதீனத்து எட்டப்பர்களான குரைளா எனும் யூதக் குலத்தினர். நுஐம் குரைளா குலத்தாரிடம், "நான் உங்களை எந்தளவு விரும்புகிறேன் என்பதையும் எனக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள வலுவான தொடர்பையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்தானே?" எனக் கேட்டார். அதற்கவர்கள், "ஆம்!" என்றனர். "இந்த மதீனா உங்களுடைய ஊராகும். இதில்தான் உங்களுடைய சொத்துகளும் பிள்ளைகளும் பெண்களும் இருக்கின்றனர். நீங்கள் இந்த ஊரைவிட்டு வேறு எங்கும் தப்பித்துச் செல்ல முடியாது. ஆனால், குறைஷிகளின் நிலை வேறு. அவர்களும் கத்ஃபான்களும் முஹம்மதிடம் போர் செய்வதற்காக இங்கு வந்திருக்கின்றனர். நீங்களும் முஹம்மதுக்கு எதிராக அவர்களுக்கு உதவி செய்கிறீர்கள். ஆனால், அவர்களது ஊர் இதுவல்ல. அவர்களது செல்வங்களும் பிள்ளைகளும் இங்கு இல்லை. அவர்களுக்கு நல்ல வாய்ப்புக் கிடைத்தால் அதைப் பயன்படுத்திக் கொள்வார்கள். அப்படி வாய்ப்புக் கிட்டவில்லை என்றாலோ போரில் தோல்வியுற்றாலோ அவர்கள் தங்களது ஊர்களுக்குத் திரும்பச் சென்று உயிர் பிழைத்துக் கொள்வார்கள். நீங்கள் முஹம்மதிடம் வசமாக மாட்டிக் கொள்வீர்கள். முஹம்மது உங்களிடம் பழிதீர்த்துக் கொள்வார். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார். அதற்கு யூதர்கள், "நுஐமே! நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீ கூறுகிறாய்?" எனக் கேட்டனர். அதற்கவர், "நீங்கள் குறைஷியரிடம் அவர்களுள் சிலரை உங்களிடம் அடைமானமாக வைத்துக் கொள்ளக் கேளுங்கள். அவர்கள் சிலரை ஒப்படைக்காதவரை நீங்கள் அவர்களுக்கு ஆதரவாகப் போர் புரியாதீர்கள்" என்று அறிவுறுத்தினார். அதற்கு யூதர்கள், "நீ எங்களுக்குச் சரியான ஆலோசனை கூறிவிட்டாய்" என்று கூறினர்.

இதற்குப் பின் நேரடியாக நுஐம் குறைஷிகளைச் சந்தித்தார். அவர்களிடம், "உங்களை நான் நேசிப்பதையும் உங்களுக்கு நான் நல்லதையே செய்வேன் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள் தானே?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "ஆம்! அப்படித்தான்" என்றனர். அப்போது குறைஷிகளிடம் நுஐம், "யூதர்கள் முஸ்லிம்களோடு செய்திருந்த உடன்படிக்கையை முறித்தது பற்றி இப்போது மிகவும் வருந்துகின்றனர். அதனால் உங்களிடமிருந்து உங்களின் சிலரை அடைமானமாக உங்களிடமிருந்து வாங்கி, அவர்களை முஹம்மதிடம் கொடுத்துத் தாங்கள் செய்த குற்றத்திற்குப் பரிகாரம் தேடிக்கொள்ள எண்ணுகின்றனர். ஆகையால், அவர்கள் உங்களிடம் உங்களின் ஆட்களை அடைமானமாகக் கேட்டால் நீங்கள் ஏற்றுக் கொள்ளாதீர்கள்" என்று கூறினார். அவ்வாறே கத்ஃபானியரைச் சந்தித்து குறைஷிகளிடம் கூறியது போன்று கூறினார்.

ஹிஜ்ரீ 5, ஷவ்வால் (பத்தாம்) மாதம் குறைஷிகள் யூதர்களுக்கு ஒரு செய்தி அனுப்பினர். அதாவது, "நாங்கள் இப்போது அந்நிய ஊருக்கு வந்திருக்கிறோம். எங்களின் குதிரைகளும் ஒட்டகங்களும் அழிந்துவிட்டன. நீங்கள் எங்களுடன் புறப்படுங்கள். நாம் அனைவரும் சேர்ந்து முஹம்மதிடம் போர் புரிவோம்" என்பதுதான் அந்தச் செய்தியின் சுருக்கம்.

அந்தச் செய்தி அனுப்பப் பட்ட நாள் சனிக்கிழமை!

குறைஷிகளின் அக்கோரிக்கையை யூதர்கள் நிராகரித்ததுடன், "இன்று சனிக்கிழமை. இந்நாளில் நாங்கள் செய்த குற்றத்திற்காக எங்களுக்கு இறைவனிடமிருந்து கிடைத்த தண்டனை [007:163] என்னவென்று உங்களுக்குத் தெரியும். எனவே, நீங்கள் உங்களின் ஆட்களை அடைமானமாக எங்களிடம் தரும்வரை நாங்கள் உங்களுக்கு ஆதரவாகச் சண்டையிட மாட்டோம்" என்று பதில் கூறினர். இச்செய்தியைத் தூதுக்குழு குறைஷிகளிடம் சேர்த்தபோது, "நுஐம் நமக்கு உண்மைதான் கூறியிருக்கிறார்" என்று குறைஷிகளும் கத்ஃபான்களும் கூறினர்.

அதற்குப்பின் இவர்கள் மீண்டும் யூதர்களிடம் தங்களின் குழுவை அனுப்பி, "நாங்கள் உங்களிடம் எங்கள் ஆட்களில் எவரையும் அனுப்ப மாட்டோம். நீங்கள் எங்களோடு இணைந்து கொள்ளுங்கள். நாம் சேர்ந்து முஹம்மதிடம் போர் புரிவோம்" என்றனர். இதைக் கேட்ட யூதர்கள், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! நுஐம் நம்மிடம் உண்மையைத்தான் கூறினார்" என்று தங்களுக்குள் கூறிவிட்டு, வந்த குறைஷித் தூதர்களைத் திருப்பி அனுப்பி விட்டனர். இதன்மூலம் இரு தரப்பினருக்குமிடையில் பிரிவினை ஏற்பட்டது. மதீனத்து யூதர்கள் குறைஷிகளுக்கு உதவுவதைக் கைவிட்டனர். இதனால் குறைஷிகளின் உறுதி குலைந்தது [சுட்டி-44].

ஏறக்குறைய முற்றுகை முடிவுக்கு வந்தது. முற்றுகையின் மொத்த நாட்களிலும் - அதாவது அகழிப் போரின்போது - பத்தாயிரம் எதிரிகளுள் பத்துப் பேர் மட்டுமே கொல்லப் பட்டனர். இறுதியில், எல்லாரும் 'வெற்றிகரமாகப் பின்வாங்கி' உயிர் பிழைத்து, அவரவர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தனர்.

முற்றுகையின்போது மேட்டுப் பகுதியில் முஸ்லிம் வில்லாளிகள். தாழ்வான பகுதியில் எதிரிகள். இடையில் அகழி. போர் நடந்திருந்தால் எதிரிகள் முக்கால்வாசிப் பேர் உயிரிழந்திருப்பர்.

நுஐம் செய்த சூழ்ச்சியினால் அதிக இலாபம் அடைந்தவர்கள் இஸ்லாத்தின் எதிரிப் படையினர்தாம்.

ஒருமை-பன்மை வேறுபாடுகூட விளங்காத புனித மோசடியாருக்கு இந்த வேறுபாடு விளங்கும் என்று எதிர் பார்க்க முடியாதுதான்.

- புதுவகை நோய்: இமி முற்றியது -

நன்றி!

ஃஃஃ
திண்ணையில் ...

சுட்டிகள்:
42 - http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#110
43 - http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#7
44 - http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#116
Click here to bookmark this link.Channel Image09:33 பலஸ்தீன் அகதிகளுக்கு உங்கள் உதவி தேவைப்படுகின்றது Free Palestine » தமிழ் (Tamil)
 அனைத்துக் கனேடியர்கள் சார்பிலும் மத்திய கிழக்கில் நீதியும் அமைதியும் நிலைநிறுத்தப்படும் வகையில் UNRWA உடன்  ‘கனேடியன் எய்ட்’ (CANADIAN AID) அமைப்பை மீண்டும் இணைத்துக்கொள்வது தொடர்பில் உங்கள் பெறுமதியான நேரத்தில் முப்பது விநாடிகளைச் செலவிட்டு விரைந்து செயலாற்ற முன்வாருங்கள் என Canadians for Justice and Peace in the Middle East எனும் அமைப்பு அழைப்புவிடுக்கின்றது. கடந்த வாரம் (டிசம்பர் 2010) பல தசாப்த காலமாக ஐ.நா.வின் நிவாரணப் பணிகளுக்கான முகவர்நிலையத்துக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டுவந்த உதவிகள் [...]

Fri 29

Click here to bookmark this link.Channel Image16:30 படைப்பாளன் பற்றிய உண்மை சிந்தனை! தினம் ஒரு குர்ஆன் வசனம்
மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும், பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை அவ்வாறிருக்க, (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள். (அல்குர்ஆன்: 35:3)
Click here to bookmark this link.Channel Image13:45 திருக்குர்ஆனுடன்.. இஸ்லாம்கல்வி.காம் - Portal
வெள்ளி மேடை வழங்குபவர்: மௌலவி றிஸ்கான் முஸ்தீன் ஸலபி (மதனி) இடம்: அல்-ஜுபைல் நாள்: 04-09-2009 Audio/Video link: www.islamkalvi.com/media/musteen03/index.htm Audio Play Download MP3 Audio 15.8 MB
Click here to bookmark this link.Channel Image13:41 அல்-ஜுபைல் ஈத் பெருநாள் குத்பா பேருரை இஸ்லாம்கல்வி.காம் - Portal
அல்-ஜுபைல் ஈத் பெருநாள் குத்பா பேருரை வழங்குபவர்: மௌலவி றிஸ்கான் முஸ்தீன் ஸலபி (மதனி) இடம்: அல்-ஜுபைல் போர்ட் திடல் நாள்: 20-09-2009 Audio/Video link: www.islamkalvi.com/media/musteen02/index.htm Audio Play Download MP3 Audio 10.9 MB
Click here to bookmark this link.Channel Image06:01 டர்புலன்ஸ் ஒரு அறிமுகம் – பாகம் 3 அறிவியல்
திரவங்கள், பாய்மங்களின் டர்புலன்ஸ் என்றால் இக்கட்டுரைத்தொடரில் அமளி என்று வைத்துள்ளோம். சில உதாரணங்களை ஏற்கனவே பார்த்தோம். லாமினர் அல்லது தகடொத்த ஓட்டம் எனும் திரவங்களின் சீரோட்டத்தில் இருந்து அமளி ஓட்டம் எவ்வகையில் மாறுபடுகிறது என்றும் பார்த்தோம்.தொடர்ச்சியாக, ஏன் அமளி ஓட்டத்தில் வேகம் எங்கு அளந்தாலும் ஒரு நிலையிலில்லாமல், ஏறியிறங்கிக்கொண்டே இருக்கும் என்று யோசிப்போம். அதற்கு முன் அமளியின் மற்றொரு தினவாழ்க்கை உதாரணம். ஹேர் டிரையர். குளித்ததும் வலைத்துண்டினால் துவட்டினால் சரியாக ஈரம் காய்வதில்லை என்றோ அல்லது முடி கொட்டிவிடுமோ என்றோ, [...]
Click here to bookmark this link.Channel Image02:54 ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன் பூமியில் வெளிநாட்டு யூதர்களைக் கொண்டுவந்து குடியமர்த்தும் இஸ்ரேல் Free Palestine » தமிழ் (Tamil)
ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலம் – கடந்த புதன்கிழமை (27.01.2010) இஸ்ரேலின் ஸியோனிஸ அமைப்புக்களின் ஏற்பாடுகளுக்கமைய லத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா முதலான நாடுகளிலிருந்து 240 யூதக் குடியேற்றவாசிகள் இஸ்ரேலுக்குப் புதிதாக வரவழைக்கப்பட்டுள்ளனர் என ஹீப்ரு வானொலி தெரிவித்துள்ளது. தென் அமெரிக்கா, எதியோப்பியா ஆகிய நாடுகளிலிருந்து கடந்த வருடம் இஸ்ரேலுக்கு வரவழைக்கப்பட்டுக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான யூதக் குடியேற்றவாசிகளோடு, இப்புதிய யூதக் குடியேற்றவாசிகளும் இணைந்துள்ளனர் என அந்த வானொலிச் செய்தியறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி புதிய யூதக்குடியேற்றவாசிகள் இஸ்ரேலால் அமைத்துக் கொடுக்கப்படும் குடியிருப்புத் தொகுதிகளில் குடியமர்த்தப்படுவதற்கு முன்னர், [...]

Thu 28

Click here to bookmark this link.Channel Image16:46 அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்ற முந்தைய வேதம் கொடுக்கப்பட்டோர். தினம் ஒரு குர்ஆன் வசனம்
யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்? (அல்குர்ஆன்: 9:30)

Wed 27

Click here to bookmark this link.Channel Image16:35 குஃப்ரான உறவை நேசிக்காத ஈமான்! தினம் ஒரு குர்ஆன் வசனம்
ஈமான் கொண்டவர்களே! உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும், ஈமானை விட்டு குஃப்ரை நேசிப்பார்களானால், அவர்களை நீங்கள் பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் யாரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால், அவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள். (அல்குர்ஆன்: 9:23)
Click here to bookmark this link.Channel Image15:59 காஸாவின் சுற்றுச்சூழலை அழிக்கும் நோக்கில் இஸ்ரேல் வெள்ளநீரைத் திசைதிருப்பியுள்ளது: கலாநிதி அஃக்ஹா Free Palestine » தமிழ் (Tamil)
காஸா – கடந்த புதன்கிழமை (27.01.2010) காஸா பிரதேசத்தின் சுற்றுச் சூழலுக்குப் பேரழிவினை ஏற்படுத்தி, ஜொஹர் அல் தீக், அல் மஃரகா பள்ளத்தாக்குப் பகுதிகளின் பயிர்ச்செய்கைகளைச் சீர்குலைக்க  வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஆக்கிரமிப்பு இஸ்ரேலினால் காஸாவை நோக்கி வெள்ளநீர் திசைதிருப்பி விடப்பட்டுள்ளது என பலஸ்தீன் விவசாய அமைச்சர் கலாநிதி ரமதான் அஃக்ஹா தெரிவித்துள்ளார்.  காஸா வெள்ள அனர்த்தம் தொடர்பாக பலஸ்தீன் விவசாய அமைச்சினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய கலாநிதி ரமதான் அஃக்ஹா, இஸ்ரேல் காஸா பள்ளத்தாக்கின் கிழக்குப் பிரதேசத்தினை [...]
Click here to bookmark this link.Channel Image12:57 இஸ்லாமிய வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு இஸ்லாம்கல்வி.காம் - Portal
இஸ்லாமிய கொள்கை விளக்கம் பயிற்சி முகாம் (ரமளான் 2009 – ஹிஜ்ரி 1430) தலைப்பு: இஸ்லாமிய வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு வழங்குபவர்: சகோதரர் கோவை S. அய்யூப் இடம்: மஸ்ஜிதுல் முஸ்லிமீன், கோட்டை, கோவை Audio/Video link: www.islamkalvi.com/media/iyub43/index.htm Audio Play Download MP3 Audio 28.3 MB

Tue 26

Click here to bookmark this link.Channel Image16:50 அல்லாஹ்விடத்தில் பதவியால் மகத்தானவர்களாகவும், வெற்றியாளர்களாகவும் ஆக வேண்டுமா? தினம் ஒரு குர்ஆன் வசனம்
எவர்கள் ஈமான் கொண்டு, தம் நாட்டை விட்டும் வெளியேறித் தம் செல்வங்களையும் உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள் மேலும் அவர்கள்தாம் வெற்றியாளர்கள். (அல்குர்ஆன்: 9:20)
Click here to bookmark this link.Channel Image14:10 காஸா முற்றுகையை நீக்க இஸ்ரேலை நிர்ப்பந்திக்குமாறு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை Free Palestine » தமிழ் (Tamil)
வொஷிங்டன் – காஸா மீது நான்கு வருடங்களுக்கும் மேலாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கம் அமுல்நடாத்திவரும் முற்றுகையை நீக்குவதற்கு இஸ்ரேலை நிர்ப்பந்திக்குமாறு அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 54 காங்கிரஸ் உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ள ஓர் அறிக்கையில், காஸா மக்களுக்கு எதிராகத் தொடரும் முற்றுகையினால், காஸாவிலுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய நிவாரண உதவிகளை வழங்கும் மனிதாபிமானக் குழுக்களின் பணிகள் தடைபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (26.01.2010) மேற்படி அறிக்கையில் கையெழுத்திட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் ஸவா [...]
Click here to bookmark this link.Channel Image12:37 மஸ்ஜிதை இடித்துத் தகர்க்க இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை உத்தரவு Free Palestine » தமிழ் (Tamil)
நப்லஸ் – கடந்த செவ்வாய்க்கிழமை (26.01.2010) ‘கட்டட நிர்மாணம் தொடர்பான அனுமதிப் பத்திரத்தில் குறைபாடு உள்ளது’ என்ற போர்வையில் நப்லஸ் நகருக்குத் தெற்கே பூரின் கிராமத்திலுள்ள ஸல்மான் அல் ஃபாரிஸ் மஸ்ஜிதை இடித்துத் தகர்க்குமாறு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை உத்தரவு பிறப்பித்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலையிலேயே தமது ஊருக்குள் பிரவேசித்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் மஸ்ஜித் அமைந்துள்ள சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் பிரதேசவாசிகள் பலரிடமும் அப்பகுதியின் அனைத்துக் கட்டட நிர்மாணப் பணிகளையும் உடனடியாக இடைநிறுத்துமாறு கட்டளையிடும் உத்தரவுப் பத்திரங்களை விநியோகித்தனர் என்று உள்ளூர் [...]
Click here to bookmark this link.Channel Image11:46 பலஸ்தீனரின் விளைநிலங்களை அழிக்கும் யூத ஆக்கிரமிப்பாளர்கள்- இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் தொடர்கைதுகள் Free Palestine » தமிழ் (Tamil)
ரமல்லா – கடந்த திங்கட்கிழமை (25.01.2010) இரவு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் ரமல்லா பகுதியில் இருந்து பலஸ்தீனர்கள் ஏழுபேரைக் கடத்திச் சென்றுள்ளனர். அதே பிரதேசத்திற்கு வடமேற்கிலுள்ள தீர் நிஸாம் கிராமத்தில் பலஸ்தீனர்களுக்குச் சொந்தமான தோட்டத்துக்குள் அத்துமிறிப் பிரவேசித்த ஆக்கிரமிப்பாளர்களான யூதக் குடியேற்றவாசிகள் 15 ஒலிவ் மரங்களை வெட்டிச் சாய்த்துள்ளனர். ஹல்மிஷ் யூதக் குடியிருப்பைச் சேர்ந்த யூத ஆக்கிரமிப்பாளர்கள் குழுவொன்று ஜமால் அப்துல் காதிர் எனும் பலஸ்தீனருக்குச் சொந்தமான தோட்டத்தினுள் அத்துமீறிப் பிரவேசித்து அதனை நாசப்படுத்தியதோடு உலிவ் மரங்களையும் வெட்டிச் [...]

Mon 25

Click here to bookmark this link.Channel Image16:14 ஈமான் கொள்ளாத நிலையில் செய்யும் நற்செயல்களின் நிலை என்ன? தினம் ஒரு குர்ஆன் வசனம்
(ஈமான் கொள்ளாத நிலையில்) ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுவோரையும் கஃபத்துல்லாவை (புனிதப்பள்ளியை) நிர்வாகம் செய்வோரையும் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தோருக்குச் சமமாக ஆக்கிவிட்டீர்களா? அல்லாஹ்வின் சமூகத்தில் (இவ்விருவரும்) சமமாக மாட்டார்கள் - அநியாயக்காரர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான். (அல்குர்ஆன்: 9:19)

Sun 24

Click here to bookmark this link.Channel Image17:45 அல்லாஹ்வின் பள்ளிகளை நிர்வாகம் செய்யக்கூடியவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள்! தினம் ஒரு குர்ஆன் வசனம்
அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜக்காத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் - இத்தகையவர்கதாம் நிச்சயமாக நேர்வழி பெற்றவர்களில் ஆவார்கள். (அல்குர்ஆன்: 9:18)

Sat 23

Click here to bookmark this link.Channel Image22:07 [பாகம்-11] முஸ்லிமின் வழிமுறை. இஸ்லாம்குரல்.காம்
பிள்ளைகளுக்குரிய கடமைகள். ஒரு தந்தைக்கு தன் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன என்பதையும் ஒரு முஸ்லிம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இது அந்த குழந்தையின் தாயை அவர் தேர்ந்தெடுப்பதில் இருந்து அக்குழந்தைக்கு அழகிய பெயர் சூட்டுவது, குழந்தை பிறந்த ஏழாம் நாளில் அகீகா கொடுப்பது, கத்னா செய்வது, அவர்களிடம் அன்பு செலுத்துவது, மென்மையாக நடந்து கொள்வது, அவர்களுக்குச் செலவு செய்வது, சிறந்த ஒழுக்கப் பயிற்சி அளிப்பது, அவர்களைப் பண்படுத்துவது, பக்குவப்படுத்துவது, அவர்களுக்கு மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொடுப்பது, [...]
Click here to bookmark this link.Channel Image16:40 முஸ்லிம்களிடம் முஷ்ரிக்குகள் உதவி தேடினால்... தினம் ஒரு குர்ஆன் வசனம்
(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக - ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள். (அல்குர்ஆன்: 9:6)

Fri 22

Click here to bookmark this link.Channel Image16:43 தங்களிடம் பிரார்த்திப்பவர்களுக்கோ, இல்லை தங்களுக்கே கூட உதவி செய்து கொள்ள சக்தியற்ற பொய்க் கடவுளர்கள்! தினம் ஒரு குர்ஆன் வசனம்
“நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்வே. அவனே வேதத்தை இறக்கி வைத்தான். அவனே நல்லடியார்களைப் பாதுகாப்பவன் ஆவான். அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்” (அல்குர்ஆன்: 7:196-197)

Thu 21

Click here to bookmark this link.Channel Image16:31 அல்லாஹ்வை நிராகரிப்போரே, நீங்கள் வணங்கும் பொய் தெய்வங்கள் நாளை உங்களை நிராகரித்து விடும். எச்சரிக்கை. தினம் ஒரு குர்ஆன் வசனம்
“நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியேற்கார்; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்; கியாம நாளில் நீங்கள் இணை வைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள்” (அல்குர்ஆன்: 35:14)

Wed 20

Click here to bookmark this link.Channel Image17:52 கப்ருகளில் மண்ணோடு மண்ணாகிப் போன அவ்லியாக்கள், நாம் அவர்களிடம் வேண்டுவதை செவிமடுப்பாரா? தினம் ஒரு குர்ஆன் வசனம்
நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும் படிச் செய்ய முடியாது; அவ்வாறே செவிடர்களையும் அவர்கள் புறங்காட்டித் திரும்பி விடும்போது (உம்) அழைப்பைக் கேட்கும்படிச் செய்யமுடியாது” (அல்குர்ஆன்: 27:80)

Tue 19

Click here to bookmark this link.Channel Image16:41 தனக்கு நாளை என்ன நிகழும் என்பதையே அறியாத பொய் தெய்வங்களிடம் தன் தேவைகளை வேண்டும் முட்டாள் மனிதன்! தினம் ஒரு குர்ஆன் வசனம்
“அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ, அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள். அவர்கள் இறந்தவர்களே-உயிருள்ளவர்களல்லர்; மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்” (அல்குர்ஆன்: 16:20-21)

Mon 18

Click here to bookmark this link.Channel Image17:06 அல்லாஹ்வையன்றி மனிதன் கடவுளென அழைக்கும் அனைத்தும் அல்லாஹ்வின் அடிமைகளே! தினம் ஒரு குர்ஆன் வசனம்
“நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள். அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!” (அல்குர்ஆன்: 7:194)
Click here to bookmark this link.Channel Image04:42 [பாகம்-10] முஸ்லிமின் வழிமுறை. இஸ்லாம்குரல்.காம்
பெற்றோருக்குரிய கடமைகள் ஒரு முஸ்லிம் தன் மீதுள்ள பெற்றோருக்குரிய உரிமைகளையும் அவர்களுக்கு நன்மை செய்வது, கட்டுப்படுவது மற்றும் உபகாரம் செய்வதன் கடமையையும் நம்ப வேண்டும். இது அவன் இவ்வுலகில் தோன்றுவதற்கு அவர்கள் காரணமாக இருந்தார்கள் என்பதற்காகவோ அல்லது அவனுக்கு அவர்கள் செய்த நன்மைக்காக அவன் கைமாறு செய்யக் கடமைப்பட்டிருக்கிறான் என்பதற்காகவோ அல்ல. மாறாக அவர்களுக்கு கட்டுப்படுவதை அல்லாஹ் கடமையாக்கி இருக்கின்றான் என்பதற்காகத்தான். அல்லாஹ் கூறுகிறான்: அவனையன்றி வேறெவரையும் நீங்கள் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டுமென்றும் உமது இறைவன் [...]

Sun 17

Click here to bookmark this link.Channel Image17:10 அல்லாஹ்வை மிகக் குறைவாகவே நினைவுகூறும் நயவஞ்சகர்கள். தினம் ஒரு குர்ஆன் வசனம்
“இந்த நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்றுகிறார்கள். (உண்மையில்) அவனே இவர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கி இருக்கின்றான். இவர்கள் தொழுகைக்காக எழுந்து நின்றால் சோம்பல் பட்டவர்களாகவே நிற்கிறார்கள். மக்களுக்குக் காட்டிக் கொள்ளவே தொழுகிறார்கள். இன்னும் அல்லாஹ்வை மிகக் குறைவாகவே நினைவு கூறுகிறார்கள்” (அல்குர்ஆன்: 4:142)
Click here to bookmark this link.Channel Image02:04 புதுவகை நோய்: இமி-5 வஹ்ஹாபி
சலுகையா? கட்டாயமா?

"என்னை இறைவனாக ஏற்றுக் கொண்ட ஒருவர், வலுக்கட்டாயத்திற்கு உள்ளாகி, உயிர் போகும் சூழலில், என்னை மறுதலிப்பதாகச் சொல்லி உயிர் பிழைத்துக் கொள்ளலாம்" என்னும் அல்லாஹ்வின் விதிவிலக்குச் சலுகையை - உறுதியான நம்பிக்கையாளர்கள் பயன்படுத்தாத சலுகையை - அனுதினமும் கட்டாயமாகச் செயல் படுத்தப் படுகின்ற நிகழ்வைப்போல் அடுத்த அரைகுறையில் புனித மோசடி செய்யப் பட்டது.

அரைகுறை-6 சுரா (16:106) - எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது). - அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப் படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் காஃபிரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ - இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு.

அபிசீனியா (எதியோப்பியா/ஹபஷா)வைச் சேர்ந்த ரபாஹ்-ஹமாமா அடிமைப் பெற்றோருக்குப் பிறந்த பிலால் (ரலி) என்பவர், இணைவைப்பாளர்களைச் சேர்ந்த மக்கத்துத் தலைவர்களுள் ஒருவனான உமைய்யா பின் கலஃப் என்பவனிடம் அடிமையாக இருந்தார். மீளெழுச்சியின்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட தொடக்க கால மக்கத்து முஸ்லிம்களுள் ஒருவராவார் பிலால் (ரலி).

மக்காவின் முக்கியத் தலைவர்களுள் ஒருவனான தன்னிடம் அடிமையாக இருக்கும் பிலால் (ரலி), இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அறிந்து உமைய்யா வெகுண்டான். ஓரிறைக் கொள்கையைக் கைவிடச் சொல்லி, தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடுமைகளையும் பிலால் (ரலி) மீது கட்டவிழ்த்து விட்டான். கணக்கின்றிக் கசையடிகளைப் பரிசாக்கினான். அடிப்பதில் தன் கை சோர்ந்து போனால் தன்னச் சார்ந்த இன்னொருவரிடம் கொடுத்து அடிக்கச் சொன்னான். அத்தனைக்கும் பிலால் (ரலி) அசைந்து கொடுக்கவில்லை.

இறுதியில், கொளுத்தும் பாலை மணலில் ஆடையின்றி அவரைப் படுக்க வைத்து அவரது நெஞ்சின் மீது ஒரு பாராங்கல்லை ஏற்றி வைத்து விட்டு, "இஸ்லாத்தைக் கைவிடு; அல்லது கைவிடுவதாகச் சொல், இப்போதே உனக்கு விடுதலை" என்று ஆசை காட்டினான். அப்போதும் அவர், "ஏகன், (அவன்);ஏகன்" என்றே உறுதியுடன் உரைத்தார். அவர் சொன்ன ஒவ்வொரு "ஏகன்" எனும் சொல்லுக்கும் அடியும் உதையும் அதிகரித்தன. அவை அதிகரிக்க அதிகரிக்க "ஏகன்" எனும் கொள்கைச் சொல் பிலாலிடமிருந்து முன்னைவிட யானைப் பிளிறலாய் வெளியானது. ஓரிறைக் கொள்கை என்பது உயிரைக் காட்டிலும் பெரிது எனும் உறுதி கொண்ட நெஞ்சினராய்த் திகழ்ந்ததால்தான் திண்ணையிலும் அவர் "சாகாத கருப்பு யானை"யாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் [சுட்டி-36].

தம் தோழர் பிலாலைக் குரைஷியர் பாலை மணலில் கிடத்தி சித்திரவதை செய்து கொண்டிருக்கும் செய்தி நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்து, அவரை விடுவிப்பதற்கு அபூபக்ரு (ரலி) அவர்களை அனுப்பி வைத்தார்கள். அபூபக்ரு (ரலி) உமையாவிடம் ஒன்பது பவுன் (9 தீனார்) செலுத்தி பிலால் (ரலி) அவர்களின் அடிமைத் தளையை அறுத்து விடுவித்தார். அப்போது அவ்விருவருக்கும் நடந்த உரையாடல், தியாக வரலாற்றுப் பக்கங்களில் இன்றும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.

"அபூபக்ரே! என்னால் சித்திரவதைக்குள்ளாகி, ஏறக்குறைய செத்துவிட்ட, இனிமேல் எதற்கும் பயன்படாத இந்த முக்கால் பிணத்தை ஒரு பவுனுக்கு நீங்கள் கேட்டிருந்தாலும் நான் தந்திருப்பேன். ஒன்பது பவுனைக் கொடுத்து நீங்கள் ஏமாறிப் போனீர்கள்" என்றான் உமைய்யா.

"உமய்யா, அவசரப் பட்டு விட்டாய்!. நீ இந்தச் சொக்கத் தங்கத்துக்கு விலையாக நூறு பவுன் கேட்டிருந்தாலும் நான் தந்திருப்பேன். ஒன்பது பவுனுக்கு இவரை விற்ற நீதான் ஏமாளிகளின் தலைவன்!" என்றார் அபூபக்ரு (ரலி).

உயிர் போகும் சூழலில் தம் கொள்கையை மாற்றிச் சொல்லச் சலுகையிருந்தும் நாவளவில்கூட அதைச் சொல்ல மறுத்து, கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்ததால் பிலால் (ரலி) அவர்கள் இன்றும் உலக முஸ்லிம்களிடத்துத் தனி மரியாதையுடன் மதிக்கப் படுகிறார். Bilal Habashi the first muezzin of Islam was so named as he was from the Habash area, now known as Ethiopia. His life story resonates courage and consistency in a revolutionary time for the Arabs.
He had been amongst the slaves owned by Umaya ibn Khalaf, a member of the leading tribe of Arabia - the Quraish. This man became infamous in history due to his cruelty towards the new Muslims especially his slave Bilal.
Islam had been practiced undercover when Bilal chanced upon knowledge about this new religion which preached equality and worship of One Creator- Allah. He had heard about the prophet of Islam, Muhammad. Muhammad was also from the Quraish tribe and was known amongst his community as"Al-Amin"(the truthful one). This newfound belief led Bilal to being severely punished by his master who hated this new upstart religion.
The torture of Bilal is famous in the history of Islam as it depicted the religious ostracism the new Muslims faced. Umaya ibn Khalaf used to leave Bilal in the middle of the desert, in soaring temperatures, with huge stones placed upon his chest. Bilal Habashi refused under all this duress to give up his beliefs. Even as he was whipped and beaten he would not stop believing in one god. This defiance against his slave master, who may have owned his body, proved ultimately that nobody could own ones mind or ones thought.
Hearing of his plight another companion of the prophet Muhammad, Abu Bakr Siddiqui, came to his aid and bought his freedom for the price of nine dinars. Umaya felt he had won- and he reportedly told Abu Bakr that he would have gladly sold Bilal for one dinar. Abu Bakr replied that he would have paid one hundred dinars. This describes the high place and value of Bilal Habashi, the Ethiopian slave, amongst the early Arab Muslims. His status nor his colour bore any importance amongst them but the strength of his character and his unyielding adherence to his belief. [சுட்டி-37].

தூதுத்துவத்தில் பங்கு கேட்ட பொய்யன் முஸைலமாவை மறுத்த காரணத்தால் ஒவ்வோர் உறுப்பும் வெட்டப் பட்டு மரணித்த தியாகி ஹபீப் பின் ஸைத் அல் அன்ஸாரீ (ரலி) என்பவர், தியாக வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெற்ற இன்னொருவராவார். உயிர்போகும் அதுபோன்ற சூழலில்கூட, தாம் இறைத்தூதராக உள்ளத்தால் ஏற்றுக் கொண்டவருக்கு இணையாக இன்னொருவனையும் "இறைத்தூதனே" என வெறும் நாவளவில் விளிக்க மறுத்தவராவார்.

"கிருத்துவத்தை ஏற்றுக் கொண்டால் அரசில் பங்கும் அழகிய மங்கையரும் வழங்கப் படுவீர்; மறுத்தால் சிலுவையில் அறையப் படுவீர்" எனும் ஆசைகாட்டலையும் அச்சுறுத்தலையும் அலட்சியப் படுத்திய கைதி அப்துல்லாஹ் பின் ஹுதைஃபா அல் ஸஹ்மீ (ரலி) அவர்களின் உறுதிமிக்க தியாகத்தையும் வரலாறு தன்னில் பதித்துக் கொண்டுள்ளது. நபித்தோழர் அப்துல்லாஹ் அல் ஸஹ்மீ (ரலி) - இறுதிக் கட்டமாக ரோமாபுரி மன்னனின் தலையை மட்டும் முத்தமிட்டார், அதுவும் தம் சக கைதிகளின் விடுதலைக்காக.

மேற்காண்பவை அனைத்தும் சிலிர்ப்பூட்டும் சில்லரைக் கதைகளல்ல. மாறாக, அரைகுறை-6இல் எடுத்து வைக்கப் பட்ட இறைவசனம் 016:106இல் பின்னிக் கிடக்கும் வரலாற்றுப் பின்னணிகள் (except one who was forced while his heart is at peace with the faith) This is an exception in the case of one who utters statements of disbelief and verbally agrees with the Mushrikin because he is forced to do so by the beatings and abuse to which he is subjected, but his heart refuses to accept what he is saying, and he is, in reality, at peace with his faith in Allah and His Messenger . The scholars agreed that if a person is forced into disbelief, it is permissible for him to either go along with them in the interests of self-preservation, or to refuse, as Bilal did when they were inflicting all sorts of torture on him, even placing a huge rock on his chest in the intense heat and telling him to admit others as partners with Allah. He refused, saying, "Alone, Alone.'' And he said, "By Allah, if I knew any word more annoying to you than this, I would say it.'' May Allah be pleased with him. Similarly, when the Liar Musaylimah asked Habib bin Zayd Al-Ansari, "Do you bear witness that Muhammad is the Messenger of Allah'' He said, "Yes.'' Then Musaylimah asked, "Do you bear witness that I am the messenger of Allah'' Habib said, "I do not hear you.'' Musaylimah kept cutting him, piece by piece, but he remained steadfast insisting on his words. It is better and preferable for the Muslim to remain steadfast in his religion, even if that leads to him being killed, as was mentioned by Al-Hafiz Ibn 'Asakir in his biography of 'Abdullah bin Hudhafah Al-Sahmi, one of the Companions. He said that he was taken prisoner by the Romans, who brought him to their king. The king said, "Become a Christian, and I will give you a share of my kingdom and my daughter in marriage.'' 'Abdullah said: "If you were to give me all that you possess and all that Arabs possess to make me give up the religion of Muhammad even for an instant, I would not do it.'' The king said, "Then I will kill you.'' 'Abdullah said, "It is up to you.'' The king gave orders that he should be crucified, and commanded his archers to shoot near his hands and feet while ordering him to become a Christian, but he still refused. Then the king gave orders that he should be brought down, and that a big vessel made of copper be brought and heated up. Then, while 'Abdullah was watching, one of the Muslim prisoners was brought out and thrown into it, until all that was left of him was scorched bones. The king ordered him to become a Christian, but he still refused. Then he ordered that 'Abdullah be thrown into the vessel, and he was brought back to the pulley to be thrown in. 'Abdullah wept, and the king hoped that he would respond to him, so he called him, but 'Abdullah said, "I only weep because I have only one soul with which to be thrown into this vessel at this moment for the sake of Allah; I wish that I had as many souls as there are hairs on my body with which I could undergo this torture for the sake of Allah.'' According to some reports, the king imprisoned him and deprived him of food and drink for several days, then he sent him wine and pork, and he did not come near them. Then the king called him and asked him, "What stopped you from eating'' 'Abdullah said, "It is permissible for me [under these circumstances], but I did not want to give you the opportunity to gloat.'' The king said to him, "Kiss my head and I will let you go.'' 'Abdullah said, "And will you release all the Muslim prisoners with me'' The king said, "Yes.'' So 'Abdullah kissed his head and he released him and all the other Muslim prisoners he was holding. When he came back, 'Umar bin Al-Khattab said, "Every Muslim should kiss the head of 'Abdullah bin Hudhafah, and I will be the first to do so.'' And he stood up and kissed his head. May Allah be pleased with them both. [சுட்டி-38].
***
தனக்கு அரபு மொழியெல்லாம் அத்துப்படி என்பதாகக் காட்டிக் கொள்ள புனித மோசடிக்காரர் பெரிதும் பிரயாசைப் பட்டார். 'ஸூரா' (அத்தியாயம்) எனும் சொல்லை "சுரா" என்றார்; 'ஸீரா' (நபி வாழ்ந்த வரலாறு) என்பதை "சிரா" என்றார். 'பனூ குரைளா' (குரைளாவின் சந்ததியினர்)ஐ, //முஸ்லிமில்லாத அரேபியர்கள், பானு குஃரைஸா என்ற யூதனின் உதவியை நாடினர்// என்று ஒருமைப் படுத்தினர்; போலவே, //நேராக குஃரைஸ்ஸிடம் சென்று, "நான் உங்களிடம் வைத்திருக்கும் அன்பை நன்கறிவீர்கள். உங்களிடம் என் காதில் விழுந்த பரம ரகசியத்தைக் கூற விரும்புகிறேன். ரகசியத்தைக் காத்து என்னையும் காப்பீர்களா?" என அப்பட்டமாக நடித்தான். இதற்கு அவனும் சம்மதித்தான்// 'குரைஷி' எனும் மக்கத்துப் பெருங்குலத்தவரைப் பன்மை என விளங்க வேண்டிய அறிவின்றி "குஃரைஸ்" என்று ஓர் ஆளாகக் காட்டினார். போதாதென்று, //ஒரு அரேபிய பழமொழி பழக்கத்தில் உண்டு (Darabani, wa baka; Sabaqani, wa'shtaka)...// என்பதாக அரபுப் பழமொழிக்குள்ளும் புகுந்து விளையாடினார்.

ஆனால், பாவம்! வெட்டி-ஒட்டும்போது ஏற்பட்ட இமி நோய் நடுக்கத்தில் அத்தனை முயற்சிகளையும் தானே பாழாக்கிக் கொண்டு, தான் அரைகுறையே என்பதை வெளிச்சம் போட்டு அவரே காட்டி விட்டார்.

அரைகுறை-7 சுரா (40:28) - காபிஃர் அவனின் குடும்பத்தாரில் தம் ஈமானை மறைத்து வைத்திருந்த ஒரு நம்பிக்கை கொண்டவர் கூறினார்: "என் இறைவன் அல்லாஹ்வே தான்!" என்று ஒரு மனிதர் கூறுவதற்காக அவரை நீங்கள் கொன்று விடுவீர்களா? மேலும் அவர் மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். எனவே அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால் அவர் உண்மையாளராக இருந்தால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்த மாட்டான்."
Sura (40:28) - YUSUFALI: It is He Who has sent His Messenger with Guidance and the Religion of Truth, to proclaim it over all religion: and enough is Allah for a Witness.


"Pharaoh" என ஆங்கிலத்தில் குறிக்கப் படும் 'ஃபிர்அவ்ன்' எனும் பெயருடைய எகிப்திய கொடுங்கோல் மன்னனைப் பற்றியோ அவனது காலகட்டத்தைப் பற்றியோ ஏதும் அறிந்திராத புனித மோசடியார், இறைவசனத் தமிழாக்கத்தில் குழம்பியதோடு மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் தான் அரைகுறையே என்பதை அசைக்க முடியாமல் உறுதிப் படுத்தி விட்டார்.

அரைகுறை-7இன் தமிழ்-ஆங்கில முழுவசனங்கள்:
'ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் தம் இறைநம்பிக்கையை மறைத்து வைத்திருந்த ஒருவர், "என் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறுவதற்காக (மூஸா-மோஸஸ் எனும்) ஒருவரை நீங்கள் கொன்று விடுவீர்களா? மேலும் அவர் மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகளை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். எனவே அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால் அவர் உண்மையாளராக இருந்து விட்டால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்த மாட்டான்" என்று (மூஸாவுக்காக) வாதாடினார். [அல் குர்ஆன் 040:028]. A believer, a man from among the people of Pharaoh, who had concealed his faith, said: "Will ye slay a man because he says, 'My Lord is Allah'?- when he has indeed come to you with Clear (Signs) from your Lord? and if he be a liar, on him is (the sin of) his lie: but, if he is telling the Truth, then will fall on you something of the (calamity) of which he warns you: Truly Allah guides not one who transgresses and lies! [சுட்டி-39].
அரைகுறை-7க்கான கூடுதல் விளக்கங்கள் ஆங்கிலத்தில் "Musa was supported by a believing Man from Fir-awn's Family" எனும் தலைப்பில் கிடைக்கின்றன [சுட்டி-40].

தாம் ஏற்றிருந்த கொள்கையை, வெளிப்படுத்த வேண்டிய வேளையில், வெளிப்படுத்தத் தக்க விதத்தில், தம் கொடுங்கோல் மன்னனின் எதிரில் எடுத்துரைத்த அதே இறைநம்பிக்கையாளரைப் பற்றி அடுத்தடுத்த வசனங்கள் தெளிவாகப் பேசுகின்றன:
"...என்னுடைய சமூகத்தாரே! (அழிந்து போன மற்ற) கூட்டத்தினர்களின் நாட்களைப் போன்றவை உங்கள் மீது வந்து விடுமே என்று நான் அஞ்சுகிறேன். 'நூஹு(நோவா)' உடைய சமூகத்திற்கும் 'ஆது' உடைய சமூகத்திற்கும் 'ஸமூது' உடைய சமூகத்திற்கும், அவர்களுக்குப் பின்னுள்ளவர்களுக்கும் உண்டான (அழிவு)நிலையைப் போன்று (உங்களுக்கும் நிகழ்ந்து விடுமோ என அஞ்சுகிறேன்); ஆனால், அல்லாஹ் (தன்) அடியார்களுக்கு அநியாயம் செய்ய நாடமாட்டான் ..." [அல் குர்ஆன் 040:030-031] Then said the man who believed: "O my people! Truly I do fear for you something like the Day (of disaster) of the Confederates (in sin)! Something like the fate of the People of Noah, the 'Ad, and the Thamud, and those who came after them: but Allah never wishes injustice to his Servants. [சுட்டி-41].
தனக்கே விளங்காதவற்றைத் திண்ணை வாசகர்களுக்கு விளக்க வந்தவர் செய்ததும் வைத்த தலைப்பும் மிகப் பொருத்தம் - அதுதான் "புனித மோசடி".

அடுத்து, அகழிப் போரைப் பற்றித் தெரிந்து கொள்வோம், இன்ஷா அல்லாஹ்.
ஃஃஃ
திண்ணை

சுட்டிகள் :
36 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=308092510&format=html
37 - http://www.helium.com/items/1506441-bilal-habashi
38 - http://www.tafsir.com/default.asp?sid=16&tid=28249
39 - http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/040.qmt.html#040.028
40 - http://www.tafsir.com/default.asp?sid=40&tid=46007
41 - http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/040.qmt.html#040.030

Sat 16

Click here to bookmark this link.Channel Image16:35 லஞ்சம் கொடுக்காதீர் - வாங்காதீர்! தினம் ஒரு குர்ஆன் வசனம்
“மேலும் நீங்கள் ஒருவர் மற்றவரின் பொருளை தவறான முறையில் உண்ணாதீர்கள். மேலும் பிற மனிதர்களுடைய பொருள்களில் ஏதேனும் ஒரு பகுதியை அநீதமான முறையில் தின்பதற்காக அது தவறு என நீங்கள் அறிந்திருந்தும் அதற்குரிய வாய்ப்பைப் பெற அதிகாரிகளை அணுகாதீர்கள்” (அல்குர்ஆன்: 2:188)

Thu 14

Click here to bookmark this link.Channel Image23:23 இஸ்லாத்தில் பிரிவினையா? – Audio/Video சுவனத்தென்றல்
நிகழ்ச்சி : அருள்மறை குர்ஆன் விளக்கவுரை நாள் : 07-01-2010 இடம் : அல்கோபார் இஸ்லாமிய நிலையத்தின் சொற்பொழிவு அரங்கம், சவூதி அரேபியா. ஆடியோ : (Download) {MP3 format -Size : 13.9 MB}
Click here to bookmark this link.Channel Image18:09 அல்லாஹ்வின் பிரியம்! எளிதான சொல்! நன்மை தீமை நிறுக்கப்படும் தராசில் கனமானது! பிரார்த்தனை பேழை
'(இறைவனைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை. நாவுக்கு எளிதானவை. நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை ஆகும். (அவை:) 1. சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்). 2. சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஆதாரம்: முக்தஸர் ஸஹீஹுல் புஹாரி

Wed 13

Click here to bookmark this link.Channel Image23:57 பர்தா, பெண்ணுரிமை & பொதுக்கழிப்பிடம் எதிரொலி
கோவில் சிலைகளில் பெண்கடவுள் சிலைகளுக்கு உயர்ரகப் பட்டுத் துணி போர்த்தியிருப்பார்கள். அம்மண கோலத்தில் செதுக்கப்பட்ட சிலைகளுக்கு பட்டுத்துணி போர்த்தி, அம்மன் என்று மரியாதை செய்கிறார்கள். கடவுளை வழிபடும்போது மனம் அலைபாய்வதைத் தடுக்கவே சிலைகளுக்கும் ஆடை அணிவிக்கிறார்கள். சிலையே ஆனாலும் அங்கிருக்கும் சிற்பத்தில் கடவுள் தெரிவதைவிட அதன் பாலினமும் அங்கத்திரட்சியுமே கண்ணில்படுகிறது. தீவிர தெய்வ பக்தனுக்கும் சபலமுண்டு!

களைத்துத் திரும்பும் கணவனுக்காக தலைசீவி காத்திருக்கும் மனைவியால் கணவன் புத்துணர்வு பெறுகிறான். ஆபாசப் படங்களில் அங்கம் தெரியக் காட்சிப்படுத்தப்படுபவர்கள் பெண்களே! துரிதமாக பாலியல் வசப்படுத்தும் ரசாயன மாற்றம் பெண்ணைவிட ஆணுக்கே அதிகம் என்று மருத்துவம் சொல்கிறது. கன்னிப் பெண்களின் அங்கக் கவர்ச்சியில் தன்னிலை மறந்து தாடிவைத்தலையும் காதலர்களே இதற்குச் சான்று!

ஆணுக்குப் பெண் கவர்ச்சி - பெண்ணுக்கு ஆண் கவர்ச்சி என்றாலும் இறுதி வீழ்ச்சி ஆண்களுக்கே! இடுப்புச்சேலை மடிப்புல நான் கிறங்கிப்போனேனே! என்பதிலிருந்து பெண்ணின் சிறு அங்கமும் ஆணுக்கு பாலியல் உணர்வை தூண்டுகிறது என்பது மறைக்கமுடியாத உண்மை!

முஸ்லிம் பெண்கள் பர்தா எனும் மேலங்கி அணிவதை பெண்ணடிமைத் தனத்தின் வெளிப்பாடாகக் குற்றம்சொல்கிறார்கள். பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணியக்கூடாதென்ற தடை பிரான்ஸ்,ஜெர்மனி போன்ற நாடுகளில் சட்டமாக்கப்பட்டுள்ளது. பிரிட்டனிலும் பர்தா தடைசெய்யப்பட வேண்டுமா என்ற கருத்துக்கணிப்பை பிரபல பிபிசி நிறுவனம் நடத்துகிறது. தமிழ் வலைப்பதிவுகளிலும்கூட பர்தா குறித்த விமர்சனங்கள் அவ்வப்போது வைக்கப்படுகிறது.

முஸ்லிம் பெண்கள் தங்கள் புறஅழகை கணவன், மாமனார், தந்தை,மகன் சகோதரன் உறவுமுறை தவிர்த்த யாரிடமும் வெளிப்படுத்தக்கூடாதென்ற கட்டுப்பாடு உள்ளது. மேற்சொன்ன உறவுமுறையற்ற ஆண்களின் பார்வை முஸ்லிமல்லாத பெண்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும். இஸ்லாம் தவிர யூத, கிறிஸ்தவ,சீக்கியப் பெண்களும்கூட தமது உடலழகை மற்றவர்களிடம் மறைக்கவே விரும்பிகின்றனர்.

நம் இந்தியாவிலும் வடமாநிலப் பெண்கள் பர்தாவையொத்த மேலங்கியை அணிகிறார்கள். பெண்களின் அங்கங்களை மறைப்பது மத மற்றும் கலாச்சார ரீதியில் சரியென்று ஒப்புக்கொள்பவர்கள்,முஸ்லிம்கள் விசயத்தில் மட்டும் குறைகாண்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?

ஜனாதிபதியாக பதவியேற்கும் சில நாட்களுக்கு முன்பு பர்தாவைப் பற்றி விமர்சித்த திருமதி.பிரதீபா பாட்டீல் இன்றுவரை முக்காடிட்டு, கைகளை மறைக்கும் பர்தாவுக்கிணையான உடையணிகிறார். முஸ்லிம் பெண்களை பர்தா அணியச்செய்து அவர்களின் உரிமையை இஸ்லாம் பறிக்கிறதெனில் இந்திராகாந்தி முதல் ப்ரதீபா பாட்டீல்வரை முக்காடுடிட்டுக்கொள்வதற்கும் இஸ்லாம்தான் காரணமா?

விஜய் டிவியில் நீயா- நானா? என்ற நிகழ்ச்சியில் பர்தா குறித்த கருத்தாடல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.பர்தா அவசியமே என்று ஒரு பிரிவினரும் தேவையில்லை என்று இன்னொரு பிரிவினரும் வாதிடுவார்களாம்! நிகழ்ச்சி நடத்துபவர் இறுதியில் தீர்ப்பளிப்பாராம்! தீர்ப்பு என்னவாக இருக்குமென்று சொல்ல வேண்டியதில்லை. கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல்லெறிந்தால் யாருக்கு நஷ்டம்?

இஸ்லாம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டமார்க்கமல்ல என்கிறீர்கள்?ஆனால் அத்தகைய விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் முற்றுகைப் போராட்டம், ஆர்ப்பாடம் நடத்தி இதுபோன்ற சுதந்திரமான கருத்தாடலை தடுக்கிறீர்களே என்று சிலர் கேட்கலாம். எது சார் சுதந்திரம்? ஒருபக்கம் ஆபாச போஸ்டரை கிழிக்கும் போராட்டங்களை நடத்திக்கொண்டு இன்னொரு பக்கம் பர்தாவை விமர்சிப்பது நேர்மையான கருத்தாடலா? பர்தா தேவையில்லை என்போர் பிகினி அல்லது டூ பீஸில் வாதிடுவதுதானே நேர்மையான விவாதமாகும்?

ஆணும் பெண்ணும் சமம் என்பவர்கள் போராட்டம் நடத்த வேண்டிய இடம் பொதுக் கழிப்பிடங்கள்தான். ஏனென்றால் அங்குதான் ஆண்கள்-பெண்கள் என தனித்தனி படம்போட்டு பாகுபாட்டை வலியுறுத்துகிறார்கள். என்ன கொடுமைசார் இது!

*******
பர்தாவும் பைபிளும்
பர்தாவைப் பிடித்திழுக்கும் பிரதிபா படீல்

பழமைவாத,ஆணாதிக்கத் திருவள்ளுவர் !?!

துப்பட்டாவுக்கு வெளியேதான் பெண்ணியமா?
Click here to bookmark this link.Channel Image21:48 மரபணு மாற்ற விதைகள் உணவு சுதந்திரத்தை பறிக்கின்றன: நம்மாழ்வார் மக்கள் சட்டம் (PEOPLE'S LAW)
பி.டி. பருத்தி, பி.டி.கத்திரிக்காய் என்று மரபணு மாற்ற விதைகளை மத்திய, மாநில அரசுகள் மக்கள் மீது திணிப்பதனால் நமது நாட்டின் உணவுச் சுதந்திரமும், பாதுகாப்பும் பறிக்கப்படுகிறது என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறினார்.

webdunia photo
WD
சென்னையில் மனித உரிமை, சுற்றுச் சூழல் நீதிக்கான வழக்கறிஞர்கள் மையம் ஏற்பாடு செய்த ‘மரபணு மாற்ற விதைகளும் இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளவிருக்கும் சட்டச் சிக்கல்களும்’ என்ற கலந்தாய்வில் பங்கேற்றுப் பேசிய நம்மாழ்வார், மரபணு மாற்றப்பட்ட (பி.டி.) கத்திரிக்காய்க்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது நமது நாட்டின் மீதான இரண்டாவது காலனி ஆதிக்கம் என்றும், அதனை எதிர்த்து நாம் போராட வேண்டும் என்றும் கூறினார்.

எந்த ஒரு பயிரானாலும் அதன் தன்மையை நிர்ணயிப்பது அது விளைவிக்கப்படும் மண்தான் என்றும், அதனால்தான் நமது நாட்டில் விளைவிக்கப்படும் சிறப்பான பயிர்கள் பலவும் அது விளையும் இடத்தின் பெயரோடு சேர்த்து அழைக்கப்படுவதை சுட்டிக்காட்டிய நம்மாழ்வார், அப்படிப்பட்ட பயிரின் இயற்கையான பன்முகத் தன்மையை பி.டி. கத்திரிக்காய் போன்ற மரபணு மாற்றப்பட்ட விதைகள் அழித்துவிடும் என்று எச்சரித்தார்.

“ஒரு இடத்தில் விளையும் பயிர் அந்தச் சமூகத்தின் சொத்து, அதனை இப்படிப்பட்ட மரபணு மாற்ற விதைகளைத் திணிப்பதன் மூலம் அழிப்பது, இயற்கையின் அடிப்படையான உயிரியல் பரவலை திட்டமிட்டு அழிக்கும் செயலே” என்று கூறிய நம்மாழ்வார், நாகை மாவட்டத்தில் பரவலாக மக்கள் வாங்கும் பொய்யூர் கத்திரிக்காய், அந்த ஊரில் பயிரிட்டால் மட்டுமே அந்த சுவையை அளிக்கும் என்றும், அதனை வேறிடத்தில் பயிரிட்டால் அந்தத் தனிச் சுவை இல்லாமல் போகும் என்றும், வேலூர் எண்ணெய்க் கத்திரிக்காய் (முள்ளு கத்திரிக்காய் என்றும் கூறுவார்கள்) அவ்விடச் சிறப்பின் விளைவே என்றும், இதுவே உயிர்ப் பரவலின் உன்னதமான சிறப்பு என்றும் கூறினார்.

நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இப்படி சிறப்பாகப் பயிரிடப் பொருட்களை அனைத்தையும் அழிக்கும் திட்டத்துடனேயே மரபணு மாற்ற விதைகள் வேகமான திணிக்கப்படுகின்றன என்றும், அதற்கு அரசுகள் மாத்திரமின்றி, வேளாண் பல்கலைக் கழகங்களும் அறமின்றித் துணை போகின்றன என்றார் நம்மாழ்வார்.

இலாப நோக்கை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, விவசாயத்தை வணிகமயமாக்கும் பன்னாட்டு ஆய்வு நிறுவனங்களுக்கு விவசாயத்தை ஏக போக உரிமையாக்கும் வழிமுறையே காப்புரிமை சட்டம் என்று சாடிய நம்மாழ்வார், இப்படிப்பட்ட நிறுவனங்களுக்கு நமது நாட்டின் அரசுகள் கதவு திறந்துவிட்டால் நமது உணவுப் பாதுகாப்பிற்கு என்ன உத்தரவாதம் என்று கேள்வி எழுப்பினார்.

