Index | Subscribe mailing list | Help | E-mail us

 
பாடம் - 4

உளு செய்வதின் ஒழுங்குகளும் சட்டங்களும்

உளு ஒரு வணக்கம் என்பதால் அதையும் நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த முறைப்பிரகாரம் செய்ய வேண்டும்.

- யார் இவ்வாறு (நபியவர்கள் செய்தது போல்) உளு செய்கின்றாரோ அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்-முஸ்லிம்)

உளுவின் சிறப்புகள்

- ஒரு முஸ்லிமான அல்லது முஃமினான அடியான் உளு செய்து தனது முகத்தை கழுவினால் அவர் கண்ணினால் செய்த எல்லா பாவங்களும் முகத்திலிருந்து வெளியாகும் முதல் தண்ணீரோடு அல்லது கடைசி துளியோடு மன்னிக்கப்படும், தனது இரு கைகளையும் கழுவினால் இரு கைகளினால் செய்த பாவங்கள் கைகளிலிருந்து வெளியாகும் (முதல்) தண்ணீரோடு அல்லது கடைசி துளியோடு மன்னிக்கப்படும், தன்னுடைய இரு கால்களையும் கழுவினால் இரு கால்களினால் செய்த பாவங்கள் (முதல்) தண்ணீரோடு அல்லது கடைசித்துளியோடு மன்னிக்கப்பட்டு தூய்மையான மனிதராகி விடுகின்றார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - முஸ்லிம்)

- யார் நல்ல முறையில் உளு செய்கின்றாரோ அவருடைய நகத்துக்குக் கீழிலிருந்துகூட அவருடைய உடம்பால் செய்த பாவங்கள் வெளியாகிவிடும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - முஸ்லிம்)

உளு செய்யும் முறை