Index | Subscribe mailing list | Help | E-mail us

அரைக்கால் டவுசரில் தொழுகையா?

மௌலவி, ஹாஃபிழ், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி

 


அச்செடுக்க இங்கு சொடுக்கவும்.
(Print in PDF format)

 

ஓர் ஆண் தொழுகையில் அணிந்து கொள்ள வேண்டிய ஆடையின் அளவு குறித்து கவன ஈர்ப்புச் சட்டம் ஒன்றை சமீபகாலத்தில் வெளியிட்டு இவர்கள் நடத்தும் விண் டீ.வியில் தொடை தெரிய ஆடும் டான்ஸுகளுக்கு இவர்களின் ஆதரவாளர்களின் எதிர்ப்பை தவிர்க்கவும், மேலும் வித்தியாசமான கோணத்தில் ஒரு கருத்தைக் கூறி, அதை பரபரப்புச் செய்திகளாக (Sensenational News) பத்திரிக்கை மற்றும் சி.டிகளில் வியாபார நோக்கில் வெளியிட்டு, சந்தடிசாக்கில் குளிர்காய்ந்து (காசாக்கி) வருகிறார்கள் என்பதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள். எது எப்படியிருந்தாலும் அல்குர்ஆன் மற்றும் நபிகளாரின் வழிமுறைகளின்படி இச்செய்தியினை ஆராய்வோம்.


கருத்துப் பரிமாற்றங்கள் நடந்து தள்ளுபடி செய்யப்பட்டு விட்ட ஒரு சட்டத்தை தூசி தட்டி கையில் எடுத்துக் கொண்ட இம்மாமேதைகள், வழக்கம் போல இச்சட்டத்தை விளக்குவதிலும் மறைத்தல், திரித்தல், சான்றுகளில் தங்களுக்குச் சாதகமானதை எடுத்துக் கொண்டு எதிரானதை வளைத்தல் ஆகியவற்றில் தங்களது கை வரிசையைக் காட்டுவதில் இம்முறையும் சளைக்கவில்லை.

இறைவசனத்திலும், இறைத்தூதரின் வாக்கிலும் இவர்கள் செய்த தில்லு முல்லுகள், மொழிபெயர்ப்புகளில் செய்த மோசடிகள், முன்னுக்குப் பின் பேசி வரும் முரண்பாடுகள் என அனைத்தும் பல சந்தர்ப்பங்களில் பலராலும் பட்டியலிட்டு அம்பலப்படுத்தப்பட்டுவிட்டாலும், விட்டேனாபார் என்ற ரீதியில்தான் பேசியும், எழுதியும் வருகிறார்களே தவிர, மனிதர்கள் என்ற வகையில் தங்களிடமும் தவறுகள் ஏற்படும், அவற்றைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று ஒரு போதும் இவர்கள் சிந்தித்ததில்லை.

பிறரைக் குறை கூறியே தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என எண்ணுகின்ற இவர்கள் குர்ஆனுக்கு செய்த மொழி பெயர்ப்பில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டிய போது, .....யின் தர்ஜுமாவில் தவறுகளா? என்ற தலைப்பில் பல சி.டி.களைப் போட்டு காசாக்கினார்களே தவிர, இத்தலைப்பில் உள்ள ஆணவப் போக்கினைக் கவனிக்கத் தவறி விட்டார்கள். இறைத்தூதர் வாழ்ந்த காலத்திலேயே தன்னை நபி என பிரகடனப்படுத்திக் கொண்ட போலியான முஸைலமாவிற்குப் பின் ஒரு சிறிய கூட்டம் இருந்தது எனும் போது தனிமனித வழிபாட்டினை விரும்பும் ஒரு சிறிய கூட்டம் இருப்பது கண்டு நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.


தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது விருப்பு, வெறுப்பின்றி அதனை சீர் தூக்கிப் பார்த்து தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணாமல், சுட்டிக் காட்டியோரை ஜென்ம விரோதிகளாக நினைத்து, விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் விமர்சிப்பவர்கள் மீது அவதூறுகளை அள்ளி வீசுவதோடு, தனிமனிதன் பற்றிய தரம் கெட்ட விமர்சனத்திலும் ஈடுபடுகிறார்கள்.

ஓர் ஆண் தன் உடலில் கட்டாயம் மறைக்க வேண்டிய பகுதி குறித்து எழுதிய இவர்களது கருத்திலுள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டியோரை நோக்கி, 'அவர்கள் சாக்கடைகள்' என்பது போன்ற தரம் கெட்ட வார்த்தைகளால் விமர்சனம் செய்து, தங்களின் தரத்தை மீண்டும் கீழே இறக்கிக் கொண்டார்கள்.

எனவே, இவர்கள் கூறிய இந்த டவுசர் சட்டத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்தி, அவர்கள் கூற்றில் எந்தளவு உண்மை உள்ளது, சான்றுகளை எவ்வாறு திரித்து கூறியுள்ளார்கள் என்பதை விரிவாக அறிந்து கொள்வோம்.

 

இவர்கள் கூறுவது என்ன?

"தொழுகையிலும், தொழுகைக்கு வெளியிலும் ஆண்கள் தொப்புள் முதல் முட்டுக்கால் வரை மறைப்பது கட்டாயம் என்று அபூ ஹனீஃபா, ஷாஃபி உள்ளிட்ட பெரும்பாலான அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


ஆனால், அஹ்மத் பின் ஹன்பல், மாலிக் ஆகிய அறிஞர்களும், ளாஹிரிய்யாக்கள் என்ற பிரிவினரும் இதை விடக் குறைந்த அளவுக்கு மறைத்துக் கொள்வது போதுமானது என்று கூறுகின்றனர். முன் பகுதியையும், பின் பகுதியையும் மறைக்கும் வகையில் ஆடை அணிந்தால் போதும் என்று இவர்கள் கூறுகின்றனர்.


இவர்களின் கருத்துப் படி ஆண்களின் முட்டுக்கால், தொடையின் பெரும் பகுதி, தொப்புள் ஆகியவை வெளியே தெரிந்தால் அதனால் குற்றமில்லை. அரைக்கால் டவுசரை அணிந்து கொண்டு தொழுதாலும் தொழுகை செல்லும் என்று இவர்கள் (இமாம்கள்) கூறுகின்றனர்.


வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் நாம் முடிவு செய்வதாக இருந்தால் முதல் சாராரின் கருத்தை விட இரண்டாம் சாராரின் கருத்துத்தான் ஏற்புடையதாக உள்ளது. இது நமக்கு வியப்பாகத் தெரிந்தாலும் இதுதான் உண்மை." (ஏகத்துவம்: ஜுலை - 2005)


இவர்களது இக்கருத்தின் படி ஒர் ஆண் மறைக்க வேண்டிய பகுதிகள்:

1. ஆண் குறி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி.
2. பின் துவாரம்.
3. இரு புட்டங்கள்.
4. தொடையின் சிறிய பகுதி.

(தொடையின் பெரும் பகுதி தெரியலாம் என்றால் மறைக்க வேண்டியது ஒரு சிறிய பகுதிதான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால், தொடையின் சிறிய பகுதி என்பது என்ன அளவு என்பதையும் அவர்கள்தான் விளக்க வேண்டும். 1987-ம் ஆண்டில் இதற்கு மாற்றமான கருத்தைக் கூறிக் கொண்டிருந்தார்கள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கதாகும். 15 ஆண்டுகால இடைவெளியில் மனத்தடுமாற்றம் அடைந்ததின் இரகசியம் என்ன?)

ஓர் ஆண் மறைக்க வேண்டியது என இவர்கள் கூறிய இந்த அளவினை 1425ஆண்டு கால இஸ்லாமிய வரலாற்றில் எந்த ஒரு அறிஞரும் முன் வைக்க வில்லை. மாறாக, ஏற்கனவே இறைத்தூதர் மீது இட்டுக் கட்டிப் பேசிய இவர்கள் இப்போது இமாம்களின் பெயரால் இட்டுக் கட்டியுள்ளார்கள் என்பதுதான் உண்மை. இவர்கள் கூறிய அளவினை எந்த நூலில் இமாம்களின் கருத்தாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அரபி மூலத்துடன் மக்கள் மன்றத்தில் வெளியிட அவர்கள் தயாரா? தனி மனித மாயையில் மாட்டிக் கொண்டிருப்பவர்கள் வேண்டுமென்றால் இவர்கள் கூறுவது அனைத்தும் உண்மை எனக் கண் மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், எல்லோரையும் ஏமாற்றி விடலாம் என்று நினைத்தால் அது அவர்களின் அறியாமையின் வெளிப்பாடே தவிர வேறில்லை.

இவர்கள் குறிப்பிடும் இப்பகுதிகளை மறைக்க உள்ஜட்டியே போதுமானதாகும். அரைக்கால் டவுசர் தேவையில்லை. ஏனெனில், அரைக்கால் டவுசர் அணிந்தாலே தொடையின் பெரும் பகுதியை அல்லது தொடையின் பாதியளவை மறைத்து விடும். இந்த உண்மையை இவர்களும் ஒப்புக் கொண்டுள்ளார்கள். (பக்கம்-29, ஏகத்துவம்- ஜுலை 2005) இதைத் தெரிந்து கொண்டுதான் தொடையின் பெரும் பகுதி வெளியே தெரியலாம் எனப்பேசுகிறார்களா? என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

தொப்பியும், ஜட்டியும்:


மறைக்க வேண்டிய பகுதிகள் என இவர்கள் கூறியுள்ள இக்கருத்தை இமாம் அஹ்மத் பின் ஹன்பல், இமாம் மாலிக், ளாஹிரிய்யாப் பிரிவினர் ஆகியோரில் யாருமே கூறவில்லை என்பதற்கான சான்றுகளை அறியும் முன், இந்த டவுசர்களின் கவனத்திற்கு சில பழைய நிகழ்வுகளை(குடயளா டீயஉம) நினைவுக்குக் கொண்டு வர விரும்புகின்றேன். ஏனெனில், தங்களுக்குப் பாதகமானதை மட்டும் குறிப்பாக மறந்து (மறைத்து) விடும் செலக்ட்டிவ் அம்னீஷியா (ளுநடநஉவiஎந யுஅநௌலைய) என்ற நோய் இவர்களுக்கு இருப்பதால்தான்.

நினைவுட்டுகிறேன்


தொழுகையில் தலையை மறைக்க வேண்டியது கட்டாயமில்லை என்று ஒரு தனிமனிதர் கூறிய போது, உறங்கும் போதும்கூட தொப்பி அணிந்து கொள்ளும் வழக்கம் உள்ள இவர்களில் சிலர் தொழுகைக்கு என்று வந்து விட்டால் தொப்பியைக் கழற்றி விடுவார்கள். இதனால், பல ஊர்களில் தகராறு ஏற்பட்டு, அடி தடி வரை போன பிரச்சனைகள்தான் எத்தனை? எத்தனை?

தொடையை மறைப்பது கட்டாயமில்லை என்று சொல்லப்பட்டவுடன், அதனைச் செயல்படுத்தும் விதமாக ஜட்டியை மட்டும் அணிந்து கொண்டு தொழுகைக்கு வராதது ஏன்? கட்டாயம் தொப்பி அணிந்துதான் தொழ வேண்டும் என்று கூறியவர்களுக்கு மத்தியில் தொப்பி அணியாமல் தொழுது முன் மாதிரி ஏற்படுத்திய இவர்கள், தொடையை மறைத்துத்தான் தொழ வேண்டும் என்று கூறுவோர்களுக்கு மத்தியில் ஜட்டியை மட்டும் அணிந்து கொண்டு தொழுது காட்டி ஒரு முன் மாதிரியை ஏற்படுத்த ஒருவர்கூட முன்வராதது ஏன்? குறைந்த பட்சம் தங்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பள்ளிவாசல்களிலாவது இந்த ஜட்டி சட்டத்தை அமுல்படுத்தி இருக்கலாமே. ஒரு வேளை ஊருக்குத்தான் உபதேசமோ?


மர்மம் என்ன?

அத்தஹிய்யாத் இருப்பில் விரல் அசைக்க வேண்டும் என்ற சட்டத்தையும், தொழுகையில் நெஞ்சில்தான் கை கட்ட வேண்டும் என்ற சட்டத்தையும் இன்னும் இது போன்ற அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்த பல்வேறு சட்டங்களையும் கையில் எடுத்துக் கொண்டு, ஏதோ தாங்கள்தான் ஆய்வு செய்து இதை முதன் முதலில் கண்டு பிடித்து விட்டது போன்று பேசி வந்த இவர்கள் ஏற்கனவே, இக்கருத்தைக் கூறியுள்ள மாபெரும் இமாம்களில் ஒருவர் பெயரைக் கூட அக்கால கட்டங்களில் நினைவுகூரவில்லை.

ஆனால், டவுசர் சட்டத்தை மட்டும் இமாம்களுக்குப் பின் ஒளிந்து கொண்டு கூற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதே! இதன் மர்மம் என்ன? இமாம்களை, மார்க்க மேதைகளை காலமெல்லாம் விமர்சனம் செய்து, அவர்களை ஒன்றும் தெரியாதவர்கள் போல சித்தரித்து, தங்களை கண் மூடித்தனமாகப் பின் பற்றும் ஒரு கூட்டத்தை நம்பச் செய்து விட்ட இவர்கள், ஆதாரத்தின் அடிப்படையில் இமாம்களின் கருத்துதான் சரி என அவர்களுக்காகப் பரிந்து பேசுகின்ற நிர்பந்தம் தற்போது மட்டும் ஏற்பட்டுள்ளதே ஏன்? இதன் பின்னணிதான் என்ன? இவர்கள் கடைபிடித்து(!) வந்த கொள்கையில் தடுமாற்றம் ஏற்பட்டு வந்த வழியே (மத்ஹபை நோக்கி) திரும்பிக் கொண்டிருக்கிறார்களா?

இமாம்கள் கூறுவதென்ன?

