Index |Subscribe mailing list | Help | E-mail us

 
 

வலைப்பதிவில் எழுத்துரு மேம்பாடு

முஃப்தி

 

வலைப்பதிவிற்கு வரும் அனைத்து வாசகர்களுக்கும் ஏற்றவகையில் எழுத்துரு அமைப்பை வலைப்பதிவில் மேம்படுத்துவது நல்லது.

 


 

இயங்கு எழுத்துரு உபயோகிப்பவர்கள் கவனத்திற்கு

தேனீ இயங்கு எழுத்துருவை தன் வலைப்பதிவில் இணைத்தவர்களில் சிலர் டெம்ப்லேட் பகுதியில் உள்ள எழுத்துரு குடும்பத்தில் அதன்பெயரை குறிப்பிடாமல் மறந்துவிடுகிறார்கள்.

 

யாரெல்லாம் இயங்கு எழுத்துருவை தன் வலைப்பதிவுடன் இணைத்திருக்கிறார்களோ அவர்கள், இணைக்கப்பட்ட எழுத்துருவின் முழு பெயரை டெம்ப்லேட் பகுதியில் உள்ள font-family-ல் குறிப்பிட வேண்டும்.

 

உதாரணமாக:

font-family: TheneeUniTx;

 

சில அலுவலகங்களில் கணினி பாதுகாப்பிற்காக Geocities போன்ற தளங்களை பார்வையிட முடியாதபடி Firewall உதவிகொண்டு பூட்டிவிடுவதுண்டு. நம்மவர்கள் அதிகமானோர் இயங்கு எழுத்துருவை வைத்திருக்கும் இடம் அதுவே. இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க, குறிப்பிட்ட யுனிகோடு எழுத்துருவை எங்கிருந்து பதிவிறக்கம் செய்யலாம் (உதாரணமாக : Ezilnila.com) என்பதை, Download Font என்ற சுட்டியை இணைத்து குறிப்பிடலாம்.


 

இயங்கு எழுத்துரு உபயோகிக்காதவர்கள் கவனத்திற்கு

வின்டோஸ் 98-ஐ உபயோகிக்கும் வாசகர்கள் இண்டெர்நெட் எக்ஸ்புளோரர் (version 5.5) உலாவி மூலம் வலைப்பதிவை பார்க்கும் வாசகர்களின் கணினியில் தமிழ் யுனிகோடு எழுத்துருக்கள் இருக்குமேயானால், டெம்ப்லேட் பகுதியில் அதன் பெயர்களை இணைப்பதன் மூலம் இயங்கு எழுத்துரு இல்லாமலேயே பக்கத்தை படிக்க வழிவகை செய்யலாம்.

 

இதற்கு டெம்ப்லேட் பகுதியில் font-family என்று எங்கெல்லாம் கொடுத்திருக்கிறார்களோ அதற்கு அடுத்து TheneeUniTx, Latha போன்ற தமிழ் யுனிகோட் எழுத்துருவின் பெயரை இணைக்க வேண்டும்.

 

உதாரணமாக:

font-family: TheneeUniTx, Latha;

 

குறிப்பிட்ட யுனிகோடு எழுத்துருவை ஏற்கனவே பதிவிறக்கம் செய்யாதவர்கள்,  அதனை எங்கிருந்து பதிவிறக்கம் செய்யலாம் (உதாரணமாக : Ezilnila.com) என்பதை தெரிவிக்க, Download Font என்ற சுட்டியை இணைக்கலாம்.

 


 

கவனம்

1) டெம்ப்லேட் பகுதியில் எதை இணைத்தாலும் Preview போட்டு பார்த்தபிறகு சேமிக்கவும்.

2) தட்டச்சு செய்யும்போது Justify செய்வதை தவிர்க்கவும். காரணம் Justify செய்த பக்கங்களை மொஸில்லா உலாவியில் (Mozila Browser) படிக்க இயலாது.