Index | Subscribe mailing list | Help | E-mail us

நபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள்

 

41-أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَالْهَرَمِ وَالْقَسْوَةِ وَالْغَفْلَةِ وَالْعَيْلَةِ وَالذِّلَّةِ وَالْمَسْكَنَةِ وَأَعُوْذُ بِكَ مِنَ الْفَقْرِوَالْكُفْرِ وَالْفُسُوْقِ وَالشِّقَاقِ وَالنِّفَاقِ وَالسُّمْعَةِ وَالرِّيَاءِ وَأَعُوْذُ بِكَ مِنَ الصَّمَمِ وَالْبَكَمِ وَالْجُنُوْنِ وَالْجُذَامِ وَالْبَرَصِ وَسَيِّئِ اْلأَسْقَامِ .

யாஅல்லாஹ்! இயலாமை, சோம்பல், கோழைத்தனம்;, கஞ்சத்தனம், முதுமை, கல்நெஞ்சம், பொடுபோக்கு, கஷ்டம், இழிவு, ஏழ்மை ஆகியவைகளை விட்டும் வறுமை, நிராகரித்தல், பாவச்செயல், பிரிவை ஏற்படுத்துதல், நயவஞ் சகத்தனம், பிறர் போற்றவேண்டும் என்பதற்காகச் செயல் படல், பிறர் பார்க்கவேண்டும் என்பதற்காகச் செயல்படல் -முகஸ்த்துதி- ஆகியவைகளை விட்டும், செவிடு, ஊமை, பைத்தியம், உடலுறுப்புக்கள் அழுகி விழும்நோய், வெண் குஷ்டம் மற்றும் கெட்ட அனைத்து நோய்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


42-أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْفَقْرِ، وَالْقِلَّةِ، وَالذِّلَّةِ، وَأَعُوْذُ بِكَ مِنْ أَنْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ

இறைவா! வறுமை, ஏழ்மை, இழிவு ஆகியவற்றை விட்டும் நான் பிறருக்கு அநீதம் செய்வதை விட்டும் பிறரின் அநீதிக்கு ஆளாவதை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத்தேடுகிறேன்.


43-أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ جَارِ السُّوْءِ فِيْ دَارِ الْمُقَامَةِ فَإِنَّ جَارَ الْبَادِيَةِ يَتَحَوَّلُ

இறைவா! (நான்) வசிக்கும் இடத்தில் தீய அண்டை வீட்டாரை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஏனெனில் நிச்சயமாக அண்டை வீட்டார் திசைமாறச் செய்து விடுவார்கள்.


44- أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ قَلْبٍ لاَّيَخْشَعُ، وَمِنْ دُعَاءٍ لاَّيُسْمَعُ، وَمِنْ نَفْسٍ لاَّتَشْبَعُ، وَمِنْ عِلْمٍ لاَّيَنْفَعُ، أَعُوْذُ بِكَ مِنْ هَؤُلاَءِ اْلأَرْبَعِ

யாஅல்லாஹ்! (உனக்குப்) பயப்படாத உள்ளம், ஏற்றுக் கொள்ளப்படாத பிரார்த்தனை, நிறைவடையாத மனம், பயனளிக்காத கல்வி ஆகிய இந்த நான்கு தன்மைகளை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம்; பாதுகாப்புத் தேடுகிறேன்.


45-أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ يِوْمِ السُّوْءِ، وَمِنْ لَيْلَةِ السُّوْءِ، وَمِنْ سَاعَةِ السُّوْءِ، وَمِنْ صَاحِبِ السُّوْءِ، وَمِنْ جَارِ السُّوْءِ فِيْ دَارِ الْمُقَامَةِ

யாஅல்லாஹ்! பகலில் ஏற்படும் தீங்கை விட்டும் இரவில் ஏற்படும் தீங்கை விட்டும் தீங்கு ஏற்படும் நேரத்தை விட்டும் தீய நண்பர்களை விட்டும் மற்றும் (நான்) வசிக்கும் இடத்தில் தீய அண்டை வீட்டாரை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


46-أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْجَنَّةَ ، وَأَسْتَجِيْرُ بِكَ مِنَ النَّارِ .

யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடம் சொர்க்கத்தை கேட்கிறேன். மேலும் நரகத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


47- أَللَّهُمَّ فَقِّهْنِيْ فِي الدِّيْنِ

இறைவா! எனக்கு மார்க்க விளக்கத்தைத் தருவாயாக!


48-أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لاَ أَعْلَمُ.

யாஅல்லாஹ்! நான் அறிந்து கொண்டே உனக்கு இணைவைப்பதை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நான் அறியாமல் செய்தவற்றிற்காக உன்னிடம் பாவமன்னிப்பு கேட்கிறேன்.


49-أَللَّهُمَّ انْفَعْنِيْ بِمَا عَلَّمْتَنِيْ،وَعَلِّمْنِيْ مَا يَنْفَعُنِيْ وَزِدْنِيْ عِلْمًا

யாஅல்லாஹ்! எனக்கு நீ கற்றுக் கொடுத்தவற்றை எனக்கு பயனுள்ளதாக ஆக்கிவைப்பாயாக! எனக்கு பயனளிப்பவற்றையே கற்றுத் தருவாயாக! மேலும் என்னுடைய கல்வியை அதிகப்படுத்துவாயாக!


50-أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَـيِّـبًا،وَعَمَلاً مُتَقَبَّلاً

யாஅல்லாஹ்! பயனளிக்கும் கல்வியையும் தூய்மையான (ஹலாலான) உணவையும் ஏற்றுக்கொள்ளப்படும் நல்லறத்தையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்.


 

துஆ

எண்

ஆதார நூல்

41

ஹாகிம், பைஹகீ

42

அபூதாவூத், நஸயீ

43

ஹாகிம்

44

அபூதாவூத்

45

தப்ரானி

46

திர்மிதி

47

புகாரி, முஸ்லிம்

48

ஸஹீஹ் அல் ஜாமிஃ

49

இப்னுமாஜா

50

இப்னுமாஜா

 

அடுத்த பக்கம்