WD
பி.டி. கத்திரிக்காய் பயன்பாட்டை ஆதரித்து தமிழக வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சட்டப் பேரவையில் பேசும்போது, அந்த விதைகளை பயிரிட்டு அதிலேதும் குளறுபடி ஏற்பட்டால் நீதிமன்றத்திற்குப் போகலாம் என்று கூறுவது அவரின் தெளிவின்மையையே காட்டுகிறது என்று கூறிய நம்மாழ்வார், மரபணு மாற்றப்பட்ட விதைகளை அனுமதித்துவிட்டால் பிறகு நமது விவசாய உரிமையை மீட்க முடியாது என்றும், அதனை நுழைய விடாமல் தடுப்பதே முக்கியம் என்று வலியுறுத்தினார்.

பி.டி. விதைகளை நாட்டிற்குள் அனுமதிப்பது நமது உணவை நாம் தேர்வு செய்யும் சுதந்திரத்தை அடியோடு அழித்துவிடும் என்றும் நம்மாழ்வார் எச்சரித்தார்.

1960களில் மேற்கொள்ளப்பட்ட பசுமைப் புரட்சியின் காரணமாகத்தான் இந்தியாவின் உணவுப் பற்றாக்குறை தீர்க்கப்பட்டது என்று பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் கூறியது குறித்து கேள்வி கேட்டதற்கு, அது தவறான தகவல் என்றும், பசுமைப் புரட்சியால் உணவுப் பற்றாக்குறை தீர்ந்தது என்றால், பி.எல். 420 திட்டத்தின் கீழ் கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார். நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வழி உரத்தையும், பூச்சி மருந்துகளையும் கொட்டி உற்பத்தியை எடுக்கும் பசுமைப் புரட்சி வழியல்லவென்றும், இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்தி உற்பத்தியைப் பெருக்குவதே சரியான வழியென்றும் நம்மாழ்வார் கூறினார்.

“உணவுப் பாதுகாப்பு என்பது வெறும் உற்பத்தி மட்டுமல்ல, அது ஊட்டமுடைய உணவு உற்பத்தியாகவும் (Nutrition Security) இருக்க வேண்டும்” என்று கூறிய நம்மாழ்வார், நமது அரசுகளின் உணவுக் கொள்கை என்பது மக்களை மையப்படுத்தியதாக இருக்க வேண்டுமே தவிர, சந்தையை மையப்படுத்தியதாக இருக்கக் கூடாது என்றும், மரபணு மாற்ற விதைகளைத் திணிப்பது இலாப நோக்கு கொண்ட நிறுவன விவசாயத்திற்கு (Corporate Agriculture) உதவுவதே என்றார்.

நன்றி: WEBDUNIAதமிழ்
Click here to bookmark this link.Channel Image06:07 ஈமானில் உறுதி வேண்டும்! – Audio/Video சுவனத்தென்றல்
நிகழ்ச்சி : அரைநாள் இஸ்லாமிய கருத்தரங்கம் உரை : மௌலவி முஹம்மது நூஹ் மஹ்ழரி, இஸ்லாமிய அழைப்பாளர், தம்மாம், சவூதி அரேபியா. நாள் : 25-12-2009 இடம் : கல்ஃப் கேம்ப், தம்மாம் துறைமுகம், சவூதி அரேபியா நிகழ்ச்சி ஏற்பாடு : தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நடுவம், தம்மாம், சவூதி அரேபியா. ஆடியோ : (Download) {MP3 format -Size : 11.3 MB}

Mon 11

Click here to bookmark this link.Channel Image20:39 டர்புலன்ஸ் ஒரு அறிமுகம் – பாகம் 2 அறிவியல்
டர்புலன்ஸ் என்றால் அமளி என்று, பெயர்க்காரணத்தை சென்ற பாகத்தில் கூறி, இவ்வறிமுக கட்டுரையில் வைத்துள்ளோம். அமளியின் உதாரணங்கள் சென்ற பாகத்தில் பார்த்தோம். டர்புலண்ட் ஃப்ளோ என்றால் திரவங்களின் அமளி ஓட்டம். மாறாக சீரோட்டம் அல்லது தகடொத்த திரவங்களின் ஓட்டமும் நிகழும். மேலே படத்தில் லியனார்டோ டா வின்சி கவனித்து வரைந்துள்ளது தினவாழ்வில் நாம் குழாயிலோ, கால்வாயிலோ பார்க்கும் தண்ணீரோட்டம்தான். அமளி ஓட்டம். தினவாழ்வில் குழாயினுள் தண்ணீர் மெதுவாக ஓடுகையில் தேமேனென்று சீராக அமைதியாக செல்லும். இதை அறிவியலார் ஒரு வழுவழு [...]
Click here to bookmark this link.Channel Image09:41 இம்மையில் வெற்றி பெற… – Audio/Video சுவனத்தென்றல்
நிகழ்ச்சி : அரைநாள் இஸ்லாமிய கருத்தரங்கம் உரை : மௌலவி முஹம்மது மன்ஸூர் மதனி நாள் : 25-12-2009 இடம் : கலஃப் கேம்ப், தம்மாம் துறைமுகம், சவூதி அரேபியா நிகழ்ச்சி ஏற்பாடு : தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நடுவம், தம்மாம், சவூதி அரேபியா. ஆடியோ : (Download) {MP3 format -Size : 9.1 MB}
Click here to bookmark this link.Channel Image04:23 புதுவகை நோய்: இமி-4 வஹ்ஹாபி
உற்ற நண்பர்கள் யாவர்?

அரைகுறை-5
சுரா (3:28) முஃமீன்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையின்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி, (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ் விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை; இன்னும் அல்லாஹ் தன்னைப்பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும் அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது.

மேற்காணும் இறைவசனத்தை எடுத்துப் போட்டு, "பிறமதத்தவரோடு முஸ்லிம்கள் உள்ளார்ந்த நட்பு கொள்ள மாட்டார்கள்" என்பதாகத் திண்ணையில் புனித மோசடி செய்யப் பட்டது.

முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காகத் திண்ணையில் எழுதும் சில முஸ்லிம்கள், திண்ணையில் எழுதப்பட்ட என் பள்ளித் தோழன் ஜீனா கணேசனை [சுட்டி-31] விட எனக்கு நெருக்கமானவர்கள் அல்லர். அவன் இன்றும் என் தோழன்தான். எனக்கோ நான் சார்ந்த சமயத்துக்கோ அணுவளவும் கேடு நினைக்காத ஜீனா கணேசனை எதிரியாகக் கொள்ள வேண்டும் என்று எனது மார்க்கம் எனக்குப் போதிக்கவில்லை.

ஏனெனில், வெறும் நண்பர்கள் என்பதற்கும் உற்ற தோழர்கள்/துணைவர்கள் என்பதற்கும் உறவின் கால அளவு, இணைந்து வாழும் சூழல், தூய்மையான அன்பு/நட்பு ஆகியன அளவுகோள்களாக அமைகின்றன. தன்னையும் தனது வாழ்க்கை நெறியையும் மதிக்கக் கூடிய, தன்னைச் சார்ந்த இன்னொருவரை விடுத்து,  தன்னையும் தன் வாழ்க்கை நெறியையும் அழித்தொழிக்க அயராது முயல்பவரை உற்ற தோழராக, உதவியாளராகக் கொள்ள எந்த மதத்தினரும் முன்வர மாட்டார். அதைத்தான் மேற்காணும் இறைவசனங்களும் அதன் பின்னணியும் சுட்டுகின்றன:
"இறைநம்பிக்கையாளர்கள் (தம்மைச் சார்ந்த) இறைநம்பிக்கையாளர்களை விடுத்து, இறைமறுப்பாளர்களைத் தம் உற்ற தோழர்களாக/துணைவர்களாகக் கொள்ள வேண்டாம் - தங்களை அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காகவன்றி - அவ்வாறு கொள்பவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து எந்தவித உதவியும் இருக்காது. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான்! அல்லாஹ்விடமே நீங்கள் அனைவரும் மீள வேண்டியிருக்கிறது. (நபியே!) சொல்லுங்கள்: நீங்கள் மறைத்தாலும் வெளிப்பட உரைத்தாலும் உங்கள் அகத்தில் உள்ளதை அல்லாஹ் நன்கறிவான் ..." [அல் குர்ஆன் 003:028-029] Let not the believers Take for friends or helpers Unbelievers rather than believers: if any do that, in nothing will there be help from Allah: except by way of precaution, that ye may Guard yourselves from them. But Allah cautions you (To remember) Himself; for the final goal is to Allah.Say: "Whether ye hide what is in your hearts or reveal it, Allah knows it all ..." [சுட்டி-32].

"இறைநம்பிக்கையாளர்களே! எனது வழியில் அறப்போர் புரியவும் எனது பொருத்தத்தை வேண்டியும் நீங்கள் (உங்கள் பிறந்த மண்ணைத் துறந்து) புலம் பெயர்ந்திருப்பது உண்மையாயின், எனக்கும் உங்களுக்கும் விரோதியாகத் திகழ்பவர்களை, அவர்கள் மீது நீங்கள் கொண்ட (பழைய) பரிவின் காரணத்தால் (நாட்டின்) இரகசியத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் உற்ற நண்பர்களாக/ பாதுகாவலர்களாகக் கொள்ளாதீர்கள். அவர்கள் உங்களிடம் வந்துள்ள சத்திய(வேத)த்தை மறுத்தவர்கள்; அல்லாஹ்வை உங்கள் (ஒரே) இறைவனாக நீங்கள் ஏற்றுக் கொண்டதற்காக உங்களையும் (என்) தூதரையும் (பிறந்த மண்ணை விட்டு) வெளியேற்றியவர்கள். என்றாலும்கூட நீங்கள் அவர்கள் மீது கொண்ட (பழைய) பரிவினால் (நாட்டின்) இரகசியத்தை அவர்களிடத்தில் வெளிப்படுத்தி விடுகின்றீர்கள். நீங்கள் மறைப்பதையும் வெளிப்பட உரைப்பதையும் நான் நன்கு அறிவேன் ..." [அல் குர்ஆன் 060:001] O ye who believe! Take not my enemies and yours as friends (or protectors),- offering them (your) love, even though they have rejected the Truth that has come to you, and have (on the contrary) driven out the Prophet and yourselves (from your homes), (simply) because ye believe in Allah your Lord! If ye have come out to strive in My Way and to seek My Good Pleasure, (take them not as friends), holding secret converse of love (and friendship) with them: for I know full well all that ye conceal and all that ye reveal ..." [சுட்டி-33].
மேற்காணும் வசனங்களின் பின்னணி:
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குதிரை வீரர்களான என்னையும் ஸுபைர் இப்னு அவ்வாம் (ரலி),  அபூ மர்ஸத் கினாஸ் இப்னு ஹுஸைன் அல்ஃகனவீ (ரலி) ஆகியோரையும் அழைத்து, "நீங்கள் புறப்பட்டு, 'ரவ்ளத்து காக்' எனும் இடம் வரை செல்லுங்கள்; அங்கு (ஒட்டகப் பல்லக்கில்) இணைவைப்பாளர்களில் ஒருத்தி இருப்பாள். இணைவைப்பாளர்க(ளின் மக்கத்துத் தலைவர்க)ளுக்கு (மதீனாவாசியான) ஹாத்திப் இப்னு அபீ பல்த்தஆ அனுப்பியுள்ள (நம்முடைய படைகளைப் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கும்) கடிதம் ஒன்று அவளிடம் இருக்கும். (அவளிடமிருந்து அக்கடிதத்தைக் கைப்பற்றி வாருங்கள்)" என்று கூறி அனுப்பினார்கள்.

(நாங்கள் புறப்பட்டுச் சென்றோம்) இறைத்தூதர் (ஸல்) எங்களிடம் குறிப்பிட்ட இடத்தில் அந்தப் பெண் தன்னுடைய ஒட்டகத்தில் சென்று கொண்டிருந்தபோது அவளை நாங்கள் அடைந்தோம். "உன்னிடம் உள்ள கடிதம் எங்கே? (அதை எடு)" என்று கேட்டோம். அவள், "என்னிடம் கடிதம் ஏதுமில்லை" என்று பதிலளித்தாள். அவள் பயணித்த ஒட்டகத்தை நாங்கள் படுக்க வைத்து, அதன் பல்லக்கினுள் (அந்தக் கடிதத்தைத்) தேடினோம்; (கடிதம்) ஏதும் கிடைக்கவில்லை. என் தோழர்கள் இருவரும், "கடிதம் ஏதும் நமக்குக் கிடைக்கவில்லையே!" என்றார்கள்.

நான் (அவளிடம்), "இறைத்தூதர் (ஸல்) பொய் சொல்லமாட்டார் என்று நான் உறுதியாக அறிந்துள்ளேன். எவன் மீது சத்தியம் செய்யப்படுமோ அ(ந்த இறை)வன் மீதாணையாக! நீயாகக் கடிதத்தை எடு(த்துக் கொடு); அல்லது (சோதனையிடுவதற்காக) உன்னுடைய ஆடையை நான் கழற்ற வேண்டியிருக்கும்" என்று சொன்னேன். நான் விடாப்பிடியாக இருப்பதைக் கண்ட அவள், (கூந்தல் நீண்டு தொங்கும்) தன்னுடைய இடுப்புப் பகுதிக்குத் தன்னுடைய கையைக் கொண்டு சென்றாள். அவள் ஒரு துணியை இடுப்பில் கட்டியிருந்தாள். (அங்கிருந்து) அந்தக் கடிதத்தை வெளியே எடுத்துத் தந்தாள்.

அந்தக் கடிதத்துடன் இறைத்தூதர் (ஸல்) அவர்களை அடைந்தோம். கடிதம் கண்ட நபி (ஸல்) அவர்கள், தம் தோழரும் பத்ருப் போராளிகளுள் ஒருவருமான ஹாத்திப் இப்னு அபீ பல்த்தஆ (ரலி) அவர்களை நோக்கி, "ஏன் இப்படிச் செய்தீர்கள்?" என்று கேட்டார்கள். அவர், "அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விசுவாசமுள்ளவனாக நடந்து கொள்வதைத் தவிர வேறெதுவும் எனக்கு நோக்கமில்லை. நான் (என்னுடைய மார்க்கத்தை) மாற்றிக் கொள்ளவுமில்லை; வேறு மதத்தைத் தேடவுமில்லை. இணைவைப்பாளர்(களுக்கு நான் செய்யும் இந்த உதவியால் அவர்)களிடம் எனக்கு ஒரு செல்வாக்கு ஏற்பட்டு, அதன் மூலம் அல்லாஹ் (மக்காவிலிருக்கும்) என் மனைவி மக்களையும் என்னுடைய செல்வத்தையும் பாதுகாக்கவேண்டும் என்றே நான் நினைத்தேன். (என்னைத் தவிர மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து வந்த) தங்கள் தோழர்கள் அனைவருக்குமே (மக்காவிலுள்ள) அவர்களின் மனைவி மக்களையும் அவர்களது செல்வத்தையும் பாதுகாக்க அவர்களின் செல்வாக்குள்ள மக்கத்து உறவினர்கள் சிலர் மூலமாக அல்லாஹ் வழிவகை செய்(து பாதுகாத்)து இருக்கிறான்" என்று கூறினார்.

இதைக் கேட்ட நபி (ஸல்), "இவர் உண்மை சொன்னார். இவரைப் பற்றி(ப் பிறரிடம்) நல்லதையே கூறுங்கள்" என்று (தம் தோழர்களிடம்) கூறினார்கள்.

அப்போது உமர் இப்னு கத்தாப் (ரலி), "இவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்து விட்டார். என்னை விடுங்கள்; இவரது கழுத்தைக் கொய்து விடுகிறேன்" என்றார்கள். அப்போது நபி (ஸல்), "உமரே! உமக்குத் தெரியுமா? 'நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்; உங்களுக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது'  என்ற அல்லாஹ்வின் கூற்று, பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களைப் பற்றியல்லவா?" என்றார்கள்.

இதைக்கேட்ட உமர் (ரலி) அவர்களின் கண்கள் கண்ணீர் உகுத்தன. மேலும், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்"  என்று கூறினார். - அறிவிப்பாளர் : அலீ (ரலி) [புகாரீ6259; சுட்டி-34 ].

இஸ்லாத்துக்காக 'ஹிஜ்ரத்' என்னும் பிறந்த நாட்டைத் துறந்த புலப்பெயர்வு தியாகியாக இருந்தாலும் 'பத்ருப் போராளி' எனும் சிறப்புத் தகுதி மட்டும் இல்லாதிருந்தால் அன்றைய தினம் உமர் (ரலி) வாளுக்கும் ஹாத்திப் (ரலி) கழுத்துக்கும் உறவு ஏற்பட்டிருக்கும்.

மேற்காணும் நிகழ்வு, இஸ்லாத்தைத் தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டதால், தன் மனைவி மக்களையும் சொத்துகளையும் மக்காவில் விட்டு, புலம் பெயர்ந்து அகதியாக மதீனாவுக்கு வந்து, பத்ருப் போரில் இஸ்லாத்தின் விரோதிகளுக்கு எதிராகப் போர் புரிந்த போராளியான ஹாத்திப் இபுனு அபீ பல்த்தஆ (ரலி) எனும் நபித் தோழர் ஒருவரைத் தொடர்பு படுத்தியது என்றாலும் எல்லாருக்கும் எக்காலத்திற்கும் பொதுவானதே.

தம் உறவினர்களின் நலனுக்காக, சொந்த நாட்டின் இராணுவ இரகசியங்களை எதிரி நாட்டுக்குக் கசியவிடுதல் ஒரு முஸ்லிமுக்குத் தகாது என்பது இங்கு இஸ்லாத்தின் மார்க்கக் கட்டளையாகக் கூறப் படுகிறது. இந்தியாவின் பிரிவினை [சுட்டி-35]  சதிக்குப் பிறகு முளைத்த பாகிஸ்தானில் இந்திய முஸ்லிம்களின் உறவினர்கள் இன்றும் வாழ்கிறார்கள் என்பதும் இந்திய இராணுவ இரகசியங்களைப் பாகிஸ்தானுக்குப் 'போட்டுக் கொடுத்தவர்'களின் பட்டியலில் இந்திய முஸ்லிம் எவரும் இடம்பெறவில்லை என்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கது.

இதுதான் தகிய்யா எனில், இந்திய முஸ்லிம்கள் இந்தவகைத் தக்கியாவில் மிக உறுதியாக இருக்கின்றனர் என்று சொல்லிக் கொள்வதில் எனக்குப் பெருமையே!

-தொடரும், இன்ஷா அல்லாஹ்

ஃஃஃ

 சுட்டிகள்
31 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=80803203&format=html

32 - http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/003.qmt#003.028

33 - http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/060.qmt#060.001

34 - http://chittarkottai.com/bukhari/tamil/numbersearch.php?bnumber=6259

35 - http://www.satyamargam.com/1343

Sun 10

Click here to bookmark this link.Channel Image11:57 இஸ்லாத்தின் பார்வையில் தியாகம் – Audio/Video சுவனத்தென்றல்
நிகழ்ச்சி : அரைநாள் இஸ்லாமிய கருத்தரங்கம் உரை : மௌலவி K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி நாள் : 25-12-2009 இடம் : கல்ஃப் கேம்ப், தம்மாம் துறைமுகம், சவூதி அரேபியா நிகழ்ச்சி ஏற்பாடு : தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நடுவம், தம்மாம், சவூதி அரேபியா. ஆடியோ : (Download) {MP3 format -Size : 11.3 MB}
Click here to bookmark this link.Channel Image06:35 அல்பகரா அத்தியாயத்தின் இறுதி இரு வசனங்களின் மகிமை! பிரார்த்தனை பேழை
'அல்பகரா' அத்தியாயத்தின் இறுதி இரண்டு (திருக்குர்ஆன் 02:285 - 286) வசனங்களை இரவு நேரத்தில் ஓதுகிறவருக்கு (மனிதன் மற்றும் ஜின் இனத்தாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்) போதுமானதாக அவை ஆகிவிடும் என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை பத்ருப்போரில் பங்கெடுத்தவரான அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ஆதாரம்: முக்தஸர் ஸஹீஹுல் புஹாரி.

آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللّهِ وَمَلآئِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لاَ نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ وَقَالُواْ سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

(இறை) தூதர். தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். "நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்" என்று கூறுகிறார்கள். (Sura Al-Baqarah: 2:285)

لاَ يُكَلِّفُ اللّهُ نَفْسًا إِلاَّ وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَآ أَنتَ مَوْلاَنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்;) "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (Sura Al-Baqarah: 2:286)
Click here to bookmark this link.Channel Image03:50 தொழாதவர்களுக்காக இறைவன் சித்தப்படுத்தி வைத்திருப்பதாகக் கூறும் நரகத்தின் பெயர் என்ன? இஸ்லாம்குரல்.காம்
கேள்வி எண்: 114. தொழாதவர்களுக்காக இறைவன் சித்தப்படுத்தி வைத்திருப்பதாகக் கூறும் நரகத்தின் பெயர் என்ன? பதில்: ஸகர் என்ற நரகம். அல் முத்தஸ்ஸிர் (74:41, 42, 43) عَنِ الْمُجْرِمِينَ குற்றவாளிகளைக் குறித்து- (74:41) مَا سَلَكَكُمْ فِي سَقَرَ “உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?” (என்று கேட்பார்கள்.)  (74:42) قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ அவர்கள் (பதில்) கூறுவார்கள்; “தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. (74:43)

Sat 09

Click here to bookmark this link.Channel Image08:48 இஸ்லாத்தின் பார்வையில் மத்ஹப்கள்! – Audio/Video சுவனத்தென்றல்
உரை : மௌலவி K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி நிகழ்ச்சி : அருள்மறை குர்ஆன் விளக்கவுரை நாள் : 31-12-2009 இடம் : அல்கோபார் இஸ்லாமிய நிலையத்தின் சொற்பொழிவு அரங்கம், சவூதி அரேபியா ஆடியோ : (Download) {MP3 format -Size : 16.85 MB}

Wed 06

Click here to bookmark this link.Channel Image13:44 கிரிக்கெட் சுவனத்தென்றல்
சுவனப்பாதை மாதஇதழ் நடத்திய உலகளாவிய கட்டுரைப் போட்டியில் (ஹிஜ்ரி 1430) முதல் பரிசு பெற்ற கட்டுரை! நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாட்டிலே, மக்களால் குறிப்பாக இளைஞர்களால் அதிகமாக உச்சரிக்கப்படுகிற ஐந்து எழுத்து மந்திரச் சொல் எது என்று கேட்டால், கிரிக்கெட் என்று அடுத்த வினாடியே சொல்லிவிடுவார்கள். கிரிக்கெட் சம்பந்தமாக எழுதப்படாத பத்திரிக்கைள், காட்டப்படாத தொலைக்காட்சிகள், சொல்லப்படாத வானொலிகள் பாவம் செய்தவையாக மக்களால் எண்ணப்படுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி, சாதி மத பேதமின்றி ஒன்றை [...]

Tue 05

Click here to bookmark this link.Channel Image03:23 [பாகம்-9] முஸ்லிமின் வழிமுறை. இஸ்லாம்குரல்.காம்
மனதுடன் நடந்து கொள்ள வேண்டிய முறை. ஒரு முஸ்லிம் இம்மை, மறுமையின் ஈடேற்றம் தன்னுடைய மனதைத் தூய்மைப்படுத்துவதில் – பண்படுத்துவதில் தான் இருக்கின்றது என்று நம்ப வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: மனதைத் தூய்மைப்படுத்தியவர் திண்ணமாக வெற்றியடைந்து விட்டார். அதனை நசுக்கியவர் திண்ணமாகத் தோற்றுவிட்டார். (91:9-10) காலத்தின் மீது சத்தியமாக மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான். ஆனால் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டும் நற்செயல்கள் புரிந்து கொண்டும் மேலும் ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும் பொறுமையைக் கடைபிடிக்குமாறு அறிவுரை கூறிக்கொண்டும் இருந்தார்களோ அவர்களைத் தவிர! (103:1-3) எனது [...]

Mon 04

Click here to bookmark this link.Channel Image08:13 டர்புலன்ஸ் ஒரு அறிமுகம் – பாகம் 1 அறிவியல்
டர்புலன்ஸ் என்ற ஆங்கில வார்த்தையை உச்சரித்ததும் மனக்கண்முன் பல குழப்பங்கள் படமாகத் வந்துபோகலாம் – நுரைபொங்கும் காவிரி, அலைமோதும் கடல், சுழன்றடிக்கும் புயல், நிசப்த நட்சத்திர வெடிப்பு, கலர் நொடிக் கனவுகள், வளையல் குலுங்கும் கலிடாஸ்கோப், பனகல் பார்க் டிராஃபிக், தட்டாமாலை இப்படி. டர்புலன்ஸ் என்ற ஆங்கில வார்த்தைக்கு குழப்பம் என்று பொருள்கொள்ளலாம்தானே. ஆனால் அறிவியலில், குறிப்பாக இயற்பியலின் ஒரு பகுதியாக நாம் வகுத்திருக்கும் திரவ-இயற்பியலில், டர்புலன்ஸ் என்றால் வேறு. சற்று ஆர்கனைஸ்டு குழப்பம். இந்த விஷயத்தை பற்றிய ஆராய்ச்சி [...]
Click here to bookmark this link.Channel Image07:47 சூரா ஃபாத்திஹாவின் விளக்கம்-2 அல்பாக்கவி.காம்
சூரா ஃபாத்திஹாவின் விளக்கம்-2 ابِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ 1 அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன். الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ .2 அகில உலகையும் படைத்துக் காக்கும்; அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் الرَّحْمـنِ الرَّحِيمِ .3 (அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். مَالِكِ يَوْمِ الدِّينِ .4 (அவன்) நியாhயத் தீர்ப்பு நாளின் அதிபதி. إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ .5 (இறiவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்.உன்னிடமே உதவியும் தேடுகிறோம். اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ. 6 (இறiவா!) நீ எங்களை நேரான் [...]

Fri 01

Click here to bookmark this link.Channel Image09:16 புதுவகை நோய்: இமி-3 வஹ்ஹாபி
சத்தியம் செய்தல் (ஆணையிட்டுக் கூறுதல்)

இஸ்லாத்தின் பார்வையில் பொதுவாக ஒரு களங்கத்தை/பழியை/குற்றச்சாட்டை - குறிப்பாக - தன் மீது சுமத்தப் படும் குற்றச்சாட்டை நீக்கிக் கொள்வதற்குத் தக்க சாட்சியங்கள் இல்லாதபோது, அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, தனக்கு எதிரானவற்றை மறுப்பதற்கும் தன் கூற்று முற்றிலும் உண்மை என்று நிறுவுவதற்கும் சத்தியம் செய்வதற்கு அனுமதி உள்ளது.

இஸ்லாத்தின் மீளெழுச்சிக்கு முன்னர் மூன்றுவகை சத்தியமிடுதல்கள் வழக்கில் இருந்தன:

1. தாங்கள் வழிபடும் சிலைகளின் பெயரால் செய்யப் படும் தீர்க்கமான சத்தியம், [புகாரீ6650; சுட்டி-20].

2. தங்கள் மனைவியரைத் தள்ளி வைப்பதற்காக, "சத்தியமாக நான் உன்னுடன் உறவு கொள்ள மாட்டேன்" எனக் கூறும் வதைச் சத்தியம் [சுட்டி-21],

3. எவ்வித உள்நோக்கமும் தேவையும் இன்றி விளையாட்டாகக் கூறும் வெற்றுச் சத்தியம் [சுட்டி-22]. இதை, "அல் யமீனுல் லக்வு (வீண் சத்தியம்)" என்று அல் குர்ஆன் குறிப்பிடுகிறது.

இஸ்லாத்தின் மீளெழுச்சிக்கு முன்னர், அரபு மக்களிடையே எடுத்ததற்கெல்லாம் சத்தியம் செய்யும் வழக்கம் இருந்ததை அவர்களது வரலாறு கூறுகிறது. "என் தந்தை மீதாணை!", "உன் தந்தை மீதாணை!" எனக் கூறுவது அவர்களது இயல்பாக இருந்திருக்கிறது. இது, நமது நாட்டார் வழக்கான "ஒங்கொப்புராண (உன் அப்பன் மீதாணை)" என்பதை ஒத்ததாகும். "தன்னைப் படைத்த இறைவனைத் தவிர வேறு யார்/எதன் மீதும் ஆணையிடக் கூடாது" எனும் திருத்தம் [புகாரீ6108; சுட்டி-23] வரும் வரைக்கும் நபித் தோழர்கள் உட்பட அனைவரும் பழைய பழக்கத்திலேயே இருந்திருக்கின்றனர்.

இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட பின்னரும், "இன்றிரா எனக்கு உணவு வேண்டாம்" எனக் குடும்பத் தலைவர் கூறுவதற்கு ஒரு சத்தியம்; பதிலுக்கு, "உன் தந்தை உண்ணாவிடில் நானும் உண்ண மாட்டேன்" எனக் கூறும் தாயின் சத்தியம்; "வீட்டுக்காரர் உண்ணாமல் நாங்கள் உண்ணப் போவதில்லை" என்பதாக விருந்தாளிகள் செய்யும் சத்தியம் போன்ற தேவையற்ற சத்தியங்கள் நபித்தோழர்களின் நாவினில் வெகு சரளமாக விளையாடும் சொற்களாக இருந்துள்ளன [புகாரீ6141; சுட்டி-24].

தன் மனைவி தன்னோடு இணங்கி இருப்பதையும் பிணங்கி இருப்பதையும் பிரித்து அறிந்து கொள்வதற்கு, சரளமாக அவர் இடும் சத்தியம் சார்ந்த சொற்கள் அடிப்படையாக இருந்ததை அண்ணலாரின் குடும்ப வாழ்க்கையில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது [புகாரீ5228; சுட்டி-25].

மூன்றாவது அரைகுறையை இனங் கண்டு கொள்வதற்கு மேற்காணும் வரலாற்றுத் தகவல்கள் வாசகர்களுக்கு உதவக் கூடியவையாக அமையும்.

அரைகுறை-3 சுரா (2: 225) (யோசனையின்றி) நீங்கள் செய்யும் வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான். ஆனால், உங்களுடைய இதயங்கள் (வேண்டுமென்றே) சம்பாதித்துக் கொண்டதைப்பற்றி, உங்களைக் குற்றம் பிடிப்பான்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க பொறுமையுடையோனுமாக இருக்கின்றான்.

மேற்காணும் இறைவசனத்தை எடுத்துப் போட்டு, அதற்குத் தொடர்பில்லாத "பிறமதத்தவரை ஏமாற்றுவதற்கு முஸ்லிம்கள் சத்தியம் செய்வார்கள்" என்பதாகத் திண்ணையில் புனித மோசடி செய்யப் பட்டது.
"நீங்கள் செய்யும் வெற்றுச் சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களை(க் குற்றம்) பிடிக்க மாட்டான். மாறாக, உங்கள் உள்ளங்கள் திட்டமிட்டு(ச் சத்தியங்கள் செய்து) பெற்றுக் கொள்பவற்றுக்காக உங்களை(க் குற்றம்) பிடிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகித்துக் கொள்பவன் [அல் குர்ஆன் 002:225]. Allah will not call you to account for thoughtlessness in your oaths, but for the intention in your hearts; and He is Oft-forgiving, Most Forbearing [சுட்டி-26].

"நீங்கள் செய்யும் வெற்றுச் சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களை(க் குற்றம்) பிடிக்க மாட்டான். மாறாக, நீங்கள் செய்யும் தீர்க்கமான சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களை(க் குற்றம்) பிடிப்பான் ... [அல் குர்ஆன் 005:089] Allah will not call you to account for what is futile in your oaths, but He will call you to account for your deliberate oaths ... [சுட்டி-27].
ஒருவரது கூற்றை "ஆம்" என்று ஏற்றுக் கொள்வதற்கும் வேறோரு கூற்றை "இல்லை" என்று மறுப்பதற்குங்கூட, "அல்லாஹ்வின் மீதாணை!" என்று சேர்த்துச் சொல்லுவது வழக்கமாக இருந்தது. "அவையெல்லாம் வெற்றுச் சத்தியங்கள்தாம்" என்று இறைவேதம் தெளிவு படுத்தியது [புகாரீ 4613; சுட்டி-28].

மேற்காணும் இறைவசனங்களில் தன் இனத்தவர் என்றோ பிற மதத்தவர் என்றோ குறிப்பேதுமில்லை என்பது இங்குக் கூடுதல் கவனத்திற்குரியது. புனித மோசடியில் குறிப்பிட்டுள்ளவாறே "யோசனையின்றி"ச் செய்யும் சத்தியங்களோடு பிற மதத்தவரை எப்படி ஏமாற்ற முடியும்? என்பது 'யோசனை'க்குரியதாகும். இதில் தக்கியா எனும் பேசுபொருள் எங்கே இருக்கிறது என்று தேடிப் பிடிக்க வேண்டியது வாசகர்களின் பொறுப்பாகும்.

***

"பிற மதத்தவரை ஏமாற்றுவதற்காகப் பொய் சத்தியம் செய்து விட்டு, அதற்குப் பரிகாரம் செய்தால் சரியாகிவிடும்" எனும் மாயையை ஏற்படுத்துவதற்காகப் புனித மோசடி செய்யப் பட்ட இன்னொரு இறைவசனத்தையும் பார்க்கலாம்:

அரைகுறை-4 சுரா (66:02) – அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சில போது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான்; மேலும் அல்லாஹ் உங்கள் எஜமானன். மேலும் அவன் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.

மேற்காணும் 066ஆவது அத்தியாயத்தின் தொடக்க இறைவசனங்கள், அந்த வசனங்களை மக்களுக்கு எடுத்தோதும் பொறுப்பில் இருந்த இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைக் கண்டித்து அருளப் பெற்றவை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவியர் மூவர் தொடர்புடைய நிகழ்வைக் குறித்தும் இறைவனால் ஆகுமாக்கப் பட்ட பானங்களின் ஒன்றான, "தேனை நான் இனி அருந்த மாட்டேன்" என்று சத்தியம் செய்ததற்காக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறைவனால் கண்டனம் செய்யப் பட்டதைக் குறித்தும் பேசும் வசனங்களை, பிற மதத்தவரோடு பொருத்தி புனித மோசடி செய்யப் பட்டது. அதைத் திண்ணையும் பெருமையோடு பதித்தது.

அந்த நிகழ்வைக் கூறும் முழுவசனங்கள்:
"நபியே!, அல்லாஹ் உமக்கு அனுமதித்ததை உம் (இரு) மனைவியரின் உளநிறைவுக்காக நீங்கள் ஏன் விலக்கிக் கொள்கின்றீர்கள்? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரில்லா அன்புடையோன். உங்களுடைய சத்தியங்களை முறித்துக் கொள்வதற்கு உரிய பரிகாரத்தை அல்லாஹ் கடமையாக்கித் தந்திருக்கிறான். அவன்தான் உங்கள் அதிபதி. அவன் நன்கறிபவன்; ஞானம் மிக்கவன் [அல் குர்ஆன் 066:001-002] O Prophet! Why holdest thou to be forbidden that which Allah has made lawful to thee? Thou seekest to please thy consorts. But Allah is Oft-Forgiving, Most Merciful. Allah has already ordained for you, (O men), the dissolution of your oaths (in some cases): and Allah is your Protector, and He is Full of Knowledge and Wisdom. [சுட்டி-29].
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களின் இல்லத்துக்குச் சென்றால் அங்குத் தேன் அருந்துவதையும் அவரிடம் (அதிகநேரம்) தங்கிவிடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். (இதை விரும்பாமல் அவர்களின் துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் கூடிப்பேசினோம். (தேனருந்தி விட்டு) நபி (ஸல்) அவர்கள் நம்மிருவரில் யாரிடம் முதலில் வந்தாலும் அவர், "கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? உங்களிடமிருந்து, பிசினின் துர்வாடை வருகிறதே" என்று கேட்க வேண்டும் என முடிவு செய்துகொண்டோம்.

வழக்கம்போல் ஸைனபின் வீட்டிலிருந்து தேனருந்தி விட்டு, நபி (ஸல்) அவர்கள் வந்தபோது நாங்கள் பேசி வைத்திருந்தபடி கேட்டோம். நபியவர்கள், "இல்லை (நான் பிசின் சாப்பிடவில்லை); ஸைனபின் இல்லத்தில் தேனருந்தினேன். சத்தியம் செய்கிறேன்: (இனிமேல்,) நான் ஒருபோதும் அதை அருந்த மாட்டேன்" என்று கூறிவிட்டு, "இது குறித்து எவரிடமும் தெரிவித்து விடாதே!" என்றும் கேட்டுக் கொண்டார்கள் [அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி) - புகாரீ4912; சுட்டி-30].

இதில் தக்கியா எங்கே? பிறமதத்தவர் எங்கே?

யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

- தொடரும், இன்ஷா அல்லாஹ்.

ஃஃஃ

சுட்டிகள்:
20 - http://chittarkottai.com/bukhari/tamil/numbersearch.php?bnumber=6650
21 - http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/002.qmt#002.226
22 - http://chittarkottai.com/bukhari/tamil/numbersearch.php?bnumber=4613
23 - http://chittarkottai.com/bukhari/tamil/numbersearch.php?bnumber=6108
24 - http://chittarkottai.com/bukhari/tamil/numbersearch.php?bnumber=6141
25 - http://chittarkottai.com/bukhari/tamil/numbersearch.php?bnumber=5228
26 - http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/002.qmt#002.225
27 - http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/005.qmt#005.089
28 - http://chittarkottai.com/bukhari/tamil/numbersearch.php?bnumber=4613
29 - http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/066.qmt#066.001
30 - http://chittarkottai.com/bukhari/tamil/numbersearch.php?bnumber=4912

Wed 30

Click here to bookmark this link.Channel Image06:47 முஹர்ரம் மாதம் அல்பாக்கவி.காம்
“முஹர்ர்ரம்” இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாகும் முஹர்ரம்.முற்காலம் தொட்டு அரபிகள் இம்மாதத்தைப் புனித மாதங்களில் ஒன்றாகக் கொண்டிருந்தனர்.முஹர்ரம் என்னும் அரபிச் சொல்லிற்கு “விலக்கப்பட்டது” என்று பொருள். “சொற் பொருள்” முஹர்ரம், ஹராம்,ஹரம், ஹுரும், தஹ்ரீம,இஹ்ராம் என்ற சொற்கள் ஒரே வேர் சொல்லிலிருந்து பிறந்த சொற்களாகும். பாவங்கள் அல்லது செய்யக்கூடாதவைகளை செய்வதை விட்டும் தடுக்கப்படுவதால் விலக்கப்பட்டது, தடுக்கப்பட்டது,என்றும் விலக்கப்பட்டதை செய்வதைவிட்டும் தடுக்கப்படுவதால் அச்செயல் புனிதமானது என்றும், தடுக்கப்படும் இடம் புனிதமான இடம் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. ( உ-ம் : தொழுகைக்கு முன் செய்யப்படும் [...]

Sat 26

Click here to bookmark this link.Channel Image05:36 புதுவகை நோய்: இமி-2 வஹ்ஹாபி
உடன்படிக்கை என்றால் என்ன?

இருவர் அல்லது இரு சாரார் தத்தமது விருப்பங்களை/கோரிக்கைகளை முன்வைத்துக் கலந்துபேசி, பொதுவான முடிவுக்கு வந்து, அதை இருவரும்/இருசாராரும் ஏற்றுச் செயல்படுவதற்கு உடன்படுவதாக உறுதி கூறுவது/எழுதிக் கொள்வதற்குப் பெயர் உடன்படிக்கையாகும்.

அவ்வாறு ஏற்றுக் கொண்டவற்றைப் புறக்கணித்து உடன்படிக்கையை முதலாவதாக முறிப்பவர்கள் அநியாயக்காரர்களே. பிறரோடு செய்து கொண்ட உடன்படிக்கைகளை முஸ்லிம்கள் முறித்ததாக இஸ்லாமிய வரலாற்றில் எங்கும் பார்க்க முடியாது.

முஸ்லிம்களின் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறருடன் செய்து கொண்ட உடன்படிக்கைகள் பல. அவற்றுள் 'யூத உடன்படிக்கை' [சுட்டி-09], புகழ் பெற்றது. அந்த உடன்படிக்கையை முறித்தவர்கள் [சுட்டி-10] யூதர்கள் ஆவர். அதேபோல் இஸ்லாமிய வரலாற்றில் பெருமை பொங்கப் பேசப்படும் ஹுதைபிய்யா உடன்படிக்கையை முறித்தவர்கள் மக்கத்துக் குரைஷியர்கள் ஆவர்.

ஆனால், வரலாற்றைத் திரிக்கும் முயற்சியாக, 'புனித மோசடி'யில் உடன்படிக்கையை முஸ்லிம்கள் உடைத்ததாகத் தலைகீழ்ப் பாடம் நடத்தப் பட்டது; அதைத் திண்ணையும் பதித்துப் பெருமை(!) சேர்த்துக் கொண்டது.

அரைகுறை-2 Sura (9:3) - "...Allah and His Messenger are free from liability to the idolaters...” (உடன்படிக்கையை உடைத்தல் என்பதும் ‘தக்கியா’வின் மற்றொரு விளைவு-பாணி).

அல்குர்ஆனின் ஒன்பதாவதான 'மீட்சி/விலகல்' அத்தியாயத்தின் மூன்றாவது வசனத்தின் சில (அரைகுறைச்) சொற்கள், 'உடைப்பதற்கே உடன்படிக்கை' என்று முஸ்லிம்களுக்கு உத்தரவு போடுவதுபோல் பம்மாத்துக் காட்டப் பட்டுள்ளது.

மேற்காணும் இறைவசனத்தில் பேசப்படும் உடன்படிக்கை யாது? அதன் பொருளடக்கங்கள் யாவை? அவற்றை மீறியவர் யாவர்? போன்ற முழுமையான தகவல்களை இங்கு நாம் அறிந்து கொள்வோம். அதற்கு முன்னர், இஸ்லாமிய மீளெழுச்சியின் 19ஆவது ஆண்டின் இறுதியில் இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் மக்கத்து இணைவைப்பாளர்களின் தலைவர் அபூஃஸுப்யானின் பிரதிநிதி ஸுஹைல் பின் அம்ரூ என்பவருக்கும் ஏற்பட்ட 'ஹுதைபிய்யா உடன்படிக்கை'யைப் பற்றி மேற்காணும் இறைவசனம் [009:003] பேசுவதால் 19 ஆண்டுகால இஸ்லாமிய மீளெழுச்சியைப் பற்றி மிகச் சுருக்கமாகப் பார்த்துக் கொள்வது நலம்.

இஸ்லாத்தின் மீளெழுச்சிக்குப் பின்னர் 13 ஆண்டுகள்வரை, தம் குடும்பச் சொந்தமான குரைஷியர்களால் நிகழ்த்தப் பட்ட ஊர்விலக்கல் முதல், கொலை முயற்சிவரை அனைத்தையும் எதிர்கொண்டு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவில்தான் வசித்தார்கள். 13ஆவது ஆண்டின் இறுதியில், தாம் பிறந்த மண்ணான மக்காவைத் துறந்து, அடைக்கலம் கொடுப்பதற்கு அழைத்த மதீனாவுக்குப் புலம் பெயர்ந்தார்கள். இந்தப் புலப் பெயர்வுக்கு, 'ஹிஜ்ரா/ஹிஜ்ரத்' என்பது அரபுப் பெயராகும். அந்த ஆண்டிலிருந்தே முஸ்லிம்களின் வரலாற்றுப் பதிவுகளை 'ஹிஜ்ரீ' எனும் பெயரால் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

மதீனாவின் மக்களுக்கிடையே பன்னெடுங்காலம் நிலவி வந்த இனப்பகையை ஒழித்துக் கட்டி, மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தியதாலும் பல சீர்திருத்தங்களைச் செய்ததாலும் மதீனாவின் மக்கள் அண்ணல் நபியைத் தம் ஆட்சித் தலைவராக்கிக் கொண்டனர் [சுட்டி-11].

அண்ணல் நபியின் செல்வாக்குக் கூடிக் கொண்டே போவதையும் அவர்கள் மக்காவில் வாழ்ந்த காலத்தில் பரவியதைவிடப் பன்மடங்கு அவரது புலப் பெயர்வுக்குப் பின்னர் அதிவேகமாக தம் சொந்த மண்ணில், தங்களின் கண் முன்பே வெகு வேகமாக இஸ்லாம் பரவுவதைக் கண்ட குரைஷிகள், மதீனாவைச் சூறையாடுவதற்கும் மதீனாவின் ஆட்சித் தலைவராகத் திகழ்ந்த அண்ணலாரை ஒழித்துக் கட்டுவதற்கும் மக்காவிலிருந்து (ஏறத்தாழ 400கி.மீ) பயணித்து வந்து பலமுறை (முதல் பத்ரு ஹிஜ்ரீ2இல்; உஹது ஹிஜ்ரீ3இல்; இரண்டாவது பத்ரு ஹிஜ்ரீ4இல்; அகழி ஹிஜ்ரீ-5இல்) போர் புரிந்தனர்; அனைத்திலும் தோல்வியைத் தழுவித் திரும்பிச் சென்றனர்.

***

அகழிப் போருக்கு அடுத்த ஆண்டு ஹிஜ்ரீ 6இல் மக்காவிலுள்ள கஅபா எனும் இறைப் பேரில்லத்தில் உம்ரா எனும் புனித வணக்கம் புரிவதற்காக நபிகள் நாயகமும் அவர்களின் 1400 தோழர்களும் மதீனாவிலிருந்து புறப்பட்டு மக்காவை நேக்கிச் சென்றார்கள். மக்காவைப் புனிதப் பயணக்குழு சென்றடைவதற்கு ஏறத்தாழ 15 கி.மீ தொலைவு இருக்கும்போது மக்காவின் இணைவைப்பவர்கள், பயணக்குழுவை மக்காவுக்குள் அனுமதிக்க முடியாது எனத் தடுத்தனர். அந்த இடத்துக்குப் பெயர் ஹுதைபிய்யா.

தாங்கள் போர் செய்ய வரவில்லை என்றும் அக்கால அரபியர் அனைவருக்கும் பொதுவான 'உம்ரா' வணக்கம் புரிவதற்கே மக்காவுக்கு வருவதாக முஸ்லிம்கள் தரப்பில் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் எதிரணியினர் செவி சாய்க்கவில்லை. முஸ்லிம்களும் முறுக்க ஆரம்பித்தனர். இதற்கிடையில் மக்காவின் தலைவர்களுக்கிடையே முஸ்லிம்களை இறையில்லத்திற்கு வரவிடாமல் தடுப்பது குறித்து இரு வேறு கருத்துகள் [சுட்டி-12] ஏற்பட்டன.
நிலைமை மோசமாவதை அறிந்து கொண்ட மக்கத்துக் குறைஷிகள், அமைதி உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்வதற்காக சுஹைல் இப்னு அம்ரூ என்பவரை நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தனர்.

நபி (ஸல்) அவர்களிடம் சுஹைல் நீண்ட நேரம் பேசினார். பின்பு இருவரும் உடன்படிக்கைக்கான கூறுகளை முடிவு செய்தனர். அவையாவன:
[1] முஸ்லிம்கள் இந்த ஆண்டு மக்காவுக்குள் நுழையாமல் திரும்பிச் சென்றுவிட வேண்டும். அடுத்த ஆண்டு முஸ்லிம்கள் உம்ராவிற்கு வந்து மக்காவில் மூன்று நாட்கள் தங்கிக் கொள்ளலாம். சாதாரணமாக ஒரு பயணி தன்னுடன் வைத்திருக்கும் ஆயுதங்களை எடுத்து வரலாம். ஆனால் அவற்றை உறைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த ஆண்டில் முஸ்லிம்களுக்கு எவ்வகையிலும் எந்தவித இடையூறும் இருக்காது.

[2] பத்து ஆண்டுகளுக்கு இரு தரப்பிலும் போர் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது. அக்காலங்களில் அனைவரும் அச்சமற்று இருப்பார்கள். யாரும் எவருக்கும் எவ்விதத் தீங்கும் செய்யக் கூடாது.

[3] யாரொருவர் முஹம்மதுடைய உடன்படிக்கையாளராகச் சேர்ந்து கொள்ள விரும்புகிறாரோ அவர் அதில் சேர்ந்து கொள்ளலாம். போலவே, மக்காக் குறைஷிகளின் உடன்படிக்கையாளராகச் சேர்ந்து கொள்ள விரும்புகிறவர் அதில் சேர்ந்து கொள்ளலாம். இந்த இரு பிரிவினரில் ஒன்றுடன் சேர்ந்து கொள்ளும் எந்த ஒரு கிளையினரும் அந்தப் பிரிவைச் சேர்ந்தவராவார். அதற்குப்பின் அந்தக் கிளையினருக்கு எதிராக யாராவது அத்துமீறி நடந்து கொண்டால் அஃது அவர் சார்ந்த முழுப்பிரிவின் மீதான அத்துமீறலாகக் கொள்ளப் படும்.

[4] மக்கத்துக் குறைஷி ஆண்களுள் யாராவது தன் பாதுகாவலரான நெருங்கிய உறவினரின் அனுமதியின்றி, தப்பித்து முஹம்மதிடம் வந்து சேர்ந்தால் முஹம்மது அவரை மக்கத்துக் குறைஷிகளிடம் திருப்பி அனுப்பி விடவேண்டும். ஆனால், முஹம்மதிடம் உள்ளவர்களில் யாராவது தப்பித்து மக்கத்துக் குறைஷிகளிடம் வந்துவிட்டால் அவர் முஹம்மதிடம் திருப்பி அனுப்பப்பட மாட்டார்.

மேற்காணும் உடன்படிக்கை [சுட்டி-13] முழுமை பெறுமுன்னர், மக்காவைச் சேர்ந்த, அண்மையில் இஸ்லாத்தைத் தழுவிய அபூஜந்தல் என்பார் முஸ்லிம்களுடன் சேர்ந்து கொள்ளப் புகலிடம் தேடி வந்தார். அவர், மக்கத்துக் குரைஷிகளின் பிரதிநியான சுஹைலின் மகனாவார். மக்காவைச் சேர்ந்த ஆண் தங்களிடம் வந்தால் திருப்பி அனுப்பி விடுவோம் என்ற பேச்சு வார்த்தை முடிந்து விட்டதால், அபூஜந்தலை அவரின் தந்தையிடமே ஒப்படைத்த நேமையாளர் எங்கள் தலைவர் [சுட்டி-14] முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

பிற்றை நாட்களில் அதேபோல், மக்கத்துக் குரைஷியரின் உடன்படிக்கைப் பிரிவான ஸகீப் இனத்தவருள் ஒருவரான அபூபஸீர் என்பார் புகலிடம் தேடி மதீனாவுக்கு வந்தபோது, அவரைத் திருப்பி அனுப்புமாறு கேட்டு வந்த மக்கத்தவர்களுடன் அவரை அனுப்பி வைத்த நேர்மையாளர் எங்கள் தலைவர் [சுட்டி-15].

***

பின்னர், தங்களுக்குப் பாதகம் விளைந்தபோது, ஹுதைபிய்யா உடன்படிக்கையின் நான்காவது கூறுதனைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தவர்கள் மக்கத்துக் குறைஷிகளாவர்.

உடன்படிக்கையின் மூன்றாவது கூறான, "ஒருபிரிவினருடன் சேர்ந்து கொள்ளும் எந்தக் கிளையினருக்கும் எதிராக மறுபிரிவினர் அத்து மீறக் கூடாது" என்பதை உடைத்தவர்களும் மக்கத்துக் குரைஷியரே.

ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு முன்னர்வரை குஜாஆ, பனூபக்ரு ஆகிய இரு குலத்தவரும் பன்னெடுங் காலமாகப் பகைமை மாறாமல் தங்களுக்குள் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். உடன்படிக்கைக்குப் பின்னர், குஜாஆவினர் நபியவர்களுடன் சேர்ந்து கொண்டனர். பனூபக்ரு குலத்தார் குரைஷிகள் பக்கம் சேர்ந்து கொண்டனர். இரு குலத்தவரிடையே சண்டைகள் தொடராமல் ஹுதைபிய்யா உடன்படிக்கைக் கட்டுப் படுத்தி வைத்திருந்தது.

ஹிஜ்ரீ 8, ஷஅபான் (எட்டாவது) மாதம் பனூபக்ரு குலத்தினரின் ஒரு கூட்டத்தினரை அழைத்துக் கொண்டு நவ்ஃபல் இப்னு முஆவியா அத்தியலி என்பவன் புறப்பட்டான். அன்று குஜாஆக் குலத்தவருள் சிலர் 'அல்வத்தீர்' என்ற கிணற்றுக்கருகில் ஒன்றுகூடியிருந்தனர். நவ்ஃபல், தான் அழைத்து வந்தவர்களைச் சேர்த்துக் கொண்டு குஜாஆவினரைத் தாக்கினான். குஜாஆவினரில் சிலர் கொல்லப்பட்டனர். எஞ்சியுள்ளவர்களுடன் கடுமையான சண்டை நடந்தது. பனூபக்ருக் கிளையினருக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியதோடு, அவர்களோடு இணைந்து கொண்டு குரைஷிகளுள் சிலரும் இரவின் இருளை பயன்படுத்திக் கொண்டு குஜாஆவினரைத் தாக்கினர்.

சண்டைசெய்து கொண்டே குஜாஆவினர் புனித (ஹரம்) எல்லைக்குள் நுழைந்து விட்டனர். அப்போது பனூபக்ருக் கிளையினர், "நவ்ஃபலே! நாம் நிறுத்திக் கொள்வோம். நாம் ஹரம் எல்லைக்குள் நுழைந்து விட்டோம். உமது இறைவனைப் பயந்துகொள்! உமது இறைவனை பயந்துகொள்!'' என்று கூறினர். ஆனால், சதிகாரன் நவ்ஃபல் அதைச் செவிமடுக்காமல், மிகக் கடுமையான வார்த்தையைக் கூறினான். "பக்ரு இனத்தாரே! இன்றைய தினம் எந்த இறைவனும் இல்லை. உங்களது பழியைத் தீர்த்துக் கொள்ளுங்கள். என்மீது சத்தியமாக! ஹரம் எல்லையில் திருடும் நீங்கள் அதில் ஏன் கொலை செய்யக் கூடாது?'' என்றான். கொல்லப் பட்டவர்களைத் தவிர்த்து, எஞ்சிய குஜாஆவினர் புதைல் இப்னு வரகா மற்றும் ராபிஃ ஆகிய தங்களின் நண்பர்கள் வீட்டில் சென்று அடைக்கலம் புகுந்து கொண்டனர்.

ஹுதைபிய்யா உடன்படிக்கையை மக்கத்துக் குரைஷிகள் மீறி, தங்களைக் கொன்றொழிக்க வந்ததை, குஜாஆக் குலத்தைச் சேர்ந்த அம்ரு இபுனு ஸாலிம் மதீனாவுக்குச் சென்று நபியவர்களிடம் கவிதையாகப் பாடினார்:
இறைவா! நான் முஹம்மதிடம் எங்கள் உடன்படிக்கையையும்
அவர் தந்தையின் பழமையான உடன்படிக்கையையும்
கேட்டு வந்திருக்கின்றேன். நீங்கள் பிள்ளைகள்;
நாங்கள் பெற்றோர்கள்; பின்னரே முஸ்லிமானோம்.
பின்வாங்கவில்லை. முழுமையாக உதவுங்கள்!
அல்லாஹ் உமக்கு வழிகாட்டுவான்.
அல்லாஹ்வின் அடியார்களை அழை;
உதவிக்கு அவர்களும் வருவார்கள்
அவர்களில் ஆயுதம் ஏந்திய அல்லாஹ்வின்
தூதரும் இருக்கின்றார். அவர் வானில் நீந்தும்
முழு நிலா போல் அழகுள்ளவர்.
அவருக்கு அநீதமிழைத்தால் முகம் மாறிவிடுவார்.
நுரை தள்ளும் கடல்போன்ற படையுடன் வருவார்
குறைஷிகள் உன் வாக்கு மாறினர்.
உன் வலுவான உடன்படிக்கையை முறித்து விட்டனர்.
'கதா'வில் எனக்குப் பதுங்குக் குழி வைத்துள்ளனர்.
ஒருவரையும் உதவிக்கு அழையேன்
என நினைத்துக் கொண்டனர். அவர்கள் அற்பர்கள்
சிறுபான்மையினர் வதீல் இரவு எங்களைத் தாக்கினர்.
நாங்கள் இறைவனைப் பணிந்து குனிந்து வணங்கிய போது
எங்களை அவர்கள் வெட்டினர்.


மக்கத்துக் குரைஷியரால் ஹுதைபிய்யா உடன்படிக்கை மீறப்பட்ட பின்னரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்கத்துக் குரைஷியருக்கு மூன்று கூறுகளைத் தேர்வுக்காக முன் வைத்தார்கள்:
1. வலியச் சென்று சண்டையைத் துவக்கிய பனூ பக்ரு குலத்தாரை உடன்படிக்கையிலிருந்து நீக்குவது
2. மக்கத்துக் குரைஷியரும் பனூ பக்ருவினரும் சேர்ந்து கொண்டு கொலை செய்த குஜாஆவினருக்காக நஷ்ட ஈடு வழங்குவது.
3. ஹுதைபிய்யா உடன்படிக்கையை முற்றாக முறித்துக் கொள்வது.

குரைஷியர் மூன்றாவதைத் தேர்ந்தனர் [சுட்டி-16].

அடுத்த மாதமே, அதாவது ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு, ரமளான் (9வது) மாதம் பத்தாம் நாளில் பத்தாயிரம் தோழர்களுடன் மதீனாவிலிருந்து நபியவர்கள் புறப்பட்டு மக்காவை அடைந்தபோது நபியவர்கள் பிறந்த மண், தன்னை முழுமையாக அவர்களிடம் ஒப்படைத்தது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர், தன்னை ஊரைவிட்டு விரட்டியடித்தவர்கள் அன்று வெருண்டோடி ஒளிந்து கொள்வதை நபியவர்கள் கண்டனர் [சுட்டி-17]. அதற்குப் பின்னரும் - மக்கா வெற்றி கொள்ளப் பட்டு, உடன்படிக்கை என்பது செல்லாமல்/இல்லாமல் ஆகிவிட்ட பிறகும் - அவ்வாறு நபியவர்கள் அறிவிக்கவில்லை என்பது வரலாற்று ஆசிரியர்களின் உச்ச கட்ட வியப்பாகும்.

மக்கா வெற்றி கொள்ளப் பட்டபோது, "குரைஷிக் கூட்டத்தினரே! நான் உங்களிடம் எவ்வாறு நடந்து கொள்வேன் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?" என்று நபியவர்கள் கேட்க, " நல்ல முறையில் நடந்து கொள்வீர்கள். நீங்கள் எங்களின் சிறந்த சகோதரரும் எங்களுள் சிறந்த சகோதரரின் மகனுமாவீர்கள்" என்று குரைஷியர் கூறினர். "இன்றைய தினம் உங்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு" என்று அறிவித்து, தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தி, மனிதாபிமானத்தை நிலைநிறுத்தினார் எம் தலைவர் [சுட்டி-18].
***
அரைகுறை-2இல் குறிப்பிடப் பட்டுள்ள கீழ்க்காணும் வசனங்கள் ஹிஜ்ரீ ஒன்பதாவது ஆண்டில் அருளப் பெற்றன:
அல்லாஹ்வும் அவனின் தூதரும் இணைவைப்பவர்கள்(உடன் செய்திருந்த உடன்படிக்கை)ஐ விட்டும் முற்றிலும் விலகி விட்டனர் என்பதை இந்த மாபெரும் ஹஜ் நாளில் மக்களுக்கு அல்லாஹ்வும் அவனின் தூதரும் அறிவிக்கின்றனர். (இணைவைப்பாளர்களே!) நீங்கள் திருந்திக் கொள்வீர்களாயின் அஃது உங்களுக்குச் சிறப்பைத் தரும். மறுதலிப்பீர்களாயின், அறிந்து கொள்வீர்! அல்லாஹ்வை நீங்கள் வெல்ல முடியாது. (நபியே!) வலிமிகு வேதனையைப் பற்றி இறைமறுப்பாளர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக!
நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்ட இணைவைப்போருள் உடன்படிக்கைக்கு ஊறு செய்யாமலும் உங்களுக்கு எதிரானவர்களுக்கு உதவி செய்யாமலும் இருப்பவர்களுடன் அவ்வுடன்படிக்கையை அதன் காலக் கெடுவரை முழுமைப் படுத்துங்கள். அல்லாஹ், தன்னை அஞ்சி வாழ்வோரிடம் அன்பு செலுத்துகிறான் [அல் குர்ஆன் 009:003-004].
And an announcement from Allah and His Messenger, to the people (assembled) on the day of the Great Pilgrimage,- that Allah and His Messenger dissolve (treaty) obligations with the Pagans. If then, ye repent, it were best for you; but if ye turn away, know ye that ye cannot frustrate Allah. And proclaim a grievous penalty to those who reject Faith. (But the treaties are) not dissolved with those Pagans with whom ye have entered into alliance and who have not subsequently failed you in aught, nor aided any one against you. So fulfil your engagements with them to the end of their term: for Allah loveth the righteous [சுட்டி-19].
மேற்காணும் முழுமையான இறைவசனத்தில் இருப்பது என்ன வகை தக்கியா புக்கியா என்று சொல்லத் தெரியாமல் இந்த இடத்தில் கட்டுரையாளர் ஊமை வேஷம் போடுகிறார்.

- பிற அரைகுறைகள் முழுமையாக்கப் படும்வரை தொடரும், இன்ஷா அல்லாஹ்
ஃஃஃ

சுட்டிகள்:
சுட்டி - 09  http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#7
சுட்டி - 10  http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#59
சுட்டி - 11  http://en.wikipedia.org/wiki/Muhammad_as_a_diplomat#Reformation_of_Medina_.28622.E2.80.94.29
சுட்டி - 12 http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#135
சுட்டி - 13 http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#140
சுட்டி - 14 http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#141
சுட்டி - 15 http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#146
சுட்டி - 16 http://en.wikipedia.org/wiki/Treaty_of_Hudaybiyyah#Aftermath
சுட்டி - 17 http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_second_phase.htm#70
சுட்டி - 18 http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_second_phase.htm#73
சுட்டி - 19 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/009.qmt#009.003

Thu 24

Click here to bookmark this link.Channel Image20:00 நரகத்தில் நுழைவதற்கு தங்கள் பாவத்தால் முதல் தகுதியுடையவர்கள். இஸ்லாம்குரல்.காம்
(எனினும்) மனிதன் கேட்கிறான்; “நான் இறந்து போனால், உயிருள்ளவனாக மேலும் எழுப்பப்படுவேனா? என்று. (19:66) யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? (19:67) ஆகவே, (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக நாம் அவர்களையும், (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம்; பின்னர் அவர்களை(யெல்லாம்) நரகத்தினைச் சூழ முழந்தாளிட்டவர்களாக ஆஜராக்குவோம். (19:68) பின்னர், நாம் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் அர்ரஹ்மானுக்கு மாறு செய்வதில் கடினமாக [...]
Click here to bookmark this link.Channel Image17:26 [பாடம்-88] ஏகத்துவம் (ஓரிறைக் கோட்பாடு) இறுதிப் பாடம். முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
அல்லாஹ் நேசிக்கும் அடியான்.

2220. ஆயிஷா(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரை படைப்பிரிவு ஒன்றுக்குத் தளபதியாக்கி அனுப்பினார்கள். அவர், தம் தொழுகையில் தம் தோழர்களில் (குர்ஆன் வசனங்களை) ஓதி (தொழுகை நடத்தி) வந்தார்; (ஒவ்வொரு முறையும்) ஓதி முடிக்கும்போது 'குல் ஹுவல்லாஹு அஹத்' எனும் (112 வது) அத்தியாயத்துடன் முடிப்பார். அப்படையினர் திரும்பி வந்தபோது நபி(ஸல்) அவர்களிடம் இதைப் பற்றி தெரிவித்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'எதற்காக இப்படிச் செய்கிறார் என்று அவரிடமே கேளுங்கள்'' என்று கூற, அவர்களும் அவரிடம் கேட்டனர். அவர், 'ஏனெனில், அந்த அத்தியாயம் பேரருளாளனின் (ஏகத்துவப்) பண்புகளை எடுத்துரைக்கின்றது. நான் அதை (அதிகமாக) ஓதுவதை விரும்புகிறேன்'' என்றார். (இதைக் கேள்விப்பட்ட) நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் அவரை நேசிக்கிறான் என்று அவருக்குத் தெரிவியுங்கள்'' என்று கூறினார்கள்.

''அல்லாஹ்தான் உணவளிப்பவன்; வலிமையுள்ளவன்; உறுதியானவன்'' எனும் (திருக்குர்ஆன் 51:58 வது) இறைவசனம்.

2221. மனவேதனைக்குள்ளாக்கும் செய்தி கேட்டும் (உடனே தண்டித்துவிடாமல்) மிகவும் பொறுமை காப்பவர் அல்லாஹ்வை விட வேறு யாருமில்லை. மனிதர்கள் (சிலர்) அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகிறார்கள். அதன் பிறகும் அவர்களுக்கு உடல் நலத்தையும் உணவு வளத்தையும் அவன் வழங்கிக் கொண்டிருக்கிறான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

நித்திய ஜீவன் அல்லாஹ் மட்டுமே.

2222. அப்பாஸ்(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தனை செய்து வந்தார்கள்: (இறைவா!) உன் கண்ணியத்தின் பெயரால் பாதுகாப்புக் கோருகிறேன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. ஜின் இனத்தாரும் மனித குலத்தாரும் இறந்து விடுவார்கள்; (ஆனால்,) நீ இறக்கமாட்டாய்.

அல்லாஹ்வின் கருணை அவன் கோபத்தை மிகைத்தது.

2223. அல்லாஹ் படைப்புகளை படைத்தபோது (தன்னுடைய) அரியாசனத்தின் மீது வைக்கப்பட்டிருந்த தன்னுடைய பதிவேட்டில், 'என் கருணை என் கோபத்தை வென்றுவிட்டது'' என்று (கருணையைத்) தனக்குத்தானே விதியாக்கிக் கொள்ளும் வகையில் எழுதினான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் இதைஅபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2224. உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்: என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழுமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அல்லாஹ் அடியானின் நன்மை தீமைகளைப் பதிவு செய்தல்.

2225. அல்லாஹ் (வானவர்களிடம்) கூறுகிறான்: என் அடியான் ஒரு தீமையைச் செய்ய நாடினால் அதை அவன் செய்யாதவரை அவனுக்கெதிராக அதைப் பதிவு செய்யாதீர்கள். அதை அவன் செய்தால் செய்த குற்றத்தை மட்டுமே பதிவு செய்யுங்கள். அதை அவன் எனக்காக விட்டுவிட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மை புரிய எண்ணிவிட்டாலே அதைச் செய்யாவிட்டாலும் கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள். அதை அவன் செய்துவிட்டாலோ அதை அவனுக்கு பத்து நன்மைகளிலிருந்து எழுநூறு நன்மைகளாக எழுதுங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2226. ஓர் அடியார் ஒருபாவம் செய்துவிட்டார். பிறகு 'இறைவா! நான் ஒரு பாவம் செய்து விட்டேன். எனவே, என்னை மன்னித்து விடுவாயாக' என்று பிரார்த்தித்தார். உடனே அவரின் இறைவன். 'என் அடியான் எனக்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (நன்று) நான் என் அடியானை மன்னித்துவிட்டேன்'' என்று சொன்னான். பிறகு அந்த அடியார் (சிறிது காலம்) அல்லாஹ் நாடியவரை அப்படியே இருந்தார். பிறகு மீண்டும் ஒரு பாவத்தைச் செய்தார். அப்போது அந்த மனிதர் (மீண்டும்) 'என் இறைவா! நான் மற்றொரு பாவம் செய்து விட்டேன். எனவே, என்னை மன்னித்து விடுவாயாக' என்று பிரார்த்தித்தார். உடனே இறைவன் (இம் முறையும்) 'என் அடியான் தனக்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (நல்லது.) நான் என் அடியானை மன்னித்துவிட்டேன்'' என்று சொன்னான். பிறகு அல்லாஹ் நாடியவரை அந்த மனிதர் அப்படியே (சிறிது காலம்) இருந்தார். பிறகும் (மற்றொரு) பாவம் செய்தார். (இப்போதும் முன்பு போன்றே) 'என் இறைவா! நான் இன்னொரு பாவம் செய்து விட்டேன். எனக்காக அதை மன்னித்து விடுவாயாக' என்று பிரார்த்தித்தார். அதற்கு அல்லாஹ் 'என் அடியான் தனக்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (அப்படியானால்) நான் என் அடியானை மூன்று முறையும் மன்னித்து விட்டேன். இனி அவன் நாடியதைச் செய்து கொள்ளட்டும்'' என்று சொன்னான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹூரைரா (ரலி) அறிவித்தார்.

மறுமைநாளில் இறைத்தூதர்களுடனும் மற்றவர்களுடனும் வலிமையும் மகத்துவமும் மிகுந்த இறைவன் உரையாடுவது.

2227. மறுமைநாள் வரும்போது என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரை செய்ய எனக்கு அனுமதியளிக்கப்படும். நான் 'என் இறைவா! எவருடைய உள்ளத்தில் கடுகளவு (இறைநம்பிக்கை) உள்ளதோ அவர்களை சொர்க்கத்தில் அனுமதிப்பாயாக!'' என்று கூறுவேன். அவர்கள் அவ்வாறே சொர்க்கம் செல்வார்கள். பிறகு நான் 'எவருடைய உள்ளத்தில் சிறிதளவேனும் (இறைநம்பிக்கை) உள்ளதோ அவர்களை சொர்க்கத்தில் அனுமதிப்பாயாக'' என்று மீண்டும் பிரார்த்திப்பேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அறிவித்த அனஸ்(ரலி) அவர்கள் 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ('சிறிதளவேனும்' என்று கூறியபோது) விரல் நுனியைக் காட்டியதை நான் இப்போதும் பார்ப்பது போன்றுள்ளது'' என்று கூறினார்கள்.

மறுமையில் இறைத்தூதருடன் அல்லாஹ்.

2228. மஅபத் இப்னு ஹிலால் அல்அனஸீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : பஸ்ராவாசிகளில் சிலர் (ஓரிடத்தில்) ஒன்று கூடினோம். பிறகு நாங்கள் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் சென்றோம். அனஸ்(ரலி) அவர்களிடம் பரிந்துரை (ஷஃபாஅத்) பற்றிய நபிமொழியைக் கேட்பதற்காக எங்களுடன் ஸாபித் அல் புனானீ(ரஹ்) அவர்களையும் அழைத்துச் சென்றறோம். அனஸ்(ரலி) அவர்கள் தங்களின் கோட்டையில் 'ளுஹா' தொழுது கொண்டிருக்கையில் நாங்கள் அவர்களிடம் போய்ச்சேர்ந்தோம். பிறகு நாங்கள் உள்ளே செல்ல அனுமதி கேட்க, எங்களை அவர்கள் (உள்ளே நுழைய) அனுமதித்தார்கள். அப்போது அவர்கள் தங்களின் விரிப்பில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் ஸாபித்(ரஹ்) அவர்களிடம் 'பரிந்துரை பற்றிய நபிமொழிக்கு முன்னால் வேறு எதைப் பற்றியும் கேட்காதீர்கள்'' என்று சொன்னோம். உடனே ஸாபித்(ரஹ்) அவர்கள், 'அபூ ஹம்ஸா! (அனஸ்!) இதோ இவர்கள் பஸ்ராவாசிகளான உங்கள் சகோதரர்கள் ஆவர். பரிந்துரை (ஷஃபாஅத்) பற்றிய நபிமொழியை உங்களிடம் கேட்பதற்காக இங்கு வந்திருக்கிறார்கள்'' என்றார்கள். அப்போது அனஸ்(ரலி) கூறினார்: முஹம்மத்(ஸல்) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள். (பீதி மிகுந்த) மறுமை நாள் நிகழும்போது மக்கள் சிலர் சிலரோடு அலைமோதுவார்கள். அவர்கள் (ஆதி மனிதர்) ஆதம்(அலை) அவர்களிடம் சென்று '(இந்தச் சோதனையான கட்டத்திலிருந்து எங்களைக் காக்க) எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள்'' என்று சொல்வார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், 'அந்தத் தகுதி எனக்கு இல்லை. நீங்கள் இப்ராஹீம்(அலை) அவர்களைப் போய் பாருங்கள். ஏனென்றால், அவர் அளவிலா அருளாள(னான இறைவ)னின் உற்ற நண்பராவார்'' என்று கூறுவார்கள். உடனே மக்கள் இப்ராஹீம்(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது இப்ராஹீம்(அலை) அவர்களும், 'அந்தத் தகுதி எனக்கு இல்லை. நீங்கள் மூஸாவிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் அல்லாஹ்வுடன் உரையாடியவராவார்'' என்று சொல்வார்கள். உடனே, மக்கள் மூஸா(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது மூஸா (அலை) அவர்களும் அதற்கு(த் தகுதியானவன்) நான் அல்லன்; நீங்கள் ஈசாவைப் போய் பாருங்கள். ஏனென்றால், அவர் அல்லாஹ்வின் ஆவியும் அவனுடைய வார்த்தையும் ஆவார்'' என்று சொல்வார்கள். உடனே, மக்கள் ஈசா(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது ஈசா(அலை) அவர்கள் அதற்கு(த் தகுதியானவன்) நான் அல்லன்; நீங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களைப் போய் பாருங்கள்'' என்று சொல்வார்கள். உடனே, மக்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், 'நான் அதற்குரியவன் தான்'' என்று சொல்லிவிட்டு, (மக்களுக்காகப் பரிந்துரைக்க) என் இறைவனிடம் அனுமதி கேட்பேன். அப்போது எனக்கு அனுமதியளிக்கப்படும். தற்போது எனக்குத் தோன்றாத புகழ்மாலைகளையெல்லாம் அப்போது நான் இறைவனைப் போற்றிப் புகழும் வகையில் எனக்கு அவன் என்னுடைய எண்ணத்தில் உதயமாக்குவான். அந்தப் புகழ்மாலைகளால் நான் அவனைப் (போற்றிப்) புகழ்வேன். அவனுக்காக (அவன் முன்) நான் சஜ்தாவில் (சிரவணக்கத்தில்) விழுவேன். அப்போது (இறைவனின் தரப்பிலிருந்து), 'முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; உங்களுக்காகச் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்'' என்று சொல்லப்படும். அப்போது நான், 'என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்' என்பேன். அப்போது, 'செல்லுங்கள்; எவருடைய உள்ளத்தில் வாற்கோதுமையின் எடையளவு இறைநம்பிக்கை இருந்தோ அவரை நரகத்திலிருந்து அப்புறப்படுத்துங்கள்'' என்று சொல்லப்படும். எனவே, நான் சென்று அவ்வாறே செய்வேன். பிறகு திரும்பி வந்து, அதே புகழ்மாலைகளைக் கூறி (மீண்டும்) அவனை நான் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் நான் விழுவேன். அப்போதும். 'முஹம்மதே! தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்'' என்று கூறப்படும். அப்போது நான், 'என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்; என்று சொல்வேன். அப்போது 'சொல்லுங்கள்; யாருடைய உள்ளத்தில் 'அணுவளவு' அல்லது 'கடுகளவு' இறை நம்பிக்கை இருந்தோ அவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்'' என்று சொல்லப்படும். நான் சென்று, அவ்வாறே செய்துவிட்டு, மீண்டும் திரும்பி வந்து அதே புகழ்மாலைகளைக் கூறி அவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போதும், 'முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்; சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்'' என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அப்போது நான், 'என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்'' என்பேன். அதற்கு அவன், 'செல்லுங்கள்: எவருடைய உள்ளத்தில் கடுகு மணியை விட மிக மிகச் சிறிய அளவில் இறைநம்பிக்கை இருக்கிறதோ அவரை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்'' என்று சொல்வான். அவ்வாறே நான் சென்று அ(த்தகைய)வரை நரகத்திலிருந்து வெளியேற்றுவேன் (என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அவர்கள் சொன்னார்கள்.)

2229. நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: பிறகு, நான்காம் முறையாக நான் இறைவனிடம் சென்று அதே (புகழ்மாலைகளைக்) கூறி இறைவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போது, 'முஹமமதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; செவியேற்கப்படும். கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்'' என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அப்போது நான், 'என் இறைவா! (உலகில்) லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று சொன்னவர்களின் விஷயத்தில் (பரிந்துரை செய்ய) எனக்கு அனுமதி வழங்குவாயாக'' என்று நான் கேட்பேன். அதற்கு இறைவன், என் கண்ணியத்தின் மீதும், மகத்துவத்தின் மீதும், பெருமையின் மீதும் ஆணையாக! 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று சொன்னவர்களை நான் நரகத்திலிருந்து நிச்சயமாக வெளியேற்றுவேன்'' என்று சொல்வான் என மஅபத் இப்னு ஹிலால் அல்அனஸீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நாவுக்கு எளிதான மீஸானில் கனக்கும் திக்ர்.

2230. '(இறைவனைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை. நாவுக்கு எளிதானவை. நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை ஆகும். (அவை:) 1. சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்). 2. சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

முக்தஸர் ஸஹீஹூல் புஹாரி நிறைவுற்றது.

Wed 23

Click here to bookmark this link.Channel Image07:16 தாஸூஆ,ஆஷூரா நோன்புகள் அல்பாக்கவி.காம்
தாஸூஆ,ஆஷூரா நோன்புகள் ஆஷுரா என்றால் என்ன ? தாஸூஆ என்றால் முஹர்ரம் மதாதத்தின் ஒன்பதாவது நாளுக்கும்.ஆஷுரா எனபது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளுக்கும்; கூறப்படும். இந்த நாளுக்கும் நோன்புக்கும் என்ன தொடர்பு ? இந்நாளில் மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் மக்களையும்  பிர்அவனிடமிருந்து காத்தருளியதால் அதற்கு நன்றி செலுத்துவதற்காக அவர்களும் அவர்களது மக்களும் நோன்பு நோற்று வந்தனர். இதனால் இந்நோன்புக்கு சிறப்பு ஏற்பட்டது. ஆஷூராவின் பயன் ஆஷூரா நாளின் நோன்பு பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. இதற்கு முந்திய ஆண்டின் பாவங்களுக்கு பரிகாரமாகும் [...]

Tue 22

Click here to bookmark this link.Channel Image16:03 [பாடம்-87] இறைவேதத்தையும் நபிவழியையும் கடைபிடித்தல். முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
2212. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : (ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர'' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! ஏற்க மறுத்தவர் யார்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறு செய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவராவார்'' என்று பதிலளித்தார்கள்.

2213. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார் : (ஒருநாள்) நபி(ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது அவர்களிடம் சில வானவர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் 'இவர் உறங்கிக் கொண்டிருக்கிறார்'' என்றார். அதற்கு மற்றொருவர் 'கண்தான் உறங்குகிறது. உள்ளம் விழித்திருக்கிறது'' என்று கூறினார். பின்னர் அவர்கள் 'உங்களுடைய இந்த நண்பருக்கு ஓர் உவமை உண்டு; இவருக்கு அந்த உவமையை எடுத்துரையுங்கள்'' என்று பேசிக்கொண்டார்கள். அப்போது அவர்களில் ஒருவர் 'இவர் உறங்குகிறாரே!'' என்றார். மற்றொருவர் 'கண் உறங்கினாலும் உள்ளம் விழித்திருக்கிறது'' என்றார். பின்னர் அவர்கள் 'இவரின் நிலை ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் ஒரு வீட்டைக் கட்டினார். அவ்வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். (மக்களை) அழைப்பதற்காக ஓர் ஆளை அனுப்பினார். அழைப்பாளியின் அழைப்பை ஏற்று வந்தவர் வீட்டினுள் சென்றார்; விருந்துண்டார். அழைப்பை ஏற்காதவர் வீட்டிற்குள் நுழையவுமில்லை. விருந்துண்ணவுமில்லை'' என்று கூறினார்கள். பின்னர் அவர்கள், 'இந்த உவமையை அவருக்கு விளக்கிக் கூறுங்கள்; அவர் புரிந்து கொள்ளட்டும்'' என்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் 'இவர் உறங்குகிறாரே!'' என்று சொல்ல, மற்றொருவர் 'கண் தான் தூங்குகிறது. உள்ளம் விழித்திருக்கிறது'' என்றார். அதைத் தொடர்ந்து 'அந்த வீடுதான் சொர்க்கம்; அழைப்பாளி முஹம்மத்(ஸல்) அவர்கள்; முஹம்மத்(ஸல்) அவர்களுக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து விட்டார்; முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்துவிட்டார். முஹம்மத்(ஸல்) அவர்கள் மக்களை (நல்லவர் - கெட்டவர் என)ப் பகுத்துக் காட்டி விட்டார்கள்'' என்று விளக்கமளித்தார்கள். மற்றோர் அறிவிப்பாளர் தொடரில் ஜாபிர்(ரலி) அவர்கள் '(ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வெளியேறி வந்து (இந்த நிகழ்ச்சியைத் தெரிவித்தார்கள்)'' என்று கூறினார்கள்.

அளவுக்கதிகமான கேள்விகள் கேட்டல்.

2214. மக்கள் (பல புதிரான விஷயங்கள் குறித்து) ஒருவரையொருவர் கேள்வி கேட்டுக் கொண்டேயிருப்பார்கள். இறுதியில், 'அனைத்துப் பொருட்களையும் படைத்தவன் அல்லாஹ்; இது (சரிதான்). அல்லாஹ்வைப் படைத்தவன் யார்?' என்று கூடக் கேட்பார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

கல்விமான்கள் குறைந்து அறிவீனர்கள் எஞ்சியிருத்தல்.

2215. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி அல்ஆஸ்(ரலி) அவர்கள் (நாங்கள் இருந்த இடம் வழியாக) எங்களைக் கடந்து ஹஜ் செய்யச் சென்றார்கள். அப்போது அவர்கள் சொல்லக் கேட்டேன்: நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் உங்களுக்குக் கல்வியை வழங்கிய பின் அதை ஒரேயடியாகப் பறித்துக் கொள்ளமாட்டான். மாறாக, கல்விமான்களை அவர்களின் கல்வியுடன் கைப்பற்றிக் கொள்வதன் மூலம் அவர்களிடமிருந்து அதை (சன்னஞ் சன்னமாக)ப் பறித்துக்கொள்வான். பின்னர், அறிவீனர்களே எஞ்சியிருப்பார்கள். அவர்களிடம் மார்க்கத் தீர்ப்புக் கோரப்படும். அவர்களும் தம் சொந்தக் கருத்துப்படி தீர்ப்பளித்து (மக்களை) வழிகெடுப்பார்கள்; தாமும் வழிகெட்டுப் போவார்கள்'' என்று கூறக் கேட்டேன். பிறகு நான் இந்த ஹதீஸை நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அவர்களிடம் அறிவித்தேன். அதன் பிறகு (ஓர் ஆண்டிலும்) அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்கள் ஹஜ் செய்தார்கள். (அப்போது) ஆயிஷா(ரலி) அவர்கள் என்னிடம், 'என் சகோதரியின் புதல்வரே! அப்துல்லாஹ் இப்னு அம்ர் அவர்களிடம் சென்று, (முன்பு) அவரிடமிருந்து (கேட்டு) நீ அறிவித்த ஹதீஸை எனக்காக அவரிடம் மீண்டும் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்'' என்றார்கள். அவ்வாறே நான் அவர்களிடம் சென்று கேட்டேன். அவர்கள் முன்பு எனக்கு அறிவித்ததைப் போன்றே இப்போதும் எனக்கு அறிவித்தார்கள். நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்தேன். அவர்கள் வியப்படைந்து 'அல்லாஹ்வின் மீதாணையாக! அப்துல்லாஹ் இப்னு அம்ர் அவர்கள் நன்றாகவே நினைவில் வைத்திருக்கிறார்'' என்றார்கள்.

''உங்களுக்கு முன்னிருந்தவர்களின் (தவறான) வழிமுறைகளை (இறுதிக் காலத்தில்) நீங்கள் நிச்சயம் பின்பற்றுவீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியது.

2216. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தார் தமக்கு முந்தைய சமுதாயங்களின் நடைமுறைகளை சாண் சாணாக, முழம் முழமாக பின்பற்றி நடக்காதவரை மறுமைநாள் வராது'' என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர் அவர்களே! பாரசீகர்கள் மற்றும் ரோமர்கள் போன்றவர்களையா (இந்தச் சமுதாயத்தார் பின்பற்றுவர்)?' என வினவப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவர்களைத் தவிர (இன்று) மக்களில் வேறு யார் உள்ளனர்?' என்று (திருப்பிக்) கேட்டார்கள்.

அறிஞர்களின் கருத்தொற்றுமை அவசியம்.

2217. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் : நான் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களுக்குக் குர்ஆனை ஓதிக் கொடுத்து வந்தேன். உமர்(ரலி) அவர்கள் செய்த இறுதி ஹஜ்ஜின்போது மினாவில் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் (என்னிடம்), 'நீங்கள் இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் (உமர்(ரலி) அவர்களுடன் இருந்திருக்க வேண்டும். (இன்று) அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! இன்னான், 'இறைநம்பிக்கையாளர்களின் (இன்றைய) தலைவர் இறந்துவிட்டிருந்தால் இன்னாருக்கு நான் விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்திருப்பேன்' என்று கூறினான். இதைக் கேட்ட உமர்(ரலி) அவர்கள், 'இன்று மாலையே நான் (மக்கள் முன்) நின்று, தங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட நினைக்கும் இவர்களை எச்சரிக்கை செய்யவுள்ளேன்'' என்றார்கள். நான், 'அவ்வாறு செய்யாதீர்கள். ஏனெனில், ஹஜ் பருவத்தில் (நல்லவர்களுடன்) விவரமற்ற மக்களும் குழுமுகின்றனர். அவர்கள் தாம் உங்கள் அவையில் மிகுந்திருப்பர். (நீங்கள் எழுந்து நின்று ஏதோ ஒன்றைச் சொல்ல) அதற்கு உரிய பொருள் தராமல், ஒவ்வொருவரும் (தம் மனம்போன போக்கில்) அதைத் தவறாகப் புரிந்து கொள்வார்களோ என நான் அஞ்சுகிறேன். எனவே, நீங்கள் ஹிஜ்ரத் மற்றும் நபிவழி பூமியான மதீனா சென்று சேரும்வரைக் காத்திருங்கள். அங்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களான முஹாஜிர்களையும் அன்சாரிகளையும் தனியாகச் சந்தி(த்து அவர்களிடம் நீங்கள் தெரிவிக்க வேண்டியதை அழுத்தமாகத் தெரிவி)யுங்கள். அவர்கள் உங்கள் சொல்லை நினைவில் நிறுத்திக் கொண்டு, அதற்குரிய முறையில் அதைப் புரிந்து கொள்வார்கள்'' என்று சொன்னேன். அதற்கு உமர்(ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் மதீனா சென்ற பின் முதலாவது கூட்டத்திலேயே இதைப் பற்றிப் பேசப் போகிறேன்'' என்றார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அவ்வாறே நாங்கள் மதீனா சென்றடைந்தோம். 'நிச்சயமாக அல்லாஹ் முஹம்மத்(ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பினான். மேலும், அவர்களுக்கு (குர்ஆன் எனும்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளிய (வேதத்)தில் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) சம்பந்தமான வசனம் இருந்தது'' என உமர்(ரலி) அவர்கள் பேசத் தொடங்கினார்கள்.

நீதிபதி ஆய்வு செய்து சட்ட முடிவெடுக்கும்போது அது சரியாக அமைந்தாலும் தவறாகிப் போனாலும் (அவர் செய்த ஆய்வுக்காக) அவருக்குப் பிரதிபலன் கிடைக்கும்.

2218. நீதிபதி தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. அவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு ஒரு நன்மை உண்டு என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ர் இப்னு அல்ஆஸ்(ரலி) அறிவித்தார். இதே ஹதீஸ் அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் வாயிலாகவும், அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அவர்கள் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நபி(ஸல்) அவர்கள் (ஒன்றை) எதிர்க்காமல் இருந்தது (அது அங்கீகரிக்கப்பட்டது தான் என்பதற்கு) ஆதாரமாகும்; நபியவர்கள் அல்லாத மற்றவர்களுக்கு இது பொருந்தாது.

2219. முஹம்மத் இப்னு அல்முன்கதிர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்கள் 'இப்னுஸ் ஸய்யாத்தான் தஜ்ஜால்' என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வதை பார்த்தேன். அப்போது நான், (ஜாபிர்(ரலி) அவர்களிடம்), 'அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறீர்களா?' என்று கேட்டேன். அவர்கள், 'நபி(ஸல்) அவர்களிடம் உமர்(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து இதைக் கூறியதை கேட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் அதை மறுக்கவில்லை'' என்று பதிலளித்தார்கள்.
Click here to bookmark this link.Channel Image07:57 1431 HIJRA CALENDAR (THE ACCURATE LUNAR CALENDAR) LUNAR CALENDAR / சந்திர நாட்காட்டி

THE ACCURATE LUNAR CALENDAR FOR THE HIJRA YEAR 1431.

Sun 20

Click here to bookmark this link.Channel Image16:25 [பாடம்-86] எதிர்பார்ப்பு. முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
விரும்பத்தகாத எதிர்பார்ப்பு.

2210. அனஸ்(ரலி) அறிவித்தார் : ''இறப்பை (எதிர்பார்த்து) ஆசைப்படாதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றிருக்காவிட்டால் (இறப்பின் மீது) ஆசை கொண்டிருப்பேன்.

2211. உங்களில் எவரும் மரணத்தை விரும்ப வேண்டாம். ஒன்று அவர் நல்லவராக இருப்பார்; (அவர் உயிர் வாழ்வதன் மூலம் நன்மையை) அவர் அதிகமாக்கிக் கொள்ளலாம். அல்லது அவர் தீயவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதால்) மனம் திருந்தக்கூடும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Click here to bookmark this link.Channel Image03:27 புதுவகை நோய் : இமி - 1 வஹ்ஹாபி
கடந்த 29.11.2009 & 04.12.2009 திண்ணை இதழ்களில், "இஸ்லாமிய மரபில் எல்லாமே உலக மரபுகளுக்கும் உலக நல்லொழுக்கத்திற்கே நேர் எதிர்மறையாக உள்ளது" எனும் தவறான கருவோடு, 'புனித மோசடி' [சுட்டி-01 மற்றும் சுட்டி-02] வெளியாகி இருந்ததைப் படிக்க நேர்ந்தது.

அக்கட்டுரைக்கான எதிர்வினை விளக்கங்களை வாசகர்களுக்குத் தருவதற்கு முன்னர், திசைதிருப்பும் அரைகுறைச் சான்றுகளோடு காழ்ப்பைக் கக்கும் தரமற்ற எழுத்துகளைப் பதிக்கும் திண்ணையின் அண்மைப் போக்கைப் பற்றிய எனது வருத்தங்களையும் இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

அக்கட்டுரையில் காணப்படும் கருவுக்குத் தொடர்பில்லாத
01. உலகநாதர்,
02. வள்ளுவர்,
03. ஜெர்மனியின் கோயபல்ஸ்,
04. நாஸி ஹிட்லர்,
05. கம்யூனிஸ்ட்கள், இடதுசாரிகள், பொதுவுடைக்காரர்கள்
06. காந்திஜி,
07. முன்னேற்றம் அடைந்த/அடையாத கழகங்கள்,
08. வெங்காயம்,
09. நேரு, இந்திரா,
10. திராவிட நாடு,
11. முரட்டு தாதா,
12. தேபால், உபகணஸ்தான், கூபா, உதபந்தபுரா, லவகுசபுரா

ஆகியோர்/ஆகியன பற்றியெல்லாம் கட்டுரையாளருக்குத் தெரியும் எனக் காட்டிக் கொள்ள மட்டுமே எழுதப் பட்டிருக்கிறது; இங்குப் பேசுபொருளுக்கு மீக்குறியவை அப்பாற் பட்டவை என நான் கருதுவதால், இஸ்லாம் குறித்து அவர் எடுத்து வைத்த,
"குரான் Qur'an, ஹடித்-சுன்னா ( Hadith & Sunna -- Traditions) அல்லது சிரா (Sira) (biographies) அடிப்படையில் பொய் பேசலாம்; சத்தியம் செய்யலாம்; பிற மதத்தவரிடம் எந்தக் காலத்திலும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசலாம்; புனித(!) மோசடி (தகிய்யா) செய்யலாம்"
எனும் தலையாய குற்றச் சாட்டுகளுக்கு முன்வைக்கப் பட்ட அரைகுறைச் சான்றுகளை முழுதுமாக வாசகர்கள்முன் வைக்க விரும்புகிறேன். 

அரைகுறை-1: (குரான் சுரா: 8:39: எதிர்ப்பு நீங்கி, உலகில் எல்லாமே அல்லாவுக்கென்று ஆகும் வரை போர் புரியுங்கள்).

இஸ்லாத்தின் உயிர்நாடியான "கடவுள் இல்லை - அல்லாஹ்வைத் தவிர" என்பதில் பாதியை மட்டும் சான்று என யாராவது முன்வைத்தால், இஸ்லாம் என்பது நாத்திகத்தைக் கொள்கையாகக் கொண்ட ஒரு மதம் என்றுதான் எவரும் விளங்குவர். அதுபோலவே குர்ஆன் கூறுவதைப் பாதியாக்கி இருக்கிறார் கட்டுரையாளர். "பிற மதத்தவரைக் கொன்று குவிக்கும்படி இஸ்லாம் சொல்கிறது" என்ற புனைவை நிறுவச் செய்யும் திருகுதாளமாகும் அவரது முயற்சி.  

பிற மதத்தவர் குறித்துக் குர்ஆன் கூறுவதென்ன?  

"(நபியே) கூறுவீராக! : இறை மறுப்பாளர்களே!
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்க மாட்டேன்;
நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவரல்லர்.
மேலும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபனல்லன்;
அன்றியும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவரல்லர்.
உங்களுக்கு உங்கள் மதம்; எனக்கு என் மார்க்கம்" [குர்ஆன் 109:001-006].
"Say : O ye that reject Faith!  
I worship not that which ye worship,  
Nor will ye worship that which I worship.  
And I will not worship that which ye have been wont to worship,  
Nor will ye worship that which I worship.  
To you be your Way, and to me mine. [சுட்டி-03]. 
"மேலும் உம் இறைவன் நாடியிருப்பின் இப்பூவுலகின் மாந்தர் அனைவரும் இறைநம்பிக்கை கொண்டிருப்பர். எனவே, எல்லாரும் இறைநம்பிக்கையாளராக ஆகிவிடவேண்டும் என அவர்களை நீர் வலுக்கட்டாயப் படுத்த முடியுமா என்ன?" [குர்ஆன் 010:099]. "If it had been thy Lord's will, they would all have believed,- all who are on earth! wilt thou then compel mankind, against their will, to believe!" [சுட்டி-04] .
 

"(நபியே!) இணைவைப்பாளர்களுள் எவர் உம்மிடம் புகலிடம் தேடி வந்தாலும் அவருக்குப் புகலிடம் அளிக்கவும். அதனால், அல்லாஹ்வுடைய சான்றுமிகு வசனங்களை அவர் செவியேற்கலாம்.  பின்னர், அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் இடத்துக்கு அவரை அனுப்பி விடுவீராக! ஏனெனில் அம்மக்கள் அறியாச் சமூகத்தவராவர்" [குர்ஆன் 009:006]. "If one amongst the Pagans ask thee for asylum, grant it to him, so that he may hear the word of Allah; and then escort him to where he can be secure. That is because they are men without knowledge. [சுட்டி-05].
 

"(இஸ்லாம்) மார்க்கத்தில் (இணைவதில்) வலுக்கட்டாயம் என்பது இல்லை ..." [குர்ஆன் 002:256] "Let there be no compulsion in religion ..." [சுட்டி-06]. 
இத்துணைத் தெளிவான நல்லிணக்க இறைவசனங்களைக் கூறும் குர்ஆன், "பிற மதத்தவர் எவராயினும் கொல்லுங்கள்" எனக் கூறுவதாகப் பித்தலாட்டம் செய்யலாமா

அரைகுறை-1இல் காணப் பட்ட முழு வசனம்:

"(இறைநம்பிக்கையாளர்களே!) தொடர் தாக்குதல்களும் அடக்குமுறையும் ஒழிக்கப் பட்டு, நீதி நிலைநாட்டப் படும்வரை, இறைநம்பிக்கை முற்றிலும் அல்லாஹ்வுக்கென்று ஆகும்வரை அவர்களுடன் போர் புரியுங்கள். அவர்கள் விலகிக் கொண்டால் (விட்டு விடுங்கள். ஏனெனில்,) அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான். அவர்கள் (தாக்குதலை நிறுத்த) மறுதலித்தால், (எதிர்த் தாக்குதல் புரியுங்கள்). அல்லாஹ் உங்களின் திண்ணமான பாதுகாவலன் என்பதை அறிந்து கொள்ளுங்கள் ..." [குர்ஆன் 008:039-040].
"And fight them on until there is no more tumult or oppression, and there prevail justice and faith in Allah altogether and everywhere; but if they cease, verily Allah doth see all that they do. If they refuse, be sure that Allah is your Protector ..." [சுட்டி-07]. 
மேற்காணும் வசனங்களில் அப்பாவிகள் எவரையும் கொல்லும்படி கட்டளை ஏதுமில்லை. முஸ்லிம்களை அழித்தொழிக்கப் போர் தொடுக்கும் பகைவரை எதிர்த்துப் போர் செய்வது பற்றிப் பேசப் படுகிறது. இந்த வசனங்கள் பேசும் எட்டாவது அத்தியாயத்தின் பெயரே "போர் வெற்றிப் பொருட்கள்"தான். அதை, அடுத்து வரும் வசனம் உறுதி செய்கிறது: 

 "(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு(ப் போரில்) கிடைத்த வெற்றிப் பொருட்களில் ஐந்தில் ஒன்று (20%) அல்லாஹ்(வின் அறவழியில் செலவழிப்பதற்)கும் அவனின் தூதருக்கும் உறவினர்க்கும் அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும் ..." [குர்ஆன் 008:041]. "And know that out of all the booty that ye may acquire (in war), a fifth share is assigned to Allah,- and to the Messenger, and to near relatives, orphans, the needy, and the wayfarer ..." [சுட்டி-08]. 
*** 
ஹிஸ்டீரியா நோயாளிகள், பேயாடுவதாகச் சொல்லிக் கொண்டு, தங்களுக்கு உலக அரசியல் முதல் உள்ளூர் விவகாரம்வரை எல்லாமே அத்துப்படி என்று பிறரை நம்ப வைப்பதற்காக ஏதேதோ உளறிக் கொட்டுவார்கள். முக்காலமும் உணர்ந்தவர்களாகத் தங்களை எண்ணிக் கொண்டு "இவனுக்கு அது நடக்கும்; அவனுக்கு இது நடக்கும்" என்று குறி சொல்வார்கள். பாமரப் பேயாடிகள்கூட பல பாஷைகள் பேசுவர். எனக்குத் தெரிந்த ஒரு ஹிஸ்டீரியா நோயாளிப் பெண் அதுபோல் ஒருமுறை பேய்(!) வந்து உளற, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தில், மூன்று மாத விஸிட்டிங் விசாவில் மலேஷியாவுக்குப் போய்விட்டுத் திரும்பி வந்திருந்த ஒருவர் சொன்னார் : "பேய் மலாய் பாஷை சூப்பராப் பேசுது!

திண்ணையில் 'புனிதமோசடி'யைப் படித்தபோது எனக்கு அந்தப் பெண் பேயாடிதான் நினைவுக்கு வந்தார்.

பார்ப்பதற்குக் கலர் நன்றாக இருப்பதாக நினத்துக் கொண்டு, காவி கலந்த உணவைக் கண்ட இடத்தில் தின்று விட்டு, அதனால் ஏறிய பித்தம், வாந்தி, மயக்கம், அத்தோடு ஹிஸ்டீரியாப் பேயாட்டம் போன்ற கலவைகள் அனைத்துக்கும் சேர்த்து ஆங்கிலத்தில் ஒரு பெயர் கூறுகின்றனர்: "இஸ்லாமோஃபோபியா". தமிழில் "இஸ்லாமிய மிரட்சி".  தற்போது தமிழகத்தில் பரவுகின்ற புதுவகை நோய்.

சுருக்கமாக இமி்.

அதைத்தான் தலைப்பில் படித்தீர்கள். 

- தொடரும், இன்ஷா அல்லாஹ்.

ஃஃஃ
சுட்டிகள்:
சுட்டி - 01 http://www.thinnai.com/?module=displaystory&story_id=20911296&format=html


சுட்டி - 02 http://www.thinnai.com/?module=displaystory&story_id=20912045&format=html


சுட்டி - 03 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/109.qmt.html


சுட்டி - 04 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/010.qmt.html#010.099


சுட்டி - 05 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/009.qmt.html#009.006


சுட்டி - 06 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/002.qmt.html#002.256


சுட்டி - 07 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/008.qmt.html#008.039


சுட்டி - 08 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/008.qmt.html#008.041

Thu 17

Click here to bookmark this link.Channel Image16:37 [பாடம்-85] தீர்ப்புகள். முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
இறைவனுக்கு மாறு செய்வதாக அமையாதவரை ஆட்சித் தலைவரின் சொல்லைக் கேட்டுக் கீழ்ப்படிவது (அவசியமாகும்).

2199. உலர்ந்த திராட்சை போன்ற (சுருங்கிய) தலையுடைய அபிசீனிய (கறுப்பு நிற) அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் (அவரின் சொல்லைக்) கேளுங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.

ஆட்சியதிகாரத்தை அடைய ஆசைப்படுவது வெறுக்கப்பட்டதாகும்.

2200. நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை (தாம் சுகங்)களிலேயே பதவி(ப் பால்) தான் இன்பமானது. பாலை மறக்க வைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

குடிமக்களின் பொறுப்பு அளிக்கப்பெற்ற ஒருவர், அவர்களுக்கு நலம் நாடவில்லை என்றால்...?

2201. ஹஸன் அல்பஸ்ரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : (நபித் தோழர்) மஅகில் இப்னு யஸார்(ரலி) அவர்கள் இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அன்னாரை(ச் சந்தித்து) நலம் விசாரிப்பதற்காக (அன்றைய பஸ்ரா நகர ஆட்சியர்) உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் சென்றார். அவரிடம் மஅகில்(ரலி) அவர்கள் 'நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன். நபி(ஸல்) அவர்கள், 'ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களின் நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக் கூட அவன் பெறமாட்டான்' என்று சொல்ல கேட்டேன்'' எனக் கூறினார்கள்.

2202. ஹஸன் அல்பஸ்ரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : நாங்கள் மஅகில் இப்னு யஸார்(ரலி) அவர்களை நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது (பஸ்ராவின் ஆட்சியர்) உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் உள்ளே வந்தார். அவரிடம் மஅகில்(ரலி) அவர்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன் என்று சொல்லிவிட்டு(ப் பின்வருமாறு) கூறினார்கள்: 'முஸ்லிம் குடிமக்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் ஒருவர் அவர்களுக்கு மோசடி செய்த நிலையில் இறந்துவிடுவாரனால், சொர்க்கத்தை அவருக்கு அல்லாஹ் தடை செய்துவிடுகிறான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(மக்களை) சிரமப்படுத்துகிறவரை அல்லாஹ் சிரமத்திற்குள்ளாக்குவான்.

2203. தரீஃப் அபீ தமீமா இப்னு முஜாலித் அல்ஹுஜைமீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்: ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ் அல்பஜலீ(ரலி) அவர்கள், ஸஃப்வான் இப்னு முஹ்ரிஸ்(ரஹ்) அவர்களுக்கும் அவர்களின் தோழர்களுக்கும் உபதேசம் செய்துகொண்டிருந்த இடத்தில் நான் இருந்தேன். அப்போது ஸஃப்வானும் அவர்களின் தோழர்களும், 'நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து (ஹதீஸ்) எவையேனும் செவியுற்றீர்களா?' என்று கேட்க ஜுன்தப்(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூற கேட்டேன் என்றார்கள்: விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறவரை (அவரின் நோக்கத்தை) அல்லாஹ் மறுமைநாளில் விளம்பரப்படுத்துவான். (மக்களைச்) சிரமப்படுத்துகிறவரை அல்லாஹ் மறுமைநாளில் சிரமத்திற்குள்ளாக்குவான். அப்போது நண்பர்கள் 'எங்களுக்கு உபதேசம் செய்யுங்கள்'' என்று கேட்க, ஜுன்தப்(ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: (இறந்த பிறகு) மனிதனின் உறுப்புகளிலேயே முதல்முதலாக (அழுகி) துர்நாற்றமெடுப்பது அவனுடைய வயிறுதான். எனவே, (அனுமதிக்கப்பட்ட) நல்ல உணவை மட்டுமே உண்ண சக்தி படைத்தவர் அவ்வாறே செய்யட்டும். (அநியாயமாகத்) தம்மால் சிந்தப்பட்ட கையளவு இரத்தம், தாம் சொர்க்கம் செல்வதிலிருந்து தடுக்காமல் இருக்கும்படி செய்ய முடிந்தவர் அவ்வாறே செய்யட்டும்.

நீதிபதி கோபமாக இருக்கும்போது தீர்ப்போ மார்க்க விளக்கமோ அளிக்கலாமா?

2204. அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ரா(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : (என் தந்தை) அபூ பக்ரா(ரலி) அவர்கள் தம் புதல்(வரும் என் சகோதரருமான உபைதுல்லாஹ் என்ப)வருக்குக் கடிதம் எழுதினார்கள். -அவர் (ஈரான் - ஆப்கன் எல்லையிலிருந்த) சிஜிஸ்தான் பகுதியில் (நீதிபதியாக) இருந்தார். 'நீ கோபமாக இருக்கும்போது இருவரிடையே தீர்ப்பளிக்க வேண்டாம். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், நீதிபதி எவரும் கோபமாக இருக்கும்போது இருவருக்கிடையே தீர்ப்பளிக்க வேண்டாம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்'' (என்று அக்கடிதத்தில் எழுதினார்கள்).

ஆட்சித் தலைவர் ஆளுநர்களுக்கும், நீதிபதி சட்ட ஒழுங்கு அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதுவது.

2205. ஸஹ்ல் இப்னு அபீ ஹஸ்மா(ரலி) அவர்களும் அவர்களின் சமூகத்தைச் சேர்ந்த சில பிரமுகர்களும் அறிவித்தார்கள் : அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல்(ரலி) அவர்களும் முஹய்யிஸா இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களும் தங்களுக்கு ஏற்பட்டிருந்த கடுமையான வறுமையின் காரணத்தால் (பேரீச்சங் கனிகள் பறிப்பதற்காக) கைபரை நோக்கிப் புறப்பட்டனர். (வழியில் இருவரும் பிரிந்து விட்டனர்.) அப்போது 'அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல்(ரலி) அவர்கள் கொல்லப்பட்டு ஒரு 'குழியில் அல்லது 'நீர்நிலையில்' போடப்பட்டு விட்டார்'' என்ற செய்தி முஹய்யிஸா(ரலி) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. எனவே, முஹய்யிஸா(ரலி) அவர்கள் (அப்பகுதி மக்களான) யூதர்களிடம் சென்று, 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள்தாம் அவரைக் கொன்று விட்டீர்கள்'' என்று கூறினார்கள். அதற்கு யூதர்கள், 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவரை நாங்கள் கொல்லவில்லை'' என்றார்கள். பிறகு முஹய்யிஸா(ரலி) அவர்கள் தம் சமூகத்தாரிடம் சென்று (அதைப்பற்றி) அவர்களிடம் சொன்னார்கள். பின்னர் அவரும் அவரின் சகோதரர் ஹுவய்யிஸா(ரலி) அவர்களும் - இவர் வயதில் மூத்தவர் (கொல்லப்பட்டவரின் சகோதரரான) அப்துர் ரஹ்மான் இப்னு ஸஹ்ல்(ரலி) அவர்களும் (இறைத்தூதர்(ஸல்) அவர்களை) நோக்கி வந்தனர். உடனே கைபரில் (இறந்தவருடன்) இருந்த முஹய்யிஸா(ரலி) அவர்கள் (முந்திக்கொண்டு அல்லாஹ்வின் தூதரிடம்) பேசப்போனார். அப்போது நபி(ஸல்) அவர்கள், முஹய்யிஸா(ரலி) அவர்களிடம், 'வயதில் மூத்தவரை (முதலில்) பேசவிடு; என்றார்கள். எனவே, ஹுவய்யிஸா(ரலி) அவர்கள் பேசினார்கள். பிறகு (இளையவரான) முஹய்யிஸா(ரலி) அவர்கள் பேசினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஒன்று உங்களுடைய நண்பருக்கான இழப்பீட்டுத் தொகையை அவர்கள் (யூதர்கள்) வழங்கட்டும்; அல்லது (எம்முடன் போரிட) அவர்கள் போர் பிரகடனம் செய்யட்டும்'' என்று கூறினார்கள். பிறகு இ(ந்தக் கருத்)தைக் குறிப்பிட்டு யூதர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கடிதம் எழுதினார்கள். 'நாங்கள் அவரைக் கொல்லவில்லை'' என்று (யூதர்கள் தரப்பிலிருந்து பதில் கடிதம்) எழுதப்பட்டது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹுவய்யிஸா(ரலி), முஹய்யிஸா(ரலி) மற்றும் அப்துர் ரஹ்மான் இப்னு சஹ்ல்(ரலி) ஆகியோரிடம், '(யூதர்கள் தாம் கொலை செய்தார்கள் என்று) நீங்கள் சத்தியம் செய்துவிட்டு, உங்கள் நண்பருக்கான உயிரீட்டுத் தொகையைப் பெறுகிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் 'இல்லை (நாங்கள் சத்தியம் செய்யமாட்டோம்)'' என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், 'அவ்வாறாயின் (தாங்கள் அவரைக் கொல்லவில்லை என்று) யூதர்கள் உங்களிடம் சத்தியம் செய்யட்டுமா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் (மூவரும்), 'யூதர்கள் முஸ்லிம்கள் இல்லையே! (பொய்ச் சத்தியம் செய்யவும் அவர்கள் தயங்க மாட்டார்களே)'' என்று கூறினர். எனவே, கொல்லப்பட்டவருக்கான இழப்பீடாக நூறு ஒட்டகங்களை நபி(ஸல்) அவர்களே தம் தரப்பிலிருந்து வழங்கினார்கள். இறுதியில் (அவர்கள் கூடியிருந்த) அந்த வீட்டுக்குள் அந்த ஒட்டகங்கள் கொண்டுவரப்பட்டன. அப்போது அதில் ஓர் ஒட்டகம் என்னை மிதித்துவிட்டது.

ஆட்சித் தலைவர் மக்களிடம் பெறும் விசுவாசப் பிரமாண (வாசக)ம் எவ்வாறு அமையவேண்டும்?

2206. உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அவர்கள் (தொடர்ந்து) அறிவித்தார் : நாங்கள் ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுடன் சண்டையிட மாட்டோம் என்றும், நாங்கள் எங்கிருந்தாலும் அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்பவர்களின் பழிப்புரைக்கு அஞ்சாமல் 'உண்மையே கடைப்பிடிப்போம்' அல்லது 'உண்மையே பேசுவோம்' என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.

2207. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் : நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (அவர்களின் கட்டளைகளைச்) செவியேற்றுக் கீழ்ப்படிந்து நடப்போம் என உறுதிமொழி (பைஅத்) அளிக்கும்போது அவர்கள், 'உங்களால் முடிந்த விஷயங்களில்'' என்று சொல்வது வழக்கம்.

ஆட்சித் தலைவர் (தமக்குப் பிறகு ஓர் ஆட்சித் தலைவரையோ, அவரைத் தேர்ந்தெடுக்கும் ஒரு குழுவையோ) நியமிப்பது.

2208. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் : உமர்(ரலி) அவர்களிடம் (அன்னார் தாக்கப்பட்டபோது) 'நீங்கள் உங்களுக்குப் பின் யாரையாவது உங்கள் பிரதிநிதியாக (ஆட்சித் தலைவராக) நியமிக்கக் கூடாதா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'நான் எவரையேனும் எனக்குப் பின் ஆட்சித் தலைவராக நியமித்தால் (அது தவறாகாது); ஏனென்றால், (எனக்கு முன்பு) என்னைவிடச் சிறந்தவரான அபூ பக்ர்(ரலி) அவர்கள் அவ்வாறு ஆட்சித் தலைவரை (என்னை) நியமித்துச் சென்றிருக்கிறார்கள். (எவரையும் ஆட்சித் தலைவராக நியமிக்காமல்) அப்படியே நான் விட்டுவிட்டாலும் (அதுவும் தவறாகாது); ஏனெனில், என்னைவிடச் சிறந்தவர்களான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவ்விதம் தான் (யாரையும் நியமிக்காமல்) விட்டுச் சென்றிருக்கிறார்கள்'' என்றார்கள். உடனே நபித்தோழர்கள் உமர்(ரலி) அவர்களைப் பாராட்டினார்கள். அப்போது உமர்(ரலி) அவர்கள், '(என் கருத்து) பிடித்தோ பிடிக்காமலோ (என்னை நீங்கள் பாராட்டுகிறீர்கள். நான் வகித்த இந்தப் பதவி இறைவனிடம்) எனக்குச் சாதகமாகவும் வேண்டாம்; பாதகமாகவும் வேண்டாம்; சரிக்குச் சமமாக அமைந்த நிலையில் இதிலிருந்து நான் தப்பித்தாலே போதும் என்றே விரும்புகிறேன். நான் உயிரோடு இருக்கும்போது (தான் பதவியைச் சுமந்தேன் என்றால், எனக்குப் பின் ஒருவரை நியமிப்பதன் மூல)ம் இறந்த பிறகும் இதைச் சுமக்க நான் தயாராயில்லை'' என்று கூறினார்கள்.

2209. ஜாபிர் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார் : (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், 'பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் வருவார்கள்'' என்று சொல்ல கேட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், நான் (சரிவரக்) கேட்காத ஒரு சொல்லையும் சொன்னார்கள். (அது என்னவென்று விசாரித்த போது) என் தந்தை (சமுரா (ரலி) அவர்கள், 'அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள்'' என்று (நபி(ஸல்) அவர்கள்) சொன்னார்கள் எனக் கூறினார்கள்.
Click here to bookmark this link.Channel Image16:10 அல்லாஹ்வுக்கு இணை வைப்பதையும், இணை வைப்பவர்களையும் விட்டும் விலகி கொண்டால், அடியானுக்கு அல்லாஹ் வழங்கும் நன்கொடைகள்! இஸ்லாம்குரல்.காம்
(நபியே!) இவ்வேதத்தில் இப்ராஹீமைப்பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் மிக்க உண்மையாளராகவும் – நபியாகவும் – இருந்தார். (19:41) “என் அருமைத் தந்தையே! (யாதொன்றையும்) கேட்க இயலாத, பார்க்க இயலாத உங்களுக்கு எந்த தேவையையும் பூர்த்தி செய்ய இயலாததுமான ஒன்றை ஏன் நீங்கள் வணங்குகிறீர்கள்?” என்று அவர் தம் தந்தையிடம் கூறியதை நினைவுபடுத்தும். (19:42) “என் அருமைத் தந்தையே! மெய்யாகவே உங்களிடம் வந்திராத கல்வி ஞானம் நிச்சயமாக எனக்கு வந்திருக்கிறது. ஆகவே, நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களைச் [...]

Wed 16

Click here to bookmark this link.Channel Image16:37 [பாடம்-84] குழப்பங்கள். முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
''எனக்குப் பிறகு நீங்கள் வெறுக்கிற பல விஷயங்களைக் காண்பீர்கள்'' என்று (அன்சாரிகளிடம்) நபி(ஸல்) அவர்கள் கூறியது.

2187. 'தம் (ஆட்சித்) தலைவரிடமிருந்து (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் (கண்டு அதை) வெறுப்பவர் பொறுமையாக இருக்கட்டும். ஏனெனில், ஆட்சியாள(ருக்குக் கட்டுப்படாமல் அவ)ரிடமிருந்து ஒரு சாண் அளவு வெளியேறுகிறவர் அஞ்ஞான கால மரணத்தை எய்துவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 'தம் (ஆட்சித்) தலைவரிடமிருந்து மார்க்க விஷயத்தில்) தமக்குப் பிடிக்காத (குறை) ஒன்றைக் காண்கிறவர் அதைப் பொறுத்துக் கொள்ளட்டும்! ஏனெனில், ஒருவர் (இஸ்லாமியக்) கட்டமைப்பிலிருந்து பிரிந்து, (அதே நிலையில்) இறந்துவிட்டால் அஞ்ஞான கால மரணத்தையே அவர் சந்திப்பார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

2188. ஜுனாதா இப்னு அபீ உமய்யா(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது நாங்கள் அன்னாரிடம் (நலம் விசாரிக்கச்) சென்றோம். நாங்கள், 'அல்லாஹ் உங்களுக்குக் குணமளிக்கட்டும். நபி(ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்ட ஒரு ஹதீஸை (செய்தியை எங்களுக்கு) அறிவியுங்கள்; அதனால் அல்லாஹ் உங்களுக்கு நற்பலன் அளிப்பான்'' என்று சொன்னோம். அதற்கு உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். நாங்கள் அவர்களிடம் (சென்று இஸ்லாத்தில் நிலைத்திருப்பதாக) உறுதிமொழி அளித்தோம்'' என்றார்கள். 'நாங்கள் உற்சாகமாயிருக்கும் போதும் சோர்ந்திருக்கும்போதும் வசதியாயிருக்கும் போதும் சிரமத்திலிருக்கும் போதும் எங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை வழங்கப்படும் போதும்கூட (ஆட்சித் தலைவரின் கட்டளையை)ச் செவியேற்று (அவருக்குக்) கீழ்ப்படிந்து நடப்போம்; ஆட்சியதிகாரத்திலிருப்பவர்களுடன் நாங்கள் சண்டையிடமாட்டோம்; எந்த விஷயம் பகிரங்கமான இறை மறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து எங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளரிடம் நாங்கள் கண்டாலே தவிர'' என்று எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கியதும் அவர்கள் எங்களிடம் பெற்ற பிரமாணங்களில் அடங்கும்.

குழப்பங்கள் தோன்றுதல்.

2189. அபூ மூஸா(ரலி) அறிவித்தார் : நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம், 'கொலைகள் மலிந்த காலம் வரும் என்று மேற்கண்டவாறு நபி(ஸல்) அவர்கள் கூறிய காலத்தை நீங்கள் அறிவீர்கள்'' என்றேன். அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் (கூடுதலாகப் பின்வருமாறு) சொன்னார்கள்: யார் உயிரோடு இருக்கும்போது அவர்களை மறுமைநாள் வந்தடைகிறதோ அவர்கள் தாம் மக்களிலேயே தீயோர் ஆவர் என்று நபி(ஸல்) அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்.

பின்னால் வரும் காலம் முன்னால் சென்ற காலத்தைவிட மோசமாகவே இருக்கும்.

2190. ஸுபைர் இப்னு அதீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : நாங்கள் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் சென்று (ஆளுநர்) ஹஜ்ஜாஜ் மூலம் நாங்கள் அனுபவித்துவரும் கொடுமைகள் குறித்து முறையிட்டோம். அதற்கு அவர்கள், 'நீங்கள் உங்களுடைய இறைவனைச் சந்திக்கும்வரை பொறுமையோடு இருங்கள். ஏனெனில், உங்களிடம் ஒரு காலம் வந்தால், அதற்குப் பின்வரும் காலம் அதைவிட மோசமானதாகவே இருக்கும்'' என்று கூறிவிட்டு, 'இதை நான் உங்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்'' என்றார்கள்.

நம்மை எதிர்த்து ஆயதம் ஏந்துபவர்.

2191. நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்யவேண்டாம். ஏனெனில், உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பிடுங்கி (சகோதரர் மீது தாக்குதல் நடத்தி) விடக்கூடும். அதனால் நீங்கள் நரகத்தில் வீழ்ந்துவிடக் கூடும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(விரைவில்) சில குழப்பங்கள் தோன்றும், அப்போது அமர்ந்திருப்பவன் நிற்பவனை விடச் சிறந்தவன் ஆவான்.

2192. 'விரைவில் குழப்பங்கள் சில தோன்றும். அப்போது அவற்றுக்கிடையே (மௌனமாகி) அமர்ந்திருப்பவன் (அவற்றுக்காக) எழுந்து நிற்பவனை விடவும், அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன் நடப்பவனை விடவும், அவற்றுக்கிடையே நடப்பவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனை விடவும் சிறந்தவன் ஆவான். அதில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறவரை அவை அழிக்க முற்படும். அப்போது ஒரு புகலிடத்தையோ, காப்பிடத்தையோ பெறுகிறவர் அதன் வாயிலாகத் தம்மைத் தற்காத்துக் கொள்ளட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

குழப்பம் ஏற்பட்டுள்ளபோது கிராமத்திற்குக் குடிபெயர்தல்.

2193. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார் : நான் (ஒருமுறை ஹிஜாஸ் மாகாண ஆளுநர்) ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃபிடம் சென்றேன். அவர் 'இப்னுல் அக்வஃ! நீங்கள் (மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த பின் அங்கிருந்து) உங்கள் குதிகால்களின் வழியே (கிராமத்திற்குத்) திரும்பிச் சென்றதன் மூலம் கிராமவாசியாக மாறிவிட்டீர்களா?' என்று கேட்டார். நான், 'இல்லை. ஆயினும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கிராமத்தில் வசிக்க எனக்கு அனுமதியளித்துள்ளார்கள்'' என்று சொன்னேன். (அறிவிப்பாளர்களில் ஒருவரான) யஸீத் இப்னு அபீ உபைத்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்கள் கொல்லப்பட்டபோது ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அவர்கள் (மதீனாவிலிருந்து) வெளியேறி 'ரபதா' என்னுமிடத்திற்குச் சென்று அங்கு ஒரு பெண்ணை மணந்தார்கள். அப்பெண் மூலம் அவர்களுக்குப் பல குழந்தைகள் பிறந்தன. அங்கேயே வசித்துவந்த ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அவர்கள், தாம் இறப்பதற்குச் சில நாள்கள் முன்புதான் (அங்கிருந்து திரும்பி வந்து) மதீனாவில் தங்கினார்கள்.

அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்கு வேதனை வழங்கும்போது...

2194. ஒரு சமுதாயத்தின் மீது அல்லாஹ் வேதனையை இறக்கும்போது அதிலுள்ளவர்கள் அனைவரையும் அந்த வேதனை தாக்கும் பிறகு அவர்கள் தம் செயல்களுக்கு ஏற்ப (மறுமையில்) எழுப்பப்படுவார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் ஒரு கூட்டத்தாரிடம் ஒன்றைச் சொல்லிவிட்டுப் பிறகு வெளியே சென்று அதற்கு மாறாகப் பேசினால்...?

2195. ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார்: நயவஞ்சகம் என்பதெல்லாம் (மக்கள் சிலரிடம்) நபி(ஸல்) அவர்களின் காலத்தில் தான் இருந்தது. இன்றோ, இறைநம்பிக்கைக்குப் பின் இறைமறுப்பு மட்டுமே உள்ளது.

நெருப்பு கிளம்புவது.

2196. ஹிஜாஸ் பகுதியிலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி, (ஷாம் நாட்டின்) புஸ்ரா (ஹவ்ரான்) எனும் ஊரிலுள்ள ஒட்டகங்களின் பிடரிகளைப் பிரகாசிக்கச் செய்யாதவரை மறுமை நாள் வராது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2197. (மேற்காசியாவில் பாயும்) யூப்ரட்டீஸ் நதியானது தங்கப் புதையல் ஒன்றை வெளிப்படுத்த உள்ளது. அப்போது அங்கிருப்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுத்து விட வேண்டாம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான உக்பா இப்னு காலித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்துள்ள இந்த ஹதீஸ் மற்றொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிகமாக 'தங்க மலை ஒன்றை வெளிப்படுத்தவுள்ளது'' என்று இடம் பெற்றுள்ளது.

2198. இருபெரும் குழுக்களிடையே பெரும் போர் ஏற்பட்டு அவை ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொள்ளாதவரை மறுமை நாள் வராது. அவ்விரு குழுக்கள் முன்வைக்கும் வாதமும் ஒன்றாகவே இருக்கும். மேலும், ஏறத்தாழ முப்பது பெரும் பொய்யர்களான தஜ்ஜால்கள் (உலகில்) தோன்றாதவரை மறுமை நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான். மேலும், (கல்வியாளர்களின் மறைவால்) கல்வி கைப்பற்றப்பட்டு, நில நடுக்கங்கள் அதிகமாகி, காலம் சுருங்கி, குழப்பங்கள் தோன்றி, கொலை பெருகாதவரை மறுமைநாள் வராது. மேலும், உங்களிடையே செல்வம் பெருகிக் கொழிக்காதவரை மறுமைநாள் வராது. அப்போது செல்வன் தன்னுடைய தர்மத்தை ஏற்பவர் யாரேனும் கிடைக்கமாட்டாரா? என்று கவலைப்படுவான். அவன் அதை எடுத்து ஒருவருக்குக் கொடுக்க முனையும்போது, இது தமக்குத் தேவையில்லை என்று அவர் சொல்லி விடுவார். மேலும், மக்கள் கட்டடங்களை (போட்டி போட்டுக்கொண்டு) உயரமாகக் கட்டாதவரை மறுமை நாள் வராது. மேலும், ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் மண்ணறையைக் கடந்துசெல்லும்போது, 'அந்தோ! நான் இவனுடைய இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக் கூடாதா?' என்று (ஏக்கத்துடன்) கூறாதவரை மறுமை நாள் வராது. சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாதவரை மறுமைநாள் வராது. அவ்வாறு உதயமாகும்போது அதைக்காணும் மக்கள் அனைவரும் இறைநம்பிக்கை கொள்வார்கள். ஆனால், அதற்கு முன்பே இறைநம்பிக்கை கொள்ளாத, அல்லது இறை நம்பிக்கை கொண்டும் (அதை மெய்ப்பிக்கும் வகையில்) நற்செயல் எதுவும் புரியாத எந்த மனிதனும் அப்போது நம்பிக்கை கொள்வது அவனுக்குப் பயனளிக்காத நேரமாக அது இருக்கும்.

இரண்டு பேர் தங்களுக்கு முன்னே தங்கள் துணிகளை (வியாபாரத்திற்காக) விரித்து வைப்பார்கள். அந்தத் துணியை வியாபாரம் செய்திருக்கவும் மாட்டார்கள்; அதைச் சுருட்டி வைத்திருக்கவும் மாட்டார்கள்; அதற்குள் மறுமை நாள் வந்து விடும். ஒருவர் தம் ஒட்டகத்தின் பாலைக் (கறந்து எடுத்துக்) கொண்டு அப்போதுதான் திரும்பியிருப்பார்; அதை அவர் அருந்தியிருக்கவும் மாட்டார். அதற்குள் மறுமை நாள் வந்துவிடும். ஒருவர் தம் தடாகத்தை அப்போதுதான் செப்பனிட்டிருப்பார்; அதிலிருந்து அவர் (தம் கால்நடைகளுக்கு) நீர் புகட்டியிருக்கவும் மாட்டார். அதற்குள் மறுமை நாள் வந்துவிடும். ஒருவர் தமது உணவைத் தம் வாயருகே கொண்டு சென்றிருப்பார்; ஆனால், இன்னும் அதைச் சாப்பிட்டிருக்கவும் மாட்டார்; அதற்குள் மறுமைநாள் வந்துவிடும். (அந்த அளவுக்குத் திடீரென உலக அழிவுநாள் ஏற்படும்.) என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Tue 15

Click here to bookmark this link.Channel Image12:13 இஸ்ரவேலர்களும் காளைக் கன்றின் பொற்சிலையும்! கிறிஸ்தவம் பார்வை
இப்பதிவு சாமிரி பற்றிய குர்ஆனின் கூற்றில் சரித்திர தவறா? என்ற தலைப்பின் துணைப் பதிவு ஆகும். Published in : islamkalviஇறை தூதர் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) (மோசே தீர்க்கதரிசி) தவ்றாத் என்னும் இறைநூலைப் பெற்றுக் கொள்வதற்காக சினாய் மலைக்கு சென்றிருந்த நேரத்தில் இஸ்ரவேலர்கள் காளைக்கன்றின் சிலையை வணங்கினர். காளைக் கன்றின் பொற்சிலையை உருவாக்கி சிலை வணக்கத்தின்பால் அவர்களைத் தூண்டியது 'சாமிரி' என்ற பொற்கொல்லன்

Mon 14

Click here to bookmark this link.Channel Image17:53 [பாடம்-83.] கனவுக்கு விளக்கமளித்தல். முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
நல்லோரின் கனவு.

2176. நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நல்ல கனவு அல்லாஹ்வாலேயே தோன்றுகிறது.

2177. உங்களில் ஒருவர் தமக்கு விருப்பமான கனவொன்றைக் கண்டால், அது அல்லாஹ்விடமிருந்தே வந்தது (என்று தெரிந்து), அதற்காக அவர் அல்லாஹ்வைப் போற்றட்டும். அதை (தமக்கு விருப்பமானவர்களிடம் மட்டும்) தெரிவிக்கட்டும். அதற்கு மாறாகத் தமக்கு விருப்பமில்லாத கனவு கண்டால், அது ஷைத்தானிடமிருந்தே வந்தது (என அறிந்து), அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரட்டும். அதைப் பற்றி யாரிடமும் கூற வேண்டாம். ஏனெனில், அப்போது அக்கனவு அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

நற்செய்தி (கூறும் கனவு)கள்.

2178. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நற்செய்தி கூறுகின்றவை ('முபஷ்ஷிராத்') தவிர, நபித்துவத்தில் வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை'' என்று கூற கேட்டேன். அப்போது மக்கள் 'நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) என்றால் என்ன?' என்று வினவினர். நபி(ஸல்) அவர்கள் 'நல்ல (உண்மையான) கனவு'' என்று விடையளித்தார்கள்.

கனவில் நபி(ஸல்) அவர்களைக் காண்பது.

2179. 'கனவில் என்னை காண்கிறவர் விழிப்பிலும் என்னைக் காண்பார். (ஏனெனில்) ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்கமாட்டான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்: ''நபி(ஸல்) அவர்களுக்குரிய தோற்றத்தில் (அவர்களின் அங்க லட்சணங்களுடன்) அவர்களைக் கண்டால்தான் (நபி(ஸல்) அவர்களைக் கனவு கண்டதாகக் கருதப்படும்)'' என்று இப்னு சீரின்(ரஹ்) அவர்கள் கூறினார்கள். மேலும் கனவில் யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் என்னையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்க மாட்டான். மேலும், இறைநம்பிக்கையாளர் காணும் (உண்மையான) நல்ல கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.

2180. (கனவில்) யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் நிஜத்தையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் (காட்சியளிப்பவனாக) இருக்கமாட்டான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

பகலில் காணும் கனவு.

2181. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு அருகிலுள்ள 'குபா'வுக்குச் சென்றால் தம் பால்குடி சிற்றன்னையான) உம்மு ஹராம் பின்த் மில்ஹான்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்வது வழக்கம். அவர் உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அவர்களின் துணைவியாராவார். அவ்வாறே ஒரு நாள் (பகலில்) நபி(ஸல்) அவர்கள் உம்மு ஹராம்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்றபோது அவர் நபி(ஸல்) அவர்களுக்கு உணவளித்த பின் அவர்களுக்கு பேன் பார்த்து விடலானார். அப்போது நபி(ஸல்) அவர்கள் உறங்கி விட்டார்கள். பிறகு சிரித்தபடி விழித்தார்கள்.

கனவில் விலங்கிடப்படுவதைப் போன்று காண்பது.

2182. (மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகக்) காலம் சுருங்கும்போது இறை நம்பிக்கையாளர் காணும் கனவு பொய்யாகப் போவதில்லை. இறைநம்பிக்கையாளர் காணும் கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும். நபித்துவத்தில் அடங்கிய எந்த அம்சமும் பொய்யாகாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) முஹம்மத் இப்னு சீரீன்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்தச் சமுதாயத்தார் காணும் கனவுகள் (எல்லாம்) உண்மை என்றே கூறுகிறேன். கனவுகள் மூன்று வகைப்படும் என்று கூறப்படுவதுண்டு. 1. மன பிரமை (விழிப்பு நிலைக் கனவுகள்) 2. ஷைத்தானின் அச்சுறுத்தல். 3. அல்லாஹ்விடமிருந்து வரும் நற்செய்தி. எனவே, தாம் விரும்பாத கனவொன்றை எவரேனும் கண்டால் அதைப் பற்றி எவரிடமும் விவரிக்க வேண்டாம். மாறாக, எழுந்து அவர் (இறைவனைத்) தொழட்டும். தொடர்ந்து முஹம்மத் இப்னு சீரின்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: கழுத்தில் மாட்டப்படும் விலங்கைக் கனவில் காண்பது வெறுக்கப்பட்டு வந்தது. (ஏனெனில், அது நரகவாசிகளின் அடையாளமாகும்.) ஆனால், (கால்) விலங்கைக் காண்பது அவர்களுக்கு விருப்பமானதாக இருந்தது. அது மார்க்கத்தில் நிலைத்திருப்பதைக் குறிக்கும் என்று (விளக்கம்) கூறப்பட்டது.

கனவில் ஒரு பொருளை ஒரு மூலையிலிருந்து மாற்றி மற்றவர்களிடம் வைப்பதைப் போன்று கண்டால்...?

2183. தலைவிரி கோலத்துடன் கறுப்பு நிறப்பெண்ணொருத்தி மதீனாவிலிருந்து வெளியேறி அங்கிருந்து 'மஹ்யஆ' சென்று தங்குவதைப் போன்று நான் (கனவு) கண்டேன். மதீனாவின் பெருநோய்கள் மஹ்யஆவுக்கு இடம் பெயரச் செய்யப்பட்டுவிட்டது என்று நான் (அதற்கு) விளக்கம் கண்டேன். 'மஹ்யஆ' என்பது 'அல்ஜுஹ்ஃபா' எனும் இடமாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

கனவு குறித்து பொய்யுரைப்பது.

2184. 'ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக திட்டமிட்டு சொன்னால், அவர் (மறுமையில்) இரண்டு வாற்கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும்படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.) 'தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்' அல்லது 'தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில் 'அவர்களின் உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறவரின் காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும். (உயிரினத்தின்) உருவப் படத்தை வரைகிறவர் அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால், அவரால் உயிர் கொடுக்க முடியாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

2185. தம் கண் காணாத ஒன்றை அது கண்டதாகக் கூறுவது மாபெரும் பொய்களில் ஒன்றாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

கனவுக்கு விளக்கம் அளித்த முதல் நபர் தவறாக விளக்கம் சொன்னாலும் அதுதான் விளக்கம் என்பதை ஏற்க முடியாது.

2186. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் : ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, '(இறைத்தூதர் அவர்களே!) நான் நேற்றிரவு கனவில் மேகம் ஒன்றைக் கண்டேன். அந்த மேகத்திலிருந்து நெய்யும் தேனும் சொட்டிக்கொண்டிருந்தன. உடனே மக்கள் தங்கள் கைகளை நீட்டி அவற்றைப் பிடித்துக்கொண்டிருக்கக் கண்டேன். (அவர்களில்) அதிகம் பிடித்தவர்களும் உண்டு; குறைவாகப் பிடித்தவர்களும் உண்டு. அப்போது ஒரு கயிறு பூமியிலிருந்து வானம் வரைப் போய்ச் சேர்ந்தது. அப்போது (இறைத்தூதர் அவர்களே!) நீங்கள் அந்தக் கயிற்றைப் பற்றிக் கொண்டு மேலே சென்றீர்கள். பிறகு (நான்காவதாக) இன்னொரு மனிதர் (வந்து) அதைப் பற்றிக்கொள்ள அந்தக் கயிறு அறுந்து (விழுந்து)விட்டது. பிறகு (மீண்டும்) அக்கயிறு (வானத்துடன்) இணைக்கப்பட்டது'' என்றார். அப்போது (அங்கிருந்த) அபூ பக்ர்(ரலி) அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தக் கனவிற்கு விளக்கம் அளிக்க என்னை அனுமதிக்க வேண்டும்'' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் '(சரி) இதற்கு விளக்கம் சொல்லுங்கள்'' என்றார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள், 'அந்த மேகம் தான் இஸ்லாமாகும். (மேகத்திலிருந்து) சொட்டிக் கொண்டிருந்த தேனும் நெய்யும் குர்ஆனாகும். அதன் இனிமை சொட்டிக் கொண்டிருக்கிறது. குர்ஆனிலிருந்து அதிகம் பெற்றவர்களும் உள்ளனர்; குறைவாகப் பெற்றவர்களும் உள்ளனர். வானிலிருந்து பூமிவரை நீண்டு செல்லும் அந்தக் கயிறானது, நீங்கள் இருந்து வருகிற சத்திய(மார்க்க)மாகும். அதை நீங்கள் பற்றுகிறீர்கள். அல்லாஹ் உங்களை (வானளவிற்கு) உயர்த்திவிடுகிறான். பிறகு உங்களுக்குப் பின்னால் இன்னொரு மனிதர் அதைப் பற்றுகிறார். அதன் மூலம் அவரும் உயர்ந்துவிடுகிறார். அதன் பின்னர் இன்னொரு மனிதர் அதைப் பற்றிக் கொண்டு அதன் மூலம் உயர்ந்துவிடுகிறார். அதன் பின்னர் இன்னொரு மனிதர் அதைப் பற்றிக் கொண்டு அதன் மூலம் உயர்ந்துவிடுகிறார். அதை (நான்காவதாக) மற்றொருவர் பற்றுகிறார். (ஆனால்) அது அவரோடு அறுந்துவிடுகிறது. பின்னர் அவருக்காக அக்கயிறு இணைக்கப்படுகிறது. அதன் மூலம் அவரும் உயர்ந்து விடுகிறார்'' என்று கூறிவிட்டு, 'இறைத்தூதர் அவர்களே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். (நான் சொன்ன விளக்கம்) சரியா? அல்லது தவறா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'சிலவற்றைச் சரியாகச் சொன்னீர்கள்; சிலவற்றைத் தவறாகச் சொல்லிவிட்டீர்கள்'' என்றார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தவறாகக் கூறியதைத் தாங்கள் எனக்குத் தெரிவிக்கவேண்டும்'' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் '(இனி) சத்தியம் செய்து கேட்காதீர்கள் (நான் சொல்லப்போவதில்லை)'' என்றார்கள்.

Sun 13

Click here to bookmark this link.Channel Image05:58 வீரியம் இழந்த வாதங்கள்....! எதிரொலி
திருக்குர்ஆனை முஹம்மது நபி (ஸல்...) அவர்கள் மக்கள் முன் எடுத்துச் சொன்ன கால கட்டத்திலேயே அதனை எப்படியாவது பொய்ப்படுத்திட வேண்டும் அல்லது குறைந்தபட்சம் குறையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று அபூஜஹ்ல் காலந்தொட்டு தொடரும் அத்தகைய முயற்சிகள் இன்றுவரை நின்ற பாடில்லை.


"மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்று சிந்திக்க வேண்டாமா? முதுகுத் தண்டுக்கும் விலா எலும்புக்கும் இடையிலிருந்து குதித்து வெளிப்படும் திரவத்திலிருந்து படைக்கப் பட்டான்" என்ற குர்ஆனின் கூற்றில் அறிவியல் முரண்பாடுகள் இருப்பதாக தருமி குற்றச்சாட்டுக்களை அடுக்கி இருந்தார்.

"ஆணின் விரையிலிருந்து வெளிப்படும் விந்திலிருந்துதான் கரு உருவாகிறது. குர்ஆன் சொல்வதுபோல் (?!) முதுகுத் தண்டுக்கும் விலா எலும்புக்கும் இடையிலில்லை" என்ற நவீன கண்டுபிடிப்பை(!) தருமி முன்வைத்திருந்தார். அதற்குப் பின்னூட்டம் இட்டிருந்த கல்வெட்டு என்பார்,ஆதிமனிதனிலிருந்து இதுவரைக்கும் யாருக்கும் தெரியாத(!) ஆண்குறியிலிருந்து விந்து வெளிப்படுவதை, குடும்பக்கட்டுப்பாடு (வாஸக்டமி) அறுவைச் சிகிச்சையைப் படம் காட்டி நிரூபித்திருந்தார்.

முன்னதாக, குர்ஆனின் மூலமொழியான அரபியில் நேரடியாகச் சொல்லப்பட்டவற்றுக்கு கூடுதல் விளக்கத்துக்காக மொழியாக்கத்தில் பிறைக்குறிக்குள் (BRACKET) மொழிபெயர்ப்பாளர்களால் குறிப்பிடப் படுவனவற்றைச் சுட்டி, "குர் ஆனுக்குத் தன்னிச்சையாக விளக்கம் கொடுத்துள்ளார்கள்" என்று கல்வெட்டு தனது ஆட்சேபனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மொழியியலில் பிறைக்குறிக்குள் சொல்லப்படுபவை மொழிபெயர்ப்பாளரின் கருத்துகள்;இது எல்லா மொழியாக்கத்திற்கும் பொருந்தும் என்ற அடிப்படை கூடத் தெரியாமல் குர்ஆனில் குறைகாணப் புறப்பட்ட இவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. பிறைக்குறிக்குள் விளக்கம் இல்லாமலும் மூலப்பொருள் மாறாது என்று சொன்னதைத் தொடர்ந்து EMIT / வெளிப்படுதல் என்ற சொல்லைப் பிடித்துக்கொண்டு, "விந்து EMIT ஆகுமிடம் ஆண்குறி" என்ற இன்னொரு அரிய கண்டுபிடிப்பைச் சொன்னார் திருவாளர் கல்வெட்டு.



கருவறைக்குள் செலுத்தப்படும் விந்து விரையிலிருந்து மட்டும் உருவானதல்ல; மொத்த விந்தில் சுமார் 5%க்கும் குறைவான அளவே விரையில் உருவாகிறது. இவ்வாறு வெளியாகும் விந்தில் சுமார் 200-300 மில்லியன் உயிரணுக்கள் விரையிலிருந்து வெளியாகி PROSTATE GLAND தாதுச்சுரப்பிகளுடன் கலந்து, பிறகு அங்கிருந்து வெளியாகி SEMINAL VASICLE தாதுக் கலவையுடன் கலந்து இறுதியாக ஆண்குறியிலிருந்து வெளியாகி கருவறையைச் சென்றடைகிறது. இடையில் மூன்று வெளியேற்றங்கள் (EMIT/EMISSION) நடந்த பிறகே ஆண்குறியிலிருந்து விந்து வெளியேற்றப்பட்டுக் கருவறை சென்றடைகிறது.

ஆணின் விந்தானது 1-21 நாட்களில் படிப்படியாகச் சுரந்து இனவிருத்திக்குத் தயாராக வைக்கப்படுகிறது. இடைப்பட்ட நாளில் உடலுறவு மூலம் வெளியேற்றப் படாவிட்டால் தானாக வெளியேற்றப்படுகிறது. விரைகளில் சுரந்த விந்து நேரடியாக வெளியாகாமல், உடலில் நெடும்பயணம் செய்து தாதுச் சுரப்பிகளுடன் கலந்து வெளியாகிறது. விரையிலிருந்து நிதானப் பயணமாகத் தொடங்கி PROSTATE GLAND தாதுச் சுரப்பிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு துள்ளிக் குதித்து வெளியேறி SEMINAL VASICLE சுரப்பிகளுடன் மீண்டும் கலந்து வீரியமடைந்து இறுதியில் ஆண்குறி வழியாக இடம் பெயருகிறது.

கல்வெட்டு குறிப்பிட்டுள்ள சுட்டியிலும் இது சொல்லப்பட்டுள்ளது:
*Sperm do not mature in the testes. They must first pass into the epididymis, a C-shaped storage chamber adjoining the testes composed of a 20-foot coiled tube. The sperms' journey through the epididymis takes about 2 - 3 weeks. They are held here until sexual activity forces them to move on. http://www.clarian.org/ADAM/doc/In-DepthReports/10/000037.htm

உணர்வுக்கும் உடலுக்கும் நடக்கும் இன்பப் போராட்டத்தில் (TESTICLE-SEMINAL VASICLE-PROSTATE GLAND என) மூன்று வெளியேற்றங்கள் நடந்து ஆண்குறியிலிருந்து இறுதி வெளியேற்றம் நிகழ்கிறது. இந்த இறுதி வெளியேற்றத்தை மட்டும் பிடித்துத் தொங்கி,:-)

"மனிதன் drop emitted ல் இருந்து வந்தவன் என்றால் அந்த drop emitted ஆகும் இடம் ஆண்குறியின் முனைதான். அதற்கு முன் அது எமிட் ஆகவில்லை. உற்பத்தி வேறு வெளியேற்றம் (எமிட்) வேறு. எனவே backbone and the ribs ல் இருந்து எமிட் ஆகிறது என்று நீங்கள் சொல்லியிருந்தால் அது முற்றிலும் தவறு" என்று அரைகுறையாகப் பொருள் கொண்டுள்ளார்.

உடலிருந்து விந்து இறுதியாக வெளியேற்றப்படுவதைக் குறிக்கும் மிகச்சரியான ஆங்கிலச்சொல் EJACULATION (விந்து வெளியேற்றல்). அப்படி இருக்கும்போது குர்ஆன் சொல்லாத EJACULATION ஐ EMIT என்று சொல்லப்பட்ட இடத்தில் தவறாகப் பொருள் கொண்டுள்ளார்.


# The expulsion of seminal fluid from the urethra of the penis during orgasm.

to eject from a living body; specifically : to eject (semen) in orgasm

086.006 خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ

086.006 He is created from a drop emitted-



086.007 يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ

086.007 Proceeding from between the backbone and the ribs:




இவ்விரு வசனங்களையும் வெளியேற்றப்பட்ட (EMITTED) துளியிலிருந்து (86:006) முதுகுத்தண்டுக்கும் விலா எலும்புக்கும் இடையிலிருந்து (PROCEEDING FROM) (086:007) என்று தொடர் வெளியேற்றத்தைச் சொல்கிறது.

நவீன அறிவியலும் இதையே சொல்கிறது. விரையிலிருந்து உடல் ஸ்பரிசங்களால் அனுப்பப்படும் (EMIT) விந்து, எபிடிடைமிஸ் (epididymis) என்ற பல்வேறு விரை நரம்புகளைக் கடந்து வாஸா டிபெரெண்டியா (vasa deferentia) என்ற ஒருமித்த குழாய் மூலம் Seminal Vasicle தாதுச் சுரப்பிகளுடன் கலந்து வெளியாகி, பின்னர் Prostate Gland இல் சுரந்த சுரப்பிகளையும் சேர்த்துக் கொண்டு, இறுதியாக ஆண்குறி முனையிலிருந்து வெளியாகிறது. இந்த இறுதி வெளியேற்றத்தைக் குறிக்கும் துல்லியமான ஆங்கிலச் சொல் (EJACUATION).


++++++++++++++++++++++++++++++++++++++++++++++

குர்ஆனின் நோக்கம் அறிவியல் பாடம் நடத்துவதல்ல.மனித வாழ்க்கைக்குத் தேவையான வாழ்வியல் நெறிகளைச் சொல்லும்போது மேலதிகமாக மனிதப்படைப்பின் ரகசியங்களையும் சொல்லி தானொரு இறைவேதம் என்பதைக் குர்ஆன் மெய்ப்பிக்கிறது. அவற்றைத் தனிநபராக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எடுத்துச் சொன்னபோது மறுத்தவர்களிடமும் இகழ்ந்தவர்களிடமும் இதைவிடச் சரியான ஒன்றைக் கொண்டு வருமாறு சவால் விட்டது. குர்ஆன் அருளப்பட்ட 23 ஆண்டுகளில் இந்தச் சவால்களை எவரும் எதிர்கொள்ளவில்லை.

குர்ஆனுக்கு முன்பே கிரேக்கர்களும் ரோமானியர்களும் அறியியலிலும் தலைசிறந்து விளங்கினார்கள்.அவர்களின் பல்வேறு அறிவியல் முடிவுகள் இன்றும் ஆய்வுக்குட்படுத்தப் பட்டு தவறென நிரூபிக்கப்பட்டுள்ளன. அத்தகைய ஆய்வுகளும் பன்னெடுங்காலங்களாக பல்வேறு அறிஞர்களால் ஆய்வு செய்யப்பட்டு மறுக்கப்பட்டுள்ளன. குர்ஆன் கூறியதற்கு எதிராக இதுவரை எந்த அறிஞனும் நிரூபிக்கப்பட்ட அறிவியல் முடிவுகளை முன்வைக்க வில்லை.

எத்தனை உதவியாளர்களை துணைக்கழைத்துக் கொண்டாலும், இதுபோன்று உங்களால் ஒன்றைக் கொண்டுவர முடியாது என்று 1400 ஆண்டுகளுக்கு முன்வைக்கப்பட்ட சவால் இன்றுவரை எதிர்கொள்வாரின்றி நிலுவையில் உள்ளது. இனியும் எதிர்கொள்ளப் படப்போவதில்லை, இன்ஷா அல்லாஹ்!

Sat 12

Click here to bookmark this link.Channel Image16:44 [பாடம்-82] இஸ்லாத்திலிருந்து வெளியேறியோருடன் போர் புரிதல். முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
2175. 'இறைத்தூதர் அவர்களே! 'நாங்கள் அறியாமைக் காலத்தில் செய்த(த)வற்றிற்காக (மறுமையில்) தண்டிக்கப்படுவோமா?' என ஒருவர் கேட்டதற்கு, 'இஸ்லாத்தில் இணைந்து நன்மை புரிகிறவர் அறியாமைக் காலத்தில் செய்த தவறுகளுக்காகத் தண்டிக்கப்பட மாட்டார். இஸ்லாத்தில் இணைந்த பிறகு (மீண்டும் இறைமறுப்பு எனும்) தீமையைப் புரிகிறவர் (அறியாமைக் காலத்தில் செய்த) முந்திய தவறுகளுக்காகவும், (இஸ்லாத்தை ஏற்றபின் செய்த இந்தப்) பிந்திய தவறுகளுக்காகவும் தண்டிக்கப்படுவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
Click here to bookmark this link.Channel Image02:26 பாங்கோசையை முன்மொழிந்தவர்! ஸஹாபாக்களின் வாழ்வினிலே...
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

உமர்[ரலி] அவர்கள், 'உமரின் நாவின் அல்லாஹ் பேசுகிறான்' என்று நபி[ஸல்] அவர்களால் சிறப்பித்து சொல்லப்பட்ட ஸஹாபி என்பதை நாம் அறிவோம். உமர்[ரலி] அவர்கள் கூற்றிற்கேற்ப, அல்லாஹ் சில வசனங்களை இறக்கியதையும் நாமெல்லாம் அறிந்துள்ளோம். அத்தகைய சிறப்பிற்குரிய உமர்[ரலி] அவர்கள் இன்னொரு நல் அமலுக்கு ஒரு ஆலோசனை கூற அது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களால் அங்கீகரிக்கப்பட்டு, அன்றும்-இன்றும்- நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் இவ்வுலகம் உள்ளளவும் அது நடைமுறையில் இருக்கும். ஆம்! அதுதான் அல்லாஹ்வை வணங்க ஐவேளை தொழுகையின் போது அழைக்கப்படும் 'பாங்கு' எனும் அழைப்போசையாகும்.
இதுபற்றிய பொன்மொழி இதோ;

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்;
முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து கொள்வார்கள். ஒரு நாள் இது பற்றி எல்லோரும் கலந்தாலோசித்தனர். அப்போது சிலர், கிறித்தவர்களைப் போன்று மணி அடியுங்கள் என்றனர். வேறு சிலர் யூதர்கள் வைத்திருக்கிற கொம்பைப் போன்று நாமும் கொம்பூதலாமே என்றனர். அப்போது உமர்(ரலி) 'தொழுகைக்காக அழைக்கிற ஒருவரை ஏற்படுத்தக் கூடாதா?' என்றனர். உடனே பிலால்(ரலி) அவர்களிடம் 'பிலாலே! எழுந்து தொழுகைக்காக அழையும்" என்று நபி(ஸல்) கூறினார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 604

இந்த பொன்மொழி உமர்[ரலி] அவர்களின் பெரும்பாலான சிந்தனைகள், செயல்கள் அல்லாஹ்வாலும், அவன் தூதராலும் பொருந்திக்கொள்ளும் வகையிலேயே அமைந்துள்ளதற்கு மற்றொரு சான்றாகும்.
அல்லாஹ் உமர்[ரலி] அவர்களுக்கு கிருபை செய்வானாக!

Thu 10

Click here to bookmark this link.Channel Image17:39 [பாடம்-81] இழப்பீடுகள். முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
''யார் ஓர் இறைநம்பிக்கையாளரை வேண்டுமென்றே கொலை செய்கிறானோ அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும்'' எனும் (திருக்குர்ஆன் 04:93 வது) இறைவசனம்.

2168. புனிதம் வாய்ந்ததாகக் கருதப்படும் (மனித) உயிர் எதனையும் கொலை செய்யாமல் இருக்கும்வரை ஓர் இறைநம்பிக்கையாளர் தம் மார்க்கத்தின் தாராள குணத்தைக் கண்டவண்ணமிருப்பார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

2169. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் மிக்தாத்(ரலி) அவர்களிடம், 'இறைமறுப்பாளர்களான சமூகத்தாரிடையே தம் இறைநம்பிக்கையை (மனதிற்குள்) மறைத்து வைத்துக் கொண்டிருந்த ஒருவர் தம் இறைநம்பிக்கையை வெளிப்படுத்தும் தருவாயில் அவரை நீர் கொன்றுவிட்டீரே! அவ்வாறாயின், இதற்கு முன்னர் நீரும் இவ்வாறுதானே மக்காவில் உம்முடைய இறைநம்பிக்கையை (மனத்தில்) மறைத்து வைத்துக்கொண்டிருந்தீர்?' என்று கேட்டார்கள்.

2170. நமக்கெதிராக எவன் ஆயுதம் ஏந்துகிறானோ அவன் நம்மைச் சார்ந்தவனல்லன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ மூஸா(ரலி) அவர்களும் இதை அறிவித்தார்கள்.

''அவர்களுக்கு நாம் அ(ந்த வேதத்)தில், உயிருக்கு உயிர் கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாகப் பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம். எனினும், ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவரின் பாவங்களுக்குப் பரிகாரமாகும். யார் அல்லாஹ் அருளிய (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே!'' எனும் (திருக்குர்ஆன் 05:45 வது) இறைவசனம்.

2171. 'அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவருமில்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்' என உறுதி மொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை. (அவை:) 1. ஒரு மனிதரைக் கொலை செய்ததற்கு பதிலாகக் கொலை செய்வது. 2. திருமணமானவன் விபசாரம் செய்வது. 3. 'ஜமாஅத்' எனும் சமூகக் கூட்டமைப்பைக் கைவிட்டு, மார்க்கத்திலிருந்தே வெளியேறி விடுவது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹூரைரா (ரலி) அறிவித்தார்.

நியாயமின்றி ஒரு மனிதனைக் கொலை செய்யத் தூண்டுவது.

2172. மனிதர்களிலேயே அல்லாஹ்வின் (கடுமையான) கோபத்திற்கு ஆளானோர் மூவர் ஆவர். 1. (மக்கா) புனித எல்லைக்குள் பெரும் பாவம் புரிகிறவன். 2. இஸ்லாத்தில் இருந்துகொண்டு அறியாமைக் காலக் கலாசாரத்தை விரும்புகிறவன். 3. ஒரு மனிதனின் இரத்தத்தைச் சிந்தச் செய்வதற்காக நியாயமின்றி அவனைக் கொலை செய்யத் தூண்டுகிறவன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் ஆட்சியாளரிடம் (வழக்கைக் கொண்டு) செல்லாமல் தம் உரிமையைத் தாமே மீட்டெடுப்பதும் (தம் உறவினருக்காகத்) தாமே பழிவாங்குவதும்.

2173. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் அனுமதியின்றி ஒருவர் உங்கள் வீட்டுக்குள் எட்டிப் பார்த்தபோது அவரின் மீது நீங்கள் சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரின் கண்ணைப் பறித்துவிட்டால் உங்களின் மீது எந்தக் குற்றமும் இல்லை. இதை அபூஹூரைரா(ரலி) அறிவித்தார்.

விரல்களுக்கான இழப்பீடுகள் (சமமானவையா? மாறுபட்டவையா?)

2174. இதோ இந்த மோதிர விரலும் கட்டை விரலும் (இழப்பீட்டில்) சமமானவையே என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Click here to bookmark this link.Channel Image04:25 அபூஹுரைரா[ரலி] அவர்களின் வியக்கத்தக்க நினைவாற்றல்! ஸஹாபாக்களின் வாழ்வினிலே...
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அல்லாஹ்வின் அருள்மறை குர்ஆன் நபி[ஸல்] அவர்கள் மீது அருளப்படும் காலகட்டத்தில், சில நபித்தோழர்களை எழுத்தர்களாக நியமித்து நபியவர்கள் எழுதிவைத்திட பனித்த செய்தியை நாம் அறிவோம். ஆனால் நபி[ஸல்] அவர்களின் திருவாயால் மொழிந்த பொன்மொழிகள் அவ்வாறு எழுதப்படவேண்டும் என்று நபியவர்கள் கட்டளையிடவில்லை. இருப்பினும் அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களைப் போன்ற சிலர் ஹதீஸ்களை எழுதிவைத்திருந்தனர். ஆனாலும் இவர்கள் அறிவித்த ஹதீஸ்களை விட, ஹதீஸ்களை எழுதிவைக்காத அபூஹுரைரா[ரலி] அவர்கள் தான் அதிக அளவில் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால் ஹதீஸ்களை அறிவித்த சஹாபிகள் பட்டியலில் அபூஹுரைரா[ரலி] அவர்கள் முதலாவதாக திகழ்கிறார்கள். நம்மை எடுத்துக்கொண்டால் இன்று சாப்பிட்டதை ஒருவாரம் கழித்துக் கேட்டால் நினைவிருக்காது. பரீட்சைக்கு விழுந்து விழுந்து மனப்பாடம் செய்யும் மாணவன் கூட காலையில் மனனம் செய்ததை பரீட்சை ஹால் உள்ளே சென்றதும் பாதியை மறந்து விடுகிறான். திருக்குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்கள் கூட தொழுகை நடத்தும் போது ஒரு சில வசனங்கள் மறந்து மற்றவர்களால் நினைவூட்டப்படுகிறது. ஆனால் அபூஹுரைரா[ரலி] அவர்கள் ஆயிரக்கணக்கான ஹதீஸ்களை அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் எந்த வார்த்தையை பயன்படுத்தி சொன்னார்களோ அதே வார்த்தையை அட்சரம் பிசகாமல், மறக்காமல் எப்படி மனனம் செய்யமுடிந்தது..? பல ஆண்டுகளுக்கும் பின்னால் யார் கேட்டாலும் எப்படி இறைத்தூதர் வார்த்தையை அப்படியே சொல்ல முடிந்தது என்ற நமது வியப்பிற்கு விடையாக அபூஹுரைரா[ரலி] அவர்கள் அதிக ஹதீஸ்களை அறிவித்ததற்கும், மறக்காமல் இருந்ததற்கும் அவர்கள் கூறும் விளக்கம் பாரீர்;

'மக்காவிலிருந்து ஹிஜ்ரத்துச் செய்து மதீனாவிற்கு வந்த எங்கள் சகோதரர்களோ வியாபாரம் பேரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். மதீனாவிலிருந்த அன்ஸாரித் தோழர்களோ தங்கள் (விவசாய) செல்வங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த அபூ ஹுரைராவோ முழுக்க முழுக்க (வேறு வேலைகளில் ஈடுபடாமல்) பட்டினியாக நபி(ஸல்) அவர்களுடனேயே இருந்தேன். மற்றவர்கள் வருகை தராத இடங்களுக்கெல்லாம் நான் செல்வேன். அவர்கள் மனப்பாடம் செய்யாதவற்றையெல்லாம் நான் மனப்பாடம் செய்து கொண்டிருந்தேன்.என்று கூறினார்கள்" அஃரஜ் என்பவர் அறிவித்தார்.
ஹதீஸ் சுருக்கம் புஹாரி;எண் 118

இந்த பொன்மொழி ஹதீஸ்களை திரட்டுவதற்காக அபூஹுரைரா[ரலி] அவர்கள் செய்த தியாகத்தை விளக்குகிறது. அடுத்து திரட்டிய செய்தி மறக்காமல் இருக்க அவர்கள் செய்தது என்ன..?

'இறைத்தூதர் அவர்களே! நான் தங்களிடமிருந்து ஏராளமான பொன் மொழிகளைக் கேட்கிறேன். (ஆயினும்) அவற்றை மறந்து விடுகிறேன் என நான் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு 'உம்முடைய மேலங்கியை விரியும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நானும் அதனை விரித்தேன். தம் இரண்டு கைகளாலும் இரண்டு கை நிறையளவு அள்ளி (எடுப்பது போன்று பாவனை செய்து)விட்டுப் பின்னர், 'அதனை (நெஞ்சோடு) நீர் அணைத்துக் கொள்வீராக!" என்றார்கள். நானும் உடனே அதனை என் நெஞ்சுடன் அணைத்துக் கொண்டேன். அதன் பின்னர் நான் எதனையும் மறந்ததே இல்லை" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஆதாரம் புஹாரி எண் 119

அபூஹுரைரா[ரலி] அவர்கள் ஹதீஸ்களை மறக்காமல் இருக்க நபியவர்கள் மூலம் பாதுகாப்பு பெற்றிருக்கிறார்கள். இந்த அளவுக்கு தியாகம் செய்து, சிரத்தைஎடுத்து அபூஹுரைரா[ரலி] அவர்கள் போன்ற பல நல்லறத் தோழர்கள் மூலமாக கிடைக்கப்பெற்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை கூட 'நொண்டிச்சாக்கு' சொல்லி குப்பையில் தள்ளும் சில அதிமேதாவிகள் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதை என்னும் போது உள்ளம் வேதனையால் விம்முகிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அபூஹுரைரா[ரலி] அவர்களின் தியாகத்தை பொருந்திக் கொள்வதோடு, இறைத்தூதரின் பொன்மொழிகளை நாமும் மனனம் செய்து மற்றவர்களுக்கு எடுத்தியம்பும் நன்மக்களாக ஆக்கியருள்வானாக!

Wed 09

Click here to bookmark this link.Channel Image12:47 மரபணு மாற்று பயிர்களும் சட்ட நடைமுறைகளும் மக்கள் சட்டம் (PEOPLE'S LAW)

மரபணு மாற்றுப் பயிர்களை நிலத்தில் பயிரிட்டு கள ஆய்வு செய்யும்போது மற்ற பயிர்களிடம் இருந்து சுமார் 200 மீட்டர் இடைவெளிவிட்டு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் Aruna Rodrigues & others V/s Union of India என்ற வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மரபணு மாற்றத்தில் பயன்படுத்தப்படும் பாசில்லஸ் துரெஞ்சரிஸ் என்ற நச்சுத்தன்மை கொண்ட புரதத்தை தாவரத்தின் மரபணுவுக்குள் புகுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றன. அருகாமைப் பகுதியில் பயிரிடப்பட்டிருக்கும் மற்றப் பயிர்களில் அயல் மகரந்த சேர்க்கை மூலமாக மரபணு மாசு பரவ வாய்ப்பிருப்பதால் இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.

இப்படி மரபணுமாற்று பயிர்கள் மற்ற பயிர்களோடு கலப்பதால் நம் பாரம்பரிய பயிர் வகைகள் அதன் தன்மையை இழந்து அழிந்துவிடும் அபாயம் உள்ளது. மேலும் இயற்கை வேளாண்மையும் மாசுபடுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இதனை தடுப்பதற்காகவே மரபணுமாற்று பயிர்களை பிற பயிர்களிடம் இருந்து உரிய அளவில் பாதுகாப்பான தொலைவில் பயிரிடவேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்துகிறது. ஆனால் மரபணுமாற்று தொழில்நுட்பம் தொடர்பான சட்டங்களும் கண்காணிப்பு அமைப்புகளும் அதற்கு விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்ற தயாராக இருக்கிறதா என்பது விடையில்லாத கேள்வியாகவே இருக்கிறது.

மரபணுமாற்று தொழில் நுட்பத்தை கண்காணிக்கும் அமைப்புகள்

மரபணுமாற்று தொழில் நுட்பத்தை முறைப்படுத்தவும் கண்காணிக்கவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆபத்து ஏற்படுத்தக்கூடிய நுண்ணுயிர்கள் மற்றும் மரபணு மாற்று உயிர்கள் உற்பத்தி - பயன்படுத்தல் - இறக்குமதி - ஏற்றுமதி - சேமித்தல் தொடர்பான விதிமுறைகள் (Rules for the Manufacture Use Import Export And Storage of Hazardous Micro-Organism and Genetic Engineered Organisms or Cell 19890), என்கிற சட்ட விதியை மத்திய அரசு இயற்றியுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் சில குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

உயிரியல் தொழில்நுட்பத்தை முறைப்படுத்தவும் பாதுகாப்பு சட்டவிதிகளை வரையறுக்கும் அதிகாரம் படைத்த மத்திய அரசின் கீழாக இயங்கும் மரபணு மாற்று தொழில்நுட்ப ஆலோசனைக்குழு (Recombinant DNA Advisory Committee - RDAC).மரபணுமாற்று ஆராய்ச்சிகளை கண்காணிக்க மற்றும் பாதுகாப்பு சட்டவிதிகளை வரையறுக்கும் மரபணு மாற்றுத் தொழில்நுட்ப சீராய்வுக் குழு (Review Committee on Genetic Manipulation - RCGM). ஆராய்ச்சி நிறுவனங்களில் மரபணுமாற்று தொழில்நுட்பத்தை கண்காணிக்கும் ஆய்வுமைய உயிரிப்பாதுகாப்புக் குழு (Institutional Bio-Safety Committee - IBSC). மரபணுமாற்று ஆராய்ச்சிகளுக்கு அனுமதி அளிப்பது மற்றும் கண்காணிக்கும் மரபணு தொழில்நுட்ப அங்கீகாரக்குழு (Genetic Engineering Approval Committee - GEAC). மாநில அளவில் இயங்கக் கூடிய மாநில உயிர்த்தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக் குழு (State Biotechnology Co-Ordination Committee -SBCC) மற்றும் மாவட்ட அளவில் இயங்கூடிய மாவட்ட உயிர்த்தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக்குழு. இந்த இரண்டு குழு க்களும் மாநில அரசின் கீழ் இயங்குபவை.

மரபணுமாற்று ஆராய்ச்சிக்கான விதிமுறைகள்

மரபணுமாற்று பயிர்கள் ஆராய்ச்சி கூடத்தில் சோதனை செய்யப்படுவது முதல், திறந்த வெளியில் பயிர் செய்யப்படும் வரை பின்பற்ற வேண்டிய விதிகளும் மேற்கூறிய அமைப்புகளால் வகுக்கப்பட்டுள்ளன.

ஆராய்ச்சி கூடங்களில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் அடங்கிய மரபணு மாற்றுத் தொழில்நுட்ப பாதுகாப்பு விதிகள் (Recombinant DNA Safety Guidelines, 1990)மரபணுமாற்று பயிர்களின் நச்சுத் தன்மையை கண்டறியும் சோதனையில் பின்பற்ற வேண்டிய மரபணுத் தாவரங்களில் உள்ள நச்சுத்தன்மை மற்றும் ஒவ்வாமை மதிப்பிடுதல் விதிமுறைகள் (Revised Guidelines for Research in Transgenic Plants & Guidelines for Toxicity and Allergenicity Evaluation of Transgenic Seeds, Plants and Plant Parts, 1998) மரபணுமாற்று பயிர்களை திறந்தவெளியில் அல்லாமல் மூடிய பாதுகாப்பான ஆய்வு கூடத்தில் சோதனை முறையாக பயிர் செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய மரபணு களப்பரிசோதனையை நெறிப்படுத்தும் விதிமுறைகள் (Standard Operating Procedures (SOPs) for Confined Field Trials of Regulated, GE Plants), மரபணுமாற்று பயிர்களின் இருந்து பெறப்படும் உணவுகளை ஆராயும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் (Guidelines for the Safety Assessment of Foods Derived from Genetically Engineered Plants), மரபணுமாற்று உணவுக்கான பொதுவான ஆய்வு முறைகள்(Protocols for Food and Feed Safety Assessment of GE crops) போன்றவை மேற்குறிப்பிட்ட குழுக்களால் இயற்றப்பட்டுள்ளன.

மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தை கண்காணிக்க மேற்கூறப்பட்ட அதிகார அமைப்புகளும், விதிமுறைகளும் இருந்தாலும் அவை எந்த அளவிற்கு செயல்படுகின்றன என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்குள் அனுமதித்தே தீருவது என்று அரசு முடிவு மேற்கொண்டுள்ளதால் இந்த அமைப்புகள் அனைத்தும் அரசின் விருப்பத்திற்கேற்பவே செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியாவின் உயிரித்தொழில்நுட்ப துறையின் முன்னோடியும், உச்ச நீதிமன்றத்தால் மரபணு தொழில்நுட்ப அங்கீகாரக் குழுவில் கௌரவ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் புஷ்பா பார்கவா, மரபணுமாற்று பயிர்கள் தொடர்பாக தனியார் நிறுவனங்கள் கொடுக்கும் ஆய்வறிக்கைகளை GEAC கண்மூடித்தனமாக ஏற்றுக்கொண்டு அனுமதி வழங்குவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

உணவு குறித்த கொள்கை முடிவு எடுக்கும் அதிகாரம் தற்போதைய நிலையில் மாநில அரசுகளின் கைகளில் உள்ளது. இதனைப் பயன்படுத்தி கேரளம் உள்ளிட்ட சில மாநில அரசுகள், தங்களுக்கு மரபணு மாற்றுத்தொழில்நுட்பம் தேவையில்லை என்று கூறியுள்ளன.

மரபணு மாற்றத்தொழில் நுட்பத்திற்கு அனுமதி வழங்குவதில், பலமுனை முடிவுகள் மேற்கொள்ளப்படுவதால் தேவையற்ற காலதாமதம் ஆவதாக கருதும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள் மரபணு மாற்றுத் தொழில் நுட்பத்தை அங்கீகரிக்க ஒற்றை அதிகார அமைப்பு தேவை என்று வலியுறுத்தி வந்தன.

இதை ஏற்று மத்திய அரசு சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இதன் தலைவராகவும் வழக்கம்போல் திருவாளர் எம். எஸ். சுவாமிநாதன் அவர்களே நியமிக்கப்பட்டார். இக்குழுவின் பரிந்துரையின்படி, மரபணு மாற்று அங்கீகாரக்குழுவிற்கு பதிலாக தேசிய உயிர்த்தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையம் (National Bio-technology Regulatory Authority) என்று புதிய அதிகார மையம் தொடங்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதன் தலைவராக மரபணு மாற்றுத்தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் கொண்ட ஒரு அறிவியல் நிபுணர் இருப்பார். சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட இந்த அமைப்பே மரபணு மாற்றுத்தொழில்நுட்பம் உள்ளிட்ட உயிர்த்தொழில்நுட்ப விவகாரங்களில் இறுதி முடிவெடுக்கும். இந்த முடிவு நாடு முழுவதற்கும் விதிவிலக்கில்லாமல் பொருந்தும். அனைத்து மாநிலங்களும் இந்த முடிவை ஏற்றே ஆகவேண்டும். இந்த அமைப்பின் முடிவை ஏற்க முடியாது எந்த மாநிலமும் புறக்கணிக்க முடியாது. இந்த முடிவுகளில் மத்திய சுகாதார அமைச்சகமோ, சுற்றுச்சூழல் அமைச்சகமோகூட தலையிட முடியாது. மரபணு மாற்றத்தால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்தோ, மரபணு மாற்றம் தொடர்பான சூழல் சீர்கேட்டிற்கு காரணமான வர்த்தக நிறுவனங்களை விசாரிக்கும் அதிகாரமோ இந்த அமைப்பிற்கு இல்லை.

- வழக்குரைஞர் மு.வெற்றிச்செல்வன்

Click here to bookmark this link.Channel Image12:47 தனியாருக்காக தாராளமயமாகும் இந்திய அணுசக்தி சட்டம்! மக்கள் சட்டம் (PEOPLE'S LAW)

ஒரு நாட்டின் கொள்கைகள் அந்த நாட்டின் நலன்களை முன்னிறுத்தியே மேற்கொள்ளப்படுவதாக பொதுவாக கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பல கொள்கைகளும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் நலன்களை முன்னிறுத்தியே மேற்கொள்ளப்படுவதாக தோன்றுகிறது.

இந்தியாவின் அணுசக்தி வரலாறு, நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே தொடங்குகிறது. சர். சி. வி. ராமன், ஜகதீஸ சந்திரபோஸ், மெஹ்நாத் ஸாகா ஆகிய மூன்று அறிவியல் அறிஞர்களும் இந்திய அணுசக்தித்துறையின் முன்னோடிகள். பெங்களூருவில் இருக்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்-ன் முதல் இந்திய இயக்குநராக சர். சி. வி. ராமன் பதவி வகித்தார். மெஹ்நாத் ஸாகா, கொல்கத்தாவில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூக்ளியர் பிஃசிக்ஸ் என்ற அமைப்பை நிறுவினார். இவரது மாணவரான நாக் சவுத்ரி 1942ம் ஆண்டில், அணுக்கருவை பிளக்க உதவும் கருவியான சைக்ளோட்ரானை இந்தியாவிற்கு முதன்முதலாக கொண்டு வந்தார்.

இந்த முயற்சிகள் அனைத்திற்கு பின்புலமாக இருந்தவர் டாக்டர் ஹோமி ஜே. பாபா. இவர் இந்தியாவின் பெருமுதலாளிகளுள் ஒருவரான ஜே.ஆர்.டி. டாடாவின் சகோதரர் மகன்.

இவருடைய தலைமையில் 1948ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி முதல் இந்திய அணுசக்தி ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் முடிவுகள் அன்றைய பிரதமரான ஜவஹர்லால் நேருவின் அங்கீகாரத்துடன் செயல்படுத்தப்பட்டன. இந்த ஆணையம் கேட்டுக்கொண்டபடி 1954ம் ஆண்டில் இந்திய அணுசக்தித்துறை நிர்மாணிக்கப்பட்டது.

முதல் அணுசக்தி ஆணையம் அமைக்கப்பட்டு 10வது ஆண்டில் அதே ஆணையம் மேலும் கூடுதல் அதிகாரங்களுடன் இரண்டாவது அணுசக்தி ஆணையமாக அறிவிக்கப்பட்டது. இதன் தலைவராகவும், அணுசக்தித் துறையின் செயலாளராகவும் மீண்டும் டாக்டர் ஹோமி ஜே. பாபா-வே பதவி ஏற்றார்.

இவர் பிரதமர் நேருவுக்கு மட்டுமே கட்டுப்பட்டவர். வேறு யாரும் இவரிடம் கேள்வி கேட்க முடியாது. ஆணையத்தின் மற்ற உறுப்பினர்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் மறுக்க தலைவருக்கு முழு உரிமை உண்டு. இந்த ஆணையம், தனக்கு தேவைப்படும்போது, தேவைப்படும் புதிய சட்டங்களை இயற்றிக் கொள்ளலாம்.

இத்தகைய ஜனநாயகத்தன்மை வாய்ந்த இந்திய அணுசக்தி ஆணையத்தில் தலைவரான டாக்டர் ஹோமி ஜே.பாபாவின் உறவினரும், இந்தியாவின் பெருமுதலாளிகளில் முதன்மையானவருமான ஜே.ஆர்.டி. டாடா இந்திய அணுசக்தி ஆணையத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

இந்திய அணுசக்தி சட்டம்

இந்தியாவின் முதல் அணுசக்தி சட்டம் 1948ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. பின்னர் 1962ம் ஆண்டில் அந்த சட்டம் முழுமையாக நீக்கப்பட்டு புதிய அணுசக்தி சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்கீழ் இந்திய அணுசக்தி ஆணையத்திற்கு வரம்பற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டன.

சில உதாரணங்களை பார்ப்போம்...

அணுசக்தி சட்டத்தின் பிரிவு 3 (சி) தடை செய்யப்பட்ட தகவல்களைப் பற்றிக்கூறுகிறது. அணுசக்தி ஆணையத்தால் முன்னரே வெளியிடப்பட்ட அல்லது பதிப்பிக்கப்பட்ட தகவல்களைத்தவிர

(1) கொள்முதல் அல்லது விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் குறித்த இடம், தரம் மற்றும் அளவு

(2) அந்தப் பொருட்களை தயாரிக்கும் அல்லது பயன்படுத்தும் முறை

(3) ஐசோடோப்புகளையோ அல்லது வேறெந்த பொரு ளையோ தயாரிப்பதற்கு - பயன்படுத்துவதற்கான கோட்பாட்டு முறை, வடிவம், கட்டமைப்பு மற்றும் இயக்கம் குறித்த தகவல்கள்

(4) அணு உலைகள் குறித்த கோட்பாடுகள், வடிவம், கட்டமைப்பு, இயக்கம் குறித்த தகவல்கள்

(5) மேற்கூறப்பட்ட அம்சங்களிலிருந்து பெறப்படும், ஆய்வு செய்யபடும் தகவல்கள்

.........ஆகிய அனைத்தும் தடை செய்யப்பட்ட தகவல்களாகும்.

அணுசக்தி சட்டத்தின் பிரிவு 18 தகவல் வெளிப்படுவதை தடுப்பது குறித்து கூறுகிறது.

18. தகவல் வெளிப்படுவதை தடுத்தல்

(1) மத்திய அரசு கீழ்க்கண்ட அம்சங்கள் குறித்த ஆவணங்கள், வரைபடங்கள், புகைப்படங்கள், திட்ட வரைபடங்கள், மாதிரிகள் ஆகியவை வெளியாவதை தடுக்கும் வகையில் உத்தரவுகளை பிறப்பிக்கலாம்

(a) அணுசக்தியை உற்பத்தி செய்தல், மேம்படுத்தல், பயன்படுத்தல் ஆகியவற்றில் ஈடுபடும், ஈடுபட திட்டமிட்டுள்ள அமைப்புகள், அல்லது

(b) செயலில் உள்ள அல்லது செயல்படுத்த திட்டமிட்டுள்ள அணுசக்தி அமைப்புகள் தேவைகள் மற்றும் செயல்முறைகள், அல்லது

(c) செயலில் உள்ள அல்லது செயல்படுத்த திட்டமிட்டுள்ள அணுசக்தி அமைப்புகளின் இயங்குமுறைகள்

(2) எந்த ஒரு நபரும் கீழ்க்கண்டவற்றை செய்யக்கூடாது.

(a)மேற்கூறப்பட்ட 18ம் பிரிவின் முதல் துணைப்பிரிவில் கூறப்பட்டுள்ள தகவல்களை பெறுவதற்கோ, பெற முயற்சிக்கவோ, அதனை வெளிப்படுத்தவோ கூடாது.

(b) இந்த சட்டத்தின்படி பணியாற்றுபவரோ, வேறு எந்த செயல்களை செய்பவரோ மத்திய அரசின் உத்தரவின்றி மேற்கூறப்பட்டவை தொடர்பான எந்த தகவலையும் வெளியிடக்கூடாது.

இந்திய அணுசக்தி சட்டத்தின் பிரிவு 24 மேற்கூறிய குற்றங்களை செய்பவர்களுக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையும், அபராதமும், அல்லது இரண்டும் விதிக்கலாம் என்று கூறுகிறது.

மேலும் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் மற்றவர்கள் நுழைவதை தடுக்கவும், அணுசக்தி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவும், கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைகளை பதிவு செய்யவும் தடைகள் இருந்தன. இவ்வாறு மத்திய அரசுக்கும், அதன் அதிகார மையங்களுக்கும் வரம்பற்ற அதிகாரங்களை கொடுத்த இந்திய அணுசக்தி சட்டம், இந்திய மக்களுக்கும், மக்களின் பிரதிநிதிகளுக்கும் இந்திய அணுசக்தி திட்டங்கள் குறித்த எந்த தகவலையும் பெற முடியாத நிலையிலேயே வைத்திருந்தது. வேறு வகையில் இந்த தகவலை பெறுவதையும் கடும் குற்றமாக நிர்ணயித்து 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்க வழிவகுத்த இந்திய அணு சக்தி சட்டம், 1962-ஐ மாற்ற வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.

குறிப்பாக இந்திய தொழில் மற்றும் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of Indian Chambers of Commerce and Industry), நாட்டின் மிக முக்கியமான அணுசக்தி திட்டத்தில் தனியார் துறை பங்கேற்பதற்கு தற்போதைய அணுசக்தி சட்டம் பெருந்தடையாக இருப்பதாகவும், எனவே அந்த சட்டத்தில் தேவையான திருத்தங்களை வலியுறுத்தி வருகிறது. இந்த அமைப்பில் இந்திய நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கவில்லை என்பதும், இந்தியக்கூட்டாளிகளின் மூலம் பன்னாட்டு பகாசுர நிறுவனங்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து பிரபல அணுவியல் நிபுணர் ராஜா ராமண்ணா தலைமையில், அணு சக்தி சட்டத்தை திருத்துவது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழு 1997ல் அமைக்கப்பட்டது. இந்த குழு 1998ம் ஆண்டில் அறிக்கையை சமர்ப்பித்தது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் இந்திய அணுசக்தி சட்டத்தை திருத்துவதற்கு மத்திய அரசு முடிவெடுத்து பணியாற்றி வருகிறது. டாடா, ரிலையன்ஸ், எல் அன்ட் ட்டி போன்ற இந்திய நிறுவனங்களும், பிரான்ஸ் நாட்டின் அரெவா போன்ற பன்னாட்டு பகாசுர நிறுவனங்களும் இந்திய அணுசக்தி துறையில் படிப்படியாக பங்கேற்க வழியேற்படுத்துவற்கே இந்த சட்டதிருத்தம் கொண்டு வரப்படுகிறது.

அதாவது தமது உழைப்பின் மூலம் அரசுக்கு வரி செலுத்திய குடிமகனுக்கு மறைக்கப்பட்ட விவரங்கள், இந்தியாவில் முதலீடு செய்து கொள்ளை லாபம் ஈட்டத் துடிக்கும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்களுக்கும், அதன் இந்திய ஏஜென்ட்களுக்கும் வழங்கப்படவிருக்கின்றன. மேலும் இந்தியாவின் அணுசக்தி கொள்கைகளை வடிவமைப்பதிலும், செயல்படுத்துவதிலும் இந்த தனியார் நிறுவனங்கள் பங்கேற்கப் போகின்றன.

நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் இந்திய குடிமகனுக்கு மறைக்கப்பட்ட - மறுக்கப்பட்ட ரகசியங்கள், பன்னாட்டு பகாசுர நிறுவனங்களுக்கு தவணைமுறையில், மலிவு விலையில் தாரை வார்க்கப்படவிருக்கிறது.

மின் ஆற்றலுக்கான ஒரே வழி அணு சக்திதான் என்று நாடு முழுவதும் அரசு நிறுவனங்கள் பிரச்சாரம் செய்து வந்தன. ஆனால் அரசின் செயல்பாடுகளும், சட்ட நடைமுறைகளும் அந்த கருத்தில் எண்ணற்ற கேள்விகளை எழுப்பின. இந்நிலையில் தனியார் நிறுவனங்களை அணுசக்தித் துறையில் பங்கேற்ப அனுமதிப்பது மென்மேலும் கேள்விகளை எழுப்பினாலும் பதில் சொல்லத்தான் ஆளில்லை.

- சுந்தரராஜன்

(sundararajan@lawyer.com)

Click here to bookmark this link.Channel Image02:39 'அல்லாஹ் தன் தூதரின் நாவினால் ஷைத்தானிடமிருந்து காப்பாற்றப் பட்டவர்! ஸஹாபாக்களின் வாழ்வினிலே...
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
உமர்[ரலி] அவர்கள் ஒரு பாதையில் சென்றால் ஷைத்தான் வேறு பாதையில் செல்வான் என்ற செய்தி நாமெல்லாம் அறிந்த ஒன்றுதான். மனிதனின் ரத்த நாளங்களில் எல்லாம் வியாபித்து ஆட்டிப்படைக்கும் ஷைத்தானின் அட்டூழியத்திலிருந்து பாதுகாப்பு பெற்ற மற்றொரு ஸஹாபி அம்மார் இப்னு யாசிர்[ரலி] அவர்களாவார்.

அல்கமா இப்னு கைஸ் அந் நகஈ(ரஹ்) அறிவித்தார்கள்;
நான் ஷாம் நாட்டிற்குச் சென்றேன். பள்ளிவாசலில் நுழைந்(து இரண்டு ரக்அத்கள் தொழு)ததும் 'இறைவா! எனக்கு ஒரு நல்ல நண்பரை ஏற்படுத்துவாயாக" என்று பிராத்தித்தேன். பிறகு அபுதர்தா(ரலி) அவர்களிடம் (சென்று) அமர்ந்தேன். அபுத்தர்தா(ரலி) 'நீங்கள் எந்த ஊர்க்காரர் ?' என்று கேட்டார்கள். அதற்கு நான் 'கூஃபா வாசி' என்றேன். அபுத்தர்தா(ரலி) '(நபி - ஸல் - அவர்கள் அறிவித்த) வேறெவருக்கும் தெரியாத (நயவஞ்சகர்கள் தொடர்பான) இரகசியங்களை அறிந்தவர் உங்களிடையே இல்லையா?' என்று ஹுதைஃபா(ரலி) அவர்களைத் கருத்தில் கொண்டு கேட்டார்கள். நான், 'ஆம் (இருக்கிறார்)" என்று பதிலளித்தேன். அவர்கள், 'தன் நபியின் வாயால் எவரை ஷைத்தானிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றினானோ அவர் உங்களிடையே இல்லையா?' என்று கேட்டார்... அம்மார்(ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டே இப்படிக் கூறினார்கள். நான் 'ஆம் (இருக்கிறார்)" என்று பதிலளித்தேன். அவர்கள், 'நபி(ஸல்) அவர்களின் (பல்துலக்கும்) மிஸ்வாக் குச்சியையும், தலையணையையும் சுமந்து சென்றவர்... அல்லது அவர்களின் அந்தரங்க உதவியாளர்.. (இப்னு மஸ்வூத்) உங்களிடம் இல்லையா?' என்று கேட்டார்கள். அதற்கு நான், 'ஆம் (இருக்கிறார்)" என்று பதிலளித்தேன்.
[ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 3743 ]

அல்கமா இப்னு கைஸ்(ரலி) அறிவித்தார். நான் ஷாம் நாட்டிற்குச் சென்றேன். அங்கிருந்த மக்கள், 'அபுத் தர்தா(ரலி), (இங்கு) வந்து, அல்லாஹ் தன் தூதரின் நாவினால் ஷைத்தானிடமிருந்து எவரைக் காப்பாற்றினானோ அவர் உங்களிடையே இருக்கிறாரா?' என்று கேட்டார்" எனச் சொன்னார்கள். முகீரா இப்னு மிக்ஸம்(ரலி), 'அல்லாஹ் தன் தூதரின் நாவினால் ஷைத்தானிடமிருந்து எவரைக் காப்பாற்றினானோ அவர்" என்று அபுத் தர்தா(ரலி) குறிப்பிட்டது அம்மார் இப்னு யாஸிர்(ரலி) அவர்களைத் தான்" என்று கூறினார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 3287

இத்தகைய சிறப்பு வாய்ந்த அம்மார்[ரலி] அவர்கள், இஸ்லாத்திற்காக முதன்முதலாக உயிர்த்தியாகம் செய்த சுமைய்யா[ரலி], யாசிர்[ரலி] ஆகியோரின் அருமை மகன் என்பது நாமறிந்த செய்திதான். இறைத்தூதர்[ஸல்] அவர்கள் சத்திய மார்க்கத்தை போதிக்கத்தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் இஸ்லாத்தை ஏற்று பல்வேறு இன்னல்களை சந்தித்தவர்கள் அம்மார்[ரலி] அவர்கள். ஒரு கட்டத்தில் இணைவைப்பாளர்களின் உச்சகட்ட துன்புறுத்தலின் போது, உள்ளத்தில் ஈமானை நிறைத்துகொண்டு உதட்டளவில் ஈமானுக்கு மாற்றமான கருத்தை சொன்ன அம்மார்[ரலி] அவர்கள் கைசேதம் அடைந்தவர்களாக அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களிடம் கூறியபோது கண்ணியம் பொருந்திய அல்லாஹ்,

مَن كَفَرَ بِاللّهِ مِن بَعْدِ إيمَانِهِ إِلاَّ مَنْ أُكْرِهَ وَقَلْبُهُ مُطْمَئِنٌّ بِالإِيمَانِ وَلَـكِن مَّن شَرَحَ بِالْكُفْرِ صَدْرًا فَعَلَيْهِمْ غَضَبٌ مِّنَ اللّهِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ
எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் குஃப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு.[16:106 ]

என்ற வசனத்தை இறக்கி அம்மார்[ரலி] அவர்களின் தியாகத்தை பொருந்திக் கொள்கிறான், மேலும் நபியவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா செல்வதற்கு முன்பாகவே மதீனாவிற்கு ஹிஜ்ரத் எனும் தியாகப் பயணம் மேற்கொண்ட அம்மார்[ரலி] அவர்கள் புனிதமிக்க மஸ்ஜிதுன் நபவியின் கட்டுமனான பணியில் அதிகம் உடலுழைப்பு செய்த அந்த வேளையில் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் கூறினார்கள்;

இக்ரிமா அறிவித்தார். இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடமும் அவர் மகன் அலியிடமும் 'நீங்களிருவரும் அபூ ஸயீத்(ரலி) அவர்களிடம் சென்று அவர் அறிவிக்கும் செய்தியைச் செவிமடுத்து வாருங்கள்!' எனக் கூறினார்கள். நாங்கள் சென்றோம். அபூ ஸயீத்(ரலி) தங்களின் தோட்டத்தைச் சரி செய்து கொண்டிருந்தார்கள். (எங்களைக் கண்டதும் தங்களின் மேலாடையைப் போர்த்திக் கொண்டு (பல செய்திகளை) எங்களுக்குக் கூறலானார்கள். பள்ளிவாசல் கட்டப்பட்ட செய்தியைக் கூறும்போது 'நாங்கள் ஒவ்வொரு செங்கல்லாகச் சுமப்பவர்களாக இருந்தோம். (ஆனால்) அம்மார்(ரலி) இரண்டிரண்டு செங்கற்களாகச் சுமக்கலானார். அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அவரின் மேனியில் படிந்த மண்ணைத் தட்டிவிட்டு 'பாவம் அம்மார்! இவரை அக்கிரமக்காரக் கூட்டம் கொலை செய்யும்! இவர் அவர்களைச் சுவர்க்கத்திற்கு அழைப்பார். அவர்களோ இவரை நரகத்திற்கு அழைப்பார்கள்." என்று கூறினார்கள். அதற்கு அம்மார்(ரலி) 'அந்தக் குழப்பங்களைவிட்டும் அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று கூறினார்கள்' என அபூ ஸயீத்(ரலி) குறிப்பிட்டார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 447

தான் கொல்லப்படுவோம் என்பதை இறைத்தூதர்[ஸல்] அவர்களின் வாயால் செவிமடுத்த அம்மார்[ரலி] அவர்கள், நம்மை போன்ற பலவீனமானமானவராக இருந்தால், உயிர்மீது ஆசையுடையவராக இருந்தால் அவர் இஸ்லாத்தை விட்டே விரண்டோடியிருப்பார். அம்மார்[ரலி] அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. தான் கொல்லப்படப்போகும் நாளை எண்ணி கண்ணீர் விட்டு கொண்டிருக்கவில்லை. மாறாக, அத்தகைய குழப்பத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று கூறுகிறார்கள் என்றால், அவர்கள் உள்ளத்தில் எந்த அளவு இறையச்சம் நிரம்பியுள்ளது என்பதை விளங்கிக்கொள்ளலாம். அந்த இறையச்சம்தான் அவர்களுக்கு ஷஹீத் எனும் அந்தஸ்த்தையும், சுவனத்தில் உயர்ந்த படித்தரத்தையும் பெற்றுத்தந்துள்ளது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அம்மார்[ரலி] அவர்களைப் போன்று நம்முடைய வாழ்வும்-மரணமும் இஸ்லாத்திற்காகவே அமைந்திட அருள்புரிவானாக!

Tue 08

Click here to bookmark this link.Channel Image17:15 [பாடம்-80] குற்றங்களும் தண்டனையும். முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
கண்டிப்பதற்காகவும் புத்தி புகட்டுவதற்காகவும் எத்தனை முறை அடிக்கலாம்?

2166. அபூ புர்தா(ரலி) அறிவித்தார் : ''அல்லாஹ் விதியாக்கியுள்ள (குற்றவியல்) தண்டனைகளில் ஒன்றில் தவிர வேறு எதற்காகவும் பத்து சாட்டையடிகளுக்கு மேல் வழங்கப்படலாகாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறுவார்கள்.

அடிமைகளின் மீது அவதூறு கூறுதல்.

2167. 'நிராபராதியான தம் அடிமையின் மீது (விபசார) அவதூறு கூறியவருக்கு மறுமை நாளில் சாட்டையடி வழங்கப்படும். அவர் சொன்னதைப் போன்று அந்த அடிமை இருந்தால் தவிர!' என்று அபுல் காசிம் (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Click here to bookmark this link.Channel Image04:33 [பாகம்-8] முஸ்லிமின் வழிமுறை. இஸ்லாம்குரல்.காம்
நபி(ஸல்) அவர்களுடன் நடந்து கொள்ளும் முறை. நபி (ஸல்)அவர்களுடன் ஒரு முழுமையான ஒழுங்குடன் நடந்து கொள்வது தன் கடமை என்பதை ஒரு முஸ்லிம் மனதார உணர்ந்து கொள்ளவேண்டும். இதற்குக் காரணம் இது தான்: இவ்வொழுங்கை அல்லாஹ்தான் முஃமினான ஆண்,பெண் அனைவர் மீதும் கடமையாக்கி இருக்கின்றான். அல்லாஹ் கூறுகிறான்: முஃமின்களே! அல்லாஹ் மற்றும் அவன் தூதரின் முன்னிலையில் முந்தாதீர்கள்.(49:1) “இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள். மேலும் ஒருவர் மற்றவரிடம் உரத்த குரலில் பேசிக்கொள்வதைப் போல் நபியிடம் உரத்த [...]

Mon 07

Click here to bookmark this link.Channel Image08:45 சாமிரி பற்றிய குர்ஆனின் கூற்றில் சரித்திர தவறா? கிறிஸ்தவம் பார்வை
திருக்குர்ஆனில் சரித்திர தவறா? (பகுதி – 2)" அதன் முன்னாலும், அதன் பின்னாலும் அசத்தியம் அதனிடம் வந்து சேராது – ஞானமுள்ள புகழுக்குரியவனிடமிருந்து (அது) இறக்கி வைக்கப்பட்டதாகும்” (திருக்குர்ஆன் 41:42)சாமிரி பற்றிய குர்ஆனின் கூற்றில் சரித்திர தவறா?கிறிஸ்தவர்களின் விமர்சனம்://மோசேயினுடைய காலத்தில் சமாரியர்கள் இருந்ததாக “எந்தவொரு” சரித்திரமும் கூறவில்லை. மாறாக கி. மு 722 ஆண்டுகளில் தான்

Sun 06

Click here to bookmark this link.Channel Image17:00 [பாடம்-79] குற்றவியல் தண்டனைகள். முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
பேரீச்ச மட்டையாலும் காலணியாலும் (குடிகாரரை) அடித்தல்.

2159. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : மது அருந்திய ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டபோது அவர்கள் 'இவரை அடியுங்கள்'' என்றார்கள். எங்களில் சிலர் கையால் அடித்தனர். சிலர் காலணியால் அடித்தனர். இன்னும் சிலர் (முறுக்கப்பட்ட) தம் துணியால் அடித்தனர். (தண்டனை முடிந்து அவர்) திரும்பியபோது மக்களில் சிலர், அல்லாஹ் உம்மைக் கேவலப்படுத்துவானாக!'' என்று கூறி (சாபமிட்ட)னர். நபி(ஸல்) அவர்கள், 'இவ்வாறு கூறி, இவருக்கெதிராக ஷைத்தானுக்கு ஒத்தாசை செய்யாதீர்கள்'' என்றார்கள்.

2160. அலீபின் அபீ தாலிப்(ரலி) அறிவித்தார் : நான் தண்டனை நிறைவேற்றியதால் எவரேனும் இறந்தால் (அதற்காக) நான் கவலை அடையப் போவதில்லை. குடிகாரரைத் தவிர! ஏனெனில், (தண்டனை வழங்கப்பட்டதால்) குடிகாரர் இறந்தால் அவருக்காக நான் உயிரீட்டுத் தொகை வழங்கிடுவேன். இதற்குக் காரணம், (மது அருந்தியவனுக்குத் தண்டனையாக) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (குறிப்பிட்ட எதையும்) வழிமுறையாக்கவில்லை.

குடிகாரணை சபிப்பது வெறுக்கப்பட்டதாகும். மேலும், அவன் மார்க்கத்திலிருந்து வெளியேறியவன் அல்லன்.

2161. உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் 'அப்துல்லாஹ்' என்றொருவர் இருந்தார். அவர் 'ஹிமார்' (கழுதை) என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்டு வந்தார். அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களை சிரிக்க வைப்பார். மது அருந்தியதற்காக அவரை நபி(ஸல்) அவர்கள் அடித்துள்ளார்கள். (போதையிலிருந்த) அவர் ஒருநாள் (நபி(ஸல்) அவர்களிடம்) கொண்டு வரப்பட்டார். அவரை அடிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர் அடிக்கப்பட்டார். அப்போது (அங்கிருந்த) மக்களில் ஒருவர், 'இறைவா! இவர் மீது உன் சாபம் ஏற்படட்டும்! இவர் (குடித்ததற்காக) எத்தனை முறை கொண்டு வரப்பட்டுள்ளார்!'' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இவரை சபிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார் என்றே நான் அறிந்துள்ளேன்'' என்று கூறினார்கள்.

திருடனைப் பெயர் குறிப்பிடாமல் (பொதுவாக) சபித்தல்.

2162. அல்லாஹ்வின் சாபம் திருடன் மீது ஏற்படட்டும்! அவன் (விலை மதிப்புள்ள) தலைக்கவசத்தைத் திருடுகிறான்; அதனால் அவனுடைய கை வெட்டப்படுகிறது. (விலை மலிவான) கயிற்றையும் அவன் திருடுகிறான்; அதனாலும் அவனுடைய கை துண்டிக்கப்படுகிறது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அஃமஷ்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 'தலைக்கவசம்' என்பது இரும்பாலான தலைக்கவசத்தையும் 'கயிறு' என்பது ஒரு சில திர்ஹம்கள் (வெள்ளிக்காசுகள்) பெறுமானமுள்ள கயிற்றையும் குறிக்கும் என்று (இதன் அறிவிப்பாளர்கள்) கருதுகிறார்கள்.

''திருடிய ஆண், திருடிய பெண் ஆகியோரின் கரங்களைத் துண்டித்து விடுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 05:38 வது) வசனத் தொடரும், எந்த அளவு திருடினால் (கை) வெட்ட வேண்டும்? என்பது பற்றியும்.

2163. கால் தீனார்(பொற் காசு), அல்லது அதற்கு மேல் திருடியதற்காகக் கை வெட்டப்படும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார். இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

2164. ஆயிஷா(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்களின் காலத்தில் 'தோல் கேடயம்' அல்லது 'தோல் கவசத்தின்' விலை (மதிப்புள்ள பொருளு)க்காகவே தவிர, திருடனின் கை துண்டிக்கப்பட்டதில்லை. இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

2165. இப்னு உமர்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் மூன்று திர்ஹங்கள் (வெள்ளிக்காசுகள்) விலைமதிப்புள்ள தோல் கேடயத்திற்காக (அதைத் திருடியவரின் கரத்தை)த் துண்டித்தார்கள்.
Click here to bookmark this link.Channel Image06:14 அறிவியலும் அரையவியலும் - 4 வஹ்ஹாபி
மேற்காணும் தலைப்புக்குப் பொருத்தமாக இருந்ததால், வலைப்பதிவர் நல்லடியாரிடம் அனுமதி பெற்று அவரது 'விரை'ப்பான கேள்விகளும் விடாத பதில்களும்... பதிவு இங்கு மீள்பதிவு செய்யப் படுகிறது; அவருக்கு நன்றி!
ஃஃஃ

குர்ஆன் - அறிவுக்கும் அறிவியலுக்கும் ஏற்ற எக்காலத்திற்கும் பொருந்தும் ஓர் வாழ்வியல் நெறிநூல்! இது அறிவியல் நூலல்ல; ஆனாலும் அறிவியலையும் உள்ளடக்கியது. குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள அனேகக் குறிப்புகள் தற்கால ஆய்வுகளுடன் / நிரூபனங்களுடன் 100% ஒத்துப்போகிறது. எனவேதான் "இதில் முரண்பாடுகள் இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம்" என்று ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் சவால் விடுகிறது. உலகில் வேறு எந்தநூலும், கொள்கையும் இவ்வாறு சவால் விட்டதாக அல்லது அத்தகைய சவால்களை எதிர்கொண்டு நிலைத்திருப்பதாகவோ அறியமுடியவில்லை.

நிற்க,

திருவாளர் தருமி "மதங்கள்" என்ற தலைப்பில் "இஸ்லாம்-2" குறித்து எழுதி இருந்தார். மனிதவிந்து உற்பத்தியாகுமிடம் குறித்து விந்தையான பதிவு அது! குர்ஆன் வசனம் 86:05-07ஐ மேற்கோள் காட்டி எழுதி இருந்தார்.
5. எனவே, மனிதன் எதிலிருந்து தான் படைக்கப்பட்டுள்ளான் என்பதை (நோட்டமிட்டு)ப் பார்ப்பானாக!
6. குதித்து வெளியாகும் நீரினால் அவன் படைக்கப்பட்டுள்ளான்
7. (ஆணுடைய) முதுகுத் தண்டிற்கும், (பெண்ணுடைய) நெஞ்செலும்புகளுக்குமிடையில் இருந்து அது வெளியாகிறது.

அவரின் கேள்வி எனனவென்றால், "மனிதன் விந்திலிருந்து படைக்கப் பட்டான் என்று நேரடியாகச் சொல்லாமல் முதுகுத் தண்டிற்கும், விலா எழும்புக்கும் இடையில் இருந்து குதித்து வெளியாகும் நீரினால் படைக்கப்பட்டுள்ளான் என்று ஏன் சொல்ல வேண்டும்?" என்றதோடு "விந்துக்கும் முதுகுத் தண்டிற்கும் என்ன தொடர்போ?" என்று அறிவியல்(!) பூர்வமாகக் கேள்வி ஒன்றையும் கேட்டிருந்தார்!

அவரின் பதிவிலிருந்தும் பின்னூட்டங்களிலிருந்தும் திரும்பத் திரும்ப தெரிவது, இஸ்லாம் குறித்த அரைகுறை தகவல்களுடன் அறிவியலைப் பற்றிய அறியாமையும்தான்!

இது தருமியின் புதிய ஆய்வொன்றுமில்லை. ஏற்கனவே அவர் வேறொரு வசனத்தை எடுத்தெழுதி, அதற்கு விளக்கம் சொல்லப் பட்ட கருதான்:
படைப்புக்கொள்கை: இஸ்லாமில் மனிதன் உறைந்த ரத்தத்திலிருந்து உண்டாக்கப் பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அது யாருடைய ரத்தம் ? மனிதன் படைக்கப் படுவதற்கு முன் எங்கிருந்து ரத்தம் வந்தது? ஒருவேளை கடவுளின் ரத்தமாக இருக்குமோ? - தருமி
பதில் : முதல் மனிதனின் படைப்பையும் அவன் சந்ததியினரின் பிறப்பையும் குழப்பிக் கொண்டுள்ளீர்கள் . முதல் மனிதன் இறைவனின் அற்புதங்களால் களி மண்ணின் மூலச்சத்திலிருந்து படைக்கப்பட்டார் (6:2, 7:12, 15:33, 32:7, 35:11, 55:14) என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு. மனித வளர்ச்சி நிலைகளைப் பற்றி எந்த வேத நூலும் விவரிக்காத வகையில் குர் ஆன் விவரிக்கிறது, பார்க்க: 23:12,13 &14). இஸ்லாம் சொல்லும் படைப்புக் கொள்கை தவறு என்பது உங்கள் வாதமானால், நீங்களே சொல்லுங்கள் மனிதன் எதிலிருந்து தோன்றினான்? பகுத்தறிவு பெற்ற குரங்குகள்தான் தற்கால மனிதனின் மூதாதையர் என்றால், இன்னும் சில குரங்குகள் ஏன் பகுத்தறிவடைந்து மனிதனாகவில்லை?

குர்ஆன் வசனம் 86:07இல் ஒரு குழந்தையின் உருவாக்கத்தில் உள்ள ஒரு பகுதி மட்டும் சொல்லப் படுகிறது. يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ என்பதற்கு விலா எலும்புகளுக்கும் முதுகுத் தண்டுக்கும் இடையிலிருந்து வெளியேறும் திரவம், கருவுக்கான பகுதி மூலம் என்று சொல்கிறது. இங்குக் கேள்வி என்னவென்றால் விந்து (مَنِيٍّ/SPERM) நேரடியாகச் சொல்லாமல் ஏன் திரவம் (مَاءٍ/FLUID) என்று மறைமுகமாகச் சொல்ல வேண்டும்? என்பதே!

குர்ஆனின் இன்னொரு வசனத்தில் (075:037) "கருவறைக்குள் (செலுத்தப்பட்ட) விந்தின் ஒரு துளியாக மனிதன் (مَنِيٍّ) இருக்கவில்லையா?" என்று கேட்கும் குர்ஆன், வசனம் 86:06 இல் திரவம் என்று பொதுமையில் குறிப்பிடுகிறது!

இரண்டும் வெவ்வேறு வடிவிலானவை / நிலைகளைக் கொண்டவை என்ற வேறுபாடு நன்கு தெரிந்திருப்பதால் வெவ்வேறான சொல்லாடல் கையாளப் பட்டுள்ளது. ஆணிடமிருந்து வெளியாகும் தாது (SEMEN) பல்வேறு சுரப்பிகளைக் கடந்து இறுதியில் விந்தாக (SPERM) மாற்றமடைகிறது.

கருவாக்கத்திற்கு ஆணின் விந்து (SPERM) பகுதி மூலமாகும். அந்த விந்து ஆணின் விரையிலிருந்து உருவாகிறது என்பதும் பொதுவானது.

பொதுவான ஒன்றை குர்ஆன் வெவ்வேறு பதங்களில் குறிப்பிடுவதற்கு வேறுபட்ட காரணம் இருக்க வேண்டும். கர்ப்பத்தில் விந்துத்துளியாக இருக்கவில்லையா? என்று கேட்கும் குர்ஆன், விலா எலும்புகளுக்கும் முதுகுத் தண்டுக்கும் இடையிலிருந்து வெளியேற்றப்பட்ட திரவம் என்று வேறுபடுத்துவது எப்படிச் சாத்தியமாயிற்று?


தாது (SEMEN) என்ற விந்தின் (SPERM) மூலப்பொருள் பற்றி நவீன மருத்துவம் விளக்குகிறது. குர்ஆன் வசனம் 86:06ம் இதைத்தான் சொல்கிறது. நுண்ணாடி (MICROSCOPE) மருத்துவ உபகரணங்களும் சாத்தியமில்லாத காலகட்டத்தில் எழுதப்படிக்கத் தெரிந்திராத ஒருவரால் ஒரே விசயத்தை துல்லியமான வெவ்வேறு சொற்களால் விளக்க முடிந்தது?

விந்து (SPERM) ஆணின் விரையிலிருந்து உருவாகிறது என்று பொதுவாக நம்பப்பட்ட காலத்தில் (சமீபகாலம் வரையிலும்கூட) எல்லோரையும்போல் இருகால்களுக்கு இடைப்பட்ட உறுப்பிலிருந்து விந்து வெளியாகிறது என்று சொல்லாமல் "விலா எலும்புக்கும் முதுகுத் தண்டுக்கும் இடையிருந்து உருவாகும் 'திரவம்' என்று துல்லியமாக வேறுபடுத்திச் சொல்வதன் மூலம் படைப்பின் ரகசியங்களை அறிவித்தவன் படைத்தோன் அல்லாஹ் என்பது இன்னொரு முறை உறுதியாகிறது.

***************************************

தருமியின் பதிவிலும் பின்னூட்டத்திலும் விந்து உற்பத்தியாகுமிடம் விரை (TESTICLE) என திரும்பத் திரும்ப சொல்கிறார்.அவரது பதிவில் பின்னூட்டம் இட்டுள்ள அறிவுசீவிகளும் "ஆமா, ஆமா" என்கின்றனர். நவீன மருத்துவமும் குர்ஆனும் வெவ்வேறு நிலைகளைச் சொல்கின்றன.

தாதுவுடன் (SEMEN) பல்வேறு திரவங்களும், தனிமங்களும் கலந்துள்ளது. SEMINAL VESICLES, PROSTATE GLANDS மற்றும் விரைகளில் சுரக்கும் பிற சுரப்பிகளும் கலந்துதான் விந்தாக ( SPERM ) வெளியேற்றப்படுகிறது. தாதுவுடன் Citric acid, prostaglandin, flavin, ascorbic acid, ergothioneine, cholesterol, phospholipids, fibrinolysin, zinc, phosphatase acid, phosphase, hyaluronidase ஆகிய தனிமங்களுடன் கலந்து விந்தணு fallopian tube நோக்கி நீந்திச் செல்கிறது. இக்கலவைகள் இல்லாமல் பயணிக்கும் கோடிக்கணக்கான விந்தணுக்களால் மட்டும் ஆரோக்கியமான கருவாக்கம் சாத்தியமில்லை என்று நவீன மருத்துவம் சொல்கிறது.

இருதொடைகளுக்கு இடைப்பட்ட உறுப்பிலிருந்து வெளியாகும் விந்தணுவைச் சொல்லாமல், முதுகுத் தண்டுக்கும் விலா எலும்புக்கும் இடைப்பட்ட பல்வேறு சுரப்பிகளிலிருந்து உருவாகும் தாது (SEMEN) குறித்து இவ்வசனத்தில் சொல்லப்பட்டு உள்ளது.
"எல்லாம் தெரிந்த கடவுள் அறிவியல் உண்மைகளைச் சொல்ல வேண்டுமென்றால், 2 + 2 = 4 என்றல்லவா சொல்ல வேண்டும். விந்திலிருந்து மனிதன் பிறக்கிறான் என்று சொல்வதை விட இடுப்பிலிருந்து வரும் திரவத்தால் மனிதன் பிறக்கிறான் என்பது என்ன அறிவியல்?"
என்று தருமி கேட்கிறார். தான் விரும்பும் சொல்லை - அது பிழையாக இருந்தாலும் - தான் நம்பாத கடவுள் சொல்ல வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது அவருக்கே ஓவரா தெரியவில்லை? ;-)

மேலும் முதுகுத் தண்டுக்கும் விந்துக்கும் என்ன தொடர்பென்றும் தருமி கேட்டுள்ளார். முதுகுத்தண்டில் ஏற்படும் பாதிப்புகளால் ஆணின் தாது விருத்தி/விந்து செலுத்தும் வீரியம் குறையும் என்று முதுகுத் தண்டுக்கும் விந்துக்கும் உள்ளத் தொடர்பை தற்கால மருத்துவக் குறிப்புகள் சொல்கின்றன. (Spinal Cord Injury (SCI) என்று கூகிலிட்டால் தொடர்புடைய சுட்டிகள் கிடைக்கும்.)

கருவின் பல்வேறு நிலைகள் குறித்து விளக்கும்போது வெவ்வேறு சொற்களைக் குர்ஆன் ஆளுகின்றது. காட்டாக,
"ஒவ்வொருவனுக்கும் அவன் மனிதனாக (பிறப்பெடுக்கு) முன்னர் ஒரு கால இடைவெளி சென்றுவிடவில்லையா? அக்காலகட்டத்தில் அவன் இன்ன ஒன்றாய் இருந்தான் என்று குறிப்பிட்டுக் கூறவியலா நிலையில் இருக்கவில்லையா?
(பின்னர், ஆண்-பெண்ணின்) கலப்பான விந்திலிருந்து மனிதனைத் திண்ணமாக நாமே படைத்தோம் ..." அல் குர்ஆன் 76:1-2.

ஆணின் விந்தும் பெண்ணின் சினைமுட்டையும் கலந்துதான் கரு உருவாகிறது என்பது அண்மைக்காலக் கண்டுபிடிப்புத்தான்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இஸ்லாம்-1இல் இவர் எடுத்து வைத்த கேள்விகள் கேலிக்கூத்தானவை.
(சில ஐயங்கள்:)
ஒரே கடவுளால் தரப்பட்ட சட்டங்கள் எப்படி வித்தியாசமாகின?
பழைய ஏற்பாட்டில் கண்ணுக்கு கண்; பல்லுக்குப் பல் என்ற பழி வாங்குதல் எப்படி கிறித்துவர்களின் - ஈசாவின் - சட்டத்தில் இடது கன்னத்தில் அடித்தால் வலது கன்னத்தைக் காட்டு என்றாயிற்று? பின் எப்படி குரானில் மறுபடியும் பழைய நிலை வந்தது?
600 வருஷத்துக்கு முன்னால் கடவுள் ஈசா நபியிடம் 'வாளை உன் உறையில் போடு; ஏனெனில் வாளை எடுத்தவன் வாளால் சாவான்' என்று அவரைச் சொல்லும்படி அறிவுறுத்தி விட்டு, அதன் பின் 600 வருஷம் கழித்து பல போர்க்களங்களை தன் நபியைக் காணச் செய்கிறார். ஏனிப்படி 600 வருஷத்தில் ஜெகோவாவிடம் / அல்லாவிடம் ஒரு மாற்றம்?
"ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைத் திருப்பிக் காட்டு என்று நாம் ஈஸாவுக்குக் கட்டளை இட்டிருந்தோம்" என்றும் "வாளை எடுத்தவன் வாளால் சாவான்" என்றும் குர்ஆனில் இருந்தால்தான் இஸ்லாமியக் கடவுள் மாற்றி மாற்றிப் பேசுகிறார் எனப் பொருள் கொள்ள முடியும். நினைத்த நேரத்தில் நினத்தவர்கள் நிறையப் பேரால் திருத்தப் பட்டு, நடைமுறையில் உள்ள புதிய ஏற்பாடு என்பது அல்லாஹ்வின் வார்த்தைகள் என்று யார் தருமிக்குச் சொல்லிக் கொடுத்தது? என்று புரியவில்லை.

எல்லாவற்றையும் படிப்பது நல்லதுதான். ஆனால், ஒன்றோடு ஒன்று குழப்பிக் கொள்ளக் கூடாது; குழம்பக் கூடாது; குழப்பம் விளைவிக்கக் கூடாது.

இஸ்லாத்தைப் புறந்தள்ளப் புதிதாக ஒரு காரணம் கண்டு பிடித்திருக்கிறார் தருமி:
இசையின் ஆரம்பமே கடவுளோடு இணைந்தது என்பார்கள். கோவிலில் பாடப் பட்டு, பின்பு அரசர்களின் அரண்மனைக்குள் நுழைந்து, பின் மக்களிடம் இசை வந்ததென்பார்கள். Divine music -> Chamber music -> Popular music. ஆனால், இங்கு கடவுளே இசையை மறுக்கிறது; வெறுக்கிறது! பக்தியை இசையால் நிரப்பிய நம் சமூகத்தில் இந்தக் கருத்து ஒரு ஆச்சரியத்தைத்தான் அளிக்கிறது. பாடலும், இசையும், ஒவியமும் இச்சை தூண்டும் கருவிகளா? இது வெறும் ஆச்சரியம் மட்டுமல்ல; நம்ப முடியாத ஒன்று. நிச்சயமாக இது ஒரு தனிமனிதனின் (முகமது) விருப்பு வெறுப்பாக இருக்க முடியுமே ஒழிய சர்வ நிச்சயமாக 'ஒரு கடவுளின்' விருப்பு வெறுப்பாக இருக்கவே முடியாது. இஸ்லாமைப் புறந்தள்ள இந்த ஒரு காரணம்கூட போதும்.
"என்பார்கள்" என்பவர்கள் யார்? என்பதைக் கடைசிவரை தருமி சொல்லவில்லை. இசை என்பது மனிதனைத் தன்னிலை மறக்கச் செய்வது. தன்னிலை மறக்கும் மயக்கும் எதுவும் இஸ்லாத்தில் இடம்பெறவியலாது. மற்றபடி இச்சை தூண்டுவது என்று இஸ்லாம் கூறுவதாக தருமி ஏதோதோ எழுதுகிறார்.

தருமிக்கு இஸ்லாம் வெறுத்துப் போனதுக்கு அவர் கூறிய முதல் காரணம் விசித்திரமானது. "இஸ்லாத்தில் முதல் பெண்ணுக்குப் பெயரே இல்லை" என்று தருமி தொடக்கத்தில் வெறுத்துப் போயிருந்தார்.அது தொடர்பாகப் பகுத்தறிவாளன் எனும் பதிவர் 9 கேள்விகளை தருமிக்குப் பின்னூட்டத்தில் வைத்ததாகவும் அந்தப் பின்னூட்டத்தைத் தருமி முடக்கி விட்டதாகவும் பதிவொன்றில் அவர் சலித்துக் கொண்டது இப்போது நினைவுக்கு வருகிறது.
Click here to bookmark this link.Channel Image02:01 அப்சல் குருவுக்கு ஒரு நீதி - அத்வானிக்கு ஒரு நீதியா? எதிரொலி
பாகிஸ்தான் தீவிரவாதிகள் நமது நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்தியபோது நமது பாதுகாப்பு வீரர்கள் உட்பட தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். ஆளும் கட்சியாக பாஜகவும் காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையிலும் இருந்தபோது 'நாட்டையே உலுக்கிய' இச்செயல் பரபரப்பாகப் பேசப்பட்டது.

தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதால் அநீதியிழைக்கப்பட்ட பாதுகாப்புப் படையினர் குடும்பத்திற்கு நீதிவழங்கவும் வழக்கை மேற்கொண்டு நடத்தக் குற்றவாளி தேவை என்பதால் முன்னாள் காஷ்மீர் போராளிகளின் கூட்டாளியும் பிற்கால ராணுவ உளவாளியுமான 'அப்சல் குரு' வழக்கின் பிரதானக் குற்றவாளியாக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு நாட்டுமக்களின் கூட்டுமனசாட்சியைக் கருத்தில் கொண்டு மரணதண்டனை விதிக்கப்பட்டார்.

உயிர்பிழைப்பதற்கான அத்தனை வாசல்களும் அடைக்கப்பட்ட பிறகு இனி யாரிடமும் மேமுறையீடு செய்யப்போவதில்லை என்று இருந்தாலும், மனித உரிமை ஆர்வலர்களால் அவரின் மரணதண்டனை இந்திய ஜனாதிபதியின் கருணை மணுவுக்காகக் காத்திருக்கிறது.

நாடாளுமன்றத் தாக்குதலை நடத்தியவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதிலும், பாதிக்கப்பட்ட பாதுகாப்புப்படையினர் குடும்பத்திற்கு நீதியும் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் ஆட்சேபனை இல்லை.

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் நாட்டு மக்களின் கூட்டு மனசாட்சியைத் திருப்தி செய்வதற்காக அப்சல் குருவுக்கு மரண தண்டனை வழங்குவதாகத் தீர்ப்பளித்தார். ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட போதும், கிரகாம் ஸ்டெயின் உயிருடன் கொளுத்தப்பட்டபோதும், ஒரிசா கந்தன்மால் கிறிஸ்தவர்களின் உடமைகள், உயிர்கள் நாசமாக்கப்பட்ட போதும் விழிக்காத 'கூட்டு மனசாட்சி' அப்சல்குரு விசயத்தில் மட்டும் விழித்துக்கொண்டதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?

நாடாளுமன்றம் என்பது அரசியல்வாதிகளின் புனிதத் தளமல்ல. ஜனநாயகப் போர்வையில் சர்வாதிகாரிகள் சட்டம் இயற்றும் சபையாகவோ அல்லது ஆளுங்கட்சியின் அடாவடிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அவையாகவுமே இருந்து வருகிறது. மக்களுக்குச் சேவையாற்றப்போகிறோம் என்று சொல்லி கேள்விநேரத்தைப் புறக்கணித்த புன்னியவான்கள் புழங்குமிடம்தான் நமது நாடாளுமன்றம்! அம்பானிகளைப் பகைத்துக் கொள்ளாத வரையில் மட்டுமே ஆளுங்கட்சி அல்லது எதிர்கட்சி வரிசையில் அமரமுடியும்.


1992 டிசம்பர்-6 அன்று காவிக் கயவர்களால் திட்டமிட்டு தகர்க்கப்பட்ட பாப்ரி மஸ்ஜித் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தளம் என்பதோடு இந்திய வரலாற்றின் பாரம்பர்யச் சின்னமும் ஆகும். பாப்ரி மஸ்ஜிதையும் இடித்து விட்டு நாடு முழுவதும் முஸ்லிம்களைக் கருவருத்தக் கூட்டத்திற்கு முறையே பிரதமர், துணைப் பிரதமர் மற்றும் கேபினட் அமைச்சரகங்களைத் தாரை வார்த்தோம்.

தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்குச் சமம் - நூறு குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு அப்பாவி தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதெல்லாம் வெறும் வாய்ஜாலம் தானா? 17 ஆண்டுகளாக கிட்டத்தட்ட 10 கோடி செலவிட்டு, இதைச் சாக்காக வைத்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நாடாளுமன்ற நேரங்களை வீணடித்து, அவையை முடக்கி, ஒத்திவைத்து என பொன்னான நாடாளுமன்ற நேரங்களை வீணடித்து, சென்றவாரம் தாக்கல்செய்யப்பட்ட லிபரான் கமிசன் அறிக்கையையும் ஏனைய கமிசன் அறிக்கைகளைப்போல் கிடப்பில் போடப்படுமென்றே தெரிகிறது.

லிபரான் கமிசன் அறிக்கையின்படி யாருக்கும் தண்டனைகள் பரிந்துரை செய்யப்படாத காரணத்தால் 68 குற்றவாளிகளில் எவனையும் தண்டிக்கப் போவதில்லையென சொல்லப்படுகிறது.எனில்,என்ன மயிருக்காக இத்தனை களேபரங்கள் நடத்தினர்? என்று சட்டத்தையும் இறையான்மையையும் மதிக்கும் சாமான்யரின் மனதில் கேள்வி எழுகின்றது.

அப்சல் குருவுக்கு மரண தண்டனை வழங்கிய கூட்டு/குருட்டு மனசாட்சி அத்வானி உள்ளிட்ட 68 குற்றவாளிகளுக்காவும் விழித்துக்கொண்டு என்ன தண்டனையை வழங்கப்போகிறது? நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளிடமிருந்து வந்த செல்போன்அழைப்பிற்காக அப்சல் குருவுக்கு மரண தண்டனை வழங்கியது சரியென்றால், பாப்ரி மஸ்ஜிதை இடிக்கும் நோக்கத்துடன் மேடைபோட்டு ஒலிபெருக்கியில் அழைத்த சங்பரிவாரக் கும்பலைச் சர்ந்த 68 பேர் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும்? யார் வழங்குவார்? என்பதே தொக்கி நிற்கும் கேள்வி!

Fri 04

Click here to bookmark this link.Channel Image17:29 [பாடம்-78] பாகப்பிரிவினைச் சட்டங்கள். முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
(இறந்தவருக்கு) மகன் (உயிருடன்) இல்லாதபோது மகனின் மகனுக்கு (பேரனுக்கு)க் கிடைக்கும் சொத்துரிமை.

2153. (பாகப்பிரிவினை தொடர்பாகக் குர்ஆனில் நிர்ணயிக்கப்பெற்றுள்ள) பாகங்களை (முதலில்) அவற்றுக்கு உரியவர்களிடம் சேர்த்துவிடுங்கள். பிறகு எஞ்சியிருப்பது இறந்தவரின்) மிக நெருக்கமான (உறவினரான) ஆணுக்கு உரியதாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

(இறந்தவருக்கு) மகள் இருக்கும்போது மகனுடைய மகளுக்கு (பேத்திக்கு)க் கிடைக்கும் சொத்துரிமை.

2154. ஹுஸைல் இப்னு ஷுரஹ்பீல்(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : அபூ மூஸா(ரலி) அவர்களிடம், (இறந்த ஒருவருக்கு) மகள், மகனுடைய மகள், சகோதரி ஆகியோர் (இருந்தால், அவர்களுக்குக் கிடைக்கும் சொத்துரிமை) குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள் 'மகளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதியும் சகோதரிக்கு (மீதி)ப் பாதியும் கிடையாது)'' என்று கூறிவிட்டு, '(வேண்டுமானால்,) இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் சென்று (கேட்டுப்) பாருங்கள். அன்னாரும் என் (கருத்தி)னையே பிரதிபலிப்பார்கள்'' என்றார்கள். எனவே, இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் (சென்று) அபூ மூஸா(ரலி) அவர்களின் கூற்றைத் தெரிவித்து (இது குறித்து விளக்கம்) கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'இவ்வாறு (மகனின் மகளுக்கு சொத்தில் பங்கு இல்லை என்று) நானும் சொன்னால் நிச்சயம் நான் வழி தவறியவனாகி விடுவேன்; நான் நேர்வழியடைந்தவர்களில் ஒருவனாக இருக்கமாட்டேன். இந்த விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள் அளித்த தீர்ப்பையே நானும் அளிக்கிறேன்: மகளுக்குப் பாதியும் மகனின் மகளுக்கு ஆறில் ஒரு பாகமும் வழங்கப்படவேண்டும். அப்போதுதான் மூன்றில் இரண்டு பாகங்கள் நிறைவாகும். எஞ்சியிருப்பது சகோதரிக்கு உரியதாகும்'' என்றார்கள். பின்னர் அபூ மூஸா(ரலி) அவர்களிடம் சென்று இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் சொன்னதைத் தெரிவித்தோம். அப்போது, 'இந்தப் பேரறிஞர் (இப்னு மஸ்வூத்(ரலி) உங்களிடையே இருக்கும் வரை என்னிடம் (விளக்கம்) கேட்காதீர்கள்'' என்று (புகழ்ந்து) சொன்னார்கள்.

ஒரு கூட்டத்தாரால் விடுதலை செய்யப் பட்ட அடிமை அவர்களைச் சேர்ந்தவனே. ஒரு கூட்டத்தாரின் சகோதரி மகன் அவர்களைச் சேர்ந்தவனே!

2155. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் : 'ஒரு கூட்டத்தாரால் விடுதலை செய்யப்பட்ட அடிமை அவர்களில் உள்ளவனே' என்றோ, 'இதைப் போன்றோ' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

வேறொருவரை தன் தந்தை என வாதிடுகிறவன்.

2157. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்: ''தம் தந்தை அல்லாத ஒருவரை அவர் தம் தந்தை அல்ல என்று தெரிந்து கொண்டே - தந்தை என்று வாதிடுகிறவரின் மீது சொர்க்கம் தடை செய்யப்பட்டதாகி விடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன். (மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர்) உபூஉஸ்மான் அந்நஹ்தீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை நான் அபூ பக்ரா(ரலி) அவர்களிடம் குறிப்பிட்டேன். அப்போது அவர்கள் 'இதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து என் காதுகள் செவியேற்றன. என் இதயம் மனனமிட்டுக் கொண்டது'' என்றார்கள்.

2158. 'உங்கள் தந்தையரை நீங்கள் வெறுக்காதீர்கள். தம் தந்தையை வெறுத்து (வேறு யாரோ ஒருவரை தம் தந்தை என்று கூறி) விடுகிறவர் நன்றி கொன்றவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Click here to bookmark this link.Channel Image09:52 கப்பல் படையில் களமிறங்கி ஷஹீதான வீரப்பெண்மணி! ஸஹாபாக்களின் வாழ்வினிலே...
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்;

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உம்மு ஹராம் பின்த்து மில்ஹான்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்பவராக இருந்தார்கள். அப்போதெல்லாம் அவர் நபி(ஸல்) அவர்களுக்கு உணவு தருவது வழக்கம். உம்மு ஹராம்(ரலி), உபாதா இப்னு ஸாமித்(ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (இவ்வாறே ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் உம்மு ஹராம்(ரலி) அவர்களிடம் சென்றார்கள். அவர் நபி(ஸல்) அவர்களுக்கு உணவு கொடுத்துவிட்டு அவர்களின் தலையில் பேன் பார்க்கத் தொடங்கினார்கள். அப்படியே நபி(ஸல்) அவர்கள் தூங்கிவிட்டார்கள். பிறகு, சிரித்துக் கொண்டே கண் விழித்தார்கள். உம்மு ஹராம்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! ஏன் (இப்படிச்) சிரிக்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சிலர், இறைவழியில் அறப்போர் வீரர்களாக எனக்கு (கனவில்) எடுத்துக் காட்டப்பட்டார்கள். அவர்கள் இந்தக் கடலின் முதுகில் கட்டில்களில் (சாய்ந்து) அமர்ந்திருக்கும் மன்னர்களாக அல்லது கட்டில்களில் அமர்ந்திருக்கும் மன்னர்களைப் போல்... ஏறிச் செல்கிறார்கள்" என்று பதிலளித்தார்கள். அதற்கு உம்மு ஹராம்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று கூறினார்கள். எனவே, இறைத்தூதர்(ரலி) அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். பிறகு, தம் தலையை(த் தலையணையில்) வைத்(து உறங்க ஆரம்பித்)தார்கள்; பிறகு, சிரித்தபடியே விழித்தெழுந்தார்கள். அப்போது உம்மு ஹராம்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! ஏன் சிரிக்கிறீர்கள்" என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சிலர், இறைவழியில் அறப்போர் புரிபவர்களாக எனக்கு எடுத்துக் காட்டப்பட்டனர்.." என்று முன்பு போன்றே கூறினார்கள். உம்மு ஹராம்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் (அறப்போருக்காகக் கடலில்) முதன்முதலாகப் பயணிப்பவர்களில் ஒருவராக இருப்பீர்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே, முஆவியா இப்னு அபீ சுஃப்யான்(ரலி) அவர்களின் (ஆட்சிக்) காலத்தில் (சைப்ரஸ் தீவின் மீது அறப்போர் புரியச் சென்றவர்களுடன் உம்மு ஹராம்(ரலி) அவர்களும் கடல் பயணம் செய்து கடலிலிருந்து (தீவின் ஒரு பகுதிக்குப்) புறப்பட்டபோது தம் வாகனத்திலிருந்து விழுந்து மரணமடைந்தார்கள். [நூல்;புஹாரி]


வீரப்பெண்மணி உம்மு ஹராம்[ரலி] அவர்கள், மற்றொரு வீரப் பெண்மணியான உம்மு சுலைம்[ரலி] அவர்களின் சகோதரியும், நபி[ஸல்] அவர்களின் ஊழியரான அனஸ் இப்னு மாலிக்[ரலி] அவர்களின் சிற்றன்னையும் ஆவார். மதீனாவில் உள்ள தனது தோழர்களின் வீடுகளில் நபியவர்கள் அதிகமதிகம் செல்லக்கூடிய வீடு இந்த இரு சகோதரிகளின் வீடுகள்தான். அந்த வகையில் உம்மு ஹராம்[ரலி] அவர்களும், உம்மு ஸுலைம்[ரலி] அவர்களும் நபியவர்கள் தங்கள் வீட்டிற்கு வந்துவிட்டால், அவர்களை இன்முகத்துடன் வரவேற்று உணவளித்து மகிழ்வார்கள். அப்படிப்பட்ட நிலையில்தான் ஒருமுறை தனது உம்மத்தினரில் கடல் மார்க்கமாக ஒரு சாரார் அறப்போருக்காக செல்வார்கள் என்ற செய்தியை நபியவர்கள் சொன்ன மாத்திரமே உம்மு ஹராம்[ரலி] அவர்கள்,nabi
[sal] அவர்களே! அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று கூறியதோடு, நபியவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் அங்கீகரித்ததன் விளைவாக, உம்மு ஹராம்[ரலி] அவர்கள் அந்த போர் முடிந்து திரும்பும்போது கீழே விழுந்து ஷஹீத் எனும் பேற்றை அடைகிறார்கள் என்றால் நாம் அவர்களின் வீரத்தையும், இறையச்சத்தஹியும், சொர்க்கத்தின் மீது அவர்கள் கொண்ட நேசத்தையும் என்னும்போது மெய்சிலிர்த்து போகிறோம். இன்றைய பெண்களை எடுத்து பார்த்தோமானால், நாம் ஒரு பொழுதுபோக்கு இடத்திற்கோ, அல்லது ஒரு இன்ப சுற்றுலாவுக்கோ செல்கிறோம் என்றால் ஏங்க! நானும் ஒங்க கூட வருகிறேன் என்று சொல்வார்கள். அதே நேரத்தில் ஒரு போர்களத்திற்கு செல்கிறோம் என்றால், அவர்கள் வராததோடு நம்மையும் போகவிடாமல் தடுப்பார்கள். போகாதே போகாதே என்கணவா! பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் என்ற ரீதியில் செண்டிமெண்டை காட்டி தடுக்க முயற்சிப்பார்கள். இதுதான் இன்றைய பெண்களின் நிலை. [விதி விலக்காக சிலர் இருக்கலாம்] ஆனால் சஹாபிப் பெண்களுக்கோ தமது உயிரோ, செல்வங்களோ, இந்த உலகின் கவர்ச்சியோ அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. மாறாக, சுவனத்தை அடைவது ஒன்றே அவர்களின் ஒரே இலக்காக இருந்துள்ளது எனபதற்கு உம்மு ஹராம்[ரலி] எனற உயிர்த் தியாகி மிக சிறந்த உதாரணமாக வரலாற்றில் மிளிர்கிறார்.
அல்லாஹ் உம்மு ஹராம்[ரலி] அவர்களை போன்று மார்க்கத்திற்காக உயிர் துறந்து மறுமையில் அவர்களை சுவனத்தில் நாம் பார்ப்பதற்கு நமக்கு நல்லருள் பாலிப்பானாக!

குறிப்பு; மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது. புஹாரி மட்டுமன்றி முஸ்லிமிலும் உள்ளது. ஆனாலும் இந்த ஹதீஸை நவீன ஹதீஸ்கலை[?] அறிஞர்கள் மறுக்கிறார்கள். காரணம் உம்மு ஹராம்[ரலி] என்ற அந்நியப் பெண் வீட்டிற்கு நபியவர்கள் எப்படி போயிருக்கமுடியும்.? ஒரு அந்நிய பெண் பேன் பார்க்கும் அளவுக்கு நபியவர்கள் எப்படி நடந்திருப்பார்கள்.? உம்மு ஹராம்[ரலி] அவர்களின் கனவர் வீட்டில் இல்லாதபோது நபியவர்கள் எப்படி சென்றிருப்பார்கள்..? எனவே இது நபியவர்களின் போதனைக்கும், அவர்களின் மகத்தான குணத்திற்கும் எதிராக உள்ள்ளது என்று கூறி, இந்த ஹதீஸை குப்பை கூடைக்கு அனுப்பி விட்டார்கள். ஒரு அந்நியப் பெண்ணின் வீட்டிற்கு செல்லக் கூடாது என்பது இவர்களுக்கு தெரிந்துள்ளது. ஆனால் பாவம் நபியவர்களுக்கு தெரியவில்லை. அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் சொல்லை விடநமது சிந்தனைதான் முக்கியம் என்றால், குளிப்பு கடமையான நிலையில் தண்ணீர் கிடைக்கவில்லையானால், தயம்மும் செய்யலாம் என்று மார்க்கம் சொல்கிறது. ஏற்கனவே ஸ்கலிதம் எர்ப்படடதால்தான் தான் குளிப்பு கடமையாகி உள்ளது. அந்த அசுத்ததோடு, தயம்மும் என்ற பெயரில் முகத்திலும் கைகளிலும் மண்ணை தடவி கூட கொஞ்சம் அசுத்தமாவது அறிவுக்கு பொருந்துகிறதா..? எனவே இது தொடர்பான வசனங்களையும், ஹதீஸ்களையும் குப்பை கூடைக்கு அனுப்புவோமா..? [அல்லாஹ் மன்னிப்பானாக].

இறைவா! எங்களுக்கு நேர்வழி காட்டியபின் தடம்புரள செய்துவிடாதே!
Click here to bookmark this link.Channel Image06:21 'விரை'ப்பான கேள்விகளும் விடாத பதில்களும்... எதிரொலி
குர்ஆன் - அறிவுக்கும் அறிவியலுக்கும் ஏற்ற எக்காலத்திற்கும் பொருந்தும் ஓர் வாழ்வியல் நெறிநூல்! இது அறிவியல் நூலல்ல; ஆனாலும் அறிவியலையும் உள்ளடக்கியது. குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள அனேகக் குறிப்புகள் தற்கால ஆய்வுகளுடன் / நிரூபனங்களுடன் 100% ஒத்துப்போகிறது. எனவேதான் "இதில் முரண்பாடுகளிருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம்" என்று ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் சவால் விடுகிறது. உலகில் வேறு எந்தநூலும், கொள்கையும் இவ்வாறு சவால் விட்டதாக அல்லது அத்தகைய சவால்களை எதிர்கொண்டு நிலைத்திருப்பதாகவோ அறியமுடியவில்லை.

நிற்க,

திருவாளர் தருமி "மதங்கள்" என்ற தலைப்பில் "இஸ்லாம்-2" குறித்து எழுதி இருந்தார். மனிதவிந்து உற்பத்தியாகுமிடம் குறித்து விந்தையான பதிவு அது! குர்ஆன் வசனம் 86:05-07 ஐ மேற்கோள் காட்டி எழுதி இருந்தார்.

5. எனவே, மனிதன் எதிலிருந்து தான் படைக்கப்பட்டுள்ளான் என்பதை (நோட்டமிட்டு)ப் பார்ப்பானாக! 6. குதித்து வெளியாகும் நீரினால் அவன் படைக்கப்பட்டுள்ளான் 7. (ஆணுடைய) முதுகுத் தண்டிற்கும், (பெண்ணுடைய) நெஞ்செலும்புகளுக்குமிடையில் இருந்து அது வெளியாகிறது.

அவரின் கேள்வி என்னவென்றால், "மனிதன் விந்திலிருந்து படைக்கப் பட்டான்" என்று நேரடியாகச் சொல்லாமல் "முதுகுத் தண்டிற்கும், விலா எழும்புக்கும் இடையில் இருந்து குதித்து வெளியாகும் நீரினால் படைக்கப்பட்டுள்ளான்" என்று ஏன் சொல்ல வேண்டும்? என்றதோடு விந்துக்கும் முதுகுத் தண்டிற்கும் என்ன தொடர்போ? என்று அறிவியல்(!) பூர்வமாகக் கேள்வி கேட்டிருந்தார்! அவரின் பதிவிலிருந்தும் பின்னூட்டங்களிலிருந்தும் திரும்பத் திரும்ப தெரிவது, இஸ்லாம் குறித்த அரைகுறை தகவல்களுடன் அறிவியலைப் பற்றிய அறியாமையும்தான்!

இது தருமியின் புதிய ஆய்வொன்றுமில்லை. ஏற்கனவே அவர் வேறொரு வசனத்தை எடுத்தெழுதி, அதற்கு விளக்கம் சொல்லப் பட்ட கருதான்:

படைப்புக்கொள்கை: இஸ்லாமில் மனிதன் உறைந்த ரத்தத்திலிருந்து உண்டாக்கப் பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அது யாருடைய ரத்தம் ? மனிதன் படைக்கப் படுவதற்கு முன் எங்கிருந்து ரத்தம் வந்தது? ஒருவேளை கடவுளின் ரத்தமாக இருக்குமோ? - தருமி


முதல் மனிதனின் படைப்பையும் அவன் சந்ததியினரின் பிறப்பையும் குழப்பிக் கொண்டுள்ளீர்கள் . முதல் மனிதன் இறைவனின் அற்புதங்களால் களி மண்ணின் மூலச்சத்திலிருந்து படைக்கப்பட்டார் (6:2, 7:12, 15:33, 32:7, 35:11, 55:14) என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு. மனித வளர்ச்சி நிலைகளைப் பற்றி எந்த வேத நூலும் விவரிக்காத வகையில் குர் ஆன் விவரிக்கிறது, பார்க்க: 23:12,13 &14).
இஸ்லாம் சொல்லும் படைப்புக் கொள்கை தவறு என்பது உங்கள் வாதமானால், நீங்களே சொல்லுங்கள் மனிதன் எதிலிருந்து தோன்றினான்? பகுத்தறிவு பெற்ற குரங்குகள்தான் தற்கால மனிதனின் மூதாதையர் என்றால், இன்னும் சில குரங்குகள் ஏன் பகுத்தறிவடைந்து மனிதனாகவில்லை?

குர்ஆன் வசனம் 86:07இல் ஒரு குழந்தையின் உருவாக்கத்தில் உள்ள ஒரு பகுதி மட்டும் சொல்லப் படுகிறது. يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ என்பதற்கு விலாஎலும்புகளுக்கும் முதுகுத் தண்டுக்கும் இடையிலிருந்து வெளியேறும் திரவம், கருவுக்கான பகுதி மூலம் என்று சொல்கிறது. இங்குக் கேள்வி என்னவென்றால் விந்து (مَنِيٍّ/SPERM) நேரடியாகச் சொல்லாமல் ஏன் திரவம் (مَاءٍ/FLUID) என்று மறைமுகமாகச் சொல்ல வேண்டும்? என்பதே!

குர்ஆனின் இன்னொரு வசனத்தில் (075:037) "கருவறைக்குள் (செலுத்தப்பட்ட) விந்தின் ஒரு துளியாக மனிதன் (مَنِيٍّ) இருக்கவில்லையா?" என்று கேட்கும் குர்ஆன், வசனம் 86:06 இல் திரவம் என்று பொதுமையில் குறிப்பிடுகிறது!

இரண்டும் வெவ்வேறு வடிவிலானவை / நிலைகளைக் கொண்டவை என்ற வேறுபாடு நன்கு தெரிந்திருப்பதால் வெவ்வேறான சொல்லாடல் கையாளப் பட்டுள்ளது. ஆணிடமிருந்து வெளியாகும் தாது (SEMEN) பல்வேறு சுரப்பிகளைக் கடந்து இறுதியில் விந்தாக (SPERM) மாற்றமடைகிறது.

கருவாக்கத்திற்கு ஆணின் விந்து (SPERM) பகுதி மூலமாகும். அந்த விந்து ஆணின் விரையிலிருந்து உருவாகிறது என்பதும் பொதுவானது. பொதுவான ஒன்றை குர்ஆன் வெவ்வேறு பதங்களில் குறிப்பிடுவதற்கு வேறுபட்ட காரணம் இருக்க வேண்டும். கர்ப்பத்தில் விந்துத்துளியாக இருக்கவில்லையா? என்று கேட்கும் குர்ஆன், விலா எலும்புகளுக்கும் முதுகுத் தண்டுக்கும் இடையிலிருந்து வெளியேற்றப்பட்ட திரவம் என்று வேறுபடுத்துவது எப்படிச் சாத்தியமாயிற்று?

தாது (SEMEN) என்ற விந்தின் (SPERM) மூலப்பொருள் பற்றி நவீன மருத்துவம் விளக்குகிறது. குர்ஆன் வசனம் 86:06ம் இதைத்தான் சொல்கிறது. நுண்ணாடி (MICROSCOPE) மருத்துவ உபகரணங்களும் சாத்தியமில்லாத காலகட்டத்தில் எழுதப்படிக்கத் தெரிந்திராத ஒருவரால் ஒரே விசயத்தை துல்லியமான வெவ்வேறு சொற்களால் விளக்க முடிந்தது?

விந்து (SPERM) ஆணின் விரையிலிருந்து உருவாகிறது என்று பொதுவாக நம்பப்பட்ட காலத்தில் (சமீபகாலம் வரையிலும்கூட) எல்லோரையும்போல் இருகால்களுக்கு இடைப்பட்ட உறுப்பிலிருந்து விந்து வெளியாகிறது என்று சொல்லாமல் "விலா எலும்புக்கும் முதுகுத் தண்டுக்கும் இடையிருந்து உருவாகும் 'திரவம்' என்று துல்லியமாக வேறுபடுத்திச் சொல்வதன் மூலம் படைப்பின் ரகசியங்களை அறிவித்தவன் படைத்தோன் அல்லாஹ் என்பது இன்னொரு முறை உறுதியாகிறது.

***************************************

தருமியின் பதிவிலும் பின்னூட்டத்திலும் விந்து உற்பத்தியாகுமிடம் விரை (TESTICLE) என திரும்பத் திரும்ப சொல்கிறார்.அவரது பதிவில் பின்னூட்ட் இட்டுள்ள அறிவுசீவிகளும் "ஆமா, ஆமா" என்கின்றனர். நவீன மருத்துவமும் குர்ஆனும் வெவ்வேறு நிலைகளைச் சொல்கின்றன.

தாதுவுடன் (SEMEN) பல்வேறு திரவங்களும், தனிமங்களும் கலந்துள்ளது. SEMINAL VESICLES, PROSTATE GLANDS மற்றும் விரைகளில் சுரக்கும் பிற சுரப்பிகளும் கலந்துதான் விந்தாக (SPERM) வெளியேற்றப்படுகிறது. தாதுவுடன் Citric acid, prostaglandin, flavin, ascorbic acid, ergothioneine, cholesterol, phospholipids, fibrinolysin, zinc, phosphatase acid, phosphase, hyaluronidase ஆகிய தனிமங்களுடன் கலந்து விந்தணு fallopian tube நோக்கி நீந்திச் செல்கிறது. இக்கலவைகள் இல்லாமல் பயணிக்கும் கோடிக்கணக்கான விந்தணுக்களால் மட்டும் ஆரோக்கியமான கருவாக்கம் சாத்தியமில்லை என்று நவீன மருத்துவம் சொல்கிறது.

இருதொடைகளுக்கு இடைப்பட்ட உறுப்பிலிருந்து வெளியாகும் விந்தணுவைச் சொல்லாமல், முதுகுத் தண்டுக்கும் விலா எலும்புக்கும் இடைப்பட்ட பல்வேறு சுரப்பிகளிலிருந்து உருவாகும் தாது (SEMEN) குறித்து இவ்வசனத்தில் சொல்லப்பட்டு உள்ளது.

"எல்லாம் தெரிந்த" கடவுள் அறிவியல் உண்மைகளைச் சொல்ல வேண்டுமென்றால், 2 + 2 = 4 என்றல்லவா சொல்ல வேண்டும். விந்திலிருந்து மனிதன் பிறக்கிறான் என்று சொல்வதை விட இடுப்பிலிருந்து வரும் திரவத்தால் மனிதன் பிறக்கிறான் என்பது என்ன அறிவியல்?" என்று தருமி கேட்கிறார். தான் விரும்பும் சொல்லை - அது பிழையாக இருந்தாலும் -தான் நம்பாத கடவுள் சொல்ல வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது அவருக்கே ஓவரா தெரியவில்லை? ;-)

மேலும் முதுகுத் தண்டுக்கும் விந்துக்கும் என்ன தொடர்பென்றும் தருமி கேட்டுள்ளார். முதுகுத்தண்டில் ஏற்படும் பாதிப்புகளால் ஆணின் தாது விருத்தி/விந்து செலுத்தும் வீரியம் குறையும் என்று முதுகுத் தண்டுக்கும் விந்துக்கும் உள்ளத் தொடர்பை தற்கால மருத்துவக் குறிப்புகள் சொல்கின்றன. (Spinal Cord Injury (SCI) என்று கூகிலிட்டால் தொடர்புடைய சுட்டிகள் கிடைக்கும்.)

கருவின் பல்வேறு நிலைகள் குறித்து விளக்கும்போது வெவ்வேறு சொற்களைக் குர்ஆன் ஆளுகின்றது. காட்டாக,

"ஒவ்வொருவனுக்கும் அவன் மனிதனாக (பிறப்பெடுக்கு) முன்னர் ஒரு கால இடைவெளி சென்றுவிடவில்லையா? அக்காலகட்டத்தில் அவன் இன்ன ஒன்றாய் இருந்தான் என்று குறிப்பிட்டுக் கூறவியலா நிலையில் இருக்கவில்லையா?

(பின்னர், ஆண்-பெண்ணின்) கலப்பான விந்திலிருந்து மனிதனைத் திண்ணமாக நாமே படைத்தோம் ..." அல் குர்ஆன் 76:1-2.

ஆணின் விந்தும் பெண்ணின் சினைமுட்டையும் கலந்துதான் கரு உருவாகிறது என்பது அண்மைக்காலக் கண்டுபிடிப்புத்தான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இஸ்லாம்-1இல் இவர் எடுத்து வைத்த கேள்விகள் கேலிக்கூத்தானவை.

(சில ஐயங்கள்:ஒரே கடவுளால் தரப்பட்ட சட்டங்கள் எப்படி வித்தியாசமாகின?

பழைய ஏற்பாட்டில் கண்ணுக்கு கண்; பல்லுக்குப் பல் என்ற பழி வாங்குதல் எப்படி கிறித்துவர்களின் - ஈசாவின் - சட்டத்தில் இடது கன்னத்தில் அடித்தால் வலது கன்னத்தைக் காட்டு என்றாயிற்று? பின் எப்படி குரானில் மறுபடியும் பழைய நிலை வந்தது?

600 வருஷத்துக்கு முன்னால் கடவுள் ஈசா நபியிடம் 'வாளை உன் உறையில் போடு; ஏனெனில் வாளை எடுத்தவன் வாளால் சாவான்' என்று அவரைச் சொல்லும்படி அறிவுறுத்தி விட்டு, அதன் பின் 600 வருஷம் கழித்து பல போர்க்களங்களை தன் நபியைக் காணச் செய்கிறார். ஏனிப்படி 600 வருஷத்தில் ஜெகோவாவிடம் / அல்லாவிடம் ஒரு மாற்றம்?

"ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைத் திருப்பிக் காட்டு என்று நாம் ஈஸாவுக்குக் கட்டளை இட்டிருந்தோம்" என்றும் "வாளை எடுத்தவன் வாளால் சாவான்" என்றும் குர்ஆனில் இருந்தால்தான் இஸ்லாமியக் கடவுள் மாற்றி மாற்றிப் பேசுகிறார் எனப் பொருள் கொள்ள முடியும். நினைத்த நேரத்தில் நினத்தவர்கள் நிறையப் பேரால் திருத்தப் பட்டு, நடைமுறையில் உள்ள புதிய ஏற்பாடு என்பது அல்லாஹ்வின் வார்த்தைகள் என்று யார் தருமிக்குச் சொல்லிக் கொடுத்தது? என்று புரியவில்லை.

எல்லாவற்றையும் படிப்பது நல்லதுதான். ஆனால், ஒன்றோடு ஒன்று குழப்பிக் கொள்ளக் கூடாது; குழம்பக் கூடாது; குழப்பம் விளைவிக்கக் கூடாது.

இஸ்லாத்தைப் புறந்தள்ளப் புதிதாக ஒரு காரணம் கண்டு பிடித்திருக்கிறார் தருமி:

இசையின் ஆரம்பமே கடவுளோடு இணைந்தது என்பார்கள். கோவிலில் பாடப் பட்டு, பின்பு அரசர்களின் அரண்மனைக்குள் நுழைந்து, பின் மக்களிடம் இசை வந்ததென்பார்கள். Divine music -> Chamber music -> Popular music. ஆனால், இங்கு கடவுளே இசையை மறுக்கிறது; வெறுக்கிறது! பக்தியை இசையால் நிரப்பிய நம் சமூகத்தில் இந்தக் கருத்து ஒரு ஆச்சரியத்தைத்தான் அளிக்கிறது. பாடலும், இசையும், ஒவியமும் இச்சை தூண்டும் கருவிகளா? இது வெறும் ஆச்சரியம் மட்டுமல்ல; நம்ப முடியாத ஒன்று. நிச்சயமாக இது ஒரு தனிமனிதனின் (முகமது) விருப்பு வெறுப்பாக இருக்க முடியுமே ஒழிய சர்வ நிச்சயமாக 'ஒரு கடவுளின்' விருப்பு வெறுப்பாக இருக்கவே முடியாது. இஸ்லாமைப் புறந்தள்ள இந்த ஒரு காரணம்கூட போதும்

"என்பார்கள்" என்பவர்கள் யார்? என்பதைக் கடைசிவரை தருமி சொல்லவில்லை. இசை என்பது மனிதனைத் தன்னிலை மறக்கச் செய்வது. தன்னிலை மறக்கும் மயக்கும் எதுவும் இஸ்லாத்தில் இடம்பெறவியலாது.மற்றபடி இச்சை தூண்டுவது என்று இஸ்லாம் கூறுவதாக தருமி ஏதோதோ எழுதுகிறார்.

தருமிக்கு இஸ்லாம் வெறுத்துப் போனதுக்கு அவர் கூறிய முதல் காரணம் விசித்திரமானது. "இஸ்லாத்தில் முதல் பெண்ணுக்குப் பெயரே இல்லை" என்று தருமி தொடக்கத்தில் வெறுத்துப் போயிருந்தார்.அது தொடர்பாகப் பகுத்தறிவாளன் எனும் பதிவர் 9 கேள்விகளை தருமிக்குப் பின்னூட்டத்தில் வைத்ததாகவும் அந்தப் பின்னூட்டத்தைத் தருமி முடக்கி விட்டதாகவும் பதிவொன்றில் அவர் சலித்துக் கொண்டது இப்போது நினைவுக்கு வருகிறது.

வெளிச்சுட்டிகள்:

http://dharumi.blogspot.com/2009/11/354-2.html
http://athusari.blogspot.com/2006/06/blog-post_18.html
http://www.differencebetween.net/science/health/difference-between-sperm-and-semen/
http://www.medterms.com/script/main/art.asp?articlekey=5073
http://medical-dictionary.thefreedictionary.com/Spinal+Cord+Injury
http://en.wikipedia.org/wiki/Embryology
http://www.medindia.net/animation/male_reproductive_system.asp

Thu 03

Click here to bookmark this link.Channel Image09:26 சூரியன் சந்திரன் பூமியின் சுழற்சியினால் ஏற்படும் விளைவுகள் LUNAR CALENDAR / சந்திர நாட்காட்டி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

தமிழக அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் நடத்தப்படும் பாடதிட்டதின் கீழ்  சூரியன் சந்திரன் பூமியின் சுழற்சி பாதைகளின் விளக்கங்களும், அதனால் ஏற்படும் விளைவுகளும் இந்த வீடியோவில் நீங்கள் பார்க்க முடியும்.

குறிப்பாக  பருவ கால மாற்றங்கள் எதனால் ஏற்படுகிறது.  எப்படி ஏற்படுகிறது என்பது பற்றியும்,

சூரிய சந்திர கிரகணங்கள் எப்படி ஏற்படுகிறது என்பது பற்றியும்,  கிரகணங்கள் எப்பொழுது ஏற்படும் என்பது

பற்றியும், இப்பாடத்திட்டத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

இதை பார்த்தவர்கள் இதை பற்றிய விமர்சனங்களை கீழே பதியவும்.

நிர்வாகி

HCI

Click here to bookmark this link.Channel Image04:35 உயரிய பண்புடைய உம்மு ஸுலைம்[ரலி]. ஸஹாபாக்களின் வாழ்வினிலே...
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
நபி[ஸல்] அவர்களின் மதீனா வாழ்வை நாம் படித்துப்பார்த்தால், அவற்றில் பல்வேறு இடங்களில் நபியவர்களோடு தொடர்புடையவர்களாக அபூதல்ஹா[ரலி] -உம்மு ஸுலைம்[ரலி] தம்பதியை நாம் காணலாம். இந்த தம்பதிகளுக்கென்று பல்வேறு சிறப்புகள் உண்டு. இவ்விருவரும் இறைக்கட்டளையை அப்படியே பேனக்கூடியவர்களாக, இறைத்தூதரின் விருப்பத்திற்குரியவர்களாக இருந்துள்ளனர். இவர்களில் உம்மு ஸுலைம்[ரலி] அவர்கள் சீரிய அறிவாற்றலும் மதிநுட்பமும் பொருந்தியவர்களாக திகழ்ந்தார்கள். எப்படிப்பட்ட சோதனையான கட்டமாகிலும் அதை பொறுமையுடன் எதிர்கொண்டு அதை நன்மையாக மாற்றக் கூடியவர்களாக திகழ்ந்துள்ளனர் என்பதற்கு ஒரே ஒரு சான்று;

அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்கள்;
என் தாயார் உம்மு சுலைம் அவர்களின் இரண்டாவது கணவரான) அபூ தல்ஹா(ரலி) அவர்களின் புதல்வர் ஒருவர் நோய்வாய்ப்பட்டு இருந்தார். (ஒரு முறை) அபூ தல்ஹா(ரலி) வெளியே செல்ல அப்போது அந்தப் பையன் இறந்துவிட்டான். அபூ தல்ஹா(ரலி) திரும்பி வந்தபோது 'என் மகன் என்ன ஆனான்?' என்று கேட்டார்கள். (அவரின் துணைவியார்) உம்மு சுலைம் (துக்கத்தை வெளிக்காட்டாமல்), 'அவன் முன்பைவிட நிம்மதியாக இருக்கிறான்' என்று பதிலளித்துவிட்டு, அவர்களுக்கு முன்னால் இரவு உணவை வைத்தார். அபூ தல்ஹா(ரலி) இரவு உணவை அருந்தினார்கள். பிறகு உம்மு சுலைம் அவர்களுடன் (அன்றிரவு) தாம்பத்திய உறவுகொண்டார்கள். உறவு கொண்டு முடித்தபோது, உம்மு சுலைம் அவர்கள் (தம் கணவரிடம்) 'பையனை அடக்கம் செய்(ய ஏற்பாடு செய்)யுங்கள்' என்று கூறினார்கள். விடிந்ததும் அபூ தல்ஹா(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று (நடந்ததைத்) தெரிவித்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இன்றிரவு தாம்பத்திய உறவுகொண்டீர்களா?' எனக் கேட்டார்கள். அபூ தல்ஹா(ரலி), 'ஆம்' என்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இறைவா! அவர்களின் இரவில் அவர்கள் இருவருக்கும் சுபிட்சம் வழங்குவாயாக' என்று பிரார்த்தித்தார்கள்.
பின்னர் உம்முசுலைம்(ரலி) ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்கள். என்னிடம் அபூ தல்ஹா(ரலி), 'குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் பத்திரமாகக் கொண்டுசெல்' என்று கூறினார்கள். அவ்வாறே நான் குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றேன். என்னிடம் உம்மு சுலைம்(ரலி) பேரீச்சம் பழங்கள் சிலவற்றைக் கொடுத்தனுப்பியிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் குழந்தையை வாங்கிக்கொண்டு, 'இக்குழந்தையுடன் ஏதேனும் (இனிப்புப்) பொருள் உள்ளதா?' என்று கேட்டார்கள். (அங்கிருந்த) மக்கள் 'ஆம்; பேரீச்சம் பழங்கள் உள்ளன' என்று பதிலளித்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் அதை வாங்கி (தம் வாயால்) மென்று பிறகு தம் வாயிலிருந்து அதை எடுத்துக் குழந்தையின் வாயில் வைத்து அதைத் தடவினார்கள். குழந்தைக்கு 'அப்துல்லாஹ்' எனப் பெயர் சூட்டினார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 5470

இந்த பொன்மொழியில் உம்மு ஸுலைம்[ரலி] அவர்களின் செயல்பாடுகள் ஒவ்வொரு முஸ்லிமான ஆணுக்கும்-பெண்ணுக்கும் ஆயிரம் படிப்பினை தரும் விஷயமாகும். பொதுவாகவே ஒருவர் இறந்துவிட்டால் அதிலும் குறிப்பாக தமது பிள்ளை இறந்துவிட்டால் ஆணை விட பெண்கள் அழுது ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்வதில் முன்னிலை வகிப்பதை நாம் நடைமுறையில் பார்க்கிறோம். இங்கே தமது மகன் இறந்தபோது, உம்மு ஸுலைம்[ரலி] அவர்கள் அழுது ஆர்ப்பாட்டம் செய்யவில்லை . முதலாவதாக அல்லாஹ்வின் தீர்ப்பை பொருந்திக் கொள்கிறார்கள். அடுத்து வெளியே சென்றுள்ள கணவன் திரும்பி வந்தவுடன் மகன் இறந்த சோகத்தை மறைத்து கணவனை உபசரிக்கிறார்கள். கணவனோடு இல்லற வாழ்க்கையில் ஈடுபடுகிறார்கள். இந்த விஷயத்தில் கணவனின் மனநிலை அறிந்து செயல்படும் ஒரு சிறந்த மனைவியாக திகழ்ந்துள்ளார்கள். அடுத்து தன் மகன் பற்றி அபூ தல்ஹா[ரலி] அவர்கள் கேட்டபோது, உங்கள் மகன் இறக்கவில்லை என்று சொல்லியிருந்தால் அது பொய்யாகிவிடும் என்பதால், மிகவும் சாதுர்யமாக உண்மையை வேறு வார்த்தையில் அதாவது 'அவன் முன்பைவிட நிம்மதியாக இருக்கிறான்' என்று கூறி, எந்த நிலையிலும் பொய் சொல்லக் கூடாது என்ற மார்க்க கட்டளையை பேணி காத்ததன் மூலம் மிகச்சிறந்த இறையச்சமுடையவராக திகழ்கிறார்கள் . உம்மு ஸுலைம்[ரலி] அவர்களின் இந்த செயல் பற்றி அபூ தல்ஹா[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது, நபியவர்கள் உம்மு ஸுலைம்[ரலி] அவர்களை கண்டிக்காமல் அவர்களின் செயல்களை அங்கீகரிக்கும் வகையில், 'இறைவா! அவர்களின் இரவில் அவர்கள் இருவருக்கும் சுபிட்சம் வழங்குவாயாக' என்று பிரார்த்திக்கிறார்கள் என்றால் உம்மு ஸுலைம்[ரலி] அவர்கள் எத்தகைய சிறப்புடையவர்கள் என்று விளங்கிக்கொள்ளலாம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' அல்லாஹ் கூறினான்: இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரின் உயிரை நான் கைப்பற்றிவிடும்போது நன்மையை நாடிப் பொறுமை காத்தால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். [புஹாரி எண் 6424 ]

மேலும் உம்மு ஸுலைம்[ரலி] அவர்கள் சொர்க்கத்திற்கு உரியவர் என்று நபி[ஸல்] அவர்களின் மற்றொரு பொன்மொழியின் வாயிலாக உணரமுடிகிறது;

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள், 'நான் (கனவில்) என்னை சொர்க்கத்தில் நுழைந்தவனாகக் கண்டேன். அங்கு நான் அபூ தல்ஹா அவர்களின் மனைவி ருமைஸாவுக்கு அருகே இருந்தேன்.
[ஹதீஸ் சுருக்கம் புஹாரிஎண் 3679 ]
[உம்மு ஸுலைம்[ரலி] அவர்களின் இயற்பெயர் அர்ருமைஸா பின்த் மில்ஹான் என்பதாகும்]
எல்லாம் வல்ல அல்லாஹ் உம்மு ஸுலைம்[ரலி] அவர்களை பொருந்திக் கொள்வானாக! தியாகத்தையும், இறையச்சத்தையும் வாழ்க்கையாக கொண்ட அவர்களைப்போல் நம்மையும் வாழ்ந்து மரணிக்க செய்வானாக!

Wed 02

Click here to bookmark this link.Channel Image16:17 [பாடம்-77] சத்தியத்தை முறித்தால் செய்யவேண்டிய பரிகாரங்கள். முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
மதீனாவின் 'ஸாஉ'ம் நபி(ஸல்) அவர்கள் (காலத்து) 'முத்'தும் அதன் வளமும் வாழையடி வாழையாக மதீனாவாசிகள் கடைப்பிடித்து வந்ததும்.

2151. சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்களின் காலத்தில் 'ஸாஉ' என்பது, இன்றைக்கு (நடைமுறையிலிருக்கும்) உங்களின் 'முத்'தில் ஒரு 'முத்'தும் மூன்றில் ஒரு பாகமும் (1, 1/3) கொண்டதாக இருந்தது. பின்னர் உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) அவர்களின் காலத்தில் இதன் அளவு அதிகமாக்கப்பட்டது.

2152. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'இறைவா! (மதீனாவாசிகளான) இவர்களுக்கு இவர்களின் அளவைகளான 'ஸாஉ' மற்றும் 'முத்' ஆகியவற்றில் வளம் சேர்ப்பாயாக'' என்று பிரார்த்தித்தார்கள்.

Tue 01

Click here to bookmark this link.Channel Image11:56 சுட்டெரிக்கும் நரகின் அழைப்பாளிகள் இவர்கள். அத்தாட்சிகள்
தங்களது ஷிர்க்கான கொள்கைகளுக்கிடையே குர்ஆன், ஹதீஸ் அரபி வசனங்களை செருகி மெளலூது, ராதீபு, யாகுத்பாவென அரபியில் தானும் ஓதி, மற்றவர்களையும் ஓத வைத்து, தஸவ்ஃப் என்ற பெயரில் ஹகீகத், மஃரிபத், தரீகத், ஷரீஅத்தென அரபி சொற்களால் மக்களை ஏய்த்து நரகத்திற்கு அழைப்பு விடுபவர்கள்.



ஹூதைஃபத்துல் யமான் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் மக்கள் (எப்போதும்) நல்லதைப் பற்றியே கேட்பவர்களாக இருந்தனர். நானோ கெட்டது என்னை மிகைத்து விடாமல் இருக்க கெட்டது பற்றியே கேட்கக் கூடியவனாக இருந்தேன். ஒருமுறை:

நான் : அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நாங்கள் அறியாமையிலும் தீமையிலும் (மூழ்கி) இருந்தபோது, அல்லாஹ் எங்களுக்கு (இஸ்லாம் என்ற) இந்த நல்லதை அருளினான். இந்த நல்லதற்குப் பின்னர் கெட்டது உண்டா?

நபி (ஸல்) : ஆம் உண்டு!!

நான் : அந்த கெட்டதற்குப் பின்னர் நல்லது உண்டா?

நபி (ஸல்) : ஆம் உண்டு!! ஆனால் அது தகனுன் - களங்கப்பட்டிருக்கும்.

நான் : அதனது தகனுன் - களங்கம் என்ன?

நபி (ஸல்) : ஒரு கூட்டம் எனது நேர்வழி அல்லாததைக் கொண்டு மக்களை வழி நடத்துவார்கள். நீங்கள் அவர்களை (அச் செயல்களைக்) கண்டறிந்து (அவற்றை) நிராகரித்து விடுவீர்கள்.

நான் : அந்த நல்லதற்குப் பின்னர் கெட்டது உண்டா?

நபி (ஸல்) : ஆம் உண்டு!! (சிலரால்) நரகத்தின் வாயிலுக்கு அழைப்பு விடுக்கப்படும். எவர்கள் அந்த அழைப்பை ஏற்கிறார்களோ அவர்கள் அதில் (நரகத்தில்) எறியப்படுவார்கள்.

நான் : யாரஸூலல்லாஹ்! அவர்களைப் பற்றி (எனக்கு) விளக்குவீர்களாக.

நபி (ஸல்) : அவர்கள் நம்மைச் சார்ந்தவர்களாகவும் நாம் பேசுவதையே பேசுபவர்களாகவும் இருப்பார்கள்.

நான் : (அவர்கள் வலையில் சிக்காமல் இருக்க) அப்போது (எப்படி நடக்கவேண்டு மென்று) எனக்கும், (என்னைப் போன்றவர்களுக்கும்) என்ன கட்டளை இடுகிறீர்கள்?

நபி (ஸல்) : (அப்போதும்) நீர் ஜமாஅத் அல் முஸ்லிமீன் ஐயும் அதன் இமாம் ஐயும் பற்றிக் கொள்வீராக.

நான் : (நபி (ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற ஜமாஅத் அல் முஸ்லிமீன் என்ற) என்ற அந்த ஜமாஅத்தோ, அதனது இமாமோ இல்லை என்றால்…..?

நபி (ஸல்) : (மத்ஹபு, தரீக்கா, இயக்கம், கழகம் போன்ற) எல்லாப் பிரிவுகளையும் விட்டு (தூர) ஒதுங்கி வாழ்வீராக. அப்படியே உமது மரணம் வரை மரவேர்களைச் சாப்பிட்டுக் காலத்தைப் போக்கும் நிலை ஏற்பட்டாலும் சரியே!.

புகாரி : மனாகிப் 4/803, ஃபிதன் 9/206, முஸ்லிம் : இமாரா 3/4553, 4554
திர்மிதி : ஃபிதன் 57, இப்னுமாஜ்ஜா : ஃபிதன் 2/3979, தயாலிஸி : 1/443

Mon 30

Click here to bookmark this link.Channel Image16:29 [பாடம்-76] சத்தியங்களும் நேர்த்திகடன்களும். முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
சத்தியத்தை முறித்தால்...

2142. அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்), 'அப்துர் ரஹ்மான் இப்னு சமுராவே! ஆட்சிப் பொறுப்பை நீயாக (ஆசைப்பட்டு)க் கேட்காதே! ஏனெனில், (நீ) கேட்டதால் அது உனக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீ (தனிமையில்) விடப்படுவாய். (இறைவனின் உதவி கிட்டாது.) கேட்காமல் அது உனக்கு அளிக்கப்பட்டால் அது தொடர்பாக உனக்கு (இறைவனின்) உதவி அளிக்கப்படும். நீ ஒரு சத்தியம் செய்து, அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக நீ கருதினால் உன்னுடைய சத்தியத்(தை முறித்துவிட்டு முறித்த)துக்கான பரிகாரத்தைச் செய்துவிடு. சிறந்தது எதுவோ அதைச் செயல்படுத்து'' என்றார்கள்.

2143. நாம்தாம் மறுமை நாளில் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் (அந்தஸ்தால்) முந்தியவர்களாகவும் இருப்போம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். மேலும் அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் ஒருவர் தம் குடும்பத்தார் (துன்புறும் வகையில் அவர்கள்) தொடர்பாகத் தாம் செய்த சத்தியத்தில் பிடிவாதமாக இருப்பது, (அந்தச் சத்தியத்தை முறித்துவிட்டு) அதற்காக அவரின் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ள பரிகாரத்தைச் செய்வதைவிடப் பெரும் பாவமாகும் என்று கூறினார்கள் என அபூஹூரைரா (ரலி) அறிவித்தார்.

2144. அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்(ரலி) அறிவித்தார் : இரண்டு பேர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு வழக்கைக் கொண்டு வந்தனர். அவர்களில் ஒருவர், 'எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்'' என்று கூறினார். அவர்கள் இருவரில் விவரம் தெரிந்தவரான மற்றொருவர் 'ஆம். இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் சட்டப்படி எங்களுக்கிடையே தீர்ப்பளியுங்கள்! என்னைப் பேச அனுமதியுங்கள்'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'பேசுங்கள்'' என்றார்கள். அந்த மனிதர், 'என் மகன் இவரிடம் 'அஸீஃப்' ஆக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். 'அஸீஃப் என்பதற்குக் 'கூலியாள்' என்று பொருள் என மாலிக்(ரஹ்) அவர்கள் கூறினார்கள். (அப்போது) இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். எனவே, மக்கள் என்னிடம், 'உன் மகனுக்குக் கல்லெறி தண்டனை உண்டு'' என்று கூறினர். ஆனால், நான் அவனுக்காக நூறு ஒட்டகங்களையும் ஓர் அடிமைப் பெண்ணையும் பிணைத் தொகையாக வழங்கினேன். பிறகு நான் அறிஞர்களிடம் (இது குறித்துக்) கேட்டேன். அவர்கள், '(திருமணமாகாத நிலையில் விபசாரம் புரிந்துவிட்ட) என் மகனுக்கு நூறு கசையடிகள் கொடுக்க வேண்டும் என்றும், ஓராண்டுக் காலத்திற்கு அவனை நாடு கடத்த வேண்டும் என்றும், கல்லெறி தண்டனை (விபசாரம் புரிந்த) அவரின் மனைவிக்குத்தான் என்றும் தெரிவித்தார்கள்'' என்றார். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன்: 'உங்கள் ஆடுகளும் அடிமைப் பெண்ணும் உங்களிடமே திருப்பித் தரப்படும்'' என்று கூறிவிட்டு, அவரின் மகனுக்கு நூறு கசையடிகள் வழங்கச் செய்து ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தவும் செய்தார்கள். மேலும், உனைஸ் அல்அஸ்லமீ(ரலி) அவர்கள் அந்த நபரின் மனைவியிடம் சென்று, அவள் குற்றத்தை ஒப்புக்கொண்டால் அவளுக்குக் கல்லடி தண்டனை வழங்கிடுமாறு உத்தரவிடப்பட்டார்கள். அவ்வாறே, (உனைஸ் அப்பெண்ணிடம் சென்றார்.) அவள் குற்றத்தை ஒப்புக்கொண்டார். எனவே, அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்கினார்.

2145. அபூ தர்(ரலி) அறிவித்தார் : நான் நபி(ஸல்) அவர்களிடம் போய்ச் சேர்ந்தேன். அப்போது அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் நிழலில் இருந்தவாறு, 'கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக! அவர்கள் நஷ்டவாளிகள். கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக அவர்கள் நஷ்டவாளிகள் என்று சொல்லத் தொடங்கினார்கள். நான், 'என் நிலை என்ன? என் தொடர்பாக அவர்களுக்கு ஏதேனும் காட்டப்படுகிறதா? (அப்படியானால்) என் நிலை என்னாவது?' என்று (மனத்துக்குள்) சொல்லிக்கொண்டே அவர்கள் அருகில் அமர்ந்தேன். அப்போது நபியவர்கள் 'என்னால் பேசாமலிருக்க இயலவில்லை. அல்லாஹ் நாடிய ஏதோ ஒன்று என்னைச் சூழ்ந்து கொண்டது'' என்று கூறினார்கள். உடனே நான் 'என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அவர்கள் யார், இறைத்தூதர் அவர்களே?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அதிகச் செல்வம் படைத்தவர்கள். ஆனால் (நல்வழியில் செல்வத்தைச் செலவிட்ட) சிலரைத் தவிர'' என்று கூறியவாறு இவ்வாறு இவ்வாறு இவ்வாறு (என்று தம் பக்கம் வலப் பக்கம் இடப் பக்கம்) கைகளால் சைகை செய்தார்கள்.

2146. ஒரு முஸ்லிமுடைய மக்களில் மூவர் (பருவ வயதுக்கு முன்பே) இறந்தால், (தந்தையான) அவரை நரகம் தீண்டாது. ('உங்களில் யாரும் நரகத்தைக் கடக்காமல் செல்ல முடியாது' என்று அல்லாஹ் செய்துள்ள) சத்தியத்தைச் செயல்படுத்துவதற்காக (நரகத்தின் வழியே செல்வதை)த் தவிர என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

மறந்து சத்தியத்தை முறித்துவிட்டால்...?

2147. என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை, அவர்கள் அதன்படி செயல்படாதவரை, அல்லது அதை (வெளிப்படுத்தி)ப் பேசாதவரை அல்லாஹ் (அவற்றுக்குத் தண்டனை வழங்குவதில்லை) மன்னித்து விடுகிறான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைவனுக்கு வழிப்படுவதில் தான் நேர்த்திக்கடன்.

2148. அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் (அதை நிறைவேற்றும் (முகமாக) அவனுக்கு அவர் வழிப்படட்டும்! அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றுவதற்காக) அவனுக்கு அவர் மாறு செய்திட வேண்டாம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நேர்த்திக்கடன் உள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் (அவருக்காக மற்றவர்கள் அதை நிறைவேற்ற வேண்டுமா?)

2149. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் : ஸஅத் இப்னு உபாதா அல் அன்சாரி(ரலி) அவர்கள், நேர்ந்துகொண்டு அதை நிறைவேற்றுவதற்கு முன்பே இறந்துவிட்ட தம் தாயின் நேர்த்திக்கடன் குறித்து நபி(ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அவர் தம் தாயாருக்காக நேர்த்திக்கடனை நிறைவேற்றிடுமாறு தீர்ப்பளித்தார்கள். அதுவே பின்னர் வழிமுறையாக ஆகிவிட்டது.

தமக்கு உடைமையில்லாத ஒன்றிலும் பாவச் செயலிலும் ஒருவர் நேர்ந்துகொள்வது (கூடாது.)

2150. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் (வெள்ளிக்கிழமை) உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் (வெயிலில்) நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர் குறித்து (மக்களிடம்) கேட்டார்கள். மக்கள், '(இவர் பெயர்) அபூ இஸ்ராயீல். இவர், நின்று கொண்டே இருப்பேன்; உட்காரமாட்டேன் என்றும், நிழலில் ஒதுங்கமாட்டேன் (வெயிலில் தான் இருப்பேன்) என்றும், (யாரிடமும்) பேசமாட்டேன்; நோன்பு நோற்பேன் என்றும் நேர்ந்து கொண்டுள்ளார்'' என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், 'அவருக்கு உத்தரவிடுங்கள்: அவர் பேசட்டும். நிழல் பெறட்டும். உட்காரட்டும் நோன்பை (மட்டும்) நிறைவு செய்யட்டும்'' என்றார்கள். மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

Sun 29

Click here to bookmark this link.Channel Image01:17 எங்களுக்குள் போட்டி உண்டு; ஆனால் பொறாமையில்லை என்று நிரூபித்த அன்னை! ஸஹாபாக்களின் வாழ்வினிலே...
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
இஸ்லாமிய மார்க்கம் முஸ்லிமான ஆண்களுக்கு அதிகபட்சமாக நான்கு திருமணம் வரை செய்து கொள்ள அனுமதி வழங்கியுள்ளதை நாம் அறிவோம். இந்திய அளவில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்பவர்கள் மிக மிக குறைவு. காரணம் பொருளாதரா பிரச்சினை ஒருபக்கம் இருந்தாலும், மறு பக்கம் இரு மனைவியர் ஒருவருக்கு இருந்தால் அவர்களுக்கு மத்தியில் பஞ்சாயத்து தீர்ப்பதற்கே பெரும்பான்மையான நேரம் ஒதுக்கவேண்டிய நிலை. இரு ஆண்கள் ஒத்துப்போய் விடுவார்கள். ஆனால் இரு பெண்கள் ஒத்துப்போவது என்பது மிகமிக அரிது. அதிலும் ஒரு கணவருக்கு வாழ்க்கைப்பட்ட இரு பெண்கள், இவர்களில் ஒவ்வொருவரும் மற்ற மனைவியை தன் கணவன் நெருங்காமல் இருப்பதற்கு என்ன வழி என்று சதா யோசித்து தங்களில் ஒருத்தியை மாட்டிவிடும் வாய்ப்பு கிடைக்குமென்றால் அதை கச்சிதமாக பயன்படுத்தி அவளிடமிருந்து தன் கணவனை பிரித்துவிடுவாள். தன் கணவன் மறுமணம் செய்வதை அனுமதிக்கும் அரபு நாட்டு பெண்கள் பெரிய அளவில் தனது சக்களத்தியை கண்டுகொள்வதில்லை. ஆயினும் அவர்களில் சிலர் தனது கணவன் மற்றொரு பெண்ணை மணப்பதை தடுப்பதற்கான முயற்சி மேற்கொள்வதாக அறிகிறோம். சமீபத்தில் குவைத்தில் ஜஹ்ரா என்ற பகுதியில் ஒரு திருமணத்தின்போது நடந்த தீவிபத்திற்கு ஒரு முன்னாள் மனைவியே காரணம் என்று கூறப்பட்டது.[அல்லாஹ்வே அறிந்தவன்] இதை நாம் இங்கு குறிப்பிட காரணம் பொதுவாகவே பெண்கள், கணவன் குடிகாரனாகவோ, சூதாடியாகவோ, குடும்பத்தை சரிவர கவனிக்காத பொருப்பில்லாதவனாகவோ இருந்தால்கூட சகித்துகொண்டு விட்டுக்கொடுத்து விடுவார்கள். ஆனால் ஒரு உதவாக்கரை கணவனைக்கூட இன்னொரு பெண்ணிற்கு விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இது பெரும்பான்மையான பெண்களின் இயல்பு. ஆனால் ஸஹாபி பெண்களை பொறுத்தவரையில் அல்லாஹ் அனுமதித்த எந்த ஒன்றையும் தடுக்கக் கூடியவர்கள் அல்லர். எனவே பெரும்பான்மையான சஹாபாக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்ததை நாம் ஹதீஸ்களின் வாயிலாக அறியமுடிகிறது. மேலும் இறைத்தூதர்[ஸல்] அவர்களுக்கு அல்லாஹ் பல மனைவியரை மணக்கும் அனுமதி தந்திருந்தான். நபி[ஸல்] அவர்களும் சுமார் பதினொரு அல்லது பன்னெண்டு மனைவியரை மணந்தார்கள். இந்த மனைவியருக்குள் நபியவர்களின் அன்பை பெறுவதில் போட்டி இருந்தது. இதை நாமாக சொல்லவில்லை. நபி[ஸல்] அவர்களின் நேசத்திற்குரிய அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் சொல்கிறார்கள்;

அல்லாஹ்வின் தூதருடைய மனைவிமார்களான நாங்கள் இரு குழுக்களாக இருந்தோம். ஒரு குழுவில் நானும் ஹஃப்ஸா, ஸஃபிய்யா, மற்றும் சவ்தா ஆகியோரும் இருந்தோம். மற்றொரு குழுவில் உம்மு சலாமா அவர்களும் அல்லாஹ்வின் தூதருடைய மற்ற மனைவிமார்களும் இருந்தனர்.
[ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 2581 ]

மற்றொரு ஹதீஸில் நம் அன்னையர்களுக்கு மத்தியில் நபியவர்களின் நெருக்கத்திற்குரியவர்களாக இருப்பதில் போட்டியிருந்ததை காணலாம்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடம் (அவர்களின் அறையில் அதிக நேரம்) தங்கியிருந்து தேன் சாப்பிடுவது வழக்கம். எனவே, (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் எங்களுக்குள் 'நபி(ஸல்) அவர்கள் (ஸைனபின் அறைக்குச் சென்றுவிட்டு) நம்மில் யாரிடம் முதலில் வந்தாலும் தங்களிடமிருந்து கருவேலம் பிசினின் துர்வாடை வருகிறதே! பிசின் சாப்பிட்டீர்களா? என்று கூறிட வேண்டும்' என்று கூடிப் பேசி முடிவு செய்து கொண்டோம். எங்களில் ஒருவரிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தபோது முன்பு பேசிவைத்திருந்தபடி கூறினோம். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , '(அப்படியெல்லாம்) ஒரு குறையும் நடந்திடவில்லை. ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரின் அறையில்) தேன் அருந்தினேன். (அவ்வளவுதான் சத்தியமாக) இனிமேல் ஒருபோதும் இவ்வாறு செய்யமாட்டேன்' என்று கூறினார்கள். எனவே, 'நபியே! உங்களுடைய துணைவியரின் திருப்தியை எதிர்பார்த்து, அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த ஒன்றை நீங்கள் ஏன் விலக்கிக் கொள்கிறீர்கள்?' என்று தொடங்கி 'நீங்கள் இருவரும் - இதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் (அது உங்களுக்கே நன்று)' என முடியும் (திருக்குர்ஆன் 66:1-4) வசனங்களை அல்லாஹ் அருளினான்.
ஆதாரம்; புஹாரி எண் 5267

இவ்வாறாக நம் அன்னையர்களுக்கு மத்தியில் பெண்களுக்கே உரித்தான போட்டி மனப்பான்மை இருந்தாலும், அவர்களுக்கிடையே பகைமையோ, ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்கும் என்னமோ, பழிவாங்கும் நோக்கமோ கடுகளவும் இல்லை என்பதை பின்வரும் ஹதீஸ் நமக்கு உணர்த்துகிறது. அறிவுச்சுடர் அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் மீது பாவிகள் அவதூறு சொனன்போது, இது குறித்து என்ன நடவடிக்கை மேற்கொள்வது என்பது குறித்து நபி[ஸல்] அவர்கள், அலீ[ரலி] உசாமா[ரலி] பரீரா[ரலி] உள்ளிட்ட சிலரிடம் ஆலோசனையும் கருத்துக்களும் கேட்டது போன்று அன்னை ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடமும் கருத்து கேட்டார்கள். அப்போது அன்னையவர்கள் கூறிய வார்த்தை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை;

அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் விஷயத்தில் (தம் இன்னொரு மனைவியான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களிடம் விசாரித்தார்கள். 'ஸைனபே! நீ (ஆயிஷாவைக் குறித்து) என்ன அறிந்திருக்கிறாய்?... அல்லது (அவர் விஷயத்தில்) என்ன பார்த்திருக்கிறாய்?... என்று (ஸைனபிடம்) கேட்டார்கள். அதற்கு அவர், 'இறைத்தூதர் அவர்களே! என் காதுகளையும் என் கண்களையும் (அவற்றின் மீது பழி சுமத்தாமல்) நான் பாதுகாத்து வைத்திருக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷாவைக் குறித்து நல்லதையே அறிவேன்" என்று பதிலளித்தார்கள். ஸைனப் அவர்கள் தாம், நபியவர்களின் துணைவியரில் எனக்கு (அழகிலும் நபி-ஸல்-அவர்களின் அன்பிலும்) போட்டியாக இருந்தார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்களை (இறையச்சமுடைய) பேணுதலான பண்பையளித்துப் பாதுகாத்திருந்தான்.
[ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 4141 ]

அழகிலும், நபி [ஸல்] அவர்களின் அன்பிலும் எனக்கு போட்டியாக இருந்தவர் ஸைனப் என்று வர்ணிக்கும் அன்னை ஆயிஷா[ரலி] அவர்கள் வாயாலேயே, அன்னை ஸைனப்[ரலி] அவர்கள் சொன்ன வார்த்தையால் சிலாகித்து அன்னை ஆயிஷா[ரலி] அவர்களே சொல்லுமளவிற்கு அன்னை ஸைனப்[ரலி] அவர்களின் உள்ளம் இறையச்சத்தால் நிரம்பியிருந்ததை காண்கிறோம். அதனால்தான் தன்னை போட்டியாக கருதிய ஆயிஷா[ரலி] அவர்கள் மீது பழி சொல்வதற்கு வாய்ப்பு கிடைத்தபோதும், அல்லாஹ்விற்கு அஞ்சியவர்களாக ஆயிஷா[ரலி] அவர்கள் விஷயத்தில் உள்ளதை மட்டும், உண்மையை மட்டும், நன்மையை மட்டும் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களிடம் அன்னை ஸைனப்[ரலி] அவர்கள் சொல்கிறார்கள் என்றால் அதுதான் சஹாபாக்கள். இதே நிலை இன்றைய பெண்களிடம் நடந்திருக்குமானால் என்ன நடந்திருக்கும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே! எனவேதான் தெளிவாக சொல்கிறோம் இறையச்சத்திலும் சரி, அமல்களிலும் சரி, நன்னடத்தையிலும் நற்குணத்திலும் சரி அந்த சஹாபாக்கள் மற்றும் ஸஹாபி பெண்களின் அந்தஸ்த்தில் கடுகளவும் எட்டிப்பிடிக்கமுடியாது என்பதே உண்மை. இந்த லட்சணத்தில், அந்த மேன்மக்களை விட அல்லாஹ் நம்மை மேன்மையாக்கி வைத்துள்ளான் என்ற அகம்பாவ பிரச்சாரம் வேறு!

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

Sat 28

Click here to bookmark this link.Channel Image17:13 [பாடம்-75] விதி. முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
இறைவனின் தீர்மானத்தை எழுதிய பேனா(வின் மை) உலர்ந்துவிட்டது.

2137. இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார் : ஒருவர் 'இறைத்தூதர் அவர்களே! சொர்க்கவாசிகள் யார்? நரகவாசிகள் யார்? என்று (முன்பே அல்லாஹ்வுக்குத்) தெரியுமா?' எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'ஆம் (தெரியும்)'' என்றார்கள். அவர் 'அவ்வாறாயின் ஏன் நற்செயல் புரிகிறவர்கள் நற்செயல் புரியவேண்டும்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'ஒவ்வொருவரும் 'எ(தை அடைவ)தற்காகப் படைக்கப்பட்டார்களோ' அல்லது 'எ(தை அடைவ)தற்கு வாய்ப்பளிக்கப்பட்டார்களோ' அதற்காகச் செயல்படுகிறார்கள்'' என்று பதிலளித்தார்கள்.

அல்லாஹ்வின் கட்டளை (முன்பே) தீர்மானிக்கப் பெற்ற விதியாக இருக்கின்றது. (திருக்குர்ஆன் 33:38)

2138. ஹுதைபா அல்யமான்(ரலி) அறிவித்தார் : (ஒரு முறை) எங்களிடையே நபி(ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அந்த உரையில், மறுமை ஏற்படும் வரையிலான எந்தத் தகவலையும் அவர்கள் குறிப்பிடாமல் விடவில்லை. அதனை அறிந்தவர்கள் அறிந்து கொண்டார்கள். அதனை அறியாதவர்கள் அறியாமலானார்கள். (அதில்) ஏதேனும் ஒன்றை நான் மறந்து விட்டிருந்தாலும் அதை (நேரில்) காணும்போது அறிந்துகொள்வேன். தம்மைவிட்டு மறைந்துவிட்ட ஒருவரை (மீண்டும்) பார்க்கும்போது அவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்வதைப் போன்று.

நேர்த்திக்கடன் மனிதனை விதிக்கே கொண்டு செல்கிறது.

2139. (அல்லாஹ் கூறினான்:) நேர்த்திக் கடனானது, நான் விதியில் எழுதியிராத எந்தவொன்றையும் மனிதனிடம் கொண்டு வந்துவிடாது. மாறாக, விதிதான் அவனை (நேர்த்திக்கடன் பக்கம்) கொண்டு செல்கிறது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வத்தை) வெளிக்கொணர்வதென நான் (முன்பே) விதியில் எழுதிவிட்டேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(பாவங்களிலிருந்து) அல்லாஹ்வால் பாதுகாக்கப் பெற்றவரே மாசற்றவராவார்.

2140. (இப்புவியின் ஆட்சிக்கு இறைவனுடைய) பிரதிநிதியாக ஆக்கப்படும் எவருக்கும் இரண்டு நெருக்கமான ஆலோசகர்கள் இருக்கவே செய்வார்கள். ஓர் ஆலோசகர், அவரை நன்மை செய்யும்படி ஏவி அதற்குத் தூண்டு கோலாக இருப்பார். அல்லாஹ் (குற்றங்களிலிருந்து) யாரை பாதுகாத்தானோ அவரே மாசற்றவராக இருப்பார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

அல்லாஹ் மனிதனையும் அவனுடைய உள்ளத்தையும் சூழ்ந்து நிற்கிறான்.

2141. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் (சத்தியம் செய்வதாக இருந்தால்) 'இல்லை. உள்ளங்களைப் புரட்டக்கூடியவன் மீதாணையாக!'' என்றே பெரும்பாலும் சத்தியம் செய்வார்கள்.
Click here to bookmark this link.Channel Image01:28 ஏழைகளின் நலனுக்கே எமது ஆட்சியில் முன்னுரிமை! ஸஹாபாக்களின் வாழ்வினிலே...
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

உமர்(ரலி) அவர்களின் (முன்னாள்) அடிமை அஸ்லம்(ரஹ்) அறிவித்தார்.
உமர் இப்னு கத்தாப்(ரலி), (ஸகாத் கால்நடைகளின்) பிரத்தியேக மேய்ச்சல் நிலம் ஒன்றுக்கு 'ஹுனைன் என்றழைக்கப்படும் தம் அடிமை ஒருவரை (காவலராக) நியமித்தார்கள். அப்போது, 'ஹுனையே! உன் கையை முஸ்லிம்களுக்கு அநீதியிழைப்பதிலிருந்து காத்துக் கொள். அநீதியிழைக்கப்பட்டவரின் சாபப் பிரார்த்தனைக்கு அஞ்சு. ஏனெனில், அநீதியிழைக்கப்பட்டவரின் பிரார்த்தனை (அல்லாஹ்வினால்) எற்றுக் கொள்ளப்படக் கூடியதாகும். சிறு ஒட்டக மந்தைகளையும் சிறு ஆட்டு மந்தைகளையும் ஓட்டி வருபவர்கள் (மேய்ச்சல் நிலத்திற்குள்) நுழைய அனுமதியளி. (செல்வந்தர்களான) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் மற்றும் உஸ்மான் இப்னு அஃப்பான் ஆகியோரின் கால்நடைகளைக் குறித்து எச்சரிக்கையாய் இரு. (அவற்றை உள்ளே நுழைய விடாதே) ஏனெனில், அவ்விருவரின் கால்நடைகளும் (தீனி கிடைக்காமல்) அழிந்து போய்விட்டால் அவர்களிருவரும் (தம் பிழைப்பிற்குத் தம்) பேரீச்சந் தோட்டங்களையும் விளைநிலங்களையும் பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால், சிறிய ஒட்டக மந்தைகளையும் சிறிய ஆட்டு மந்தைகளையும் வைத்திருப்பவர்கள் தங்கள் கால்நடைகள் (தீனி கிடைக்காமல்) அழிந்து போய்விட்டால் (கலீஃபாவான) என்னிடம் தம் பிள்ளை குட்டிகளை அழைத்து வந்து, 'விசுவாசிகளின் தலைவரே! நான் இவர்களை (பட்டினி கிடந்து) சாகவிட்டு விடவா?' என்ற கேட்பார்கள். எனவே, (முஸ்லிம்களின் பொதுநிதியிலிருந்து) தங்கத்தையும் வெள்ளியையும் (அவர்களுக்குத் தருவதை) விட (அரசின் பிரத்தியேக மேய்ச்சல் நிலங்களிலிருந்து) தண்ணீரையும் புற்பூண்டுகளையும் தருவது எனக்கு இலேசானதாகும் அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவர்களுக்கு அநீதியிழைத்துவிட்டதாக இவர்கள் கருதுகிறார்கள். இது அவர்களின் நாடு. இதற்காக இவர்கள் அறியாமைக் காலத்திலும் போரிட்டிருக்கிறார்கள்; இஸ்லாத்தின் காலத்திலும் இஸ்லாத்தைத் தழுவி இதற்காகப் போரிட்டிருக்கிறார்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! இறைவழியில் (போரிடுவோரை) நான் ஏற்றியனுப்பவேண்டிய (கால்நடைச்) செல்வம் மட்டும் தேவையில்லையென்றால் இவர்களுடைய நாட்டிலிருந்து ஓர் அங்குலத்தைக் கூட (கையகப்படுத்தி) பிரத்தியேக மேய்ச்சல் நிலமாக நான் ஆக்கியிருக்க மாட்டேன்" என்று கூறினார்கள்.
ஆதாரம் புஹாரி எண் 3059

அன்பானவர்களே! உமர்[ரலி] அவர்கள் தனது ஆட்சியின் போது ஒரு நிலத்தை கையகப்படுத்தி ,அதில் போருக்கு பயன்படும் கால்நடைகள் மேய்வதற்காக மேய்ச்சல் நிலமாக ஆக்கி அதில் காவலரையும் நியமிக்கிறார்கள். அந்த காவலரிடம் கூறும்போது,
கால்நடைகளை மட்டுமே நம்பி ஜீவனம் நடத்திக்கொண்டிருக்கும் ஏழைகள் தங்கள் கால்நடைகளை மேயவிடுவதற்காக இந்த நிலம் நோக்கி கொண்டுவந்தால் அவர்களுக்கு அனுமதியளி. ஏனெனில், இரை கிடைக்காமல் அவர்களின் கால்நடைகள் அழிந்துவிட்டால், அவர்கள் தங்களின் வறுமையை முறையிட தங்கள் குழந்தைகள் சகிதமாக எம்மை நோக்கி வருவார்கள். அந்த நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காக ஏழைகள் விஷயத்தில் அநீதி இழைப்பதை விட்டு காத்துக்கொள் என்று கூறுகிறார்கள்.
அடுத்து உமர்[ரலி] அவர்கள் சொன்னதுதான் முத்தாய்ப்பானது. வசதிபடைத்த உஸ்மான்[ரலி] மற்றும் அப்துர்ரஹ்மான் இப்னு அவூப்[ரலி] ஆகியோரின் கால்நடைகள் விஷயத்தில் கண்டிப்பாக இரு. ஏனெனில் அவர்களது கால்நடைகள் அழிந்துவிட்டால் கூட அவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது. ஏனெனில் அவர்களுக்கு பேரீத்தம் மரங்களும், விளைநிலங்களும் இருக்கின்றன என்று கூறுகிறார்கள்.
இதில் நாம் கவனிக்கவேண்டிய அம்சம் என்னவெனில், அரசுக்கு சொந்தமான எந்த ஒன்றும் வசதிபடைத்தோருக்கு திகட்டும் கனியாகவும், ஏழைகளுக்கு எட்டாக் கனியாகவும் இருப்பதை நாம் நடைமுறையில் பார்க்கிறோம். வசதிபடைத்தவர்களுக்காக அரசு இயந்திரம் தொடங்கி, நீதிமன்றம் வரை அப்பட்டமாக வளைவதை பார்க்கிறோம். வசதிபடைத்தவர்கள் மற்றும் தமக்கு பின்னால் ஒரு கூட்டத்தை வைத்திருப்பவர்கள் என்னதான் பாரதூரமான தவறுகள் செய்தாலும், அவர்களை கைது செய்வது அரிது. அவ்வாறே கைது செய்யப்பட்டாலும் அவர்கள் ஜாமீனில் 'ஹாயாக' வெளியே வருவார். பின்பு அந்த வழக்கு மறக்கப்பட்டுவிடும். அதே நேரத்தில் ஒரு முஸ்லீம் ஏதாவது தவறு செய்தான் என்று கருதப்பட்டால் அவனை அதிரடியாக கைது செய்யும் அரசு இயந்திரம், அவனை விசாரைக்கைதியாகவே ஜாமீன் கூட வழங்காமல் ஆயுளை சிறையிலேயே முடிக்கும் அளவுக்கு நடந்து கொள்வதை காணுகிறோம். ஆனால், உமர்[ரலி] அவர்கள் ஏழைகளிடம் அவர்களின் நிலையறிந்து கணிவாகவாகவும், வசதி படைத்தோரிடம் அவர்களின் நிலையறிந்து கடுமையாகவும் நடந்து, என்னுடைய ஆட்சி இறைவனுக்கு மட்டுமே அஞ்சக்கூடிய, ஏழைகளின் சிரிப்பில் இறைவனை உண்மையாகவே காணக்கூடிய ஆட்சி என்று நடத்திக்காட்டிய அமீருல் முஃமினீன் அவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக!

Fri 27

Click here to bookmark this link.Channel Image23:04 10-12-1430 வியாழக்கிழமை (26.11.09) ஏர்வாடி ஜாக்கில் பெருநாள் தொழுகை LUNAR CALENDAR / சந்திர நாட்காட்டி

அஸ்ஸலாமு அலைக்கம் அன்பான சகோதர சகோதரிகளே! உலகிற்கே நேர்வழிகாட்ட வந்த குர்ஆன் காட்டிதந்த மனித குல காலண்டர் (Unified Universal Calendar) (அல்குர்ஆன் 2:189,10:5) அடிப்படையில் ஏர்வாடி ஜம்மிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் சார்பாக பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. கடந்த ஒன்பது வருடங்களாக ஏர்வாடி ஜாக் அமைப்பு அல்லாஹ் மனித சமுதாயத்திற்கு தந்த சந்திர அடிப்படையிலான காலண்டரை அல்லாஹ்வின் உதவிகொண்டு நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும் அல்லாஹ்வின் உதவியால் அல்லாஹ்வின் காலண்டரை பின்பற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் திரளாக மக்கள் [...]

Thu 26

Click here to bookmark this link.Channel Image23:28 இனிய பெருநாளே..தியாகத் திருநாளே..! ஸஹாபாக்களின் வாழ்வினிலே...


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
ஒப்பற்ற ஓரிறை கொள்கையை உலகில் நிலைநாட்ட, சோதனைகளுக்கு முகம் கொடுத்து, நெருப்பிலிட்டபோதும் ஏகத்துவ தங்கமாய் மின்னிய ஏந்தல் நபி இப்ராஹீம் அலை] அவர்களின் தியாகத்தையும் , தரணியின் தலைவன் அல்லாஹ்வின் கட்டளையின்படி, தன்னை அறுக்க தந்தை கோரியபோது, ' இறைவன் நாடினால் பொறுமையாளனாக என்னை காண்பீர்கள்' என்று இறைக்கட்டளைக்கு தன் தலை கொடுக்க முன்வந்த தனயன் நபி இஸ்மாயீல்[அலை] அவர்களின் தியாகத்தையும் நினைவு கூறும் இந்த தியாககத்திருநாளில் உலகமெங்கும் வாழும் எனது இஸ்லாமிய சகோதரர-சகோதரிகளுக்கு வாழ்த்தினை தெரிவிப்பதோடு, எல்லாம் வல்ல அல்லாஹ், ஏகத்துவத்தை நிலைநாட்டும் உயரியபனியில் நபிஇப்ராஹீம்[அலை] அவர்களுக்கு வழங்கிய உள்ள உறுதியையும், தியாக மனப்பான்மையையும் நமக்கும் வழங்கிட, நம்மை அல்லாஹ் பொருந்திக்கொண்ட வாழ்க்கை வாழ்ந்திட இறைவனிடம் இறைசுகிறேன்.

-உங்கள் இஸ்லாமிய சகோதரன் முகவை எஸ்.அப்பாஸ்
Click here to bookmark this link.Channel Image17:43 [பாடம்-74] நெகிழ்வூட்டும் அறிவுரைகள். முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
ஆரோக்கியம் மற்றும் ஓய்வு குறித்தும் மறுமையின் வாழ்வைத் தவிர வேறு (நிலையான) வாழ்வில்லை என்பது குறித்தும் வந்துள்ளவை.

2091. மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு நேரம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

''உலகத்தில் நீ அந்நியனைப் போன்று இரு. அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு".

2092. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு 'உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு'' என்றார்கள்.(அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) ''நீ மாலை நேரத்தை அடைந்தால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க் குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு'' என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள்.

எதிர்பார்ப்புகளும் அவை அளவு கடந்து போவதும்.

2093. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் : (ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் (நிலத்தில்) ஒரு சதுரக் கட்டம் வரைந்தார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: (நடுவிலுள்ள மையப் புள்ளியான) இதுதான் மனிதன். இந்தச் சதுரம் தான் அவனைச் 'சூழ்ந்துள்ள' அல்லது 'சூழ்ந்து கொண்டுவிட்ட' வாழ்நாளாகும். (நடுவிலிருந்து) வெளியே செல்லும் கோடுதான் அவனுடைய எதிர்பார்ப்புகளாகும். இதோ இந்தச் சிறிய கோடுகள் (மனிதனை வந்தடையும்) சோதனைகளாகும். (சோதனைகளில்) ஒன்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் மற்றொன்று அவனைத் தீண்டவே செய்யும். (இடையில் ஏற்படும் சோதனைகளான) இவற்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் இ(யற்கை மரணமான)து அவனைத் தீண்டவே செய்யும்.

2094. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் (முந்தைய ஹதீஸில் உள்ளபடி) சில கோடுகள் வரைந்தார்கள். பிறகு '(சதுரத்தின் நடுவிலுள்ள கோட்டைக் காட்டி) இதுதான் (மனிதனின்) எதிர்பார்ப்புகள் (என்றும், சதுரத்தைக் காட்டி) இதுதான் அவனுடைய ஆயுள் (என்றும் கூறிவிட்டு,) இவ்வாறு அவன் (எதிர்பார்ப்புகளில்) இருந்து கொண்டிருக்கும்போது அருகிலுள்ள (மரணம் - ஆயுள் முடிவு எனும்) கோடு அவனை வந்தடைகிறது'' என்று கூறினார்கள்.

ஒருவர் அறுபது வயதை அடைந்தால் அதற்கு மேல் அவர் வாழ்நாள் குறித்து கூறும் சாக்குப் போக்குகளை அல்லாஹ் ஏற்பதில்லை.

2095. ஒரு மனிதனின் வயது அறுபது ஆண்டுகளை எட்டும் வரை வாழ்நாளைத் தள்ளிப் போட்ட பிறகு அவன் (ஆயுள் விஷயத்தில்) கூறும் சாக்குப்போக்குகளை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

2096. முதியவரின் மனம் கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்துவரும். 1. இம்மை வாழ்வின் (-செல்வத்தின்) மீதுள்ள பிரியம். 2. நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

2097. (தொடர்ந்து) மஹ்மூத் இப்னு ரபீஉ(ரலி) அறிவித்தார் : இத்பான் இப்னு மாலிக் அல்அன்சாரி(ரலி) அவர்கள் (பின்வருமாறு) சொல்ல கேட்டேன்.(ஒருநாள்) அதிகாலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் வந்திருந்தபோது 'அல்லாஹ்வின் திருப்தியை நாடி 'லா இலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று கூறியவாறு மறுமை நாளில் ஓர் அடியார் வந்தால் அவரின் மீது நரகத்தை அல்லாஹ் தடை செய்யாமல் இருப்பதில்லை'' என்று கூறினார்கள்.

2098. அல்லாஹ் கூறினான்: இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரின் உயிரை நான் கைப்பற்றி விடும்போது நன்மையை நாடிப் பொறுமை காத்தால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும் என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நல்லோர்களின் மறைவு.

2099. நல்லவர்களில் முதன்மையானவர்கள் முதலாவதாகவும் அவர்களுக்கு அடுத்த (படித்தரத்திலுள்ள)வர்கள் அடுத்ததாகவும் (இவ்வுலகை விட்டுப்) போய்விடுவார்கள். (இவ்வாறு நல்லவர்கள் மறைந்த பின் இப்புவியில்) 'மட்டமான வாற்கோதுமை போன்ற', அல்லது 'மட்டமான பேரீச்சம் பழம் போன்ற' தரம் வாய்ந்த மக்களே எஞ்சியிருப்பார்கள். அவர்களை அல்லாஹ் சற்றும் பொருட்படுத்தமாட்டான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிர்தாஸ் இப்னு மாலிக் அல் அஸ்லமீ(ரலி) அறிவித்தார்.

2100. ஆதமின் மகனக்கு (மனிதனுக்கு) இரண்டு நீரோடைகள் (நிறைய) செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. (பாவங்களிலிருந்து) பாவமன்னிப்புக் கோரி மீண்டு விட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் தம் செல்வத்திலிருந்து எதை (அறவழியில்) செலவிட்டாரோ அதுதான் அவருக்குரிய (நன்மை பயக்கும்) செல்வமாகும்.

2101. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் : (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் 'உங்களில் யாருக்காவது தம் செல்வத்தை விடத் தம் வாரிசுகளின் செல்வம் விருப்பமானதாக இருக்குமா?' என்று கேட்டார்கள். தோழர்கள் 'இறைத்தூதர் அவர்களே! எங்கள் அனைவருக்குமே (வாரிசுகளின் செல்வத்தை விட) எங்களின் செல்வமே விருப்பமானதாகும்'' என்று பதிலளித்தார்கள். 'அவ்வாறாயின், ஒருவர் (இறப்பதற்கு முன் அறவழியில்) செலவிட்டதே அவரின் செல்வமாகும். (இறக்கும் போது) விட்டுச் செல்வது அவரின் வாரிசுகளின் செல்வமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் மற்றும் நபித் தோழர்களின் பிழைப்பு எவ்வாறு இருந்தது என்பது குறித்தும், அவர்கள் இவ்வுலகி(ன் இன்பங்களி)லிருந்து விலகியிருந்தது குறித்தும்.

2102. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : எவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லையோ அத்தகைய அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் (கடும்) பசியினால் என் வயிற்றைத் தரையில் வைத்து அழுத்திக்கொண்டு படுத்திருக்கிறேன். மேலும், (கடும்) பசியினால் வயிற்றில் நான் கல்லை வைத்துக் கட்டிக் கொண்டதுமுண்டு. ஒரு நாள் நான் நபி(ஸல்) அவர்களும் தோழர்களும் (பள்ளிவாசலுக்குச்) செல்லும் பாதையில் அமர்ந்துகொண்டேன். அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்கள் (என்னைக்) கடந்து சென்றார்கள். உடனே நான் இறைவேதத்திலுள்ள ஒரு வசனத்தைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். என் வயிற்றை அவர்கள் நிரப்புவார்கள் என்பதற்காகவே (அது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் கடந்து சென்றார்கள்; (என் பசி நீங்க எதுவும்) அவர்கள் செய்யவில்லை. பிறகு உமர்(ரலி) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். உடனே நான் அவர்களிடமும் இறைவேதத்திலுள்ள ஒரு வசனம் குறித்துக் கேட்டேன். அவர்கள் என் வயிற்றை நிரப்புவார்கள் என்பதற்காகவே (அது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அவர்களும் (என் பசியைப் போக்க) ஒன்றும் செய்யாமல் போய்விட்டார்கள். பிறகு அபுல்காசிம் (நபி-ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். என்னைக் கண்டு, எனக்கு ஏற்பட்டுள்ள (பசி) நிலையையும் என் முகமாற்றத்தையும் அவர்கள் புரிந்துகொண்டு புன்னகைத்தார்கள். பிறகு, 'அபூ ஹிர்ரே! (அபூ ஹுரைராவே!) என்று அழைத்தார்கள். நான் 'இதோ காத்திருக்கிறேன்; இறைத்தூதர் அவர்களே!'' என்றேன். '(என்னைப்) பின்தொடர்ந்து வா!'' என்று சொல்லிவிட்டு நடந்தார்கள். நான் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். நபி(ஸல்) அவர்கள் (தம் இல்லத்தில்) நுழைந்தார்கள். நான் (உள்ளே செல்ல) அனுமதி கோர, எனக்கு அனுமதியளித்தார்கள். நான் உள்ளே சென்றேன். அப்போது (வீட்டில்) ஒரு கோப்பையில் பாலைக் கண்டார்கள். உடனே (தம் துணைவியாரிடம்) 'இந்தப் பால் எங்கிருந்து வந்தது?' என்று கேட்டார்கள். அவர்கள் 'இன்ன 'ஆண்' அல்லது 'பெண்' தங்களுக்கு இதை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்'' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் 'அபூ ஹுர்' என அழைத்தார்கள். நான் 'இதோ வந்துவிட்டேன்; இறைத்தூதர் அவர்களே!'' என்றேன். 'திண்ணைவாசிகளிடம் சென்று என்னிடம் அவர்களை அழைத்து வாருங்கள்'' என்றார்கள். திண்ணைவாசிகள் (அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா) இஸ்லாத்தின் விருந்தினர்கள் ஆவர். அவர்கள் புகலிடம் தேட அவர்களுக்குக் குடும்பமோ செல்வமோ கிடையாது. வேறு யாரிடமும் செல்லவுமாட்டார்கள். நபி(ஸல்) அவர்களிடம் ஏதேனும் தானப்பொருள்கள் வந்தால் அதனை இவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் அனுப்பி விடுவார்கள். அதிலிருந்து தாம் எதையும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். தம்மிடம் ஏதேனும் அன்பளிப்புப் பொருள்கள் வந்தால் இவர்களைத் தம்மிடம் அழைத்துவரும்படி ஆளனுப்பி விடுவார்கள். (அவர்கள் வந்தவுடன்) அவர்களுடன் சேர்ந்து தாமும் உண்பார்கள். இப்போது நபி(ஸல்) அவர்கள் (திண்ணைவாசிகளை அழைத்துவரச்) சொன்னதால் எனக்குக் கவலைதான் ஏற்பட்டது. '(இருப்பதோ சிறிதளவு பால்.) திண்ணைவாசிகளுக்கு இந்தப் பால் எம்மாத்திரம்? இதைச் சிறிதளவு பருகி என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு நானே பொருத்தமானவன். திண்னை வாசிகள் வந்தால், நபியவர்கள் எனக்கு உத்தரவிட, நானே அவர்களுக்குக் கொடுத்துவிட்டு (இறுதியில்) எனக்கு இந்தப் பாலில் ஒன்றும் கிடைக்காமல் போகலாம். இருப்பினும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியாமல் இருக்க இயலாது'' என (மனத்துக்குள்) சொல்லிக் கொண்டேன்.

பிறகு, நான் திண்ணைவாசிகளிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்களும் (அழைப்பை ஏற்று) வந்து (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கோரினார்கள். நபி(ஸல்) அவர்கள் திண்ணைவாசிகளுக்கு அனுமதி வழங்கினார்கள். அவர்கள் அந்த வீட்டில் ஆங்காங்கே இடம்பிடித்து அமரலானார்கள். நபி(ஸல்) அவர்கள் 'அபூ ஹிர்' என அழைத்தார்கள். நான் 'இதோ காத்திருக்கிறேன்; கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே!'' என்றேன். நபி(ஸல்) அவர்கள் 'இதை எடுத்து இவர்களுக்குக் கொடுங்கள்'' என்றார்கள். நான் அந்தக் கோப்பையை எடுத்து ஒரு மனிதருக்குக் கொடுத்தேன். அவர் தாகம் தணியும் வரை குடித்தார். பிறகு அவர் என்னிடம் அந்தக் கோப்பையைத் திருப்பித் தந்தார். நான் அதை இன்னொரு மனிதரிடம் கொடுத்தேன். அவரும் தாகம் தீரும் வரை குடித்துவிட்டுக் கோப்பையை என்னிடம் தந்தார். பிறகு இன்னொருவர் தாகம் தீரும் வரை குடித்தார். பிறகு என்னிடம் அதைத் திருப்பித் தந்தார். இறுதியில் நான் நபி(ஸல்) அவர்களிடம் அதைக் கொண்டு சென்றேன். அப்போது மக்கள் அனைவரும் தாகம் தணிந்திருந்தினர். நபி(ஸல்) அவர்கள் அந்தக் கோப்பையை வாங்கித் தம் கையில் வைத்துக்கொண்டு என்னைக் கூர்ந்துப் பார்த்துப் புன்னகைத்தார்கள். பிறகு 'அபூ ஹிர்!' என்று அழைத்தார்கள். நான் 'இதோ காத்திருக்கிறேன்; கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே!'' என்று சொன்னேன். அதற்கவர்கள் 'நானும் நீங்களும் (மட்டும் தான்) எஞ்சியுள்ளோம் (அப்படித்தானே?)'' என்று கேட்டார்கள். நான் 'இறைத்தூதர் அவர்களே! (ஆம்.) உண்மைதான்'' என்றேன். நபி(ஸல்) அவர்கள் 'உட்கார்ந்து (இதைப் பருகுங்கள்'' என்றார்கள். நான் உட்கார்ந்து பருகினேன். 'இன்னும் பருகுங்கள்'' என்றார்கள். பருகினேன். இவ்வாறு அவர்கள் 'பருகுங்கள்' என்று சொல்லிக் கொண்டேயிருக்க, நான் பருகிக் கொண்டேயிருந்தேன். இறுதியில் 'இல்லை. சத்திய (மார்க்க)த்தைக் கொண்டு தங்களை அனுப்பிவைத்த (இறை)வன் மீது ஆணையாக! இனிப் பருகுவதற்கு வழியே இல்லை'' என்றேன். நபி(ஸல்) அவர்கள் '(சரி) அதை எனக்குக் காட்டுங்கள்'' என்றார்கள். எனவே, நான் அவர்களிடம் அந்தக் கோப்பைக் கொடுத்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனுடைய (திருப்)பெயர் கூறி எஞ்சியதைப் பருகினார்கள்.

2103. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : ''அல்லாஹ்வே! முஹம்மதின் குடும்பத்தாருக்கு(ப் பசிக்கு) உணவு வழங்குவாயாக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.

2104. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : ''இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்களில் யாரையும் அவரின் நற்செயல் ஒருபோதும் காப்பாற்றாது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப் பெரும் கருணையாலேயே எவரும் காப்பாற்றப்படுவார்)'' என்று கூறினார்கள். மக்கள் 'அல்லாஹ்வின் தூதரே! தங்களையுமா (தங்களின் நற்செயல் காப்பாற்றாது?)'' என்று வினவினார்கள். நபி(ஸல்) அவர்கள் '(ஆம்) என்னையும்தான்; அரவணைத்துக் கொண்டால் தவிர'' என்று கூறிவிட்டு, '(எனவே, நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாக நடந்து கொள்ளுங்கள். (வரம்பு மீறி விடாதீர்கள்.) காலையிலும், மாலையிலும், இரவில் சிறிது நேரமும் நற்செயல் புரியுங்கள். (எதிலும்) நடுநிலை (தவறாதீர்கள்) நடுநிலை(யைக் கடைபிடியுங்கள்.) (இவ்வாறு செய்தால் இலட்சியத்தை) நீங்கள் அடைவீர்கள்'' என்றார்கள்.

2105. ஆயிஷா(ரலி) அறிவித்தார் : ''நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது எது?' என்று நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் '(எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே'' என்று விடையளித்தார்கள். மேலும், 'நற்செயல்கள் புரிவதில் இயன்றவரை அதன் எல்லையைத் தொடமுயலுங்கள்'' என்றும் கூறினார்கள்.

2106. அல்லாஹ் அன்பையும் கருணையையும் படைத்தபோது அதனை நுறு வகைகளாக அமைத்தான். அவற்றில் தொண்ணூற்று ஒன்பது வகைகளைத் தன்னிடமே வைத்துக் கொண்டான். (மீதியுள்ள) ஒரு வகையை மட்டுமே தன் படைப்புகள் அனைத்துக்கும் வழங்கினான். எனவே, இறைமறுப்பாளன் அல்லாஹ்வின் கருணை முழுவதையும் அறிந்தால், சொர்க்கத்தின் மீது அவநம்பிக்கை கொள்ளமாட்டான். (இதைப்போன்றே) இறைநம்பிக்கையாளர் அல்லாஹ் வழங்கும் வேதனை முழுவதையும் அறிந்தால் நரகத்தைப் பற்றிய அச்சமில்லாமல் இருக்க மாட்டார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நாவைப் பேணிக் காத்தல்.

2107. தம் இரண்டு தாடைகளுக்கு இடையே உள்ளத( நாவி)ற்கும், தம் இரண்டு கால்களுக்கு இடையே உள்ளத (மர்ம உறுப்பி)ற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிப்பவருககு நான் சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறேன என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

2108. ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாவங்களை விட்டொழிதல்.

2109. எனக்கும் என்னை அல்லாஹ் எ(ந்த மார்க்கத்)தைக் கொண்டு அனுப்பியுள்ளானோ அதற்கும் எடுத்துக்காட்டாகிறது. ஒரு மனிதரின் நிலையைப் போன்றதாகும். அவர் ஒரு சமூகத்தாரிடம் சென்று 'நான் (இன்ன பெரும்) படையை என் கண்களால் பார்த்தேன். (எந்நேரமும் அப்படை உங்களைத் தாக்கலாம். அதை எதிர்கொள்ளும் ஆற்றல் உங்களிடம் இல்லை.) நான், 'நிர்வாணமாக (ஓடி வந்து) எச்சரிக்கை செய்ப(வனைப்) போன்றவன் ஆவேன். எனவே, (ஓடுங்கள்;) தப்பித்துக் கொள்ளுங்கள். தப்பித்துக் கொள்ளுங்கள்'' என்று கூறினார். அப்போது ஒரு பிரிவினர் அவருக்குக் கீழ்ப்படிந்து இரவோடு இரவாக மெல்ல வெளியேறித் தப்பிவிட்டனர். ஆனால், இன்னொரு பிரிவினர் அவரை நம்ப மறுத்தனர். பிறகு அதிகாலையில் அப்படையினர் வந்து அவர்களைத் தாக்கிப் பூண்டோடு அழித்தனர் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது.

2110. மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

சொர்க்கம் உங்களின் செருப்பு வாரைவிட மிக அருகில் உள்ளது. நரகமும் அதைப்போன்றுதான்.

2111. சொர்க்கம் உங்களின் செருப்பு வாரைவிட உங்களுக்கு மிக அருகில் உள்ளது. நரகமும் அதைபோன்றே (மிக அருகில் உள்ளது.) என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

(செல்வத்தில்) தன்னைவிடக் கீழ் நிலையில் இருப்பவரை (மனிதன்) பார்க்கட்டும்; தன்னை விட மேல் நிலையில் இருப்பவரைப் பார்க்க வேண்டாம்.

2112. செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழனாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நன்மை அல்லது தீமை செய்ய எண்ணுவது.

2113. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் : (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனத்தில்) எண்ணிவிட்டாலே அதைச் செயல்படுத்தா விட்டாலும் அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும் விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழு நூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால் ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கைவிட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான்.

நம்பகத் தன்மை (மக்களிடமிருந்து) அகன்று விடல்.

2114. ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களுக்கு (நம்பகத்தன்மை தொடர்பாக) இரண்டு செய்திகளைக் கூறினார்கள். அவற்றில் ஒன்றை நான் (என் வாழ்நாளிலேயே) பார்த்துவிட்டேன். மற்றொன்றை எதிர்பார்த்திருக்கிறேன். ஒரு செய்தி யாதெனில், (இயற்கையாகவே) மனிதர்களின் ஆழ்மனதில் ('அமானத்' எனும்) நம்பகத்தன்மை இடம் பிடித்தது. பின்னர் அவர்கள் குர்ஆனிலிருந்தும் (அதை) அறிந்து கொண்டார்கள். பிறகு (என்னுடைய வழியான) சுன்னாவிலிருந்தும் (அதை)அறிந்து கொண்டார்கள். (நபியவர்கள் கூறிய இதை நான் பார்த்துவிட்டேன்.) இரண்டாவது செய்தி, நம்பகத்தன்மை அகற்றப்படுவது தொடர்பானதாகும். மனிதன் ஒரு முறை உறங்குவான். (உறக்கத்திலேயே) அவனுடைய உள்ளத்திலிருந்து நம்பகத்தன்மை (சிறிது) கைப்பற்றப்படும். அதையடுத்து அ(து அகற்றப்பட்ட)தன் அடையாளம் சிறு (கரும்) புள்ளி அளவுக்கு (அவனில்) தங்கிவிடும். பிறகு மீண்டும் ஒரு முறை அவன் உறங்குவான். அப்போது (மறுபடியும்) அது கைப்பற்றப்படும். இம்முறை அ(து அகற்றப்பட்ட) தன் அடையாளம் (கடின உழைப்பால் கையில் ஏற்படும்) காய்ப்பு அளவுக்கு (அவனில்) நிலைத்துவிடும். (இவ்வாறு முதலில் 'நம்பகத் தன்மை' எனும் ஒளி உள்ளத்தில் ஏற்றப்பட்டுப் பிறகு சிறிது சிறிதாக அது அணைக்கப்படுவதானது) காலில் தீக்கங்குகளை உருட்டிவிட்டு, அதனால் கால் கொப்பளித்து உப்பிவிடுவதைப் போன்றதாகும். பார்வையில் அது உப்பிப் பெரிதாகத் தெரியுமேதவிர, அதனுள் ஒன்றும் இருக்காது. பின்னர் காலையில் மக்கள் தங்களிடையே கொடுக்கல் வாங்கல் செய்து கொள்வார்கள். (ஆனால், அவர்களில்) யாருமே நம்பிக்கையைக் காப்பாற்ற எத்தனிக்கமாட்டார்கள். இன்னாருடைய மக்களில் நம்பிக்கையான ஒருவர் இருக்கிறார் என்று (தேடிக் கண்டுபிடித்து) சொல்லப்படும் (அளவுக்கு நம்பிக்கையாளர்கள் அரிதாகிவிடுவார்கள். மேலும், ஒருவரைப் பற்றி, 'அவரின் அறிவுதான் என்ன? அவரின் விவேகம்தான் என்ன? அவரின் வீரம்தான் என்ன?' என்று (சிலாகித்துக்) கூறப்படும். ஆனால், அந்த மனிதருடைய இதயத்தில் கடுகளவு கூட நம்பிக்கை இருக்காது. (அறிவிப்பாளர்: ஹுதைஃபா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) என் மீது ஒரு காலம் வந்திருந்தது. அக்காலத்தில் நான் உங்களில் யாரிடம் கொடுக்கல் வாங்கல் செய்கிறேன் என்று பொருட்படுத்தியதில்லை. (ஏனெனில்,) முஸ்லிமாக இருந்தால், இஸ்லாம் (என்னுடைய பொருளை அவரிடமிருந்து) என்னிடம் திருப்பித் தந்துவிடும். கிறிஸ்தவராக இருந்தால் அவருக்கான அதிகாரி என்னுடைய பொருளை அவரிடமிருந்து எனக்கு மீட்டுத் தந்துவிடுவார். ஆனால், இன்றோ நான் இன்னார், இன்னாரிடம் மட்டுமே கொடுக்கல் வாங்கல் செய்கிறேன்.

2115. மனிதர்கள் (பொதி சுமக்கும்) நூறு ஒட்டகங்கள் போன்றவர்கள். அவற்றில் பயணத்திற்குப் பயன்படும் ஒட்டகத்தை நீ காண்பது அரிது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

முகஸ்துதியும் விளம்பரமும்.

2116. ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார் : நான் நபி(ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் 'விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறவரை அல்லாஹ் (மறுமை நாளில்) அம்பலப்படுத்துவான்'' என்று கூறியதைக் கேட்டேன். அறிவிப்பாளர் ஸலமா இப்னு குஹைல்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : இந்த ஹதீஸை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜுன்துப்(ரலி) அவர்கள் தவிர வேறு யாரிடமும் நான் கேட்டதில்லை.

பணிவு.

2117. அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அல்லாஹ்வை தரிசிக்க விரும்புகிறவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான்.

2118. உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வை தரிசிக்க விரும்புகிறவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். அல்லாஹ்வை தரிசிப்பதை வெறுக்கிறவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்'' என்று கூறினார்கள். அப்போது 'ஆயிஷா(ரலி) அவர்கள்' அல்லது 'நபி(ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர்' 'நாங்கள் மரணத்தை வெறுக்கிறோம்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் '(அல்லாஹ்வின் தரிசனம் என்பதற்குப் பொருள்) அதுவல்ல. மாறாக, இறைநம்பிக்கையாளருக்கு இறப்பு நேரம் வரும்போது, அவரைப் பற்றி அல்லாஹ் திருப்தி அடைந்திருப்பதாகவும் அவரைக் கௌரவிப்பதாகவும் அவருக்கு நற்செய்தி கூறப்படும். அப்போது இறப்புக்குப் பின்னால் உள்ள (மறுமை) வாழ்வைவிட விருப்பமானதாக வேறெதுவும் அவருக்கு இராது. எனவே, அவர் அல்லாஹ்வை தரிசிக்க விரும்புவார். அல்லாஹ்வும் அவரைச் சந்தி(த்து உபசரி)க்க விரும்புவான். இறைமறுப்பாளனுக்கு மரணவேளை வரும்போது, அல்லாஹ் வழங்கும் வேதனை குறித்தும் தண்டனை குறித்தும் அவனுக்கு அறிவிக்கப்படும். அப்போது மரணத்திற்குப் பின்னால் உள்ள (மறுமை) வாழ்வை விட வெறுப்பானதாக வேறெதுவும் அவனுக்கு இராது. எனவே, அவன் அல்லாஹ்வை தரிசிப்பதை வெறுப்பான்; அல்லாஹ்வும் அவனைச் சந்தி(த்து அருள் பாலி)ப்பதை வெறுப்பான்'' என்று (விளக்கம்) சொன்னார்கள். இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

மரணத்தின் வேதனைகள்.

2119. ஆயிஷா(ரலி) அறிவித்தார் : கடின சுபாவம் படைத்த கிராமவாசிகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'மறுமை நாள் எப்போது?' என்று கேட்பார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவர்களிலேயே வயதில் சிறியவரான ஒருவரை நோக்கி 'இவர் உயிர் வாழ்ந்தால், இவரை முதுமை அடைவதற்கு முன்பே உங்களின் மீது மறுமை சம்பவித்து விடும்'' என்று கூறுவார்கள். இங்கு 'மறுமை' (ஸாஅத்) என்பது மரணத்தைக் குறிக்கும் என (அறிவிப்பாளர்) ஹிஷாம் இப்னு உர்வா(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

மறுமை நாளில் அல்லாஹ் பூமியைக் கைப்பற்றிக் கொள்வான்.

2120. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் 'மறுமை நாளில் இந்த பூமி (அடுப்பில் இருக்கும்) ஒரு ரொட்டியைப் போன்று (சமதளமாக) மாறிவிடும். பயணத்திலுள்ள உங்களில் ஒருவர் தம் ரொட்டியை (அடுப்பிலிருந்து எடுத்துக் கையில் வைத்து)ப் புரட்டுவதைப் போன்று, சர்வ வல்லமை படைத்த (இறை)வன் பூமியைத் தன்னுடைய கரத்தால் புரட்டிப்போடுவான். (அதையே) சொர்க்கவாசிகளுக்கு விருந்தாக்குவான்'' என்று கூறினார்கள். அப்போது யூதர்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'அபுல் காசிமே! அளவற்ற அருளாளன் உங்களுக்கு சுபிட்சம் அளிக்கட்டும். மறுமை நாளில் சொர்க்கவாசிகளின் விருந்துணவு என்னவென்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'சரி' என்றார்கள். அவர் நபி(ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே 'மறுமை நாளில் இந்த பூமி ஒரேயொரு ரொட்டியைப் போன்று இருக்கும்'' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களைக் கூர்ந்து பார்த்துவிட்டு, தம் கடைவாய்ப் பற்கள் தெரிய சிரித்தார்கள். பிறகு 'உங்களுக்கு சொர்க்கவாசிகளின் குழம்பு எது எனத் தெரிவிக்கட்டுமா?' என்று அந்த யூதர் கேட்டுவிட்டு அவர்களின் குழம்பு 'பாலாம்' மற்றும் 'நூன்' என்றார். மக்கள் 'இது என்ன?' என்று கேட்டார்கள். அந்த யூதர் '(அவை) காளைமாடும் மீனும் ஆகும். அந்த இரண்டின் ஈரல்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் தனித் துண்டை (மட்டுமே சொர்க்கவாசிகளில்) எழுபதாயிரம் பேர் புசிப்பார்கள்'' என்று கூறினார்.

2121. (உமியோ தவிடோ கலக்காத) சுத்தமான மாவினாலான ரொட்டியைப் போன்று தூய வெண்மையான (சம) தளத்தின் மீது மறுமை நாளில் மனிதர்கள் ஒன்று திரட்டப்படுவார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதன் அறிவிப்பாளரான ஸஹ்ல்(ரலி) அவர்கள், அல்லது மற்றொருவர் 'அந்த பூமியில் (மலை, மடுவு, காடு, வீடு என) எந்த அடையாளமும் யாருக்கும் இருக்காது'' என்று (கூடுதலாக) அறிவித்தார்கள்.

(மறுமையில் மக்கள்) ஒன்று திரட்டப்படுவது எப்படி?

2122. (மறுமை நாள் ஏற்படுவதற்கு சற்று முன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி) மக்கள் மூன்று பிரிவினராக ஒன்று திரட்டப்படுவார்கள். (அதில் முதல் பிரிவினர்) அச்சத்துடனும் ஆர்வத்துடனும் செல்வார்கள். (இரண்டாவது பிரிவினர்) (வாகனப் பற்றாக்குறையினால் தாமதித்துப் பின்னர்) ஒரே ஒட்டகத்தின் மீது இரண்டு பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது மூன்று பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது நான்கு பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது பத்துப் போராகச் செல்வார்கள். அவர்களில் எஞ்சியவர்(களே மூன்றாவது பிரிவினராவர். அவர்)களை (பூமியில் ஏற்படும் ஒரு பெரும்) தீ (விபத்து) ஒன்று திரட்டும். அவர்கள் மதிய ஓய்வெடுக்கும்போதும், இரவில் ஓய்வெடுக்கும் போதும், காலை நேரத்தை அடையும்போதும், மாலை நேரத்தை அடையும் போதும் (இப்படி எல்லா நேரங்களிலும்) அந்தத் தீ அவர்களுடனேயே இருக்கும்.

2123. ஆயிஷா(ரலி) அறிவித்தார் : ''நீங்கள் மறுமைநாளில் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்று திரட்டப் படுவீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நான் 'இறைத்தூதர் அவர்களே! (நிர்வாணமான) ஆண்களும் பெண்களும் சிலரை சிலர் பார்ப்பார்களே?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்படாத அளவுக்கு (அங்குள்ள) நிலைமை மிகக் கடுமையானதாக இருக்கும்'' என்று கூறினார்கள்.

2124. மறுமைநாளில் மனிதர்களுக்கு (அவர்களின் தலைக்கருகில் நெருங்கி வரும் சூரியனால்) வியர்வை ஏற்படும். அவர்களின் வியர்வை தரையினுள் எழுபது முழம் வரை சென்று, (தரைக்கு மேல்) அவர்களின் வாயை அடைந்து, இறுதியில் அவர்களின் காதையும் அடையும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

மறுமைநாளில் பழிதீர்க்கப்படுதல்.

2125. மறுமை நாளில் மனிதர்களுக்கிடையே முதன் முதலில் தீர்ப்பளிக்கப்படுவது (உலகில் சிந்தப்பட்ட) இரத்தங்கள் (கொலைகள்) குறித்துதான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

2126. சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கும், நரகவாசிகள் நரகத்திற்கும் சென்று சேர்ந்த பிறகு 'மரணம்' (ஓர் ஆட்டின் உருவத்தில்) கொண்டு வரப்பட்டு, சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே நிறுத்தப்படும். பின்னர் அது அறுக்கப்படும். பிறகு அறிவிப்பாளர் ஒருவர் 'சொர்க்கவாசிகளே! (இனி) மரணம் என்பதே கிடையாது. நரகவாசிகளே! (இனி) மரணம் என்பதே கிடையாது'' என அறிவிப்பார். அப்போது சொர்க்கவாசிகளுக்கு மகிழ்ச்சிக்கு மேல் மகிழ்ச்சி அதிகமாகும். நரகவாசிகளுக்குக் கவலைக்கு மேல் கவலை அதிகமாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

2128. (நரகத்தில்) இறைமறுப்பாளனின் இரண்டு தோள் புஜங்களுக்கிடையே உள்ள தூரம், துரிதமாகப் பயணிப்பவர் மூன்று நாள்கள் கடக்கும் தூரமாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2129. சிலர் (நரக நெருப்பு தீண்டியதால்) தம் சருமத்தின் நிறம் மாறிய பின் நரகத்திலிருந்து வெளியேறி, சொர்க்கத்துக்குள் நுழைவார்கள். அவர்களை சொர்க்கவாசிகள் 'ஜஹன்னமியயூன்' (நரக விடுதலை பெற்றோர்) எனப் பெயரிட்டு அழைப்பார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

2130. மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிகவும் இலேசாக வேதனை செய்யப்படுபவர் ஒரு மனிதராவார். அவரின் உள்ளங்கால்களின் நடுவில் இரண்டு நெருப்புக் கங்குகள் வைக்கப்படும். (அடுப்பில் வைக்கப்பட்டுள்ள) செம்புப் பாத்திரம் (அல்லது) பன்னீர் பாத்திரம் கொதிப்பதைப் போன்று அவற்றால் அவரின் மூளை கொதிக்கும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹூரைரா(ரலி)அறிவித்தார்.

2131. (சொர்க்கவாசிகளில்) எவரும், (உலக வாழ்வில்) தாம் பாவம் புரிந்திருந்தால் நரகத்தில் தம் இருப்பிடம் எதுவாக இருந்திருக்கும் என்று காட்டப்படாமல் சொர்க்கத்தில் நுழையமாட்டார். அவர் அதிகமாக (மகிழ்ச்சியடைந்து இறைவனுக்கு) நன்றி செலுத்துவதற்காகவே (இவ்வாறு காட்டப்படும்). (நரகவாசிகளில்) எவரும், (உலக வாழ்வில்) தாம் நன்மை புரிந்திருந்தால் சொர்க்கத்தில் தம் இருப்பிடம் எதுவாக இருந்திருக்கும் என்று காட்டப்படாமல் நரகத்தில் நுழையமாட்டார். இது அவருக்கு (பெரும்) துயரமாக அமையவேண்டும் என்பதற்காகவே (காட்டப்படுகிறது.) என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2132. (மறுமை நாளில் என்னுடைய 'அல்கவ்ஸர்' எனும்) தடாகம் உங்களுக்கு முன்னால் இருக்கும். (அதன் விசாலமானது, அன்றைய ஷாம் நாட்டின்) 'ஜர்பா' மற்றும் 'அத்ருஹ்' ஆகிய இடங்களுக்கிடையேயான தூரமாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

2133. ('அல்கவ்ஸர்' எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

2134. என் தடாகத்தின் (பரப்பு) அளவு யமனிலுள்ள 'ஸன்ஆ' நகரத்திற்கும் (ஷாம் நாட்டை ஒட்டியிருந்த) 'அய்லா' நகரத்திற்கும் இடையேயான (தொலை தூரத்)தைப் போன்றதாகும். மேலும், அதில் விண்மீன்களின் எண்ணிக்கையைப் போன்று (கணக்கிடலங்கா) கோப்பைகள் (வைக்கப்பட்டு) இருக்கும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

2135. நான் உறங்கிக்கொண்டிருந்தேன். அப்போது (கனவில்) நான் (அல்கவ்ஸர் தடாகத்தினருகில்) நின்று கொண்டிருக்கிறேன். அப்போது ஒரு குழுவினரை நான் அடையாளம் கண்டுகொள்கிறேன். எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு(வான)வர் தோன்றி (அந்தக் குழுவினரை நோக்கி), 'வாருங்கள்' என்று அழைக்கிறார். உடனே நான் (அவரிடம் 'எங்கே (இவர்களை அழைக்கிறீர்கள்)?' என்றேன். அவர் 'அல்லாஹ்வின் மீதாணையாக! நரகத்திற்கு'' என்றார். நான் 'இவர்கள் என்ன செய்தார்கள்?' என்றேன். அவர் 'உங்களுக்குப் பின்னால் இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிச் சென்றார்கள்'' என்றார். பிறகு மற்றொரு குழுவினரையும் நான் அடையாளம் கண்டு கொள்கிறேன். எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு (வான)வர் தோன்றி, 'வாருங்கள்' என (அவர்களிடம்) கூறுகிறார். நான் '(இவர்களை) எங்கே (அழைக்கிறீர்கள்)?' என்றேன். அவர் 'அல்லாஹ்வின் மீதாணையாக! நரகத்திற்குத்தான்'' என்றார். நான் 'இவர்கள் என்ன செய்தார்கள்?' என்று கேட்டேன். அவர் 'இவர்கள் உங்களுக்குப் பின்னால் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிப் போய்விட்டார்கள்'' என்று பதிலளித்தார். அவர்களில் காணாமல் போன ஒட்டகத்தைப் போன்று ஒரு சிலரைத் தவிர வேறெவரும் தப்பித்துக் கொள்வார்கள் என நான் கருதவில்லை என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2136. ஹாரிஸா இப்னு வஹ்ப்(ரலி) அறிவித்தார் : (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் ('அல்கவ்ஸர்') எனும் தடாகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது '(அதன் பரப்பளவானது,) மதீனாவுக்கும் (யமனிலுள்ள) 'ஸன்ஆ' நகரத்துக்கும் இடையேயான தூரமாகும்'' என்று கூறினார்கள்.
Click here to bookmark this link.Channel Image13:43 தியாகத் திருநாள் வாழ்த்துகள்! அல்பாக்கவி.காம்
عيد مبارك அன்பிற்கினிய நமத இணைய தள வாசகப் பெருமக்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹ். இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள நமது இணைய தளத்திலும் , இணைய தள வகுப்புகளிலும் கலந்து கொண்டு பயன் பெற்று வரும் உங்கள் அனைவருக்காகவும் இந்த தியாகத்திருநாளில் நம் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து துஆ செய்கிறோம். நம் சகோதர சகோரர்களில் இலட்சக்கணக்கான மக்கள் புனித ஹ்ஜ்ஜை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அரபாத் பெருவெளி யிலிருந்து புறப்பட்டு இன்றிரவு முஸ்தலிபாவில் தங்கியுள்ளனர். அவர்கள் [...]
Click here to bookmark this link.Channel Image13:27 ஈதுல் அல்ஹா பெருநாள் அல்பாக்கவி.காம்
ஈத்’ என்னும் அரபுச் சொல்லுக்கு திரும்பத் திரும்ப வருதல் என்பது பொருளாகும்.பெருநாள் ஆண்டு தோறும் திரும்பத் திரும்ப வருவதால் இப்பெயர் பெற்றது. மதீனாவில் திருவிழாக்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனா நகர் வந்தபோது மதீனா வாசிகள் இரு நாட்களை பெரும் திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். அதற்கான காரணங்களை வினவியபோது நாங்கள் பண்டு தொட்டு விளையாடுவதற் காகவும்.பொழுது போக்கிற்காகவும் இவ்வாறு கொண்டாடி மகிழ்வது வழக்கம் என்றார்கள். அப்போது நபிகளார் (ஸல்) அவர்கள், இரு பெரு நாட்கள் ‘அல்லாஹ் அவ்விரண்டு (திருவிழாக்களு) க்கும் பதிலாக [...]
Click here to bookmark this link.Channel Image13:10 மஸ்ஜிதுந் நபவீ ஸியாரத் அல்பாக்கவி.காம்
زيارة المسجد النبوي 1.மதீனா சென்று ஸியாரத் செய்வது ஹஜ்ஜூடைய கடமைகளில் ஒன்றா ? மதீனா முனவ்வராவுக்கு பயணம் செல்வோர் அதன் நோக்கத்தைப் புரியாமலே சென்று வருகின்றனர். சிலர் அதை ஹஜ்ஜூ வணக்கங் களில் ஒன்றாகவே கருதுகின்றனர். மதீனா சென்று ஸியாரத் செய்வது ஹஜ்ஜூடைய கடமைகளில் ஒன்றா ? அல்லது அதன் ஸூன்னத்தான வணக்கங்;களைச் சார்ந்ததா? ஹஜ்ஜூக்காக வந்து மதீனாவுக்குச் செல்ல வில்லையெனில் ஹஜ்ஜூ நிறைவேறாதா? போன்ற கேள்விகள் நம்மில் பலருக்கு எழலாம். கேட்கவும் செய்கின்றனர். அது ஹஜ்ஜூ நிறைவேறுவதற்குரிய கடமைகளில் ஒன்றல்ல. [...]
Click here to bookmark this link.Channel Image06:55 10-12-1430 வியாழக்கிழமை (26.11.09) திருச்சியில் பெருநாள் தொழுகை LUNAR CALENDAR / சந்திர நாட்காட்டி

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பான சகோதர சகோதரிகளே! உலகிற்கே நேர்வழிகாட்ட வந்த குர்ஆன் காட்டிதந்த மனித குல காலண்டர் (Unified Universal Calendar) (அல்குர்ஆன் 2:189,10:5) அடிப்படையில் திருச்சியில் முதல் முதலாக ஹிஜ்ரா கமிட்டி ஆப் இந்தியா சார்பாக பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. அல்லாஹ்வின் உதவியால் அல்லாஹ்வின் காலண்டரை பின்பற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் திரளாக மக்கள் கலந்து கொண்டு அல்லாஹ்வின் மார்க்கத்தை மேலோங்கச் செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். இத்துடன் திருச்சி பெருநாள் தொழுகை போட்டோ இணைக்கப்பட்டுள்ளது.

தொழுகை நடைபெற்ற இடம்:- ஹஜ் பெருநாள் [...]

Click here to bookmark this link.Channel Image06:01 10-12-1430 வியாழக்கிழமை (26.11.09) மதுரையில் பெருநாள் தொழுகை LUNAR CALENDAR / சந்திர நாட்காட்டி

அஸ்ஸலாமு அலைக்கம் அன்பான சகோதர சகோதரிகளே! உலகிற்கே நேர்வழிகாட்ட வந்த குர்ஆன் காட்டிதந்த மனித குல காலண்டர் (Unified Universal Calendar) (அல்குர்ஆன் 2:189,10:5) அடிப்படையில் மதுரையில் முதல் முதலாக ஹிஜ்ரா கமிட்டி ஆப் இந்தியா சார்பாக பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. அல்லாஹ்வின் உதவியால் அல்லாஹ்வின் காலண்டரை பின்பற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் கணக்கிடக்கூடிய அளவில் மக்கள் கலந்து கொண்டு அல்லாஹ்வின் மார்க்கத்தை மேலோங்கச் செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். இத்துடன் மதுரை பெருநாள் தொழுகை போட்டோ இணைக்கப்பட்டுள்ளது.

நடைபெற்ற இடம்:- தொழுகை 10.12.1430 [...]

Click here to bookmark this link.Channel Image05:32 10-12-1430 வியாழக்கிழமை (26.11.09) ராமநாதபுரம், பாம்பனில் பெருநாள் தொழுகை LUNAR CALENDAR / சந்திர நாட்காட்டி

அஸ்ஸலாமு அலைக்கம் அன்பான சகோதர சகோதரிகளே! உலகிற்கே நேர்வழிகாட்ட வந்த குர்ஆன் காட்டிதந்த மனித குல காலண்டர் (Unified Universal Calendar) (அல்குர்ஆன் 2:189,10:5) அடிப்படையில் ராமநாதபுரம், பாம்பனில் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. பல வருட காலமாக இங்கு ஹிஜ்ரா காலண்டர் அடிப்படையில் இபாதத்துகளை அமைத்து செயல்பட்டு வருவது குறிப்பித்தக்கது. அல்லாஹ்வின் உதவியால் அல்லாஹ்வின் காலண்டரை பின்பற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் கணக்கிடக்கூடிய அளவில் மக்கள் கலந்து கொண்டு அல்லாஹ்வின் மார்க்கத்தை மேலோங்கச் செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். இத்துடன் பாம்பன் [...]

Click here to bookmark this link.Channel Image03:06 10 துல்ஹிஜ்ஜா 1430 வியாழக்கிழமை (26.11.09) சென்னை பெருநாள் தொழுகை LUNAR CALENDAR / சந்திர நாட்காட்டி

அஸ்ஸலாமு அலைக்கம் அன்பான சகோதர சகோதரிகளே! உலகிற்கே நேர்வழிகாட்ட வந்த குர்ஆன் காட்டிதந்த மனித குல காலண்டர் (Unified Universal Calendar) (அல்குர்ஆன் 2:189,10:5) அடிப்படையில் சென்னையில் முதல் முதலாக ஹிஜ்ரா கமிட்டி ஆப் இந்தியா சார்பாக பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. அல்லாஹ்வின் உதவியால் அல்லாஹ்வின் காலண்டரை பின்பற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் கணக்கிடக்கூடிய அளவில் மக்கள் கலந்து கொண்டு அல்லாஹ்வின் மார்க்கத்தை மேலோங்கச் செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். இத்துடன் சென்னை பெருநாள் தொழுகை போட்டோ இணைக்கப்பட்டுள்ளது.

தொழுகை நடைபெற்ற இடம்: ஹஜ் [...]

Wed 25

Click here to bookmark this link.Channel Image08:55 [பாகம்-7] முஸ்லிமின் வழிமுறை. இஸ்லாம்குரல்.காம்
அல்லாஹ்வின் வார்த்தையுடன்… அல்லாஹ்வின் வார்த்தையுடன் நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்குகள்: அல்லாஹ்வின் வார்த்தை பரிசுத்தமானது. மற்ற எல்லா வார்தைகளை விட மேலானதும் சிறப்பானதும் ஆகும். திருக்குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தையாகும். திருக்குர்ஆனின் கூற்றை கூறியவர் உண்மையைக் கூறியவராவார். திருக்குர்ஆனின்படி தீர்ப்பு வழங்கியவர் நீதமாக நடந்து கொண்டவராவார். திருக்குர்ஆனை அறிந்திருப்பவர்கள் அல்லாஹ்வுக்குரியவர்கள்; அவனுக்கே உரித்தானவர்கள். அதைப் பற்றிப் பிடித்துக் கொள்பவர்கள்.  தப்பித்துக் கொள்வார்கள்; வெற்றி பெறுவார்கள். அதனைப் புறக்கணிப்பவர்கள் பேரிழப்புகளுக்கு  ஆளாவார்கள்; அழிந்து போவார்கள் என ஒரு முஃமின் நம்ப வேண்டும். நபி(ஸல்) [...]
Click here to bookmark this link.Channel Image04:07 இயற்பெயரை விட இறைத்தூதர் இட்ட பெயரே இஷ்டமானது! ஸஹாபாக்களின் வாழ்வினிலே...
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்கள்;
(தம் பெயர்களில்) 'அபூ துராப்' (மண்ணின் தந்தை) எனும் பெயரைவிட வேறெந்தப் பெயரும் அலீ(ரலி) அவர்களுக்கு விருப்பமானதாக இருக்கவில்லை. அப்பெயர் கூறி அழைக்கப்படும்போது அவர்கள் (மிகவும்) மகிழ்வார்கள். (ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் புதல்வி) ஃபாத்திமா(ரலி) அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள். அப்போது அலீ அவர்களை வீட்டில் காணவில்லை. எனவே, நபி அவர்கள் 'உன் பெரிய தந்தையின் புதல்வர் (உன் கணவர்) எங்கே? என்று கேட்டார்கள். அதற்கு ஃபாத்திமா(ரலி) அவர்கள், 'எனக்கும் அவருக்குமிடையே ஒரு சின்ன பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. எனவே, அவர் கோபித்துக் கொண்டு என்னிடம் மதிய ஓய்வெடுத்துக் கொள்ளாமல் வெளியே சென்றார் என்று பதிலளித்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், 'அவர் எங்கே என்று பார்' என்றார்கள். அவர் (சென்று தேடிவிட்டு) வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அவர் பள்ளிவாசலில் உறங்கி கொண்டிருக்கிறார்' என்றார். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பள்ளிவாசலுக்கு) வந்தார்கள். அப்போது அலீ(ரலி) அவர்கள் தங்களின் மேனியிலிருந்து மேல் துண்டு கீழே விழுந்து கிடக்க, உடம்பில் மண் படிந்த நிலையில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்த மண்ணை அவர்களின் உடலிலிருந்து துடைத்துக் கொண்டே 'அபூ துராப்! (மண்ணின் தந்தையே!) எழுங்கள். அபூ துராபே ! எழுங்கள்' என்று (இரண்டு முறை) கூறினார்கள்.
ஆதாரம்;புஹாரி எண் 6280

அன்பானவர்களே! பொதுவாக நம்மை யாரேனும் பட்டபெயர் சூட்டி அழைத்தால் நமக்கு கோபம் வரும். ஆனால் அலீ]ரலி] அவர்களுக்கோ, அவரது இயற்பெயர் மட்டுமன்றி சில காரனப்பெயர்களும் உள்ள நிலையில், அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களால் கேலியாக சொல்லப்பட்ட 'அபூ துராப்' என்ற பெயரில் தன்னை யாரேனும் அழைத்தால் அதில் மிகவும் மகிழக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள் என்றால் இறைத்தூதர்[ஸல்] அவர்கள் மீது அலீ[ரலி] அவர்கள் கொண்ட நேசம் வெளிப்படுகிறது. மேலும், அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், தான் ஒரு நபி என்ற கர்வம் சிறிதும் இன்றி அலீ[ரலி] அவர்களின் உடம்பில் ஒட்டியிருந்த மண்ணை துடைக்கிறார்கள் என்றால், இங்கே நபி[ஸல்] அவர்களின் எளிமையும், அலீ[ரலி] அவர்கள் மீது கொண்ட பாசமும் வெளிப்படுவதை காணலாம். எனவே இறைத்தூதர் ஒரு தாயின் பரிவோடு தன் தோழர்களை அணுகியிருக்கிறார்கள் என்பதும் இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் மூலம் நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது. நபியவர்களின் நேசத்திற்குரிய அலீ[ரலி] அவர்களை சிலர், 'எடுப்பார் கைப்பிள்ளை' என்றெல்லாம் ஏளனமாக வர்ணிப்பது உள்ளபடியே வேதனைக்குரியது.

Tue 24

Click here to bookmark this link.Channel Image18:15 1430 ஹஜ் பெருநாள் தொழுகை LUNAR CALENDAR / சந்திர நாட்காட்டி

அன்பான சகோதர சகோதரிகளே

அல்லாஹ்வின் கிருபையால்   நாம் செய்யாததை பிறருக்கு சொல்லக் கூடாது என்ற கீழ்கண்ட திருக்குர்ஆன் வசனத்தின் அடிப்படையில்   அல்லாஹ் குர்ஆனில் கூறும் சந்திர காலண்டர் அடிப்படையில் 1430 துல் ஹிஜ்ஜா 10 வது நாள் வியாழக்கிழமை ஆகும்.  அந்த நாளில் பெருநாள் தொழுகை ஏற்பாட்டை சக்திக்கு உட்பட்டு ஹிஜ்ரா கமிட்டி ஆப் இந்தியா  பல இடங்களில் செய்துள்ளது.    அல்லாஹ்வின் மார்க்கம் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக தவிர  வேறு  எந்த விதமான உள்நோக்கத்திற்காகவும் ஏற்பாடு செய்யப்படவில்லை.    

நீங்கள் [...]

Click here to bookmark this link.Channel Image17:07 [பாடம்-73] பிரார்த்தனைகள். முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
ஒவ்வோர் இறைத் தூதருக்கும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பிரார்த்தனை உண்டு.

2069. ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அவர் (தம் சமுதாயத்தாருக்காகப்) பிரார்த்தித்துக் கொள்ள அங்கீகரிக்கப்பட்ட பிரார்த்தனை ஒன்று (வழங்கப்பட்டு) உள்ளது. நான் என்னுடைய பிரார்த்தனையை, மறுமையில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தவே விரும்புகிறேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாவமன்னிப்புக் கோரலில் சிறந்தது.

2070. ''அல்லாஹும்ம! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கல்க்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூ உ லக்க பி நிஅமத்திக்க அலய்ய, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த'' என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும். (பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை. நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்றவரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட் கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.) இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறப்பவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்து விடுகிறவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார் என ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார்.

பகலிலும் இரவிலும் நபி(ஸல்) அவர்கள் கேட்ட பாவமன்னிப்புக் கோரல் (உடைய அளவு).

2071. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : ''அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது முறைக்கு மேல் 'அஸ்தஃக் ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி' என்று கூறுகிறேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன். (பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்.)

பாவத்தைக் கைவிட்டு இறைவன் பக்கம் திரும்புவதே (தவ்பா).

2072. ஹாரிஸ் இப்னு சுவைத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் எங்களுக்கு இரண்டு ஹதீஸ்களை அறிவித்தார்கள். அவற்றில் ஒன்றை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் குறிப்பிட்டார்கள். மற்றொன்றைக் தாமாகக் கூறினார்கள். (அவையாவன:) 1. இறைநம்பிக்கையாளர் தம் பாவங்களை மலைகளைப் போன்று (பாரமாகக்) கருதுவார். அவர் ஒரு மலை அடிவாரத்தில் உட்கார்ந்திருப்பதைப் போன்றும், அந்த மலைத் தம் மீது விழுந்துவிடுமோ என அஞ்சுபவரைப் போன்றும் அவர் இருப்பார். ஆனால், பாவியோ தன் பாவங்களைத் தன்னுடைய மூக்கின் மேல் பறந்து செல்லும் ஈயைப் போன்று (அற்பமாகக்) காண்பான் - இதைக் கூறியபோது இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் தங்களின் மூக்குக்கு மேலே (ஈயை) விரட்டுவது போன்று தம் கையால் சைகை செய்தார்கள். பிறகு அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் (பின்வருமாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனச்) சொன்னார்கள்: 2. ஒரு மனிதன் (பயணத்தினிடையே) ஓய்வெடுக்க ஓரிடத்தில் இறங்கினான். அந்த இடத்தில் அவனுக்கு (உணவோ தண்ணீரோ கிடைக்காது என்பதால்) ஆபத்து (காத்து) இருந்தது. அவனுடைய உணவும் பானமும் வைக்கப்பட்டிருந்த அவனுடைய வாகனப் பிராணியும் அவனுடன் இருந்தது. அப்போது அவன் தலையைக் கீழேவைத்து ஒரு (குட்டித்) தூக்கம் தூங்கி எழுந்தான். அப்போது அவனுடைய வாகனப் பிராணி (தப்பி ஒடிப்) போயிருந்தது. (எனவே அவன் அதைத் தேடிப் புறப்பட்டான்.) அப்போது அவனுக்குக் 'கடுமையான வெப்பமும் தாகமும்' அல்லது 'அல்லாஹ் நாடிய (கஷ்டம்) ஒன்று' ஏற்பட்டது. அவன், 'நான் முன்பிருந்த அதே இடத்திற்குத் திரும்பிச் செல்கிறேன்'' என்று கூறியவாறு (அங்கு) திரும்பிச் சென்றான். பிறகு ஒரு (குட்டித்) தூக்கம் தூங்கினான். பிறகு தன் தலையை உயர்த்தினான். அப்போது தப்பிப்போன தன்னுடைய பிராணி தன்னருகில் இருப்பதைக் கண்டான். (இப்போது அவன் எந்த அளவுக்கு மகிழ்வான்!) அந்த மனிதன் மகிழ்ச்சி அடைவதை விடத் தன் அடியான் தவ்பா - பாவமன்னிப்புக் கோரித் தன்னிடம் திரும்புவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்கிறான். இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

உறங்கச் செல்லும்போது ஓத வேண்டியது.

2073. ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது, 'பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா'' ( (இறைவா!) உன் பெயர் கூறியே இறக்கிறேன்; உயிர் வாழவும் செய்கிறேன்) என்று கூறுவார்கள். (உறக்கத்திலிருந்து) எழும்போது 'அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்'' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும், (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்லவேண்டியுள்ளது) என்று கூறுவார்கள்.

வலப் பக்கத்தில் சாய்ந்து உறங்குவது.

2074. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் படுக்கைக்குச் சென்றால், வலப் பக்கத்தில் சாய்ந்து உறங்குவார்கள். பிறகு, 'அல்லாஹும்ம அஸ்லமத்து நஃப்ª இலைக்க, வ வஜ்ஜஹ்த்து வஜ்ஹீ இலைக்க. வ ஃபவ்வள்த்து அம்ரீ இலைக்க. வ அல்ஜஃத்து ழஹ்ரி இலைக்க, ரஃக்பத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க. லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா இலைக்க. ஆமன்த்து பி கித்தாபிக்கல்லதீ அன் ஸல்த்த. வபி நபிய்யிக்கல்லதீ அர்சல்த்த'' என்று ஓதுவார்கள். (பொருள்: இறைவா! உனக்கு நான் அடிபணிந்தேன். என்னுடைய முகத்தை உன்னை நோக்கித் திரும்பினேன். என்னுடைய காரியம் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்தேன். என் விவகாரங்கள் அனைத்திலும் உன்னையே சார்ந்திருக்கிறேன். உன் மீதுள்ள ஆவலாலும் (அதே நேரத்தில்) உன் மீதுள்ள அச்சத்தாலும் (இதை நான் செய்கிறேன்). உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடமில்லை. நீ அருளிய உன் வேதத்தையும், நீ அனுப்பிவைத்த உன் நபியையும் நான் நம்பினேன்) மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'இவற்றைக் கூறிவிட்டு அன்னைறய இரவே இறந்து விடுகிறவர் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் இறந்தவராவார்'' என்று கூறினார்கள்.

இரவில் (இடையே) விழிக்கும்போது ஓத வேண்டியது.

2075. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் : நான் (என் சிறிய தாயாரும் நபியவர்களின் துணைவியாருமான) மைமூனா(ரலி) அவர்களிடம் (அவர்கள் இல்லத்தில்) இரவில் தங்கியிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் (இரவில்) எழுந்து தம் இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றார்கள். (பிறகு வந்து) தம் முகத்தையும் கைகளையும் கழுவினார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து தண்ணீர் பையை நோக்கிச் சென்று அதன் (சுருக்கிக்) கயிற்றை அவிழ்த்தார்கள். பின்னர் (ஒன்றுக்கும்) அதிகமான முறைகள் உறுப்புகளைக் கழுவிடாமல், நடுநிலையாக அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். அதை நிறைவாகச் செய்தார்கள். பிறகு தொழுதார்கள். நானும் (மெல்ல) எழுந்தேன். நான் அவர்களை நோட்டமிட்டுக் கொண்டிருப்பதை அவர்கள் காண்பது எனக்கு விருப்பமில்லாததால் மெதுவாக எழுந்து அங்கசுத்தி செய்தேன். அப்போது அவர்கள் தொழுவதற்காக நின்றார்கள். நான் அவர்களின் இடப்பக்கத்தில் நின்றேன். உடனே அவர்கள் என் காதைப்பிடித்துச் சுற்றி அப்படியே என்னைத் தம் வலப் பக்கத்திற்குக் கொண்டு வந்தார்கள். பிறகு (தொழத் தொடங்கி) பதிமூன்று ரக்அத்களுடன் தம் தொழுகையை முடித்துக் கொண்டார்கள். பின்னர் குறட்டைவிட்டபடி உறங்கினார்கள். (பொதுவாக) அவர்கள் உறங்கும்போது குறட்டை விடுவார்கள். அப்போது அவர்களை பிலால்(ரலி) அவர்கள் தொழுகைக்காக அழைத்தார்கள். எனவே, அவர்கள் (எழுந்து புதிதாக) அங்கசுத்தி செய்யாமலேயே தொழுதார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் பிரார்த்தனையில் (பின்வருமாறு) கூறிக் கொண்டிருந்தார்கள். 'அல்லாஹும்மஜ்அல் ஃபீ கல்பீ நூரன். வ ஃபீ பஸரீ நூரன். வ ஃபீ ஸம்ஈ நூரன். வ அன் யமீனீ நூரன். வ அன் யஸாரீ நூரன். வ ஃபவ்க்கீ நூரன். வ தஹ்த்தீ நூரன். வ அமாமீ நூரன். வ கல்ஃபீ நூரன். வஜ்அல் லீ நூரன். (பொருள்: இறைவா! என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் வலப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் இடப்பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு மேலேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு முன்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குப் பின்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு (எல்லாத் திசையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக.)(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) குறைப்(ரலி) கூறினார் : (உடல் எனும்) பேழையிலுள்ள வேறு ஏழு பொருட்களிலும் ஒளியை ஏற்படித்திடுமாறு நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அப்பாஸ்(ரலி) அவர்களின் புதல்வர்களில் ஒருவரைச் சந்தித்தபோது அவற்றை எனக்கு அன்னார் அறிவித்தார்கள். என் நரம்பிலும் என் சதையிலும் என் இரத்தத்திலும் என் ரோமத்திலும் என் சருமத்திலும் (ஒளியை ஏற்படுத்துவாயாக.) இவ்வாறு கூறிவிட்டு, மேலும் (மனம் மற்றும் நாவு ஆகிய) இரண்டையும் குறிப்பிட்டார்கள்.

2076. நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் கீழங்கியின் ஓரத்தால் விரிப்பைத் தட்டி விடுங்கள். ஏனெனில், அதில் என்ன (விஷ ஜந்து) ஒளிந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. பிறகு (பின்வருமாறு) பிரார்த்தியுங்கள்: பிஸ்மிக்க ரப்பீ வளஅத்து ஜன்பீ. வ பிக்க அர்ஃபஉஹு இன் அம்ஸக்த்த நஃப்ஸீ ஃபர்ஹம்ஹா வ இன் அர்ஸல்த் தஹா ஃபஹ்ஃபழ்ஹா பிமா தஹ்ஃபழு பிஹி இபாதக்கஸ் ஸாலிஹீன். (பொருள்: என் அதிபதியே! உன் பெயரால் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால், அதற்கு நீ கருணை புரிவாயாக. அதை நீ (கைப்பற்றாமல்) விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக) என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த நபிமொழி வந்துள்ளது.

கேட்பதை வலியுறுத்திக் கேட்க வேண்டும். (இது, இறைவனை நிர்பந்திப்பதாகாது.) ஏனெனில், அவனை யாராலும் நிர்ப்பந்திக்க முடியாது.

2077. நீங்கள் இறைவா! நீ நினைத்தால் என்னை மன்னிப்பாயாக. இறைவா! நீ நினைத்தால் என் மீது அருள்புரிவாயாக'' என்று பிரார்த்திக்க வேண்டாம். மாறாக, கேட்பதை வலியுறுத்திக் கேளுங்கள். (இது, இறைவனைக் கட்டாயப்படுத்துவதாகாது.) ஏனெனில், அவனைக் கட்டாயப்படுத்துபவர் யாருமில்லை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அவசரப்படாத வரையில் அடியானின் பிரார்த்தனை ஏற்கப்படும்.

2078. ''நான் பிரார்த்தித்தேன். ஆனால், என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை'' என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

துன்பம் நேரும்போது பிரார்த்திப்பது.

2079. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது 'லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வல்அர்ளி வ ரப்புல் அர்ஷில் அழீம்'' என்று பிரார்த்திப்பார்கள். (பொருள்: கண்ணியம் வாய்ந்தோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் மாபெரும் அரியாசனத்தின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.)

தாங்க முடியாத சோதனையிலிருந்து பாதுகாப்புக் கோருவது.

2080. அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோரிவந்தார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த அறிவிப்பில் மூன்று மட்டுமே உள்ளது. நான்தான் ஒன்றை அதிகபட்சமாக அறிவித்துள்ளேன். இவற்றில் அது எதுவென எனக்குத் தெரியவில்லை. (மறந்து விட்டேன்.)

''இறைவா என்னால் எவரேனும் மனவேதனை அடைந்திருந்தால் அதை அவருக்குப் பாவப் பரிகாரமாகவும் அருளாகவும் மாற்றிவிடுவாயாக'' என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது.

2081. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! நான் எந்த இறைநம்பிக்கையாளரையாவது (கடிந்து கொண்டு) ஏசியிருந்தால், அதையே மறுமை நாளில் உன்னிடம் அவருக்கு நெருக்கத்தை ஏற்படுத்தும் அம்சமாக மாற்றி விடுவாயாக!'' என்று கூறியதை செவியுற்றேன். இதை ஸயீத் இப்னு முசய்யப்(ரஹ்) அறிவித்தார்.

மண்ணறையின் (கப்றின்) வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருதல்.

2082. முஸ்அப் இப்னு ஸஅத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : (என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வாக்காஸ்(ரலி) அவர்கள் ஐந்து விஷயங்களிலிருந்து பாதுகாப்புக் கோரும்படி கூறி நபி(ஸல்) அவர்கள் அந்த ஐந்து விஷயங்களையும் குறிப்பிட்டு அவற்றிலிருந்து பாதுகாப்புக் கோருமாறு கட்டளையிட்டுவந்தார்கள் என்று கூறுவார்கள். (அவை:) அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் புக்லி, வ அஊது பிக்க மினல் ஜுப்னி, வ அஊது பிக்க அக் உறத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வ அஊது பிக்க மின் அதாபில் கப்ற். (இறைவா! உன்னிடம் நான் கருமித்தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். கோழைத் தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். தள்ளாத வயதுக்கு நான் தள்ளப்படுவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக்கோருகிறேன். இம்மையின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், மண்ணறையின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்)'' இம்மையின் சோதனையென்பது தஜ்ஜாலின் சோதனையைக் குறிக்கிறது.

பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருதல்.

2083. ஆயிஷா(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக்க மினல் கஸலி வல்ஹரமி வல்மஃஸமி வல் மஃக்ரமி, வ மின் ஃபித்னத்தில் கப்றி வ அதாபில் கப்றி, வ மின் ஃபித்னத்திந் நாரி வஅதாபிந் நாரி, வ மின் ஷர்ரி ஃபித்னத்தில் ஃகினா. வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால், அல்லாஹும்மஃக்ஸில் அன்னீ கத்தாயாய பி மாயிஸ் ஸல்ஜி வல்பரத். வ நக்கி கல்பீ மினல் கத்தாயா கமா நக்கைத்தஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸ். வ பாஇத் பைனீ வ பைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல் மஃக்ரிப்'' என்று பிரார்த்தித்து வந்தார்கள். (பொருள்: இறைவா! உன்னிடம் நான் சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும் பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும், மண்ணறையின் சோதனையிலிருந்தும், அதன் வேதனையிலிருந்தும், நரகத்தின் சோதனையிலிருந்தும், அதன் வேதனையிலிருந்தும், செல்வத்தின் தீமைகளிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், நான் உன்னிடம் வறுமையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். (பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளை என்னிலிருந்து கழுவுவாயாக! மேலும், அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப் படுத்துவதைப் போன்று தவறுகளிலிருந்து என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக)

எங்கள் இறைவா எங்களுக்கு இம்மையிலும் நன்மையருள்வாயாக எனப் பிரார்த்திப்பது.

2084. அனஸ்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் 'ரப்பனா ஆத்தினா ஃபித் துன்யா ஹஸனத்தன் வ ஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வக்கினா அதாபந் நார்'' என்றே அதிகமாகப் பிரார்த்தித்து வந்தார்கள். (பொருள்: எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் நன்மை அருள்வாயாக. மறுமையிலும் நன்மை அருள்வாயாக. நரகத்தின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக

''இறைவா! நான் முன்னால் செய்த பாவங்களையும், பின்னால் செய்த பாவங்களையும் மன்னித்திடுவாயாக!'' என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது.

2085. அபூ மூஸா அல் அஷ்அரீ(ரஹ்) அவர்கள் கூறினார்: நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தித்து வந்தார்கள். அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ கத்தீஅத்தீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபீ ஃபீ அம்ரீ, வமா அன்த்த அஉலமு பிஹி மின்னீ, அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ ஹஸ்லீ, வ ஜித்தீ, வ கத்தயீ, வ அம்தீ, வ குல்லு தாலிக்க இந்தீ. (பொருள்: இறைவா! என் குற்றங்களையும் என் அறியாமையையும், என் செயல்களில் நான் மேற்கொண்ட விரயத்தையும், மேலும், என்னை விட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக! இறைவா! நான் விளையாட்டாகச் செய்ததையும், வினையாகச் செய்ததையும், தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றேச் செய்ததையும் மன்னித்திடுவாயாக! இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை.)

''லாயிலாஹ இல்லால்லாஹ்'' ('அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை' என்று) கூறுவதன் சிறப்பு.

2086. ''லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து. வஹ்வ அலா குல்லி ஷையின் கதீர் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கு புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றின் மீதும் வலிமையுள்ளவன்)'' என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமாமா(க நற்பலன் பெற்றுக்கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் செய்த) நூறு தவறுகள் அழிக்கப்படும். மேலும், அந்த நாளின் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும். மேலும், அவர் புரிந்த இந்த நற்செயலைவிடச் சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது. ஒருவர் இதைவிட அதிகமான (முறை இதை ஓதினால், அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2087. அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அவர்கள் கூறியாதாவது: (மேற்கண்ட வாக்கியங்களை) பத்து முறை ஓதுகிறவர், இஸ்மாயீல்(அலை) அவர்களின் சந்ததியினரில் ஒருவரை விடுதலை செய்ததைப் போன்றவராவார். (என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்). (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உமர் இப்னு அபீ ஸாயிதா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இதே நபிமொழி இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. நான் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ரபீஉ இப்னு குஸைம்(ரஹ்) அவர்களிடம், 'இதை யாரிடமிருந்து தாங்கள் செவியுற்றீர்கள்?' என்று கேட்டேன். அதற்கவர்கள், 'அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அவர்களிடமிருந்து (இதைச் செவியுற்றேன்)'' என்றார்கள். எனவே, நான் அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அவர்களிடம் சென்று, 'இதை யாரிடமிருந்து தாங்கள் செவியுற்றீர்கள்?' என்று கேட்டேன். அதற்கவர்கள், 'இப்னு அபீ லைலா(ரஹ்) அவர்களிடமிருந்து (செவியுற்றேன்)'' என்றார்கள். எனவே, நான் இப்னு அபீ லைலா(ரஹ்) அவர்களிடம் சென்று, 'இதை யாரிடமிருந்து தாங்கள் செவியுற்றீர்கள்?' என்று கேட்டேன். அதற்கவர்கள், 'இதை நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக அபூ அய்யூப் அல்அன்சாரி(ரலி) அவர்களிடமிருந்து (செவியுற்றேன்)'' என்றார்கள். இன்னும் பல அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த நபிமொழி வந்துள்ளது. அபூ அய்யூப்(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், 'இஸ்மாயீல்(அலை) அவர்களின் சந்ததிகளில் ஓர் அடிமையை விடுதலை செய்தவரைப் போன்றவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என வந்துள்ளது.

'சுப்ஹானல்லாஹ்' ('அல்லாஹ் தூயவன்' என்று) கூறுவதன் சிறப்பு.

2088. 'சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி' (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டு விடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவதன் சிறப்பு.

2089. தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றுகிறவரின் நிலை உயிருள்ளவரின் நிலைக்கும், தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றாதவரின் நிலை உயிரற்றவரின் நிலைக்கு ஒத்திருக்கிறது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

2090. அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடியவண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக்கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால் 'உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்'' என்று அவர்கள் (தம்மில்) ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகிறவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம்வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களின் இறைவன் 'என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?' என்று கேட்கிறான். அவ்வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவனாவன் என்று கூறி துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டும், உன்னைப் புகழ்ந்து கொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றர்'' என்று வானவர்கள் கூறுகின்றனர். அதற்கு இறைவன், 'அவர்கள் என்னைப் பார்த்திருக்கிறார்களா?' என்று கேட்பான். அதற்கு வானவர்கள், 'இல்லை. உன் மீதாணையாக! அவர்கள் உன்னைப் பார்த்ததில்லை'' என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், 'என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்?' என்று கேட்பான். வானவர்கள், 'உன்னை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள்; இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள்'' என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், 'என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகிறார்கள்?' என்று (தனக்குத் தெரியாதது போன்று) கேட்பான். வானவர்கள், 'அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கின்றனர்'' என்பார்கள். அதற்கு இறைவன், 'அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?' என்று கேட்பான். அதற்கு வானவர்கள், 'இல்லை. உன் மீதாணையாக! அதிபதியே! அவர்கள் அதனைப் பார்த்ததில்லை'' என்பர். அதற்கு இறைவன், 'அவ்வாறாயின் அதனை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?' என்று கேட்பான். வானவர்கள், 'சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசைகொண்டு, அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள்'' என்று பதிலளிப்பார்கள். இறைவன், 'அவர்கள் எதிலிருந்து (என்னிடம்) பாதுகாப்புக் கோருகின்றனர்?' என்று வினவுவான். வானவர்கள், 'நரகத்திலிருந்து (பாதுகாப்புக் கோருகின்றனர்)'' என்று பதிலளிப்பார். இறைவன், 'அதனை அவர்கள் பார்த்திருக்கிறார்களா?' என்று கேட்பான். வானவர்கள், 'இல்லை. உன் மீதாணையாக! அதனை அவர்கள் பார்த்தில்லை'' என்பர். அதற்கு இறைவன், 'அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்கள் நிலை என்னவாக இருந்திருக்கும்?' என்று கேட்பான் வானவர்கள், 'நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து கடுமையாக வெருண்டோடுபவர்களாகவும் அதனை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள்'' என்பர். அப்போது இறைவன், 'எனவே (வானவர்களே!) அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகிறேன்'' என்று கூறுவான். அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், '(அந்தக் குழுவினரிடையே அமர்ந்திருந்த) இன்ன மனிதன், உன்னைப் போற்றுகிற அவர்களில் உள்ளவன் அல்லன். அவன் ஏதோ தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான்'' என்பார். அதற்கு இறைவன், 'அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால் (பாக்கியம் பெறுவானே தவிர,) பாக்கியமற்றவனாக ஆகமாட்டான்'' என்று கூறுவான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த நபிமொழி வந்துள்ளது.
Click here to bookmark this link.Channel Image03:07 ஹஜ்ஜில் எழும் கேள்விகள்-2 அல்பாக்கவி.காம்
ஹஜ்ஜிலே கேட்கப்பட்ட சில கேள்விகள் ? கே: இஹ்ராம் கட்டியவர் பல் தேய்க்கலாமா? பேஸ்டை பயன்படுத்தலாமா ? பல் தேய்க்கலாம். இது நபி (ஸல்) அவர்களின் முக்கியமான சுன்னத் நடைமுறையில் உள்ளதாகும். ஹஜ்ஜின் போது  நபி (ஸல்) அவர்கள் பல்துலக்கியதாக ஏராளமான நபி மொழிகள் உள்ளன. தாரளமாக பேஸ்டை  பயன்படுத்தலாம்.   இது இஹராமைப் பாதிக்காது. பேஸ்டைப பயனபடுத்தியவர் நன்றாக வாயைக் கொப்பளித்துக் கொள்ளவேண்டும். நறுமணம் பூசலாமா ? இஹராம் கடிய பின் கூடாது. ஹஜ்ஜிற்கு முன்னர் ஆயிஷா (ரலி) அவர்கள் [...]
Click here to bookmark this link.Channel Image02:49 ஹஜ் சில விளக்கங்கள்! அல்பாக்கவி.காம்
ஹஜ் செய்பவர் 8ஆம் நாளில் மினாவிலே 8-வது நாள் லுஹர், அஸ்ரு, மக்ரிப்,இஷா, தொழுகைகளையும் 9-வது நாள் ஃபஜ்ருடைய தொழுகையையும்  (ஆக ஐவேளைத்  தொழுகைகளை) தொழவேண்டும். நான்கு ரக்அத் தொழுகைகளை கஸ்ராகத் தொழவேண்டும். ஒன்பதாவது நாளில் கலையில் அரபாத் சென்று லுஹ்ரு ஆஸ்ரு தொழுகைகளை கஸ்ராகத் தொழுவிட்டு சூரியன் மறைந்ததும் அங்கு மஃரிப் தொழாமலே முஸதலிபா சென்று மஃரிப்,இஷாவை கஸ்ரு ஜம்ஆக தொழுதுவிட்டு அங்கு இரவு தங்கவேண்டும்.பஜ்ரிக்குப்பிறகு நேராக மினா செல்லவேண்டும்.பத்தாம் நாளில் நான்கு செயல்களை ஒன்றன்பின் ஒன்றாக -வரிசையாகச்- செய்வது [...]
Click here to bookmark this link.Channel Image01:56 ஹஜ்ஜிலே எழும் கேள்விகள்!-1 அல்பாக்கவி.காம்
ஹஜ்ஜிலே கேட்கப்பட்ட சில கேள்விகள் ? 1. மஃரிப் தொழுகைக்கு முன்னர் சுன்னத் தொழுலாமா ? ஹஜ்ஜுக்கு வந்தவர்களில் சிலர் இங்கே மஃரிபுக்கு முன் இரண்டு ரகஅத்துகள் தொழுகிறார்களே? நமதூரில் தொழுவதில்லையே ? இதை இந்த வஹ்ஹாபிகள் தாமாகச் சோத்துக் கொண்டு புதுமையாகச் செய்கிறார்களே! இது இவர்களின் கைவரிசை என்று ஒரு சகோதரர்  இவர்கள் மீது ஒரு பழியைச் சுமத்திவிட்டு இதற்கு ஹதீஸில் ஆதாரமிருக்கிறதா? என்று வேகமாகவும் வியப்பாகவும் கேட்டார். ஆம்! ஆதாரமிருக்கிறதே என்றோம். எங்கே? காட்டுங்கள் பார்க்கலாம் என்று சற்று [...]

Mon 23

Click here to bookmark this link.Channel Image08:59 தந்தையை கொன்றவர்களையும் தன்மையுடன் மன்னித்த தனயன்! ஸஹாபாக்களின் வாழ்வினிலே...
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;
உஹுதுப் போர் நாளில் (ஆரம்பத்தில்) இணைவைப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். அப்போது இப்லீஸ், 'அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்!' என்று கத்தினான். உடனே முஸ்லிம்களில் முன் அணிப் படையினர் திரும்பிச் சென்று (எதிரிகள் தாம் பின்னால் இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு) பின் அணிப்படையினருடன் மோதினார்கள். அப்போது அங்கு (தமக்கு அருகேயிருந்த) தம் தந்தை அல்யமான்(ரலி) அவர்கள் (முன்னணிப் படையினரிடம்) சிக்கிக் கொண்டதை ஹுதைஃபா(ரலி) அவர்கள் பார்த்துவிட்டு, 'அல்லாஹ்வின் அடியார்களே! (அவர்) என் தந்தை! என் தந்தை' என்று (உரத்த குரலில்) கூறினார்கள். ஆனால், அல்லாஹ்வீன் மீதாணையாக! அவரைக் கொன்ற பின்பே (அவரைவிட்டு) அவர்கள் விலகினார்கள் . ஹுதைஃபா(ரலி) அவர்கள் 'அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!' என்று கூறினார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஹுதைஃபா(ரலி) அவர்கள் மன்னித்தால் அவர்கள் இறைவனை அடையும் வரை (அவர்களின் வாழ்க்கையில் நல்ல பலன் இருந்துகொண்டேயிருந்தது.
ஆதாரம்;புஹாரி

உஹத் களத்தில் ஆரம்பத்தில் தீரமுடன் போராடி இணைவைப்பாளர்களை வேருண்டோடச்செய்த முஸ்லிம்களின் கவனத்தை திசை திருப்பும்வகையில் ஷைத்தான், முன்னேறி முதலாவதாக சென்ற படைக்கு அடுத்தபடியாக வந்த முஸ்லிம்களின் ஒருபிரிவினரை எதிரிகள் என்ற தோற்றத்தை உண்டாக்கினான். அவர்களை இனைவைப்பாளர்களோ என்று தவறாக கருதிய முஸ்லிம்கள் தாக்கத் தொடங்கினார்கள். முஸ்லிம்களின் படையால் தாக்கப்பட்ட முஸ்லிம் குழுவில் மாட்டிக்கொண்டார் யமான்[ரலி] அவர்கள். யமான் [ரலி] அவர்களின் மகன் ஹுதைஃபா[ரலி] அவர்கள், அல்லாஹ்வின் அடியார்களே! என் தந்தை என்தந்தை என்று கத்தியது போர்முனையில் இணைவைப்பாளர்களை வெருண்டோட செய்வதே லட்சியமாக கொண்ட சஹாபாக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. அல்லாஹ்வின் நாட்டப்படி யமான்[ரலி] அவர்கள் முஸ்லிம்கள் கையாலேயே ஷகீதானார்கள். தன் கண் முன்னே தனது தந்தையை தனது சக முஸ்லிம் சகோதரர்கள் கொன்றதை கண்ட ஹுதைஃபா[ரலி] அவர்கள் கோபம் கொள்ளவில்லை. தனது சக முஸ்லிம் சகோதரர்கள் அறியாமல் செய்துவிட்டார்கள் என அமைதி காத்து அந்த முஸ்லிம் சகோதர்களை நோக்கி, அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக! என்று அவர்களுக்காக துஆ செய்தார்களே இந்த உயர்வான மனம் யாருக்குவரும்..? அதுதான் சஹாபாக்கள்! சிலர் இன்றைக்கு சின்ன சின்ன மன கசப்பிற்காக ஆண்டுக்கணக்கில் பேசாமல் இருக்கிறார்கள். தனது சக முஸ்லிம் தவறே செய்திருந்தாலும் அதை மன்னித்து அவனை அரவணைக்கும் மனப்பக்குவம் நம்மில் பெரும்பாலோருக்கு இல்லை. நாம் மட்டுமன்றி, நமது சமுதாயத்தை இவர்தான் தாங்கி கொண்டிருக்கும் தூண் என்று வர்ணிக்கப்படும் சில தலைவர்கள், தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை மன்னித்து ஒன்றிணைய தயாராக இல்லை என்பதை பெருகிவரும் இயக்கங்கள் உறுதிப்படுத்துகிறது. இந்த லட்சணத்தில் மன்னிப்பின் சிகரமாக திகழ்ந்த சஹாபாக்களின் வாழ்வில் நடந்ததாக கருதப்படும் 'குற்றங்களை' கண்டுபிடிக்க கிளம்பிவிட்டார்கள். இதுதான் விந்தை!
Click here to bookmark this link.Channel Image05:00 ஆயத்துல் குர்ஸிய்யின் சிறப்பு! பிரார்த்தனை பேழை
கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் யார் ஆயத்துல் குர்ஸிய்யை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு அவரின் மரணம்தான் தடையாக உள்ளது. (நபிமொழி, அறிவிப்பவர் : அபூ உமாமா -ரலி, நூல் : நஸயீ)

اللّهُ لاَ إِلَـهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَاء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأَرْضَ وَلاَ يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

அல்லாஹ்- அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன், அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன். (அல்குர்ஆன்: 2:255)

Allah. There is no god but He,-the Living, the Self-subsisting, Supporter of all. No slumber can seize Him nor sleep. His are all things in the heavens and on earth. Who is thee can intercede in His presence except as He permitteth? He knoweth what (appeareth to His creatures as) before or after or behind them. Nor shall they compass aught of His knowledge except as He willeth. His Throne doth extend over the heavens and the earth, and He feeleth no fatigue in guarding and preserving them. For He is the Most High, the Supreme (in glory). -A.Yusuf Ali- (2:255)

Sun 22

Click here to bookmark this link.Channel Image16:18 [பாடம்.-72] அனுமதி வேண்டுதல். முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கு (முதலில்) சலாம் சொல்வது.

2057. சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் (முகமன்) சொல்லட்டும் என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கு (முதலில்) சலாம் சொல்வது.

2058. வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் சொல்லட்டும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அறிமுகமானவருக்கு அறிமுகமில்லாதவருக்கும் சலாம் சொல்வது.

2059. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார் : ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், '(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதுமாகும்'' என்று பதிலளித்தார்கள்.

(பார்க்கக் கூடாததைப்) பார்க்க நேரும் என்பதாலேயே (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கோருதல் (சட்டமாக்கப்பட்டது).

2060. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றினுள் ஒரு துவாரத்தின் வழியாக ஒருவர் எட்டிப்பார்த்தார். நபி(ஸல்) அவர்களுடன் ஈர்வலிச் சீப்பு ஒன்று இருந்தது. அதனால் தம் தலையை அவர்கள் கோதிக் கொண்டிருந்தார்கள். (அவர் எட்டிப் பார்த்ததைக் கண்ட) நபி(ஸல்) அவர்கள், 'நீ (துவாரத்தின் வழியாகப்) பார்க்கிறாய் என்பதை நான் (முன்பே) அறிந்திருந்தால் இந்தச் சீப்பினால் உன் கண்ணில் குத்தியிருப்பேன். (அடுத்தவர் வீட்டுப் பெண்களைப்) பார்க்க நேரிடும் என்பதற்காகவே அனுமதி கேட்பது சட்டமாக்கப்பட்டது'' என்றார்கள்.

மர்ம உறுப்பு அல்லாத (மற்ற) உறுப்புகளின் விபச்சாரம்.

2061. விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபச்சாரம் மட்டுமல்ல. கண்ணும் நாவும் கூட விபச்சாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது. இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது அல்லது பொய்யாக்குகிறது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

சிறுவர்களுக்கு சலாம் சொல்வது.

2062. ஸாபித் அல்புனானீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : (ஒரு முறை) அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்றபோது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். மேலும், 'நபி(ஸல்) அவர்கள் இவ்வாறுதான் செய்து வந்தார்கள்'' என்று கூறினார்கள்.

(கதவைத் தட்டுபவரிடம் வீட்டுக்காரர்) 'யார் அது?' என்று கேட்க, அவர் 'நானே'' என்று கூறுவது.

2063. ஜாபிர்(ரலி) அறிவித்தார் : என் தந்தை (ஒரு யூதருக்குக்) கொடுக்க வேண்டியிருந்த ஒரு கடன் விஷயமாக நபி(ஸல்) அவர்களிடம் நான் சென்று கதவைத் தட்டினேன். அப்போது அவர்கள், 'யார் அது?' என்று கேட்டார்கள். அதற்கு நான், 'நான்தான்'' என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'நான் நான் என்றால்...?' என அதை விரும்பாதவர்களைப் போன்று கூறினார்கள்.

''இறைநம்பிக்கையாளர்களே! சபைகளில் 'நகர்ந்து இடம் கொடுங்கள்'' என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், நகர்ந்து இடம் கொடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு இடம் கொடுப்பான். மேலும், (சபையிலிருந்து) கலைந்து சென்றுவிடுங்கள் என்று கூறப்பட்டால், அவ்வாறே கலைந்து விடுங்கள்' எனும் (திருக்குர்ஆன் 58:11 வது) இறைவசனம்.

2064. இப்னு உமர்(ரலி) கூறினார்: ஒருவர், அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பி விடப்பட்டு, அந்த இடத்தில் மற்றொருவர் அமர்வதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். இதற்கு மாறாக, 'நகர்ந்து உட்கார்ந்து மற்றவர்களுக்கும் இடம் கொடுங்கள்'' என்று கூறினார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறினார்:) ஒருவர் தம் இடத்திலிருந்து எழுந்து கொண்டு, அந்த இடத்தில் (மற்றவரை) உட்காரவைப்பதை இப்னு உமர்(ரலி) அவர்கள் வெறுத்தார்கள்.

முழங்காலில் கையைக் கட்டிக்கொண்டு குத்துக்காலிட்டு அமர்தல். இதுவே ('அல்இஹ்திபா' அல்லது) 'குர்ஃபுஸா' எனப்படும்).

2065. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் முற்றத்தில் தம் கையை (முழங்காலில்) கட்டிக்கொண்டு குத்துக்காலிட்டு இவ்வாறு அமர்ந்திருந்ததைக் கண்டேன்.

மூன்று பேரை விட அதிகமானோர் இருக்கும்போது (இருவர்) இரகசியம் பேசுவதும் உரையாடுவதும் தவறாகாது.

2066. நீங்கள் மூன்று பேர் இருக்கும்போது மூன்றாமவரை விட்டுவிட்டு இரண்டு பேர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம்; நீங்கள் மூவரும் மக்களுடன் கலக்கும் வரை! ஏனெனில், (அவ்வாறு மூன்று பேர் இருக்கும்போது இருவர் மட்டும் பேசுவது) மூன்றாமவரை வருத்தமடையச் செய்யும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

உறங்கச் செல்லும்போது வீட்டிலுள்ள (அடுப்பு மற்றும் விளக்கின்) நெருப்பை (அணைக்காமல்) விட்டுவிடலாகாது.

2067. அபூ மூஸா(ரலி) அறிவித்தார் : மதீனாவில் இரவு நேரத்தில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் வீட்டுக்காரர்களும் இருந்தனர். அவர்களின் நிலை குறித்து நபி(ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது 'நிச்சயமாக இந்த நெருப்பு உங்களுக்கு ஆபத்தானது ஆகும். எனவே, நீங்கள் உறங்கச் செல்லும்போது நெருப்பை அணைத்து விடுங்கள்'' என்றார்கள்.

கட்டடங்கள் தொடர்பாக வந்துள்ளவை.

2068. இப்னு உமர்(ரலி) அறிவித்தார் : நான் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மழையிலிருந்து என்னைக் காக்கின்ற, வெயிலிருந்து எனக்கு நிழல் தருகிற ஒரு வீட்டை நானே என் கரத்தால் கட்டியதை (இப்போதும்) நினைத்துப் பார்க்கிறேன். அந்த வீட்டைக் கட்ட அல்லாஹ்வின் படைப்புகளில் யாரும் எனக்கு உதவவில்லை.
Click here to bookmark this link.Channel Image08:21 எது அரஃபா தினம்? ? ? LUNAR CALENDAR / சந்திர நாட்காட்டி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பான இஸ்லாமிய சகோகதர சகோதரிகளே எது அரஃபா தினம் என்ற சர்ச்சை பல காலமாக இருந்து வருகிறது. இஸ்லாத்தில் சர்ச்சை இல்லாத விசயங்களே இருக்காதோ என்ற அளவிற்கு சர்ச்சைகள் எல்லா விசயத்திலும் இருந்து வருவதை பார்த்து வருகிறோம். நமக்கு அல்லாஹ் சிந்திக்கும் ஆற்றலை கொடுத்ததால் தான் இது போன்ற சர்ச்சைகள் இருந்த வண்ணமே உலகம் கியாம நாளை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

நாம் நமது அறிவை கொண்டு சிந்தனை செய்து திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான  ஹதீஸ்களில் [...]

Click here to bookmark this link.Channel Image06:01 மறைச்செய்தி முடிந்துவிட்டதே..! மனமடைந்த நபித்தோழி! ஸஹாபாக்களின் வாழ்வினிலே...
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
உம்மு அய்மன்[ரலி] அவர்கள் இஸ்லாமிய வரலாற்றில் சிறப்பிற்குரிய இடத்தை பெற்ற நபித்தோழியராவார். இந்த உம்மு அய்மன்[ரலி] அவர்கள் மீதும் இவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் மீதும் நபி[ஸல்] அவர்கள், தனது பேரர்கள் மீது கொண்ட அளவுக்கு நேசம் வைத்திருந்தார்கள். உஸாமா இப்னு ஸைத்[ரலி] அவர்களை நாம் அறிந்துவைத்துள்ளோம். இந்த உஸாமா இப்னு ஸைத்[ரலி] அவர்கள் மீது நபி[ஸல்] அவர்கள் கொண்ட பாசம் எத்தகையது..?

உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்கள் (சிறார்களாயிருந்த) என்னையும் ஹஸன்(ரலி) அவர்களையும் கையிலெடுத்து 'இறைவா! இவர்கள் இருவரையும் நான் நேசிக்கிறேன்; நீயும் நேசிப்பாயாக!" என்று பிரார்த்திப்பார்கள்.
ஆதாரம் புஹாரி எண் 3735 ]

இப்படி ஹஸன்(ரலி) அவர்களுக்கு இணையான பாசத்தை நபியவர்களிடம் கொண்ட இந்த உஸாமா[ரலி] அவர்கள் யார் என்றால் உம்மு அய்மன்[ரலி] அவர்களின் மகனாவார்.
நபியவர்கள் ஒருமுறை தம் தோழர்களின் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்கள். ‘எவரேனும் சுவனத்துப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பினால் அவர் உம்மு ஐமனை மணந்து கொள்ளட்டும்!”
இதனைக் கேட்டதும் ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்கள் உம்மு ஐமனை மணந்து கொண்டார்கள். நபித்துவத்தின் ஏழாம் ஆண்டு இத்தம்பதிக்கு உஸாமா (ரலி) அவர்கள் பிறந்தார்கள். தந்தை ஜைத் (ரலி) அவர்களைப் போன்று உஸாமா (ரலி) அவர்களும் நபியவர்களின் அன்பிற்குரித்தானவர்களாய்த் திகழ்ந்தார்கள்.

இந்த உஸாமா[ரலி] மட்டுமல்ல உம்மு ஐமனின் ஏனைய பிள்ளைகள் மீதும் நபி[ஸல்]அவர்கள் மிகுந்த அன்பு கொண்டிருந்தார்கள்.

உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட ஹர்மலா(ரஹ்) கூறினார்;
நான் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களுடன் இருந்தபோது ஹஜ்ஜாஜ் இப்னு அய்மன் (பள்ளிவாசலுக்குள்) நுழைந்(து தொழு)தார். அப்போது அவர் தன் ருகூவையும் முழுமையாக நிறைவேற்றவில்லை; தன் சுஜூதையும் முழுமையாக நிறைவேற்றவில்லை. எனவே, இப்னு உமர்(ரலி) (ஹஜ்ஜாஜை நோக்கி), 'திரும்பத் தொழுங்கள்" என்று கூறினார்கள். அவர் திரும்பிச் சென்றபோது என்னிடம் இப்னு உமர்(ரலி), 'யார் இவர்?' என்று கேட்டார்கள். நான், 'உம்மு அய்மனின் மகன் அய்மனுடைய மகன் ஹஜ்ஜாஜ் தான் இவர்" என்று சொன்னேன். அதற்கு இப்னு உமர்(ரலி), 'இவரை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பார்த்திருந்தால் இவரை நேசித்திருப்பார்கள்" என்று கூறினார்கள். மேலும் நபி(ஸல்) அவர்கள், (உஸாமா - ரலி - அவர்களின் மீது) கொண்டிருந்த நேசத்தையும் உம்மு அய்மன்(ரலி) பெற்றெடுத்த (மற்ற) பிள்ளைகளின் மீதும் கொண்டிருந்த நேசத்தையும் இப்னு உமர்(ரலி) நினைவு கூர்ந்தார்கள். அறிவிப்பாளர்: சுலைமான் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) கூறினார்: உம்மு அய்மன்(ரலி) நபி(ஸல்) அவர்களின் வளர்ப்புத் தாயாக இருந்தார்கள்.
ஆதாரம்புஹாரி எண் 3737

மேலும் தனக்கு கிடைத்த அன்பளிப்பு பேரிச்சமரங்களையும் உம்மு அய்மன்[ரலி] அவர்களுக்கே நபி[ஸல்]அவர்கள் வழங்கியிருந்தார்கள்.

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்; முஹாஜிர்கள் (மக்காவிலிருந்து) மதீனாவுக்கு வந்தபோது அவர்களின் கையில் (செல்வம்) எதுவும் இருக்கவில்லை. அன்சாரிகள் நிலங்களையும் (பிற) அசையாச் சொத்துக்களையும் வைத்திருந்தார்கள். ஒவ்வோர் ஆண்டும் தங்கள் சொத்துக்களின் விளைச்சல்களை அவர்களுக்கு (குறிப்பிட்ட விகிதத்தில் ) கொடுப்பதாகவும் 'எங்களுக்கு பதிலாக நீங்கள் அதில் சிரமப்பட்டு உழைக்க வேண்டும்' என்ற நிபந்தனையின் பேரிலும் அவற்றை முஹாஜிர்களுக்கு (குத்தகை நிலங்களாகப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள். என்னுடைய தாயார் உம்மு சுலைம் அவர்கள் (என் தாய்வழிச் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னு அபீ தல்ஹாவின் தாயாராகவும் இருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதருக்குச் சில பேரீச்ச மரங்களை (அவற்றின் கனிகளை மட்டும் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்பாகக்) கொடுத்திருந்தார்கள். அவற்றை நபி(ஸல்) அவர்கள் தங்களின் அடிமைப் பெண்ணான, உஸாமா இப்னு ஜைத்டைய தாயார் உம்மு அய்மனுக்கு (அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள். கைபர்வாசிகளின் மீது போர் தொடுத்து முடித்து, மதீனாவுக்குத் திரும்பியபோது முஹாஜிர்கள், அன்சாரிகளின் மனீஹாக்களை (இரவலாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்புச் செய்த பேரீச்சந் தோட்டங்களை) அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களும் என் தாயாரிடம் அவரின் பேரீச்ச மரங்களைத் திருப்பித் தந்துவிட்டார்கள். அவற்றுக்கு பதிலாக, உம்மு அய்மன் அவர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் தோட்டத்திலிருந்து (சில மரங்களை அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள்.
ஆதாரம்புஹாரி;எண் 2630

இந்த அளவுக்கு நபி[ஸல்] அவர்களின் நேசத்திற்குரியவராக திகழ்ந்த உம்மு அய்மன்[ரலி] அவர்கள், ஹிஜ்ரத் செய்த முஹாஜிராகவும், உஹத்-கைபர் உள்ளிட்ட சில போர்களில் படை வீரர்களுக்கு சேவையாற்றி வீரப் பெண்மணியாகவும் திகழ்ந்துள்ளார்கள். அதுமட்டுமன்றி இறைவேதத்தின் மீது தீராத நேசம் கொண்டவர்களாகவும் திகழ்ந்துள்ளார்கள்.

உம்மு ஐமன் (ரலி) அவர்கள் அண்ணல் நபியின் மரணத்தால் கடும் துயரத்திற்கு ஆளானார்கள். மனம் நொந்து அழுது அழுது கடுமையான பலவீனம் ஏற்பட்ட பிறகும் அவர்களின் அழுகை நிற்கவே இல்லை! இதனைக் கேள்விப்பட்டதும் அபூபக்கர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் வந்து உம்மு ஐமனைத் தேற்றினார்கள். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வண்ணம் இவ்வாறு கூறினார்கள். ‘ஏன் இவ்வளவு தூரம் கவலைப்படுகின்றீர்கள்! நபி (ஸல்) அவர்களுக்கு இறைவனிடத்தில் மிகச் சிறந்த சன்மானங்கள் உள்ளன.” அதற்கு உம்மு ஐமன் (ரலி) அவர்கள் ‘இதுதான் எனக்குத் தெறியுமே! நான் அழுது கொண்டிருப்பது இறைச் செய்தியின் வருகை (வஹீ) நின்று விட்டதே என்பதற்காகத்தான்!” என்று பதில் அளித்தார்கள். இதனைக் கேட்டதும் அவர்கள் இருவரின் manamum இளகியது. அவர்களும் அழலாயினர். - ஸஹீஹ் முஸ்லிம்.
ஆனால் தபகாத் இப்னு சஃத் எனும் நூலில் இவ்வாறு உள்ளது:- மக்கள் உம்மு ஐமன் (ரலி) அவர்களுக்கு ஆறுதல் கூறி மரணம் ஏற்படுவது இயற்கையே எனப் புரியவைத்தபோது, ‘இறைவனின் விதிப்படி நபியவர்கள் மரணம் அடைந்தது குறித்து எனக்குத் தெறியும்! இறைச் செய்தியின் வருகை தடைப்பட்டு விட்டதே என்பதற்காகத்தான் நான் அழுகின்றேன்” என்று பதில் அளித்தார்கள்.


அன்பானவர்களே! இறைத்தூதர்[ஸல்] அவர்கள் மரணித்தவுடன் ஏனைய சகாபாக்கள் இறைத் தூதரின் பிரிவை எண்ணி வாடிக்கொண்டிருக்க, உம்மு அய்மன்[ரலி] அவர்கள் அதையும் தாண்டி, இறைத்தூதர்[ஸல்] அவர்கள் மரணித்துவிட்டதால், இறைச்செய்தி இனிவராதே! இறைவனின் கட்டளைகள் நின்றுவிட்டதே என்று வருந்தி கண்ணீர் வடிக்கிறார்கள் என்றால், நாம் சிந்தித்து பார்க்கவேண்டும். அன்று உம்மு அய்மன்[ரலி] அவர்கள் நேசித்த இறைச்செய்தி இன்றும் நம்மிடையே இருக்கிறது. ஆனால் உம்மு ஐமன்[ரலி] அவர்களை போன்று நேசம் நாம் வைத்துள்ளோமா என்றால், பெரும்பாலோர் வைக்கவில்லை என்றே சொல்லிவிடலாம். காரணம் இறைச்செய்தி மீது யார் நேசம் கொள்வார்கள் என்றால்அந்த செய்தி அல்லாஹ்வின் புறத்திலிருந்து வரக்கூடிய கட்டளை. அதற்கு கட்டுப்படவேண்டும் என்றசிந்தனை எவருடைய உள்ளத்தில் உள்ளதோ அவர்தான் இறைச்செய்தியை நேசிப்பார். ஆனால் நம்முடைய வாழ்வில் தனிமனிதனின் சொந்த கருத்துக்கு கட்டுப்படும் அளவுக்கு கூட இறைச்செய்திக்கு கட்டுப்படவில்லை என்பதே உண்மை. எனவே உம்மு அய்மன்[ரலி] அவர்களைப்போல் இறைச்செய்தியை நம் வாழ்வில் அமுல்படுத்துவதன் மூலம் அதை நேசிப்போம் இன்ஷா அல்லாஹ்.

Fri 20

Click here to bookmark this link.Channel Image17:31 [பாடம்-71] நற்பண்புகள். முக்தஸர் ஸஹீஹுல் புகாரி
அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதை உள்ளவர் யார்?

2007. அபூ ஹுரைரா(ரல