ஓர் ஆண் கட்டாயம் மறைக்க வேண்டிய அளவினை கூறுவதில் மூன்று விதமான கருத்துக்கள் மார்க்க அறிஞர்களிடையே நிலவுகின்றன.

1. "தொப்புள் முதல் முட்டுக்கால்வரை" என இமாம் அபூ ஹனீஃபா அவர்கள் கூறுகிறார்கள். (இமாம் ஷாஃபி அவர்களும் இக்கருத்தைக் கூறியதாக மேற்கண்ட 'ஏகத்துவம்' இதழில் இட்டுக் கட்டியுள்ளார்கள். இமாம் ஷாஃபி அவர்கள் கூறியதை நூலின் பெயர், அரபி மூலத்துடன் வெளியிட முடியுமா?)

 

2. "தொப்புளுக்கும், முட்டுக்காலுக்கும் இடைப்பட்ட பகுதியை (தொடை முழுவதையும்) மறைக்க வேண்டும். தொப்புள் மற்றும் முட்டுக்கால் அதில் அடங்காது" என இமாம் ஷாஃபி, இமாம் அஹ்மத் பின் ஹன்பல், இமாம் மாலிக் ஆகியோர் இக்கருத்தினைக் கூறியுள்ளனர்.


قال الشافعي : العورة من الرجل ما دون سرته إلي ركبتيه وليس سرته وركبتاه من عورته.(الأم :181/1ج)


"ஆணின் வெட்கத்தலம் தொப்புளுக்கு கீழிருந்து இரு முட்டுக்கால்கள் வரை உள்ள பகுதியாகும். தொப்புளும், முட்டுக்காலும் மறைக்க வேண்டிய பகுதிகளல்ல." அல் உம். 1/181


فالكلام في حد العورة والصالح في المذهب أنها من الرجل ما بين السرة والركبة. نصَّ عليه أحمد في رواية جماعة, وهو قول مالك والشافعي. كتاب المغني واللفظ له, الكافي, بداية المجتهد, لباس الرجل, إختلاف الأئمة العماء المسائل للإمام احمد برواية إبنه عبد الله )
 

"ஓர் ஆண் மறைக்க வேண்டிய அளவு தொப்புளுக்கும், முட்டுக்காலுக்கும் இடைப்பட்ட பகுதியாகும் என்பதே (இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்களது) மத்ஹபின் சரியான கருத்தாகும். இமாம் அஹ்மத் இவ்வாறு கூறியதாக பலரும் அறிவித்துள்ளனர். இதுவே இமாம்களான மாலிக், ஷாஃபி ஆகியோரின் கருத்துமாகும்."


(நூற்கள்: அல் முக்னி 2/284, அல் காஃபி 1/211, பிதாயத்துல் முஜ்தஹித் 1/122, லிபாசுர் ரஜ்லி2/821, இக்திலாஃபு அயிம்மத்தில் உலமா 1/100, மஸாயில் இமாம் அஹ்மத் 1/210.)


وهي (العورة) من رجل ... بين سرة وركبة . شرح الزرقاني علي مختصر الخليل.


'தொப்புளுக்கும், முட்டுக்காலுக்கும் இடைப்பட்ட பகுதி அனைத்தும் ஓர் ஆணின் வெட்கத்தலமாகும்.'
நூல்: ஷரஹுர் ஜர்கானி 1/310 (இமாம் மாலிக் அவர்களது மத்ஹபைப் பற்றி விவரிக்கும் பிரபலமான நூல்.)


(இன்னும் ஏராளமான நூற்களிலும் இக்கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது. விரிவஞ்சி தவிர்க்கிறோம்.)

4. "ஆண் உறுப்பு மற்றும் பின் துவாரம் மட்டுமே" என இப்னு ஹஸ்ம், அபூ சுலைமான் என்ற தாவூதுல் ளாஹிரி ஆகிய ளாஹிரிய்யாப் பிரிவினரும், இமாம் அஹ்மத் பின் ஹன்பல், இமாம் மாலிக் (இவ்விருவரின் ஓர் அறிவிப்பின் படி) ஆகியோரும் இக்கருத்தைக் கொண்டுள்ளனர்.
(இமாம் அஹ்மத், இமாம் மாலிக் ஆகியோர் இதற்கு மாற்றமான கருத்தையும் கூறியுள்ளனர். அதுவே சரியானதும் அவர்களது மத்ஹபில் ஏற்புடைய கருத்துமாகும் என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.)

இக்கருத்தின் படி, தொடையின் ஒரு சிறு பகுதியைக்கூட மறைக்க வேண்டியதில்லை என்பது மட்டுமல்ல, இரு புட்டங்களும் கூட மறைக்கப்பட வேண்டிய பகுதிகளல்ல என்பதும் தெளிவாகிறது.


والعورة المفترض سترها علي الناظر وفي الصلاة من الرجل: الذكر وحلقة الدبر فقط. (المحلى 126ص/ج3)


"(பிறரின்) பார்வையிலிருந்தும், தொழுகையிலும் ஓர் ஆண் மறைக்க வேண்டிய பகுதி ஆண் குறியும், பின் துவாரமும் மட்டுமே ஆகும்" (அல் முஹல்லா பாகம் 3, பக்கம்: 126)

(புட்டங்கள் மறைக்கப்பட வேண்டியதில்லை என்பதை இதே நூலில் 3வது பாகம் 128, 129 பக்கத்தில் இப்னு ஹஸ்ம் குறிப்பிடுகிறார்.)


العورة المغلظة وهي من الرجل السوءتان فهو من المقدم الذكر والأنثيان ومن المؤخر ما بين إليتين (الفواكه الدواني ص201/ج1)


"ஆண்கள் மறைக்க வேண்டிய கடினமான வெட்கத்தலம் முன்புறமாக ஆண் குறியும், விரையும், பின்புறமாக இரு புட்டங்களுக்கு இடையில் உள்ள பின் துவாரமும் ஆகும்."
நூல்: அல் ஃபவாகிஹித் தவானி 1/201.


وعن احمد رواية اخرى انها الفرجان قال مهنّا: سألت أحمد ما العورة قال الفرج والدبر.... (المغني 284ص/2ج)


முஹன்னா கூறுகிறார்: "(ஆண்களின்) வெட்கத்தலம் எது?" என்று இமாம் அஹ்மத் அவர்களிடம் நான் கேட்டேன். அப்போது, "ஆண் குறியும், பின் துவாரமும் ஆகும்" என்று கூறினார்கள். நூல்: முக்னி: 2/284.


இவ்விரு இமாம்களின் இக்கருத்து இவ்வாறு சில நூற்களில் விவரிக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்கான சரியான ஆதாரம் இல்லாத காரணத்தால் இக்கருத்து பின்னுக்குத் தள்ளப்பட்டு, அவ்விரு இமாம்களின் மற்றொரு கருத்தான தொப்புளுக்கு கீழ் முட்டுக் காலுக்கு மேல் உள்ள பகுதி (இரு தொடைகள் உட்பட) அனைத்தும் வெட்கத்தலமாகும் என்பதே அவர்களது மத்ஹபின் சரியான ஏற்புடைய கருத்தாகும்.

நவீன இமாமின்??!! புதிய கருத்து:


ஓர் ஆண் மறைக்க வேண்டிய பகுதியினை வரையறை செய்வதில் அறிஞர்களிடையே ஏற்பட்டுள்ள மூன்று விதமான கருத்து வேறுபாட்டினை மேலே விவரித்துள்ளேன். அவற்றில் இன்றைய நவீன இமாம்? கூறியது போன்று (ஆண் குறி, இரு புட்டங்கள், தொடையின் சிறு பகுதி) அறவே இடம் பெறவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிய வரும்.

குர்ஆனிலும், நபி மொழிகளிலும் கூறப்படாத, 1425 வருட இஸ்லாமிய வரலாற்றில் எந்த அறிஞருக்கும் உதிக்காத ஒரு புதிய கருத்தை ஜகாத் விவகாரத்தில் கூறி அதனை சர்ச்சைக்குள்ளாக்கியது போன்றே இந்த ஆடை விவகாரத்திலும் எந்த அறிஞரும் கூறாத ஒரு புதிய தகவலைக் கூறி சர்ச்சையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இதில் கொடுமை என்னவென்றால், ஜகாத் விஷயத்தில் இதைத் தங்களின் சொந்தக் கருத்தாகக் கூறிக் கொண்டவர்கள், ஆடை விவகாரத்தில் மட்டும் இமாம் அஹ்மத், இமாம் மாலிக் ளாஹிரிய்யாப் பிரிவினர் ஆகியோர் கூறியுள்ளதாக அவர்கள் மீது பழியைப் போட்டு விட்டு, இவர்கள் தப்பிக்க முயலுகின்றனர். தங்களது கூற்றில் இவர்கள் உண்மையாளர்களாக இருப்பின், இமாம்கள் இவ்வாறு கூறியது எந்த நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அரபி மூலத்துடன் வெளியிடத் தயாரா? ஏனெனில், தமிழில் மட்டும் என்றால் மொழிபெயர்ப்பதில் மோசடி செய்து விடுவார்களோ என்ற அச்சமே.

ஓர் ஆண் மறைக்க வேண்டிய பகுதி என இவர்கள் கூறிய அளவு இவர்களது சொந்தக் கற்பனைதான். இவர்கள் தங்களின் கருத்தினை குர்ஆன், மற்றும் நபி மொழிகளின் அடிப்படையில் தந்திருப்பார்களேயானால் தயக்கமின்றி அதனை ஏற்றிருப்போம். ஆனால், இவர்கள் எடுத்துக் காட்டிய சான்றுகளில் சில பலவீனமானவை, வேறு சில இவர்களின் வாதத்துடன் தொடர்பற்றவை, மற்றவை இவர்களாலேயே புறக்கணிக்கப்பட்டவை. எனவே, இவர்கள் எடுத்துக் காட்டிய சான்றுகளின்(?) தரம் என்ன? இவர்களின் கருத்தினை நிலைநாட்ட அவை துணை புரிகின்றனவா? என்பதை ஆய்வு செய்வோம்.

  • அன்னை ஆயிஷா (ரலி),

  • அனஸ் (ரலி),

  • அபூ மூஸா அல் அஷ்அரி (ரலி),

  • அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),

  • அபூ தர்தா (ரலி),

  • அபூ ஹுரைரா (ரலி)

ஆகிய ஆறு நபித்தோழர்கள் அறிவிக்கும் நபி மொழிகளை தங்களின் கூற்றுக்கு ஆதாரமாகக் கூறுகின்றனர். அதனை ஒவ்வொன்றாக ஆய்வு செய்வோம்.

மொட்டைத் தலைக்கும், முளங்காலுக்கும் முடிச்சுப் போடும் முயற்சி.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் நபி மொழி.

 

2401 حدثنا يحيى بن يحيى ويحيى بن أيوب وقتيبة وابن حجر قال يحيى بن يحيى أخبرنا وقال الآخرون حدثنا إسماعيل يعنون بن جعفر عن محمد بن أبي حرملة عن عطاء وسليمان ابني يسار وأبي سلمة بن عبد الرحمن أن عائشة قالت كان رسول الله - مضطجعا في بيتي كاشفا عن فخذيه أو ساقيه فاستأذن أبو بكر فأذن له وهو على تلك الحال فتحدث ثم استأذن عمر فأذن له وهو كذلك فتحدث ثم استأذن عثمان فجلس رسول الله - وسوى ثيابه قال محمد ولا أقول ذلك في يوم واحد فدخل فتحدث فلما خرج قالت عائشة دخل أبو بكر فلم تهتش له ولم تباله ثم دخل عمر فلم تهتش له ولم تباله ثم دخل عثمان فجلست وسويت ثيابك فقال ألا أستحي من رجل تستحي منه الملائكة رواه مسلم.


"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் வீட்டில் தொடைகளை அல்லது கெண்டைக் கால்களைத் திறந்த நிலையில் படுத்திருந்தார்கள். உள்ளே வருவதற்கு அபூபக்கர் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். அந்நிலையில் படுத்துக் கொண்டே அவருக்கு அனுமதியளித்தார்கள். பின்னர் உமர் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். அப்போதும் அந்நிலையில் இருந்தே அனுமதியளித்தார்கள். பின்னர் உஸ்மான் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்து, அமர்ந்து தமது ஆடைகளைச் சரி செய்து கொண்டு அவருக்கு அனுமதியளித்தார்கள். உஸ்மான் (ரலி) உள்ளே வந்து பேசி விட்டு புறப்பட்டு விட்டார். இதைக் கண்ட நான், "அபூபக்கர் (ரலி) வந்தார். அவருக்காக உங்கள் முகம் மலரவில்லை. அவரைப் பொருட்படுத்தவில்லை. பின்னர் உமர் (ரலி) வந்தார். அவருக்காகவும் உங்கள் முகம் மலரவுமில்லை. பொருட்படுத்தவும் இல்லை. பின்னர் உஸ்மான் (ரலி) வந்த போது அமர்ந்து ஆடையைச் சரி செய்தது ஏன்?" என்று வினவினேன். அதற்கு நபி(ஸல்)அவர்கள், "யாரைப் பார்த்து வானவர்கள் வெட்கப்படுவார்களோ அவரைப் பார்த்து நான் வெட்கப்படக் கூடாதா?" என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், நூல்: முஸ்லிம்.

இந்நபி மொழியில், 'தொடைகளை அல்லது கெண்டைக்கால்களை' என்று சந்தேகமான வார்த்தைகள் பயன் படுத்தப்பட்டிருந்தாலும், வேறு சில அறிவிப்புகளில் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் "தொடைகளைத் திறந்த நிலையில்" என்று கூறப்பட்டுள்ளது. (பார்க்க: அஹ்மத் -23194)(ஏகத்துவம்: ஜுலை -2005)


சான்றாய்வு -1


தொழுகையில் தொடையின் பெரும் பகுதி வெளியே தெரியும் நிலையில் ஒருவர் தொழுதால் அவரை குறை கூற முடியாது என்று வாதிப்போர் தங்களின் கருத்தை நிலை நாட்ட அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட இந்நபி மொழியை சான்றாக முன் வைத்துள்ளார்கள். இந்நிகழ்வுக்கும், தொழுகைக்கும் எள் முனையளவும் தொடர்பில்லை என்பதை படிக்காத சாதாரண பாமரனும்கூட எளிதாக அறிவார்கள்.

