Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » பீ.ஜே வை நோக்கப்பட்ட முறை

பீ.ஜே வை நோக்கப்பட்ட முறை

முதலாம் பிரிவினர்: ((அடிமுட்டாள்கள், மார்க்க விபரம் அற்றவர்கள்))
பீ.ஜே வை என்பவர் தவறே செய்யாத ஆய்வாளர், அவர் நபித்தோழர்கள் மற்றும் ஹதீஸ் கலை நிபுணர்களான இமாம்கள் ஏன் தமிழ் உலகில் இவருக்கு ஈடான ஒருவரைக் கூட காட்டமுடியாது எனப் போற்றியவர்களின் தரம் அறியாமை, பாமரத்துவம். எல்லை மீறிய பாசம், தக்லீதில் உச்சம்.

இரண்டாம் பிரிவினர்:
பீ.ஜே ஒரு ஷைத்தான். அவ்லியா மார்களைத் திட்டுபவர், அவரது எந்த உபதேசமும் நமக்கு அவசியம் இல்லை. நாம் நமது முன்னோர்கள் போன்று தர்காவழிபாடு, பெரியார்கள் பேரில் கந்தூரி விழா என அனைத்தையும் செய்ய வேண்டும். அதில் என்ன தப்பு இருக்கிறது என்போர்.

இவர்கள் யாரோ ஒரு மரணித்த கப்ராளி ஒருவரை என்றும் மரணிக்காத, அகிலங்களின் அரசனாகிய அல்லாஹ்வின் ஸ்தானத்தில் வைத்து வழிபடும் வழிகேடர்களின் வாரிசுகள்.

மூன்றாவது பிரிவினர்:
பீ.ஜே ஒரு தனிமனிதன். சாதாரண அரபுக்கல்லூரியில் ஏழாண்டு காலம் வரைப் படித்த வசீகரமான பேச்சாளர். ஆரம்பகால அறிஞர்களின் அறிவுக்கு எந்த மதிப்பும் தராத நாஸ்தீக சிந்தனை வாதி போன்ற ஒருவர்.

அவரை இஸ்லாமிய அறிஞர்களின் பட்டியலில் சேர்க்க முடியாது. இவர் நாஸ்தீக வழிகேட்டு வாதங்களை முன்வைத்து ஆதாரபூர்வமான பல ஹதீஸ்களை மறுக்கின்றார். எனவே அவரது உரைகளை இனியும் செவிமடுக்கக் கூடாது என இப்போதும் வாதிடுவோர்.

அறிவுத் தேடல் மற்றும் ஆய்வு, இறையச்சம் போன்றவற்றில் தமது வாழ்க்கையை அற்பணம் செய்த ஹதீஸ்கலை இமாம்களின் நூல்கள் மற்றும் அவர்கள் வகுத்துக் கொடுத்த விதிகளை அவர்கள் தமது கூற்றுக்கு ஆதாரமாக மேற்கோள்காட்டினர்.

நாலாவது பிரிவினர்:
பீ.ஜே வெளியில் போடப்பட்டாலும் நாம் அவரது தவ்ஹீத் கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். தலைவன் அல்ல கொள்கை, கொள்கைதான் தலைவன் எனக் கூறி விபச்சாரக் குற்றச்சாட்டில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஒரு பொய்யரின் விலகல்/ விலக்கலை உலகுக்கு முன மாதிரியான அந்நிய பெண்களின் கையில் கூட எந்த உத்தமரின் கரம்படவில்லையோ அப்படியான முஹம்மத் நபி ஸல் அவர்களின் மரணத்தை ஒப்பிட்டு ஏழாம் வானம் ஏழாம் பூமி தூர வித்தியாசத்தை தமது தலைவனுக்கு ஒப்பிட்டு பேசும் புத்தி கெட்ட TNTJ உயர் நிலைக் குழுவினர்.

பதிவு ரிஸ்வான் மதனி
15/05/2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *