Index |Subscribe mailing list | Help | E-mail us

 
 

இயங்கு எழுத்துருவுடன் கூடிய யுனிகோட் இணையபக்கம்

(Tamil Unicode Webpage with Dynamic Font)

முஃப்தி

 

யுனிகோடு
உலக மொழிகள் எல்லாவற்றிற்கும் ஒர் ஒருங்கிணைந்த குறியீட்டு முறைதான் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் அமைக்கப்பட்ட தகுதரமே யூனிகோட் ஆகும் இதில் சில இந்திய மொழிகளோடு தமிழுக்கென்றும் தனியிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே நாம் இன்று பயன்படுத்தும் TSC TAB TAM போன்ற குறியீட்டு வேறுபாடுகளையெல்லாம் தவிர்த்து ஓர் ஒருங்கிணைந்த குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தியதும் இந்த யூனிகோட் முறைதான் இந்த யூனிகோட் குறியீட்டின் மூலம் பதிக்கப்பட்ட கதைகளை கவிதைகளை கட்டுரைகளை நாம் Yahoo, google, MSN போன்ற தேடுதளங்களின் மூலம் தமிழிலேயே தேடுகின்ற வாய்ப்பும் நமக்கு கிடைத்திருக்கிறது இத்துடன் இத்தகுதரத்தை உலகிலுள்ள பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களாலும் அங்கீகரிக்க பட்டமையால் இதற்கு வளமான எதிர்காலமுண்டு என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

இன்றைய நிலையில் யூனிகோட் குறியீட்டினை வின்டோஸ் 2000 மற்றும் வின்டோஸ் Xp இயங்கு தளங்களில் மட்டுமே எளிதாக பயன்படுத்த முடியும். வின்டோஸ் Xp- யுடன் லதா என்னும் யுனிகோடு எழுத்துருவும் சேர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழ் யுனிகோட் எழுத்துருவினால் எழுதப்பட்ட பக்கங்களை எந்த பிரச்சினையுமின்றி படிக்க இயலும்.

இணையத்தில் உலாவும்போது விண்டோஸ் 98-ல் இயங்குதளத்தில் உள்ள இண்டெர்நெட் எக்ஸ்புலோரர் 5.5 (அல்லது அதற்கு பிந்தைய வெளியீடு) இருந்தால் தமிழ் யுனிகோட் பக்கங்களை பார்வையிட முடியும். ஆனால் அப்பக்கத்திற்குறிய தமிழ் யுனிகோடு எழுத்துரு உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் அல்லது இயங்கு எழுத்துருவாக அப்பக்கத்தில் (Webpage) இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இணையபக்கம்
21-ஆம் நூற்றாண்டில் எத்தனையோ தொலைதொடர்பு வசதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையெல்லாம் அனைத்து மனிதர்களும் பயன்படுத்துகிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியே பயன்படுத்தினாலும் அதனை மனிதர்களுக்கு தீங்கு தரும் விஷயத்தில்தான் பயன்படுத்தி வருகிறோம். அந்த வரிசையில் இருப்பதுதான் இணையமும்.

மீடியாவின் யார் கையில் இருக்கிறதோ அவர்களே இந்த உலகத்தில் கொடிகட்டி பறக்கிறார்கள். தங்களின் கருத்துகளை சொல்வதற்க்கும், தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை உலகிற்கு அறிவிப்பதற்கும் மீடியாவை பயன்படுத்தி வெற்றி காண்கிறார்கள்.

 

யார் தகவல்தொடர்பு ஊடகங்களில் தமது பங்கினை ஆற்றி அத்தகைய ஊடகங்களை தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரவில்லையோ அந்த சமுதாயம் கேட்பாரின்றி பரிதவிக்கும் நிலையை அடையநேரிடும்.

 

மனிதனின் கல்வி, தகவல்தொடர்பு, வணிகம், ஆன்மீகம் போன்றவற்றின் மேம்பாட்டிற்காக இணையத்தை பயன்படுத்த முடியும். தமிழ் இணையதளம் அமைக்கும்போது தூரநோக்கு பார்வையுடன் சிந்திப்பவர்கள் யுனிகோடு எழுத்துருக்கள் பயன்படுத்தப்படும் இணையதளங்களையே விரும்புகிறார்கள். இதன் மூலம் எழுத்துரு பிரச்சினைகள் தவிர்க்கமுடியும்.

யுனிகோடு இணையதளத்தில் அதிகமானோர் உமர்தம்பி அவர்களின் தேனீ (TheneeUniTx.ttf) எழுத்துருவையே பயன்படுத்துகிறார்கள். இதில் இன்னுமொரு நற்செய்தி அனைத்து இணையதளத்திலும் பயன்படுத்தும் விதமாக தேனீ (THENEE.eot - Dynamic Font) இயங்கு எழுத்துருவையும் சேர்த்தே வடிவமைத்திருப்பதுதான். இதனால் இணையதளமோ வலைப்பதிவோ தொடங்கும்போது அதற்கென்று பிரத்தியோகமாக இயங்கு எழுத்துருவை தயாரிக்க வேண்டியதில்லை.

இயங்கு எழுத்துருக்கான ஸ்கிரிப்ட்-ஐ இணையபக்கத்தில் இணைப்பதின் மூலம் TheneeUniTx.ttf எழுத்துரு இல்லாமலேயே இணையபக்கத்தை பார்வையிட முடியும். முக்கியமாக விண்டோஸ் 98 (Windows 98) இயங்குதளத்தில் தமிழ் யுனிகோடு எழுத்துரு இல்லாததால் பார்வையாளர்கள் பதிவிறக்கம் (Download) செய்யாமல் பக்கத்தை தமிழில் படிக்கலாம். அதுமட்டுமல்லாமல் தேனீ எழுத்துருவின் உயரமும் ஆங்கில எழுத்துருவின் உயரமும் ஒரே அளவு கொண்டது. இதனால் Line Space ஏற்ற இறக்கத்தினை தவிர்க்கலாம்.

 

இனி Microsoft Frontpage உதவியுடன் யுனிகோட் இணையபக்கம் தயாரிப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

) பிறகு உங்கள் html பக்கத்தில் Properties click செய்து கீழ்கண்ட மாற்றங்களை செய்யுங்கள்:

1) Language : Tamil
2) Save the documents as : Unicode (UTF-8 )
3) Page reload : Reload the current documents as : <Automatic Encoding> என மாற்றிய பிறகு

இயங்கு எழுத்துரு

இயங்கு எழுத்துருவின் பயன், விண்டோஸ் 98 போன்ற இயங்குதளங்களில் யுனிகோடு எழுத்துரு இல்லாததால் அதனை பதிவிறக்கம் செய்யாமல் தமிழ்பக்கத்தை பார்வையிட முடியும்.

ஆ) தேனீ இயங்கு எழுத்துருவை (size 45 kb) கீழ்கண்ட தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
http://www.islamkalvi.com/font/THENEE.eot

) உங்கள் இணையதளத்தில் ஏதேனுமொரு ·போல்டரை ஏற்படுத்தி தேனீ இயங்கு எழுத்துருவை சேமித்து வையுங்கள். உதாரணமாக:
font/THENEE.eot

ஈ) ஸ்கிரிப்ட் (Code) பகுதிக்கு சென்று இரண்டு Head-களுக்கு இடையில் கீழ்கண்டவற்றை கவனமாக பேஸ்ட் செய்யுங்கள். இதில் yoursitename என்பது உங்கள் தளத்தின் பெயர் என்பதை மறந்துவிடவேண்டாம்.


அவ்வளவுதான் இயங்கு எழுத்துருவுடன் கூடிய யுனிகோடு இணையதளம் தயார்.

இ) இனி TheneeUniTx எழுத்துருவில் உங்கள் செய்திகளை தட்டச்சு செய்யுங்கள் அல்லது மாற்றி அமையுங்கள். அதாவது Font face - TheneeUniTx ஆக இருக்க வேண்டும். தேனீ எழுத்துருவில் தட்டச்சு செய்ய தேவையான TheneeUniTx.ttf எழுத்துருவை கீழ்கண்ட தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

http://www.islamkalvi.com/font/TheneeUniTx.ttf

 

இணையம் மற்றும் html ஸ்கிரிப்ட் போன்றவற்றின் அறிவை வளர்த்துக்கொள்ள கீழ்கண்ட தளத்திற்கு சென்று இது தொடர்பான பல கட்டுரைகளை படிக்கலாம்.

http://ezilnila.com