தொழுகைக்கு வெளியே தொடைகள் தெரியலாமா?

சரி தொழுகைக்கு வெளியில், அல்லது மற்ற பொது இடங்களிலாவது தொடையின் பெரும் பகுதி திறந்திருந்தால் குற்றமில்லை என்று கூறுவதற்காவது இதனைச் சான்றாக எடுத்துக் கொள்ள முடியுமா? என்றால் அதற்கும் இந்நபி மொழி சான்றாக அமையாது. ஏனெனில், ஆதாரப்பூர்வமான இரண்டு அறிவிப்பாளர்கள் தொடர்களில் முஸ்லிம் கிரந்தத்தில் இந்நபி மொழி பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலாவது அறிவிப்பாளர் தொடரில் இந்நபி மொழியை அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து

1. அதா பின் யஸார்,
2. சுலைமான் பின் யஸார்,
3. அபூ சலமா பின் அப்துர் ரஹ்மான்

ஆகிய மூவரும் அறிவிக்கின்றனர். இந்த அறிவிப்பு ஆதாரப்பூர்வமானதுதான் என்றாலும், தொடைகள் அல்லது கெண்டைக்கால்கள் திறந்த நிலையில் என்ற சந்தேகத்திற்கு இடமான வார்த்தைகளால் இத்தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடைகள்தான் திறந்திருந்தன என்பதை இதன் மூலம் உறுதி செய்ய முடியாது. ஆகவே, தொடையின் பெரும் பகுதி திறந்திருந்தால் குற்றமில்லை என்ற அவர்களின் கருத்துக்கு இந்நபி மொழி சான்றாக அமையாது.

இரண்டாவது அறிவிப்பின் வரிசைத் தொடர்:

இந்நிகழ்வு உஸ்மான் (ரலி), அன்னை ஆயிஷா (ரலி) ஆகியோர் வழியாகவும் இதே முஸ்லிம் கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டு, அதன் அறிவிப்பாளர் வரிசை கீழ் கண்டவாறு அமைந்துள்ளது.

 

அறிவிப்பாளர்களின் வரைப்படத்தை பார்க்க இங்கு சொடுக்கவும். (PDF format)

 

இந்நிகழ்வினை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் அனைவரை விடவும் அபரீதமான நினைவாற்றல் கொண்ட (நான்காவதாக இடம் பெற்றிருக்கும்) இப்னு ஷிஹாப் ஜுஹ்ரி அவர்கள் அறிவிக்கும் ஆதாரப்பூர்வமான இத்தொடரில் தொடையை திறந்திருந்தது என்பது பற்றிய எந்த ஒரு குறிப்பும் இடம் பெறவில்லை. (விளக்கத்திற்காக இந்த நபி மொழியின் அரபி மூலம் கீழே தரப்பட்டுள்ளது.) எனவே, இத்தொடரில் அறிவிக்கப்பட்ட இந்நபி மொழியையும் அவர்கள் சான்றாகக் கருத இயலாது. இக்கருத்தினையே இமாம் பைஹகி அவர்களும் தமது நூலில் 2-ம் பாகம் 297வது பக்கத்தில் உறுதி செய்கிறார்.


(حدثنا عبد الملك بن شعيب بن الليث بن سعد حدثني أبي عن جدي حدثني عقيل بن خالد عن بن شهاب عن يحيى بن سعيد بن العاص أن سعيد بن العاص أخبره أن عائشة زوج النبي صلى الله عليه وسلم وعثمان حدثاه أن أبا بكر استأذن على رسول الله e وهو مضطجع على فراشه لابس مرط عائشة فأذن لأبي بكر وهو كذلك فقضى إليه حاجته ثم انصرف ثم استأذن عمر فأذن له وهو على تلك الحال فقضى إليه حاجته ثم انصرف قال عثمان ثم استأذنت عليه فجلس وقال لعائشة اجمعي عليك ثيابك فقضيت إليه حاجتي ثم انصرفت فقالت عائشة يا رسول الله مالي لم أرك فزعت لأبي بكر وعمر رضي الله عنهما كما فزعت لعثمان قال رسول الله e إن عثمان رجل حيي وإني خشيت إن أذنت له على تلك الحال أن لا يبلغ إلى في حاجته رواه صحيح مسلم ج4/ص1866)


எனவே, முஸ்லிம் நூலில் இரு அறிவிப்பாளர் தொடர்களின் மூலம் பதிவாகியுள்ள ஆதாரப்பூர்வமான இந்நபி மொழியினை, அவர்கள் தங்களின் கருத்துக்குச் சான்றாக அறவே கருத முடியாது.

தொடைகளைத் திறந்த நிலையில்:
 

"வேறு சில அறிவிப்புகளில் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் 'தொடைகளைத் திறந்த நிலையில்' எனக் கூறப்பட்டுள்ளது" (பக்கம்: 25, ஏகத்துவம் - ஜுலை-2005)

என்று எழுதி தங்களின் கருத்தை நிலைநாட்ட முயன்றுள்ளார்கள். எனவே, இவர்கள் எடுத்துக் காட்டிய இந்த அறிவிப்பையும் ஆய்வுக்கு உட்படுத்துவோம்.

'தொடைகளைத் திறந்த நிலையில்' என்ற இச்செய்தி அஹ்மத் மற்றும் முஸ்னத் இஸ்ஹாக் பின் ராஹவைஹீ ஆகிய இரு நூற்களில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து தல்ஹாவின் மகள் ஆயிஷா அவர்கள் அறிவிப்பதாக பதிவாகி உள்ளது. நினைவில் நிறுத்திக் கொள்ளும் பொருட்டு இரு நூற்களிலும் இடம் பெற்ற இந்நபி மொழியின் அறிவிப்பாளர் தொடர் மட்டும் கீழே தரப்பட்டுள்ளது.

 

 [24375] حدثنا عبد الله حدثني أبي ثنا مروان قال انا عبيد الله بن سيارقال سمعت عائشة بنت طلحة تذكر عن عائشة أم المؤمنين ان رسول الله -  كان جالسا كاشفا عن فخذه ...... رواه أحمد

حدثنا مروان بن معاوية الفزاري نا عبد الله بن سيار مولى بني طلحة بن عبيد الله القرشيين قال سمعت عائشة بن طلحة تذكر ... رواه إسحاق بن راهويه


தல்ஹாவின் மகள் ஆயிஷாவிடமிருந்து இந்நபி மொழியைக் கேட்டவர் பெயர் என்ன?

தல்ஹாவின் மகள் ஆயிஷா அவர்களிடமிருந்து அறிவிப்பவராக அஹ்மத் என்ற நூலில் உபைதுல்லாஹ் என்றும், முஸ்னத் இஸ்ஹாக் என்ற நூலில் அப்துல்லாஹ் என்றும் இரு வேறு நபர்களின் பெயராக பதிவாகி யுள்ளது.

தல்ஹாவின் மகள் ஆயிஷாவிடமிருந்து இந்நபி மொழியை அறிவித்தவர் உபைதுல்லாஹ் என்பவரா? அல்லது அப்துல்லாஹ் என்பவரா? என்ற குழப்பம் நிலவுவதால் ஆரம்பத்திலேயே இது பலவீனமானது என்ற முடிவுக்கு எளிதாக வந்து விடலாம். மேலும், "இவ்விருவரும் நிலை அறியப்படாதவர்கள் ஆவார்கள்" என ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர். இந்த அடிப்படையிலும் இந்நபி மொழி மேலும் பலவீனமடைகிறது என்பதால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தொடைகளைத் திறந்த நிலையில் இருந்தார்கள் என்று சந்தேகத்திற்கு இடமின்றி வந்திருக்கும் இச்செய்தி பலவீனமானதாகும். எனவே, தொழுகையிலும், தொழுகைக்கு வெளியிலும் பெரும்பகுதி தொடைகள் திறந்திருந்தால் குற்றமில்லை என்ற அவர்களின் கருத்தினை பலவீனமான இந்நபி மொழியின் மூலம் நிலை நாட்டமுடியாது. இந்த அறிவிப்பு பலவீனம் என்பதை சற்று விரிவாக அறிந்து கொள்வோம்.

உபைதுல்லாஹ் பற்றிய விமர்சனம்:

தல்ஹாவின் மகள் ஆயிஷாவிடம் கேட்டவர் யார் என்பதில் குழப்பம் நிலவுவதால், ஒரு வாதத்திற்காக இதனைக் கேட்டவர் பெயர் உபைதுல்லாஹ்தான் என்று ஏற்றுக்கொண்டாலும் கூட அவரது நம்பகத் தன்மையைப் பற்றிய ஹதீஸ் கலை அறிஞர்களது விமர்சனம் இதோ!.


عبيد الله بن سيار روى عن عائشة رضي الله عنها وعنه مروان, قال الحسيني : مجهول
قلت: ما رأبته في مسند عائشة من مسند أحمد فلعله عبيد الله بن شماس الآتي بعد وهو أيضاً مجهول. (تعجيل المنفعة لإبن حجر العسقلاني.)
 

"உபைதுல்லாஹ் பின் ஸய்யார் என்பவர் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார். இவரிடமிருந்து மர்வான் என்பவர் அறிவித்துள்ளார். "உபைதுல்லாஹ் பின் ஸய்யார் (யார் என) அறியப்படாதவர் ஆவார்" என்று ஹுசைனி கூறியுள்ளார். அஹ்மத் என்ற நூலில் இடம் பெற்றுள்ள அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் இவர் இடம் பெற்றிருப்பதாக நான் பார்க்கவில்லை. ஒருவேளை அவர் உபைதுல்லாஹ் பின் ஷம்மாஸ் என்பவராகக்கூட இருக்கலாம். ஆனால், அவரும் (நிலை) அறியப்படாதவர் ஆவார்" என இப்னு ஹஜர் அவர்கள் தஃஜீலுல் மன்ஃபஆ என்ற நூலில் (பக்கம்: 304) பதிவு செய்துள்ளார்கள். சமீப காலத்தில் ஹதீஸ் கலையில் தலை சிறந்து விளங்கிய அர்னாவூத் என்பவரும் அஹ்மத் என்ற நூலுக்கு தான் எழுதிய விரிவுரையில் இதனை உறுதி செய்துள்ளார்.


عبيد الله بن سيار روى عن عائشة وعنه مروان, وهولا يعرف. (ذيل الكاشف للحافظ زين الدين العراقي ص/187.


"உபைதுல்லாஹ் என்பவர் ஆயிஷாவிடமிருந்து அறிவிக்கிறார். இவரிடமிருந்து மர்வான் என்பர் அறிவிக்கிறார். இந்த உபைதுல்லாஹ் என்பார் (யார் என) அறியப்படாதவர் ஆவர்" என்று இப்னு ஹஜர் அவர்களின் பிரதான ஆசிரியர் ஹாஃபிழ் ஜெய்னுத்தீன் அல் இராகி அவர்கள் ஃதைலுல் காஷிஃப் என்ற தனது நூலில் (பக்கம்-187) குறிப்பிடுகிறார்.

அப்துல்லாஹ் பற்றிய விமர்சனம்:


ஒருவேளை அப்துல்லாஹ்தான் இந்நபி மொழியை அறிவித்திருந்தாலும் கூட, அதனையும் அவர்கள் சான்றாகக் கருத முடியாது. ஏனெனில் அவரது நம்பகத் தன்மை குறித்து இக்கலை அறிஞர்களில் பலர் குறை கூறியுள்ளார்கள்.


عبد الله بن سيار قيل يسار وقد قيل سنان مولى عائشة بنت طلحة, يروى عن عائشة بنت طلحة روى عنه مروان بن معاوية الفزارى والقاسم بن مالك المزني (كتاب الثقات لإبن حبان)


தல்ஹாவின் மகள் ஆயிஷாவின் அடிமையான அப்துல்லாஹ் பின் ஸய்யார் என்பவர் ஆயிஷாவிடமிருந்து அறிவிக்கிறார். இவரிடமிருந்து மர்வான் மற்றும் காசிம் ஆகிய இருவரும் அறிவித்துள்ளனர். இவர் எஸாரின் மகன் அப்துல்லாஹ் என்றும், சினானின் மகன் அப்துல்லாஹ் என்றும் கூறப்பட்டுள்ளது. (நூல்: அஃத்திகாத்.)


இப்னு ஹிப்பான் அவர்களின் இந்த விமர்சனத்திலிருந்து ஸய்யாரின் மகன் அப்துல்லாஹ்வா? எஸாரின் மகன் அப்துல்லாஹ்வா? சினானின் மகன் அப்துல்லாஹ்வா? என்பதை உறுதி செய்ய முடியவில்லை. மேலும், "அப்துல்லாஹ் பின் ஸய்யார் நம்பகமானவர், உறுதியானவர், நேர்த்தியான அறிவிப்பாளர்' போன்ற வார்த்தைகளால் விமர்சிக்கப்படவில்லை. எனவே, இப்னு ஹிப்பான் எழுதிய "நம்பகமானவர்கள்" என்ற நூலில் இடம் பெற்றிருப்பது மட்டுமே அவரது நம்பகத்தன்மைக்குப் போதுமான சான்றாக அமையாது.

மேலும், இந்த அப்துல்லாஹ் குறித்து அல் ஜர்ஹ் வத் தஃதீல் என்ற நூலிலும், இமாம் புஹாரி அவர்களின் தாரிக்குல் கபீர் என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்றாலும், இவர் நம்பகமானவர் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான எந்த ஒரு குறிப்பும் அந்நூற்களில் இடம் பெறவில்லை.

எனவே, அப்துல்லாஹ் பின் ஸய்யார் என்பவர் யார்? அவரது நம்பகத்தன்மை எத்தகையது? என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை என்பதனால் இவர் மூலம் அறிவிக்கப்படும் தொடைகள் சம்பந்தப் பட்ட மேற்கண்ட நபி மொழி பலவீனமடைகிறது.

மர்வான் பின் முஆவியா பற்றிய விமர்சனம்:

உபைதுல்லாஹ் அல்லது அப்துல்லாஹ் என்பவரிடமிருந்து இந்நபி மொழியை மர்வான் பின் முஆவியா அறிவிப்பதாகவே அஹ்மத், முஸ்னத் இஸ்ஹாக் ஆகிய இரண்டு நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த மர்வான் பற்றிய இக்கலை அறிஞர்களின் விமர்சனத்தை அறிந்து கொள்வோம்.
'மர்வான் நம்பகமானவர்தான்' என சான்றளித்த அறிஞர்களே சில குறைகளையும் சுட்டிக்காட்டியுள்ளனர். இக்குறைகள் இந்நபி மொழியை மேலும் பலவீனப்படுத்துவதாக அமைந்துள்ளன.

அப்பாஸ் அத்தவ்ரி என்பவர்:

"அலி பின் அபில் வலீத் மூலம் மர்வான் பின் முஆவிய அறிவிக்கும் ஹதீஸ் குறித்து யஹ்யா பின் மயீன் அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர், (அவர் அலி பின் வலீத் அல்லர். மாறாக) அலி பின் குராப் என்பவராவார். பெயர்களை மாற்றிக் கூறி, தந்திரம் செய்வோரில் இவரை விட மோசமான வேறு யாரையும் நான் பார்க்கவில்லை" என்று கூறினார்.

அலி பின் அல் மதீனிய்யீ, அல் இஜ்லி:

நேர்மை அறியப்பட்டவர்களின் மூலம் இவர் அறிவித்தால் அது நம்பகமானதாகும். நேர்மை அறியப்படாதவர்கள் மூலம் அறிவித்தால் அது பலவீனமானதாகும்.

நுமைர்:

தெருக்களில் திரிவோரையெல்லாம் (நிலை அறியப்படாதவர்களை) தன் ஆசிரியர்களாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்.

அபூ ஹாதிம் அர் ராஜி:

இவர் உண்மையாளர்தான். எனினும் அவர் உண்மை பயனளிக்காது. காரணம் (நேர்மை) அறியப்படாத அறிவிப்பாளர்களின் பெயரால் அதிகமாக (ஹதீஸ்களை) அறிவிக்கிறார்.

அபூ தாவூத்:

 

(அறிவிப்பாளர்களின்) பெயர்களை மாற்றிக் கொண்டிருப்பார்.

இப்னு மயீன்:


(அறிவிப்பாளர்களின்) பெயர்களை மாற்றி மக்களை திகைக்கச் செய்வார். ஹகம் பின் அபீ காலித் என்ற பெயரில் எங்களுக்கு (ஒரு ஹதீஸை) அறிவித்தார். உண்மையில் அவர் ஹகம் பின் ளஹீர் என்பவர் ஆவர்.

இவ்வாறு அறிவிப்பாளர்களின் பெயர்களை மாற்றி அறிவிக்கும் பழக்கமுடையவர் என்பதனால்தான் அப்துல்லாஹ் பின் ஸய்யாரா?, அப்துல்லாஹ் பின் எஸாரா? அல்லது அப்துல்லாஹ் பின் சினானா? என்பதை அறுதியிட்டுக் கூற இப்னு ஹிப்பான் அவர்களால் முடியாமல் போனது.

(பார்க்க: தஹ்தீபுத் தஹ்தீப் - 6/226, 227, தஹ்தீபுல் கமால் -7/570, அல் ஜர்ஹ் வத் தஃதீல் -8/311, மிஜானுல் இஃதிதால் -4 86,87.) தஹ்தீபுத் தஹ்தீப் என்ற நூலில் இடம் பெற்ற அரபி மூலத்தை கூடுதல் விளக்கத்திற்காக கீழே இணைத்துள்ளேன்.


(قال عباس الدوري: سألت يحيى بن معين عن حديث مروان بن معوية عن علي بن أبي الوليد قال هذا علي بن غراب والله ما رأيت أحيل للتدليس منه.
وقال عبد الله بن علي بن المديني عن أبيه: ثقة فيما يرويه عن المعروفين وضعفه فيما يرويه عن المجهولين.
وقال علي بن الحسين بن الجنيد عن نمير: كان يلتقط الشيوخ من السكك.
وقال العجلي: ثقة, ثبت ما حدث عن المعروفين فصحيح وما حدث عن المجهلين ففيه ما فيه وليس بشيء.
قال أبو حاتم: صدوق لا يدفع عن صدقه , وتكثر روايته عن الشيوخ المجهلين.
قال الآجري عن أبي داود: كان يقلب الأسماء.
قال إبن أبي خيثمة عن إبن معين: كان مروان يغير الأسماء يعمى علي الناس, كان يحدثنا عن الحكم بن أبي خالد, وإنما هو حكم بن ظهير. تهذيب التهذيب 227,226 /ج6)


நேர்மையானவரா? நம்பகமானவரா? பொய்யுரைக்காதவரா? நல்ல நினைவாற்றல் உள்ளவரா? போன்ற நிலைகள் அறியப்படாதவரான உபைதுல்லாஹ் அல்லது அப்துல்லாஹ் என்பவரின் மூலம், பல அறிஞர்களால் குறை கூறப்பட்ட மர்வான் பின் முஆவியா அறிவிக்கும் இந்த நபி மொழியைத்தான் 'தொடைகளின் பெரும் பகுதியைத் திறந்த நிலையில் அதாவது அரைக்கால் டவுசர் அணிந்து கொண்டு ஒருவர் தொழுதால் அவரைக் குற்றம் கூற முடியாது' என்ற தங்களின் கூற்றுக்கு ஆதாரமாக முன் வைத்துள்ளார்கள். இந்த அறிவிப்பை பலவீனப்படுத்தும் மேற்கண்ட குறைகளை மறந்து விட்டார்களா? அல்லது வழக்கம் போல் மறைத்து விட்டார்களா? என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம். மார்க்கச் சட்டங்களுக்கு தமது மன இச்சைப்படி விளக்கங்கள் கொடுப்பது, இரு உலக வாழ்விலும் நன்மையைத் தராது என்பதை இவர்களுக்கு அறிவுறுத்திக் கொள்கிறேன்.

ஒரு வாதத்திற்காக இந்த நபி மொழி ஸஹீஹானதுதான் என்று ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் தங்களின் கருத்தை இதன் மூலம் நிலை நாட்ட முடியாது. ஏனெனில், 'தொடைகளைத் திறந்த நிலையில்' என்ற வாசகத்திற்கு இரண்டு விதமாகப் பொருள் கொள்ள முடியும்.

1. தொடைகள் முழுவதையும் திறந்த நிலையில்.
2. தொடைகளின் ஒரு பகுதி திறந்த நிலையில்.

'தொடைகள் முழுவதையும் திறந்த நிலையில்' என்று அர்த்தம் செய்தால், தொடையின் சிறிய பகுதியை மறைக்க வேண்டும் என்ற அவர்களின் கருத்து தவறாகி விடும்.

'தொடைகளின் ஒரு பகுதி திறந்த நிலையில்' என்று அர்த்தம் செய்தால் அந்த ஒரு பகுதி என்பது சிறிய பகுதி, பெரும் பகுதி என அனைத்தையும் குறிக்கும் பொதுவான வார்த்தையாகும். 'பெரும் பகுதியைத் திறந்த நிலையில்' என்று முடிவு செய்வதாக இருந்தால் அதற்கான சரியான வேறு சான்றுகளை முன் வைக்க வேண்டும். எந்த சான்றுகளின் அடிப்படையில் இவர்கள் இந்த முடிவை எடுத்துக் கொண்டார்கள் என்பதை இவர்கள்தான் விளக்க வேண்டும்.

இது வரை நாம் எடுத்துக் காட்டிய சான்றுகளின் மூலம் பின் வரும் செய்தி உறுதி செய்யப்படுகிறது:

!] ஆதாரப்பூர்வமான இரண்டு அறிவிப்பாளர் தொடரின் மூலம் முஸ்லிம் கிரந்தத்தில் இடம் பெற்றுள்ள அன்னை ஆயிஷா(ரலி) அறிவித்த நபி மொழி ஸஹீஹானதுதான். எனினும், அதன் ஒரு தொடரில் தொடைகள் அல்லது கெண்டைக்கால்கள் என்ற சந்தேகத்திற்கிடமான வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. இன்னொரு தொடரில், தொடை பற்றிய எந்த ஒரு குறிப்பும் இல்லை. எனவே, முஸ்லிம் கிரந்தத்தில் இடம் பெற்ற இரண்டு அறிவிப்புகளையும் இவர்களின் கருத்துக்கு சான்றாகக் கருத முடியாது.

!] 'சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் 'தொடைகளைத் திறந்த நிலையில்' எனக் கூறப்பட்டுள்ள அறிவிப்பாளர் தொடரில், நிலை அறியப்படாதவர், குறை கூறப்பட்டவர் ஆகிய பலவீனமானவர்கள் இடம் பெற்றுள்ளார்கள். எனவே, அதனையும் ஆதாரமாக ஏற்க இயலாது. இதனை ஆதாரமாகக் கருதுவோர் குற்றம் சுமத்தப்பட்ட அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மையை நிரூபிக்காத வரை இந்நபி மொழியை ஸஹீஹானது என்று கூறிக் கொள்ள முடியாது.

 

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் நபி மொழி:


ثُمَّ حَسَرَ الإِزَارَ عَنْ فَخِذِهِ حَتَّى إِنِّى أَنْظُرُ إِلَى بَيَاضِ فَخِذِ نَبِىِّ اللَّهِ - ....... رواه البخاري


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தில் ஏறி வந்தனர். நானும், அபூதல்ஹாவும் ஓர் ஒட்டகத்தில் அவர்கள் அருகில் வந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்களின் ஆடை விலகி, தொடையின் வெண்மையை நான் பார்த்தேன் என்று அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்.
நூல்கள்: புகாரி 371, முஸ்லிம் 2561. (ஏகத்துவம், ஜுலை - 2005)


தொடையின் பெரும் பகுதி திறந்த நிலையில் தொழுதால் குற்றமில்லை என்று கூறுவோர் மேற்கண்ட நபி மொழியைச் சான்றாகக் கருதுகின்றனர். தொழுகைக்கும் இந்நிகழ்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை எல்.கே.ஜி. படிக்கும் மாணவர்கள்கூட எளிதாகப் புரிந்து கொள்வார்களே, இவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் போனதேன்?

இவர்கள் சான்றாக முன் வைத்த மற்ற எல்லா நபி மொழிகளையும் முழுமையாகப் பிரசுரம் செய்தவர்கள் (பார்க்க: ஏகத்துவம் ஜுலை-2005) அனஸ்(ரலி) அறிவிக்கும் இச்செய்தியை மட்டும் இருட்டடிப்பு செய்து வெளியிட வேண்டிய அவசியம் என்ன? தமிழில் தந்த அளவுக்கு கூட அரபி மூலத்தைப் பிரசுரம் செய்யாமல் போனதற்கு என்ன காரணம்? இருட்டடிப்புச் செய்த தங்களின் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற அச்சமோ? இதோ அந்த நபி மொழி!


باب غزوة خيبر 1365 وحدثني زهير بن حرب حدثنا إسماعيل يعني بن علية عن عبد العزيز بن صهيب عن أنس أن رسول الله - غزا خيبرقال فصلينا عندها صلاة الغداة بغلس فركب نبي الله - وركب أبو طلحة وأنا رديف أبي طلحة فأجرى نبي الله - في زقاق خيبر وإن ركبتي لتمس فخذ نبي الله - وانحسر الإزار عن فخذ نبي الله - وإني لأرى بياض فخذ نبي الله - فلما دخل القرية قال الله أكبر خربت خيبر إنا إذا نزلنا بساحة قوم فساء صباح المنذرين قالها ثلاث مرارا قال وقد خرج القوم إلى أعمالهم فقالوا محمد قال عبد العزيز وقال بعض أصحابنا والخميس قال وأصبناها عنوة. رواه مسلم واللفظ له والبخاري (371)


அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். அங்கே நாங்கள் ஸுப்ஹுத் தொழுகையை அதிகாலை வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். பின்னர் நபி (ஸல்) அவர்கள் தங்கள் வாகனத்தில் ஏறினார்கள். ஆபூ தல்ஹா(ரலி)வும் (தமது வாகனத்தில்) ஏறினார். அவர்களுக்குப் பின்னால் நான் ஏறி அமர்ந்தேன். நபி (ஸல்) அவர்கள் கைபர் கணவாயினுள் விரைந்தார்கள். என்னுடைய முட்டுக்கால் நபி(ஸல்) அவர்களுடைய தொடையைத் தொட்டது. அவர்களது ஆடை தொடையை விட்டும் விலகியது. அப்போது நபி (ஸல்) அவர்களது தொடையின் வெண்மையைப் பார்த்தேன்.

நபி (ஸல்) அவர்கள் ஊருக்குள் நுழைந்த போது "அல்லாஹ் பெரியவன்! கைபர் வீழ்ந்து விட்டது! நிச்சயமாக! நாம் ஒரு (எதிரிக்) கூட்டத்திடம் (பகைமையுடன்) இறங்கி விட்டால் எச்சரிக்கை செய்யப்பட்ட அம்மக்களின் காலை நேரம் மோசமானதாகிவிடும்" என மூன்று முறை கூறினார்கள். அவ்வூர் மக்கள் வேலைகளுக்காக வெளியே வந்த போது நபி (ஸல்) அவர்களைப் பார்த்ததும், 'முஹம்மதும், அவருடைய பட்டாளமும் வந்துள்ளனர்' என்று கூறினார்கள். நாங்கள் கைபரை பலவந்தமாகக் கைப்பற்றினோம்.
நூற்கள்: முஸ்லிம், புகாரி-371.

ஆடை விலகிய போது இறைத்தூதரின் தொடையைப் பார்த்தேன் என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இச்செய்தியில் வழக்கம் போல் சிலவற்றை இருட்டடிப்பு செய்து விட்டு, தங்களுக்குச் சாதகமானது என்று கருதியதை மட்டும் பிரசுரம் செய்துள்ளனர்.

அவசரக்கால நிகழ்வினைப் பொதுச் சட்டமாக்க முடியுமா?

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இச்செய்தியை வாசித்துப் பார்க்கும் யாரும் தொடையை எப்போதும் திறந்திருக்கலாம் என்று புரிந்து கொள்ள மாட்டார்கள். ஏனெனில், அவசர நிலையில் இறைத் தூதர் அறியாத விதத்தில் நடந்து விட்ட ஒரு நிகழ்வு. ஸுப்ஹுத் தொழுகையைக் கூட விரைவில் தொழுது விட்டு எதிரிகள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறிவிடுவதற்கு முன்பாகவே விரைந்து சென்று அவர்களை முற்றுகையிட வேண்டும் என்ற போர்ச் சிந்தனையில் விரைவாகப் போய் கொண்டிருந்த நேரம் அது. இரு ஒட்டகங்கள் தாராளமாகச் செல்ல முடியாத குறுகிய, நெருக்கமான கணவாய் வழியாகச் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கணவாய் சுவற்றில் பட்டு அவர்கள் ஆடை விலகியது என இமாம் பைஹகி அவர்கள் தனது சுனனுல் குப்ரா (2ஃ295) என்ற நூலில் விவரித்துள்ளார். ஆடை விலகி தொடை தெரிந்த இந்நிகழ்வு இறைத்தூதர் அறிந்த நிலையில் ஏற்பட்டதல்ல என்பது இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

அறியாத நிலையில் நடந்த ஒரு செயலுக்கும், கருதிச் செய்யும் ஒரு செயலுக்கும் உள்ள வேறுபாடுகள் புரியாமல் இவர்கள் பேசுகிறார்கள். அசாதாரணமான சூழ்நிலையில் நடந்த ஒரு நிகழ்வினை சாதரணமான சூழ்நிலைகளுக்கும் சட்டமாக்க முயற்சிப்பது அறிவீனமானது. நிர்பந்தமான நிலையில் செத்த பிராணிகளை கூட புசிக்கலாம் என்ற சட்டத்தில் பின் பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு செத்தப் பிராணிகளை புசிக்கலாம் என்று பேசிவருது எவ்வளவு பெரிய அறியாமையோ, அது போன்றுதான் போர்காலச் சிந்தனையில் இருந்த போது ஏற்பட்ட நிகழ்வினை பொதுச் சட்டமாக்க முயலுவதும் என்பதை வாசகர்களது சிந்தனைக்குத் தருகிறேன். எனவே, அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்நபி மொழியை சான்றாக முன் வைத்து தங்களின் கருத்தினை அவர்கள் நிலைநாட்ட முடியாது என்பது பகலைப் போன்று தெளிவானது.

அபூ மூஸா அல் அஷ்அரி அவர்கள் அறிவிக்கும் நபி மொழி.


3695-عَنْ أَبِى مُوسَى رضى الله عنه أَنَّ النَّبِىَّ - دَخَلَ حَائِطاً وَأَمَرَنِى بِحِفْظِ بَابِ الْحَائِطِ ، فَجَاءَ رَجُلٌ يَسْتَأْذِنُ ، فَقَالَ « ائْذَنْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ » . فَإِذَا أَبُو بَكْرٍ ، ثُمَّ جَاءَ آخَرُ يَسْتَأْذِنُ فَقَالَ « ائْذَنْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ » . فَإِذَا عُمَرُ ، ثُمَّ جَاءَ آخَرُ يَسْتَأْذِنُ ، فَسَكَتَ هُنَيْهَةً ثُمَّ قَالَ « ائْذَنْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ عَلَى بَلْوَى سَتُصِيبُهُ » . فَإِذَا عُثْمَانُ بْنُ عَفَّانَ قَالَ حَمَّادٌ وَحَدَّثَنَا عَاصِمٌ الأَحْوَلُ وَعَلِىُّ بْنُ الْحَكَمِ سَمِعَا أَبَا عُثْمَانَ يُحَدِّثُ عَنْ أَبِى مُوسَى بِنَحْوِهِ ، وَزَادَ فِيهِ عَاصِمٌ أَنَّ النَّبِىَّ صلى الله عليه وسلم كَانَ قَاعِداً فِى مَكَانٍ فِيهِ مَاءٌ ، قَدِ انْكَشَفَتْ عَنْ رُكْبَتَيْهِ أَوْ رُكْبَتِهِ ، فَلَمَّا دَخَلَ عُثْمَانُ غَطَّاهَا .رواه البخاري.


"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தில் நுழைந்தார்கள். வாசலில் என்னைக் காவல் காக்க கட்டளையிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் வந்து அனுமதி கேட்டார். அவரை அனுமதிக்குமாறும், சொர்க்கத்தைப் பற்றி நற்செய்தி கூறுமாறும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்வாறு அனுமதி கேட்டவர் அபூ பக்கர் (ரலி) ஆவார். பின்னர் இன்னொருவர் வந்தார். அவருக்கு அனுமதி அளிக்குமாறும், சுவர்க்கத்தைப் பற்றி அவருக்கு நற்செய்தி கூறுமாறும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் உமர் (ரலி) ஆவார். பின்னர் இன்னொருவர் வந்தார். சற்று நேரம் தாமதித்து விட்டு "அவரை அனுமதிக்குமாறும், சுவர்க்கம் பற்றி அவருக்கு நற்செய்தி கூறுமாறும், அவர் பெரும் துன்பத்தை (இவ்வுலகில்) அடைவார்" என்று தெரிவிக்குமாறும் கூறினார்கள். அவர் உஸ்மான் (ரலி) ஆவார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தண்ணீர் உள்ள பகுதியில் தமது முட்டுக்கால்களுக்கு மேல் ஆடையை விலக்கியவர்களாக இருந்தார்கள். உஸ்மான் வந்ததும் முட்டுக்காலை மூடிக்கொண்டார்கள்" என்று அபூ முஸா (ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்: புகாரி - 3695.

 

 

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் நபிமொழி

 

عن عبد الله بن عمرو قال صلينا مع رسول الله - المغرب فرجع من رجع وعقب من عقب فجاء رسول الله - مسرعا قد حفزه النفس وقد حسر عن ركبتيه فقال أبشروا هذا ربكم قد فتح بابا من أبواب السماء يباهي بكم الملائكة يقول انظروا إلى عبادي قد قضوا فريضة وهم ينتظرون أخرى (سنن ابن ماجه)


நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் மஃக்ரிப் தொழுதோம். சென்றவர்கள் சென்று விட்டார்கள். மற்றவர்கள் (இஷாவுக்காக) தங்கி விட்டனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூச்சிறைக்க விரைவாக முட்டுக்கால்களை விட்டு ஆடை விலகியவர்களாக வந்தனர். நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள்! உங்கள் இறைவன் வானத்தின் ஒரு வாசலைத் திறந்து உங்களைப் பற்றி வானோர்களிடம் பெருமையாக கூறுகின்றான். "என் அடியார்களைப் பாருங்கள்! அவர்கள் ஒரு கடமையை முடித்து விட்டு மறு கடமைக்காகக் காத்திருக்கின்றனர்" என்று வானவர்களிடம் கூறுகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: இப்னு மாஜா. 793.

 

 

அபூ தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கும் நபிமொழி

 

3661- عَنْ أَبِى الدَّرْدَاءِ رضى الله عنه قَالَ كُنْتُ جَالِساً عِنْدَ النَّبِىِّ - إِذْ أَقْبَلَ أَبُو بَكْرٍ آخِذاً بِطَرَفِ ثَوْبِهِ حَتَّى أَبْدَى عَنْ رُكْبَتِهِ ، فَقَالَ النَّبِىُّ - « أَمَّا صَاحِبُكُمْ فَقَدْ غَامَرَ » . فَسَلَّمَ ، وَقَالَ إِنِّى كَانَ بَيْنِى وَبَيْنَ ابْنِ الْخَطَّابِ شَىْءٌ فَأَسْرَعْتُ إِلَيْهِ ثُمَّ نَدِمْتُ ، فَسَأَلْتُهُ أَنْ يَغْفِرَ لِى فَأَبَى عَلَىَّ ، فَأَقْبَلْتُ إِلَيْكَ فَقَالَ « يَغْفِرُ اللَّهُ لَكَ يَا أَبَا بَكْرٍ » . ثَلاَثاً ، ثُمَّ إِنَّ عُمَرَ نَدِمَ فَأَتَى مَنْزِلَ أَبِى بَكْرٍ فَسَأَلَ أَثَمَّ أَبُو بَكْرٍ فَقَالُوا لاَ . فَأَتَى إِلَى النَّبِىِّ - ، فَسَلَّمَ فَجَعَلَ وَجْهُ النَّبِىِّ - يَتَمَعَّرُ حَتَّى أَشْفَقَ أَبُو بَكْرٍ ، فَجَثَا عَلَى رُكْبَتَيْهِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ ، وَاللَّهِ أَنَا كُنْتُ أَظْلَمَ مَرَّتَيْنِ . فَقَالَ النَّبِىُّ - « إِنَّ اللَّهَ بَعَثَنِى إِلَيْكُمْ فَقُلْتُمْ كَذَبْتَ . وَقَالَ أَبُو بَكْرٍ صَدَقَ . وَوَاسَانِى بِنَفْسِهِ وَمَالِهِ ، فَهَلْ أَنْتُمْ تَارِكُو لِى صَاحِبِى » . مَرَّتَيْنِ فَمَا أُوذِىَ بَعْدَهَا .رواه البخاري.


நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தேன். அப்போது அபூபக்கர் (ரலி) தமது முட்டுக்கால்கள் தெரியும் அளவுக்கு ஆடையை உயர்த்திப் பிடித்துக் கொண்டு வந்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "உங்கள் தோழர் வழக்கு கொண்டு வந்துள்ளார்" என்று கூறினார்கள். அபூபக்கர் (ரலி) சலாம் கூறினார், எனக்கும், உமர் பின் கத்தாபிற்கும் இடையே ஒரு தகராறு ஏற்பட்டது. நான் அவர் விஷயத்தில் அவசரப்பட்டு விட்டேன். பின்னர் கவலைப்பட்டு என்னை மன்னிக்குமாறு கேட்டேன். அவர் மன்னிக்க மறுத்துவிட்டார். எனவே உங்களிடம் வந்துள்ளேன்" என்று முறையிட்டார். "அபுபக்கரே! அல்லாஹ் உம்மை மன்னிப்பானாக!" என்று கூறினார்கள். பின்னர் உமர் (ரலி) அவர்கள் அபு பக்கர் (ரலி) அவர்களின் வீட்டிற்கு வந்து, "உள்ளே அபூபக்கர் இருக்கின்றாரா?" எனக் கேட்டார். இல்லை என்று வீட்டில் உள்ளவர்கள் பதில் அளித்தனர். உடனே அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். உடனே நபிகள் நாயகத்தின் முகம் மாறியது. அபூ பக்கர் (ரலி) அவர்கள் பயந்து போய் மண்டியிட்டு, "அல்லாஹ்வின் தூதரே! நான் தான் அநியாயம் செய்து விட்டேன். (உமர் அல்ல)" என்று இரண்டு தடவை கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ் உங்களிடம் என்னைத் தூதராக அனுப்பினான். நீ பொய் சொல்கிறாய் என்று நீங்கள் கூறினீர்கள். ஆனால், அபூ பக்கர் நீங்கள் கூறுவது உண்மை என்றார். தமது உடலாலும், பொருளாலும் எனக்கு உறுதுணையாக இருந்தார். என் தோழர்களை விட்டு விடுவீர்களா? ஏன்று இரண்டு தடவை கேட்டார்கள். இதன் பின்னர் அபு பக்கர் (ரலி) அவர்கள் எவராலும் தொல்லைப்படுத்தப்படவில்லை. அறிவிப்பவர்: அபூ தர்தா (ரலி) நூல்: புகாரி: 3661



தொடைக்கும், முட்டுக்காலுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்.

தொடைகளைக் கட்டாயம் மறைக்க வேண்டும் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லாததாலும் அதற்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளதாலும் (தொடையின் பெரும் பகுதியை மறைக்க வேண்டிதில்லை என்ற) இரண்டாம் சாராரின் கருத்தே சரியாக உள்ளது. (ஏகத்துவம்: பக்கம்-28, ஜுலை-2005)


தொடையின் பெரும் பகுதியை மறைக்க வேண்டியதில்லை என்ற தங்களின் தவறான கருத்திற்கு சான்றுகளாகத்தான் மேற்கண்ட இம்மூன்று நபி மொழிகளையும் பதிவு செய்துள்ளார்கள். தங்களின் சுய நினைவுடன்தான் இந்த மூன்று நபி மொழிகளையும் பதிவு செய்தார்களா? என்று இதனை படித்துப் பார்க்கும் வாசகர்கள் பேசிக் கொள்கிறார்கள். ஏனெனில், இம்மூன்று நபி மொழிகளிலும் முட்டுக்கால் திறந்திருந்தது என்ற செய்திதான் இடம் பெற்றுள்ளதே தவிர, தொடை திறந்திருந்தாக எந்த ஒரு குறிப்பும் இல்லை. தொடையின் சிறிய பகுதி திறந்திருக்கலாம் என்பதற்குக்கூட இவற்றைச் சான்றுகளாகக் கருத முடியாது எனும் போது, தொடையின் பெரும் பகுதி திறந்திருக்கலாம் என்பதற்கு எவ்வாறு இதனைச் சான்றுகளாக முன் வைத்தார்கள்? இவற்றுக்கெல்லாம் மேலாக, மேற்கூறப்பட்ட நபி மொழிகள் அனைத்தும் தொழுகைக்கு வெளியே நடந்த நிகழ்ச்சிகள் ஆகும். இவற்றை தொழுகையோடு சம்பந்தப்படுத்திப் பேசுவது மொட்டைத் தலைக்கும், முளங்காலுக்கும் முடிச்சுப் போடும் முயற்சியல்லவா? என்றொரு கேள்வியையும் எழுப்புகிறார்கள்.

அப்துல் காதருக்கும், அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்?


அத்தஹிய்யாத் இருப்பில் விரலை அசைத்தே ஆக வேண்டும் என்ற நிலைபாட்டில் உள்ள இவர்களுக்கு, விரலை அசைக்கவில்லை என்ற அபூ தாவூதில் இடம் பெற்றுள்ள அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அறிவிக்கும் ஆதாரப்பூர்வமான நபி மொழியை எடுத்துக் கூறியபோது, பிரார்த்தனை செய்த போது விரலை அசைக்கவில்லை என்றுதான் அபூ தாவூதில் இடம் பெற்றுள்ளதே தவிர, தொழுகையில் நடந்ததாக எந்தக் குறிப்பும் அதில் இல்லை. எனவே, தொழுகைக்கு வெளியே நடந்த இச்சம்பவத்தை தொழுகையோடு சம்பந்தப்படுத்திப் பார்ப்பது மாபெரும் தவறாகும் என்று டயலாக் ஒன்றையும் கூறுகிறார். குளிக்கும் போது தண்ணீர் ஊற்றினார்கள் என்று சொன்னால், சோற்றில் தண்ணீர் ஊற்றினார்கள் என்றா புரிந்து கொள்வோம்.

இதையேதான் நாங்களும் அவர்களுக்குப் பதிலாக தருகிறோம். அதாவது தொழுகைக்கு வெளியே நடந்த நிகழ்ச்சிகளை கூறி, அதனை தொழுகையோடு சம்பந்தப்படுத்த முயற்சிப்பது முட்டாள்தனமில்லையா?

தனிமனித வழிபாட்டில் திளைத்திருப்போரின் கவனத்திற்கு!

நம்பகத்தன்மையிலும், நினைவாற்றலிலும் சிறந்த விளங்கிய புத்திக் கூர்மையான அறிவிப்பாளர்களில் சிலர் முதுமையை அடைந்து புத்திக் கூர்மை மழுங்கி, தடுமாற்றத்திற்குள்ளான போது அவர்கள் தொடர்ந்து ஹதீஸ்களை அறிவிக்க விடாதவாறு அவர்களின் பிள்ளைகள் தடுத்து விட்டார்கள் என்ற வரலாற்றுச் செய்தியை இவர்களுக்கு நினைவு படுத்தி, இனிமேல் இந்த மனிதர் ஹதீஸ்களைப் பற்றி முன்னுக்குப் பின் முரணாகவும், சம்பந்தமில்லாமல் பேசுவதையும் தடுக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறேன். அதுவே அவர்களுக்கும், மக்களுக்கும் நன்மை பயப்பதாக இருக்கும்.

மொழி பெயர்ப்பில் மோசடி.


தொடைகள் திறந்திருந்ததாக எந்தக் குறிப்பும் இந்த மூன்று நபி மொழிகளிலும் அறவே இல்லை என்பதால் அபூ மூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கும் நபி மொழியில் இடம் பெற்ற 'இன்கஷஃபத் அன் ருக்பதைஹி' (انْكَشَفَتْ عَنْ رُكْبَتَيْهِ) என்ற வார்த்தைக்கு 'முட்டுக்காலுக்கு மேல் ஆடையை விலக்கியவர்களாக' என மொழி பெயர்த்துள்ளனர். முட்டுக்காலுக்கு மேல் ஆடையை விலக்கியுள்ளார்கள் என்றால் தொடைகள் கட்டாயம் தெரிந்திருக்கும் என்று மக்களை நம்ப வைப்பதற்காக இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளனர்.

இதே 'கஷ்ஃப்' என்ற வார்த்தை தொடையுடன் சேர்ந்து வந்த போது, தொடைகளுக்கு மேல் ஆடையை விலக்கினார்கள் என்றுதான் மொழி பெயர்ப்பு செய்திருக்க வேண்டும். அப்போது புட்டங்கள் வெளியே தெரியுமே, என்ன இப்படி தவறாக மொழி பெயர்த்துள்ளனரே என மக்களும் புரிந்து கொண்டு, இவர்களது அரபி மொழித் திறனை எடை போட்டிருப்பார்கள். ஆனால், அவ்வாறு அர்த்தம் செய்யாமல், 'மேல்' என்ற வார்த்தையை எடுத்து விட்டு, தொடைகளைத் திறந்திருந்தார்கள் என்றே அர்த்தம் செய்துள்ளனர். (பார்க்க: பக்கம்-24, ஏகத்துவம்-ஜுலை-2005)அவ்வாறெனில், இந்த இடத்திலும் 'முட்டுக்கால்களைத் திறந்திருந்தார்கள்' என்று மொழி பெயர்ப்பதுதானே நியாயம். தனிமனித வழிபாட்டில் உள்ளவர்களுக்கும், பாமர மக்களுக்கும் அரபி மொழி சரிவரத் தெரியாது. எதைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்வார்கள் என்ற தைரியத்திலா? அல்லது அரபி மொழியைக் கையாளுவதற்கு தங்களைத்தவிர வேறு யாருமே இல்லை என்ற மமதையிலா? இவ்வாறான மோசடிகளை அரங்கேற்றுகிறார்கள்.

நபித் தோழர்கள் அரைக்கால் டவுசர் அணிந்து தொழுதுள்ளார்களா?

 

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் நபிமொழி

365-عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَامَ رَجُلٌ إِلَى النَّبِىِّ - فَسَأَلَهُ عَنِ الصَّلاَةِ فِى الثَّوْبِ الْوَاحِدِ فَقَالَ « أَوَكُلُّكُمْ يَجِدُ ثَوْبَيْنِ » . ثُمَّ سَأَلَ رَجُلٌ عُمَرَ فَقَالَ إِذَا وَسَّعَ اللَّهُ فَأَوْسِعُوا ، جَمَعَ رَجُلٌ عَلَيْهِ ثِيَابَهُ ، صَلَّى رَجُلٌ فِى إِزَارٍ وَرِدَاءٍ ، فِى إِزَارٍ وَقَمِيصٍ ، فِى إِزَارٍ وَقَبَاءٍ ، فِى سَرَاوِيلَ وَرِدَاءٍ ، فِى سَرَاوِيلَ وَقَمِيصٍ ، فِى سَرَاوِيلَ وَقَبَاءٍ ، فِى تُبَّانٍ وَقَبَاءٍ ، فِى تُبَّانٍ وَقَمِيصٍ قَالَ وَأَحْسِبُهُ قَالَ فِى تُبَّانٍ وَرِدَاءٍ . رواه البخاري.

ஒரு மனிதர் நபிகள் நாயகத்திடம் வந்து ஒரு ஆடை மட்டுமே அணிந்து தொழுவதைப் பற்றிக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "ஒவ்வொருவருக்கும் இரண்டு ஆடைகள் உள்ளதா?" என்று திருப்பிக் கேட்டார்கள். பின்னர் உமர் (ரலி) அவர்களிடம் இது பற்றி ஒருவர் கேட்டார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ் தாராளமாக உங்களுக்கு ஆடைகளைத் தந்திருந்தால் தாராளமாக அணிந்து கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். இதன் பின்னர் ஒரு போர்வை - ஒரு வேட்டி அணிந்தும், ஒரு வேட்டி -ஒரு சட்டை அணிந்தும், ஒரு வேட்டி - ஒரு மேலாடை அணிந்தும், ஒரு ஸிர்வால் (பேண்ட்)- ஒரு மேலாடை அணிந்தும், ஒரு சட்டை - ஒரு பேண்ட் அணிந்தும், ஒரு பேண்ட் - ஒரு மேலாடை அணிந்தும், ஒரு அரைக்கால் டவுசர் - ஒரு மேலாடை அணிந்தும், ஒரு அரைக் கால் டவுசர் - ஒரு சட்டை அணிந்தும் தொழலானார்கள்.
(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி.)

உமர் (ரலி) அவர்கள் தாராளமாக அணியுமாறு கூறிய பிறகு இப்படி இரண்டு ஆடைகள் அணிந்து தொழலானார்கள் என்பதை இதிலிருந்து அறிகிறோம். இவ்வாறு அணிந்த ஆடைகளில் அரைக்கால் டவுசரும் இருந்தது என்பதையும் அறிந்து கொள்கிறோம். எனவே, ஒருவர் அரைக்கால் டவுசர் அணிந்து தொழுதால் அதைக் குற்றம் என்று கூற மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. (பக்ம்: 29, ஏகத்தும்-ஜுலை 2005.)



மொழி பெயர்ப்பில் மீண்டும் மோசடி


'நபித்தோழர்கள் அரைக்கால் டவுசர் அணிந்து தொழலானார்கள்' என்று தங்களின் தவறான மொழி பெயர்ப்பின் மூலம் நபித்தோழர்கள் டவுசர் அணிந்து தொழுத இந்நிகழ்சி உமர் (ரலி) காலத்திலே பல முறை நடந்துள்ளதாகச் சித்தரித்துள்ளனர். 'தொழுதார்கள்' என்ற வார்த்தைக்கும் 'தொழலானார்கள்' என்ற வார்த்தைக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. 'தொழுதார்கள்' என்றால் ஒரு முறை 'தொழுதுள்ளார்கள்' என்பது அதன் பொருள். 'தொழலானார்கள்' என்றால் தொடர்ந்து தொழ ஆரம்பித்து விட்டார்கள் என்பது பொருள். தொழலானார்கள் என்று மொழி பெயர்த்துள்ளதால் நபித்தோழர்கள் இவ்வாறு பல முறை தொழுதுள்ளனர் என்ற கருத்தைத் திணித்துள்ளார்கள். மேலும், இதனை வலியுறுத்தும் பொருட்டு, உமர் (ரலி) அவர்கள் அளித்த பதிலின் இடையில் 'இதன் பின்னர்' என்ற ஒரு வார்த்தையையும் (மேலே கோடிட்ட இடத்தைக் கவனிக்கவும்) கூடுதலாகச் சேர்த்துள்ளார்கள். அதாவது உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு பதிலளித்த பின்னர் நபித் தோழர்கள் டவுசர்களை அணிந்து தொழ ஆரம்பித்து விட்டனர் என்று கூறி, நடக்காத ஒரு நிகழ்ச்சியை பலதடவைகள் நடந்துள்ளதாக சித்தரித்துள்ளனர். இந்த நபி மொழியை மேலோட்டமாக வாசித்துப் பார்க்கும் பாமர மக்களுக்கு இவர்கள் கூறிய அர்த்தம் சரியானது போல் தோன்றும்.

ஆனால், ஒரு நபி மொழிக்கு அர்த்தம் செய்யும் முன் அதன் வார்த்தைப் பிரயோகத்தை சற்று கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு அறிந்து கொள்ள முடியாதவர்கள், ஹதீஸ் கலை அறிஞர்கள் அதற்கு என்ன விளக்கம் அளித்துள்ளனர் என்பதையாவது ஒரு முறை பார்வையிட்டிருக்க வேண்டும். இவ்வாறு பார்வையிடாததாலும், அரபி மொழியை சரியாக கையாளும் திறன் இல்லாததாலும் மேற்கண்ட நபி மொழியைத் தவறாகப் புரிந்து கொண்டு, அதை தங்களது நூலில் பிரசுரமும் செய்துவிட்டார்கள்.

ஒரு விஷயம் குறித்து இறைத்தூதரிடம் கேட்டு அதற்கான தெளிவான பதிலையும் பெற்றுக் கொண்டதன் பின் உமர் (ரலி) அவர்களிடம் அதே கேள்வியைக் கேட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது ஏன்? இதற்கான பிண்ணனியையும், உமர் (ரலி) அவர்கள் அளித்த பதிலில் உள்ள வார்த்தைப் பிரயோகத்தையும் சரியாக புரிந்து கொள்ள முஸன்ஃப் அப்துர் ரஜ்ஜாக் என்ற ஹதீஸ் நூலில் இடம் பெற்றுள்ள செய்தியை முதலில் அறிந்து கொள்வோம்.

இரு ஆடைகள் அணிந்துதான் தொழ வேண்டுமா?

 

1386 عبد الرزاق عن معمر عن قتادة عن الحسن قال اختلف أبي بن كعب وابن مسعود في الرجل يصلي في الثوب الواحد فقال أبي يصلي في الثوب الواحد وقال ابن مسعود في ثوبين فبلغ ذلك عمر فأرسل إليهما فقال اختلفتما في أمر ثم تفرقتما فلم يدر الناس بأي ذلك يأخذون لو أتيتما لوجدتما عندي علما القول ما قال أبي ولم يأل ابن مسعود.
 

1387 عن الحسن أن أبي بن كعب وعبد الله ابن مسعود رضي الله عنهما اختلفا في الصلاة في الثوب الواحد فقال أبي لا بأس به قد صلى النبي - في ثوب واحد فالصلاة فيه جائزة وقال ابن مسعود إنما كان ذلك إذ كان الناس لا يجدون الثياب وأما إذ وجدوها فالصلاة في ثوبين فقام عمر على المنبر فقال القول ما قال أبي ولم يأل ابن مسعود .رواهما عبد الرزاق.


ஹசன் அவர்கள் அறிவிக்கிறார்:
"ஒரு ஆடையை மட்டும் அணிந்து தொழுவது குறித்து உபை பின் கஃப், இப்னு மஸ்வூத் ஆகிய இருவருக்கும் மத்தியில் கருத்து வேறுபாடு எழுந்தது. "ஒரு ஆடையை மட்டும் அணிந்து தொழுதால் குற்றமில்லை. இறைத்தூதர் அவ்வாறு தொழுதுள்ளார்கள்" என்று உபை பின் கஃப் (ரலி) கூறினார்கள். "அது மக்கள் வசம் அதிக ஆடைகள் இல்லாத கால கட்டத்தில் உள்ளதாகும். மக்கள் அதிகமான ஆடைகளை பெற்றுள்ள இச்மயத்தில் கட்டாயமாக இரு ஆடைகள் அணிந்தே தொழ வேண்டும்" என்று இப்னு மஸ்வூத் (ரலி) கூறினார்கள்.

இச்செய்தி உமர் (ரலி) அவர்களுக்கு எட்டிய போது அவ்விருவரையும் அழைத்து வரும் படி செய்து, "ஒரு விஷயத்தில் நீங்கள் இருவரும் கருத்து வேறுபாடு அடைந்து பின்னர் அந்நிலையிலேயே பிரிந்து சென்று விட்டீர்கள். இதனால் எதை செயல்படுத்துவது என அறியாது மக்கள் குழப்பத்தில் உள்ளனர். என்னிடம் இப்பிரச்சனையைக் கொண்டு வந்திருந்தால் அதற்கான விளக்கத்தை அறிந்து கொண்டிருப்பீர்கள். உபை கூறியதே சரி. இப்னு மஸ்வூத் அவர்களும் குறையாகக் கூறவில்லை." என்று பதிலளித்து விட்டு, பின்னர் புகாரியில் இடம் பெற்றிருக்கும் பதிலையும் சேர்த்துக் கூறினார்கள்.

அதாவது, அல்லாஹ் தாராளமாக உங்களுக்கு ஆடைகளை வழங்கி இருந்தால் தாராளமாக (இரு ஆடைகளை) அணிந்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டு, அவ்விரு ஆடைகளை எவ்வாறெல்லாம் அணிந்து கொள்ளலாம் என்பதற்கு உதாரணமாகத்தான் பல் வேறுவிதமாக ஆடை அணியும் முறைகளை உமர் (ரலி) விளக்கம் என்ற அடிப்படையில் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அதாவது ஒருவர் ஒரு போர்வை - ஒரு வேட்டி அணிந்து தொழுதார், ஒரு வேட்டி -ஒரு சட்டை அணிந்து தொழுதார், ஒரு வேட்டி - ஒரு மேலாடை அணிந்து தொழுதார், ஒரு ஸிர்வால் (பேண்ட்)- ஒரு மேலாடை அணிந்து தொழுதார், ஒரு சட்டை - ஒரு பேண்ட் அணிந்து தொழுதார், ஒரு பேண்ட் - ஒரு மேலாடை அணிந்து தொழுதார், ஒரு அரைக்கால் டவுசர்-மேலாடை அணிந்து தொழுதார், ஒரு அரைக் கால் டவுசர் - ஒரு சட்டை அணிந்து தொழுதார். இவ்வாறு பல்வேறு முறைகளில் இரு ஆடைகளை அணிந்து தொழுது கொண்டால் தவறில்லை என்று உமர் (ரலி) அவர்கள் விளக்கம் அளித்து உபை மற்றும் இப்னு மஸ்வூத் ஆகிய இருவருக்குமிடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு சரியான தீர்வை வழங்கினார்கள்.

தாராளமாக ஆடைகள் இருந்தால் (இரு) ஆடைகளை சேர்த்து அணிந்து கொள்ளட்டும். ஒருவர் ஒரு போர்வை - ஒரு வேட்டி அணிந்து கொள்ளட்டும், .... என்ற கட்டளையைத்தான் செய்தி வடிவத்தில் உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள் என்றும் சிலர் விளக்கமளித்துள்ளனர். இந்தக் கருத்தை இமாம் ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் புகாரியின் விளக்கவுரையான ஃபத்ஹுல் பாரியின் முதல் பாகம் 616வது பக்கத்தில் 365வது ஹதீஸின் விளக்கவுரையில் தெளிவுபடுத்தி உள்ளார்கள். அதன் அரபி மூலம் கீழே தரப்பட்டுள்ளது.


فقوله (سأل رجل عمر) أي عن ذلك(أي الصلاة في الثوب الواحد), ولم يسم أيض, ويحتمل أن يكون ابن مسعود لأنه إختلف هو وأبي بن كعب في ذلك فقال أبي: الصلاة في الثوب الواحد يعني لاتكره, وبال ابن مسعود إنما كان ذلك وفي الثياب قلة, فقام عمر علي المنبر فقال: القول ماقال أبي, ولم يأل إبن مسعود. أي لم يقصر. أخرجخ عبد الرزاق.

قوله (جمع رجل) وه بقية قول عمر, وأورده بصيغة الخبر ومراده الأمر, قال ابن بطال: يعني ليجمع وليصل. وقال ابن المنير: الصحيح أنه كلام في معنى الشرط كأنه قال: إن جمع رجل عليه ثيابه فحسن. ثم فصّل الجمع بصور علي معني البدلية. وقال ابن مالك: تضمن هذا الحديث فائدتين, إحداهما ورود الفعل الماضي بمعنى الأمر وهو قوله : ((صلّي)) والمعنى ليصل, ومثله قولهم إتقى الله عبدٌ والمعنى ليتق. ثانيهما حذف حرف العطف, فإن الأصل صلى رجل في إزار ورداء وفي إزار وقميص ومثله قوله - ((تصدق امؤ من ديناره, من درهمه, من صاع تمر)) إنتهى. فحصل في كل من المسألتين توجيهان. فتح البار. ص 616/

ومجموع ما ذكر عمر من الملابس ستة, وثلاثة للوسط, وثلاثة لغيره. ... ولم يقصد الحصر في ذلك, بل يلحق بذلك ما يقوم مقامه. فتح الباري . ص617/ج1


உமர் (ரலி) அவர்களின் கட்டளை, செய்தி வடிவத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், டவுசர் அணிந்து தொழுத சம்பவம் நடந்துள்ளதாக இவர்கள் தவறாகப் புரிந்து கொண்டார்கள். உண்மையில் உமர் (ரலி) அவர்கள் காலத்திலும் சரி, அதற்குப் பிறகும் சரி நபித்தோழர்களில் யாருமே அரைக்கால் டவுசர் அணிந்து தொழுததாக ஒரு சம்பவமும் அறவே நடைபெறவில்லை என்பதை மேலே கூறப்பட்ட விளக்கத்தின் அடிப்படையில் தெளிவாக அறிந்து கொள்கிறோம்.

'துப்பான்' என்ற ஆடைக்கு கால் முளைத்த அதிசயம்.

மேலும், பல் வேறு ஆடை வகைகளைக் குறிப்பிட்ட உமர் (ரலி) அவர்கள் 'துப்பான்' என்றொரு ஆடை வகையையும் குறிப்பிட்டுள்ளார்கள். இதை 'அரைக்கால் டவுசர்' என்று தவறாக மொழி பெயர்த்துள்ளனர். எந்த ஒரு மொழியிலும் ஒரு வார்த்தைக்கான சரியான அர்த்தத்தை அம்மொழியின் அகராதி நூற்களிலின் மூலம்தான் அறிந்து கொள்ள முடியும். இந்த அடிப்படை விதியின் படி 'துப்பான்' என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பதை அதன் அகராதி நூற்களில் தேடிப்பார்த்தால், இவர்கள் கூறிய அர்த்தம் அறவே இல்லை என்பது தெரியவரும். அரபி மூலமும் அதற்கான மொழியாக்கமும் இதோ!


التبّان كالرمّان سروال صغير يستر الورة المغلظة. (القاموس المحيط –1183)


'துப்பான்' என்பது 'ரும்மான்' என்ற அமைப்பில் உள்ள வார்த்தையாகும். அவ்ரத் முகழ்ழாவை மறைக்கும் அளவு உள்ள சிறிய ஸிர்வால் ஆகும். (நூல்: அல் காமூஸுல் முஹீத், பக்கம் -1183)


والتبان بالضم والتشديد سروال صغير مقدار شبر يستر العورة المغلظة لقط. (لسان العرب)


'துப்பான்' என்பது அவ்ரத் முகழ்ழாவை மட்டும் மறைக்கும் ஒரு ஜான் அளவுள்ள சிறிய ஸிர்வால் ஆகும். (நூல்: லிசானுல் அரப்)


والتبان لضم المثناة وتشديد الموحدة وهو علي هيئة السراويل إلا أنه ليس له رجلان. (فتح الباري –ص616/ج1)


'துப்பான்' என்பது ஸிர்வால் வடிவில் உள்ள ஆடையாகும். ஆனால், அவற்றிற்கு இரு கால்களும் அறவே இருக்காது. (இப்னு ஹஜர், நூல்: ஃபத்ஹுல் பாரி - 1/616)


العورة المغلظة وهيالرجل السوءتان فهو من المقدم الذكر والأنثيان ومن المؤخر ما بين إليتين (الفواكه الدواني ص201/ج1)


"ஆண்களைப் பொருத்தவரை அவ்ரத் முகழ்ழலா என்பது இரு வெட்கத்தலமாகும் அதாவது முன்புறமாக ஆண் குறி மற்றும் விரையும், பின்புறமாக இரு புட்டங்களுக்கு இடையில் உள்ள பின் துவாரமும் ஆகும்." நூல்: அல் ஃபவாகிஹித் தவானி 1/201.

மேலே தரப்பட்டுள்ள விளக்கத்தின் அடிப்படையில் துப்பான் என்பது தற்போது நாம் உபயோகித்து வரும் ஜட்டியைத்தான் குறிக்கிறது என்பது தெள்ளத் தெளிவானது. ஒரு வார்த்தைக்கு அகராதியில் ஒரு அர்த்தமிருந்தாலும் நடை முறையில் வேறொரு அர்த்தத்திற்குப் பயன்படுத்தப்படுவதும் உண்டு. ஆனால், 'துப்பான்' என்ற வார்த்தை நடை முறையிலும் கூட ஜட்டி என்ற அர்த்தத்தில்தான் பயன்படுத்தப்படுகிறது என்பதை 'இரண்டு கால்களும் இல்லாத ஸிர்வால் (பேண்ட்) வடிவில் உள்ள ஆடை' என்ற ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்களின் விளக்கத்திலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு பேண்டை எடுத்து அதன் இரண்டு கால்கள் முழுவதையும் கட் பண்ணிவிட்டுப் பார்த்தால் ஜட்டியின் வடிவம் அப்படியே அதில் இருக்கும். இப்படி கால்கள் அறவே இல்லாத இத்'துப்பானு'க்கு திடீரென்று கால்கள் முளைத்துக் கொண்டது எப்படி? இந்த அதிசயம் எந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை ஆதாரத்துடன் வெளியிடுவார்களா?

ஒரு ஆடை மட்டும் அணிந்திருந்த போதும், தொடையை மறைத்திருந்த நபித்தோழர்கள்:


442- عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ رَأَيْتُ سَبْعِينَ مِنْ أَصْحَابِ الصُّفَّةِ ، مَا مِنْهُمْ رَجُلٌ عَلَيْهِ رِدَاءٌ ، إِمَّا إِزَارٌ وَإِمَّا كِسَاءٌ ، قَدْ رَبَطُوا فِى أَعْنَاقِهِمْ ، فَمِنْهَا مَا يَبْلُغُ نِصْفَ السَّاقَيْنِ ، وَمِنْهَا مَا يَبْلُغُ الْكَعْبَيْنِ ، فَيَجْمَعُهُ بِيَدِهِ ، كَرَاهِيَةَ أَنْ تُرَى عَوْرَتُهُ . رواه البخاري


அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
"திண்ணைத் தோழர்களில் எழுபது நபர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களில் ஒருவருக்குக் கூட மேலாடை இருந்ததில்லை. சிலருக்கு கீழங்கி மட்டும் இருக்கும். (வேறு சிலரிடம்) தங்களது கழுத்திலிருந்து கட்டிக் கொள்ளத் தக்க ஒரு போர்வை இருந்தது. (அவ்வாறு கட்டிக் கொள்ளும் போது) சிலரது போர்வை கரண்டைக்கால் வரைக்கும் இருக்கும். வேறு சிலரது போர்வை கெண்டைக் கால்களின் பாதியளவு வரை இருக்கும். தமது மறைவிடங்களை பிறர் பார்த்து விடலாகாது என்பதற்காக தமது கரத்தால் துணியைச் சேர்த்துப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். நூல்: புஹாரி-442

ஒரேயொரு ஆடையைத் தவிர மாற்று ஆடையே இல்லாத கஷ்டமான பஞ்சகாலத்தில் கூட தொடைகள் உட்பட பாதி கெண்டைக்கால்களை மறைக்கும் அளவிற்கு ஆடை அணிந்திருந்த நபித்தோழர்கள் தன் மறைவிடங்கள் வெளியில் தெரிந்து விடுமோ என்ற அச்சத்தால் ஆடையின் கீழ் பகுதியை தமது கரத்தால் கெட்டியாகப் பிடித்துக் கொள்வார்கள் என்ற இந்த செய்தியை அறிந்த யாரும் ஜட்டியுடன் நபித் தோழர்கள் தொழுதிருப்பார்கள் என்றோ, அல்லது அவ்வாறு தொழுமாறு உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டிருப்பார்கள் என்றோ கற்பனை செய்துகூட பார்க்கமாட்டார். ஆனால், பல்வேறு கட்டங்களில் ஏற்கனவே நபித்தோழர்கள் மீது களங்கம் கற்பித்தவர்கள், தவறுகள் செய்தவர்கள் என்று பேசியும் எழுதியும் வருபவர்கள் இப்போதோ நடக்காத ஒரு சம்பவத்தை நடந்ததாக சித்தரித்து, நபித் தோழர்கள் ஜட்டி அணிந்து கொண்டு தொழுதுள்ளார்கள் என மீண்டும் அவர்கள் மீது களங்கத்தை ஏற்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத் தக்கதாகும்.

நபித் தோழர்கள் ஜட்டி அணிந்து தொடை முழுவதையும் திறந்த நிலையில் தொழுததாக ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும், நபித் தோழர்கள் அனைவரும் தவறிழைத்துவிட்டுள்ளார்கள், அவர்களது கூற்றை, நடைமுறைகளை ஆதாரமாக ஏற்கக் கூடாது என பக்கம் பக்கமாக எழுதியும், பல நூறு மேடைகளிலும் தொடர்ந்து பிரச்சாரமும் செய்து வருகின்ற இவர்கள், இச்சம்பவத்தை தங்களின் கருத்திற்கு சான்றாகக் கூற அறவே அருகதையற்றவர்கள். நபி மொழிகள், நபித் தோழர்களின் நடை முறைகள் தங்களது மனோ இச்சைக்கு ஒத்திருந்தால் ஏற்பது, இல்லாவிட்டால் மறுப்பது என்பதை தங்களின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகவே கடைபிடித்து வருகிறார்கள். இப்போக்கு சமீபகாலத்தில் அதிகரித்துள்ளது வேதனை அளிக்கிறது. இது எதில் போய் முடியுமோ?

ஐயமும் தெளிவும்


இப்னு மஸ்வூத் (ரலி) மற்றும் உபை (ரலி) ஆகியோருக்கிடையே ஒரு ஆடையை மட்டும் அணிந்து தொழுவது குறித்து கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது, ஒரு ஆடையில் தொழுவதால் குற்றமில்லை ஆனால், தாராளமாக ஆடை இருந்தால், குறைந்த பட்சம் இரு ஆடைகளைச் சேர்த்து அணிந்து கொள்ள வேண்டும் என்று தீர்வு கூறிய உமர் (ரலி) அவர்கள் இரு ஆடைகள் எந்தெந்த முறையிலெல்லாம் இருக்கலாம் என்பதற்கு பல்வேறு ஆடைகளை குறிப்பிட்டுள்ளார்கள். அவற்றில் ஒன்றுதான் துப்பான் என்ற ஆடை. இதை கமீஸ், கபாஉ ஆகிய இரு வகை ஆடையுடன் அணிந்து தொழுகலாம் என்பதே அவர்களின் விளக்கம். எனவே, கமீஸ் என்றால் என்ன? கபாஉ என்றால் என்ன? துப்பான் வகை ஆடையை இவ்விரு ஆடையுடன் அணிந்திருந்தால் தொடைகள் வெளியில் தெரியுமா? என்பதை அறிந்து கொள்வோம்.

கமீஸ் என்பதற்கு சட்டை என்றும், கபாஉ என்பதற்கு மேலாடை என்றும் துப்பான் என்பதற்கு அரைக்கால் டவுசர் என்றும் தவறாக அர்த்தம் செய்து கொண்டதால், தொடைகள் இரண்டும் வெளியே தெரியும் என்ற தவறான முடிவுக்கு வழி வகுத்துள்ளது. இந்நபி மொழியில் கூறப்பட்டுள்ள ஆடை வகைகள் குறித்து முதலில் அறிந்து கொண்டால் இந்த சந்தேகம் தீர்ந்து விடும்.

துப்பான் வகை ஆடையை முன்பே அறிந்து கொண்டோம்.

கமீஸ்: இரண்டு கைகள், பொத்தான்கள், ஜேப் ஆகியை உள்ள திறவை இல்லாத தைக்கப்பட்ட ஒரு வகை ஆடையாகும். உள்ளாடையாகவும், மேலாடையாகவும் அரபியர்களால் அணிந்து கொள்ளப்படும்.
(நூல்: லிபாசுர் ரஜ்லி -162)

கமீஸ் என்பதை சட்டை என்ற அர்த்தத்திலேயே தற்போது பயன்படுத்தி வருகிறோம். இந்த சட்டையின் அளவு காலத்திற்கு காலம், நாட்டிற்கு நாடு மாறுபட்டிருப்பதை நாம் நடை முறையில் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். சில வகை சட்டைகள் தொப்புள் வரை, வேறு சில புட்டத்திற்கு கீழ் வரை, மற்ற சில தொடையின் பாதியளவை மறைக்கும் வகையில் உள்ளன. இவ்வாறான பல் வேறு அளவில் உள்ள அனைத்து வகை மேலாடைகளையும் சட்டை என்றே நாம் குறிப்பிடுகிறோம். வேறு சில மேலாடைகள் முட்டுக் கால்களை மறைக்கும் விதத்திலும் உள்ளன. (வட இந்தியர்கள் அணிந்துள்ளது போன்று) இவற்றை ஜிப்பா என்று நாம் கூறிக் கொண்டாலும் கமீஸ் என்ற வகையில்தான் அடங்கும். இவ்வகையான கமீஸ்கள்தான் அரபுகளின் வழக்கில் இருந்தன.

கபாஉ: கைகள், மற்றும் மத்தியப் பகுதி இறுக்கமான பின் புறமாக திறந்திருக்கும் ஒரு வகை ஆடையாகும். பயணத்திலும், போர் களத்திலும் அரபுகள் அணிந்து கொள்வார்கள். தற்காலத்தில் இவ்வகை ஆடைகள் நடைமுறையில் இல்லை. (நூல்: லிபாசுர் ரஜ்லி -193)


மேலே குறிப்பிட்ட கமீஸ் மற்றும் கபாஉ ஆகிய இரு வகை ஆடைகள் தொடைகள் முழுவதையும் மறைக்கும் விதத்தில்தான் இருந்தன என்பதை இப்னு ஹஜர் அவர்களும் கீழ் வருமாறு உறுதி படுத்துகிறார்.


التبان لا يستر العورة كلها بناء علي أن الفخد من العورة. فالستر به حاصل مع القباء ومع القميص. (فتح الباري 617/ج1)


தொடை மறைக்கப்பட வேண்டியதாகும் என்பதன்படி, துப்பான் வகை ஆடை அவ்ரத்தை மறைக்காது. எனினும், கமீஸ் மற்றும் கபா ஆகிய ஆடைகளை இத்துடன் சேர்த்து அணிந்து கொள்ளும் போது அவ்ரத்தை மறைத்து விடும். (ஃபத்ஹுல் பாரி: 1/617)

கமீஸும், கபாவும் தொடைகளை மறைக்கும் விதத்தில்தான் இருந்தன என்பதை இப்னு ஹஜ்ரின் இந்த விளக்கத்திலிருந்து அறிந்து கொள்கிறோம். ஒருவன் துப்பான் - கமீஸ், அல்லது துப்பான் - கபா ஆகிய ஆடையை அணிந்து கொள்ளும் போது இரண்டு ஆடைகளை அணிந்து கொண்டு விட்டான் என்ற நிலை ஏற்படுவதுடன், அவனது தொடைகள் முழுவதையும் மறைக்கப்பட்டுவிடுகின்றன. எனவே, பெரும் பகுதி தொடைகள் வெளியில் தெரியும் விதத்தில் அரைக்கால் டவுசர் அணிந்து தொழலாம் என உமர் (ரலி) அவர்கள் கூறி விட்டார்கள் என்றோ, அல்லது நபித் தோழர்கள் அவ்வாறு தொழதார்கள் என்றோ கூறுவது அறியாமையின் வெளிப்பாடாகும்.

இறுதியாகச் சில வரிகள்!


இது வரை நாம் கூறியவற்றில் சில விவரங்களை இவர்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.
1. ஒர் ஆண் கட்டாயம் மறைக்க வேண்டிய பகுதிகள் என இவர்கள் குறிப்பிட்ட அளவை(ஆண் குறி, பின் துவாரம், புட்டங்கள், தொடையின் சிறிய பகுதிகள்) இவர்களைத் தவிர உலகில் தோன்றிய வேறெந்த அறிஞரும் (பிரபலமான நான்கு இமாம்கள் உட்பட) அறவே கூறவில்லை. இமாம்கள் மீது இட்டுக் கட்டியுள்ளார்கள் என்பதை இங்கே முதலாவதாகப் பதிவு செய்கிறேன்.

2. அபூ பக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோருக்கு முன்னிலையில் தன் தொடைகளைத் திறந்த நிலையில் இறைத்தூதர் படுத்திருந்தார்கள் என்று சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் வேறு அறிவிப்புகளில் வந்திருப்பதாக இவர்கள் கூறிய அந்த நபி மொழி பலவீனமானது என்பதோடு, தல்ஹாவின் மகள் ஆயிஷாவிடமிருந்து கேட்டு அறிவிப்பவர் உபைதுல்லாஹ் பின் ஸய்யாரா? அல்லது அப்துல்லாஹ் பின் ஸய்யாரா? என்பதை சரியான சான்றுகளுடன் உறுதிப்படுத்தாதவரை இந்நபி மொழியினை ஆதாரப்பூர்வமானது என்று கூறிக் கொள்ள முடியாது என்பதை இரண்டாவதாகப் பதிவு செய்கிறேன்.


3. தொழுகைக்கு வெளியில் நடந்ததாகப் பல நிகழ்வுகளை சான்றாக முன் வைத்த இவர்கள், தொழுகையில் அவ்வாறு நடந்துள்ளதாக ஒரு சான்றைக்கூட எடுத்துக் காட்ட முடியவில்லையே. தங்களின் கருத்தை நிலை நாட்ட இவர்கள் எடுத்துக் காட்டிய சான்றுகளில்கூட சில பலவீனமானவை, வேறுசில இவர்களின் கருத்துடன் தொடர்பற்றவை, மற்ற சில இவர்களாலேயே புறக்கணிக்கப்பட்டவை என்பது உறுதியாகி விட்ட நிலையில், தங்களின் கருத்தை நிலைநாட்ட வேறு சான்றுகள் இவர்கள் வசம்இருக்குமேயானால், அதனை வெளியிடட்டும் என்பதை மூன்றாவதாகப் பதிவு செய்து கொள்கிறேன்.


4.
!] "ஒரேயொரு ஆடையை மட்டும் அணிந்து தொழுபவர் அந்த ஆடையின் இரு ஓரத்தையும் (வலது புற ஓரத்தை இடது தோளிலும், இடது புற ஓரத்தை வலது தோளிலும்) மாற்றி அணியட்டும்" (புகாரி - 360)
 

!] "இறுக்கமானதாக இருந்தால் மட்டுமே இடுப்பில் கட்டிக் கொள்ள வேண்டும்" (புகாரி-361)
 

!] "ஒரேயொரு ஆடை மட்டும் அணிந்திருப்பவர் தன் தோள் மீது எதுவும் இல்லாத நிலையில் தொழ வேண்டாம்" (புகாரி:359)
 

!] என்று ஒரு ஆடை மட்டும் வைத்திருப்போர் தொழுகையில் அதனை எவ்வாறு அணிந்து கொள்ள வேண்டும் என இறைத்தூதரின் வழிகாட்டலிலிருந்தும், தோளின் மீது எதுவும் இல்லாத நிலையில் தொழ வேண்டாம் என்ற இறைத்தூதரின் தடையிலிருந்தும், ஒருவர் தொழுகையில் அணிந்து கொள்ள வேண்டிய ஆடை முறை வேறு. வெளியில் அணிந்து கொள்ள வேண்டிய ஆடை முறை வேறு என்பது தெரியவில்லையா? என்பதை நான்காவதாகப் பதிவு செய்கிறேன்.

5. இந்த நவீன இமாம்??!! கூறி வருவதில் பல உண்மைகள் மறைக்கப்பட்டு, பல தவறுகளும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன என்பதை அவரைச் சூழ்ந்துள்ள அனைவரும் நிதர்சனமாகவும், தெளிவாகவும் அறிந்திருந்தும்கூட, இறைவனை அஞ்சாமல் அந்த நவீன இமாமுக்குப்??!! பயந்து அவற்றை அவர்களும் மறைத்தே வருகிறார்கள். இந்த நவீன இமாம??!! மறைத்து, திரித்துக் கூறிய உண்மைகளை அம்பலப் படுத்தும் போது மிரட்டல், தனிமைப்படுத்துதல், இயக்கத்தை விட்டு வெளியேற்றல், அவதூறுகள் போன்ற பல்வேறு தொல்லைகள் தொடரலாம். தஜ்ஜால் தன்னை மறுப்பவர்களை அவனிடமுள்ள நரகத்தில் வீசுவான். அது அவர்களுக்கு சுவனமாக மாறிவிடும் (நூல்: முஸ்லிம்) என்ற நபி மொழியை இவர்களுக்கு நினைவு படுத்தி, எவ்வளவு தொல்லைகள் தரப்பட்டாலும் அதனை இறைவனுக்காக பொருத்துக் கொண்டு சத்தியத்தைக் கூற முன்வரவேண்டும் என்பதே ஒட்டு மொத்த தமிழறிந்த இஸ்லாமியர்களின் விருப்பமாகும் என்பதை ஐந்தாவதாகப் பதிவு செய்கிறேன்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர் வழியைக் காட்டி, சத்தியத்தை சரியாகப் புரிந்து கொண்டு அதனை எடுத்துரைக்கக் கூடியவர்களாக ஆக்க வேண்டும். தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது, அதனை அடக்கத்துடன் ஏற்று திருத்திக் கொள்கின்ற மனப் பக்குவத்தையும் வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.

அல்லாஹ்வே அனைத்தையும் நன்கறிந்தவன்.

 

 
- மௌலவி, ஹாஃபிழ், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி
தபால் பெட்டி எண்: 204, தாயிஃப், சவுதி அரேபியா
செல்ஃபோன்:
050-9746919   மின்னஞ்சல்: fazilbaqavi@gmail.com

 

நன்றி: http://fazilbaqavi.blogspot.com