Index | Subscribe mailing list | Help | E-mail us

 
 

 

 

For better view of Arabic letters install Traditional Arabic Font

 

1 - ஈமான் (இறைநம்பிக்கை)

1- كِتَابُ اْلإِيْمَانِ

1- ஈமான் என்றால் என்ன? அதன் தன்மைகள் யாவை?

5- நபி(ஸல்)அவர்கள் ஒரு நாள் மக்கள் மத்தியில் இருந்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் (மனிதரின் தோற்றத்தில் வந்து நபி -ஸல்-) அவர்களிடம் ஈமான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவன் தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது எனக் கூறினார்கள். இஸ்லாம் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கவர்கள், இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு(எதனையும்) நீர் இணையாகக் கருதாத நிலையில் அவனை மட்டுமே நீர் வணங்குவதும் தொழுகையை நிலைநிறுத்தி வருவதும் கடமையாக்கப்பட்ட ஜகாதை நீர் வழங்கி வருவதும் ரமலான் மாதத்தில் நீர் நோன்பு நோற்பதுமாகும் என்று கூறினார்கள்.

இஹ்ஸான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கவர்கள், (இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்கா விட்டாலும் நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்றார்கள். அடுத்து மறுமை நாள் எப்போது வரும்? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள்; கூறினார்கள்: அதைப் பற்றிக் கேட்கின்ற உம்மை விட கேட்கப்படும் (நான்) மிக்க அறிந்தவரல்லர். எனினும் அதன் (சில) அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். அவை: ஒரு அடிமைப் பெண் தனக்கு எஜமானாகப் போகிறவனை ஈன்றெடுத்தல். மேலும் கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். ஜந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்கள் என்று கூறிவிட்டு, மறுமை நாளைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது என்ற (31:34)வசனத்தை ஓதிக் காட்டினார்கள். பின்னர் அம்மனிதர் திரும்பிச் சென்று விட்டார். அவரை அழைத்து வாருங்கள் என்றார்கள். சென்று பார்த்த போது அவரைக் காணவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள், இவர் தான் ஜிப்ரீல்! மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க வந்திருக்கிறார் என்றார்கள்.


(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள் : புகாரீ 50, முஸ்லிம் 10)
 

(1)  بَابُ : اْلإِيْمَانِ مَا هُوَ وَبَيَانِ خِصَالِهِ

5- حَدِيْثُ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَارِزًا يَوْمًا لِلنَّاسِ فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ مَا الْإِيمَانُ؟ قَالَ : (( الْإِيمَانُ أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَبِلِقَائِهِ وَرُسُلِهِ وَتُؤْمِنَ بِالْبَعْثِ )) قَالَ : مَا الْإِسْلَامُ؟ قَالَ : (( الْإِسْلَامُ أَنْ تَعْبُدَ اللَّهَ وَلَا تُشْرِكَ بِهِ شَيْئًا وَتُقِيمَ الصَّلَاةَ وَتُؤَدِّيَ الزَّكَاةَ الْمَفْرُوضَةَ وَتَصُومَ رَمَضَانَ )) قَالَ : مَا الْإِحْسَانُ؟ قَالَ : (( أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ )) قَالَ : مَتَى السَّاعَةُ؟ قَالَ : (( مَا الْمَسْئُولُ عَنْهَا بِأَعْلَمَ مِنْ السَّائِلِ وَسَأُخْبِرُكَ عَنْ أَشْرَاطِهَا إِذَا وَلَدَتْ الْأَمَةُ رَبَّهَا وَإِذَا تَطَاوَلَ رُعَاةُ الْإِبِلِ الْبُهْمُ فِي الْبُنْيَانِ فِي خَمْسٍ لَا يَعْلَمُهُنَّ إِلَّا اللَّهُ )) ثُمَّ تَلَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ } الْآيَةَ. ثُمَّ أَدْبَرَ فَقَالَ : (( رُدُّوهُ )) فَلَمْ يَرَوْا شَيْئًا فَقَالَ : (( هَذَا جِبْرِيلُ جَاءَ يُعَلِّمُ النَّاسَ دِينَهُمْ ))

3- இஸ்லாத்தின் ஜந்து கடமைகளில் ஒன்றான தொழுகைகள்
6- நஜ்த் தேசத்தைச் சார்ந்த ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அவருடைய தலை பரட்டையாக இருந்தது. குரல் செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை. நபி(ஸல்) அவர்களின் அருகில் வந்ததும் இஸ்லாத்தைப் பற்றிக் கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் இஸ்லாம் (என்பது) இரவிலும் பகலிலும் ஜவேளைத் தொழுவது என்றார்கள். உடனே அவர், இதனைத் தவிர நான் நிறைவேற்ற வேண்டிய வேறு ஏதேனும் (கடமையான தொழுகைகள்) உள்ளனவா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை! இதனைத் தவிர நீர் விரும்பி நிறைவேற்றும் உபரியான -தொழுகைகள்-தான் உள்ளன என்று பதிலளித்தார்கள். மேலும் ரமலான் மாதம் நோன்பு நோற்பதும் இஸ்லாத்தின் கடமையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர், இதனைத் தவிர நான் நிறைவேற்ற வேண்டிய வேறு ஏதேனும் (கடமையான நோன்புகள்) உள்ளனவா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை! இதனைத் தவிர நீர் விரும்பி நிறைவேற்றும் உபரியான -நோன்புகள்-தான் உள்ளன என்று பதிலளித்தார்கள். மேலும் அவரிடம் நபி(ஸல்) அவர்கள் ஜகாத்தைப் பற்றியும் கூறினார்கள். அதற்கவர் இதனைத் தவிர நான் நிறைவேற்ற வேண்டிய வேறு ஏதேனும் (கடமையான ஜகாத்) உள்ளதா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை! இதனைத் தவிர நீர் விரும்பி நிறைவேற்றும் உபரியான -தர்மங்கள்-தான் உள்ளன என்று பதிலளித்தார்கள். உடனே அம்மனிதர் அல்லாஹ்வின் மீதாணையாக நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன், குறைக்கவும் மாட்டேன் என்று கூறியவாறு திரும்பிச் சென்று விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், இவர் கூறியதற்கேற்ப நடந்து கொண்டால் வெற்றியடைந்து விட்டார் என்றார்கள்.


(அறிவிப்பவர் : தல்ஹா (ரலி), நூல்கள் : புகாரீ 46, முஸ்லிம் 12)
 

(3) بَابُ : بَيَانِ الصَّلَوَاتِ الَّتِيْ هِيَ أَحَدُ أَرْكَانِ اْلإِسْلاَمِ

6- حَدِيْثُ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَهْلِ نَجْدٍ ثَائِرَ الرَّأْسِ يُسْمَعُ دَوِيُّ صَوْتِهِ وَلَا يُفْقَهُ مَا يَقُولُ حَتَّى دَنَا فَإِذَا هُوَ يَسْأَلُ عَنْ الْإِسْلَامِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : (( خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ )) فَقَالَ : هَلْ عَلَيَّ غَيْرُهَا؟ قَالَ : (( لَا، إِلَّا أَنْ تَطَوَّعَ )) قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : (( وَصِيَامُ رَمَضَانَ )) قَالَ : هَلْ عَلَيَّ غَيْرُهُ؟ قَالَ : (( لَا، إِلَّا أَنْ تَطَوَّعَ )) قَالَ وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الزَّكَاةَ قَالَ هَلْ عَلَيَّ غَيْرُهَا؟ قَالَ : (( لَا، إِلَّا أَنْ تَطَوَّعَ )) قَالَ فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ : وَاللَّهِ لَا أَزِيدُ عَلَى هَذَا وَلَا أَنْقُصُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : (( أَفْلَحَ إِنْ صَدَقَ ))

அடுத்த பக்கம்

கேள்விகள்:
1) ஈமான் என்றால் என்ன?
2) இஸ்லாம் என்றால் என்ன?
3) இஹ்ஸான் என்றால் என்ன?
4) மறுமை நாளின் அடையாளமாக இரண்டை குறிப்பிடுக