Download Unicode Font

 

 

Index

2- பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவது மற்றும் அநீதங்களை விட்டும் விடுபடுவதன் அவசியம்


ஹஜ், உம்ராவை நிறைவேற்றப் புறப்படுபவர் தன் குடும்பத்தார் மற்றும் தன்னைச் சார்ந்தோருக்கு இறையச்சத்துடன் நடந்து கொள்ளுமாறு உபதேசம் செய்வது விரும்பத்தக்க செயலாகும். இறையச்சமென்பது: அல்லாஹ்வின் கட்டளைகளின்படி செயல்படுவதும் அவன் தடுத்தவைகளை விட்டு விலகிக் கொள்வதுமாகும்.

மேலும் அவர் கொடுக்கவேண்டிய மற்றும் அவருக்கு வர வேண்டிய கடன் விபரங்களை சாட்சிகளுடன் எழுதிக் கொள்வது அவசியமாகும்.

وَتُوْبُوْا إِلَى اللهِ جَمِيْعاً أَيُّهَ الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ

முஃமின்களே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் (பாவமன்னிப்புக்கோரி) தவ்பாச் செய்யுங்கள்! (24:31) என்ற அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க அனைத்துப் பாவங்களை விட்டும் மனத்தூய்மையுடன் விரைவாகத் தவ்பாச் செய்து, அதனை விட்டும் மீள்வது கடமையாகும். தவ்பா என்பது:


பாவங்களை விட்டும் விலகி, முழுமையாக விட்டுவிடுவது.
கடந்த காலங்களில் செய்த பாவங்களை எண்ணி வருந்துவது.
அதனை மீண்டும் செய்யாமலிருக்க உறுதிகொள்வது.
மனித உயிர், மானம் ஆகியவற்றில் அநீதம் இழைத்திருந்தால் ஹஜ் பயணத்திற்கு முன்னர் அதற்காக சமாதானம் செய்து கொள்வதும், பொருள் போன்றவற்றில் உரிமை மீறியிருந்தால் அதை மீட்டிக் கொடுப்பது அல்லது பொருத்துக் கொள்ள வேண்டிக் கொள்வதும் அவசியமாகும்.


( مَنْ كَانَتْ لَهُ مَظْلَمَةٌ لِأَخِيهِ مِنْ عِرْضِهِ أَوْ شَيْءٍ فَلْيَتَحَلَّلْهُ مِنْهُ الْيَوْمَ قَبْلَ أَنْ لَا يَكُونَ دِينَارٌ وَلَا دِرْهَمٌ إِنْ كَانَ لَهُ عَمَلٌ صَالِحٌ أُخِذَ مِنْهُ بِقَدْرِ مَظْلَمَتِهِ وَإِنْ لَمْ تَكُنْ لَهُ حَسَنَاتٌ أُخِذَ مِنْ سَيِّئَاتِ صَاحِبِهِ فَحُمِلَ عَلَيْهِ )

யாரேனும் தன் சகோதரரின் மானத்தில் அல்லது ஏதேனும் ஒன்றில் அநீதம் இழைத்திருந்தால் தங்கக் காசோ, வெள்ளிக் காசோ அவரிடம் இல்லாத நிலை (மறுமை நாள்) வருவதற்கு முன் இன்றே அவர் அதிலிருந்து விடுபட்டுக் கொள்ளட்டும். (அவர் அந்த அநீதங்களிலிருந்து விடுபடாமல் மரணித்து விட்டால், மறுமையில்) அவரிடம் நல்லறங்கள் இருந்தால் அதிலிருந்து அவர் செய்த அநீதியின் அளவு எடுத்து (அநீதி இழைக்கப்பட்டவருக்குக்) கொடுக்கப்படும். அவரிடம் நன்மைகள் இல்லையெனி;ல் அநீதமிழைக்கப்பட்டவரின் தீமை களை எடுத்து இவர்மீது சுமத்தப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹரைரா-ரலி, நூல்:புகாரீ)


ஹஜ், உம்ராவின் செலவினங்களுக்காக ஹலாலான பொருளாதாரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும்.


( إِنَّ اللَّهَ طَيِّبٌ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا )

நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன், தூய்மையானதைத் தவிர ஏற்றுக் கொள்ளமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹரைரா-ரலி, நூல்: முஸ்லிம்)


( إِذَا خَرَجَ الرَّجُلُ حَاجًّا بِنَفَقَةٍ طَيِّبَةٍ وَوَضَعَ رِجْلَهُ فِي الْغَرْزِ فَنَادَى : لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، نَادَاهُ مُنَادٍ مِنَ السَّمَاءِ : لَبَّيْكَ وَسَعَدَيْكَ، زَادُكَ حَلاَلٌ، وَرَاحِلَتُكَ حَلاَلٌ، وَحَجُّكَ مَبْرُوْرٌ غَيْرَ مَأْزُوْرٍ. وَإِذَا خَرَجَ الرَّجُلُ بِالنَّفَقَةِ الْخَبِيْثَةِ فَوَضَعَ رِجْلَهُ فِي الْغَرْزِ فَنَادَى : لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، نَادَاهُ مُنَادٍ مِنَ السَّمَاءِ : لاَ لَبَّيْكَ وَلاَ سَعَدَيْكَ، زَادُكَ حَرَامٌ، وَنَفَقَتُكَ حَرَامٌ، وَحَجُّكَ غَيْرُ مَبْرُوْرٍ )

ஒரு மனிதர் தூய்மையான பொருளுடன் ஹஜ் செய்யப் புறப்பட்டு, தன்னுடைய காலை வாகனத்தில் -சேணத்தில்-வைத்து, லப்பைக் அல்லாஹ{ம்ம லப்பைக் (யாஅல்லாஹ்! உன்னுடைய அழைப்பிற்குக் கட்டுப்பட்டு வந்துள்ளேன்) என்று கூறினால் வானத்திலிருந்து ஒரு அழைப்பாளர் அவரை அழைத்து, உன்வரவு நல்வரவாகட்டும்! உன்னுடைய பொருள் ஹலாலானது! உன்னுடைய வாகனமும் ஹலாலானது! உன்னுடைய ஹஜ்ஜும் பாவமற்ற, ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக ஆகட்டும்! என்று கூறுவார்.

ஒருவர் அசுத்தமான (ஹராமான) பொருளாதாரத்துடன் புறப்பட்டு, தன்னுடைய காலை வாகனத்தில் -சேணத்தில்- வைத்து, லப்பைக் அல்லாஹ{ம்ம லப்பைக்! என்று கூறினால் வானத்திலிருந்து ஒரு அழைப்பாளர் அவரை அழைத்து, உன்னுடைய வரவு நல்வரவாகாமல் போகட்டும்! உன்னுடைய பயண சாதனம் ஹராமானது! உன்னுடைய செலவினம் -பொருளாதாரம்- ஹராமானது! உன்னுடைய ஹஜ்ஜும் ஏற்றுக் கொள்ளப்படாத ஹஜ்ஜாக ஆகட்டும்! என்று கூறுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹரைரா-ரலி, நூல் : தபரானீ)

ஹஜ் செய்பவர் பிறமக்களின் உதவியை எதிர்பார்க்காமல் இருப்பதும் அவர்களிடம் யாசகம் கேட்காமல் கண்ணியத்தை காப்பாற்றிக் கொள்வதும் அவசியமாகும்.


(. . وَمَنْ يَسْتَعْفِفْ يُعِفَّهُ اللَّهُ وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللَّهُ )

யார் தன் கண்ணியத்தை காத்துக் கொள்ள முயல்கிறாரோ அவர் கண்ணியத்தை அல்லாஹ் காப்பாற்றுகிறான். யார் பிறர் தேவையின்றி வாழ முயல்கிறாரோ அவரை அல்லாஹ் பிறர் தேவையற்றவராக்கிவிடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : ஹகீம்-ரலி, நூல் : புகாரீ)


(. . مَا يَزَالُ الرَّجُلُ يَسْأَلُ النَّاسَ حَتَّى يَأْتِيَ يَوْمَ الْقِيَامَةِ لَيْسَ فِي وَجْهِهِ مُزْعَةُ لَحْمٍ . . )

மக்களிடம் தொடர்ந்து யாசகம் கேட்டுக் கொண்டிருப்பவன் மறுமை நாளில் அவன் முகத்தில் -சிறிதளவு கூட- தசையற்ற நிலையில் வருவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : இப்னு உமர் -ரலி, நூல் : புகாரீ)

ஹஜ் செய்பவர், அல்லாஹ்விற்காகவும் மறுமைப் பயனை நோக்கமாகக் கொண்டும் ஹஜ், உம்ராவை நிறைவேற்றுவது அவசியமாகும். மேலும் புனிதத் தலங்களில் அல்லாஹ்விற்கு விருப்பமான சொல், செயல்களில் ஈடுபட்டு அவனுடைய நெருக்கத்தைப் பெற முயற்சிக்கவேண்டும்.

இவ்வுலகப்; பயன்களைப் பெறும் நோக்கத்திலோ அல்லது பிறர் பார்ப்பதற்காகவோ, தன்னைப் புகழ்ந்து பேசுவ தற்காகவோ, பெருமைக்காகவோ ஹஜ் செய்வதை விட்டும் முற்றிலும் தவிர்ந்து கொள்ளவேண்டும். ஏனெனில் இவைகள் மிகவும் இழிவான நோக்கங்களாகும். மேலும் நன்மைகள் அழிவதற்கும், நல்லறங்கள் ஏற்றுக் கொள்ளப்படாமலிருக்கவும் இவைகள் காரணமாகிவிடும். அல்லாஹ தஆலா கூறுகிறான்:


مَنْ كَانَ يُرِيْدُ الْحَيَاةَ الدُّنْيَا وَزِيْنَتَهَا نُوَفِّ إِلَيْهِمْ أَعْمَالَهُمْ فِيْهَا وَهُمْ فِيْهَا لاَ يُبْخَسُوْنَ-أُولَئِكَ الَّذِيْنَ لَيْسَ لَهُمْ فِي اْلآخِرَةِ إِلاَّ النَّارُ وَحَبِطَ مَا صَنَعُوْا فِيْهَا وَبَاطِلٌ مَا كَانُوْا يَعْمَلُوْنَ

எவர்கள் இவ்வுலக வாழ்வையும் அதன் அலங்காரத்தையும் நாடு பவர்களாக இருக்கின்றார்களோ, அவர்கள் செயல்(களுக்குரிய பலன்)களை இ(வ்வுலகத்)திலேயே நாம் பூரணமாக அவர்களுக்கு நிறைவு செய்வோம். அவர்களோ அதில் குறைவு செய்யப்பட மாட்டார்கள்.
இத்தகையோர் தாம் - அவர்களுக்கு மறுமையில் (நரக) நெருப்பைத் தவிர (வேறு ஒன்றும்) இல்லை. அவர்கள் அ(வ்வுலகத்)தில் செய்தவை அழிந்தும் விட்டன. அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணானவையேயாகும்.
(அல்குர்ஆன் 11:15-16)


مَنْ كَانَ يُرِيْدُ الْعَاجِلَةَ عَجَّلْنَا لَهُ فِيْهَا مَا نَشَاءُ لِمَنْ نُرِيْدُ ثُمَّ جَعَلْنَا لَهُ جَهَنَّمَ يَصْلَـهَا مَذْمُوْمًا مَدْحُوْراً – وَمَنْ أَرَادَ اْلآخِرَةَ وَسَعَى لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَأُولَئِكَ كَانَ سَعْيُهُمْ مَشْكُوْراً

எவர் (மறுமையை மறந்துவிட்டு) இம்மையை நாடுகிறாரோ, அவருக்கு அதில் நாம் நாடியதை, நாம் நாடியவருக்குத் துரிதமாக கொடுத்துவிடுகின்றோம். பின்னர், மறுமையில் அ(த்தகைய)வருக்காக நரகத்தை நாம் ஆக்குகின்றோம். அ(த்தகைய)வர் நிந்திக்கப்பட்டவராக, (அல்லாஹ்வின் அருளிலிருந்து) தூரமாக்கப்பட்டவராக அதில் நுழைவார்.

இன்னும், எவர் விசுவாசியாக இருக்க, அவர் மறுமையை நாடி அதற்குரிய முயற்சியையும் மேற்கொண்டாரோ அத்தகையோர் -அவர்களின் முயற்சி (அல்லாஹ்விடம்) அங்கீகரிக்கப்பட்டதாகும்.
(அல்குர்ஆன் 17:18-19)

 

(قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى أَنَا أَغْنَى الشُّرَكَاءِ عَنِ الشِّرْكِ مَنْ عَمِلَ عَمَلًا أَشْرَكَ فِيهِ مَعِي غَيْرِي تَرَكْتُهُ وَشِرْكَهُ )

எனக்கு இணைவைப்பவர்களின் இணையை விட்டும் நான் தேவையற்றவனாவேன். யாரேனும் ஒரு அமலைச் செய்து அதில் என்னுடன் பிறரை இணையாக்கிவிட்டால் (அதனை நான் ஏற்றுக் கொள்ளாமல்) அவரையும் அவரது இணையையும் விட்டுவிட்டேன் என அல்லாஹ{ தஆலா கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹரைரா -ரலி, நூல் : முஸ்லிம்)


ஹஜ் செய்பவர், மார்க்கத்தைப் பேணக்கூடிய, இறையச்சமுடைய, மார்க்க விளக்கமுடைய நல்லவர்களுடன் தனது பயணத்தை அமைத்துக் கொள்ளவேண்டும். மார்க்க விளக்கமற்றவர்கள் மற்றும் பாவம் செய்பவர்களுடன் இணைவதை விட்டும் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

ஹஜ், உம்ராவை முறையான கல்வியுடன் நிறைவேற்ற வேண்டும் என்பதால் அதில் தான் செய்யவேண்டியவைகளைக் கற்றுக் கொள்வதும் அதன் அறிவைப் பெறுவதும் தனக்கு தெளிவற்ற விஷயங்களை பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதும் அவசியமாகும்.

அவர் கால்நடையின் மீதோ, வாகனத்திலோ, விமானத்திலோ அல்லது இவை தவிர உள்ள வாகனங்களிலோ அமர்ந்து புறப்படும் போது -பிஸ்மில்லாஹ் என- அல்லாஹ்வின் பெயர் கூறி, அவனைப் புகழ்ந்து, பிறகு மூன்று முறை அல்லாஹ அக்பர் எனக் கூறிவிட்டு, ஸஹீஹான ஹதீஸில் இடம் பெற்றுள்ள கீழ்காணும் துஆவை ஓதிக் கொள்வது விரும்பத்தக்க செயலாகும்.


سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ ( اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ، اَللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ )


(பொருள் : எங்களுக்கு இதனை வசப்படுத்தித் தந்தவனான அவன் மிக்க பரிசுத்தமானவன். (இதன் மீது பிரயாணிக்க அவன் இதனை வசப்படுத்தித் தந்திராவிட்டால்) இதற்கு சக்தி பெற்றவர் களாக நாங்கள் இருக்கவில்லை. மேலும் நிச்சயமாக நாங்கள் எங்கள் இரட்சகன் பக்கமே திரும்பிச் செல்பவர்களாக இருக்கிறோம். (அல்குர்ஆன் 43: 13-14)

யாஅல்லாஹ்! இப்பயணத்தில் நாம் உன்னிடம் நல்லறங்களையும் இறையச்சத்தையும் நீ பொருந்திக் கொள்ளும் செயலையும் கேட்கின்றோம். யாஅல்லாஹ்! இப்பயணத்தை எங்களுக்கு நீ எளிதாக்குவாயாக! அதன் தூரத்தை நீ சுருக்கிடுவாயாக! யாஅல்லாஹ்! இப்பயணத்தில் நீயே எங்களுடன் இருப்பவன். மேலும் நீயே எங்கள் குடும்பத்தினருக்கு பிரதிநிதி (பொருப்பாளன்). யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடம் பயணத்தின் கஷ்டங்களை விட்டும் கோரக் காட்சிகளை விட்டும் செல்வம் மற்றும் குடும்பத்தில் தீயவிளைவுகள் ஏற்படுவதை விட்டும் பாதுகாவல் தேடுகின்றேன்.)
(அறிவிப்பவர் : இப்னு உமர் - ரலி, நூல் : முஸ்லிம்)

அவர் தன் பயணத்தில் அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறவேண்டும். மிகப்பணிவாக துஆ மற்றும் பாவமன்னிப்புத் தேடுவதில் அதிகமாக ஈடுபடவேண்டும். குர்ஆனை பொருளுணர்ந்து, அதிகமாக ஓதவேண்டும். தொழுகைகளை ஜமாஅத்துடன் பேணித் தொழ வேண்டும்.

பிறரைப் பற்றிய தேவையற்ற, வீண் பேச்சுக்களில் மூழ்குதல், அளவு கடந்து பரிகாசம் செய்தல், பொய், புறம், கோள் மற்றும் தன்னுடன் இருப்பவர்களையோ அல்லது பிற முஸ்லிம் சகோதரர்களையோ கேலி செய்தல் போன்ற அனைத்துச் செயல்களை விட்டும் நாவைப் பாதுகாத்துக் கொள்வது அவசியமாகும்.

மேலும் தன்னுடன் இருப்பவர்களுக்குப் பணிவிடை செய்வதும் அவர்களை விட்டும் நோவினை தருபவற்றை நீக்கி விடுவதும் அவசியமாகும். தனது சக்திக்கேற்ப, நுட்பமாகவும் அழகிய உபதேசங்களுடனும் அவர்களுக்கிடையே நன்மைகளை ஏவி, தீமைகளைத் தடுக்க வேண்டும்.
 

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்