Featured Posts
Home » மீடியா » பதிவிறக்கம் » ‘அழைப்பொலி’ மாத இதழ் – செப்டம்பர்2017

‘அழைப்பொலி’ மாத இதழ் – செப்டம்பர்2017

DOWNLOAD – September2017 ISSUE

 

“அழைப்பொலி” ஓங்கி ஒலிக்கட்டும் எட்டுத்திக்கும் !

உங்கள் “அழைப்பொலி” மாத இதழை, தடைகள் பல கடந்து நான்கு இதழ்கள் வெற்றிகரமாகக் கொண்டுவந்திருக்கிறோம். “அல்ஹம்துலில்லாஹ்” வடசென்னையை மட்டும் முன்னிறுத்தி தொடங்கப்பட்ட இதழ், இன்று புரசைவாக்கம், பூந்தமல்லி, வேளச்சேரி, தாம்பரம், செங்குன்றம் என சென்னையின் பிரதான இடங்களிலும், கிருஷ்ணகிரி, செஞ்சி, திருவண்ணாமலை, கருர் என தமிழக அளவிலும் வளர்ந்து நிற்கிறது. இறைவனின் மாபெரும் கிருபையால், திருவொற்றியூர், தாங்கல் பகுதியில் அலுவலகமும் திறக்கப்பட்டுள்ளது. இந்த இறைச்செய்தியின் ஒலியை, இன்னும் ஓங்கி ஒலிக்கச் செய்ய, விநியோகத்தை மேலும் விசாலப்படுத்த திட்டங்களும், முயற்சிகளும் எடுத்து வருகிறோம். ஆலோசனைகள் வழங்கி, மேற்பார்வையிடும் ஆசிரியர் குழுவுக்கும், இஸ்லாம்கல்வி.காம் இணையதளத்திற்கும், உடன் இருந்து உதவும் நண்பர்களுக்கும், முகம் சுழிக்காமல் மாதந்தோறும் விநியோகிக்கும் சகோதரர்களுக்கும் எல்லாவற்றிற்கும் மேலாக அன்பு வாசகர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

“அழைப்பொலி”யின் பணி இதழியலில் மட்டுமில்லாது, வரும்காலங்களில், பதிப்பகம், அழைப்பியல், ஊடகம், கல்வி பயிலகங்கள், வட்டியில்லா கடன், குடும்ப ஆலோசனை மையம் போன்ற இன்னும் பரந்து விரியும் பல நற்பணிகள் செய்ய உங்கள் பிரார்த்தனையையும், ஆதரவையும் எதிர்ப்பார்க்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *